வியாழன், 14 ஜூன், 2018

ஆனி மாத சிறப்புகள் பற்றி அறிவோம்!


ஆனி மாத சிறப்புகள் பற்றி அறிவோம்!

''ஆனிமாதமும் ஆடல் வல்லானும்!
ஆ டல் வல்லான், திருக்கூத் தன், தில்லையுட் கூத்தன் எனப் பல விதமான திருநாமங்களில் சிதம்பரம் நடராஜரை பக்தர்கள் அழைப்பார்கள்.
சைவத்தில் பொதுவாக ‘கோயில்’ என்று சொன்னாலே அது சிதம்பரத்தைத்தான் குறிக்கும். அதனால்தான் சிதம்பர மகாத்மியத்தைக் கூறும் நூல் ஒன்று ‘கோவில் புராணம்’ என்றே அழைக்கப்படுகிறது. சிதம்பரத்துக்கும் ஆனி மாதத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு, வருடத்தில் இரண்டு பிரம்மோற்சவம் நடை பெறுகிறது.
முதலாவது, ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்துக்குப் பத்து நாட்கள் முன்னதாகக் கொடியேற்றுவர். முதல் நாளில் இருந்து எட் டாம் நாள் திருவிழா வரை ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீசிவா னந்த நாயகி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீசண் டேஸ்வரர் ஆகிய பஞ்ச (உற்சவ) மூர்த்திகளும் ஒவ் வொரு நாளும் திருவீதி உலா வருவார்கள்.ஒன்பதாம் நாள் தேர்த் திரு விழா. அன்று மூலவரான ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீசண்டேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் தேர்களில் திரு வீதியுலா வருவார்கள்.
ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமி அம்பாள் இருவரையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து காலையில் சூரிய உதயத்துக்கு முன் அபிஷேகம் செய்து மறுபடியும் திருவாபரணங்களைச் சார்த்தி அர்ச்சனை, பூஜை ஆகியவற்றைச் செய்வார்கள்.
பகல் ஒரு மணியளவில் ஸ்வாமி யையும் அம்பாளை யும் ஆனந்த நடனம் ஆடச் செய்வர்.
பின்பு சித்சபா பிர வேசத்துடன் தீபாராதனை நடைபெறும். இப்படி எல்லாம் முடிந்து பத்தாம் நாள் கொடி இறக்கும் வரை நடப்பதே பிரம்மோற்சவம்.
மறு நாள் விடையாற்றி உற்சவமும் நடைபெறும். இரண்டாவது பிரம் மோற்சவம் மார்கழியில் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக