புதன், 12 ஜூலை, 2017

நட்சத்திரங்களுக்கான ஒரு வரி பலன்கள்(ராகு கேது பெயர்ச்சி – குருப் பெயர்ச்சி – சனிப் பெயர்ச்சி பலன்கள் அடங்கியது)



நட்சத்திரங்களுக்கான ஒரு வரி பலன்கள்(ராகு கேது பெயர்ச்சி – குருப் பெயர்ச்சி – சனிப் பெயர்ச்சி பலன்கள் அடங்கியது)


அசுபதி
ஆடிக்குப் பிறகு சிறிது நற்பலன். ஆவணியில் மிக நல்ல பலன். மார்கழிக்குப் பிறகு பொற்காலம்.

பரணி
ஆடிக்குப் பிறகு மனம் நிம்மதி பெறும். ஆவணியில் சந்தோஷம் அதிகரிக்கும். மார்கழிப் பிறகு யோகம்.

கிருத்திகை
ஆடிக்குப் பிறகு சிறிது நிம்மதி. ஆவணியில் சுப நிகழ்வு. மார்கழிக்குப் பிறகு மன நிறைவு.

ரோகிணி
ஆடிக்குப் பிறகு சுப நிகழ்வு. ஆவணியில் மன நிறைவு. மார்கழிக்குப் பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி – ஏற்றம்.

மிருகசீரிஷம்
ஆடிக்குப் பிறகு தைரியம் மிளிரும். ஆவணிக்கு பிறகு உடல் நிலையில் கவனம். மார்கழிக்குப் பிறகு அனைத்து விஷயத்திலும் சிரத்தை தேவை.

திருவாதிரை
ஆடிக்குப் பிறகு செல்வம் சேரும், பேச்சில் நிதானம் தேவை. ஆவணிக்கு பிறகு உடல் நிலையில் முன்னேற்றம், சுப நிகழ்ச்சிகளில் இருந்த தடை நீங்கும். மார்கழிக்குப் பிறகு வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.

புனர்பூசம்
ஆடிக்குப் பிறகு தேவைகள் நிறைவேறும். ஆவணிக்கு பிறகு சுப நிகழ்ச்சிகளில் இருந்த தடை நீங்கும். மார்கழிக்குப் பிறகு எந்த விஷயத்திலும் திட்டமிடல் அவசியம்.

பூசம்
ஆடிக்குப் பிறகு தேக்கமடைந்த காரியங்கள் வேகம் பெறும். ஆவணிக்கு பிறகு வீடு மனை வாகன யோகம் ஏற்படும், கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். மார்கழிக்குப் பிறகு அனைத்து விதங்களிலும் நன்மை ஏற்படும்.

ஆயில்யம்
ஆடிக்குப் பிறகு அதிர்ஷ்டம வேகம். ஆவணிக்கு பிறகு வீடு மனை யோகம். மார்கழிக்குப் பிறகு நன்மை.

மகம்
ஆடிக்குப் பிறகு நன்மை. ஆவணிக்கு பிறகு யோகம். மார்கழிக்குப் பிறகு மாற்றம்.

பூரம்
ஆடிக்குப் பிறகு தடைகள் நீங்கும். ஆவணிக்கு பிறகு தைரியம் மிளிரும். மார்கழிக்குப் பிறகு முன்னேற்றம்.

உத்திரம்
ஆடிக்குப் பிறகு நன்மை. ஆவணிக்கு பிறகு மேன்மை. மார்கழிக்குப் பிறகு பொருளாதாரத்தில் முன்னேற்றம்.

ஹஸ்தம்
ஆடிக்குப் பிறகு லாபம் மிகும். ஆவணிக்கு பிறகு பொருளாதார மாற்றம் . மார்கழிக்குப் பிறகு வீடு மனை வாங்குவதற்கான சூழல்.

சித்திரை
ஆடிக்குப் பிறகு தொழிலில் ஏற்றம். ஆவணிக்கு பிறகு சுபநிகழ்வுகளால் மகிழ்ச்சி. மார்கழிக்குப் பிறகு திருமணம், சந்தாண பாக்கியம், வீடு மனை யோகம்.

ஸ்வாதி
ஆடிக்குப் பிறகு மகிழ்ச்சி. ஆவணிக்கு பிறகு மனக்கலக்கம் நீங்கும். மார்கழிக்குப் பிறகு சுப நிகழ்வு, மன நிம்மதி.

விசாகம்
ஆடிக்குப் பிறகு தொழிலில் மாற்றம். ஆவணிக்கு பிறகு சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடை நீங்கும், பொற்காலம். மார்கழிக்குப் பிறகு தைரியம் அதிகரிக்கும்.

அனுஷம்
ஆடிக்குப் பிறகு பொருளாதார ஏற்றம். ஆவணிக்கு பிறகு ஆரோக்கியத்தில் மேம்பாடு. மார்கழிக்குப் பிறகு நிம்ம்ம்ம்ம்ம்மதி.

கேட்டை
ஆடிக்குப் பிறகு பணத் தட்டுப்பாடு நீங்கும். ஆவணிக்கு பிறகு சுப விரையம். மார்கழிக்குப் பிறகு தடைகள் அகலும்.

மூலம்
ஆடிக்குப் பிறகு வாகனங்களில் செல்லும் போது கவனம். ஆவணிக்கு பிறகு லாபம் அதிகரிக்கும் – தொழில் மாற்றம். மார்கழிக்குப் பிறகு சோம்பல் அதிகரிக்கும் – சிறிய விஷயத்திற்கும் திட்டமிடல் அவசியம்.

பூராடம்
ஆடிக்குப் பிறகு பண விஷயங்களில் கவனம் தேவை. ஆவணிக்கு பிறகு உத்தியோக மாற்றம் – உயர்வு. மார்கழிக்குப் பிறகு பணிகளில் தேக்கம் ஏற்படலாம் – எச்சரிக்கை.

உத்திராடம்
ஆடிக்குப் பிறகு முதலீடுகளில் கவனம் தேவை. ஆவணிக்கு பிறகு அரசாங்க அனுகூலம் – லாபம் கிடைக்கும். மார்கழிக்குப் பிறகு பணிகளில் உடல் நலத்தில் கவனம் – காரிய அனுகூலம்.

திருவோணம்
ஆடிக்குப் பிறகு உறவினர்கள் – நண்பர்களிடம் கவனம் தேவை. ஆவணிக்கு பிறகு தொழில் மாற்றம் – ஏற்றம். மார்கழிக்குப் பிறகு திட்டமிட்ட காரியங்களில் தொய்வு – கவனம் தேவை.

அவிட்டம்
ஆடிக்குப் பிறகு தேக்க நிலை மாறும். ஆவணிக்கு பிறகு தொழில் மாற்றம் – பதவி உயர்வு – இட மாற்றம். மார்கழிக்குப் பிறகு அனைத்து விஷயங்களிலும் சிரத்தை அவசியம்.

ஸதயம்
ஆடிக்குப் பிறகு மிகப் பெரிய மாற்றம். ஆவணிக்கு பிறகு ஏற்றம். மார்கழிக்குப் பிறகு பொருளாதார முன்னேற்றம்.

பூரட்டாதி
ஆடிக்குப் பிறகு புத்தியில் தெளிவு. ஆவணிக்கு பிறகு மாற்றம். மார்கழிக்குப் பிறகு தொழில் இருந்த தொய்வு நீங்கும்.

உத்திரட்டாதி
ஆடிக்குப் பிறகு எந்த விஷயத்திலும் திட்டமிடல் அவசியம். ஆவணிக்கு பிறகு பொருளாதார மேம்பாடு. மார்கழிக்குப் பிறகு தொழில் விருத்தி.

ரேவதி
ஆடிக்குப் பிறகு பொறுமை அவசியம். ஆவணிக்கு பிறகு லாபம் அதிகரிக்கும். மார்கழிக்குப் பிறகு செய்தொழிலில் மேன்மை.

எந்த இராசிக்காரர்களுக்கு எந்த திதியன்று கவனம் தேவை?

வளர்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும், தேய்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும் வருகின்றன. இந்தப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் மாதமொரு முறை மாறி மாறி வந்து போகின்றன.

நல்ல காரியங்கள் செய்யவும், சுப காரியங்கள் செய்யவும் திதிகளை பார்க்கின்றனர். ஆனால் இந்த திதிகள் சில இராசிகளை பாதிக்கின்றது. அதன்படி எந்த இராசிக்காரர்கள் எந்த திதியன்று கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.



இராசிகளும் கவனம் கொள்ள வேண்டிய திதிகளும் !

மேஷம் - சஷ்டி

ரிஷபம் - சதுர்த்தி, திரயோதசி

மிதுனம் - பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி

கடகம் - சப்தமி

சிம்மம் - திருதியை, சஷ்டி, நவமி, தசமி, திரயோதசி

கன்னி - பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி

துலாம் - பிரதமை, துவாதசி

விருச்சகம் - நவமி, தசமி

தனுசு - துவிதியை, ஸப்தமி, ஏகாதசி, சதுர்த்தசி

மகரம் - பிரதமை, திருதியை, துவாதசி

கும்பம் - சதுர்த்தி

மீனம் - துவிதியை, ஏகாதசி, சதுர்த்தசி

இந்த வளர்பிறை, தேய்பிறை திதிகளில் மேற்கூறியபடி இராசிக்காரர்கள் கவனமாக செயல்பட வேண்டும். இந்த நாட்களில் மற்றவர்களிடம் பழகும்போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதே போல் பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்வது தேய்பிறை எனப்படும். முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, எனச் சென்று அமாவாசையில் முடியும்.

இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை கிருஷ்ணபட்சம் அல்லது தேய்பிறைத் திதிகள் என அழைக்கப்படும். இவைகள் அனைத்தும் ஜோதிடத்தில் நல்ல நாட்கள் பார்க்க உதவுகின்றன.

வளர்பிறை காலத்தில் குறிப்பிட்ட திதியின் அதிதேவதையை வணங்கிவிட்டு சுப காரியங்களைச் செய்வது விசேஷமாகும். தேய்பிறை காலத்தில் சுபகாரியங்கள் செய்வதானால் பஞ்சமிக்குள் செய்வது உத்தமமாகும். தேய்பிறை பஞ்சமி வரையிலும் வளர்பிறை காலம் போல் பலன் உண்டு என்று கூறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக