சனி, 15 ஜூலை, 2017

சதுரகிரியிலுள்ள மகான் ஸ்ரீ கோரக்கரைத் தரிசிக்க ஓர் ஆன்மீகப் பயணம்..!



சதுரகிரியிலுள்ள மகான் ஸ்ரீ கோரக்கரைத் தரிசிக்க ஓர் ஆன்மீகப்  பயணம்..!
                                         
     
               சதுரகிரிமலை மதுரையில் இருந்து கிருஷ்ணன்கோவில் வழியாக வத்திராப் சென்று அங்கிருந்து 10  கிமீ தூரம் சென்றால்  தானிப்பாறையை அடையலாம்.இதுவே சதுரகிரிமலையின் நுழைவாயிலாகும்.இங்கிருந்து 2500 அடி  உயரத்தில் நான்கு புறங்களாலும் மலைகளால் சூழப்பட்டு வட்டமான பள்ளதாக்கினது நடுவில் சுந்தரலிங்கம்,சந்தனலிங்கம்,மகாலிங்கம் என்று மூன்று திருமேனிகளும் பிரதிஷ்டைச் செய்துப்  பூஜை செய்து வருகின்றனர்.இவ்விடமே சதுரகிரியின் மையப்  பகுதியாகும்.
     
                              சதுரகிரியின் பழம்பெருமை
                   
                      சதுரகிரி மகான் ஸ்ரீ கோரக்கர் சித்தர் தவத்தில் ஆழ்ந்திருக்கும் இடமாகும்.சிவன்,விஷ்ணு,பிரம்மா ஆகிய மூவரையும் அன்னை அனுசுயா தேவி குழந்தைகளாக சபித்த இடம் சதுரகிரியாகும் .அந்தரி மகாரிஷியும் அனுசுயாதேவியும் சேர்ந்து யாகம்  செய்து மார்கண்டேயரைப்  பெற்ற இடம்       இந்த சதுரகிரி.மகான் கோரக்கர் மகாரிஷியும் பிரம்மரிஷியும் சேர்ந்து சிரஞ்சீவி தவம் செய்த இடம் இந்த சதுரகிரி.
                     அகத்திய மாமுனிவருக்கு ஈசனின் திருமணக் காட்சி தந்தது இவ்விடமாகும் .அன்னை உமாதேவியார் ஈசனை கடுமையாகப்  பூஜை செய்து அவருடலில் பாதியைப்  பெற்று ஈசன் அர்த்தநாரீஸ்வரர் நிலையை அடைந்த இடம் சதுரகிரி.சித்தர்களுக்கெல்லாம் தலைமைச்  சித்தராக இருந்து ஈசன் வாழ்ந்தது இந்த சதுரகிரி.ராமன் இராவணன் யுத்தத்தின் போது இறந்தவர்களைக் உயிர்பித்தும் சஞ்சீவி மூலிகைச் செடியை ஆஞ்சநேயர் எடுத்து வரும் போது அதிலிருந்து ஒரு பகுதி வீழ்ந்த இடம் சதுரகிரி.
                     எனவே சதுரகிரி ஒரு சுற்றுலா தளமல்ல அது ஒரு பரிகார தளமுமல்ல.பல்லாயிரம்  ஆண்டுகளாகச் சித்தர்கள் சுக்கும உடலில் வாழ்ந்து வரும் ஓர் புண்ணியப்  பூமியாகும்.இந்த வனத்தில் இன்றும்  நமதுப்  புற கண்களுக்குத் தெரியாதப் பல சித்தர்கள் தவம் புரிந்து கொண்டுள்ளார்கள்.                     பல்வேறு மூலிகைகளையும் சித்தர்களையும்தொட்டு வரும்  காற்று நமது உடலிலும் மூச்சினிலும் செல்லும் போது ஓர் ஆதீதமான மாற்றம் நிகழ்கிறது.இந்த மலை எங்கும் இறையருள் நிரம்பி இருக்கின்றது.அங்கு வீசும்  காற்று இறையருள் நிரம்பிய மகான்களின் மூச்சுக்காற்றாகும்.
                   எனவே அவரவர்களின் மனப்பக்குவங்களுக்கு ஏற்ப இறையருளுடன் கூடிய மகானருளும் கிடைக்கும்   என  நம்பப்படுகிறது.எனவே சதுரகிரி இறையருள் நிறைந்த அரியப்  பொக்கிஷமாகும்.இந்துக்களாகப் பிறந்த அனைவரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது சதுரகிரி சென்று வருவது பெரும் பாக்கியமாகும்.
                  இந்த சதுரகிரி மலைக்கு  
 " கைலாசகிரி, இந்திரகிரி, சந்திரகிரி, சூரியகிரி, பிரம்மகிரி, ,குபேரகிரி ,சித்தகிரி,ஏமகிரி,சிவகிரி,சக்திகிரி,உதையகிரி,மேருகிரி "  
எனப்  பன்னிரண்டு பெயர்களுண்டு.மேலும் இந்த மலையில் இருந்து " சந்திர தீர்த்தம்,கௌண்டின்ய தீர்த்தம்,ஆகாயகங்கைத் தீர்த்தம்,மஞ்சலாற்றுத் தீர்த்தம்,பிரம்மத் தீர்த்தம்,பொய்கைத் தீர்த்தம்,நாகசுணைத் தீர்த்தம்,குளிரூட்டித் தீர்த்தம் ",எனப்  பல புண்ணியத் தீர்த்தங்கள் இங்கே உள்ளன.
                 ஆனால் அவற்றிலிருந்து ஒரு சில தீர்த்தங்களின் நிலைகளே அறியப்படுகின்றன.எஞ்சியவைகள் பற்றிய தகவல்கள் பொதுவாகவே அறியாநிலையிலேயே உள்ளது.
                  சதுரகிரியில் மகான்களின் ஆசிரமங்கள்
 

 ஆசிரமங்களிருந்த  இடங்கள்       மகான்களின் பெயர்கள்    

1. தனிப்பாறை மலை                                    அத்தரிமகாரிஷி
2. கைலாசகிரி மலை                                     மச்சமுனிவர்
3. சந்திரகிரி மலை                                          மகான் ஸ்ரீ கோரக்கர்
4.விஷ்ணுகிரி மலை                                     ராமதேவர்
5.மேருகிரி மலை                                           தூர்வாசரிஷி
6.சந்தனமகாலிங்க மலை                          சட்டைமுனிவர்
7.கும்ப மலை                                               அகத்தியமுனிவர்
8.மகேந்திரகிரி மலை                                   போகர் மகாரிஷி
9.சஞ்சீவகிரி மலை                                       புஷாண்ட மகாரிஷி
10.இந்திரகிரி மலை                                       ரோமரிஷி மகாரிஷி
11.இந்திரகிரி மலை                                       யூகிமுனிவர்
12 .சதுரகிரி மலை                                          சுந்தரானந்தர்
13.கைலாசகிரி மலை                                   அழகானந்தர்
14.பிரம்மகிரி மலை                                       பிரம்மமுனிவர்
15.சித்தகிரி மலை                                           காலங்கிநாதர்
16.சத்தகிரி  மலை                                           நந்தீஸ்வரர்
17.சிவகிரி மலை                                             தன்வந்திரி
18.குபேரகிரி மலை                                        குருராஜ ரிஷி
19.சூரியகிரி மலை                                          கொங்கணர்
20.மாஊற்று  தபோவனம்                            உதயகிரி சித்தர்
21.சூரியகிரி மலை                                          பிருஞ்ச ரிஷி
22 .குபேரகிரி மலை                                       ஆகாய கௌனரிஷி
23.சிவகிரி மலை                                             மேகசஞ்சார மகாரிஷி
24.சத்தகிரி மலை                                            தத்துவஞான சித்தர்
25.சத்தகிரி மலை                                            காலமகா ரிஷி
26.இந்திரகிரி மலை                                        வீடண முனிவர்
27.திருகைக்கல் பாறை                                 யாக்கோபு முனிவர்

                   எனவே சித்தர்கள்  ரிஷிகள் முனிவர்கள் அனைவரும் மனிதச் சஞ்சாரம் இல்லாத காடுகளிலும் மலைகளிலும் குகைகளிலும் ஆசிரமங்கள் அமைத்துக் கொண்டு தவம் செய்து வந்ததாக அறிகிறோம்.தமிழ்நாட்டில் தான் அநேகச்  சித்தர்கள் வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது. திருமூலர் தனது நூலில்
" குமரியன்னை தென்திசையில் அரணாக நிற்கிறாள்.காவேரி தென்னாட்டில் தவழ்ந்து செல்கின்றாள் ".
                       வெவ்வேறுவைகயான  ஒன்பது தீர்த்தங்கள் நிறைந்த சதுரகிரி முதலான ஏழுமலைகள் தென்னாட்டில் தான் உள்ளன.தென்னாட்டில்   தவம் செய்த சித்தர்கள்,முனிவர்கள் ,ரிஷிகளிடம் இருந்துத்  தமிழில் வேத,ஆகமமங்கள் பாடல்கள்ப்  பிறந்தன.உயிரின் வடிவம் சிவலிங்கமே  என்றுக்  கண்டு பிடித்தவர்கள் தென்னாட்டுச்  சித்தர்களே  சிவலிங்கத்தை வழிபடும் பொருளாக நிறுவியவர்கள்  ஆவார்கள்.
                     ஆகவே "தென்னாடுடைய  சிவனேப் போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி "  என்ற முழக்கம் ஏற்பட்டது.எனவே உலகில் தென்தமிழ்நாடு உயர்வானது என்று கூறுகிறார் திருமூலர் (பாடல் எண் 2755 ) .எனவே இமயமலைக்கு இணையாக சதுரகிரி தென்கைலாயமாக  விளங்குகிறது.

              சதுரகிரியில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள்

1.தம்பிப்பட்டி மலை அடிவாரத்தில் உள்ள மாஊத்து - சடாதாரி அம்மன் கோவில் .
2.தானிப் பாறை.                                          18.சந்தன மகாலிங்கம் கோவில்
3.ஆசிர்வாத விநாயகர்.                            19.ஆனந்தவல்லி
4.கருப்பசாமி                                                 20.காளிகா பெரும்காடு                                  
5.குதிரைகுத்தி                                              21.காளிகா தீர்த்தம்
6.வழுக்குப் பாறை                                      22.ஜோதிமரம்
7.அத்திபூத்து                                                  23.வனதுர்க்கை
8 .கோணத்தலை வாசல்                         24.தவசிக்குகை
9.கோரக்கர்குகை                                        25.நவகிரக மலை
10.அரிசிப்பாறை                                         26.நெல்லிவனம்
11.காலற்ற நாற்காலிப் பாறை             27.வெள்ளைப்பிள்ளையார்
12.இரட்டைலிங்கம்                                   28 .அடுக்குப்பாறை
13.நாவலூற்று                                              29 .ஐஸ்பாறை
14.பசுகடை                                                     30.மூலிகைவனம்
15.பிலாவடி கருப்பு                                     31.முகரை வீங்கி மரம்
16.மூலிகைக் கினறு                                  32.பெரிய மகாலிங்கம்                  
17.சுந்தரமகாலிங்கம் கோவில்             33.பெரிய கல்திருவோடு
 சதுரகிரியில் மேற்கண்ட  இடங்கள் அவசியம் பார்க்கவேண்டியவைகள்.

  மலையின் உச்சியில் இருந்து பள்ளதாக்கில் பார்க்கும் போது பல வனவிலங்குகள் ( யானை,வினோத குரங்கு,காட்டு கோழி,காட்டு அணில்,போன்ற மிருகங்களை பார்க்கலாம் ).நவராத்திரி,ஆடி அமாவாசை,பௌர்ணமி போன்ற நாட்களில் மக்களது கூட்டம் சட்ட்று அதிகமாகவே  இருக்கும் எனவே பயணம் மெற்கொள்வோர் தமக்கு உகந்த நாட்களில் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

                                                 

 சதுரகிரி மலையில்  பக்தர்களை பாதுகாப்பாக அழைத்து செல்லும்
பைரவர் மகான்கள் உருவத்தில்
இருப்பதாக நம்பப்படுகிறது.இங்கு
நம்மை தொட்டு செல்லும் காற்று
கூட மகான்களின் மூச்சுக்காற்றே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக