புதன், 26 ஜூலை, 2017

நான்காம் இடத்து சனியின்!.. நன்மைகள்! தீமைகள்!


நான்காம் இடத்து சனியின்!..நன்மைகள்! தீமைகள்!

➠ அலைச்சலையும், சஞ்சலத்தையும் குணமாக கொண்ட சனியானவர், மெலிந்த தேகத்தையுடையவனாகவும், நீண்ட சரீரத்தை கொண்டவனாகவும், வாத ரோகங்களையும் நரம்பு தொடர்பான நோய்களையும் ஆள்பவனாக இருப்பான் என்கிறது.

➠ சனி ஆயுள்காரகன் என அழைக்கப்படுகிறார். அளவற்ற துன்பங்களுக்கு இவரே காரணம் ஆகிறார். சனி பகவான் நிறைய துன்பங்கள் கொடுத்தாலும் இவர் சிறந்த நீதிமான் ஆவார். அளவற்ற துன்பத்தை அளிப்பது போலவே அளவற்ற நன்மையும் செய்வார். சனி கொடுத்த செல்வத்தை அவராலே கூட பிடுங்க முடியாது அந்த அளவுக்கு நன்மையை தருவார்.

➠ சனிபகவான் மகர ராசிக்கும், கும்ப ராசிக்கும் அதிபதி. அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சந்திரங்களுக்கு நாயகன். துலாம், சனிபகவானுக்கு உச்ச வீடு. மேஷம் நீசம், நீசம் பெற்ற சனிபகவான் நன்மை தரமாட்டார். உச்சம் பெற்ற சனிபகவான் நன்மைகளை வாரி வழங்குவார்.

➠ சனிபகவான் பார்வை கொடியது. சனிபகவானுக்கு சுபகிரகங்கள் பார்வை நன்மை செய்யும் இடமான 3, 6, 9, 10, ஆகிய இடங்களில் இருந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை.

➠ ஒருவருக்கு சனி தசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசைஃபற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார். அடுத்து அதனை இல்லாமல் போகச் செய்வார். முடிவில் அதனை வட்டியும் முதலுமாக உரியவருக்கே திருப்பிக் கொடுப்பார். இப்படி மனிதனை பக்குவப்படுத்தும் நடவடிக்கையை சனி பகவான் மேற்கொள்கிறார்.

நான்காம் இட சனியின் நன்மைகள் :

➠ ரிஷப லக்னத்திற்கு 4இல் சனி இருந்து அவர் பூரம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் ராஜயோகம் கொடுக்கும். மிதுன லக்னத்திற்கும் 4இல் சனி இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

➠ கன்னி, துலாம் லக்னத்திற்கு 4இல் சனி இருப்பது பெரிய விஷேசம்.

➠ தனுசு லக்னத்திற்கு 4இல் சனி இருப்பது மிகப்பெரிய ராஜயோகத்தை கொடுக்கும்.

➠ கும்ப லக்னத்திற்கு 4இல் சனி இருப்பது நல்ல பலனைத் தரும்.

நான்காம் இட சனியின் தீமைகள் :

➠ மேஷ லக்னக்காரர்களுக்கு 4இல் சனி (பாதகாதிபதி) இருந்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். சிறுவயதில் தாயை இழக்க நேரிடலாம். ஒழுக்கத்தில் சில பாதிப்பு, கூடாப் பழக்க வழக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.

➠ கடகம், சிம்மம் லக்னத்திற்கு 4இல் சனி இருப்பது பெரிய சிக்கல்களை உண்டாக்கும். கல்வித்தடை, தாய் பாதை மாறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

➠ மகரத்திற்கு 4இல் சனி இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் தாய்ப்பாசமே இருக்காது.

பொதுவான பலன்கள் :

➠ விருச்சிக லக்னத்திற்கு 4இல் சனி இருந்தால், சனி தசையின் போது 50மூ நல்ல பலன்களும், 50மூ கெட்ட பலன்களும் கிடைக்கும்.

➠ பரணி நட்சத்திரத்தில் அமர்ந்திருந்து, செவ்வாயும் நல்ல கதியில் இருந்தால் மட்டுமே 4ஆம் இடத்து சனி நல்ல பலன்களை கொடுக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக