சனி, 5 மே, 2018

சிவவாக்கியர் காட்டும் ஓவியப் பாட்டு



சிவவாக்கியர் காட்டும் ஓவியப் பாட்டு
*****************************************

நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்

சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்

யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்

செவ்வைஒத்து நின்றதே சிவாயநம அஞ்செழுத்துமே!

            பஞ்சாட்சரம் நமது உடம்பில் நகாரம் இடுப்பிலிருந்து கால்கள் வரையிலாகவும், மகாரம் வயிறாகவும், சிகாரம் நெஞ்சில் இருந்து இரண்டு தோள்களாகவும், வகாரம் தொண்டை வாயாகவும், யகாரம் இரண்டு கண்களாகவும் அனைவருக்கும் நேர்மையாக அமைந்துள்ளது. தூலத்தில் இவ்வாறு அமைந்துள்ள அஞ்செழுத்து சூட்சுமத்தில் செம்மையான மெய்ப்பொருளாக அதே பஞ்சாட்சரமாக ஒத்து இருப்பதை அறிந்து தியானித்து சிவமே அஞ்செழுத்தாக இருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

                      -  சித்தர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக