செவ்வாய், 18 ஜூலை, 2017

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத்திருவிழா (19.07.17) தொடங்கி 30.07.17 வரை நடைபெறவுள்ளது.


   ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத்திருவிழா  (19.07.17) தொடங்கி 30.07.17 வரை நடைபெறவுள்ளது.
       *இந்த திருவிழா காலங்களில் பதினாறு வண்டி சப்பரம்,தங்கபல்லக்கு,தந்த பல்லக்கு,சிம்மவாகனம்,சேஷவாகனம்,( ஐந்து கருடசேவை) பெரிய அன்னவாகனம்,யானைவாகனம்,கண்ணாடி சப்பரம்,குதிரை வாகனம், திருவாடிப்பூரத் தேர்(27.7.17) ஆகிய வாகனங்களில் ஸ்ரீஆண்டாள்,ரெங்கமன்னார் பக்தர்களுக்கு ஆசீர் வழங்குகிறார்கள்.*
      *இந்த திருவிழா விற்காக பிரமாண்டமான பந்தல் போடப்பட்டு அலங்காரமேடை அமைக்கப்பட்டுள்ளது.இந்த மேடையில் தினமும் மாலை 2 மணி முதல் 10 மணிவரை இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம், சொற்பொழிவு,வீணை இன்னிசை,நடனம்,ஆய்வரங்கம்,பஜனை,வில்லிசை,நாமசங்கீர்த்தனம்,வயலிசை,ஆகியவை நடைபெறவுள்ளது.*
         *முதல் நாளான  நாளை (19.07.17)பதினாறு வண்டி சக்கர தேர், ஐந்தாம் திருவிழாவில்(23.07.17) ஐந்து கருட சேவை,ஏழாம் திருவிழாவில் (25.07.17) கிருஷ்ணன்கோவில் தெருவில் உள்ள கோவிலில் ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயன கோலத்தில் காட்சி தருவார்கள், எட்டாம் நாள் திருவிழாவில்(26.07.17) மதுரை அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீரெங்கம்  அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் ஆகிய இருகோவில்களிலிருந்தும் பரிவட்டங்கள் பிரசாதமாக கொண்டுவரப்பட்டு ஸ்ரீஆண்டாளுக்கு சாற்றப்படும்,ஓன்பதாவது திருவிழாவில்(27.07.17) காலை 3.45 மணிக்கு மேல் 4.45 மணிக்குள் ஆண்டாள்,ரெங்கமன்னார் திருத்தேரில் எழுந்தளுவார்கள். பின்னர் காலை 8.05 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் ஆரம்பமாகும்.*
       *திருஆடிப்பூரபெருவிழாவிற்கு எங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஸ்ரீஆண்டாள்,ரெங்கமன்னார் அருள் பெற்று செல்லுமாறு பாசத்துடன் கேட்டுக்கொள்கிறோம்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக