புதன், 9 ஆகஸ்ட், 2017

திருஆனைக்காவல் --- (நீர் ஸ்தலம்)



திருஆனைக்காவல் --- (நீர் ஸ்தலம்)

பஞ்ச பூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சிராப்பள்ளி திருஆனைக்காவல் (திருவானைக்காவல்) .
இறைவன் :அருள்மிகு ஜம்புகேஸ்வரர் இறைவி:அருள்மிகு அகிலாண்டேஸ்வரி
இந்த திருக்கோயில் காவிரி ஆற்றின் நடுவில் உள்ளது ... இருபுறமும் ஆறு ஓடுகிறது .... அதவது ஒரு புறம் காவிரி ஆறு மற்றொரு புறம் காவிரியின் கிளை ஆறு கொள்ளிடம் ... அம்பாள் ஆற்று நீரில் லிங்கம் அமைத்து பூஜை செய்ததால் இது பஞ்ச பூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலம் ..
மூலஸ்தானம் காவிரி ஆற்றின் நீர் மட்டத்தில் அமைந்துள்ளது ... அதாவது திருக்கோயிலின் தரை மட்டத்தில் இருந்து மூலஸ்தானம் இரண்டு மூன்று படி இறங்கி தான் செல்லவேண்டும் ..
மூலஸ்தானத்தில் காவிரி ஆற்றில் எவ்வளவு நீர் ஓடுகிறதோ அதே அளவு மூலஸ்தானத்தில் நாம் பார்க்கலாம் ...... நீர் ஈசனை தொட்டு கொண்டே ஓடிக்கொண்டு இருக்கிறது ..காவிரி ஆற்றின் நீரில் அமைந்துள்ளதால் நீர் ஸ்தலம்
ஜம்பு என்னும் முனிவர் இந்த திருக்கோயில் தவம் இருந்தார் ..சிவன் அவருக்கு காட்சி அளித்து நாவல் பழம் பிரசாதம் கொடுத்தார்..பழத்தை உண்ட முனிவர் அதன் புனிதம் கருதி விதையையும் விழுங்கிவிட்டார். அவர் விழுங்கிய விதை மரமாய் முளைத்தது ..
இன்றும் மூலஸ்தானம் பின் புறம் நாவல் மரம் இருக்கிறது .... இதன் காரணமாக சுவாமி ஜம்புகேஸ்வரர் என்ற பெயருடன் இங்கு அருள் புரிகிறார்.
கைலாயத்தில் சிவனுக்கு சேவை செய்த சிவகணங்கள் ஆன புட்பதந்தன், மாலியவான் என்னும் இருவர் தங்களில் யார் அதிகமாக சேவை செய்கிறார்கள் என்ற போட்டி வந்தது ..இருவரும் ஒருவரைஒருவர் யானையாகவும் சிலந்தியாகவும் பிறக்கும் படி சபித்து கொண்டனர்.
மாலியவான் சிலந்தியாகவும், புட்பதந்தன் யானையாகவும் பிறந்து இந்த தலத்தில் சிவனை வழிபட்டனர் ..
இங்கும் அவர்கள் இருவரில் போட்டி வந்தது .... எப்படி என்றால் சிவன் நாவல் மரத்தில் அடியில் தானே அமைத்து இருக்கிறார் ... நாவல் மர இலைகள் காய்ந்து சிவன் மேல் விழுந்தது ... இதை கண்டு சிலந்தி வலை கட்டி இலைகள் சுவாமி மேல் விழாத படி தடுத்து .... ஆனால் யானை சுவாமி மேல் ஏன் வலை என்று கலைத்து விட்டது ... சிலந்தி திரும்பி வலை பின்ன பின்ன யானை கலைத்து கொண்டே இருந்தது. யானை காவல் காத்ததால் ஆனைக்காவல் என்று இந்த திருக்கோயில் பெயர் பெற்றது ..
சிலந்திக்கு கோபம் வந்து யானையின் தும்பிக்கையில் புகுந்தது ...
சிலந்தி யானையை கொல்ல முயன்றதால் யானைக்கு மட்டும் சிவன் முக்தி அளித்தார் .... சிலந்தி மீண்டும் பிறந்தது கோட்செங்க சோழனாக ..
யானை புகாத படி மாட கோயிலாக கட்டினார் .... மூலஸ்தானம் ... சுவாமி முன்னே வாசற்படி இல்லை நவதுவாரங்கள் மட்டுமே உள்ளது ..அதன் வழியாக தான் சுவாமி தரிசனம்.
இந்த திருக்கோயிலில் திருக்கல்யாணம் கிடையாது ...
அம்பாள் ஈசனை குருவாக பூஜித்த ஸ்தலம் ஆதலால் திருக்கல்யாணம் இந்த கோயிலில் நடப்பதில்லை ... இந்த திருக்கோயிலில் சிவன் குரு அம்பாள் மாணவி.
இந்த தலத்தில் அம்பாள் சிவனை உச்சிகாலத்தில் பூஜிப்பதாக ஐதீகம்..அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து கையில் தீர்த்ததுடன் மேல தாளத்துடன் சுவாமி சன்னதிக்கு சென்று சுவாமிக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்து விட்டு, கோமாதா பூஜையும் செய்து விட்டு அம்பாள் சன்னதி திரும்பி செல்வார் .....
இது அம்பாளே நேரடியாக வந்து பூஜை செய்வதாக ஐதீகம்
இந்த திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாகவும்,
அம்மனின் 51 சக்தி பீடங்களில் ஞான சக்தி பீடமாகவும் உள்ளது.
ஆரம்பத்தில் அம்பாள் உக்கிரமாக இருந்தாள். பொதுவாக உக்கிரமான அம்பிகையை சாந்தப்படுத்த ஸ்ரீசக்ரத்தில் அம்பாளின் ஆக்ரோஷத்தை செலுத்தி சாந்தப்படுத்துவர்.
ஆனால் இங்கு வந்த ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரதுக்கு பதிலாக இரண்டு தாடகங்களை (காதில் அணியும் அணிகலன்) ஸ்ரீ சக்ரம் போல் உருவாக்கி அம்பாளுக்கு பூட்டி விட்டார் ..அதன் பின்னர் அம்பாள் சாந்தமானாள் ... அதன் பின் ஞான சக்தி ரூபிணியாக அகிலாண்டேஸ்வரியாக அருள் பாலித்து வருகிறாள் ...
ஆடி மாதத்தில் இங்கு சிவனை வேண்டி அம்பாள் தவம் இருந்ததாக ஐதீகம் ... ஆடி வெள்ளி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது
நந்தியம்பெருமான் ... மற்றும் அழகான பிரகாரம் பின்னணியில் ... இந்த திருக்கோயிலில் மூலவர் மேற்கு பார்த்த முகமாக காட்சி அளிக்கிறார் ...
ஒரு மேற்கு பார்த்த சிவாலய தரிசனம் பல கிழக்கு பார்த்த சிவாலய தரிசனத்துக்கு சமம் என்று சொல்லுவார்கள் ...
ஒரு முறை சென்று தரிசனம் செய்ய சிவகடாட்சம் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக