செவ்வாய், 17 செப்டம்பர், 2019

தேவி அதர்வ சீர்ஷம்


#தேவி  #அதர்வ #சீர்ஷம்..

இன்று பெளமாஸ்வினி. அதாவது செவ்வாய் கிழமை அஸ்வினி நக்ஷத்ரம் கூடிய சுபதினத்தை தான் பெளமாஸ்வினி என்று பெரியோர்கள் தேவி வழிபாட்டை செய்தனர்.

அன்றைய தினத்தில் தேவியின் தோற்றத்தைப்  பார்த்து வியந்த தேவர்கள், யார் நீ என்று கேட்பதாகவும், தேவி அதற்கு பதில் சொல்லும் விதமாக, தானே ப்ரும்ம ஸ்வரூபமாகவும், ப்ரக்ருதியாகவும், ஆனந்தமாகவும், விக்ஞானமாகவும், பஞ்சபூதங்களாகவும் இருப்பதாக சொல்கிறாள். அதேசமயம் , இவைகளுக்கு எதிர்மறையாக உள்ள அப்ரும்மம், அவிக்ஞானம், அபஞ்ச பூதமாக இருப்பதும் நானே என்று சொல்கிறாள்.

ருத்ர, வசுக்கள், ஆதித்ய, விஸ்வதேவர்களiன்  தேஜஸ், மித்ர வருண, அக்னீ, அஸ்வினிகள் (இருவர்) – அதாவது தேவர்கள் அனைவரின் சக்தியும் நானே என்று சொல்லவும் தேவர்கள் அவளை வணங்கி

நமோ தேவ்யை, மகா தேவ்யை, சிவாயை ஸததம் நம : ||

நம: ப்ரக்ருத்யை பத்ராயை நியதா: ப்ரணதா : ஸ்ம தாம் ||

என்று துதிக்கிறார்கள்.

அக்னிவர்ணமான அந்த தேவியை, தவ வலிமையுடன் பிரகாசமாகத் தெரியும் வைரோசனியை, கர்ம பலனாக இருப்பவளை, சரணம் அடைகிறோம். அசுரர்களை நாசம் செய்யும்  தேவிக்கு நமஸ்காரம்.

தேவீம் வாசமஜனயன்த தேவா:  தாம் விஸ்வரூபா:  பஸவோ வதந்தி

ஸா நோ மந்த்ரேஷமூர்ஜம் துஹானா தேனுர்வாகஸ்மானுப சுஷ்டுதைது

காளராத்ரியானவள், ப்ரும்மாவினால் வணங்கப்பட்டவள், வைஷ்ணவியானவள், ஸ்கந்த மாதா என்று அழைக்கப்படுபவள், ஸரஸ்வதியை, அதிதிம், தக்ஷன் மகளானவளை பாவனமான சிவா எனப்படுபவளை, வணங்குகிறோம்.

மகாலக்ஷம்யை ச வித்மஹே ஸர்வ சக்த்யை ச தீமஹி

தன்னோ தேவி ப்ரசோதயாத்

அதிதிர்ஹுfயஜனிஷ்ட தக்ஷ யா துஹிதா தவ தாம் தேவா அன்வஜாயந்த பத்ரா அம்ருத பந்தவ: ||

காமோ யோனீ:  கமலா வஜ்ர பாணிர் குஹா ஹாஸ மாதரிஸ்வாய்ரமின்த்ர:         ||

புனர்குஹா ஸகலா மாயயா ச புரூச்யைஷா விஸ்வமாதாதிவித்யோம்

இவளே ஆத்ம சக்தி. இவளே விஸ்வ மோகினி. பாச அங்குசங்களை தரித்திருப்பவள். இவளே மகா வித்யா – இதை அறிபவன் சகல விதமான சோகங்களையும் தாண்டி விடுகிறான்.

பகவதி, உனக்கு நமஸ்காரம். தாயே, எங்களை எப்பொழுதும் காப்பாற்றுவாயாக.

இவளே எட்டு வசுக்கள், இவளே பதினொரு ருத்ரர்கள்.  இவளே பன்னிரண்டு ஆதித்யர்கள். விஸ்வே தேவா|| என்று சொல்லப் படுபவர்களiல், ஸோமபா, அஸோமபா (சந்திரனின் நிலைகள்) , இவளே யாதுதானர்கள், அசுர, ராக்ஷஸ, பிசாச, யக்ஷர்கள், சித்தர்கள் எனப்படும் பல ஜாதியினர்.

சத்வ ரஜஸ் தமஸ் எனப்படும் மூன்று குணங்கள். இவளே ப்ரும்ம, விஷ்ணு, ருத்ர ரூபங்களாக விளங்குகிறாள். ப்ராபதி, இந்திரன், மனு – என்ற தேவர்களும் இவளே. க்ரஹு, நக்ஷத்ர, ஜ்யோதிகள் அனைத்தும் இவளே. கலா. காஷ்டா என்ற காலத்தின் அளவைகளும் இவளே.  இவளை நாங்கள் எப்பொழுதும் வணங்கி துதிக்கிறோம்.

இந்த தேவியே தான் நமது பாபங்களை விலக்குபவள், புக்தி, முக்தி தருபவள், இவளுக்கு பல பெயர்கள் – அனந்தா, விஜயா, சுத்தா, சரண்யா. சிவதா, சிவா -இந்த பெயர்களுடன் இவளைத் துதிக்கிறோம்.

இந்த தேவியின் பீஜ மந்திரம் மிகவும் சிறப்பானது. எல்லா நன்மைகளையும் தரக் கூடியது. வானளாவியது,  வீதி ஹோத்ர ஸமன்விதம் (?) பிறை சந்திரன் அலங்கரிக்க அமைந்துள்ளது.

இவ்வாறாக மூல மந்திரமாக, ஒரே அக்ஷரமாக, நிர்மலமான மனத்தினரான யதிகள், நித்யம் துதிக்கின்றனர். இவர்களோ ஞானம் என்ற சமுத்திரத்தில் மூழ்கி தௌiந்தவர்கள், பரமானந்த மயமாக இருப்பவர்கள், த்யானமே இவர்களது செல்வம் என்ற பெருமை உடையவர்கள்.

இவர்கள் (இந்த ஞானிகள்) வாக்கு வன்மை – அதுவே ஸ்வரூபமாக இருப்பவர்கள், ப்ரும்ம சூத்தரமாக, ஆறு முகங்களுடன் கூடிய, சூர்யன், அவாம, ஸ்ரோத்ர, பிந்துவுடன் அஷ்டா|| – எட்டு, மற்றும் ஒர் மூன்றுடன் நாராயணனுடன் கலந்து, வாயு அதரத்திலுமாக, விச்சே என்ற நவார்ண மந்திரம், அதை எப்பொழுதும் ஜபித்து வருபவர்கள். மகத்தான ஆனந்தம் என்ற நிலையை எட்டியவர்கள்.

ஹ்ருதயம் என்ற புண்டரீக மத்தியில் இருப்பவளாகவும், இளம் சூரியனைப் போன்ற பிரகாசமுடையவளாகவும், பாச, அங்குச, என்ற ஆயுதங்களும், வரத, அபயம் என்ற முத்ரைகளும், உடைய கைகள், முக்கண்ணாள், ரத்தச் சிவப்பான வஸ்திரம், இவைகளுடன் பக்தர்களுக்கு விரும்பிய பலன்களைத் தருபவளாக உள்ளவளை பஜிக்கிறேன்.

மகா தேவி, உன்னை வணங்குகிறேன். மகாபயம் என்பதை போக்குபவள் நீ. தகர்க்க முடியாத கோட்டையையும் தகர்த்து விடும் சக்தி நீயே, மகா கருணையே உருக் கொண்டவளான உன்னை பஜிக்கிறேன்.

எந்த தேவியுடைய ஸ்வரூபத்தை ப்ரம்மா முதலானவர்களே அறிய முடியாதோ, அவள் அக்ஞேயா – (அறிய முடியாதவள்).

எந்த தேவியுடைய முடிவு எது என்று யாராலும் சொல்ல முடியாதோ, அவள், அனந்தா. (முடிவில்லாதவள்)

எந்த தேவியுடைய லட்சியம் இது தான் என்று வரையறுக்க  முடியாதோ, அவள், அலக்ஷயா. (குறிப்பிட்டுச் சொல்ல  முடியாதவள்)

எந்த தேவியுடைய பிறப்பு இதுதான் என்று தெரியாதோ,  அவள், அஜா –(பிறக்காதவள் )

எந்த தேவி எப்பொழுதும் ஒருவளாக எங்கும் நிறைந்திருக்கிறாளோ, அவள் ஏகா என்ற பெயருடையவள்.

எந்த தேவி ஒருவளாக இருந்து, உலகம் முழுவதும் வியாபித்து விஸ்வசூபிணியாகவும் விளங்குகிறாளோ, அவள், நைகா- ஒருவளல்ல என்றும் பொருள்பட அவளுக்கு நைகா என்றும் பெயர்.

ஆகவே, இவளை அக்ஞேயா, அனந்தா, அலக்ஷ்யா, அஜா, ஏகா, நைகா என்ற பெயர்களால் அழைக்கிறோம்.

மந்திரங்களுக்குள் இவள் மாத்ருகா என்ற மந்திரம்.

சப்தங்களில் இவள் ஞானரூபிணி.

ஞானங்களiல் இவள் சின்மயாதீதா. (சின்மயாநந்தா என்று ஒரு பாடம்)

சூன்யங்களiல் சூன்ய சாக்ஷி.

எவளை மிஞ்சி வேறு எதுவுமே இல்லையோ, அந்த தேவியை துர்கா என்கிறோம்.

அந்த துர்கையை, மிகுந்த சிரமப்பட்டு நெருங்க வேண்டியவளான தேவியை, துராசாரங்களை அழிப்பவளை, பவ – இந்த சம்ஸாரம் என்ற சுழலில் அகப்பட்டுத் தவிக்கும் நான், இவள் தான் கரையேற்றக் கூடியவள் என்று நம்பி துதிக்கிறேன்.

இது அதர்வ சீர்ஷம் என்ற பெயருடைய உபநிஷத் மந்திரம். இதை முறையாக கற்றுக் கொள்பவன், ஐந்து அதர்வசீர்ஷ மந்திரங்களை ஜபித்த பலனை அடைவான். இந்த அதர்வ சீர்ஷ மந்திரத்தை தெரிந்து கொள்ளாமல் அர்ச்சனை செய்ய முனைபவர்கள், அதனுடைய முழு பலனை அடைவதில்லை. நுaறு லக்ஷ ஜப பலனை தரக்கூடிய மந்திரம் இது. இது தவிர, நூற்றெட்டு விதி முறைகளும் கூட சொல்லப் படுகின்றன. பத்து முறை படிப்பவன் உடனடியாக பாபங்களிலிருந்து விடுபடுகிறான்.

மகா தேவியின் பிரஸாதத்தால், மகா துர்கம் எனும் கடினமான கோட்டைகளையும் கடந்து விடுவான்.

இதை மாலையில் படிப்பவன் நாள் பொழுதில் செய்த பாபங்களிலிருந்து விடுபடுகிறான். விடியலில் படிப்பவன், ராத்திரியில் செய்த பாபங்களிலிருந்து விடுபடுகிறான். காலையும் மாலையும் படிப்பவர்கள் பாபமே இல்லாதவனாக ஆகிறார்கள். இரவின் கடைசி யாமத்தில் படிப்பதால் வாக்கு வன்மை கிடைக்கும். புதிய பிரதிமையில் ஜபித்து பூஜா விதிகளை செய்வதால், அதில் தேவதா ஸான்னித்யம் வரும். ப்ராண பிரதிஷ்டை சமயம் படித்தால் ப்ராண பிரதிஷ்டை ஏற்படும். பௌம, ஆஸ்வின மாதங்களில் மகா தேவியின் சந்நிதியில் ஜபித்தால், மகா ம்ருத்யு என்பதை கடக்கிறான். அந்த சாதகன் மகா ம்ருத்யுவை கடந்து விடுகிறான் என்பது வேத வாக்கு. இவ்வாறு உபநிஷத் கூறுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக