புதன், 10 மே, 2017

சித்திரா பௌர்ணமி



சித்திரா பௌர்ணமி

சித்திரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று சைவ மக்களால் அநுட்டிக்கப்படும் ஒரு விரத நாளாகும். இந்நாளில் சைவர்கள் விரதமிருந்து கோயில்களிலும் ஏனைய புனித இடங்களிலும் கஞ்சி காய்ச்சி சித்திர புத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி வார்ப்பர். இந்நாளில் முன்னோர் பொங்கல் வைத்துப் பூச்சொரிந்து குரவைக் கூத்தாடி வசந்த விழாவைக் கொண்டாடினர். காலப்போக்கில் இதை சிவனுடைய சிறப்பு விழாவாகவும் இறந்த
அன்னையரின் பிதிர்த் தினமாகவும் அனுட்டிக்க ஆரம்பித்தனர்.
தாய் உயிருடன் இல்லாத ஆண்கள் அனைவரும் காலையில் எழுந்து நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி இறந்த தாயாரை நினைத்து தர்ப்பணம் பண்ணுவர். பின் வீட்டிற்கு வந்து, தாயார் படத்திற்ற்கு உணவு படைத்து பின்னர் குடும்பத்துடன் உணவு உண்பர். பொதுவாக தாயார் இறந்த ஆண்டுத் திவசம் (முதலாம் ஆண்டு) முடியும் வரை இவ்விரதம் அநுட்டிக்கக் கூடாது என்பர். பெண்கள் தர்ப்பணம் பண்ணாது இவ்விரதத்தை அநுட்டிப்பர்.


சித்ரா பவுர்ணமி: பாவம் போக்கும் சித்ரகுப்தன் வழிபாடு!

சித்ரா பவுர்ணமி நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவார்கள். சித்திரை நட்சத்திரம் பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் முன்பின் வருவதால் அந்த மாதத்திற்கு சித்திரை மாதம் எனப் பெயர். சித்திரை மாதத்தில் பவுர்ணமி அன்று சிவபெருமாள்- பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் சித்திரைகுப்தன். மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணிய கணக்குகளை எழுதபடைக்கப்பட்டவர் சித்திர குப்தனை வேண்டிக் கொண்டு பெரும் பாலும் பெண்களே விரதம் மேற் கொள்கின்றனர். சித்ரா பவுர்ணமி தினத்தில் சித்தர குப்தனைப் போல் மாக்கோலம் போட்டு ஏடு எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர். பாவங்களிலிருந்து விடுபடவும் நரகத்திற்கு போகாமல் இருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர். இரவு நேரத்தில் சித்தரபுத்திர நாயனார் கதையும் சொல்வதுண்டு திருவண்ணாமலையிலும் காஞ்சிபுரத்திலும், சித்திரகுப்தனுக்கத் தனியாக ஒரு கோயில் உள்ளது. சித்ராபவுர்ணமி தினத்தில் பூஜையும், புறப்பாடும் உற்சவமும் நடந்து வருகிறது. ஆதி நாளிலிருந்தே தமிழர் கொண்டாடும் திருவிழாக்களில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி நடைபெறும் சித்திரை திருவிழா தனிச்சிறப்புடையது. தென்னாட்டு கோயில்களில் குறிப்பிடத்தக்க மதுரை கோயிலில் அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். சித்ராபவுர்ணமி அன்று இங்கு தரிசனம் செய்தால் செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம்! அதுமட்டுமல்லாமல் அரவாணிகள் (திருநங்கைகள்) கொண்டாடும் கூத்தாண்டவர் திருவிழாவும் சித்ரா பவுர்ணமி அன்று தான் நடக்கிறது. குற்றாலம் செண்பகாதேவி அம்மனுக்கு சிறப்பு பூஜை வழிபாடும் நடக்கும். இதில் கலந்து கொள்ள தென் மாவட்ட பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படும் காட்சியைக் காண கண்கோடி வேண்டுமே!சித்ரா பவுர்ணமி சித்திரகுப்த நாயனார்
மாதந்தோறும் பவுர்ணமி வந்தாலும் சித்திரையில் வரும் பவுர்ணமிக்கு என்று ஒரு தனி சிறப்பு உள்ளது. புழுக்கத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சமாளிக்க இப்படி நீர்நிலைக்கு அருகில் மக்களை வரவைப்பதே இந்த சித்ரா பவுர்ணமியின் விஞ்ஞானப் பூர்வ உண்மை. அதிலும், உறவினர், நண்பர்கள் புடை சூழ அமர்ந்து உரையாடி, பாடி மகிழ்ந்து உண்பது எல்லோருக்கும் பிடித்தமான விஷயம் தான். அன்றைய தினம் பல்வேறு கோயில்களிலும் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. எங்கும் அதிகமான கூட்டம் காணப்படும். புராணக் கதைகளின்படி, மனிதர்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எழுதும் சித்ர குப்தன் அவதரித்த நாளும் இன்று தான். அவர் சிவன் வடித்த சித்திரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டதாலும், சித்திரை மாதத்தில் பிறந்ததாலும் சித்ர குப்தன் என்று அழைக்கப்படுகிறார். சித்திரை மாதம் பவுவர்ணமி, திதியில், சித்திரை நட்சத்திரமும் கூடி வருவருதால் சித்திரா பவுர்ணமி என அழைக்கப் பெறுகின்றது. மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேட இராசியில் (சித்திரை மாதத்தில்) வரும் பவுர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பவுர்ணமி வரும் நாள் சித்ரா பவுர்ணமியாக கொண்டாடப்படுகிறது. சித்திரா பவுர்ணமி சித்திர குப்தன் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. இதுபற்றி இரண்டு புராண கதைகள் கூறப்படுகின்றன. மனிதர்களின் ஆயுட்காலம் முடிந்ததும். அவர்களின் உயிர்களை எடுப்பவர் எமதர்மராஜா. அவரவர் செய்த பாவ, புண்ணியத்திற்கேற்ப தண்டனைகளையும் கொடுத்து வந்தார் அவர். அவர் ஒரு முறை மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானை சந்தித்து தனது பணிகளில் தனக்கு உதவியாக ஒருவரை அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். சிவபெருமானும் படைக்கும் கடவுளான பிரம்மாவிடம் கூறி ஒருவரை படைக்க வைத்தார். சித்ராபவுர்ணமியன்று படைக்கப்பட்டு அன்று பிறந்ததால் அந்தகுமாரனுக்கு சித்ரகுப்தன் என்று பெயரிடப்பட்டது என ஒரு கதையில் கூறப்படுகிறது.
மற்றொரு கதை: ஒரு முறை தனது மனைவியான பார்வதி தேவியை ஆச்சர்யப்பட வைக்க வேண்டும் என்பதற்காக சித்திரம் (ஓவியம்) ஒன்றிற்கு உயிர் கொடுத்தார். சித்திரத்திலிருந்து உயிர் பெற்று வந்த குமாரன் என்பதால் சித்திரகுப்தன் என பெயர் பெற்றார். இவரை எமதர்மராஜனுக்கு உதவி செய்ய சிவபெருமான் அனுப்பி வைத்தார் என கூறப்படுகிறது. எமதர்மராஜனிடமிருக்கும் சித்ரகுப்தன் மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணிய கணக்குகளை குறித்து வைத்து அவரவர் செய்த பாவ, புண்ணியத்திற்கேற்ற பலன்களை எமதர்மனிடம் கூறி நிர்ணயிக்கிறார். என கூறப்படுகிறது. சித்ரகுப்தன் கோயில் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. சித்ரகுப்தனை கருணீயர் சமுகத்தினர் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோயிலை சோழர்குலத்தைச் சேர்ந்த அரசர் சென்னிவளவன் என்பவர் கட்டினார் என கூறப்படுகிறது. இந்த கோயிலில் சித்ரகுப்தன் இடது காலை மடித்து, வலதுகாலை ஊன்றிய நிலையில் காணப்படுகிறார். ஒரு கையில் எழுத்தாணியும், ஒரு கையில் ஓலைச் சுவடியும் காணப்படுகிறது.
சித்ராபவுர்ணமி விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஐஸ்வர்யகலச பூஜை. மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. இரவு உற்சவர் நான்கு மாடவீதிகளிலும் திரு உலா வருகிறார். ராகுபகவான் சித்ரகுப்தனுக்கு கட்டுப்பட்டவராக கருதப்படுகிறார். இவர் கூறியதன்படி மற்ற கிரகங்களும் சித்ரகுப்தனுக்கு கட்டுப்பட்டுள்ளனர் எனகூறப்படுகிறது. ராகு தோஷம் உள்ளவர்களும், திருமணம் தடைப்பட்டவர்களும் சித்ரகுப்தனை வழிபட்டால் ராகு தோஷம் நீங்கும், திருமணத்திற்கு இருந்த வந்த தடைகளும் நீங்கும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது.
சித்ரா பவுர்ணமி அன்று காலையில் குளித்து முடித்து பூஜையறையில் விநாயகர் படத்தை நடுவில் வைத்து, சிவனை எண்ணி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் செய்து படைத்து அதனை எல்லோருக்கும் அளிக்கலாம். பழங்காலத்தில், சித்ரா பவுர்ணமி அன்று ஆற்றங்கரையில் உறல் தோண்டி அதற்கு திருவுறல் என்று பெயர் சூட்டி, அங்கே இறைவனை வலம் வரச் செய்வார்கள். சித்திரை மாதத்தில் தாராளமாகக் கிடைக்கும் மா, பலா, வாழை போன்ற பழங்களை இறைவனுக்கு படைத்து பூஜிப்பார்கள். இந்த நாளில் உறவினர், நண்பர்களுடன் நதிக்கரையில் உரையாடியபடி உண்பதுதான் பழங்காலம் தொட்டு இருக்கும் வழக்கமாகும்.
சித்ரா பவுர்ணமியன்று கீழ்கண்ட ஸ்லோகத்தை கூறி சித்ரகுப்தனை வழிபட்டால் சித்ரகுப்தனின் அருள் கிடைக்கும்.
சித்ரகுப்தம் மஹா ப்ராக்ஞம்,
லேகணீபத்த தாரிணம்
சித்திர ரக்னாம்பரதரம்
மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்
இதன் பொருள்: சிறந்த அறிவும், ஞானமும் கொண்டவரும், எழுத்தாணி, ஏடு ஆகியவைகளை கைகளில் வைத்திருப்பவரும், அழகிய ரத்தினத்தலான உடையை அணிந்திருப்பவரும், எல்லா உயிர்களுக்கும் நடுநிலைமையுடன் நீதி அரசராக விளங்குவரான சித்ரகுப்தரே உமக்கு நமஸ்காரம். இந்த ஸ்லோகத்தை கூறி சித்தகுப்தரை வழிபடுவது நலம் தரும். ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் பாவ புண்ணிய கணக்குகள் எழுதப்படுகிறது. சித்ரா பவுர்ணமி அன்று விரதத்தை ஆரம்பித்து சித்ர குப்தாய என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். பவுர்ணமி நிலவு உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும். பிறகு, பூஜைகளுக்கு முடிந்த அளவிற்கு தானம் செய்ய வேண்டும். பேனா, பென்சில் இவற்றை படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
உப்பு சேர்க்காமல் ஆகாரம் உண்டு விரதம் இருந்தால் சித்திரகுப்தன் நம் பாவ புண்ணிய கணக்கை எழுதும் போது புண்ணிய கணக்கை அதிகப்படுத்தியும் பாவத்தை குறைத்தும் எழுதுவார். கற்புக்கரசி கண்ணகிக்கு மங்கலா தேவி கோயில் எனும் பெயரில் கேரள தமிழக எல்லையில் அமைந்துள்ளது. ஒவ்வோராண்டும் சித்ரா பவுர்ணமி அன்று கண்ணகி கோயில் திருவிழா நடைபெறும்.




இவ்வுலகின் பாவ புண்ணி பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்டினார். சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன் (சித்ரகுப்தன்) சித்ரா பவுர்ணமி தினத்தில் அவதரித்தார். அண்ட சராசரங்களிலுள்ள முன்னாள் கணக்குகளையும், பிரம்மா விஷ்ணு முதலானவர்களுடைய பாவ புண்ணிய கணக்குகளையும் தினமும் தமக்குத் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி சித்திர புத்திரனார் கயிலையிலிருந்து கொண்டு கணக்குகளை எழுதிவந்தார்.
ஒரு சமயம் தேவேந்திரன் தனக்கு மக்கட்பேறு வேண்டுமென்று தருமங்கள் பல புரிந்து இறைவனை நோக்கி இந்திராணியுடன் தவம் புரிந்தார். சிவபெருமான் காமதேனுவை அழைத்து, இந்திரன் இந்திராணி தவத்தை எடுத்துரைத்துப் பின்னர், சித்திரபுத்திரரை இந்திரனுக்குப் புத்திரனாகப் பிறந்து, அவன் கவலையை தீர்க்குமாறு அருள்புரிந்தருளினார். அங்ஙனமே சித்திரபுத்திரனார் காமதேனுவின் வயிற்றில் உதித்து பாவ புண்ணியங்களைப் பகுத்து வந்தார். இந்த சித்திரபுத்திர நாயனார் கதை சித்ரா பவுர்ணமி அன்று ஆலயங்களில் படிக்கப்பட்டு அன்னதானங்கள் நடைபெற்று வருகின்றன. சித்திரைக் கதை, சித்திரைக் கஞ்சி எனவும் வழங்கப்படும்.
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் முன் - பின்னாக வருவதால் அந்த மாதத்திற்கு சித்திரை மாதம் என்று பெயர். சித்திர குப்தனை வேண்டிக்கொண்டு பெரும்பாலும் பெண்களே விரதம் மேற்கொள்கின்றனர். சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திர குப்தனைப்போல மாக் கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர். பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர். இந்த நாளில் மரணதேவனின் விசேஷ பிரதிநிதியான சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி தினத்தில் செய்யப்படும் இந்த பூஜையால் மேல் உலகில் உள்ள தேவர்கள் திருப்தியடைந்து மனிதர்களின் செயல்களை மிகுந்த பரிவுடன் தீர்மானிக்கிறார்கள்.
பூஜை
சித்ரா பவுர்ணமியன்று செய்யப்படும் விரிவான பூஜையைப் பற்றி பல நூல்கள் தெரிவித்திருந்தாலும், நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது விக்ரகத்தின் தேவதையை ஆவாஹனம் செய்து
சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்.
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்
என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பி ரார்த்தனை செய்ய வேண்டும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். மேலும் இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.
சித்ரகுப்த கோயில்:
இந்த சித்ரகுப்தனுக்கென காஞ்சிபுரத்தில் ஒரு ஆலயமும், திருவண்ணாமலையில் ஒரு சன்னதியும் உள்ளது. இதே போல் தேனி மாவட்டம் போடி அருகே கோடங்கிப்பட்டி, கோவை சிங்காநல்லூர் எமதர்மன் கோயில்களிலும் சித்ரா பவுர்ணமி தினத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்ய கடன் வசூலாகும், வாணிபம் சிறக்கும், ஆயுள்பலம் கூடும் என்பது நம்பிக்கை. எமன் தென்திசைக்கு அதிபதி என்பதால் சித்ரா பவுர்ணமி அன்று போடப்படும் கோலங்கள் தென்புற வாசலை அடைப்பது போல் கோலம் போடும் வழக்கம் இன்றும் உள்ளது. சித்ரா பவுர்ணமி மற்ற பவுர்ணமியைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக