ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

சோமவதி அமாவாசை



21-Aug-2017 சோமவதி அமாவாசை

திங்கட்கிழமை வரும் அமாவாசை மிகவும் விசேஷமானது. சோம என்றால் சந்திரன் என்று  பொருள். சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமை வரும் அமாவாசைக்கு சோமவதி அமாவாசை என்று பெயர்.

இந்த நன்னாளில் அஸ்வத்த விருக்ஷம் என்னும் அரசமரத்தை பக்தியுடன் 108 அல்லது 56 அதுவும் இல்லையென்றால் குறைந்த பட்சம் 7 முறையாவது சுற்றி வருவது மிகுந்த புண்ணியகரமானதாகும். இதன் மூலம் பிரம்ம-விஷ்ணு-சிவன் என்னும் மூவரின் அருளால் நாம் அறியாமல் செய்த பாவம் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

ஆகவே இந்த புண்ணிய தினத்தில் காலையில் குளித்து முடித்து வேப்பமரத்துடன் இருக்கும் அரசமரத்தை சுற்றி வருவது மிகுந்த நன்மைகளை தரும்.

சுற்றும்போது சொல்ல வேண்டிய மந்திரம்.

மூலதோ ப்ருஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே அக்ரத: சிவ ரூபாய வ்ருக்ஷ ராஜாய தே நம:

அக்ஷி ஸ்பந்தம் புஜ ஸ்பந்தம் து:ஸ்வப்னம் துர் விசிந்தனம் சத்ரூணாம் ச ஸமுத்பன்னம் அச்வத்த சமயஸ்வ மே.

மரத்தின் அடிப்பகுதியில் ப்ருஹ்மாவாகவும், மரத்தின் நடுப்பகுதியில் மஹா விஷ்ணுவாகவும் மரத்தின் நுனி கிளை பகுதியில் சிவஸ்வரூபமாகவும்  காட்சியளிக்கும் மரங்களின் தலைவனான ஹே அரச மரமே உனக்கு நமஸ்காரம்.

பிரதட்சிணம் செய்யும்போது எண்ணிக்கை சரியாக அமைய ஒவ்வொரு சுற்றுக்கும் ஏதோ ஒரு பூவோ, பழமோ, கல்கண்டோ ஒரு பொருளை மரத்தினடியில் விடுவது வழக்கம். சுற்றுக்கள் முடிந்த பின் அந்த பொருளை அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு தந்துவிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக