சனி, 24 மார்ச், 2018

திருமாலின் சுதரிசன சக்கரத்தின் சுழல்வேகம் எவ்வளவு??


திருமாலின் சுதரிசன சக்கரத்தின் சுழல்வேகம் எவ்வளவு??

இப்படி ஒரு கேள்வி கேட்டால் நாம் அனைவரும் தலையை சொறிவோம்!!

கொஞ்சம் நகைப்புக்குரிய விஷயம் என்று கூட எண்ணுவோம் ஆனால் விஷயம் இருக்கிறது.

பொதுவாக மஹாவிஷ்ணுவை வழிபடும் வைணவர்களை கேட்டால் கூட இந்த கேள்விக்கு பதில் காண முடியாது.

ஆனால் நம் சைவ நோக்கில் ஆராய்ந்தால் இந்த கேள்விக்கு அறிவியல் பூர்வமான பதில் அளிக்க முடியும் ஏன்??

திருமால் கையில் வைத்திருக்கும் சக்கரத்தின் சுழல் வேகம் "30கிமீ/வினாடி" என்று துல்லயமாக கூறவும் முடியும்

திருமால் கையில் வைத்திருக்கும் சக்கரப் படை சிவபெருமான் அளித்தது என்பது நாடறிந்த உண்மை.

திருவீழி மிழலையும் திருமாற்பேறும் ஆகிய இரண்டு ஊர்கள் இந்த வரலாற்றை நினைவு கூறும் அற்புதத் தலங்கள்

சிவபரம்பொருளை ஆயிரம் மலர்கொண்டு அர்சித்த நாராயண மூர்த்தி ஒருநாள் மலரொன்று குறையவே கண்ணொன்றை இடந்து இறைவன் திருவடியில் சமர்பிக்க இறைவன் தான் கையில் வைத்திருந்த சக்கரப்படையை நாராயணற்கு வழங்கினான் என்பது வரலாறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக