புதன், 17 ஏப்ரல், 2019

சித்ரா பௌர்ணமி!!


சித்ரா பௌர்ணமி : நினைத்தது நிறைவேற விரதமிருக்க தயாராகிவிட்டீர்களா?

பொதுவாக பௌர்ணமியானது மிகவும் விஷேசமான ஒன்றாகும். மாதம் தோறும் வருகின்ற பௌர்ணமியன்று விரதம் இருந்து தேவியை வழிபட்டு வந்தால் எல்லா செல்வங்களும் குறைவில்லாமல் கிடைக்கும். மற்ற மாதங்களில் வருகின்ற பௌர்ணமியைவிட சித்ரா பௌர்ணமியானது முக்கியமானதாகும். சித்திரை நட்சத்திரமும் சேர்ந்து வந்துவிட்டால் இன்னும் சிறப்பானதாகும்.

சித்ரா பௌர்ணமி விரதம் இருப்பது எப்படி?

🌝 சித்ரா பௌர்ணமியன்று வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அரிசி மாவால் சித்ரகுப்தன் படம் வரைந்து கையில் ஏடும், எழுத்தாணியும் வரைய வேண்டும். சித்ரகுப்தா என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். அன்று உப்பில்லாத உணவுகளையே உண்ண வேண்டும்.

🌝 மாலையில் பௌர்ணமி தினம் உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும். தலைவாழை இலையில் சர்க்கரை பொங்கல் அல்லது வெண்பொங்கலை படைக்க வேண்டும். பயிற்றம் பருப்பு, எருமைப்பாலும் சேர்த்து பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம்.

🌝 மேலும், அன்றைய தினம் வைக்கும் குழம்பில் கூட, தட்டைப்பயிறும், மாங்காயும் சேர்த்து வைப்பது வழக்கம். ஜவ்வரிசிப் பாயசம் வைத்து அப்பளம் வைத்து, பூஜை அறையின் நடுவில் கோலமிட்டு, அதன் மேல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, சங்கு ஊதி வழிபடுவது அவசியமாகும்.

🌝 பௌர்ணமி விரதம் இருப்பவர்கள், விரதத்தைத் தொடங்க வேண்டிய நாள் சித்ரா பௌர்ணமிதான். விரதத்தை முழுமையாகக் கடைபிடிப்பவர்கள் இரவு நிலவு பார்த்த பின் உணவு அருந்த வேண்டும்.

🌝 தொடர்ந்து தீபாராதனை காட்டி ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் கொடுக்க வேண்டும். ஏழை மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டு கொடுக்கலாம். அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது.

🌝 சித்ரா பௌர்ணமியன்று விரதமிருந்து சிவாலயங்களில் கிரிவலம் வர நாம் பாவவினைகளை போக்கி புண்ணியம் தேடிக் கொள்ள முடியும்.

விரத பலன்கள் :

🌝 சித்ரா பௌர்ணமி விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். ஆயுளை அதிகரிக்க செய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு. மேலும் மன அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும், வறுமை அகலும். புண்ணியங்கள் சேரும்.

🌝 திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று அன்னதானம் செய்தால் கல்வி, வேலை, பதவி, அரசியல், ஆரோக்கியம், திருமணம், வழக்கு குடும்பப்பிரச்சனைகள் நீங்கி மேன்மை உண்டாகும்.
ழூ சித்திரை மாத ராசிபலன்களை Pனுகு வடிவில் பெற 👉இங்கே கிளிக் செய்யவும்.👈


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக