வெள்ளி, 12 மே, 2017

112 அடி ஆதியோகி சிலைக்கு 'கின்னஸ்' விருது...




112 அடி ஆதியோகி சிலைக்கு 'கின்னஸ்' விருது...

விழிகளை விரிய வைக்கிறது, அதன் பிரமாண்டம்; தோற்றமோ, மெய் சிலிர்க்கச் செய்கிறது. பச்சை மலைகளின் பின்னணியில் பூமிக்குள் இருந்து புதிதாய் முளைத்துள்ள கருமலை போல, பளபளத்து நிற்கும் அந்த சிலையை, பறவைப் பார்வையில் பார்க்க வேண்டுமென்று இதயம் துடிக்கிறது. கண் மூடி, ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் ஆதியோகியின் நிலையை, அச்சு அசலாய் உருவமாக்கி யிருக்கிறது அந்த சிலை.
கோவையை அடுத்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், வெள்ளியங்கிரி மலைச்சாரலில், பரந்து விரிந்து கிடக்கும் ஈஷா யோகா மையம், இதுவரை யோகக் கலையை கற்றுத்தரும் பாடசாலையாக மட்டுமே இருந்தது.
இப்போது, இந்த தேசத்தின் ஆன்மிக தலமாகவும், சர்வதேசங்களையும் ஈர்க்கும் ஒரு சுற்றுலா மையமாகவும் உருவெடுத்துள்ளது; காரணம், அங்கே புதிதாக நிறுவப்பட்டுள்ள, 112 அடி உயர ஆதியோகி சிலை.உலக அளவில், அமெரிக்காவிலுள்ள சுதந்திர தேவி சிலையும், பிரேசில் நாட்டின் தலைநகரமான ரியோடி ஜெனிரோவில் உள்ள மீட்பர் யேசு சிலையும் தான், பிரமாண்டத்தின் மாபெரும் குறியீடுகளாக இருந்தன.
இனி, அந்த பட்டியலில் ஆதியோகி சிலையும் இடம் பெறுமென்பது நிச்சயம். ஆனால்,அவற்றுக்கெல்லாம் இல்லாத பெருமை, ஆதி யோகிக்கு உண்டு; ஏனெனில், இது வெறும் சிலை இல்லை; உள் உணர்வுகளின் ஊற்று.
அமெரிக்காவில் நியூயார்க் நகரில், விடுதலைத் தீவில், 151 அடி உயரமுள்ள சுதந்திர தேவி சிலை, ஐக்கிய அமெரிக்காவின் சுதந்திர நுாற்றாண்டை நினைவு படுத்தும் விதமாக, 1886ல் நிறுவப்பட்டது. அமெரிக்காவுடனானநட்புறவைக் கொண்டாடும் விதமாக, பிரான்ஸ் தேசத்தால் இது அன்பளிப்பாக வழங்கப்பட்டது. விடுதலை உணர்வையும், சர்வ தேச நட்புறவையும் அந்த சிலை, நினைவுபடுத்துகிறது.
வெவ்வேறு காலகட்டங்களில், புதுப்பொலிவு பெற்று வருகிறது சுதந்திர தேவி சிலை. இச்சிலை யுடன், புகைப்படம் எடுப்பதற்காகவே ஆண்டு தோறும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் குவிகின் றனர். ஆண்டுக்கு, 40 லட்சம் பேர், இந்த சிலையை வந்து பார்வையிடுவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. கடலுக்கு நடுவே கம்பீரமாக நிற்கும் சுதந்திர தேவி சிலையை, வான் வழிப் பயணத்தின் போது பார்ப்பது, கொள்ளை அழகு என்பது அனுபவித்தவர்களின் கூற்று.
பிரேசிலின் ரியோடிஜெனிரோ நகரில் உள்ள மீட்பர் கிறிஸ்து சிலை, அங்குள்ள கொர்கோவாடா என்ற 2,300 அடி உயரமுள்ள மலையின் மீது, 130 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை தான், அந்த தேசத்துக்கே முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது. கடந்த, 1931ல்நிறுவப்பட்ட இந்த சிலை, 2006ல் புதுப்பிக்கப் பட்டது. அதற்கு அடுத்த ஆண்டில், புதிய ஏழு உலக அதிசயங்களில் ஒன்றானது.
இந்தியாவில் கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையே, இதுவரை நம் சிற்பக்கலைக்கான ஓர் அங்கீகாரமாக, அடையாளமாக இருந்து வருகிறது.கலை, பண்பாடு, ஆன்மிகம், யோகம் என எல்லாவற்றிலும்
உலகத்துக்கே குருவாக விளங்கும் இந்தியா வில், யோகக்கலையின் குருவாகக் கருதப் படும் சிவனுக்கென்று பிரமாண்ட சிலை எது வும் நிறுவப்பட்ட தில்லை.அந்த குறையைப் போக்கும் விதமாக, ஈஷா யோகா மையத்தில் சிவனை ஆதியோகி யாக வடிவமைத்து, 112 அடி உயரத்தில், 500 டன் இரும்பினால் ஆன சிலை, பிரமாண்டமாக நிறுவப்பட்டுள்ளது.
விழிகள் மூடியுள்ள நிலையில் உள்ள இந்த மார்பளவு சிலையில், சிவனின் தலையின்
இடப்புறத்தில் பிறையும், வலது தோளில் பாம்பும் இருப்பது போன்று அற்புதமாக
வடிவமைக்கப்பட்டுள்ளது.ஆதியோகியின் சிலை யின் முன்பாக அமர்ந்து, அதை நோக்கினால், பின்னாலிருக்கும் மலையும் சிறிதாகத் தெரிகிறது.
சூழலை மறந்து, கண்களை மூடி, உள்ளுக்குள்ளே அந்த ஆதியோகியை உணரும் போது, உலகமே சிறியதாகி விடுகிறது.



'கின்னஸ்' அங்கீகாரம்:
வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள, 112 அடி ஆதியோகி சிலையை, உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு சிலையாக, 'கின்னஸ்' புத்தகம் அங்கீகரித்து உள்ளது.
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள, 112 அடி உயர ஆதியோகி திருமுகச் சிலை, உலகிலேயே மிகப் பெரிய மார்பளவு சிலை என்று கின்னஸ் புத்தகம் அங்கீகரித்துள்ளது. கின்னஸ் சாதனை புத்தகத்தில், “உலகிலேயே மிகப் பெரிய மார்பளவுச் சிலையின் உயரம் 34.24 மீட்டர் (112 அடி), அகலம் 24.99 மீட் டர் (81 அடி), நீளம் 44.9 மீட்டர் (147 அடி). இந்த சாதனையை தமிழகத்தின் ஈஷா அறக்கட் டளை செய்ததாக 11 மார்ச், 2017 அன்று உறுதி செய்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சாதனை ஈஷா யோகா மையத்துக்குக் கிடைத்துள்ள, 2-வது கின்னஸ் சாதனை விருதாகும். ஏற்கெனவே, ஈஷா அறக்கட்டளை 2006-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி 8,52,587 மரக்கன்றுகளை நட்டதற்காக கின்னஸ் சாதனை அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திருமுகச் சிலையை வடிவமைக்க இரண்டரை ஆண்டுகள் ஆனதாகவும், அதை நிர்மாணிக்க 8 மாதங்கள் மட்டுமே ஆனதாகவும் ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் பிரம்மாண்ட அடையாளம்தான் இந்த முகம். மனிதர்கள் தன்னிலை மாற்றத்தைக் கொண்டுவர விரும்பினால், அதற்கானத் தீர்வை தங்களுக்குள்ளேயே தேடி உணர ஆதியோகி ஓர் அடையாளமாக, குறியீடாக இருந்து ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளார். உலகின் முதல் யோகியான ஆதியோகி, மனிதனின் தன்னிலை மாற்றத்துக்கென 112 வழிமுறைகளை வழங்கினார். அதன் குறியீடாகவே 112 அடி உயரச் சிலை அமைந்துள்ளது. யோக பாரம்பரியத்தில் சிவனை யோக விஞ்ஞானத்தின் மூலமான, முதல் யோகியாக, குருவாகப் பார்க்கின்றனர். இந்தியாவின் மேலும் 3 பகுதிகளில் 112 அடி உயர திருமுகச் சிலை அமையவும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக