திங்கள், 18 டிசம்பர், 2017

சனிபகவானின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம் !!


இன்று (19-12-2017) காலை 9-59 மணிக்கு சனிப்பெயர்ச்சி - சனிபகவான் பிடிப்பது யாரை?
சனிபகவானின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம் !!

🌹 வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஹேவிளம்பி வருடம் மார்கழி மாதம் 4ஆம் தேதியான (19.12.17) நாளை காலை 9-59  மணிக்கு சனிபகவான் விருச்சக இராசியிலிருந்து தனுசு இராசிக்கு சஞ்சாரம் செய்ய இருக்கிறார். சனிபகவானின் இந்த பெயர்ச்சியினால் எந்த இராசிக்கு எந்த விதமான தாக்கங்களை தரப்போகிறார் என்றும், சனியின் பிடியிலிருந்து தப்பிக்க செய்ய வேண்டிய பரிகாரங்களை பற்றியும் பார்ப்போம்.

இராசிகளும் சனிபகவானின் தாக்கங்களும்!

🌹 மேஷம் - அஷ்டம சனி முடிவடைகிறது.
🌹 ரிஷபம் - அஷ்டம சனி ஆரம்பம்.
🌹 மிதுனம் - கண்டக சனி.
🌹 கடகம் - சனியின் பாதிப்பு இல்லை.
🌹 சிம்மம் - அர்த்தாஷ்டம சனி முடிவு.
🌹 கன்னி - அர்த்தாஷ்டம சனி ஆரம்பம்.
🌹 துலாம் - ஏழரை சனி முடிவு.
🌹 விருச்சகம் - பாத சனி.
🌹 தனுசு - ஜென்ம சனி.
🌹 மகரம் - விரய சனி.
🌹 கும்பம் - சனியின் பாதிப்பு இல்லை.
🌹 மீனம் - சனியின் பாதிப்பு இல்லை.

சனியின் பிடியிலிருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள் :

🌹 தினமும் உலர்திராட்சை ஒருகைப்பிடி அளவுக்கு, காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும். உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும், அதையே மாற்றக்கூடிய சக்தி சனிபகவானிற்கு உண்டு.

🌹 மேலும், வன்னி மர விநாயகருக்கு பச்சரிசிமாவு படைத்தாலும், சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம் படைத்தாலும் ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.

🌹 திருநள்ளாறு சென்று சனி பகவானை வணங்கி வர தோஷம் நிவர்த்தியாகும்.

🌹 காகத்திற்கு தினமும் எள் கலந்த சாதத்தை வைப்பதன் மூலம் சனியால் ஏற்படும் வினைகளின் வீரியம் குறையும்.

🌹 கறந்த நாட்டு பசுவின் பாலை சனிக்கிழமைத்தோறும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதன் மூலம் தோஷம் நிவர்த்தியாகும்.

🌹 பிரதோஷ வழிபாட்டை மேற்கொண்டால் சனி தோஷத்தினால் ஏற்படும் பிரச்சனையின் வீரியம் குறையும்.

🌹 காக்கை சனிபகவானின் வாகனம். காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தரும். காக்கைகளில் நு}பு+ரம், பரிமளம், மணிக்காக்கை, அண்டங்காக்கை என சில வகைகள் உண்டு. காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப் பறவைகளிடமும் காண முடியாது. எமதர்மராஜன் காக்கைவடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். ஆகவே, காக்கையை வழிபடுங்கள்.

🌹 அதனால், காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும், சனியும் சகோதரர்கள் ஆவர். அதனால், காக்கைக்கு உணவிடுவதால் ஒரேசமயத்தில் எமனும், சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது.

🌹 காலையில் நாம் எழுவதற்கு முன், காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்தக் காரியம் வெற்றிபெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக்கரைந்தால் நல்ல பலன் உண்டு.

🌹 வீடுதேடி காகங்கள் வந்து கரைந்தால், அதற்கு உடனே உணவிடவேண்டும். எனவே, காக்கையை வழிபாடு செய்வதால் சனிபகவான், எமன் மற்றும் முன்னோர்களின் ஆசிர்வாதத்தினைப் பெற்று மனமகிழ்வுடன் வாழலாம்.

🌹மாற்றுத் திறனாளிகளிடம் ஊது வத்தி வாங்கி ஆலயத்தில் தருவதும் சனி பகவான் அருலை பெறலாம் நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக