புதன், 12 ஜூலை, 2017

ஆடி மாதம் அம்மன் வழிபாடு முழு விபரம்



ஆடி மாதம் அம்மன் வழிபாடு  முழு விபரம்

ஆடி மாதத்தில் அம்மனை தரிசிப்பது விசேஷமானது. அம்மன் தனியே மூலதெய்வமாக கொலுவிருக்கும் கோயில்களில் இந்த மாதத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அதேபோல சிவன் கோயில்களில் தனி சந்நதியில் வீற்றிருக்கக்கூடிய துர்க்கை அம்மனுக்கும் பிரத்யேக ஆராதனைகள் செய்விக்கப்படுகின்றன. அம்மன் காவல் தெய்வமாக அருள்பாலிக்கும் கிராமப்புறங்களில் பல்வேறு வகையான நேர்த்திக் கடன்களை மேற்கொண்டு அம்பிகையை மகிழ்விக்கிறார்கள். அந்தவகையில் இங்கே சில அம்மன்களை தரிசிப்போம்.
சாமுண்டீஸ்வரி
வலக்கரங்களில் சூலம், கத்தி, சக்தி, சக்கரம், அம்பு, சங்கம், வஜ்ரம், அபயம், உடுக்கை, சிறிய கத்தி; இடதுகரங்களில் நாகம், பாசம், கேடயம், கோடரி, அங்குசம், வில், மணி, கொடி, கண்ணாடி ஆகியன ஏந்தியிருக்கிறாள். மகிஷாசுரன்தன் தலை துண்டிக்கப்பட்டு, சாமுண்டீஸ்வரியின் சூலத்தினால் மார்பில் குத்துண்டு, அவளுடைய வாகனமான சிம்மத்தினால் கடிபட்டும் தேவியின் காலடியில் கிடக்கிறான். அம்மன் தனது வலதுகாலை அவன் மீதும், இடதுகாலை சிம்மத்தின் மீதும் ஊன்றி, அந்த சிம்மத்தின்மீதே அமர்ந்தவளாக அருட்காட்சியளிக்கிறாள்.

அங்காளபரமேஸ்வரி
சிவந்த மேனி கொண்டவளாய், வெண்பட்டாடை உடுத்தியவளாய் விளங்கும் இந்த தேவி காளை மீது அமர்ந்தவளாகச் சித்திரிக்கப்படுகிறாள். கத்தி, சூலம், பாசம், மண்டையோடு இவற்றுடன் தீச்சுடர் திருமுடி கொண்டவளாக இத்தேவி அருள்கிறாள்.

காட்டேரி அம்மன்

சிவந்த மேனியும், உயரத் தூக்கிக் கட்டப்பட்ட கூந்தலையும் கொண்டிருக்கிறாள் இந்த அம்மன். குறைவான ஆடையும், வற்றிய உடலையும் கொண்டு கத்தி, உடுக்கை, சூலம், சக்கரம், தண்டம், மணிமாலை, தாமரை, கேடயம் இவற்றைக் கைகளில் கொண்டவளாக காட்டேரி அம்மன் திருவருட்பாலிக்கிறாள்.


காத்தாயி அம்மன்

பிறை நிலவைச் சடை முடியில் கொண்டு, தங்க மேனியுடன் திகழ்கிறாள் இந்த அம்மன். பட்டாடை அணிந்து தாமரை, மணி, சூலம், கோடரி, சங்கம், அம்பு, வில், கேடயம், வரதம் ஆகியவற்றைக் கொண்டவளாக காத்தாயி தேவி தோற்றமளிக்கிறாள்.

பேச்சியம்மன்

கருநிற மேனி கொண்டவளாக கத்தி, கதை, சூலம், உடுக்கை, பாசம், மண்டையோடு, தாமரை ஆகியவற்றுடன் ஒரு குழந்தையை அணைத்த கரத்துடன் அருள்பாலிக்கிறாள் பேச்சியம்மன். இருகால்களைப் பீடத்தில் தொங்கவிட்டு அவை கணவன், மனைவியின் தலையில் வைத்த நிலையில் பேச்சியம்மன் தரிசனமளிக்கிறாள்.

பிடாரியம்மன்

சுடர்முடியுடன் கைகளில் கபாலம், மணி, கேடயம், விஸ்மயஹஸ்தம், சூலம், டமருகம், கத்தி, வேதாளம் ஆகியவற்றைத் தாங்கி ஒரு காலைக் குத்திட்டு மறுகாலை அரசன் மீது ஊன்றிய திருக்கோலமாய் பிடாரியம்மன் வழிபடப்படுகிறாள்.
பத்ரகாளியம்மன்
நீல வண்ண மேனிகொண்டு, நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் ஆலீடாசனத்தில் அமர்ந்திருக்கிறாள் பத்ரகாளியம்மன். அபயம், சூலம், கத்தி, ஸ்வரும், பத்மம், கத்தி, மணிமாலை, அம்பு, மான் தோல், வில், சங்கம், தீச்சுடர், கெண்டி, கேடயம், தடி, ஸ்ருக்கு, பாத்திரம், வரதம் என பதினெட்டு திருக்கரங்களில் பதினெட்டு வகைப் பொருட்களைத் தாங்கியருள்பவள் இத்தேவி.


ராஜ ராஜேஸ்வரி

செம்பருத்தி மலர் மாதுளம் மலர் போன்றும், குங்குமப்பூவின் நடுவைப் போன்று ஒளி பொருந்திய சிவந்த மேனியும், கோடி கதிரவனின் ஒளியை உடையவளும், இளமதியினைத் திருமுடியில் அணிந்து, பாசம், அங்குசம், கரும்பு வில், மலரம்புகள் இவற்றுடன் அசைவற்ற ஆயிரம் மின்னலை ஒத்த மஞ்சள் நிறப் பட்டாடையை அணிந்திருப்பவளும், அரியணையில் வீற்றிருப்பவளுமாக இந்த ராஜ ராஜேஸ்வரி அம்பிகை அருள்கிறாள்.


ஆடிப்பெருக்கு நாளில் நடக்கும் சிறப்பான நிகழ்வுகள்

ஆன்மிகம் மட்டுமின்றி, இயற்கை சார்ந்த பின்னணியுள்ள திருவிழாவாகவும் விளங்குவது ஆடிப்பெருக்கு.
ஆன்மிகம் மட்டுமின்றி, இயற்கை சார்ந்த பின்னணியுள்ள திருவிழாவாகவும் விளங்குவது ஆடிப்பெருக்கு. நதிகளைப் பாதுகாக்க நம் முன்னோர் கொண்டாடிய விழாக்களில் இதுவும் ஒன்று. ஆடி 18 இல் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
புண்ணிய நதியான கங்கை, தன்னில் சேர்ந்த பாவங்களை போக்கும்படி பெருமாளிடம் வேண்டினாள். சுவாமி அவளிடம், காவிரியில் கலந்து, பாவத்தைப் போக்கிக் கொள்ளும்படி கூறினார். தனக்கு கங்கைக்கும் மேலான மகிமையை வழங்கியதால், ஆனந்தமடைந்த காவிரித்தாய், ஆரவாரத்துடன் காவிரிக்கரையில் பெருமாள் குடிகொண்டுள்ள தலங்களைத் தரிசிக்க பொங்கி வந்தாள்.
ஆதிரங்கமான ஸ்ரீரங்கப்பட்டினம் (கர்நாடகம்), மத்திய ரங்கமான சிவசமுத்திரம், அந்திரங்கமான ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களிலுள்ள ரங்கநாதப் பெருமானைத் தரிசித்தாள். இந்த நிகழ்வே, ‘ஆடிப்பெருக்கு’ விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், அந்த நதியில் நீராடினால், நம் பாவங்களையெல்லாம் அவள் தீர்த்து வைப்பதாக ஐதீகம்.
இந்த விழாவை 18ம் தேதி கொண்டாட சில காரணங்கள் உள்ளன. 18 என்பது ஆன்மிக நாட்டத்தை அதிகரிக்கும் எண்ணாகும். இந்நாளில் தீர்த்தமாடுவதன் மூலம், ஆன்மிக இன்பத்தில் திளைத்து, மன நிம்மதியைப் பெறலாம். இந்த எண், வாழ்க்கை வசதிகளைப் பெருக்கும் தன்மையுடையது. அதனால், இந்நாள் நகை முதலான மங்கலப்பொருட்கள் வாங்க ஏற்ற நாளாக இருக்கிறது. மாங்கல்யக் கயிறை புதிதாகக் கட்டிக் கொள்வதன் மூலம், கணவருக்கு ஆயுள் பெருகும். புதிய படைப்புகளை உருவாக்க நினைப்பவர்களுக்கு இது பொன்னாள்.

நியாயத்திற்காக போராடிய பாரதப்போர் 18 நாட்கள் நடந்ததையும், புராணங்கள் 18 என்பதையும், கீதையில் 18 அத்தியாயங்கள் உள்ளதையும், சபரிமலை தர்மசாஸ்தாவை (ஐயப்பன்) தரிசிக்க 18 படிகள் ஏற வேண்டியதையும் கூட நினைவில் கொள்ள வேண்டும். எனவே, புனிதமான இந்த எண்ணை ஆடிப்பெருக்குக்குரிய நாளாகத் தேர்வு செய்துள்ளனர் முன்னோர்.
சகோதர உறவுக்குரிய நன்னாளும் இதுவே. சகோதரிகளுக்கு சகோதரர்கள் புத்தாடை வாங்கிக் கொடுத்து விருந்துக்கும் அழைக்கின்றனர். சமயபுரத்திலுள்ள ஆதிமாரியம்மன் கோவிலில், சகோதரர்களின் நல்வாழ்வுக்காக சகோதரிகள் அர்ச்சனை செய்வதும் உண்டு.
அன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாள் (உற்சவ ரங்கநாதர்), தங்கப் பல்லக்கில் காவிரிக்கரையிலுள்ள அம்மா மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு சுவாமி சூடிக்களைந்த மாலை, கஸ்தூரி திருமண்காப்பு, வளையல், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, தாலிப்பொட்டு, வடை, அப்பம், தோசை ஆகியவற்றை யானை மீது வைத்து ஊர்வலமாகக் கொண்டு வந்து நதியில் விடுகின்றனர்.
உடல் சுத்தம் நதிகளின் நீராலும், மனச் சுத்தம் இறைநாமத்தைச் சொல்லியபடியே மூழ்குவதாலும் உண்டாகிறது என்கின்றனர் மகான்கள். ஆடிப்பெருக்கன்று காவிரியில் மூழ்கும் போது, ‘ஸ்ரீரங்கா கோவிந்தா கோபாலா…’ என பெருமாளின் நாமத்தையும், ‘தாயுமானவா தந்தையுமானவா சிவாயநம!’ என்று மலைக்கோட்டை சிவன் நாமத்தையும் உச்சரிப்பதன் மூலம், நம் உடலுடன் உள்ளமும் தூய்மையடையும்.

ஆடி மாத பிரசாதங்கள்

ஆடி கூழ்

என்னென்ன தேவை?
கேழ்வரகு மாவு - 1 கப்,
பச்சரிசி நொய் (உடைத்த அரிசி) - 1/2 கப்,
தண்ணீர் - 3 கப்,
சாம்பார் வெங்காயம், தயிர், உப்பு - தேவைக்கு,
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - சிறிது.
(பாதி கேழ்வரகு மாவு, பாதி கம்பு மாவிலும் செய்யலாம்)
எப்படிச் செய்வது?
கேழ்வரகு மாவை முதல் நாள் இரவே தனியாக தண்ணீரில் கரைத்து மூடி வைக்கவும். மறுநாள் காலை அடுப்பில் தண்ணீர்விட்டு ஒரு பானையில் அல்லது பாத்திரத்தில் நொய்யை வேக விட்டு அது பாதி வெந்ததும், இரவு கரைத்து வைத்த மாவை சேர்த்து கைவிடாமல் கூழாகக் காய்ச்சி, வெந்ததும் இறக்கி ஆறவைக்கவும். தேவையான உப்பை சேர்க்கவும். பிறகு மோர், வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து கரைத்துக்கொள்ளலாம். இக்கூழினை அம்மனுக்குப் படைத்துவிட்டு வீட்டார் மட்டுமன்றி மற்றவர்களுக்கும் அளிக்கலாம்.


மாவிளக்கு

என்னென்ன தேவை?
வெல்லம் - 1 1/2 கப்,
ஈரமான பச்சரிசி மாவு - 1 கப் அல்லது அரிசி - 2 கப்,
நெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பச்சரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வடித்து நிழலில் உலர்த்தி பிறகு மிக்சியில் அரைத்து வைத்துக் கொண்டு பின் வெல்லத்தை பொடித்து ஈர பச்சரிசி மாவுடன் சேர்த்துக் கிளறவும். இந்தக் கலவையை விளக்கு மாதிரி செய்து மத்தியில் குழி செய்து அந்தக் குழியில் நெய் விட்டு திரி போட்டு விளக்கு ஏற்றி அம்மனுக்குப் படைத்து, பிரசாதமாக எல்லோருக்கும் கொடுக்கலாம்.

முருங்கைக்கீரை பொரியல்

என்னென்ன தேவை?
ஆய்ந்த முருங்கைக்கீரை - 1 கிண்ணம்,
தேங்காய்த்துருவல் - தேவைக்கு,
தாளிக்க கடுகு - 1/4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 2 அல்லது தேவைக்கு,
எண்ணெய், உப்பு - தேவைக்கு,
விரும்பினால் வெங்காயம் - 1.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பொடித்த மிளகாய்வற்றல் சேர்த்து தாளித்து இத்துடன் கீரையை சேர்த்து வேக விடவும். உப்பு சேர்க்கவும். சிறிது தண்ணீர் தெளித்து வேகவிட்டு தேங்காய்துருவலையும் சேர்த்து இறக்கி படைத்து பரிமாறவும். கூழுக்கு ஏற்ற சைட் டிஷ் இது.


கலந்த பருப்பு வடை

என்னென்ன தேவை?
கடலைப்பருப்பு - 1/2 கப்,
துவரம்பருப்பு - 1/2 கப்,
பாசிப்பருப்பு- 1/2 கப்,
உளுத்தம்பருப்பு - 1/2 கப்,
உடைத்த முந்திரி பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
வெள்ளரி விதை - 1 1/2 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய மல்லி,
கறிவேப்பிலை - தேவைக்கு,
பச்சைமிளகாய்,
இஞ்சி விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பருப்பு வகைகளை ஒன்றாக கலந்து மூழ்கும்வரை தண்ணீர் விட்டு 3 மணிநேரம் ஊற வைக்கவும். பின் வடித்து கரகரப்பாக அரைக்கவும். முந்திரிபருப்பு, வெள்ளரி விதை, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், இஞ்சி விழுது, உப்பு சேர்த்து கலந்து வடையாக தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து படைத்து பரிமாறவும்.

ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருட வழிபாடு நன்று.

கருடாழ்வார் பிறந்த ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருட வழிபாடு செய்தால் சகர தோஷங்களும் நீங்கும்.
பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும்; மாங்கல்யம் பலம் பெறும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும். நான்கு ஆடி வீதிகளிலும் அம்பாள் வீதியுலா வருவாள். அதேபோல், ஆடி சுவாதி தினத்தில் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும், புறப்பாடும் நடைபெறும்.


திருமண தடை நீக்கும் ஆடிமாதத்தில் கடைபிடிக்கப்படும் அவ்வையார் நோன்பு.

சுமங்கலிகள் தாலி பாக்கியத்திற்காக ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று நள்ளிரவில் பெண்கள் ஒன்று கூடி இந்த விரதத்தை மேற்கொள்வர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் மட்டும் கடைபிடிக்கும், ‘அவ்வையார் நோன்பு’ பிரசித்தி பெற்றதாகும். கன்னிப் பெண்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், திருமணமான சுமங்கலி பெண்கள் இல்லறம் இனித்திருக்கவும், குழந்தை வரம் வேண்டியும், கணவனின் ஆயுள் பலம் கூடவும் இந்த விரதத்தைக் கடைபிடிக்கிறார்கள்.
அவ்வையார் நோன்பு இருக்கும் பெண்கள், ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் இரவு 10 மணிக்கு மேல், மூத்த சுமங்கலி பெண் ஒருவரது வீட்டில் ஒன்றாக கூடுவார்கள். பச்சரிசி மாவு, வெல்லம் முதலியன கலந்து உப்பில்லாமல் கொழுக்கட்டை செய்து பூஜை செய்வார்கள். அப்போது அவ்வையார் மற்றும் அம்மன் கதைகளை, மூத்த சுமங்கலிகள் கூற, நோன்பில் கலந்து கொள்ளும் பெண்கள் அனைவரும் அதை பயபக்தியுடன் கேட்பார்கள். பின்பு கொழுக்கட்டைகளை நிவேதனம் செய்து இறைவனை வழிபட்ட பின், அதை மீதமின்றி பெண்கள் அனைவரும் உண்பார்கள். இந்த நோன்பில் ஆண்களுக்கு அனுமதியில்லை. கொழுக்கட்டையுடன், கூழ் படைத்து வழிபடும் பெண்களும் உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாழக்குடி அருகில் உள்ள ஆதிச்சநல்லூர், அழகிய பாண்டியபுரம் அருகில் உள்ள குறத்திமலை, முப்பந்தல் ஆகிய இடங்களில் அவ்வையாருக்கு கோவில்கள் அமைந்துள்ளன. ஆரல்வாய்மொழி அருகில் உள்ள முப்பந்தல் இசக்கியம்மன் ஆலயத்தில், அவ்வையாருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. திருமண வரம், குழந்தை வரம், மங்கலமான மண வாழ்க்கை, தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்ட, ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அவ்வையார் அம்மன் கோவிலில் பொங்கலிட்டு, இரவு மூத்த சுமங்கலி வீட்டில் நடைபெறும் நோன்பில் கலந்து கொண்டு இரட்டிப்பு பலனை அடையலாம்.



அம்மனுக்கு உகந்த ஆடி!

தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு. பெண் தெய்வங்களின் போற்றுதலுக்குரிய மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது.
அன்னை காமாட்சி தேவி, பரமசிவனை நோக்கித் தவமிருந்து, ஈசனை அடையும் பேறு பெற்ற மாதம் இம்மாதம்தான். தேவியின் திருவுருவங்களில் ஒன்றான வாராஹி தேவியைச் சிறப்பிக்கும் நோக்குடன் வாராஹி நவராத்திரி இம்மாதத்தில்தான் கொண்டாடப்படுகிறது. தைரியத்தையும், வெற்றியையும் அருள்பவள் வாராஹி தேவி.
ஆடி மாதத்தில் எல்லா மாரியம்மன் கோயில்களிலும் திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும்.
ஆடி மாதம், வளர்பிறை, துவாதசி தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை, துவாதசி வரை துளசி அம்மனை வழிபட நீண்ட ஆயுளும், ஆரோக்யமும் கிடைக்கும். வளமான வாழ்க்கை அமையும்.
ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் ஆடிப்பூரம் என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பூமாதேவியை ஆண்டாளாக அவதாரம் செய்த தினம் ஆடிப்பூர நன்னாள். ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன் சூரியனின் ராசியான சிம்மத்திலும் பரிவர்த்தனை பெற்றிருந்த சமயத்தில், நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி பூர நட்சத்திரம் கூடிய சனிக் கிழமையன்று துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள். கண்ணனையே காதலித்து ஸ்ரீரங்கத்தில் அவர் திருக்கரங்களைப் பற்றி திருமாலுடன் இரண்டறக் கலந்தவள்.
ஆடிப்பூரத் திருவிழா ஆண்டாள் அவதரித்த திருவில்லிப்புதூரிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும், மற்றும் பல திருமால் ஆலயங்களிலும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. உலக மாதாவாகிய பார்வதி தேவி ருதுவான தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது. அன்னையை விரதமிருந்து தரிசித்தால் அஷ்டமா சித்திகளும் கைகூடும் உன்னத நாளிது.


ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி:

இம்மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் மிகவும் விசேஷமானவை. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்வார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும்.
ஆடி வெள்ளியில் வரும் வரலட்சுமி விரதம் சிறப்பான மகாலட்சுமி பூஜையாகும். வீட்டிற்கு மகாலட்சுமியை வரவேற்று, பூஜை செய்து உபசரித்தால் மகாலட்மியின் அருட்கடாட்சம் கிடைக்கும். இந்தக் கிழமைகளில் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள்.
ஆடி செவ்வாயன்று தலை குளித்து அம்மனை வழிபட திருமாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். இதுதவிர ஆடி செவ்வாயில் ஒளவையாருக்கு மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத் தக்கது. இந்த ஒளவை நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.


ஆடியும் அம்மனின் வழிபாடும்

ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்தது என்றாலும், குறிப்பாக மாரியம்மன் வழிபாடு இன்னும் சிறப்பாகும்.
ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்தது என்றாலும், குறிப்பாக மாரியம்மன் வழிபாடு இன்னும் சிறப்பாகும். ஞாயிற்றுக் கிழமைகளில் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றி வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்வது நல்லது.
ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் புண்ணியத்தை அளிக்கும். ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நாளில் தாலி மாற்றிப் புதுத் தாலி அணிவதும் வழக்கம். திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணமாக வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.
ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும். விவசாயிகள் தங்கள் பணிகளை இந்த மாதத்தில்தான் துவக்குவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் இதனால்தான் உருவாயிற்று.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் தபசு விழா இந்த மாதத்தின் சிறப்புகளுக்கு சிறப்பு சேர்க்கும் விழாவாகும். ஆடி மாதத்தை “சக்தி மாதம்” என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக் சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும். உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே. வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்களுக்கும் ஆடி மாதம் சிறந்தது.
அற்புதமான இந்த ஆடி மாதத்தின் இன்னொரு முக்கியச் சிறப்பு... சக்தி வழிபாட்டுக்கு உரிய மாதம் இது. அதாவது, பெண் தெய்வங்களைக் கொண்டாடி திருவிழாக்கள் எடுத்து, வணங்கி ஆராதிக்கிற அருமையான மாதம். ஸ்ரீதுர்கை, ஸ்ரீகாளி, ஸ்ரீமாரியம்மன் என பெண் தெய்வங்கள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் பொங்கல் படையலிட்டு, வேப்பிலை சார்த்தி, எலுமிச்சை மாலை அணிவித்து, கூழ் வார்த்து நைவேத்தியம் செய்து, பாலபிஷேகம் செய்து அம்மனை வழிபடுவார்கள்.
சிவனுடைய சக்தியை விட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களை பாடுவார்கள். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து இறைவனை வழிபடுவார்கள், பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும்.


அம்மனின் பூரண அருள் பெற ஆடி வெள்ளி வழிபாடு

ஆடி முதல் வெள்ளிக்கிழமை -


ஒரு நாட்டின் நலனுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பண்டிகைகளைக் கொண்டாடுவது மிகவும் அவசியம் என வேதங்களும் ஆகமங்களும் வலியுறுத்துகின்றன. தஞ்சை மாவட்டம் திருவாரூரில் தியாகராஜர் கோயிலின் இரண்டாவது பிராகாரத்தில், ஒவ்வொரு ஆண்டும் 56 பண்டிகைகள் கொண்டாடப்பட வேண்டும் என பொறிக்கப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்த பண்டிகைகள் அனைத்தும் மனித வாழ்க்கைக்கு பயனுள்ளதே; அறிவியலும் அதை ஆமோதிக்கிறது. பொதுவாக, நம் பண்டிகைகள் ஆடி மாதத்தில் தொடங்குகின்றன. இறைவழிபாட்டில் சிறப்புடையது ஆடி மாதம். அம்மனுக்குரிய மாதமாக இது போற்றப்படுகிறது. இன்று (22.7.2016) ஆடி முதல் வெள்ளிக்கிழமை அம்மனை கீழ்கண்டவாறு வழிபட்டு அம்மனின் பூரண அருள் பெறுங்கள். வாசலில் கோலமிட்டு பூஜை அறையில் குத்துவிளக்கேற்றி நிவேதனமாக பால்பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து லலிதா ஸஹஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்யுங்கள். வயதுக்கு வராத ஒரு பெண்ணுக்குப் பாவாடை, சட்டை, தாம்பூலம், சீப்பு, கண்ணாடி, குங்குமச் சிமிழ், வளையல், பழங்கள் கொடுங்கள். அப்பெண்ணை அம்மனாகப் பாவித்து உணவு அருந்தச் செய்யவும்.
ஆடிக்கூழ் : அம்மனுக்குப் பிடித்தமானது, வேம்பு, எலுமிச்சை, கூழ், கஞ்சி, எனவேதான் கோயில்களில் கூழ், கஞ்சி தயார் செய்து அம்மனுக்குப் படைத்து பின் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குகிறார்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இவ்வாறு அம்மனுக்குப் படைத்து அனைவருக்கும் விநியோகம் செய்வார்கள்.
சண்டி ஹோமம்: ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள். பராசக்தியின் ஒன்பது அம்சங்களை (சர்வபூதசமனி, மனோன்மணி, பலப்பிரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரௌத்ரி, ஜேஷ்டை, வாமை) ஒன்பது சிவாச்சார்யர்கள், ஒன்பது வகை மலர்களால் ஒரே சமயத்தில் அர்ச்சிக்கும் 'நவசக்தி அர்ச்சனை' நடைபெறும். ஆடி வெள்ளியில் 'சண்டி ஹோமம்' போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்.



திருமண தடை நீக்கும் ஆடி வெள்ளி விரதம்
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விரதமிருந்து எலுமிச்சை தீபம் ஏற்றினால் கன்னிப்பெண்களுக்கு உடனடியாக திருமணம் நடைபெறும்.

ஆடி வெள்ளிக்கிழமைகளில் சர்க்கரை பொங்கல் படைத்து, அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்ய வேண்டும். சிறிய பெண் குழந்தைகளுக்கு தாம்பூலம், சீப்பு, கண்ணாடி, வளையல், உடை கொடுத்து அவர்களை அம்மனாக பாவித்து உணவளிக்க வேண்டும். இது கூடுதல் பலன்களை தரும்.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் கன்னிப்பெண்களுக்கு உடனடியாக திருமணம் நடைபெறும். வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து அம்மனை மனம் உருக வழிபட்டால் பெண்களின் மனக்குறை தீரும் என்பது ஐதீகம்.
இதை சுக்கிர வார விரதம் என்று அழைப்பார்கள். ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்றிருந்தாலும், பாவக்கிரகம் பாவையினால் சுக்கிரன் பலமிழந்து இருந்தாலும் இவ்விரதம் இருந்தால் தொல்லைகள் நீங்கி நலன்கள் கிட்டும். இது முருகனையும், அம்பாளையும் நோக்கி இருக்கும் விரதம் ஆகும். சூரிய உதயத்திற்கு முன் குளித்து வெளிர் நீல ஆடை அணிந்து அம்மன் கோவிலுக்குச் சென்று பெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இவர்கள் வைரக்கல் மோதிரம் அணிந்தால் நலன் பயக்கும்.


ஆடிமாதமும் அனந்த பத்மநாபனும்!


ஆடி மாதம் என்றாலே நமக்கு ஆடி பதினெட்டாம் பேர் எனும் ஆடிப்பெருக்கு நினைவுக்கு வரும். ஆடிப்பெருக்கின் போது புதுமணத் தம்பதிகளும் மக்களும் மற்றவர்களும் காவிரியாற்றினை வணங்கி மகிழ்ந்து கலந்துண்டு களிப்பர்.
திருமணமான இளம் நங்கை தன் பிறந்தகம் விட்டு புகுந்த வீட்டில் நுழையும் போது மகிழ்ச்சியுறுவது போல் குடகிலிருந்து காவிரி புறப்படும்போது மகிழ்ச்சி குன்றி, கடலுடன் சேருங்கால் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறது. கன்னிப் பெண்களின் திருமணத்திற்காகச் செல்வம் கரைவதுபோல காவிரி கடலரசனுடன் சேர, கரைவாழ்மரங்களை வேரோடு பிடுங்கிச் செல்லுகின்றாள்.
வெண்மையான நுரையே அதற்கு பற்கள் மற்றும் இடுப்பணி. ஆற்றில் விழும் மரக்கிளையே அதற்கு பற்றுகோல். நீர்ச்சுழற்சியே அதற்கு நாபி. காவிரியும் வலஞ்சுழித்துப் பாதாளம் செல்ல, பிரதாபவீரன் என்ற அரசன் அதனை மேற்கொணர முயற்சிக்கிறான். முயற்சியும் வீணாகிறது.



ஏரண்டவனம் எனும் கொட்டையூர் வாழ்முனிவர் ஒருவர், திருவலஞ்சுழியில் காவிரி பாதாளம் புகுந்த இடத்தில் குதித்து காவிரியை மேலெழுந்து பாயச்செய்தார்.
முனிவர் மாண்ட பிரம்மஹத்தி தோஷம் பிரதாபவீர அரசனைப் பற்ற, அரசனும் 108 சிவாலயம் அமைத்து தோஷம் நீங்கப்பெற்றான் என "பாபநாச நேத்திர மாகாத்மிய' நூல் கூறுகிறது.
திருவலஞ்சுழியின் அருகே பாதாளத்திலிருந்து மேலெழுந்த காவிரி திருக்குடந்தையில் ஸ்ரீ சக்ரபாணிக்குத் தன் வேகத்தைத் தெரிவித்துக்கொண்டு திருவிடைமருதூர், மயிலாடுதுறை, திருக்கடையூர் ஆகிய தலங்களின் வழி செல்லும் காவிரியின் போக்கை சுவாமிமலையில் வாழ்ந்த ஸ்ரீ வேங்கடேசகவி இக்கட்டுரைக்கு அடிப்படையாக அமைந்த அவரது காவிரிஸ்துதியில் (இது காவேரி ஸ்தோத்ரம், ஸ்நான சுலோகம், அஷ்டகம், 108 நாமாவளி, காவேரி அம்மன் பேரில் தோத்திரம், காவேரி கல்யாணம் ஆகியவற்றைப் பெற்றுள்ளது) வருணிக்கின்றார்.
ஆடி மாதம்: காவிரியில் ஆடிமாதம் முதல் மார்கழி முடிய நீர் நிறைந்திருக்கும். ஆதலால் அதுவரை அதன் நடுவே கண் துயிலும் ஜலசயனப்பெருமாள் நீர் வற்றுங்கால் வேறிடம் சென்றுவிடுவாராம். வேறிடம் என்றால் பாற்கடல்தான். அங்கும் அலையோசை உறக்கம் கலைகிறது. அமைதியான அரங்கமெனும் திருவரங்கத்தைத் தேர்ந்தெடுத்து ஆங்கே திருமால் அனந்தாழ்வான் மீது கண்ணுறக்கம் கொள்கின்றார். காவிரி நங்கை அருகில் பாயக்கண்டு சிவபெருமான் கங்கையைத் தலையில் தரித்ததுபோல திருமாலும் காவிரியை மாலையாய் அணிந்தார் என காவிரிஸ்துதி நூல் கூறுகிறது.


அனந்தபத்மநாபன் (திருலோகி): பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரமனே திருப்பாற்கடல் எனப்பெறும் பிராப்திநாதனாக திரைலோக்கியமாதேவி சதுர்வேதி மங்கலத்தில் பள்ளிகொண்டருளுகின்றார்.
 இத்திருத்தலம் திருலோகி என்றழைக்கப்படுவதாய் திருப்பனந்தாள் மற்றும் திருவெள்ளியங்குடிக்கு அருகில் விளங்குகின்றது. கும்பகோணத்திலிருந்து நகரப்பேருந்து வசதி உள்ளது.
இத்தலத்தில் இரண்டு சிவாலயங்களும், ஒரு விஷ்ணு ஆலயமும் காணக்கிடைக்கின்றன. கிழக்கு நோக்கி அமைந்த இவ்வாலயத்தின் எதிரில் புஷ்கரிணியும் கோயிலினுள்ளே ஸ்ரீ வரதராஜப் பெருமாள் மற்றும் யோக நரசிம்மரும் அருள்பாலிக்கின்றனர். இத்தலத்துறை சிவபெருமான்களுக்கு 5 அத்தியாயங்களும், விஷ்ணுவிற்கு 3 அத்தியாயங்களும் ஆக மொத்தம் 8 அத்தியாயங்களுள்ள தலபுராணம் உண்டென்பதை தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதைய்யர் அவர்கள் தமது "திருத்தலங்கள் வரலாறு' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அனந்தன் மேல் கிடந்த கோலத்தில் காட்சிதரும் திருநாரணனின் நாபி கமலத்தில் பிரம்மதேவரும், அருகில் உபயநாச்சிமார்களும் காட்சி தருகின்றனர். நாற்கரங்களுடன் கூடியவராய் காட்சிநல்கும் பள்ளி கொண்டபெருமாளின் வலது கீழ்க்கரம் சக்கரத்தைப்பெற்று, மேற்கரம் அவரது திருமுடியின்பால் தலையணையாக அமைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்க ஒன்று. எம்பெருமானின் திருநாமம் அனந்தபத்மநாபன் என்பது, இக்கோயிலின் தனிக் கோயில் தாயார் சந்நிதியில் நிலைப்படியின் இடது புறமுள்ள நீலவண்ணத்தால் மறைக்கப்பட்ட கல்வெட்டினுள் மறைந்து கிடக்கிறது. இவ்வூரின் இத்திருக்கோயில் சார்ந்த கல்வெட்டுகளுள் இது பழைமையானதும் சிறந்ததுமாகும்.


ஆடி மாதம் அம்மன் மாதம்
தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது.


தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது. பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.
மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல்நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்தமானவை. கூழும் விருப்பமானதே. இவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை. இவற்றையே இம்மாதத்தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.
ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள் ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகைகளாகும்.


ஆடி வெள்ளி விரதத்தால் கிடைக்கும் அற்புதங்கள்
அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் தனிச்சிறப்பு கொண்டவை.


அம்மன் ஆலயங்களில் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடும், அலங்காரமும் எப்போதும் நடைபெறுவது வழக்கம். அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் தனிச்சிறப்பு கொண்டவை. சுக்கிர பலம் பொருந்திய வெள்ளிக்கிழமைகளில் அனைத்து அம்மன்களையும், மகாலட்சுமியையும் வணங்கும்போது மாங்கல்ய பலம், செல்வ செழிப்பு, குடும்ப நன்மை கிடைக்கின்றது. எனவே, பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வணங்கி வழிபடுகின்றனர்.
சகல சவுபாக்கியங்களையும் அள்ளி தரும் ஆடி வெள்ளி வழிபாட்டின் மூலம் சுமங்கலி பெண்களில் கணவர் ஆயுள் கூடும், மணமாகாத பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும். மணமாகி குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். வறுமை நீங்கி செல்வம் தழைத்தோங்கும்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் நமது வீட்டில் அம்மன் வழிபாடு மேற்கொள்வது முதல், விரதமிருந்து காவடி எடுப்பது, பொங்கல் வைப்பது, ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு யாகங்களில் கலந்து கொள்வது போன்றவை நடைபெறும்.
ஆடி வெள்ளியன்று துர்க்கையம்மனை ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதனால் மணமாகாத கன்னி பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். துன்பம் விலகும். எதிரிகள் தொல்லை ஒழியும்.



பெண்கள் கடைபிடிக்கும் ஆடிமாத பராசக்தி விரதம்


ஆகஸ்டு மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று மேற்கொள்ளும் பராசக்தி விரதம் என்று பெயர். இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் முறையை பற்றி பார்க்கலாம்.
உலகநாயகியான அம்பிகையை ஆடி மாதம் வழிபடுவது சிறப்பு. ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். ஆகஸ்டு மாதத்தின் கடைசி செவ்வாயன்று மேற்கொள்வது பராசக்தி விரதம்.
பெண்கள் மேற்கொள்ளும் இந்த விரதத்தால் எண்ணியதுநிறைவேறும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். இந்த விரதத்தை அதிகாலை ஐந்து மணிக்கே தொடங்க வேண்டும். முதலில் விநாயகருக்கு பூஜை செய்ய வேண்டும். பார்வதியின் அம்சமான மீனாட்சி, காமாட்சி அம்மன் படங்களை சிவப்பு நிற மலர்களால் அலங்கரித்து விளக்கேற்ற வேண்டும்.
பால், பழம், வெற்றிலை பாக்கு, இளநீர், இனிப்பு படைக்க வேண்டும். விரதம் அனுஷ்டிப்பவர்கள், மதியம் ஒருவருக்காவது அன்னதானம் செய்வது அவசியம். இரவில் கோவிலுக்குச் சென்று அம்மன் சந்நிதியில் தீபமேற்றி வழிபடுவது அவசியம்.


ஆடி மாதத்தில் அம்மன் கோயிலில் ஏன் கூழ் ஊற்றுகிறார்கள்?

பஞ்ச காலத்தில் கஞ்சித் தொட்டி திறந்து கஞ்சி ஊற்றுவதை நம் தமிழகம் பலமுறை பார்த்திருக்கிறது.
அம்மை நோய் என்பது கடும் வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும். அதற்குக் காரணம் அதீத வெப்பம் மற்றும் வறட்சியான காற்று. வெப்பம் மற்றும் வறட்சியால் ஏற்படுகிற அந்த நோய், மழை பெய்து மண் குளிர்ந்தால்தான் குறையும். அதனால் மாரி எனும் மழையை அவர்கள் தெய்வமாக உருக் கொண்டார்கள்.
அதிலும் விவசாய வேலை இல்லாத மாதமான ஆடி மாதத்தில் உற்சவங்களை நடத்தினார்கள். சித்திரையில் அறுவடை முடிந்து வைகாசி, ஆனி மாதம் வரை நெல்லோ, தானியங்களோ இருப்பு வைத்திருக்கும் ஏழைத் தொழிலாளர்கள்... ஆடியில் அது தீர்ந்து உணவுக்குத் தடுமாறுவார்கள். பஞ்சமும் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பஞ்சத்தைத் தீர்க்கவும்தான் இந்த ஆடிமாத வழிபாடு உதவியிருக்கிறது.
அப்போதைய மக்களின் பிரதான உணவு கூழ்தான். அந்தக் கூழ் கிடைக்காமல் பட்டினி சாவுகள் நடக்கும் ஆடி மாதத்தில்... கோயிலில் வைத்துக் கூழ் ஊற்றினார்கள். நாகரிக வளர்ச்சியில் கூழ் என்பது மறக்கடிக்கப்பட்டு, அரிசி உணவான கஞ்சியாக மாறியது. பஞ்ச காலத்தில் கஞ்சித் தொட்டி திறந்து கஞ்சி ஊற்றுவதை நம் தமிழகம் பலமுறை பார்த்திருக்கிறது. அதற்கு அடிப்படைகூட கோயில்களில் கஞ்சி ஊற்றுவதுதான்.


ஆடியில் மட்டும் ஏன் அம்மனுக்கு சிறப்பு?

அம்மன் வழிபாடு என்பது கிராமப்புற மக்கள், விவசாயம் செய்யும் மக்கள், அறியாமையில் வாழ்ந்த மக்களின் வழிபாடாகத்தான் தொடங்கியது.
ஆடி மாதத்தில் மட்டும் அம்மனுக்கு ஏன் இத்தனை திருவிழாக்கள்..?’ என்று ஆராயப் போனால், தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமையும், மனிதநேயமும், மருத்துவ விளக்கமும் நமக்குப் புரிய வரும்.
பொதுவாக அம்மன் வழிபாடு என்பது கிராமப்புற மக்கள், விவசாயம் செய்யும் மக்கள், அறியாமையில் வாழ்ந்த மக்களின் வழிபாடாகத்தான் தொடங்கியது. அந்தக் காலத்தில் அம்மை, காலரா போன்ற நோய்கள் வந்து, கொத்துக் கொத்தாக மனித உயிர்களைப் பலி வாங்கும்.
அது எப்படி வருகிறது, எப்படிப் பரவுகிறது என்று அறியாமலேயே அப்பாவித்தனமாக உயிர்களை இழந்தார்கள் அன்றைய மக்கள். அதிலிருந்து தப்பியவர்கள் மூலமாகத் தோன்றியதுதான் அம்மன் வழிபாடு. ‘அம்மை நோயிலிருந்து தங்களைக் காப்பாற்றுவது மாரியம்மன்தான்’ என்றும், ‘காலரா நோயிலிருந்து காப்பாற்றுவது காளியம்மன்தான்’ என்றும் முடிவு செய்து, அதற்கான உருவை அமைத்து, வழிபாடு செய்து வேண்டிக் கொண்டார்கள். அதில் அர்த்தமும் இருந்தது.




அம்மை நோய் என்பது கடும் வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும். அதற்குக் காரணம் அதீத வெப்பம் மற்றும் வறட்சியான காற்று. வெப்பம் மற்றும் வறட்சியால் ஏற்படுகிற அந்த நோய், மழை பெய்து மண் குளிர்ந்தால்தான் குறையும்.
அம்மை நோய் என்பது கடும் வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும். அதற்குக் காரணம் அதீத வெப்பம் மற்றும் வறட்சியான காற்று. வெப்பம் மற்றும் வறட்சியால் ஏற்படுகிற அந்த நோய், மழை பெய்து மண் குளிர்ந்தால்தான் குறையும். அதனால் மாரி எனும் மழையை அவர்கள் தெய்வமாக உருக் கொண்டார்கள்.
அதிலும் விவசாய வேலை இல்லாத மாதமான ஆடி மாதத்தில் உற்சவங்களை நடத்தினார்கள். சித்திரையில் அறுவடை முடிந்து வைகாசி, ஆனி மாதம் வரை நெல்லோ, தானியங்களோ இருப்பு வைத்திருக்கும் ஏழைத் தொழிலாளர்கள்... ஆடியில் அது தீர்ந்து உணவுக்குத் தடுமாறுவார்கள். பஞ்ச மும் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பஞ்சத்தைத் தீர்க்கவும்தான் இந்த ஆடிமாத வழிபாடு உதவியிருக்கிறது.
அப்போதைய மக்களின் பிரதான உணவு கூழ்தான். அந்தக் கூழ் கிடைக்காமல் பட்டினி சாவுகள் நடக்கும் ஆடி மாதத்தில்... கோயிலில் வைத்துக் கூழ் ஊற்றினார்கள். நாகரிக வளர்ச்சியில் கூழ் என்பது மறக்கடிக்கப்பட்டு, அரிசி உணவான கஞ்சியாக மாறியது. பஞ்ச காலத்தில் கஞ்சித் தொட்டி திறந்து கஞ்சி ஊற்றுவதை நம் தமிழகம் பலமுறை பார்த்திருக்கிறது. அதற்கு அடிப்படைகூட கோயில்களில் கஞ்சி ஊற்றுவதுதான்.


ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த 15 சிறப்புகள்
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

1. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.
2. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருபப்து கூடுதல் பலன் களை தரும்.
3. ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.
4. ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.
5. ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.
Title: Re: ஆடி மாதம்
Post by: தணுஜா on July 29, 2016, 02:05:53 PM
6. அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும்.
7. ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.
8. ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.
9. பெரியபாளையம் கோவிலில் எந்த அம்மன் தலத்திலும் இல்லாத வகையில் 2 மாதங்கள் ஆடி திருவிழா நடைபெறும்.
10. ஆடிப்பூரத் தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத் தன்று ஆண்டாளை நந்த வனத்துக்கு எழுந் தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால், உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.
11. ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும். வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம்.
12.ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.
13. ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.
14. ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணி மாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.
15. பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.



ஆடி மாதம் அம்மனுக்கு பிடித்த வழிபாடுகள்
அம்மனுக்கு பிடித்தது வேப்பிலை மாலை அதை அழகுற அணிவித்து வழிபடுவதும் நடைமுறையில் உள்ளது.

“ஆடி” என்பது புராணங்களில் குறிப்பிடப்படும் ஓர் அசுரனின் பெயர். நினைத்த மாத்திரத்தில் விரும்பிய உருவத்தைப் பெறும் ஆற்றல் கொண்டவன். சிவபெருமான், தம் நெற்றிக் கண்ணைத் திறந்து அவனை அழித்தார். சிவனையடையும் பக்தி ஞானம் அவனுக்கிருந்த காரணத்தால் அன்னை உமாதேவி மனமிரங்கி அவன் நினைவாக மாதங்களில் ஒன்றை “ஆடி” என்று அழைத்தாள். அதுவே அன்னைக்கு ஆராதனை செய்யும் மாதமாக அமைந்தது.
உலகிற்கெல்லாம் தாயான அன்னை பராசக்திக்கு எம்மைக் காத்திட வேண்டி அவள் அருள் பெற ஆடி மாதம் பிறந்ததும் கூழ் காய்ச்சி கொழுக்கட்டை பிடித்து அவித்து அம்மனுக்கு படைப்பார்கள். அம்மன் கோவில்கள் எங்கும் கூழ்காய்ச்சி ஊற்றுவார்கள். காற்றாலும் வெப்பத்தாலும் ஏற்படும் நோய்களை குணப்படுத்த அந்த முத்துமாரி அம்மன் மனது வைக்க வேண்டும் என்று வேண்டுதல் பண்ணுவர். வேப்பிலைமாலை சாற்றுதலும் எலுமிச்சைக்கனி மாலை சாற்றி வெப்பு நோய் தீர்க்க வழிபடுவதும் காலகாலமாய் நடைபெற்று வரும் வழக்கமாகும்.
எலுமிச்சைசாறு, கரும்பு, இளநீர், பால், தயிர், சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து அம்மனை குளிரச்செய்வர். பட்டுபாவாடை உடுத்தி பூமாலை சூட்டி அழகுபடுத்துவர். அம்மனுக்கு பிடித்தது வேப்பிலை மாலை அதை அழகுற அணிவித்து வழிபடுவதும் நடைமுறையில் உள்ளது.
தயிர்சாதம், எலுமிச்சைசாதம், கூழ் கஞ்சி போன்றவைகள படையல் இட்டு அன்னபூரணி எமக்கு என்றும் குறைவில்லாத வாழ்வை வளமுடன் தந்திட நிவேதனம் செய்து பழங்கள், வெற்றிலை, பாக்கு, தேங்காய், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றையும் சேர்த்து படைத்து தூபம் தீபம் காட்டி பூச்சொரிந்து பூமலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய வேண்டும்.



பெண்கள் கடைபிடிக்கும் ஆடிமாத பராசக்தி விரதம்
ஆகஸ்டு மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று மேற்கொள்ளும் பராசக்தி விரதம் என்று பெயர். இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் முறையை பற்றி பார்க்கலாம்.


உலகநாயகியான அம்பிகையை ஆடி மாதம் வழிபடுவது சிறப்பு. ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். ஆகஸ்டு மாதத்தின் கடைசி செவ்வாயன்று மேற்கொள்வது பராசக்தி விரதம்.
பெண்கள் மேற்கொள்ளும் இந்த விரதத்தால் எண்ணியதுநிறைவேறும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். இந்த விரதத்தை அதிகாலை ஐந்து மணிக்கே தொடங்க வேண்டும். முதலில் விநாயகருக்கு பூஜை செய்ய வேண்டும். பார்வதியின் அம்சமான மீனாட்சி, காமாட்சி அம்மன் படங்களை சிவப்பு நிற மலர்களால் அலங்கரித்து விளக்கேற்ற வேண்டும்.
பால், பழம், வெற்றிலை பாக்கு, இளநீர், இனிப்பு படைக்க வேண்டும். விரதம் அனுஷ்டிப்பவர்கள், மதியம் ஒருவருக்காவது அன்னதானம் செய்வது அவசியம். இரவில் கோவிலுக்குச் சென்று அம்மன் சந்நிதியில் தீபமேற்றி வழிபடுவது அவசியம்.

சகல சௌபாக்கியங்களையும் தரும் ஆடி வெள்ளி விரத வழிபாடு

அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் தனிச்சிறப்பு கொண்டவை. அம்மன் ஆலயங்களில் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடும், அலங்காரமும் எப்போதும் நடைபெறுவது வழக்கம். அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் தனிச்சிறப்பு கொண்டவை. சுக்கிர பலம் பொருந்திய வெள்ளிக்கிழமைகளில் அனைத்து அம்மன்களையும், மகாலட்சுமியையும் வணங்கும்போது மாங்கல்ய பலம், செல்வ செழிப்பு, குடும்ப நன்மை கிடைக்கின்றது. எனவே, பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வணங்கி வழிபடுகின்றனர்.
சகல சௌபாக்கியங்களையும் அள்ளி தரும் ஆடி வெள்ளி வழிபாட்டின் மூலம் சுமங்கலி பெண்களில் கணவர் ஆயுள் கூடும், மணமாகாத பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும். மணமாகி குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். வறுமை நீங்கி செல்வம் தழைத்தோங்கும். ஆடி வெள்ளிக்கிழமைகளில் நமது வீட்டில் அம்மன் வழிபாடு மேற்கொள்வது முதல், விரதமிருந்து காவடி எடுப்பது, பொங்கல் வைப்பது, ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு யாகங்களில் கலந்து கொள்வது போன்றவை நடைபெறும். ஆடி வெள்ளியன்று துர்க்கையம்மனை ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதனால் மணமாகாத கன்னி பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். துன்பம் விலகும். எதிரிகள் தொல்லை ஒழியும்.


கோடி பலன் தரும் ஆடி!

காவிரி பாயும் தஞ்சை போன்ற வளம் நிறைந்த பகுதிகளில் காலம் காலமாக ஆடி பதினெட்டு, ஆடிப் பெருக்காக கொண்டாடப்படுகின்றது. உழவுத்தொழிலுக்கான நீர்வரத்து காவிரியில் தொடங்கிவிடும். காவிரி தோன்றிய இடம் தொடங்கி காவிரி கடலோடு கலக்கும் இடம் வரை நதிக்கரை சார்ந்த ஊர்களில் மிக பெரிய விழாவாக ஆடிப்பெருக்கை கொண்டாடுகின்றார்கள்.
மங்கலம் பெருக வேண்டும் என்று வேண்டி, தாம்பூலம், பூ, காதோலை, கருகமணி போன்றவற்றை ஓடும் ஆற்றில் விட்டு வழிபடுவர். இதனால் கணவன் -மனைவி இருவரும் என்றும் அன்போடு இருப்பர் என்பது நம்பிக்கையாகும். அதோடு காவிரித்தாயை அம்மனாக பாவித்து சித்ரான்ன வகைகளைப் படைத்து வழிபட்ட பின்னர், குடும்பத்திலுள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டு மகிழ்வர்.
ஆடி மாதத்தில் அம்மன் கர்ப்பமாக இருப்பதாக ஐதீகம். அப்போது முளைப்பயிறை வயிற்றில் கட்டிக்கொண்டு அம்மனை வழிபட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும். அம்மனுக்கு செய்ய வேண்டிய வளைகாப்பு, பூச்சூட்டல் போன்ற சடங்குகள் ஆடிப்பூரத்தில் செய்யப்படுகின்றன. இந்த சடங்குகளில் பங்கு கொள்ளும்விதமாக வளையல்கள் வாங்கிக் கொடுக்கலாம். அதோடு கோயிலில் பிரசாதமாகத் தரும் வளையல்களை அணிந்து கொள்வதால் மாங்கல்ய பலம் கூடும்; நன்மக்கட்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். பெரியாழ்வாரின் திருமகளாக துளசிச் செடியின் கீழ் அவதரித்தார் பூமாதேவி. அன்றைய தினம் திருவாடிப்பூர நன்னாள். அந்நாளில் ஆண்டாளை வழிபடுவதால் மனதிற்கினிய மணாளன் கிடைப்பார்.

ஆடியும் பெரியபாளையத்து அம்மனும்
எவ்வளவோ சிகிச்சைகள் செய்தும் தீராத நோய்கள், பெரியபாளையத்து அம்மனுக்கு நேர்ந்து செய்யும் வேப்பஞ்சேலைப் பிரார்த்தனையால் குணமாவதை, இன்றும் நாம் நேரிடையாகக் காணலாம்.


ஆடி மாதம் வந்துவிட்டால் போதும். வெல்லத்தைச் சுற்றி ஈக்கள் மொய்ப்பதைப் போல, பெரிய பாளையத்தைச் சுற்றிக் கும்பல் பொங்கி வழியும். அங்கே, அம்பிகையான பெரியபாளையத்தம்மன் ‘அன்னை பவானி’ என்ற திருநாமத்தில், கிழக்கு முகமாகச் சந்நதி கொண்டு எழுந்தருளி இருக்கிறாள். அதிலும் ஒரு புதுமை! வலதுகையில் சக்கரமும் இடதுகையில் சங்கும் மற்றொரு கையில் வாளும் நான்காவது கையில் அமுதக் கலசமும் கொண்டு அம்பிகை திருக்காட்சி அளிக்கின்றாள். இது, வேறு எங்கும் பார்க்க முடியாத அற்புதமான திருக்கோலம். இப்படி அபூர்வமான திருக்கோலம் கொண்ட பெரியபாளையத்தம்மன் வெளிப்பட்டதிலும் ஓர் அதிசயம் உண்டு.
பெரியபாளையம் ஒரு காலத்தில் எல்லாபுரம் எனப் பெயர் பெற்று இருந்தது. இப்போது அம்மன் கோயில் இருக்கும் இடத்தில், ஒரு சில மரங்கள் மட்டுமே இருந்தன. ஒருநாள், அங்கு வந்த சில வளையல் வியாபாரிகள், ஓய்வெடுப்பதற்காகத் தங்கள் வளையல்களை எல்லாம் தங்கள் தலைமாட்டிலேயே வைத்துக்கொண்டு தூங்கினார்கள். முழித்து எழுந்ததும், அவ்வளவு பேர்களும் அதிர்ந்தார்கள். தலை பக்கத்தில் அவர்கள் வைத்திருந்த வளையல்கள் எல்லாம் தூள் தூளாக நொறுங்கிப் போயிருந்தன.


வியாபாரிகள் எல்லோரும் பயந்துபோய் நடுக்கத்தோடு, சுற்றுமுற்றும் பார்த்தார்கள். அங்கே சுயம்பு (தானாகவே உண்டான) அம்பிகை வடிவம் தெரிந்தது. அதை வியாபாரிகள் ஒரு கடப்பாரையைக் கொண்டு தோண்டிப் பார்த்தார்கள். அப்போது சுயம்பு மேலிருந்து அப்படியே ரத்தம் கொப்பளித்தது.
அன்னை பெரியபாளையத்தம்மன் வெளிப்பட்ட வரலாறு இது. இந்த அன்னைக்கு செய்யப்படும் அபிஷேகத் தீர்த்தம், தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வைக்கும் சக்தி படைத்தது. இத்திருக்கோயிலில், வேப்பஞ்சேலை நேர்த்திக் கடன் என்பது மிகவும் முக்கியமானது. இதன் பின்னணியிலும் ஓர் அற்புதமான வரலாறு உண்டு.
ஒருசமயம், மழை கடுமையாகப் பெய்து கொண்டிருந்தது. காற்றும் கடுமையாக வீசியது. மின்னல் வெளிச்சம் கண்களைக் கூசச் செய்தது. இடி இடித்து அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியது. மீனவப் பெண் ஒருத்திக்கு அந்தச் சூழல் கலக்கத்தை அதிகப்படுத்தியது. அவள் தவித்தாள்; கைகளைக் கூப்பிக் கண்களை மூடினாள்.
‘‘அம்மா! பெரியபாளையத்தம்மா! உன்னை விட்டால் எனக்கு வேறு யார் துணை? என் கணவர் மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குள் போயிருக்கிறார். இந்தப் புயல் மழையில் சிக்காமல், அவர் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும். காப்பாற்று தாயே! அவர் திரும்பியதும் அவர் உடம்பில் வேறு எந்த ஆடையும் இல்லாமல் வேப்பிலை ஆடைக்கட்டி உன்னை வலம்வரச் செய்கிறேன் அம்மா!‘ என்று மனம் உருகி வேண்டினாள்.
தூய்மையான பிரார்த்தனை பலிக்காமல் போகுமா? மீனவப் பெண்ணின் கணவர் நல்லபடியாக வீடு திரும்பினார். அவர் மனைவி, கணவருக்கு வேப்பிலை ஆடை கட்டி அம்மனை வலம்வரச் செய்து, தன் வேண்டுதலை நிறைவேற்றினாள். அன்று முதல், துயரத்தில் அகப்பட்டுத் தவிக்கும் மக்கள், அங்கே வேப்பிலை ஆடை பிரார்த்தனையை மேற்கொள்வது வழக்கத்தில் வந்தது.
ஆடி மாதத்து முதல் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கப்படும் பெரியபாளையத்து அம்மனின் திருவிழா தொடர்ந்து, பதினான்கு வாரங்கள் நடைபெறுகிறது. எவ்வளவோ சிகிச்சைகள் செய்தும் தீராத நோய்கள், பெரியபாளையத்து அம்மனுக்கு நேர்ந்து செய்யும் வேப்பஞ்சேலைப் பிரார்த்தனையால் குணமாவதை, இன்றும் நாம் நேரிடையாகக் காணலாம்; இது சத்தியம்.


பெண்கள் புதுத்தாலி சரடை கட்டி கொள்வது ஏன்?
ஆடி மாதம் 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நதிகளில் நீர்ப்பெருக்கு அதிகரிக்கும்.

ஆடி மாதம் 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நதிகளில் நீர்ப்பெருக்கு அதிகரிக்கும்.
அன்று பெண்கள் தாலி மாற்றி புதுத்தாலி கயிறு அணிவது வழக்கம். திருமணம் ஆகாத பெண்கள் திருமணம் ஆக வேண்டும் என்று அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.
ஆடி மாதம் விவசாயிகளுக்கு உகந்தமாதம். ஆடி பதினெட்டாம் தேதி விவசாயிகள் தங்கள் பணிகளை தொடங்குவர். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் இதனால் தான் உருவானது.
ஆடி பதினெட்டாம் நாள் காவிரியில் புதுவெள்ளம் கரை புரண்டோடும். காவிரியை பெண்ணாகவும், சமுத்திர ராஜனை ஆணாகவும் கருதி, காவிரி பெண் தனது கணவரான சமுத்திரராஜனை அடைவதை காவிரி டெல்டா மக்கள் ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடி வருகிறார்கள். அப்போது காவிரிக்கு மங்கல பொருட்களான மஞ்சள், பனை, ஓலையால் செய்யப்பட்ட காதோலை, கருகு மணி மாலை, வளையல், அரிசி, பழங்கள் ஆகியவற்றை வழங்கி பூஜை செய்வர்.


ஆடிப்பெருக்கன்று ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பட்டு அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்கலப்பொருட்கள் ஆற்றில் விடப்படும். விவசாயிகள் விவசாயம் செழிக்க வேண்டி காவிரிக்கு மலர் தூவி வணங்குவார்கள்.
ஆடிப்பெருக்கின் போது பொங்கி வரும் காவிரி ஆற்றை பெண்கள் கங்காதேவியாக நினைத்து வணங்குவர். ஆறு பெருக்கெடுத்து ஓடுவதை போல் தங்கள் குடும்பமும் அனைத்து நலன்களும் பெற்று சுபிட்சமாக வாழ வேண்டி அவர்கள் திருமாங்கல்ய சரடை மாற்றிக் கொள்வார்கள்.
புதுமணத்தம்பதிகள் அதிகாலையில் காவிரி கரைக்கு சென்று அங்குள்ள அரச மரத்தையும், வேப்ப மரத்தையும் வலம் வந்து வணங்கி மஞ்சள் நூலை கட்டுவர். அரச மரமும், வேப்ப மரமும், சிவசக்தி அம்சமாக கருதப்படுகிறது. அரசமரத்தை விருட்சராஜன் என்றும், வேப்ப மரத்தை விருட்ச ராணி என்றும் அழைப்பர்.
சக்தி வடிவமாக திகழும் வேப்பமரத்தை சுற்றி பெண்கள் மஞ்சள் நூலை கட்டுவார்கள். இவ்வாறு செய்தால் திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் நல்ல கணவர் கிடைப்பார், திருமணம் ஆன பெண்களுக்கு சந்தானலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


மகத்துவம் நிறைந்த ஆடி மாத வெள்ளிக்கிழமை
சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும்.


ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். தேவர்களின் இரவுக் காலமாக இதனைக் கருதுவர். ஆடி மாதத்தை "சக்தி மாதம்' என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக் சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும்.
உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே. வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்களுக்கும் ஆடி மாதம் சிறந்தது. ஆடி மாதம் - அம்பிகைக்கு உகந்த மாதம். மாரியம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம். ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகள் இணைந்தால் அந்நாள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது.
ஆடி மாதம் பண்டிகைகளை அழைக்கும் காலம்' என்பர். மழைக்காலம் தொடங்குவதும் இப்பொழுதுதான். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.
இம்மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள்.
பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து இறைவனை வழிபாடுவார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும்.


பெண்கள் மனக்குறை போக்கும் ஆடிவெள்ளி
அம்மன் கோயில்களில் கோலாகலம்


ஆடி மாதம் என்றாலே தெய்வீகம் கமழும். இதை அம்மன் மாதம், அம்பாள் மாதம் என்று அழைப்பதுண்டு. வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களைகட்டி விடும். ஆடியில் வரும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விசேஷமானவை. அம்பிகை வீற்றிருக்கும் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், பால்குட உற்சவம், பூச்சொரிதல், சந்தனக்காப்பு போன்றவை விமரிசையாக நடைபெறும்.ஆடி செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பாக்கியம் கிட்டும். ஆடி வெள்ளியில் வழிபட்டால், திருமண பாக்கியம் கைகூடும், குழந்தை வரம் கிடைக்கும். அம்பாள் குளிர்ந்த மனத்துடன் வேண்டும் வரங்களை நல்குவாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆடி ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளையும், நேர்த்திக்கடனையும் செலுத்தும் நாளாக கருதப்படுகிறது.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில், துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் கன்னிப்பெண்களுக்கு உடனடியாக திருமணம் நடைபெறும். அன்றைய தினம் விரதம் இருந்து அம்மனை மனம் உருக வழிபட்டால் பெண்களின் மனக்குறை தீரும். வறுமை ஒழிந்து செல்வம் சேரும் என்று ஆன்மிகப் பெரியவர்கள் கூறுகிறார்கள். திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில், பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமாகும். ஆடி கடைசி வெள்ளி தினமான இன்று அகிலாண்டேஸ்வரி தாழம்பூ பாவாடை, மலர்க்கீரிடம், காதுகளில் ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் பொறிக்கப்பட்ட தாடங்கம், கையில் தங்கக்கிளி மற்றும் திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். இன்று அதிகாலை 2 மணிக்கே நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சிறு சிறு பூஜை கால இடைவெளிக்கு பின், தொடர்ந்து நள்ளிரவு வரை இன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். இதேபோல் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் இன்று பக்தர்கள் திரண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக