திங்கள், 18 ஜூன், 2018

ஆனி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள்?


ஆனி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள்?


ஆனி 1, ஜூன் 15, வெள்ளி

துவிதீயை. ஷடசீதி புண்ணிய காலம். சந்திர தரிசனம். கரிநாள். திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை. பட்டீஸ்வரம் முத்துப்பந்தல். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை.

ஆனி 2, ஜூன் 16, சனி

ரம்பா திருதியை. ரம்ஜான் பண்டிகை. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை, பத்ராசல ராமர் புறப்பாடு.

ஆனி 3, ஜூன் 17, ஞாயிறு

சதுர்த்தி விரதம். கதலீ கெளரி விரதம். மெலட்டூர் விநாயகர், தேரெழுந்தூர் ஞானசம்பந்தர், திருமயம் சத்யமூர்த்திப்பெருமாள் புறப்பாடு.

ஆனி 4, ஜூன் 18, திங்கள்

பஞ்சமி. மாணிக்கவாசகர். அஹோபில மடம் 45ம் பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம். சோழ வந்தான் ஜனக மாரியம்மன் உற்சவாரம்பம். கானாடுகாத்தான், திருக்கோளக்குடி, கண்டதேவி தலங்களில் சிவபெருமான் உற்சவாரம்பம்.  சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.

ஆனி 5, ஜூன் 19, செவ்வாய்

சஷ்டி விரதம். அமர்நீதியார் ஆராதனை. திருநெல்வேலி நெல்லையப்பர் உற்சவாரம்பம். சுவாமி தங்கப் பூங்கோயிலிலும், அம்பாள் சப்பரத்திலும் பவனி. ஆரண்ய கெளரி விரதம். திருமலை சின்னஜீயர் ஸ்வாமி திருநட்சத்திரம். சோழவந்தான் ஜனக மாரியம்மன் சிம்மவாகனத்தில் புறப்பாடு.

ஆனி 6, ஜூன் 20, புதன்

சப்தமி, ஆனி உத்திர தரிசனம். சிதம்பரம் சிவபெருமான் திருத்தேர். பின்னிரவு நடராஜர் அபிஷேகம், சோழவந்தான் ஜனக மாரியம்மன் யாளிவாகனத்தில் புறப்பாடு. கானாடுகாத்தான் சிவபெருமான் புறப்பாடு.

ஆனி 7, ஜூன் 21, வியாழன்

அஷ்டமி. சூரிய உதயத்திற்கு முன் ஆனி உத்திர தரிசனம். சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் உற்சவாரம்பம். திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் உற்சவாரம்பம். சிதம்பரம் நடராஜர் ஆனித்திருமஞ்சனம்.

ஆனி 8, ஜூன் 22, வெள்ளி

நவமி. பாபஹர தசமி. மதுரை மீனாட்சி, திருப்பரங்குன்றம் ஆண்டவன் தலங்களில் ஊஞ்சலில் காட்சியருளல். மகா சுதர்சன ஜெயந்தி. காஞ்சி வரதர் ஆனி கருடசேவை. மதுராந்தகம் கோதண்ட ராமஸ்வாமி உற்சவம். திருநெல்வேலி நெல்லையப்பர் வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் இரவு சுவாமி அம்பாள் இருவரும் வெள்ளி ரிஷப வாகனத்திலும் பவனி.

ஆனி 9, ஜூன் 23, சனி

தசமி. பெரியாழ்வார். சொக்கலிங்கப்புதூர் சிவாலயங்களில் வருஷாபிஷேகம். திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் உற்சவாரம்பம். தோளுக்கினியானில் பவனி. திருச்சானூர் தாயார் தெப்பம்.  திருச்செந்தூர் செந்திலாண்டவர் வருஷாபிஷேகம்.

ஆனி 10, ஜூன் 24, ஞாயிறு

ஏகாதசி. துவாதசி. திருநெல்வேலி ஸ்ரீசுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பவனி. கண்டதேவி சிவபெருமான் பவனி, திருமலை திருப்பதி ஜேஷ்டாபிஷேகம் ஆரம்பம். கும்பகோணம் ஆராவமுதன் கருடசேவை.

ஆனி 11, ஜூன் 25, திங்கள்

திரயோதசி. பிரதோஷம். திருநெல்வேலி சுவாமி தந்தப் பல்லக்கு, அம்பாள் தவழ்ந்த திருக்கோலமாய் முத்துப் பல்லக்கில் பவனி, மதுராந்தகம் கோதண்டராமர் திருவீதியுலா. திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சிறிய திருவடியிலும், தாயார் சந்திர பிரபையிலும் புறப்பாடு கண்டருளல்.

ஆனி 12, ஜூன் 26, செவ்வாய்

சதுர்த்தசி. சோழவந்தான் ஜனக மாரியம்மன் பாற்குடக் காட்சி. திருவஹிந்திரபுரம் ஜேஷ்டாபிஷேகம். ஹயக்ரீவர் தேசிகன் ஏகாஸன திருமஞ்சனம். கானாடுகாத்தான், கண்டதேவி தலங்களில் சிவபெருமான் ரதோற்சவம்.

ஆனி 13, ஜூன் 27, புதன்

பௌர்ணமி. காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா. திருவண்ணாமலை கிரிவலம் காலை 9.30 முதல் நாளை பகல் 11.08 வரை. திருச்சானூர் தெப்போற்சவ முடிவு. திருநெல்வேலி நெல்லையப்பர் ரதோற்ஸவம். சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.

ஆனி 14, ஜூன் 28, வியாழன்

பிரதமை. அருணகிரியார் குருபூஜை. மதுரை மீனாட்சி, திருப்பரங்குன்றம் ஆண்டவர் இத்தலங்களில் ஊஞ்சலில் காட்சியருளல். திருவஹிந்திரபுரம் மணவாள மாமுனிகள் சாற்றுமுறை. மதுராந்தகம் பெரிய பெருமாள் உற்சவம். சோழவந்தான் ஜனக மாரியம்மன் யானை வாகனத்தில் திருவீதியுலா. திருத்தங்கல் நின்ற நாராயணர் யானை வாகனத்திலும் தாயார் தண்டியலிலும் பவனி,

ஆனி 15, ஜூன் 29, வெள்ளி

துவிதீயை. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் திருநட்சத்திரம். மதுராந்தகம் ராமர் திருத்தேர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் வேதவல்லித் தாயாருக்கு திருமஞ்சன சேவை.

ஆனி 16, ஜூன் 30, சனி

திருதியை. அஹோபில மடம் ஸ்ரீமத் 13வது பட்டம் ஸ்ரீஅழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம். திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி மூலவருக்குத் திருமஞ்சன சேவை...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக