செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

உங்கள் பாவ பலன்களை குறைத்து புண்ணிய பலன்களை அதிகரிக்க, நீங்கள் செல்ல வேண்டிய இடம் சித்ரகுப்தர் கோயில்.


உங்கள் பாவ பலன்களை குறைத்து புண்ணிய பலன்களை அதிகரிக்க,  நீங்கள் செல்ல வேண்டிய இடம் சித்ரகுப்தர் கோயில்.

பௌர்ணமியன்று, சித்ரகுப்தர் பெருமானை வணங்கினால், வளமும் நலமும் பெற்று வாழலாம்.

கயிலையில் சிவ பெருமானும், பார்வதியும் அருகருகே அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ‘’தேவி! அவரவர்கள் செய்யும் பாவ புண்ணியங்களை எழுதி வைக்க ஒருவரை உருவாக்கி வைக்க நேரம் வந்து விட்டது’’ என்றார்.

உடனே இருவரும் பிள்ளை வரம் வேண்டி கடும் தவமிருக்கும் தேவேந்திரனுக்கும், இந்திராணிக்கும் காட்சியளித்து ‘’இந்திரனே! கவலைப்படாதே. உன் எண்ணம் நிறைவேறும். மகிழ்ச்சியுடன் போ’’ என்று ஆசி கூறி அவர்களுடன் தெய்வப்பசுவான காமதேனுவை அனுப்பி   வைத்தனர்.
தேவி! ஒரு தங்கப்பாகையும், சித்திரக்கோலும் கொண்டு வா! என்றார் சிவன். அவற்றை உடனே அம்பிகை கொண்டு வந்தார். சிவபெருமான் வண்ணங்களை குழைத்து தூரிகைகளால் தன்னைப் போலவே ஓர் உருவத்தை பலகையில் வரைந்தார் அம்பிகை அந்த ஓவியத்தை உயிர்ப்பித்தார். பிறகு ‘’சுவாமி! நீங்கள் வரைந்த இந்த ஓவியக்குழந்தையை நீங்களே கூப்பிடுங்கள்’’ என்றார்.

சிவபெருமான் தன் கைகளை நீட்டி “”மகனே வா’’ என அன்போடு அழைத்தார். ஓவியக் குழந்தை உயிர்பெற்று எழுந்தது. அம்மையப்பனை வணங்கி நமஸ்கரித்தது.
அந்தக் குழந்தையின் தலையில் தன்கைகளை வைத்து ஆசீர்வாதம் செய்து சித்திரத்தில் இருந்து பிறந்ததால் சித்தரகுப்தன் என அழைக்கிறேன். ‘‘எல்லா ஜீவராசிகளும் செய்யும் எல்லா செயல்களையும் ஒன்று விடாமல் கவனித்து பாவ, புண்ணிய கணக்கு எழுதும் வேலையை செய்து வா’’ என அருளினார். பிறகு சித்ரகுப்தரை அழைத்தார் சித்தர புத்திரா! இந்திராணி மாளிகை தடாகத்தில் நீ ஒரு பூவாக இரு காமதேனு தண்ணீர் குடிக்கும் போது பூவான உன்னையும் சேர்த்து உண்ணும். அதன் வயிற்றில் இருந்து சித்திரை மாதம் பவுர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் ஆதி வாரம் பிரம்ம முகூர்த்தம் (திங்கள்) அன்று நீ குழந்தையாக அவதரிப்பாய் .அதனால் இந்திரனின் குழந்தை இல்லாத குறையும் தீரும்‘’ என்றார்.
அதேபோல இந்திராணி பராமரிப்பில் இருந்த காமதேனு தண்ணீர் குடிப்பதற்காகத் தடாகத்துக்குச் சென்றது குளத்தில் தாமரைப் பூவாக மாறி இருந்த சித்ரகுப்தனை அந்தப் பசு ஆர்வத்துடன் தின்றது. சிவபெருமான் அருளாசியால் அந்தப் பசுவுக்கு வயிற்றில் ஏடும், எழுத்தாணியும் கொண்டு சித்திரகுப்தன் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் ஆதி வாரம் பிரம்ம முகூர்த்தத்தில் மகனாய் அவதரித்தார் சித்திரகுப்தன் என்கிறது புராணம்!
சித்ரகுப்தன் கயிலையை அடைந்த பிறகு, அவனை எமனது சபையில் இருந்தபடி பாவ புண்ணிய கணக்கு எழுத சொல்லி அனுப்பி வைத்ததாகவும் அது முதல் இந்நாள் வரை அவரவர் செய்யும் பாவ புண்ணிய கணக்கு எழுதிவருவதாகவும் தெரிவிக்கிறது புராணம்!
மனிதன் உயிருடன் இருக்கும் போது செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்றவாறு அவனுடைய இறப்புக்குப் பின்பு, அவனுடைய ஆன்மாவானது அதற்கான பலன்களை அடைகிறது. அவன் செய்த நற்செயல்களுக்கு நற்பலன்களையும், தீயசெயல்களுக்குத் தண்டனைகளையும் அந்த ஆன்மாஅடைகிறது.
பூமியில் நாம் செய்யும் அனைத்துச் செயல்களையும் இறைவன் சிவபெருமான் சித்ர குப்தரைக் கொண்டு கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார். தெரியாமல் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டியும், இனி எந்தத் தவறையும் செய்யப் போவதில்லை என்பதை உறுதியாகக் கொண்டும் சித்ர புத்திரரை வழிபட வேண்டும். இப்படி வழிபடுவதால், இறப்புக்குப் பின்பு, ஆன்மாவிற்குத் தீய செயல்களில் இருந்து விடுதலை கிடைப்பதுடன், அந்த ஆன்மா நரகம் செல்லாமல் காப்பாற்றப்பட்டு சொர்க்கத்துக்கு அனுப்பப்படும் என்றும் புராணம் தெரிவிக்கிறது. மேலும் சித்ரகுப்தரை வணங்குபவர்கள் கேதுவால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும் விடுபடுவார்கள்.
காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தருக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது. மனைவி சித்ரலேகாவுடன் அருள்புரிகிறார். இவளைப் பிரபாவதி என்றும், கர்ணிகை என்றும் சொல்வார்கள்.
மூலவராக அமர்ந்த நிலையிலும், உத்ஸவராக நின்ற நிலையிலும் சித்ரகுப்தன் அருள்பாலிக்கிறார் சித்ரகுப்தன். சித்ரா பௌர்ணமிதோறும் இந்திரனே இந்த ஆலயத்தில் வந்து பூஜிப்பதாக ஐதீகம்!
ஓம் நமசிவாய 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக