வியாழன், 24 ஆகஸ்ட், 2017

விநாயகர் 12 அவதாரங்கள்



விநாயகர் 12 அவதாரங்கள் எடுத்ததாகத் தெரிவிக்கிறது ஸ்ரீவிநாயக புராணம்.

வக்ரதுண்ட விநாயகர்: இவர் உலகம் ஒவ்வொரு முறை அழியும் போதும் தோன்றி, மீண்டும் உலகைப் படைப்பதற்கான வழிமுறைகளை பெருமாள், பிரம்மா, ருத்ரன் (சிவவடிவம்) ஆகியோருக்கு அருளுவார்.

கஜானன விநாயகர்: சிந்தூரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக அவதரித்தவர்.

விக்கிரனபராஜர்: காலரூபன் என்ற அரக் கனை கொல்வதற்காக பிறந்தவர்.

மயூரேசர்: பிரம்மாவிடம் இருந்த வேதங்களை கமலாசுரன் என்ற அசுரன் திருடிச்சென்றபோது மயில் வாகனத்தில் சென்று அவனை வென்று வேதங்களை மீட்டவர்.

உபமயூரேசர்:சிந்தாசுரன் என்ற அசுரன் தேவர்களை சிறை வைத்தபோது அவனை அழித்தவர்.

பாலச்சந்திரர்:தூமராசன் என்ற அசுரனை கொன்றவர்.

சிந்தாமணி:கபிலர் என்ற முனிவரிடம் இருந்த சிந்தாமணி என்ற அற்புதப் பொருளை கனகராஜன் என்பவன் திருடிச் சென்றான். உயிர்காக்கும் இந்த சிந்தாமணியை அவனிடமிருந்து மீட்டவர்.

கணேசர்:பலி என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தியபோது, ஐந்து முகத்துடன் தோன்றி அவனை அழித்தவர்.

கணபதி:கஜமுகாசுரனை வென்றவர்.

மகோற்கடர்:காசிராஜன் என்ற புகழ்பெற்ற அரசனுக்கு நராந்தகன், தேவாந்தன் என்ற கொடியவர்கள் துன்பம் செய்து வந்தனர். இதனால் உலகத்தில் தர்மம் அழிந்தது. அவர்களை நாசம் செய்ய அவதரித்தவர்.

துண்டி:துராசதன் என்ற அசுரனை வென்றவர்.

வல்லப விநாயகர்:மரீச முனிவரின் மகளான வல்லபையை திருமணம் செய்தவர். வல்லப விநாயகரை மனதார வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக