திங்கள், 3 ஜூலை, 2017

இறைவனுக்கு பிடித்த எண் 7



இறைவனுக்கு  பிடித்த  எண்  7

இறைவனின் படைப்புகளும்  7

இறைவனது     ஆரம்ப     படைப்புகளில்    7 என்ற  எண்ணின் ஆதிக்கமாகவே       அனைத்தும்     தோன்றின.     பிறகு  தான்
ஒரு  சில     வகையில்      எண்ணிக்கையில்         மாற்றங்கள் உருவாயின     என்று      கூறலாம்.

தற்சமயம்     இந்த  7     என்ற      எண்         கேது     கிரகத்திற்கு உரித்தனவாக      அமைக்கப்பட்டுள்ளது.

7     என்ற     எண்களில்      பிறந்தவர்கள்     தெய்வீக   தன்மை நிறைந்தவர்கள்,    அவர்கள்    ஆன்மீகத்தில்  அதிக   ஈடுபாடு நிறைந்தவர்களாக     காணப்படுவர்.    7,     16,      25,        ஆகிய  தேதிகளில்    பிறந்து      அவர்களது       பிறந்த      சாதகத்தில்  கேது    கிரகம்     நல்ல      நிலையில்       காணப் பட்டால் ஆன்மிகம்,    தெய்வீகம்,     சம்பந்தப்   பட்ட     ஈடுபாடுகள் கண்டிப்பாக  அதிகம்    நிறைந்திருக்கும்

7,    16,    25,     ஆகிய      தேதிகளில்      பிறந்து                         பிறந்த     சாதகத்தில்     கேது      கிரகம்      நல்ல     நிலையில் இல்லாதிருந்தால்    அவர்கள்     நாத்திகராக      கடவுள் மறுப்புக் கொள்கை     உடையவராக     வலம்    வருவர்

வீட்டின்  எண்கள்    7     என்ற     கூட்டுத்   தொகை அடிப்படையில்    அமைந்தால்    அந்த      வீடு      எப்போதும்  தெய்வீகம்    மனம்     நிறைந்து     காணப்படும்       அதாவது அவரவர்    பிறந்த     மதத்தில்      அதிக     ஈடுபாடு  உடையவர்களாக     அந்த    வீட்டில்    இருப்பார்கள்   என்பது  உண்மையாகும்.

இறைவனது    படைப்புகளில்     7     என்ற       எண்       எப்படி  ஆதிக்கம்     செலுத்தியது     என்பதை     பார்ப்போம்

 7    கிரகங்கள்          

1,  சூரியன்
                 
2,  சந்திரன்
                 
3,  அங்காரகன்
                 
4,  புதன்
               
5,  குரு

6,  சுக்கிரன்
                 
7,  சனி
                         
           7,கிழமைகள்
 
1,  ஞாயிறு

2,  திங்கள்

3,  செவ்வாய்
 
4,  புதன்

5,  வியாழன்

6,  வெள்ளி

7,  சனி
 
            7, மண்டலங்கள்
   
1,  வாயு

2,  வருணன்

3,  சந்திரன்

4,  சூரியன்

5,  நட்சத்திரம்

6,  அக்னி

7,  திரிசங்கு

            7  ரிஷிகள்
                             
1,  மரிஷி
             
2,  அத்திரி
                     
3,  ஆங்கீரச
                 
4,  புலஸ்தியர்
   
5, பிருகு
               
6,  கிருது
                               
7, வசிஷ்ட

                 7  சிரஞ்சீவியர்கள்

1,  அசுவத்தாமன்

2,  மகாபலி

3,  வியாசன்

4,  அனுமான்

5, விபீஷணன்

6, கிருபாசாரி
                                         
7, பரசுராமன்  

                                                               
             7  பிறவிகள்

1,  தேவர்

2,  மனிதர்

3,  விலங்கு

4, பறவை

5, ஊர்வன

6, நீர் வாழ்வன

7, தாவரம்


               7,கடல்கள்            

1,  உவர் நீர்க் கடல்    

2, நன்னீர்க் கடல்  
     
3, பாற் கடல்    
       
4, தயிர்க் கடல்    
     
5, நெய்க் கடல்  
   
6, கருப்பான்சாறுக் கடல்

7, தேன் கடல்
           
               7,தீவுகள்

1, நாவல் தீவு

2, இறலித்தீவு

3, குசைத்தீவு

4, கிரவுஞ்சத் தீவு

5, புட்கரத் தீவு

6, தெங்குத் தீவு

7, கமுகுத்தீவு
   
                 7,பட்டினங்கள்
   
1, அயோத்தி
 
2, மதுரை

3, மாயை

4, காசி

5, காஞ்சி

6, அவந்தி ( உஜ்ஜயினி )

7, துவாரகை

            7,  நதிகள்          

1, கங்கை

2, யமுனை
       
3, சரசுவதி  

4, நர்மதை
         
5, கோதாவரி
                   
6, காவேரி

7, குமரி  
           

             7,  மாதர்கள்

1,  அபிராமி

2,  மகேஸ்வரி

3, கௌமாரி

4, நாராயணி

5, வராகி

6, இந்திராணி

7, காளி

              7,  ஸ்வரங்கள்

1,        ஸ

2,        ரி

3,        க

4,        ம

5,         ப

6,         த

7,        நி

            7, மேல் உலகங்கள்

1,        பூலோகம்

2,        புவர்லோகம்

3,        சுவர்லோகம்
 
4,        மகரலோகம்
 
5,        ஜனலோகம்
 
6,        தபோலோகம்

7,        சத்தியலோகம்

               7,  கீழ் உலகங்கள்
 
1,        அதலம்

2,        விதலம்

3,        சுதலம்

4,        தராதலம்
 
5,        மகாதலம்

6,        இரசாதலம்

7,        பாதாலம்

              7,  இந்திரன் மேகம்
 
1,        ஆவர்த்தம்

2,        புட்கலா வர்த்தம்

3,        சம்காரித்தம்

4,        காளமுகி

5,        துரோணம்

6,         நீல வருணம்

7,        சம்வர்த்தம்

                     7,  உடற்குறை
 
1,       குறள்   (  குள்ளம் )

2,       செவிடு

3,       மூங்கை  ( ஊமை )

4,        கூன்

5,        குருடு

6,        மருள்   (  பைத்தியம் )

7,        உறுப்பில்லா பிண்டம்

                  7,  உடற் தாது

1,        இரதம்      (  பல்  )

2,        இரத்தம்

3,        சுக்கிலம்  ( இந்திரியம் )

4,        மூளை
 
5,         தசை

6,        எலும்பு

7,        தோல்

              7,  அகத்திணை

1,       கைக்கிளை

2,        குறிஞ்சி

3,        பாலை

4,       முல்லை

5,        மருதம்

6,        நெய்தல்

7,        பெருந்தினை



                 7, மானிடப்பருவம்  ( பெண் )

1,        பேதை               ( 5  வயது  முதல் 7  வயதுக்குள் )

2,        பெதும்மை      ( 8  வயது  முதல் 11  வயதுக்குள் )

3,        மங்கை        ( 12  வயது  முதல் 13  வயதுக்குள் )

4,        மடந்தை     ( 14  வயது  முதல் 19  வயதுக்குள் )

5,        அரிவை     ( 20  வயது  முதல் 25  வயதுக்குள் )

6,       தெரிவை    ( 26  வயது  முதல் 31  வயதுக்குள் )

7,        பேரிளம் பெண்  ( 32  வயது  முதல் 40  வயதுக்குள் )



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக