வெள்ளி, 20 செப்டம்பர், 2019

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை.. பெருமாளை வாழிபட தயாராகிவிட்டீர்களா? புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் இருப்பது ஏன்?


 புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை.. பெருமாளை வாழிபட தயாராகிவிட்டீர்களா?
புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் இருப்பது ஏன்?

🌞 புரட்டாசி மாத விரதம் செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய நற்பலன்களையும் தருகின்ற விரதமாகும்.

🌞 புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்தால், சனி பகவானால் ஏற்படக்கூடிய வீரியம் குறைந்து, சங்கடங்கள் அகலும்.

🌞 புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.

🌞 புரட்டாசி விரதத்துக்கும், வழிபாட்டுக்கும் மற்றுமொரு காரணமும் உண்டு. சனி பகவான் புரட்டாசி மாதத்தில்தான் அவதரித்தார்.

🌞 எனவே, சனி பகவானால் விளையும் கெடுபலன்களைக் குறைப்பதற்காகக் காக்கும் கடவுளுக்கு சனிக்கிழமை விரதம் இருக்கும் வழக்கம் தொடங்கியது.

🌞 வருடம் முழுக்க சனிக்கிழமைகளில் விரதம் இருக்கத் தவறியவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும்.


புரட்டாசி மாத சனிக்கிழமை விரத முறை :

🌞 விரதம் இருப்பவர்கள் சனிக்கிழமை காலையில் எழுந்து நீராடி, பெருமாள் படத்தின் முன் விளக்கேற்றி, துளசி இலை சேர்த்த தீர்த்தத்தை ஒரு சொம்பில் ஊற்றி படம் முன் வைத்து வணங்க வேண்டும்.

🌞 அதை சிறிதளவு அருந்தி விரதத்தை துவங்க வேண்டும். விஷ்ணு புராணம், நாலாயிர திவ்ய பிரபந்தம், வெங்கடேச ஸ்தோத்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் உள்ளிட்டவற்றை படிக்க வேண்டும்.

🌞 மதியம் எளிய உணவு சாப்பிடலாம். மாலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

🌞 வசதி உள்ளவர்கள் புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கல், புளியோதரை படைத்து வழிபட்டு தானம் செய்யலாம்.

புரட்டாசி மாத விரதத்தின் நன்மைகள் :

🌞 கிரகதோஷம் நீங்கும்.

🌞 சனிக்கிரகத்தால் ஏற்படும் கெடுபலன் அகலும்.

🌞 வறுமை நீங்கி செல்வவளம் பெருகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக