திங்கள், 16 ஜூலை, 2018

பக்தி மணம் கமழும் அற்புத ஆடி!


பக்தி மணம் கமழும் அற்புத ஆடி!

🌿ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீ மிதித்தலும் என்று களை கட்டும். ஆடி மாத‌ம் எ‌ன்பது அ‌ம்மனு‌க்கு உக‌ந்தது எ‌ன்றாலு‌ம், கு‌றி‌ப்பாக மா‌ரிய‌ம்ம‌ன் வ‌ழிபாடு இ‌ன்னு‌ம் ‌சிற‌ப்பாகு‌ம். ஞா‌யி‌ற்று‌க்‌கிழமைக‌ளி‌ல் மா‌‌ரிய‌ம்மனு‌க்கு கூ‌ழ் ஊ‌ற்‌றி ‌வீடுக‌ளி‌ல் ‌சிற‌ப்பு பூஜைக‌ள் செ‌ய்வா‌ர்க‌ள்.     

   🌿நாளை 17-7 -18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிறக்க உள்ள ஆடி மாதத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன.

🌿ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது. அதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தனது பயணத்தை துவக்குகிறது.

🌿இந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும்.

🌿ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

🌿ஆடி செவ்வாய் தேடிக் குளி என்பது பழமொழி. அதாவது செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து தலை குளித்து, அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

🌿ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் புண்ணியத்தை அளிக்கும்.

🌿ஜோதிட சாஸ்திரத்தில் இதை ‘கர்கடக மாதம்’ என்பார்கள்.

🌿சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத பிரவேசம்.

🌿அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

🌿ஆடி மாதத்தில் இருந்துதான் விரதங்கள், பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகிறது.

🌿இந்த மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள்.

🌿அந்தளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களை கட்டி விடும்.

🌿அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும்.

🌿ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு என்று பலப்பல விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன.


🌿திருநெல்வேலி அருகில் உள்ள சங்கரன்கோவிலில் ஆடி தபசு பிரசித்தி பெற்றது.

🌿கோமதி அம்மனின் தவத்துக்கு இரங்கிய சிவபெருமான், புன்னை வனத்தில் சங்கர நாராயணராக ஆடி பவுர்ணமியன்று காட்சியளித்தார்.

🌿ஆடிப்பூரம் ஆண்டாள் அவதாரம் செய்த திருநட்சத்திரம். கன்னிப் பெண்களும் திருமண பாக்யம் கைகூடாமல் இருக்கும் பெண்களும் இந்த நாளில் விரதம் இருந்து பக்தியுடன் ஆண்டாள் அருளிச் செய்த ‘வாரணமாயிரம்’ என்று  தொடங்கும் பாசுரத்தை பாடி வர திருமண பிராப்தம் கூடிவரும்.

🌿இந்த மாதத்தில் விரதங்கள், வழிபாடுகள், கோயில் திருவிழாக்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும்.

🌿ஆன்மீகத்திலும் இறை வழிபாட்டிலும் மனப்பூர்வமாக ஈடுபட வேண்டியிருப்பதால் மற்ற காரியங்களில், விசேஷங்களில் கவனம் செலுத்துவது சிரமம்.

🌿இறைவனை துதிப்பதற்கும், அவன் சிந்தனையாகவே ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்வதற்கும் இடையூறாக மற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்துவிட கூடாது என்பதற்காகவே மற்ற சுப விசேஷங்கள் இந்த மாதத்தில் தவிர்க்கப் படுகிறது.

ஆடி மாதத்தில் தேடி வரும் விரத வழிபாடுகள்.

🌿ஆடி மாதத்தில் தேடிவரும் திருவிழாக்களை நாம் கொண்டாடி மகிழ்ந்தால், கோடி புண்ணியம் நமக்குக் கிடைக்கும். கோலாகல வாழ்க்கை அமையும்.

 🌿ஆடி மாதம் 26-ந் தேதி (11.8.2018) சனிக்கிழமை *ஆடி அமாவாசை.* அன்றைய தினம் விரதமிருந்து கடலில் நீராடுவது சிறப்பு. முன்னோர் வழிபாடும் முன்னேற்றம் தரும்.

 🌿ஆடி மாதம் 28-ந் தேதி (13.8.2018) திங்கள்க்கிழமை *ஆடிப்பூரம்,  வருகிறது. அன்றைய தினம் விரதமிருந்து அம்பிகை வழிபாட்டை செய்தால் அதிர்ஷ்டம் தரும்.

 🌿ஆடி மாதம் 1,17, 31-
ந்தேதிகளில் (17.8.2018) செவ்வாய்கிழமை மற்றும்(2.8.2018) (16.8.18) வியாழக்கிழமைகளில், *பஞ்சமி.* அன்றைய தினம் விரதமிருந்து கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

🌿ஆடி மாதம் 18-ந் தேதி (3.8.2018) வெள்ளிக்கிழமை *ஆடிப்பெருக்கு* . அன்றைய தினம் விரதமிருந்து இறை வழிபாடு செய்தால் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

🌿 ஆடி மாதம் 9(25.7.18) புதன் மற்றும் ஆடி 24-ந் தேதி (9.8.2018) வியாழகிழமை,  *பிரதோஷம்* . அன்றைய தினம் விரதமிருந்து நந்தியை வழிபடுவது சிறப்பு தரும்.

🌿ஆடி மாதம் 11-ந் தேதி (27.7.2018) புதன்கிழமை *ஆடிப் பவுர்ணமி.* அந்த நாளில் விரதமிருந்து கிரிவலம் வந்தால் கீர்த்தி பெருகும்.

🌿ஆடி மாதம் 20ந் தேதியும்(5-8 -18) ஞாயிற்றுகிழமை *ஆடி கிருத்திகை.* வள்ளி மணாளனை விரதமிருந்து வழிபட்டால் வளங்கள் குவியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக