செவ்வாய், 9 மே, 2017

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி



ஸ்ரீ நரசிம்ம  ஜெயந்தி

ஓம் வஜ்ர நகாய வித்மஹே தீக்ஷ்ண தம்ஷட்ராய தீமஹி
தந்நோ நாரசிம்ஹ:ப்ரசோதயாத்... .
வைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை சந்திப்பொழுதில் நரசிம்மரை வழிபடுவதே நரசிம்ம ஜயந்தியாகும்.
சோமப்பிரதோஷமும், சனிப்பிரதோஷமும் சிறப்பு போல நரசிம்ம ஜெயந்தி திங்கட்கிழமையிலும், நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதியிலும் வழிபடுதல் சிறப்பு.
கயவனாக இருந்த சுவேதன், மறுபிறவியில், பிரகலாதனாகப் பிறந்து, பெருமாள் அருள் பெற்றதாக, விஷ்ணுவே கூறியிருப்பதால், அவர் நரசிம்மராக உருவெடுத்தது பிரகலாதனுக்காக மட்டுமல்ல, ஒரு முறை தான் அல்ல ..பலமுறை தன் பக்தர்கள் வேண்டுதலுக்காக நரசிம்மராக பல தோற்றங்களில் அருளியிருக்கிறார் ..
யாதகிரி குட்டா ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம் அற்புதமானது
ஹைதராபாத் லிருந்து சுமார் 69 கிமீ தூரத்தில் வாரங்கல்லுக்கு அருகில் அமைந்துள்ள லக்ஷ்மிநரசிம்மர் கோயில் பஞ்ச நரசிம்மக்ஷேத்ரமாகத் திகழ்கிறது ..
இங்கு ஒரு குகையில் யது என்ற ரிஷி தவம் இருந்தார் ,
ரிஷிய சிங்கர் சாந்தாதேவி அவர்களது புத்திரரான .இவருக்கு மஹாவிஷ்ணு தரிசனம் தந்து அருள் புரிந்தார் ,
ரிஷியும் தான் நரசிம்ஹ மூர்த்தியாக அவரைப்பார்க்க விரும்பினார்,
முதலில் ஜ்வால நரசிம்ஹராக வந்தார்
பின்னர் உக்ர நரசிம்மராகத் தோன்றினார்
அவர் மிக்வும் உக்ரமாகத் தோன்ற ரிஷியும் அந்தத் தோற்றம் வேண்டாமென்று கேட்டுக்கொண்டார்
ஆகையால் யோக நரசிம்மராகக் காட்சி அளித்தார்
அதிலும் திருப்தி படாமல் போனதால் சாந்தமாக ல்க்ஷ்மி நரசிம்மராக தரிசனம் கொடுத்து அருள் புரிந்தார் ,
வைத்ய நரசிம்மர் ஆக தீராத வியாதியும் தீர்க்கிறார் ..
ஆக பஞ்ச நரசிம்மராகக் காட்சிக்கொடுத்தார் ,


நவகிரஹ தோஷம் போய்விடுகிறது பில்லி சூன்யம் ஏவல் போன்றதும் மறைகின்றன , நாற்பது நாட்கள் தொடர்ந்து பூஜிக்க
இங்கு ஆஞ்சநேயரும் இருக்கிறார்
ஸ்ரீ ஆண்டாள் நான்கு ஆழ்வார்கள் ராமலிங்கேஸ்வர ஸ்வாமியும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர் .
கர்ப்பக்கிரஹத்தின் மேல் சிகரத்தில் தங்க சுதர்சனச்சக்கரம் உள்ளது

முன்பெல்லாம் இந்தச்சக்கரம் பகதர்கள் வரும்போது அந்தப்பக்கம் திரும்பிஒரு காம்பஸ் போல் வழிக்காட்டுமாம்
பல ரிஷிகள் இங்கு வந்து தியானம் செய்கிறார்கள் ,இதற்கு ரிஷி ஆராதனா க்ஷேத்ரம் என்றும் பெயர் ,
இப்போதும் இங்கு பஞ்ச ராத்ர ஆகமம் நடக்கிறது.
சுமார் முன்னூறு அடிக்குமேல் இருக்கும் இந்த பஞ்சநரசிம்மரையும் ரிஷி தவம் செய்த குகையும் மிக அற்புதமானது ..!




விதவிதமாய் காட்சிதரும் நரசிம்மர்

பெருமாள் கோயில்களில் அருள்புரியும் மகாவிஷ்ணு நின்ற, இருந்த, கிடந்த என பல கோலங்களில் அருள்புரிவதுபோல் நரசிம்மப் பெருமாளும் அதேபோல் வித்தியாசமான திருக்கோலங்களில் பல திருத்தலங்களில் எழுந்தருளியுள்ளார் அவற்றில் சில: பெரும்பாலும் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தரும் நரசிம்மர், திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் தாலுகா பொன்னியம்மன்மேடு என்ற திருத்தலத்தில் நின்ற கோலத்தில் அபய ஹஸ்தத்துடன் அருள்புரிகிறார். ஏழு அடி உயரத்தில் காட்சி தரும் இவர் நான்கு கரங்களுடன் திகழ்கிறார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ‘அளே தர்மபுரி’ என்னும் ஊரில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் மூலவர் நரசிம்மர், இரண்டடி உயரத்தில் நின்ற கோலத்தில் கிழக்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். தாயாரும் நின்ற கோலத்தில் காட்சியளிப்பது மிகவும் அபூர்வமானது. இந்தப் பெருமாளை ‘இரணியவத நரசிம்மப் பெருமாள்’ என்று போற்றுவர். உக்கிர நரசிம்மரான இவருக்கு பத்து திருக்கரங்கள் உள்ளன. இரணியனை மடியில் கிடத்தி வதம் செய்யும் கோலத்தில் காட்சி தருகிறார்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை தலத்தில் யோக நரசிம்மர் நின்ற திருக்கோலத்தில் ஆறு அடி உயரத்தில் நான்கு கரங்களுடன் உக்கிரமாகக் காட்சி தருகிறார். இதேபோல் மதுரை மாவட்டம் மன்னாடிமங்கலம் என்னும் திருத்தலத்தில் யோக நரசிம்மர் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி-பூதேவி உடனுறை யோக நரசிம்மர் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் கிழக்கு திசை நோக்கி அருள்புரிகிறார்.இவ்வாறு நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் நரசிம்மர், பல திருத்தலங்களில் அமர்ந்த கோலத்திலும் அருள்புரிகிறார்.பெரும்பாலும் இரண்டு கண்களுடனும், நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் நரசிம்மர்,
காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் என்னும் ஊரில் ஸ்ரீபாடலாத்திரி நரசிம்மர் கோயிலில் உக்கிர நரசிம்மராக, கிழக்கு திசை நோக்கி எட்டடி உயரத்தில் வீற்றிருந்த திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் விளங்குகிறார். மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியிருக்க, கீழ் இருகரங்கள் அபய ஹஸ்தத்துடன் காட்சி தரும் இவர், ‘நெற்றிக்கண்’ உடையவர். இது ஓர் அபூர்வ தரிசனம் என்பர். இதே மாவட்டத்தில் பொன் விளைந்த களத்தூரில் உள்ள பெருமாள் கோயிலில் மூலவராக ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஸ்ரீவைகுண்ட பெருமாள் விளங்குகிறார். இங்கு உற்சவ மூர்த்தியாக நரசிம்மப் பெருமாள் மனித முகத்துடன் எழுந்தருளியுள்ளார். இது மிகவும் அபூர்வமான திருக்கோலம் என்பர்.
சேலம் மாவட்டம் நாமக்கல்லில் குடைவரைக்கோயிலில் நரசிம்மர், மூலவராக வீராசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இரணியன் வயிற்றினைப் பிளந்த கைகள் என்பதற்கு ஏற்ப கைகள் சிவப்பு நீரோட்டத்துடன் அமைந்துள்ளதையும் நகங்களில் ரத்தக்கறை படிந்தாற்போல சிவப்பு நிறம் அதையும் தரிசிக்கலாம். அவணியாபுரம் திருத்தலத்தில் நரசிம்மர் மடியில் அமர்ந்திருக்கும் லட்சுமியின் தோற்றம் வியப்பைத் தரும். நரசிம்மர் சந்நதியில் தாயார் ‘நரசிம்ம முகத்துடன்’ காட்சி தருவது இத்திருத்தலத்தில் மட்டும்தான். நரசிம்மர், தனது முகத்தின் சாயலைத் தாயாருக்கு தந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. அமர்ந்த திருக்கோலத்திலும், நின்ற கோலத்திலும் காட்சி தரும் நரசிம்மர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை திருத்தலத்தில் ‘சயன நரசிம்மர்’ என்ற பெயரில் பள்ளி கொண்ட நரசிம்மராக அருள்புரிகிறார். அருகில் தாயார் காட்சி தருகிறார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டத்தில் உள்ள நங்க வள்ளி நரசிம்மர் கோயிலில் ஐயப்பன்போல் குந்திய நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்து, யோகப்பட்டையுடனும், நான்கு கைகளுடன் நரசிம்மர் அருள்புரிவதைத் தரிசிக்கலாம். பொதுவாக நரசிம்மர் சிங்க முகத்தில்தான் காட்சி தருவார். ஆனால், ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் உள்ள ஆகிரி பள்ளி திருத்தலத்தில் உள்ள நரசிம்மர் கோயிலில் ‘புலி முகம்’ கொண்டவராகக் காட்சி தருகிறார். இவரை வ்யாக்ர நரசிம்மர் என்று போற்றுவர். நரசிம்மர் எந்த கோலத்தில் அருள்புரிந்தாலும் அவரை நெய் விளக்கு ஏற்றி வழிபட எடுத்த காரியம் வெற்றி பெறும். எதிலும் தைரியம் பிறக்கும்; திருமணத்தடைகள் நீங்கும்; வாழ்வு வளம் பெறும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக