ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

புரட்டாசி மாதம் சிறப்புகள்...


புரட்டாசி மாதம் சிறப்புகள்...

புரட்டாசி,மாதம்,சனிக் கிழமை,தெய்வீகம்விரதம், பெருமாள்,பூஜை,தோஷம்,நீக்கும்,வழிபாடுகள்,
பராசக்திக்குரிய பூஜைகள் சிறப்புகள் நிறைந்த மாதம் தான் புரட்டாசி மாதம் சிறப்புகள்  . . . . . . .

புரட்டாசி. இது தமிழ் மாதங்களில் ஒன்று. 6மாதமாக இது வரும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது.மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அதாவது நாளை மறுநாளில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இதையே, "மகாளய பட்சம்` என்பர்; "பட்சம்` என்றால், "15 நாட்கள்' எனப் பொருள். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இந்த பட்சத்தில் வரும் பரணி, "மகாபரணி' என்றும், அஷ்டமியை, "மத்யாஷ்டமி' என்றும், திரயோ தசியை "கஜச்சாயை' என்றும் சொல்வர். இந்த மூன்று நாட்களுமே, பிதுர் வழிபாட்டுக்கு உகந்தவை. புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில் செய்யப்படும் பிதுர் பூஜை (இவ்வாண்டில் மற்ற அமாவாசைகளைக் காட்டிலும் அதிக பலன் தரும். மஹாலய விதிப்படி அந்தப் பதினாறு நாள்களும் பித்ருக் களுக்காக அன்ன சிராத்தம் செய்ய வேண்டும், இயன்றவர்கள் பொன் முதலிய பொருள்களைத் தகுந்தவர்களுக்குத் தானமாக வழங்கலாம். புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு. பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். எனவே இம்மாதத்தில், தவறாமல் வழிபாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம். புரட்டாசி மாத ராசி பலனை அறிந்து கொள்வோம்

பெருமாள்,புரட்டாசி,சனி,விரதம்
புரட்டாசி மாதம்

புரட்டாசி மாதம்:- இந்த மாதம் புனித மாதமாக இருப்பதால் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால்  வைணவ கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்., மக்கள் பலரும் விரதம் பூஜை என இருப்பார்கள். இந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் இறைச்சி உண்பதை தவிர்த்து விடுவர்.புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட்டால் உடல் பினி அதிகமாக வரும்.ஆகையால் புரட்டாசி மாதம் சீக்கிரம் ஜீரனம் ஆககூடிய உனவு வகையில் மட்டுமே உனவு உன்ன வேண்டும்.

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள்
புதன் என் றால் தெரிந்தவன் என்று பொருள். இதனால்தான் புதனைக் கல்விக் காரகன் அல்லது, வித்யாகாரகன் என்று சோதிடப் புலவர்கள் அழைத்தனர் போலும்! சூரியனுக்கு வெகு அருகாமையில் ஒளிர்வதோடு மிகத்துரிதமாய் மூன்றே மாதங்களுக்குள் சூரிய னைச் சுற்றிவரும் ஆற்றலுடைய கிரகமாகையால் சூரியனைப் பற்றி நன்கு தெரிந்தவன் புதன். புரட் டாசி மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் கற்றறியும் பாண்டித்தியம் உடையவர்களே. அதுவும் துரித மாய்க் கற்றுணரக்கூடியவர்கள். சிறுவயதிலேயே அரிய பெரிய நூல்களைப் புரட்டிப் பார்த்து விடு வார்கள். புரட்டாசியில் தோன்றிய இவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளே!பல நூல்களை நன்றாகப் புரட்டியவர்களா கையால் தர்க்கம் பேசுவதிலும் சமர்த்தர். குதர்க்கம் செய்வதிலும் வித்தகர். அரிய நூல்களைச் சேகரிப்பர். சீக்கிரத்தில் அரச யோகத்தை அடைந்திடுவர். கற்றதை மாற்றிப் பேசிப் போற்றுதலைப் பெறுவர். மற்றவர்களைப்போல நடிப்பதில் வெகு சமர்த்தர். படிக்காத மேதைகளும், படித்த பட்டதா ரிகளும் விஞ்ஞானிகளும் மெய் ஞானிகளும் இம் மாதத்தில் பிறந்தவர்களே.

ஆழ்ந்து சிந்திக்காமல் எந்த விவகாரங்களிலும் தலையிடார். எதையும் திறம்படச் செய்யவேண்டு மென்ற கொள்கை உடையவர். மற்றவர்கள் செய் யும் குற்றங்குறைகள் முதன்முதலில் இவர்களின் கண்களுக்குத்தான் தோன்றும், ஒளிவு மறைவின்றி சாமர்த்தியமாக ஆனால், அழுத்தந் திருத்தமாக எடுத்துக் கூறிடுவர். மற்றவர்கள் சாதாரணமாகப் புரியக்கூடிய தவறுகள் ஏற்படாவண்ணம் தாம் நடந்துகொள்வர். மற்றவர்களுடைய முன்னேற்றத் திற்குத் தன்னலமற்றுப் பாடுபடுவர். தம்முடைய திறமையினாலும் உழைப்பினாலும் உயர்ந்த அந் தஸ்தைத் தேடியடைந்திடுவர். பிறரைப் புகழ்ந்தோ அல்லது குறுக்கு வழிகளைக் கடைப்பிடித்தோ காரி யத்தைச் சாதிப்பது இவர்களுக்குப் பிடிக்காது.

இயற்கையை ரசிப்பவர். சுவையான பண்டங் களைப் புசிப்பவர். நல்ல பேச்சாளர். கலாரசிகர், நடிப்பாற்றல் உடையவர். கற்பனா சக்தியும் கருத்து நிறைந்த தத்துவங்களடங்கிய கவிபாடு வதிலும் தொடர் கதைகளையும்,

சிறு கதைக ளையும் எழுதுவ திலும் நிகரற்று விளங்குவர். இவருக் கெனத் தனி நடையை அமைத்துக்கொள்வர். மற்றவருக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் விளங்குவர். சந்தர்ப்பத்திற்கேற்றவாறு தம் கொள் கைகளை மாற்றிக்கொள்வர். காரியத்தை எளிதில் சாதித்து முடிக்கும் சக்தி வாய்ந்தவர். நயமாகப் பேசி மற்றவர்களைத் தம்வசமாக்கிக் கொள்வர்.

சுறுசுறுப்பானவர்கள். ஆனால், சுகஜீவிகள், நேரத்தை வீணாக்காமல் இயந்திரம் சுழல்வது போல் ஒரே இடத்தில் நிலைத்துக் காலவரம்பிற் குள் செய்வனவற்றைத் திருந்தச் செய்வர். சிறிய முயற்சியில் பல காரியங்களைச் சாதித்திடுவர்.
புரட்டாசி,சனி,விரதம்,பெருமாள்,சிலை,பூஜை
பெருமாள்

புரட்டாசி மாதம் குழந்தை பிறந்தால்
புரட்டாசி மாத்தில் பிறந்த குழந்தைகள் ஞான யோகியாக இருப்பார்கள்.

புரட்டாசி சனி

"புரட்டாசி சனி" என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் புரட்டாசி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும்.

புரட்டாசியில்
புரட்டாசி மாதத்தில் பிரண்டையும் காயும் என்பார்கள் (தண்ணீர் இல்லாமல் அது வளரும்). அது கூட காயும் என்பார்கள். ஏனென்றால், அந்த அளவிற்கு புராட்டாசியில் வெயில் இருக்கும். சாதாரணமாக சைவ உணவு நமது உடலிற்கு எல்லா வகையிலும் உகந்தது. இந்த மாதிரியான வெயில் காலங்களில் அசைவ உணவுகளைத் தவிர்த்தால் நமக்கு நல்லது.

தடைகளை தகர்க்கும் புரட்டாசி சனி
பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் தொடராமல் இருக்கவும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்கியம் கிடைக்கவும் விரத முறைகள் காலம் காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனர். உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். இம்மாதத்து சனிக்கிழமை பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தது. செப்டம்பர் 23,30, அக்டோபர் 5,6,7, 14, 15, ஆகிய நாட்களில் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்டு, பிரார்த்தனைகளை செலுத்தலாம். ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும்.

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு!
 புரட்டாசி மாதத்தில்  இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் . திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது. இது தவிர திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம். சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி  சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

புரட்டாசி மாத சிறப்புகள்
அறிவுக்காரனாகிய புதனின் ராசியில் சூரியன் இருப்பது இந்த மாதத்தில்தான்
இந்த மாத்தில்தான் சனிக்கிழமைகிளல் பெருமாளுக்கு விரதம்  இருக்கிறார்கள். நவராத்திரி பூஜை நடப்பதும் இந்த மாதத்தில்தான். புரட்டாசி மாதம், மஹாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம்.


புரட்டாசி சனி
திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

புண்ணியம் தரும் புரட்டாசி மாதம்
‘பொன்னுருகக் காய்ந்து மண்ணுருகப் பெய்யும் புரட்டாசியில்’ என்பார்கள். அதாவது, புரட்டாசி மாதத்தில் பகல் பொழுதினில் தங்கம் உருகும் அளவிற்கு கடுமையான வெயில் காய்ந்து, இரவினில் மண் உருகி வழிந்தோடும் அளவில் நல்ல மழை பெய்யும் என்பது இதன் பொருள். இந்த மாதம் முழுவதும் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் இதனை கன்னியா மாதம் என்றும் அழைப்பர். புரட்டாசி என்ற வார்த்தையைக் கேட்கும்போதே நம் கண் முன் தோன்றுவது பெருமாளின் திருவுருவமே. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருப்போரும் உண்டு.  நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புத பகவான். புதன் கிரகம் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில். எனவேதான் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி, பெருமாளுக்கு உரிய மாதம் என பெரியவர்கள் வகுத்திருக்கிறார்கள். அதோடு பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரியனோடு புதனும் இணைந்திருப்பார். சூரியனுக்கு உரிய பிரத்யதி தேவதை பசுபதி என்றழைக்கப்படும் சிவபெருமான். புதனுக்கு உரிய பிரத்யதி தேவதை நாராயணன். இவர்கள் இருவரும் தெய்வீக மூலையாக கருதப்படும் கன்னி மூலையில் இணைவது சங்கர-நாராயணர் இணைவாகக் கருதப்படுகிறது. சூரியநாராயண ஸ்வாமி என்று சூரியன் பெயர் பெற்ற காரணமும் இதுவே.

புரட்டாசி மாத விரத வழிபாடு
ஜாதக ரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும். திருப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு.

பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை நடக்கிறது. அம்பாளை, முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும், அதையடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறோம்.

தைரியம், செல்வம், கல்வி ஆகியவற்றை அம்பாளிடம் வேண்டிப் பெற இந்த பூஜை நடத்தப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக