வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

ஸ்ரீகிருஷ்ணர் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமி திதி யில் பிறந்தார் அவரைப்பற்றி ஒரு பார்வை


ஸ்ரீகிருஷ்ணர் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமி திதி யில் பிறந்தார் அவரைப்பற்றி ஒரு பார்வை

     *ஸ்ரீகிருஷ்ணர் ஹிந்து தர்மத்தின் கதா நாயகன் அவர் கதாநாயகன் மட்டும் அல்ல ஹிந்து தர்மத்தின் காவலன்  ஸ்ரீகிருஷ்ணர் துவாரகை யின் அரசன் ஆக ஆவது வரை அவரின் பெயர் கண்ணன்*

     *கண்ணணின் மயிர்பீலி கிரீடம் இருக்கும் சிறு வயதில் உள்ள குழந்தை படம் அல்லது சிலை எல்லா வீடுகளிலும் இருக்கும்*

    *அந்த  அழகு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஆனந்த பொருளாக அலங்கார பொருளாக இருப்பதே ஒரு ஐஸ்வர்யம் தான்*

    *கண்ணன் பிறந்த அஷ்டமி திதி யில் எந்த விதமான நல்ல விஷேசங்களும் எவரும் செய்வதில்லை அதற்கு காரணம் கண்ணபிரான்  போல் எவரும் கஷ்டப்பட்டது கிடையாது அதனால் அவர் பிறந்த அஷ்டமி திதி யிலும் ராமர் பிறந்த நவமி யிலும் ஏதாவது நல்ல விஷேசங்கள் செய்தால்  கஷ்டப்பட வேண்டியது வரும் என்று தான் இந்த இரண்டு நாட்கள் எந்த விதமான நல்ல விஷேசங்களும் செய்வதில்லை*

   *ஸ்ரீகிருஷ்ணர் போல் ராமபிரான் போல் இந்த உலகில் கஸ்டம் அனுபவித்தவர் மிகவும் குறைவு*

     *கண்ணன் இவர் கருவுறும் முன்பே அவரை பெற்றெடுத்த அன்னை சிறைபட்டு இருக்கின்றார் அவரின் உடன் பிறந்தவர்கள் அனைவரும் கொலை செய்யபடுகின்றனர் அவர் பிறப்பதற்கு முன்பே அவருக்கு  கடமைகள் பல காத்திருந்தது  பழிவாங்க வேண்டும்  நல்ல தத்துவங்களை சொல்ல வேண்டும் வாழ்க்கை யின்  உண்மையை சொல்ல வேண்டும் அப்படி பல அவரின் தலையில் சுமத்தப்பட்ட சுமை*


     *நடு இரவில் சிறையில் ஒரு தாய்க்கு பிறந்து அந்த நடு இரவிலேயே நாடு விட்டு நாடு கடந்து  வருகின்றார் பெற்ற அன்னையிடம் தன்னுடைய குறும்பு தனங்களை காட்ட முடியாமல்  வாழும் கட்டாயத்தில் இருந்தார் அந்த குழந்தை தனத்தில் உள்ள குறும்பு தனங்களை   வளர்த்த அன்னை ஆனந்தம் அடைகின்றாள் குழந்தை யாக இருக்கும் போதே   விஷ பால் குடிக்கும் அவர் குழந்தை யாக இருக்கும் போதே விஷ பால்  கொடுக்க வருபவரை பாலை குடித்து கொண்டே கொன்று விடுகிறார்   பல இடையூறுகள் பல எதிரிகளை குழந்தை தனமும் குறும்பு தனமாக கொல்ல  வேண்டியது அவருக்கு முக்கியமான பொறுப்பாக இருந்தது எவ்வளவு பிரச்சனை களை எல்லாம் தாண்டி வருகின்றார்*

      *சிறு வயதில் மண்ணை சாப்பிட்டு அடிக்க வரும் அன்னை யசோதா விடம் அண்டமெல்லாம் இந்த பிண்டத்துள் இருக்கின்றது இந்த உலகில் உள்ள இந்த பிரபஞ்சத்தில் இருப்பது  அனைத்து ம்  பிண்டம் என்ற உடலில் இருக்கிறது என்று சிறு வயதில் தன்னுடைய வாயை திறந்து காட்டுகின்றார்*

     *அவர் வாழ்ந்த இடத்தில்  அவரை வளர்த்த தாய் தந்தை யர் தலைமையில் ஒரு விழா நடக்கும் அந்த விழா இந்திரனை மகிழ்ச்சி அடைய வைக்க  எல்லோரும் சேர்ந்து பொங்கல் வைத்து படையல் வைத்து வழிபாடு செய்வது வழக்கம் ஏனெனில் இநதிரன் தான்  மழையை பொழிகின்றான் என்ற நம்பிக்கை யில் வருடா வருடம் இந்திரனுக்கு பூஜை செய்வார்கள்*
 
    *சிறு வயதிலேயே தந்தை யிடம் நீங்கள் செய்வது தவறு இந்திரனோ அல்லது சந்திரனோ மழை பொழிவது இல்லை இந்த கோவர்த்தன மலையில் வளரும் மரங்கள் தான் மழை பொழிய காரணம் என்று அனைவருக்கும் உண்மை யை புரிய வைக்கின்றார்   அற்புதமான தத்துவங்களை சிறு வயதிலேயே மூட நம்பிக்கை களை தகர்த்து எறிந்தார்*


    *பெண்கள் என்பது ஆனத்தம் நடனம் நாட்டியம் ஆடல் மனதிற்கு  ஆனந்தம் கொடுக்கும்  அது எண்ணங்களை அகற்றும்  என்று அவர்களுடன் ராச லீலைகள் புரிந்து ஆடி விளையாடி நமக்கு பாடம் கற்றுக் கொடுக்கின்றார்*

   *இளைஞரான பின் அவருடைய கடமையை செய்ய தன்னுடைய தாய் தந்தை யரை கொடுமை செய்த சகோதரர்களை கொன்ற அந்த மகாமனிதனை அரசனாகவும்  பலசாலியும் இருந்த தன்னுடைய மாமா வை தனி ஒருவராக இருந்து சண்டை போட்டு  கொல்கின்றார்*

     *தன்னுடைய தாய் தந்தை யை விடுதலை செய்து ஒரு நாட்டிற்கு அரசனாக ஒரு நாட்டை உருவாக்கி  தன்னுடைய வேலை யை செய்கின்றார்*

     *ஒரு பெண்ணை காதலித்தாலும் காலத்தின் கட்டாயத்தால் எங்கேயோ ஒரு இடத்தில் ஒரு பெண்  தன்னை விரும்புகிறாள் என்பதை அறிந்து அந்த  பெண்ணை  கொண்டு  வந்து திருமணம் செய்து கொள்கின்றார்*
 
     *மனிதன் வாழ்வில் பிறரை அவமானப் படுத்தும் போது அவனுக்கு நூறு முறை க்கு மேல் அதே தவறை அவன் செய்து  கொண்டு இருந்தால் தர்மம் என்ற சக்கரத்தால் கொல்லப்படுவான்  என்ற தத்துவம் சிசுபாலன் மூலம்  நமக்கு தருகின்றார்*

      *ஒரு பெண் அரசவையில் பெரிய வர்கள் முன்நிலை யில் துயில் உரியப்படுகின்றாள் என்ற போது தன்னுடைய ஞான திருஷ்டி யில் ஆடை அவிழாமல் பெண்கள் தர்மம் காக்கின்றார்*

     *தன்னுடைய கடமையை நிறைவேற்றும் போது தர்மத்தை யும்  காப்பாற்ற நினைக்கின்றார் தர்மம் கதறுகின்றது கொடுமை அனுபவிக்கின்றது அதனால் தர்மத்தை காப்பாற்ற வேண்டும் என்று பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்ற பாண்டவர் களுக்கு தன்னுடைய ஞான திருஷ்டி யில் அட்சய பாத்திரத்தை கொடுக்கின்றார்*

      *இது எல்லோரும் சிந்தனை செய்யும் செயல் தான் தானியங்களை உற்பத்தி செய்யாமல் ஒரு பாத்திரத்தில் இருந்து உணவு எப்படி கிடைக்கும் இது இன்றைய உலகில் அறிவு கூர்மையான எவரும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம் இப்படி ஒரு இடத்தை எதனால் கொண்டு வந்தார் கள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் வாழ்வில் இரண்டு இடங்களில் மட்டுமே கதையை புகுத்தி விட்டார் கள்*

     *வேறு எங்கும் கதையை புகுத்த முடியவில்லை ராமர் கானகத்தில் வாழும் போது அட்சய பாத்திரம் கிடைக்க வில்லை அப்போ பஞ்ச பாண்டவர் களுக்கு கிடைத்திருக்குமா கண்டிப்பாக முடியாது ஆனால்  அவர்கள் செடி கொடிகளை பயிரிட்டு அதை பறித்து சமைத்து உண்டு வாழ்க்கை வாழ கண்ணபிரான்  அருள் பாலித்தார் என்று சொல்லி இருந்தால் எங்கே யோ கற்பனை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது*

     *ஸ்ரீகிருஷ்ணர் பஞ்ச பாண்டவர் களுக்கு அருள் பாலித்தார் என்பது சத்தியம் மட்டும் அல்ல அது தான் உண்மை அவர்கள் கானகத்தில்  வாழும் போது உணவிற்கு குறைவில்லாமல் வாழ அருள் பாலித்தார்*

    *அங்கே தர்மம் கஷ்டப்படுகிறது என்று தர்மத்தை காப்பாற்ற தன்னுடைய ஞானத்தை கொண்டு அவர்களுக்கு உதவுகின்றார்*

    *மிகச்சிறந்த மகாபாரத யுத்தத்தால் ஆயுதம் ஏந்தாமல் போரில் கலந்து கொள்ள தயாராகின்றார்*

       *அப்போது அவருக்கு தெரியும் இதனால் தன்னுடைய குடும்பம் தன்னுடைய வாரிசுகள் முழுவதும் தன் கண்ணின் முன்பு ஒருவருக்கு ஒருவர் அடித்து சாவதை பார்க்க வேண்டும் என்று*

     *பணிந்து நிற்பவனுக்கு கடவுள் அருள் கிடைக்கும் என்று பாண்டவர் களுக்கு துணை புரிவதற்கு தயாராகின்றார்*

    *இதெல்லாம் அவர் தெரிந்தும் தர்மம் வீழ்ந்து விட கூடாதே என்று ம் இந்த உலகில் உன்னதமான ஒரு தத்துவங்களை கொடுப்பதற்காக தன்னுடைய நிலையை கீழிறங்கி ஒரு சாதாரண டிரைவராக தேரோட்டியாக வருகின்றார்*

     *ஒரு நாட்டின் அரசன்  சாதாரண  அரசன் அல்ல அவன் அறிவாலும் ஞானத்தாவும் சிறந்து வாழ்ந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தன்னுடைய நிலையை கீழே இறக்கி  அதிலும்  இந்த உலகில் உள்ள மிகவும் சிறந்த மகாதரர்கள் இருக்கும் அந்த இடத்தில்   அரசன் அல்லாத ஒரு அர்ஜீனனுக்கு டிரைவராக தேரோட்டியாக வருகின்றார்*

   *அதனால் அவர் வாழும் போதே  அனைவராலும் கடவுளாக வணங்க படுகின்றார்*

   *சூரியனும் சந்திரனும் நேரில் சந்திக்கும் அம்மாவாசை திதி யில் ஆரம்பிக்கும் செயல் வெற்றி அடையும் என்ற நியதி யை அப்படி அல்ல மனிதனே நீ தர்மமாக வாழ்ந்தால் நீ செய்யும் செயல் ஆரம்பிக்கும் செயல் அந்த நேரம் எந்த நேரமாக இருந்தாலும் சூரியனும் சந்திரனும் நேர் கோட்டில் வந்து விடுவார்கள் மனிதனே நீ அதர்மமாக வாழ்ந்தால் எந்த காலத்திலும் நீ செய்யும் செயல் ஆரம்பிக்கும் செயல் உனக்கு வெற்றி யை தராது என்ற அற்புதமான தத்துவங்களை யும் பகவான் கொடுக்கின்றார்*

     *ஒரு அரசன் கடவுளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் டிரைவராக இருந்து    உயர்ந்த  தத்துவங்களை புரிந்து கொள்ளும் நிலையில் இருந்த ஒரு சாதாரண மனிதனுக்கு டிரைவராக இருந்து என்றும் அளியாத உயர்ந்த தத்துவங்களை கீதை என்ற அற்புதமான பொக்கிஷத்தை நமக்கு கொடுக்கின்றார்*

     *விஷ்வ ரூப தரிசனம்  என்ற அகநிலை அற்புதத்தை அர்ஜீனனுக்கு காட்டி அண்டமெல்லாம் இந்த பிண்டத்துள் இருக்கின்றது நீயும் நானும் வேறு அல்ல உன்னிடம் இருக்கும் உயிராகிய சிவபெருமானும் என்னிடம் இருக்கும் உயிராகிய சிவபெருமானும் ஒருவரே தான் என்ற அகநிலை தர்மத்தை இரண்டாவது முறையாக  இந்த  உண்மை ஞானத்தை புரிந்து கொள்ள செய்கின்றார்*

     *பாவமே செய்யாத மகாதரர்களை வீழ்த்த தன்னுடைய தங்கையின் மைந்தனை கொல்கின்றனர் என்று தெரிந்து ம்  அவர் தர்மத்தை காப்பாற்ற அதையும் ஏற்றுக் கொள்கின்றார்*

     *தர்மம் வீழ்ந்து விட கூடாது என்பதற்காக சூரியனின் கிரகணத்தை சரியான நேரத்தில் சரியாக பயன்படுத்துகிறார்*

     *அபிமன்யு வை போருக்கு புறமாக கொல்லப்படும் போது மகாதரர்கள் அந்த செயலை ஏற்றுக் கொண்டு பாவத்தில் விழுகின்றனர் அதன் பிறகு அதேபோல் சூழ்ச்சி யால் அவர்களை வீழ்த்துகின்றார்*

     *சூழ்ச்சி என்பது கண்டுகொள்ளாமல் இருக்கும் மனிதன் சூழ்ச்சி யால் கொல்லப்படுவான் என்ற தத்துவங்களை நமக்கு கொடுக்கின்றார்*

     *தான் விரும்பும் போது தான் மரணம் என்ற வரம் இருப்பவனையும் அம்பு படுக்கையில் படுக்க வைக்கலாம் என்ற தத்துவங்களை நமக்கு கொடுக்கின்றார்*

    *குழந்தை பாலுக்காக அழுதது  என்று பசுவை கொடுத்த வாஞ்சைக் காக அதர்மத்தின் பக்கம் நிற்கும் ஒரு சிறந்த மகாதரரை பிள்ளை பாசத்தாலேயே அம்பை அடித்து எவ்வளவு சிறந்த நிலையில் இருந்தாலும் அதர்மத்தின் பக்கம் நிற்காதே என்ற அற்புதமான தத்துவங்களை யும் பகவான் கொடுக்கின்றார்*

    *எவ்வளவு தான் தர்மம் செய்தாலும் எவ்வளவு தான் தவம் செய்தாலும் அதர்மத்தின் பக்கம் நிற்கும் போது கடவுளே கையேந்தி அம்படிபட்டு வீழ வேண்டும் என்ற அற்புதமான தத்துவங்களை யும் கர்ணன் மூலம்  பகவான் நமக்கு  கொடுக்கின்றார்*

       *பெண்கள் எப்போதுமே பிறரால் இன்னல் அனுபவிக்கின்றனர் எவ்வளவோ பிரச்சனை களையும் மனதிற்குள் பூட்டி குமுறுகின்றனர் அதே சமயம் பாஞ்சாலி போன்ற சில பெண்கள் தங்களுக்கு வரும் துயரங்களை சபதம் எடுத்து பழிவாங்கும் நடவடிக்கை எடுக்க கடவுளை வேண்டுகின்றனர் அப்படி வேண்டும் பாஞ்சாலி க்கு கண்ணபிரான் துணை நின்றாலும் அவள் கருவில் சுமந்து பெற்றெடுக்கும் குழந்தை கள் அங்கே கொல்லப் படுகிறது இதை பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் தடுத்திருக்கலாம் ஆனால் அவர் தடுக்க வில்லை காரணம் பெண்கள் கொடுமை செய்பவர்களை மட்டும்  தான் பழிவாங்க வேண்ட வேண்டும்   ஆனால் அங்கே பாஞ்சாலி யின் சபதம் பல பெண்களின் கண்ணீர் அதனால் எவ்வளவு பத்தினியாக இருந்தாலும்  முடியாது காரணம் அது பல பெண்களின் கண்ணீரின் பலன்*

     *அரச தர்மத்தை காப்பாற்ற வேண்டிய அரசர்கள் அரச தர்மத்தை காப்பாற்றாமல் தன்னுடைய மகன் என்று அதர்மத்தை கையில் எடுக்கும் ஒரு தந்தை நூறு மகன்கள் இருந்தும் அனைவரையும் இழந்து அழுதே ஆக வேண்டும் என்ற தத்துவங்களை நமக்கு கொடுக்கின்றார்*

     *மிகச்சிறந்த பாரத போரில் தர்மத்தை காப்பாற்ற போர் செய்யாமல் இருந்தும் அந்த போரில் இறந்த உயிர்களின் உறவினர் கள் சாபம் அவரை விட்டு வைக்க வில்லை*

    *தன்னுடைய கண் முன்னே தன்னுடைய வாரிசுகள் முன்னோர்கள் அடித்து சாகின்ற கொடுமையை யும் அனுபவிக்கின்றார்*

     *முற்காலம் நிகழ்காலம் வருங்காலம் என்ற மூன்று காலங்கள் அறிந்து வாழ்ந்தாலும் கடவுள் என்று வாழ்ந்தாலும் எவரையும் நான் கடவுள் என்னை வணங்குங்கள் என்று அதைக்கொண்டு வாழ்க்கை நடத்தவில்லை*

     *தன்னுடைய முன்ஜென்ம வினையை  அகற்ற வே வேடன் கை அம்பு பட்டு உடலை விட்டு செல்கின்றார்*

    *இந்த உலகில் கண்ணபிரான் ஸ்ரீகிருஷ்ணர் ஆகி வாழ்ந்து நமக்கு சொல்லிக்  கொடுத்த பாடங்கள்*

   *குழந்தை யில் குறும்பு செய்யுங்கள் இளமையில் ஆடிப் பாடுங்கள் மூட நம்பிக்கை களை தகர்த்து எறியுங்கள்   அவரவர் செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்யுங்கள் தர்மத்தில் வாழுங்கள் தர்மத்தை காப்பாற்ற பாடுபடுங்கள் பிறருக்கு வாழ்க்கை யை பற்றியும் தர்மத்தை பற்றி யும் சொல்லி கொடுங்கள்  முன்ஜென்ம வினையை அகற்றி வினை அற்று செல்லுங்கள் என்ற அற்புதமான தத்துவங்களை வாழ்க்கை வாழ்ந்து காட்டி கொடுத்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த இந்த நந்நாளில் அவரை போல் வாழ வேண்டும் என்று உறுதி கொள்வோம்*

     *ஒவ்வொரு மனிதனும் ஸ்ரீகிருஷ்ணர் ஆக வாழ வேண்டும் அண்டமெல்லாம் இந்த பிண்டத்துள் இருக்கின்றது என்ற எண்ணம் ஆழமாக இருந்தாலும் எவ்வளவு தர்மங்கள் எவ்வளவு தவம் செய்து இருந்தாலும் அதர்மத்தின் பக்கம் நிற்கும் மனிதன் முழுநிலை வாழாமல் அம்படி பட்டு செத்து தான் ஆக வேண்டும் என்ற தத்துவங்களை நமக்கு கொடுத்து சென்றுள்ளார்*

     *இந்த உலகம் இருக்கும் காலம் வரை ஸ்ரீகிருஷ்ணர் கொடுத்த  தத்துவங்கள் என்றும் பேசப் படும்*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக