வெள்ளி, 6 டிசம்பர், 2019

சபரிமலை பக்தர்களின் முப்பெரும் தத்துவங்கள் !!


சபரிமலை பக்தர்களின் முப்பெரும் தத்துவங்கள் !!


🌟 சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர். அவ்வாறு மாலை அணிந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்யும் பக்தர்கள் முப்பெரும் தத்துவங்களின் ஓர் உருவமாகத் திகழ்பவர்கள் என்பார்கள். அதை பற்றி தெரிந்து கொள்வோம்!!

🌟 சபரிமலை பக்தர்களின் முப்பெரும் தத்துவங்களாக விளங்கும் அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம். அதில் அத்வைதம் என்பது தானே பிரம்மம் என்பதாகும். விசிஷ்டாத்வைதம் என்பது ஜீவன் வேறு பிரம்மம் வேறு என்பதாகும். துவைதம் என்பது பிரம்மமும், ஜீவனும் வேறு என்றாலும் ஒரு நிலையில் அவைகள் ஒன்றுபடுகின்றன என்பதாகும்.

🌟 மாலை அணிந்து விரதம் தொடங்கிய நாளிலிருந்து அத்வைதத் தத்துவப்படி அஹம்பிரம்மாஸ்மி - தானே கடவுளாகத் திகழ்கிறார். அவரை அனைவரும் சுவாமி என்று அழைத்து சரணம் கூறுகின்றனர்.

🌟 அடுத்து, விரதம் முடித்து சபரிமலை ஸ்ரீ ஐயப்ப தரிசனத்திற்கு செல்லும் நேரத்தில், ஜீவன் வேறு பிரம்மம் வேறு.

🌟 ஸ்ரீ சுவாமி ஐயப்பனைக் கண்டு அவனருளில் சங்கமிக்கும் நேரத்தில் பிரம்மமும் - ஜீவனும் வேறென்றாலும் ஒரு நிலையில் அவைகள் ஒன்றுபடுகின்றன என்ற துவைத தத்துவத்திற்கு உதாரணமாய்த் திகழ்கிறோம். இப்படி அர்த்தமுள்ள முப்பெரும் தத்துவங்களின் உருவமாகத் திகழ்பவர்கள் தான் ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள்.

ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய ஐயப்ப ஸ்லோகம் :

ஓம் ஹாலாஹல தராத்மஜாய நம
ஓம் அர்ஜுநேசாய நம
ஓம் அக்னிநயநாய நம
ஓம் அநங்க மதனாதுராய நம
ஓம் து;டக்ரஹாதிபாய நம

ஓம் ஸ்ரீ தாய நம
ஓம் சி;டரக்ண தீக்?தாய நம
ஓம் கஸ்தூரி திலகாய நம
ஓம் ராஜசேகராய நம
ஓம் ராஜ ஸத்தமாய நமஐயப்ப பக்தர்களே வணக்கம்..!!

சாமி சரணம்.. ஐயப்ப சரணம்...

ஐயப்பனின் வரலாற்றை முழுவதுமாக தெரிந்துக்கொள்ள உங்களுக்கு ஆவலா?... இதுதான் சரியான இடம்.. ஐயப்பன் வரலாற்றை எளிதாக புரிந்துக்கொள்ளும் வகையில் தமிழ்நடையில் ஐயப்பன் வரலாறு என்னும் செயலியில் கொடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக