வியாழன், 8 ஜூன், 2017

சரணாகதி



“ சரணாகதி “ என்றால் என்ன ?

 நம்மைவிட சக்திவாய்ந்த ஒருவர் கால் களில் விழுந்து, அவரிடம் அடைக்கலம் புகுவது.

பலம் குன்றிய ஒருவன் தன்னை ஒருபலசாலி அடிக்கும்போது அவன் காலில் விழுவது.

ஒரு ஏழை பணம்வேண்டி ஒரு பணக்காரன் காலில் விழுவது.

 அறிவில் சிறந்த ஒரு ஆச்சார்யன் காலில் விழுந்து வித்தைகளைக் கற்பது.

ஆனால் இவை யெல்லாமே லௌகிக சுகத்திற்காக செய்யப்படும் சரணாகதிகளாகும்.

 ஆனால் பரம்பொருளான அந்த எம்பெருமானிடம் செய்யப்படும் சரணா கதியே உண்மையான சரணாகதி. அதுவே ஒருவனுக்கு இக, பர சுகங் களை அளிக்கவல்லது. அதுதான் நிலையானதும் கூட.

அது நாம் இந்த உலகில் வாழும்வரை நமக்குவேண்டிய அனைத்தையும் அளிப்பதுடன் மோக்ஷத்தையும் அளிக்கும்.

ஆக சரணாகதி என்பது மீண்டும் இந்த சம்சாரத்தில் பிறந்து உழலாமல் இருக்க உதவும். சரணாகதியென்றதும், பலர் பயப்படுகின்றனர்.

 எங்கே சரணாகதி செய்துகொண்டால் இறந்து விடுவோமோயென்று. வயதான பிறகு செய்துகொள்ல்லாம் என்று தள்ளிப் போடுவார்கள்,

பிறகு அதற்கு வாய்ப்பே ஏற்படாமல் இறந்தும் போய்விடு வார்கள்.

 இது அந்த நாளில் “ லைப் இன்ஷூரன்ஸ் பாலிசி “ எடுத்துக் கொள்ளபயப்படுவது போன்று. காரணம் பாலிஸி எடுத்துக்கொண்டால் இறந்துவிடுவோமோ யென்று.

ஆனால் இன்று மக்கள் அது ஒரு சேமிப்பு என்பதை புரிந்து கொண்டு எடுத்துக்கொள்ள ஆரம்பித்து ள்ளனர்.

அப்படி உடனேயே பரமபதம் செல்வதற்கான சரணாகதி ஒன்று இருந்தாலும், நம் ஆச்சார்கள் நம் காலம் முடிந்த பிறகு வைகுந்தம் செல்ல உதவும் சரணாகதியையே செய்துவைப்பர் அதனால் பயப்படதேவையில்லை.

சரணாகதி நாம் பரமபதம் செல்வதற்காக எடுக்கப்படும் ஒரு “ பாஸ்போர்டே” தவிர அதுவே டிக்கட் இல்லை.

பாஸ்போர்ட் எடுத்துக்கொண்ட உடனே நாம் விரும்பும் மேல்நாடுகளுக்கு போய்விடமுடியாது. அதற்கு “ விஸா “ வேண்டும், மேலும் டிக்கட் வாங்கவேண்டும்.

அதுபோலவே நாம் சரணா கதி செய்து கொண் டாலும் உடனே மோக்ஷத்திற்கு போய்விடமுடியாது. அதற்கு விஸா நம் வாழ்நாள் எவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதன்பிறகே கிடைக்கும், மேலே செல்ல டிக்கட்டும் வரும்.

எப்படி பாஸ் போர்டை அதற்கென்று இருக்கும் ஒரு அதிகாரியிடம் சென்று பெறவேண் டுமோ அதுபோன்றே சரணாகதியையும் நம் ஆச்சார்யர்களிடம் சென்று தான் பெறவேண்டும். பாஸ்போர்டோ, விஸாவோ ஒருகால வரம்பிற்கு உட்பட்டது.

பிறகு மீண்டும் அப்ளை செய்யவேண்டும், இந்தமுறை கிடை த்தாலும் கிடைக்கும், கிடைக்காமலும் போகலாம்.

ஆனால் சரணாகதி அப்படியல்ல. ஒருமுறை செய்து கொண்டாலே போதும். அது நம் வாழ்நாளில் ஒருமுறை செய்துகொள்வதேயாகும்.

 சரணாகதிக்கு வயது வரம்போ, ஆண்,பெண் என்ற பேதமோ எதுவுமே கிடையாது.

எந்த ஒரு ஜீவராசிக்கும் சரணாகதி செய்து வைக்கலாம் , அவைமீண்டும்மீண்டும் இந்த உலகில் பிறந்து அல்லலுற வேண்டாமென்று விரும்புவோமானால் உடனே தாமதிக்காமல் உங்கள் ஆச்சார்யனிடம் சென்று சரணாகதி செய்து வைப் பீர்களாக..

சிலருக்கு மேலும் சில ஐயங்கள் உண்டு,

சரணாகதி செய்து கொண்டால் வெளியில் சாப்பிடக் கூடாது, பெருமாள் கோயில் தவிர்த்து மற்ற கோயில்களுக்குச்செல்லக்கூடாது, என்பன போன்றவை.

மேலும் சரணாகதியை ஸ்ரீமந் நாராயணனிடம்தான் செய்து கொள்ளவேண்டுமா ?

மற்ற தெய்வங்களிடம் செய்துகொண்டால் என்ன என்ற கேள்விகளும் எழலாம்.

அவற்றிர்கு இதோவிடை.

கூடுமானவரை வெளியிடங்களில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. சிலர் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டிய உத்யோகம் பார்பவர்களாக இருந்தால், வெங்காயம், பூண்டு, முருங்கை மற்ற லாகிரி பொருள்களைக் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.

 மற்றதேவதைகளின் கோயில்களுக்கு ச்செல்ல க்கூடாது. இப்போது அநேகமாகவிஷ்ணு ஆலயங்களில் மற்ற தேவதைகளும் இருப்பர். கூடு மானவரை விஷ்ணுவை மட் டுமே தரிசித்துவிட்டு வரலாம்.

மற்ற தேவதைகளை தரிசிக்க நேரிட்டாலும் அவர்களையும் விஷ்ணுவாக பாவித்து வணங்கலாம். தவறில்லை

காரணம் அவர்களுள்ளும் எம்பெரு மானே அந்தர்யாமியாக இருக்கிறான். கடைசீயாக சரணாகதியை ஸ்ரீமந்நாராயணனிடம் மட்டுமே செய்து கொள்ள வேண்டும்.

 ஏனென்றால் அவன் ஒருவனே மோக்ஷம் தரவல்லவன் என்று வேதங்களில் கூறப் பட்டுள்ளது. மற்ற தேவதைகளால் உலக சுகங்களை மட்டுமே தரமுடி யும்.அந்த எம்பெருமானோ தன்னைக்கூட தந்துவிடுவான்.

ஆக இனி ஒரு பிறவி வேண்டாமென்று தீர்மானி த்தீர்களானால் உடனே உங்கள் ஆச்சார் யன் இருக்குமிடம் தேடிச்செல்லுங்கள். காலதாமதம் வேண்டாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக