வியாழன், 14 டிசம்பர், 2017

கிறிஸ்துமஸ் சிந்தனைகள் 1



கிறிஸ்துமஸ் சிந்தனைகள் 1

ஆண்டவருக்கு பணிவோம்ஒரு போர்முனையில் இருந்த வீரர்களிடம் படைத்தலைவர், “இன்றைய போரில் மிகச்சிறந்த வீரன் யார்?” என்றார்.“தன் உயிரைப் பணயம் வைத்து இன்னொரு வீரனை காப்பாற்றிய ஜார்ஜ் தான் சிறந்த வீரன்,” என்றான் ஒருவன்.“இல்லை இல்லை... நம் தேசத்தைக் காக்க துப்பாக்கிக் குண்டுகளை மார்பில் தாங்கி மடிந்தானே அல்போன்ஸ்... அவன் தான் சிறந்தவன்” என்றான் மற்றொருவன்.“கால்களை இழந்து மயக்கநிலையிலும் 'நமது தேசம் வாழ்க' என முழங்கினானே சார்லஸ்... அவனே சிறந்தவன்,”என்றான் இன்னொருவன். படைத்தலைவர் இடைமறித்து, “போர்க்களத்தில் ஒரு வீரனின் உயிர் போவதும், ஒருவரை ஒருவர் பாதுகாப்பதும், உறுப்புகளை இழப்பதும் சகஜம். ஆனால், நம் வீரன் ஒருவனை எதிரிநாட்டு வீரன் ஒருவன் வெட்டுவதற்காக வாளை ஓங்கினான்.
அந்த நேரத்தில் போர்நிறுத்த முரசு அறையப்பட்டது. உடனே ஓங்கிய கையை கீழே போட்டு விட்டான். தன் படைத்தலைவரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்தவன் நமது எதிரியாக இருந்தாலும் அவனே சிறந்த வீரன்,” என்றார்.“இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக் கொள்ளுகிறான். அலப்புகிற (மீறுகிற) மூடனோ விழுவான்,” என்கிறது பைபிள்.படைத்தலைவனுக்கு வீரன் கட்டுப்படுவது போல, ஆண்டவரின் கட்டளைகளுக்கு நாம் பணிந்து நடக்க வேண்டும். நன்றி  தினமலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக