திங்கள், 22 ஏப்ரல், 2019

சித்திரை மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் !!


சித்திரை மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் !

👉 சித்திரை மாதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்கள் உங்கள் வாழ்வை வளமாக்கும் என்று கூறுவார்கள். அதில் பரணி விரதம், சித்ரா பௌர்ணமி, சௌபாக்கிய சயனவிரதம், பாபமோசனிகா ஏகாதசி போன்ற விரத முறைகளைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

பரணி விரதம் :

👉 சித்திரை மாதம் வரும் பரணி நட்சத்திரத்தன்று பைரவருக்கு பு ஜை செய்ய வேண்டும். பைரவருக்கு தயிர்சாதம் படைத்து விரதம் இருந்தால் எதிரிகள் தொல்லை நீங்கும். நமக்கு தீங்கு செய்த எதிரிகள் பாதிக்கப்படுவர். வாழ்வில் வளம் சேர்க்க இந்த விரதம் ஏற்றது. இதனை பரணி விரதம் என்பர்.

சௌபாக்கிய சயனவிரதம் :

👉 சித்திரையில் வரும் சுக்லபட்ச திரிதியை திதியில் உமாமகேஸ்வரரை துதித்து பு ஜை செய்வது மிகவும் நல்லது. அன்று தான, தர்மங்கள் செய்வதால் இப்பிறவியில் வளமான வாழ்வும் மறுபிறவியில் கைலாச லோக பிராப்தியும் கிடைக்கும். இதை சௌபாக்கிய சயனவிரதம் என்பர்.

சித்ரா பௌர்ணமி :

👉 சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்ற பெயரில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமான், அம்பிகை வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்விழாவன்று மக்கள் பொங்கலிட்டும், அன்னதானம் செய்தும் வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.

👉 சித்ரா பௌர்ணமி அன்று பெண்கள் விரத முறையை மேற்கொள்கின்றனர். தங்கள் வாழ்வில் செய்த பாவங்களைப் போக்குமாறும், இனி வரும் நாளில் பாவங்கள் செய்யாமல் இருக்க அருள் புரியுமாறும் வேண்டுகின்றனர். நிலையான செல்வம், நீடித்த ஆயுள், மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு கிடைக்க பிரார்த்திக்கின்றனர்.

பாபமோசனிகா ஏகாதசி :

👉 சித்திரை மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசி பாபமோசனிகா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. பாபமோசனிகா ஏகாதசி அன்று விரதம் மேற்கொண்டு திருமாலை வழிபட நம்முடைய பாவங்கள் நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக