செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

ஆடி மாதம் ஸ்பெஷல்னா... ஆடி பௌர்ணமி அதவிட ஸ்பெஷல்...!! ஆடி பௌர்ணமி!!


ஆடி மாதம் ஸ்பெஷல்னா... ஆடி பௌர்ணமி அதவிட  ஸ்பெஷல்...!!
ஆடி பௌர்ணமி!!

🌕 மாதந்தோறும் வருகிற பௌர்ணமியில் கோவிலுக்குச் சென்று வழிபடுவது விசேஷம். அதிலும் ஆடி மாதத்தில் வருகிற பௌர்ணமி மிகவும் விசேஷமானது. ஆடி மாத பௌர்ணமியான (15.08.2019) நாளைய தினம் அம்மன் கோவில்களில் விசேஷ பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

🌕 ஆடி மாத பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டுக்கு மட்டுமின்றி அம்மன் வழிபாட்டுக்கும் உகந்த அற்புதமான நன்னாள். அன்று அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும்.

🌕 அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்து, புடவை சார்த்தி, பொங்கல் படையலிட்டு வழிபட்டால், குடும்பத்தில் வளம் பெருகும். நிம்மதி குடிகொள்ளும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்.

🌕 அம்மனை விளக்கேற்றி வழிபடுவதால் ஏராளமான பலன்கள் கிடைக்கும்;. எனவே நாளைய தினம் அம்மன் கோவில்களில் காலையும், மாலையும் விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் நிம்மதி தவழும், தரித்திரம் விலகும் என்பது ஐதீகம்!

வீட்டில் பூஜை செய்யும் முறை :

👉 பௌர்ணமியன்று கணபதி, சரஸ்வதி இவர்களுக்கெல்லாம் பூஜை செய்யும் முன் வீட்டில் கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும்.

👉 பௌர்ணமியன்று சந்திரன் உதயமாகும் நேரத்தில் குளித்துவிட்டு பூஜை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

👉 விநாயகர் பூஜை, நவகிரக பூஜை முதலியவற்றை செய்ய வேண்டும்.

👉 பின்பு தூபம், தீபம், நிவேதனம், கற்பூர தீபம் முதலியவற்றைக் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

பலன்கள் :

👉 புத்திர பாக்கியம், புகழ், கௌரவம், செல்வம், அந்தஸ்து, அதிகாரம், பட்டம், பதவி, திருமணயோகம் போன்ற அனைத்தையும் இந்த பூஜை தரவல்லது.

👉 பால் பாயாசமும், பாசிப்பயறு கஞ்சியும் வைத்து படைத்து வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

👉 இப்படி ஒவ்வொரு பௌர்ணமியன்றும் நம்பிக்கையுடன் பூஜை செய்தால் நல்ல பலன் கண்டிப்பாக கிடைக்கும்.

👉 ஏழ்மை விலகி செல்வம் சேரும். பயம் நீங்கும். பக்தர்கள் விரும்பிய கோரிக்கைகள் நிறைவேறும்.

🙏ஆடி பௌர்ணமியன்று அம்மனை மனதார வழிபட்டு சகல வளங்களையும் பெற்று வாழ்வோம்...!!🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக