வியாழன், 27 ஜூலை, 2017

ஆண்டாள் கோயிலின் தொன்மை சிறப்புகள்..


ஆண்டாள் கோயிலின் தொன்மை சிறப்புகள்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் திருக்கோயில் தொன்மை சிறப்புகள் பலவற்றால் சிறப்பு பெற்று விளங்குகிறது. 108 திவ்ய தேசங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள திருத்தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கம் போன்ற வைணவத் திருத்தலங்களுக்கு இணையாக போற்றப்படுவது ஸ்ரீஆண்டாள் கோயிலின் சிறப்பம்சமாகும். ஸ்ரீஆண்டாளின் திருப்பாவையில்லாமல் எந்தவொரு திவ்ய தேசத்திலும் பூஜைகள் நடைபெறுவது கிடையாது என்பது ஸ்ரீஆண்டாளின் தனிச்சிறப்பிற்கு ஒரு வரலாற்று சான்றாகும். எல்லாவற்றிற்கும் ஸ்ரீ ஆண்டாள் முதன்மை பெற்று பெருமாளுக்கு இணையான அந்தஸ்து பெற்றிருப்பதும், தேரோட்டத்தில் ஸ்ரீரெங்கமன்னாருடன் பவனி வந்து அருள்பாலிப்பதும் உலகெங்கும் காணமுடியாத ஒரு வைபவமாகும். தமிழ்நாடு அரசு ஸ்ரீஆண்டாள் கோயிலின் இராஜகோபுரத்தினை இலச்சினையாக கொண்டிருப்பதும், பெரிய பெருமாள் என்னும் ஸ்ரீவடபத்ரசயனர் பெருமாளாக எழுந்தருளுவதும், ஆழ்வார் பெருமக்களில் ஸ்ரீமன் நாராயணனுக்கு “பல்லாண்டு பாசுரம் பாடிய பெரியழ்வார் என்று போற்றப்படும் ஸ்ரீவிஷ்ணு சித்தர் திருவாய்மொழி இயற்றியதும், பெரியகுளம் என்று அழைக்கப்பெறும் திருமுக்குளம் அமைக்கப்பட்டு இருப்பதும் இத்திருத்தலத்தின் தனிச்சிறப்புகள்.


இத்திருத்தலம் “ஸ்ரீவில்லிபுத்ததூர் பெரிய தேர்” என்னும் ஒரு வரலாற்றுச் சிறப்பினையும் பெற்றுள்ளது. தட்டொளி, கண்ணாடிக் கிணறு, மாதவிப்பந்தல், கல்வெட்டுக்கள், கவினுறு சிற்பங்கள், கட்டட கலைகள், கண்கவர் ஓவியங்கள் என்று பலவற்றாலும் புகழ் பெற்ற இத்திருக்கோயிலின் திருத்தேர் பற்றி இங்கு காண்போம். ஆரம்பகாலத்தில் செப்புத்தேர் என்று அழைக்கப்பெறும் தேர் மட்டுமே ஸ்ரீவில்லிபுத்ததூர் ஆண்டாள் கோயிலுக்கு ஆடிப்பூரதட தேரோட்டத்திருவிழாவில் பயன்படுத்தப்பட்டது. ஸ்ரீவானமாமலை ஜூயர் அவர்களின் சீரிய முயற்சியால் தற்போதுள்ள புதிய தேர் உருவாக்கப்பட்டு ஆசியாவிலேயே திருவாரூருக்கு அடுத்தப்படியாக பெரிய தேர் என்று புகழ் பெற்ற கலைப்பெட்டகமாக திகழ்கிறது. இராமாயணம், மகாபாரதம் சிற்பங்களும், ஆழ்வார் மற்றும் ஆகமக்கலை சிற்பங்களுடனும், அலங்காரத்துடன் கூடிய திருத்தேரின் உயரம் 75 அடியாகும். 1982க்கு முன்வு ஒன்பது சக்கரங்கள் கொண்டிருந்தது.
தேர் நிலைக்கு வருவதற்கு பல நாட்கள் ஆனது. திருச்சி பெல் நிறுவனத்தினர் உதவியுடன் நவீனப்படுத்தப்பட்டு தற்போது 4 இரும்புச் சக்கரங்கள் மற்றும் பிரேக் பொருத்தப்பட்டு. முக்கியமான தேரோட்ட வீதிகளில் எங்களது ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் சார்பாக வழங்கப்பட்ட இரும்பு பிளேட்களின் உதவியுடன், புல்டோசர் பயன்படுத்தப்பட்டு, பக்த கோடி பெருமக்கள் “ ஊர் கூடி தேர் இழுக்கும்” உன்னத பண்போடு வடம் பிடித்து 4 மணி நேரத்தில் நிலைக்கு கொண்டு வரப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் திருத்தேர் உலா வரும் போது பக்த பெருமக்கள் “கோபாலா, கோவிந்தா” என்று பெருமாளை பல்லாண்டு போற்றி விண்ணதிர செய்கின்றனர். “இன்னோ திருவாடிப்பூரம் எமக்காக வன்னோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் குன்றாத வாழ்வான வைகுந்தவான் தன்னை இகழ்ந்த சூழ்வாய் திருமகளாராய்” என்று மணவாள மாமுனிகள் உபதேச ரத்தினமாலை இலக்கியத்தில் போற்றப்படும். ஆடிப்பூரத் தேர்த் திருவிழாவில் பக்தகோடிகள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு ஸ்ரீ ஆண்டாள் திருவருள் பெ்ற்று வாழ்வில் எல்லா வளமும் பெறுக!!
சூடிக்கொடுத்த சுடர்கொடியாள்
ஸ்ரீ வில்லிபுத்தூர் புண்ணிய ஸ்தலமாகும். ஆண்டாள் அவதாரத் தலமாக இருந்தால் இப்புண்ணியத்தை பெற்றது. ஆடி மாதம் ஸ்ரீ வில்லிபுத்தூர் நகரம் தனி பெருமையைசூடிக் கொள்ளும். ஆண்டாள் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தாள். விஷ்ணு சித்தர் என அழைக்கப்படும் பெரியாழ்வார், நந்தவனத்தில் துளசிமாடத்தில் ஆண்டாளை குழந்தையாக எடுத்து வளர்த்து வந்தார். மங்கையான ஆண்டாள் கண்ணன் மீது பற்றி கொண்டு காதல் அவனையே மணவாளனாக நினைத்தாள். இறைவனுக்கு அணிவிக்க பெரியாழ்வார் தொடுத்து வைத்த மாலையை ஆண்டாள்சூடி, கிணற்றில் தன் அழகை பார்த்தாள். ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையையே இறைவனும் அணிந்து கொண்டதால் சூடிக்கொடுத்த நாச்சியார் என்று பெயர் பெற்றாள்.


பார் போற்றும் பாவை
அரங்கனை ஆட்கொண்டதால் கோதை, ‘ஆண்டாள்’ என்ற திருநாமத்துடன் சூடிக் கொடுத்த சுடர் கொடியானாள். பூமாலை சூடிக்கொடுத்த ஆண்டாள் பாமாலை சூட்டவும் தவறவில்லை. வடமொழிச் சொல்லை கலவாமல் தூய தமிழில் திருப்பாவை, திரு மொழி பாடல்களை தமிழக்கு இலக்கணமாகத் தந்தருளிய ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டுள்ளார் என்பது நாம் செய்த பாக்கியமே. திருப்பாவை பாசுரங்கள் அத்தனையும் தூய்மையான, ஆழமான பக்தி நிறைந்தவை. நாச்சியார் திருமொழியோ கற்பனை வளம் நிறைந்து காணப்படுகிறது. உலகத்தில் உள்ள எல்லா மொழிகளிலும் பெண்களுக்கென்று ஒரு பக்தி நோன்பு இருக்குமானால் அது ஆண்டாள் தொடுத்த திருப்பாவை ஒன்று தான். தமிழ் பேசத் தெரியாத வடமொழி மாநிலங்களிலும், நேபாளம், கர்நாடகா, ஆந்திரா மாநில வைணவ கோயில்களில், வழிபாட்டின் போது தமிழ் உச்சரிப்பு மாறாமல் இந்த திருப்பாவை சொல்லப்படுகிறது. இதை நடைமுறைப்படுத்தியவர் ‘ஸ்ரீ ராமானுஜர்’ என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்று தேர்த்திருநாள். பார் போற்றும் பாவை ஆண்டாள் நாச்சியார், ரெங்கமன்னாருடன் திருத்தேரில் எழுந்தருளி ஸ்ரீவி., ரத வீதிகளில் பவனி வரும் பொன்னாள்.
ஸ்ரீஆண்டாள் கோவில் திருத்தேர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் கோவில் திருத்தேரை முழுத்தேர் என்பார்கள். இத்தேர் நான்குநேரி மடம் ஸ்ரீமத் பரமஹம்ச பட்டர் பிரான்ராமானுஜ ஜீயர் சுவாமியால் பல ஆண்டு களுக்கு முன் உபயோக மாக வழங்கப்பட்டது. தேக்கு, கோங்கு, நாஞ்சில் போன்ற உயர்ரக மரங் களால் செய்யப்பட்ட தாகும். தேரைச் சுற்றி தேவி கிரஹம், சித்தர், முனிவர், மகாரிஷி முதலிய பொம்மைகளும் இதர பொம்மைகளும் அழகிய சிற்ப வேலைபாடு களுடன் பொருத்தப்பட் டுள்ளது. இப்பொம்மை களின் எண்ணிக்கை சுமார் 1000 இருக்கும். இத் தேரின் உயரம் தரையிலிருந்து அம்பாள் பீடம் வரை மொத்தம் 37.5 அடி சக்தி பீடத்திற்கு மேல் கன்னிமூலை, ஈசானமூலை, வாயுமூலை ஆகிய 4 மூலை களுக்கும் 21 கால்கள் வீதம் 34 குத்துக்கால்கள் நடப் பட்டு அலங்காரம் செய்யப் படுகிறது.
இதன் மொத்த உயரம் 75 அடி ஆகும். தேர் புறப்பட் டால் திரும்பி நிலை வந்து சேர நாள் கணக்கானாலும் ஆகலாம். தற்போது பெரும் பாலும் ஓரிரு நாட்களிலேயே தேர் நிலைக்கு வந்தடை கிறது. இந்த தேரை இழுக்க குறைந்தது 3 ஆயிரம் பேர் வேண்டும். தேரின் வடம் கோர்க்கும் இரும்பு வளையத்தில் ரசலி வாகன சகாப்தம், கொல்லம் 1025 சௌமிய வருசம். ஆவணி மாதம் 13ந்தேதி குரு வாரம் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. இத்தேருக்கு 1986ம் ஆண்டில் திருச்சி பெல் நிறுவனத்தினர் மூலம் இரும்பு அச்சுகள், ஹைராலிக் பிரேக் மற்றும் இரும்பு சக்கரங்கள் ரூ.7 லட்சம் செலவில் பொருத்தப்பட்டது. அது முதல் தேரோட்டம் ஒவ் வொர் ஆண்டும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக