சனி, 16 டிசம்பர், 2017

பலன் தரும் ஸ்ரீ ஹனுமான் மந்திரங்கள்


பலன் தரும் ஸ்ரீ ஹனுமான் மந்திரங்கள்


1. *ஸ்ரீ ஹனுமத் சுலோகம் :-*

அசாத்ய  சாதக ஸ்வாமிந் |
அசாத்யம் தவகிம்வத |
ராம தூத க்ருபாசிந்தோ |
மத் கார்யம் சாதய ப்ரபோ|

எந்த ஒரு காரியம் துவங்கும் முன்பும் இந்த ஸ்லோகத்தை மூன்று தடவை கூறி ஆஞ்சநேயரை வணங்கி வேண்டிய பின்னர் துவங்க சிறப்பாக முடியும்.
ஏற்கனவே துவங்கிய வேலை பாதியில் முடிவடையாமல் நின்றால் செவ்வாய்க்கிழமை அன்று ஸ்ரீ ஹனுமன் ஆலயம் சென்று அவருக்கு வெற்றிலை மாலை சாற்றி அமர்ந்து இந்த ஸ்லோகத்தை  27 தடவை ஜெபித்து வேண்டிக்கொள்ள தடைபட்ட காரியம் விரைவில் முடியும் சூழல் உருவாகும்.

2. *வியாதிகள்,எதிரிகள் நீங்க ,வசீகரம் தரும் மந்திரம்*

ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
சர்வ சத்ரு சம்ஹாரணாய சர்வ ரோக ஹராய |
சர்வ வசீகரணாய ராமதூதாய ஸ்வாஹா ||


3. *எல்லா ஆபத்துக்களில் இருந்தும் விடுபட :-*

ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |ஆத்யாத்மிகாதி தெய்வீகாதி
பௌதீக தாபத்ரய நிவாரணாய| ராமதூதாய ஸ்வாஹா ||

உங்களுக்கு படுபட்சி இல்லாத நல்ல நாளாகத்  தேர்ந்தெடுத்து 108 தடவை இம்மந்திரம் ஜெபித்து கையில் ரக்ஷை கட்டிக்கொள்ள மனிதர்களாலும், இயற்கை மற்றும் துஷ்ட சக்திகளாலும் எவ்வித ஆபத்தும் ஏற்படாது சர்வரக்ஷையாக விளங்கிக் காக்கும்.ரக்ஷையை அணியும் முன் மேற்சொன்ன மந்திரம் 3 தடவை ஜெபித்து அர்ச்சித்து பின் அணிந்து கொள்ளவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக