ஞாயிறு, 22 அக்டோபர், 2017

திருச்செந்தூரில் செந்தில் வேலவன் நிகழ்த்திய அற்புத வரலாற்று நிகழ்வு:



திருச்செந்தூரில் செந்தில் வேலவன் நிகழ்த்திய அற்புத வரலாற்று நிகழ்வு:


முருகப் பெருமான் அருள் புரியும் அறுபடை வீடுகளுள் ஒன்று திருச்செந்தூர். 1648 ஆம் ஆண்டு கடல் மார்கமாக வந்த டச்சுப் படையினர் திருச்செந்தூர் திருக்கோயிலைக் கைப்பற்றினர். அப்பகுதியை ஆண்டு வந்த திருமலை நாயக்கர் சிறந்த முருக பக்தர். பெரும் படையுடன் சென்று டச்சுப் படைகளை எதிர்த்தும் அம்முயற்சி வெற்றி பெறவில்லை.
திருக்கோயில் நகைகளை கைப் பற்றியதோடு நில்லாமல், சண்முகர் - நடராஜர் ஆகிய இரு உற்சவ மூர்த்திகளையும் (தங்க விக்கிரகங்கள் எனக் கருதி) எடுத்துக் கொண்ட டச்சுப் படையினர், மீண்டும் கடல் வழியே தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். மேலும், செல்லும் வழியிலேயே உற்சவ மூர்த்திகளை உருக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
அச்சமயம் கடல் நீரில் திடீரென்று பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. காற்றும் பெரும் வேகம் கொண்டு சூறாவளி என மாற, கப்பல் கடுமையாக ஆட்டம் காணத் துவங்கியது. டச்சுப் படையினர் மிகவும் கலங்கி ஏக மனதாக முடிவெடுத்து, தாங்கள் கைப்பற்றிய உற்சவ மூர்த்திகளை கடலில் சேர்த்துவிட்டனர்.
அந்த கணமே கடல் நீரின் கொந்தளிப்பு தணிந்து, காற்றின் வேகமும் சீர் அடைந்தது கண்டு டச்சுப் படையினர் பெரு வியப்புற்றனர். இந்த வரலாற்று நிகழ்வு டச்சு நாட்டின் ராணுவ குறிப்புகளிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது. இச்சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின், உற்சவ மூர்த்திகளை மீண்டும் செய்விக்கும் பணி தொடங்கப் பெற்றது.
அதே சமயம், வடமலையப்பர் எனும் பக்தரின் கனவில் ஆறுமுகக் கடவுள் தோன்றி, உற்சவ மூர்த்திகள் கடலில் இருக்கும் இடத்தை காண்பித்து, அடையாளமாக ஒரு எலுமிச்சை கனியும் கருடப்பறவையும் தோன்றும் என்று அறிவித்து அருளினார். திருவருள் திறத்தை வியந்து போற்றிய வடமலையப்பர் கடலில் மூர்த்திகளை தேடும் பணியைத்துவங்கினார்.குறிப்பிட்ட இடத்தில் எலுமிச்சைக்கனி மிதந்தது அதை  கருடப்பறவையும் வானில் வாட்டமிடுவதையும் கண்டு கடலுக்கு அடியில் நீந்திச்சென்று உற்சவ மூர்த்திகளை வெளியே கொண்டுவந்தார்.திருச்செந்தூர் திருக்கோயிலில் ஒரு சுபயோக தினத்தில் சண்முகப்பெருமானை மீண்டும் பிரதிஷ்டை செய்தனர்.திருச்செந்தூர் வாழ் மக்கள் தங்கள் வாழ்வோடும் ஆன்மாவோடும் கலந்து விட்ட சண்முகக் கடவுளை போற்றித்துதித்தனர்.


கந்தசஷ்டி விரதம்   “எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும்” என்பது ஆன்றோர் வாக்கு. முருகனுக்குரிய விரதங்களில் கந்தசஷ்டி விரதமே தலைமையானது


 ஒப்பற்றது. இதனைச் சுப்பிரமணிய சஷ்டி விரதம் என்றும் அழைப்பர். இது திதி விரதம். சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தான்' என்று வேடிக்கையாகக் கூறுவார்கள். முருகன் சட்டியிலே மாவை வறுத்தானாம்!

உண்மைதான். அவன் சட்டியிலே, சஷ்டி திதியிலே, மா அறுத்தான் = மாமரமாக நின்ற சூரபத்மனைத் அறுத்தான். முருகன் சூரபத்மனுடன் ஆறு நாள்கள் தொடர்ந்து போரிட்டான். ஆறாம் நாள், மாமரமாகி எதிர்த்துப் போரிட்ட அவனைத் தனது வேலாயுதத்தால் பிளந்தான். பிளந்த ஒரு கூறு மயிலாயிற்று. முருகன் அதைத் தன் வாகனமாக ஏற்றான். மறு கூறு சேவலாயிற்று. அதைத் தன் கொடியாக ஏந்தினான்.

குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. இதைத் தான் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்ற பழமொழியாகக் கூறுவார்கள். சட்டியில் = சஷ்டி திதியில், இருந்தால் = விரதமிருந்தால்; அகப்பையில் = கருப்பையில்; வரும் = கரு தோன்றும். அதாவது மகப்பேறில்லாத மகளிர் சஷ்டி விரதமிருந்து முருகனை வழிபட்டால், அவனது அருளால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும் என்பது கருத்து.

முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.

ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள், அதாவது தீபாவளிக்கு மறுநாள், பிரதமையில் விரதத்தைத் தொடங்கித் தொடர்ந்து சஷ்டி வரை ஆறு நாள்கள் முருகனை வழிபட்டுக் கடும் விரதம் காப்பது கந்த சஷ்டி விரதம்'. இதனை மகா சஷ்டி விரதம்' என்றும் கூறுவர்கள்.

#முழுவதும்_படிக்கவும்

கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

🌸கந்தசஷ்டி விரதம், தீபாவளி பண்டிகைக்குப்பின் வரும் ஆறு நாட்கள் நடைபெறுகிறது. திருச்செந்தூரில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழா.

 🌸எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம்.

🌸 முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது? கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள்.

 🌸பொதுவாக விரத தினங்களில் மக்கள் சைவமாக இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு, பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர். ஆனால், விரதத்தை நியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத் தரும்.

🌸கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம்.

🌸 ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு. காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது.

🌸ஆறுமுகமான - சண்முக தத்துவம் என்ன ? ஒரு முகம் - மஹாவிஷ்ணுவுக்கு,
இரு முகம் - அக்னிக்கு,
மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு,
நான்முகம் - பிரம்மனுக்கு,
ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் - கந்தனுக்கு. நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் இவ்வாறு கூறுவார் :

1. உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம்,

2. பக்தர்களுக்கு அருள் ஒரு முகம்,

3. வேள்விகளைக் காக்க ஒரு முகம்,

4. உபதேசம் புரிய ஒரு முகம்,

5. தீயோரை அழிக்க ஒரு முகம்,

6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்.

 ஸரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). இதன் மகிமை என்ன? ஸ - லக்ஷ்மிகடாக்ஷம்

ர - ஸரஸ்வதி கடாக்ஷம்
வ - போகம் - மோக்ஷம்
ண - சத்ருஜயம்
ப - ம்ருத்யுஜயம்
வ - நோயற்ற வாழ்வு ஆக,

 பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம். ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக விளங்குகின்றன.

 ✨திருப்பரங்குன்றம் - மூலாதாரம்


✨திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம்

✨பழனி - மணிபூரகம்

✨ சுவாமிமலை - அனாஹதம்

✨ திருத்தணிகை - விசுத்தி

✨ பழமுதிர்சோலை - ஆக்ஞை.

 🌸 ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் ஸ்கந்த ஷஷ்டியில் துதித்து வழிபட்டு குஹானந்த அனுபூதி வாரிதியில் மூழ்குவோம்.

 🌸முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில் மந்திர மயில்.

 🌸சூரசம்ஹாரத்தின்போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில். பின் சூரனை இருகூறாக்கியதில் வந்த மயில்தான் அசுர மயில். ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின்போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடி விடுவார்கள். வியாசர் எழுதிய 18 புராணங் களில் ஸ்காந்தம் என்னும் கந்தபுராணமே மிகப்பெரியது.

🌸ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்டது. மற்ற எல்லா புராணங்களும் சேர்ந்தே மூன்று லட்சம் சுலோகங்கள்தான். கந்தன் பல பெயர்களால் போற்றப்படுகிறான்.

🌸சஷ்டியில் விரதமிருப்போம்!!!
சகல சௌபாக்கியம் பெறுவோம்!!!

#ஓம்சூரசம்ஹார மூர்த்தியே   போற்றி

#முருகாசரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக