செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

விநாயகர் பற்றிய சில சிறப்பு தகவல்கள்


விநாயகர் பற்றிய சில சிறப்பு தகவல்கள்
 
விநாயகர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர். விநாயகர் பற்றிய சில சிறப்பு தகவல்களை கீழே பார்க்கலாம்.

விநாயகர் பற்றிய சில சிறப்பு தகவல்கள்...

சித்தி புத்தி விநாயகர் :

விநாயகர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர். தன் அன்னையைப் போல் சிறந்த பெண் வேண்டும் என்று ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலும் வீற்றிருக்கிறார் என்பார்கள்.

தம்மை வழிபடும் அடியவர்களுக்கு காரிய சித்தியும், அதற்குரிய புத்தியையும் அளிப்பவர் விநாயகர். அந்த பண்புகளையே தன் இரு மனைவியராக கொண்டு சித்தி புத்தி விநாயகராக வீற்றிருக் கின்றார்.

விநாயகசஷ்டி விரதம் :

கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை முதல் மார்கழி மாதத்து சுக்லபட்ச சஷ்டி முடிய 21 நாள்களும் விநாயகரை வழிபட அனுஷ்டிக்கப்படும். இவ்விரதத்தில் 21 இழைகளினால் ஆன காப்புக்கயிற் றினை கணவனும்-மனைவியும் வல இடக்கரங்களில் அணிந்து விரத நோன்பை மேற்கொள்வர். முடிவு நாட்களில் பலவிதமான உணவுகளைப் பிறருக்குத் தானமாகக் கொடுத்து விரதத்தை முடிப்பர்.

உ :

‘உ’ என்பது யஜுர் வேதத்தின் சாரம். ஒரு செயல் தொடங்குவதிலிருந்து, முறையாக நடந்து, சரியாக முடிந்து, நிறைவான பலன் கிட்டும் வழியை விரிவாகச் சொல்கிறது இந்த வேதம். முன்வினை, பின்வினை, செய்வினை என்ற எல்லா வினைகளுக்கும் நாயகன் விநாயகன். ஆக்கம் கொண்ட சிந்தனைக்கு ஊக்கத்தை அளித்து, எந்தத் தொந்தரவும் இன்றி அந்தச் செயல் தொடரவும் வளரவும், வளர்வதைக் காக்கவும் செய்யும் திறன் இந்த விநாயகன் அருளால் கிடைக்கிறது. ஆகவேதான், எந்தச் செயலையும் தொடங்கும் முன்பாக பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறோம்.

மகா கணபதி :

காயத்திரி மந்திரம்

தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி பரசோதயாத்

செல்வம் கல்வி மேம்படும் :

விநாயகர் சதுர்த்தியன்று காரிய சித்திமாலை பாடல்களை பாடி அவரை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இத்துதியை விநாயகர் முன் அமர்ந்து உள்ளம் ஒன்றி பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பங்கள் எளிதில் நிறைவேறும்.

சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் கைகூடும்.
அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும். எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கட ஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டு முறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலை பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.

கொழுக்கட்டை நைவேத்தியம் :

தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்துச் செய்யப் படும் மோதகம் என்றழைக்கப்படும் கொழுக் கட்டை கணபதிக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியம் ஆகும். கொழுக்கட்டையின் தத்துவம் என்ன வென்று அறிவீர்களா?

மேலே இருக்கும் மாவுப் பொருள் அண்டம், உள்ளே இருக்கும் பூரணம் பிரம்மம், நமக்குள் இருக் கின்ற நல்ல பண்புகளான பூரணத்தை மாவான மாயை மறைத்துக் கொண்டுள்ளது.

மாயையை அகற்றினால் நல்ல பண்புகள் வெளி யில் வரும் என்பதை உணர்த்தவே கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக