செவ்வாய், 27 நவம்பர், 2018

வியாழன், 22 நவம்பர், 2018

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் !


கார்த்திகை தீபம் ஸ்பெஷல் !

#27தீபங்களும்_அதன்_பயன்களும் !

தீபஜோதியே நமோ நம :
சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தன சம்பதா
சத்புத்தி ப்ரகாசாய தீபஜ்யோதிர் நமோநம:

தீபம் ஏற்றுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனசேர்த்தி, நல்லபுத்தி ஆகியவை பெருகும் எனச் சொல்கிறது மேற்காணும்  ஸ்லோகம்.

நம் பாரதத்தின் ஆன்மிகக் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது தீபவழிபாடு. விரிவான வழிபாடுகள் தெரியவில்லை என்றாலும், காலை-மாலை இரண்டு வேளைகளில் தீபம் ஏற்றிவைத்து, அதற்கு நமஸ்காரம் செய்தாலே போதும்; தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் ஸித்திக்கும் என்கின்றன ஞான நூல்கள். அப்படியான தீபத்தைச் சிறப்பிக்கும் மாதம்தான் திருக்கார்த்திகை. இந்த மாதத்தில் திரு விளக்கேற்றி வழிபடுவது அவ்வளவு விசேஷம்.

#தினமும்_27_விளக்குகள்...

கார்த்திகை மாதத்தில், நமது வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டுமாம். அவை எந்தெந்த இடங்கள், எந்தெந்த  இடங்களில்  எத்தனை தீபங்கள்  ஏற்றுவது?   என்பது குறித்து விரிவாக அறிவோமா

#கோலமிடப்பட்ட_வாசலில்: ஐந்து விளக்குகள்

#திண்ணைகளில்: நான்கு விளக்குகள்

#மாடக்குழிகளில்:  இரண்டு விளக்குகள்

#நிலைப்படியில்: இரண்டு விளக்குகள்

#நடைகளில்: இரண்டு விளக்குகள்

#முற்றத்தில்: நான்கு விளக்குகள்

இந்த இடங்களில் எல்லாம் தீபங்கள் ஏற்றிவைப்பதால், நமது இல்லம் லட்சுமி கடாட்சத்தை வரவேற்கத் தயாராகி விடும்; தீய சக்திகள் விலகியோடும்.

#பூஜையறையில்: இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றிவைக்கவேண்டும். இதனால் சர்வமங்கலங்களும் உண்டாகும்.

#சமையல்_அறையில்: ஒரு விளக்கு; அன்ன தோஷம் ஏற்படாது.

#தோட்டம்_முதலான_வெளிப்பகுதிகளில்: யம தீபம் ஏற்றவேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.

#பின்கட்டு_பகுதியில்:நான்கு விளக்குகளை ஏற்றிவைக்க விஷ ஜந்துக்கள் அணுகாது.

ஆனால், அபார்ட்மென்ட் மற்றும் மாடி வீடுகள் அதிகம் உள்ள தற்காலத்தில்,   மேற்சொன்ன முறைப்படி விளக்கு ஏற்ற முடியாது ஆகையால், வசதிக்கு ஏற்ப வீட்டுக்குள்ளேயும் வெளியிலுமாக 27 விளக்குகளை ஏற்றிவைத்து பலன் பெறலாம்.

#தீபத்தின்_வகைகள்

தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் `தீபலட்சுமியே நமோ நம' என்று கூறி வணங்குவது அவசியம். தீபத்தை பலவகையாகச் சொல்லி விளக்குகின்றன ஞானநூல்கள். அவற்றில் சில...

#சித்ர_தீபம்: தரையில் வண்ணப் பொடி களால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது  ஏற்றப்படும் தீபங்கள்.

#மாலா_தீபம்: அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படுவது.

#ஆகாச_தீபம்: வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படுவது, ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், யம பயம் நீங்கும்.

#ஜல_தீபம்: நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபங்கள் ஜல தீபம் ஆகும்.

#நௌகா (படகு) தீபம்: கங்கை  கரையோரங்களில் வாழும் மக்கள், புண்ணிய யாத் திரையாக கங்கைதீரத்துக்குச் செல்பவர் கள், கங்கை நதிக்கு மாலைவேளையில் ஆரத்தி செய்து, வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்து, அதை கங்கையில் மிதக்கவிடுவர். படகு போன்ற வடிவங் களில் தீபங்கள் தயார் செய்தும் மிதக்க விடுவார்கள். இவற்றையே நெளகா தீபங் கள் என்று அழைப்பர். சம்ஸ்கிருதத்தில் `நௌகா' என்றால் `படகு' எனப் பொருள்.

#சர்வ_தீபம்: வீட்டின் அனைத்து பாகங் களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகும்.

#மோட்ச_தீபம்: முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, ஆலய கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படுவது.

#சர்வாலய_தீபம்: கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலைவேளையில் சிவாலயங்களில் ஏற்றப்படுவது. அதாவது, பனை ஓலை களால் கூடுபோல் பெரிதாகச் செய்து, அதற்கு பூஜை செய்து தீபாராதனை காட்டி, கற்பூரத்தின் ஜோதியை அதில் ஏற்றுவது, சர்வாலய தீபம் ஆகும்.

#அகண்ட_தீபம்: மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம்.திருவண்ணாமலை, பழநிமலை, திருப் பரங்குன்றம் முதலான திருத்தலங்களில், அகண்ட தீபத்தைத் தரிசிக்கலாம்.

#லட்ச_தீபம்: ஒரு லட்சம் விளக்குகளால் ஆலயத்தை அலங்கரிப்பது லட்சதீபமாகும்.   திருமயிலை, திருக்கழுக்குன்றம் (12 ஆண்டுகளுக்கு ஒருமுறை) முதலான பல ஆலயங்களில் லட்சதீபம் ஏற்றுவது உண்டு.

#மாவிளக்கு_தீபம்: அம்மன் ஆலயங்களில் நோய் தீர வேண்டிக்கொண்டு மாவிளக்கு ஏற்றுவார்கள். அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டை யாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரி போட்டு ஏற்றுவது மாவிளக்கு ஆகும்.

காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு  கச்சபேஸ்வரர் ஆலயத்தில், கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமை களில், இவ்வகை தீபத்தை தலையில் வைத்துக்கொண்டு ஆலயத்தை வலம் வந்து வழிபடும் வழக்கம் உண்டு. இதை, `#மண்டை_விளக்கு பிரார்த்தனை' என்கிறார்கள்.

#விருட்ச_தீபம்: ஒரு மரத்தைப்போன்று கிளைகளுடன் அடுக்கடுக்காக அமைக்கப் படும் தீப ஸ்தம்பங்களில் விளக்கேற்றும்போது, விருட்சத்தைப் போன்று காட்சித் தரும்.சிதம்பரம், திருவண்ணாமலை, குருவாயூர் ஆலயங்களில் விருட்ச தீபத்தைக் காணலாம்.

தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள் !!

புதன், 21 நவம்பர், 2018

அண்ணாமலை புதூரில் மழைக்காக வித்தியாசமான வேண்டுதல் செய்த சித்தர்


அண்ணாமலை புதூரில் மழைக்காக வித்தியாசமான வேண்டுதல் செய்த சித்தர்

திருவண்ணாமலையில் தான் பெரியசாமி சித்தராக உருமாறினார். பெரியசாமி சித்தரின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

மழைக்காக வித்தியாசமான வேண்டுதல் செய்த சித்தர்
பெரியசாமி சித்தர் வழிபட்ட சிவலிங்கம்
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள குக்கிராமத்தில் தான் பெரியசாமி என்ற சிறுவன் வசித்து வந்தான். அப்போது நம் நாட்டில் வெள்ளையர்கள் ஆதிக்கம் நடந்து கொண்டிருந்தது. பெரியசாமியைத் தவிர அந்த கிராமத்தில் இருந்த அனைவரும் வேறு ஒரு மதத்திற்கு மாறியிருந்தனர். ஏன் பெரியசாமியின் குடும்பத்தினரும் கூட மதம் மாறியிருந்தனர். அவனுடைய வீட்டில் மொத்தம் 7 பிள்ளைகள். அதில் பெரியசாமியின் எண்ணத்தில் மட்டும் ஈசன் இருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தார்.

அனுதினமும் சிவனையே பூஜித்து வந்தான். ஆனால் அவனது வழிபட்டிற்கு வீட்டில் உள்ளவர்களாலேயே இடையூறு ஏற்பட்டதால், அந்தச் சிறுவன் அங்கிருந்து புறப்பட்டு திருவண்ணாமலை சென்றான். அங்கு சிவனை வணங்கி அண்ணாமலையாரே கதி என்று கிடந்தான்.

காலங்கள் பல கழிந்து விட்டன. அவனது வயதும் உயர்ந்து விட்டது. திருவண்ணாமலையில் தான் பெரியசாமி சித்தராக உருமாறினார். அதை அவரது கனவில் தோன்றி சிவபெருமான் உணர்த்தினார். ஒருநாள் இறைவழிபாட்டை முடித்து விட்டு, மடம் ஒன்றில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது கனவில் தோன்றிய ஈசன், ‘என் புகழ் பரப்பி, எனக்கு உனது பிறப்பிடமான தென்தமிழகத்தில் கோவில் ஒன்றைத் எழுப்புவாயாக. அந்தக் கோவில் தென் திருவண்ணாமலை என திகழும்' என்றுரைத்தார்.

விழித்தெழுந்தப் பெரியசாமி சித்தர் திகைத்தார். அவரது எண்ண ஓட்டம் பலவாறாக ஓடியது. ‘நமது ஊரோ வேறு ஒரு மதத்தை தழுவியிருக்கும் பகுதி. அங்கு எப்படி திருவண்ணாமலையை உருவாக்க முடியும்?’ என்று நினைத்தார்.

ஆனால் இறைவனே சொல்லி விட்டார், இனி தடையில்லை என்று மனதை தைரியப்படுத்தினார். ஒரு கார்த்திகை திருநாள் அன்று, தீபம் ஏற்றும் வேளையில் திருவண்ணாமலையே களை கட்டியிருந்தது. அனைவரும் மலையை நோக்கி தீபம் ஏற்றக் கிளம்பினர். இவரும் மலை மீது ஏறி தீபமேற்றலாம் எனச் சென்றார். அப்போது ஒருவர் அவரை தடுத்தார்.

கோபமடைந்த பெரியசாமி சித்தரோ.. ‘நீங்கள் அண்ணா மலையாரின் தீபத்தை மலையில் ஏற்றுகிறீர்கள். நான் தலையிலேயே ஏற்றுகிறேன்' என்று சபதமிட்டார்.

அதன் பிறகு ஒரு நிமிடம் கூட அங்கே நிற்கவில்லை. சிவபெருமானை நோக்கி, ‘பெருமானே! நீ கனவில் கூறியபடி தென்திருவண்ணாமலை அமைக்க என்னோடு வா..' என கூறி, அங்கிருந்து பிடிமண்ணை எடுத்துக்கொண்டார். பின் கோபுரத்தை நோக்கி இரு கைகளையும் தூக்கி வணங்கினார். ‘இறைவா என்னோடு வா. தென்னாட்டு மக்களுக்கு உன் அருளாசியைத் தா' என்று வேண்டியபடி, ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

பல இடங்களில் உள்ள சிவ தலங்களை வணங்கியபடியே சங்கரன்கோவில் வந்தடைந்தார். சங்கர நாரயணரை மனதுருக வேண்டிக்கொண்டு, தான் பிறந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். அங்கு, திருவண்ணாமலையில் இருந்து கொண்டு வந்த பிடி மண்ணை வைத்து சிவ பூஜை செய்யத் தொடங்கினார். அவரது வழிபாட்டிற்கு அவரது சகோதரர்கள் இடையூறு செய்தனர்.

‘இனி இங்கிருப்பது உகந்தது அல்ல’ என நினைத்து, அங்கிருந்து திருவண்ணாமலை பிடி மண்ணுடன் பனவடலி சத்திரம் என்ற ஊருக்கு வந்தார். அங்கேயும் அவரால் சிவ வழிபாட்டை சரியாகத் தொடர முடியவில்லை. அங்கிருந்து மேற்கே 6 கிலோமீட்டர் தொலைவில் அழகான மலையைக் கண்டார். ஆகா.. இது வல்லவோ.. தென் திருவண்ணாமலை என ஆனந்தக் கூத்தாடினார். அம் மலையின் அடிவாரம் அப்போது முத்து கிருஷ்ணாபுரம் என அழைக்கப்பட்டது. முத்துகிருஷ்ணாபுரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்தார். அவ்விடத்தில் பிடி மண்ணை வைத்து வணங்க ஆரம்பித்தார்.

இறைவனிடம் தான் இசைந்தது போலவே இவ்வூரை திருவண்ணாமலையாக்க வேண்டுமே, தன்னை மலை மீது ஏறக் கூடாது என தடுத்தவரிடம், தலையில் தீபம் ஏற்றுவேன் என்று சபதமிட்டோமே.. அதை நிறைவேற்ற வேண்டுமே.. முதலில் இவ்விடம் இறைவனுக்கு முழுவதும் சொந்தமான இடமாகவேண்டும் என்று நினைத்தார்.


பெரியசாமி சித்தர்

அதற்காக அந்த இடத்துக்குச் சொந்தக்காரனமான ஊத்துமலை ஜமீன்தார் இருதாலய மருத்தப்ப தேவரிடம் சென்றார். ‘சிவபெருமானுக்கு கோவில் கட்ட இடம் தரவேண்டும்’ எனக் கேட்டார்.

அவரும் அதற்கு இணங்கி தற்போது கோவில் உள்ள இடத்தைத் தானமாக கொடுத்து விட்டார். அதுவரை முத்துகிருஷ்ணாபுரம் என அழைக்கப்பட்ட அவ்வூர், அதன்பிறகு ‘அண்ணாமலை புதூர்’ என்று அழைக்கப்பட்டது.

தீபத்தைத் தலையில் சுமக்க பெரியசாமி சித்தர், நாள் குறித்தார். திருக்கார்த்திகை தினத்தன்று, தனது தலையில் துளசி மாலையை, சும்மாடு போல் மடக்கிக் கட்டிக் கொண்டார். அதற்குள் மிகப்பெரிய திரியை தயார் செய்து, எண்ணெய் விட்டு தீபம் எரியச் செய்தார். இதை ஊரே அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

‘வெறும் தலையில் சாமியார் தீபம் எரிய விடுகிறார். அத்தீபம் விடிய விடிய எரிகிறது’ என்ற செய்தி காட்டூத்தீ போல அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு பரவியது. இதனால் மக்கள் பெரியசாமி சித்தரை அதிசயத்துடன் காண ஓடோடி வந்தனர். அவருக்கு வேண்டிய உதவிகளை காணிக்கையாகக் கொடுத்தனர். அந்த காணிக்கையை சிவ தொண்டுக்கு சித்தர் பயன்படுத்தினார்.

அவ்வூரில் அண்ணாமலையாருக்கு சிறியக் கோவில் ஒன்றை கட்டினார். அங்கே இறைவனின் ஐம்பொன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தார். அச்சிலை தற்போதும் கர்ப்பக்கிரகத்தில் மூலவர் சிலைக்கு வலப்புறத்தில் உள்ளது. மூலவராகக் கல்லால் ஆன சிவலிங்கமும் காணப்படுகிறது. திருவண்ணாமலையில் சிவனின் பின்புறத்தில் மேற்கு திசையில் மலை காணப்படும். தென் திருவண்ணாமலையான இங்கே சிவனின் முன் புறத்தில் கிழக்கு திசையில் மலை காணப்படுகிறது. இங்குள்ள மலைமீது சப்தக்கன்னிமார் கோவிலும் உள்ளது. தெப்பக்குளமும் இருக்கிறது.

பெரியசாமி சித்தர், சுமார் 3 ஆயிரம் அடி உயரமுள்ள இந்த மலைக்கு தினமும் சென்று விடுவார். அங்குள்ள தெப்பக்குளத்தில் நீராடுவார். அதன் பின் அங்கிருந்து அபிஷேகம் செய்யக் குடத்தில் நீரை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி கோவிலுக்கு வருவார். தினந்தோறும் பெரியசாமி சித்தரின் வழிபாடு மலையில் உள்ள தெப்பக்குள நீரில் தான் நடந்துள்ளது.

ஆரம்பக் காலக்கட்டத்தில் தனியொரு மனிதனாகவே மலைமீது ஏறி கார்த்திகை தீபம் ஏற்றியுள்ளார். மலை மீது தீபம் எரிவதைப் பார்த்த மக்களுக்கு பெரும் ஆச்சரியம். ‘திருவண்ணாமலையில் தீபம் எரிவதைப் போல, நம்மூர் பகுதியிலும் தீபம் எரிகின்றதே’ என்று சுற்றுவட்டார மக்கள் ஆச்சரியப்பட்டனர். மலை மீது தீபம் எரிவது வருடந்தோறும் திருக்கார்த்திகை நாளில் வழக்கமானது. ஒரு முறை மலை மீது எரியும் தீபத்தைப் பார்க்க மறுநாள் காலையில் பொதுமக்கள் சிலர் மலைக்குச் சென்றுள்ளனர். சென்றவர்களுக்கு பெருத்த ஆச்சரியம்.

ஆம்.. தீபம் எரிந்தது மலை மீது அல்ல.. மலையில் அமர்ந்து தவம் இயற்றிக்கொண்டிருந்த பெரியசாமி சித்தரின் தலை மீது. இதைக் கண்டு மக்கள் அனைவரும் பெரியசாமி சித்தரை வணங்கத் தொடங்கினர். அதன்பிறகுதான் ஊரார் ஆதரவு கிடைத்தது.

அடுத்து வந்த வருடங்களில் பெரியசாமி சித்தர், தலையில் ஏற்றிய தீபத்துடன் வீடு வீடாகச் சென்று அருளாசியும் வழங்கி உள்ளார். தீபம் அணைந்து விடாமல் இருக்க ஒவ்வொரு வீட்டிலும் எண்ணெய் ஊற்ற ஆரம்பித்தனர். அப்படி எண்ணெய் ஊற்றினால், அவர்களுக்கு வேண்டிய வரமெல்லாம் கிடைக்கிறது என நம்பிக்கை மக்களுக்கு பிறந்தது.


தென் திருவண்ணாமலை

கொதிக்கும் எண்ணெய் தலை வழியாக அவர் தேகமெல்லாம் வழிந்தோடினாலும், அதனால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லையாம். சித்தர் மீது மிகவும் பாசம் கொண்ட பலர் தங்களது தேவைகளைக் கேட்டறிந்து, அது நிறைவேறியவுடன் அவருக்கு காணிக்கையையும் வழங்கி வந்தனர்.

ஒரு நாள் இப்பகுதியில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் தண்ணீர் இன்றி மக்கள் தவித்தனர். பெரியசாமி சித்தரிடம் வந்து வாக்கு கோரினர். அவர், ‘4 கிலோ மிளகாய் வத்தல் கொண்டு வாருங்கள்' என்றார்.

மக்களும் அதுபோலவே செய்தனர். அவர் அந்த வத்தலை சிவபெருமான் முன்பு பரப்பி வைத்தார். அதன் பின் விரதம் மேற்கொண்டு, வெறும் வயிற்றில் வத்தலை சாப்பிட ஆரம்பித்தார். அனைவரும் திகைத்தனர். வத்தலை வெறும் வயிற்றில் சாப்பிடுகிறாரே.? அய்யோ.. சுவாமிக்கு என்ன ஆச்சு என்று துடித்தனர்.

பெரியசாமி சித்தர், அங்குள்ள ஓடக்கரையில், சூரியன் சுட்டெரிக்கும் மணலில் படுத்து உருண்டார். வத்தல் சாப்பிட்டதால் உடலுக்குள் எரிச்சல், சுட்டெரிக்கும் வெயிலால் உடலுக்கு வெளியிலும் எரிச்சல். சித்தரின் முரட்டுத் தனமான பக்தியின் தவத்தை மெச்சிய வருண பகவான், கண் திறந்தார்.

சுள்ளென்று சுட்டெரித்துக் கொண்டிருந்த பகல் பொழுது வானம், மழையை பொழிந்தது. பெரியசாமி சித்தரின் தேகம் குளிர்ந்தது. ஓடக்கரையில் தண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது. அந்த பூமி மழையால் செழிக்க ஆரம்பித்தது. மக்கள் மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தனர். பெரியசாமி சித்தரின் அருளாசியை நினைத்து பக்திப் பரவசம் கொண்டனர்.

பெரியசாமி சித்தர், ஊர் ஊராக சென்று மக்களிடம் காணிக்கை பிரித்து, சுமார் 75 ஏக்கர் நிலம் வாங்கிக் கோவிலுக்கு எழுதி வைத்தார். அதோடு மட்டுமல்லாமல் கோவிலுக்கு ஒரு கல் மண்டபமும் கட்டினார். தன்னுடைய சொந்த முயற்சியில் தெப்பக்குளம் வெட்டி, கோவிலுக்கு தெப்ப உற்சவமும் நடத்தினார்.

கோவிலை மென்மேலும் உயர்த்த வேண்டும் என நினைத்த அவர், தீபத்தைத் தலையில் எரிய விட்டப் படியே இரவு நேரத்தில் பல ஊருக்கு சென்று காணிக்கை பிரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பக்கத்து கிராமத்தில் திருடர்கள் தொந்தரவு இருந்தக் காலம் கட்டம் அது. பல இடங்களில் இரவு தீ வெட்டி திருடர்கள் கூட்டமாக வந்து ஊரைக் கொள்ளையடித்துச் சென்று விடுவார்கள்.

ஒருநாள் பெரியசாமி சித்தர், தலையில் தீபம் ஏற்றியபடி ஒரு கிராமத்துக்கு காணிக்கை பிரிக்கச் சென்றார். அப்போது அவருடன் அவர் மீது அதிக பக்தி கொண்டவர்கள் சிலரும் சென்றனர். வருவது தீவெட்டி திருடர்கள் என நினைத்து ஊர்மக்கள் தீடீரென்று இவர்களை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து தாக்கவும் ஆரம்பித்து விட்டனர். உடன் வந்தவர்கள் எல்லாம் ஓடி விட்டனர். தலையில் சுடருடன் நின்ற பெரியசாமி சித்தரை, பொதுமக்கள் அனைவரும் திருடர்களின் தலைவன் என்று நினைத்தனர்.

சித்தரை குறிப்பிட்ட ஓரிடத்தில் நிறுத்தினர். 10 கட்டு காய்ந்த ஓலையைக் கொண்டு வந்து, அவரைச் சுற்றிப் போட்டனர். பின்னர் தீயைக் கொளுத்தினர். சித்தர் தப்பித்து சென்று விடக்கூடாது என்று சுற்றி வளைத்து நின்று கொண்டனர். 10 கட்டு ஓலையும் எரிந்து சாம்பலானது.

இப்போது சுற்றி நின்ற பொதுமக்கள் அனைவரும் திகைப்பில் மூழ்கியிருந்தனர். சித்தருக்கு என்ன ஆனது?  
நன்றி  மாலை மலர்.

அண்ணாமலைப் புதூர்



ஆன்மீக அன்பர்களுக்காக இந்த பதிவு :
==================================
நெல்லை மாவட்டத்தில்
பல்வேறு திருக்கோயில்களுக்கும் சென்று
வழிபட்டு வருகின்ற ஆன்மீக அன்பர்கள் கூட
அதிகம் அறிந்திருக்காத
ஒரு திருக்கோயில் இது.

வடக்கே வட காசி போல
தெற்கே தென்காசி என்று
தென்காசி திருக்கோயிலுக்கு
ஒரு சிறப்பு உண்டு.

வடக்கே திருப்பதி போல,
தெற்கே தென்திருப்பதி என்ற புகழ்
மேலத் திருவேங்கட நாதபுரம்
பெருமாள் கோயிலுக்கு உண்டு.

அது போல
வடக்கே திருவண்ணாமலை போல்,
தெற்கே...
ஏதேனும் கோயில் இருக்கிறதா...?

ஆம். அப்படி ஒரு கோயில் இருக்கின்றது.
அந்த திருக்கோயில்
நமது திருநெல்வேலி மாவட்டத்தில்
அண்ணாமலைப் புதூர்
எனும் ஊரில் இருக்கிறது.
இந்த திருக்கோயிலை
தென்திருவண்ணாமலை

அண்ணாமலைப் புதூர் எங்கே இருக்கிறது ?
அதன் விஷேசம் என்ன?...  பார்க்கலாமா...

திருநெல்வேலியிலிருந்து சங்கரன் கோயில் செல்லும் வழியில்
வன்னிக்கோனேந்தல்
என்ற ஊர் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
இந்த ஊா் வன்னிக்கோனேந்தல்லிருந்து சரியாக
4 கி.மீ தொலைவில்
ஒரு " S" வடிவ வளைவு வரும்.
அந்த இடத்தில்
இடதுபுறம் ஒரு சாலை பிரிந்து செல்லும்.
அதனை "மருக்காலங்குளம் விலக்கு"
என்ற இடம் உண்டு
இந்த மருக்காலங்குளம் சாலையில்
8 கி.மீ பயணித்தால்
அண்ணாமலைப்புதூர் என்ற கிராமத்தில்தான் இந்த அக்னிஸ்தலம்
 உள்ளது
இங்குதான் அண்ணாமலையார் ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்தை
தென்திருவண்ணாமலை என்று
அழைப்பதற்கு
பல முக்கிய காரணங்கள் உண்டு.

இந்த கோயில் 200 ஆண்டுகளுக்கு முன்பு

திருவண்ணாமலையிலிருந்து
ஒரு சித்தர் இந்த வட்டாரத்திற்கு
வெள்ளையர்கள் காலத்தில் வந்திருக்கிறார்.
அவர் பெயர் பெரியசாமி.

அவரின் சிறப்பு என்னவென்றால்,
ஓவ்வொரு திருக்கார்த்திகை தினத்தன்றும்
தனது தலையில் துளசி மாலையை "சும்மாடு"
போல் மடக்கி கட்டிக் கொள்வார்.
அதற்குள் எண்ணெய் விட்டு தீபம் எரியவிடுவாா்
இதை ஊரே ஒரு அதியசமாக பார்த்தது
வெறும் தலையில் ஒரு சாமியார் தீபம்
எரிய விடுகிறார் என்பது அந்நாளில்
அனைவரையும் அதிசயம் கொள்ள செய்தது

அவர் சுற்றி திரிந்த பண வடலி சத்திரம் பகுதியில் ,
அப்போது கிறிஸ்துவம் வளர்ந்து கொண்டிருந்ததால்
அவர்களால் இந்த சித்தர் விரட்டப்பட்டு அண்ணாமலைப்புதூர்
பகுதிக்கு வந்திருக்கிறார்.
அப்போது அது ஒரு ஊராக இருக்கவில்லை.
மனித நடமாட்டமே இல்லாத காடாக இருந்திருக்கிறது.

சித்தர் பெரியசாமி இந்த இடத்திற்கு வந்தவுடன்,
இந்த பகுதி திருவண்ணாமலையே போல இருக்கிறதே
என்று ஆச்சரியம் கொண்டு
அங்கேயே அண்ணாமலையாருக்கு
சிறிய கோயில் ஒன்றை கட்டினாா்
அங்கே அவர் வழிபட்ட ஐம்பொன்னாலான
அண்ணாமலையார் சிலை
இன்னமும் கர்ப்பகிரஹத்தில்
மூலவர் சிலைக்கு
வலப்புறத்தில்  உள்ளது.
மூலவராக
கல்லால் ஆன சிவலிங்கம் உள்ளது.

திருவண்ணாமலையில் உள்ளது போலவே
இங்கும் ஒரு பெரிய மலை உள்ளது.
மலையானது
அங்கே
சிவனின் பின்புறத்தில்
மேற்கு திசையில் உள்ளது.
இங்கே
சிவனின் முன் புறத்தில்
கிழக்கு திசையில் உள்ளது.

இங்குள்ள மலைமீது
சப்தகன்னிமார் கோவிலும் உள்ளது.
அங்கே இருப்பதை போலவே
இங்கேயும் தெப்பக்குளம் இருக்கிறது.

இப்படி இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில்
அண்ணாமலையாருக்கு திருக்கோயிலை உருவாக்கிய
சித்தர் பெரியசாமி
ஒவ்வொரு திருக்கார்த்திகை தினத்தன்றும்
மலை மீது தீபம் எரிய விட்டாா்
திருவண்ணாமலையில் தீபம் எரிவதை போல,
நம்மூர் பகுதியிலும் தீபம் எரிகின்றதே என்று ஆச்சரியப்பட்டனா் சுற்றுவட்டார கிராம மக்கள்,
இந்த மலையடிவாரத்தை நோக்கி
மறுநாள் பகல் பொழுதில் வந்து பார்த்தால்,
சித்தர் பெரியசாமியோ தன் தலையில் தீபத்தை
எரியவிட்டு தவக்கோலத்தில் இருப்பாா்

அதிசயத்த கிராம மக்கள்
அவரை வழிபடத் துவங்கினர்.
கொஞ்சம் கொஞ்சமாக கோயிலை சுற்றி குடியேறவும் துவங்கினர்.

திருக்கார்த்திகை நாளன்று தன் தலையில்
தீபமேந்திய சித்தர்,
அந்த தீபத்துடன் வீடு வீடாக சென்று
அருளாசியும் வழங்குவாா்
தீபம் அணைந்து விடாமல் இருக்க
ஒவ்வொரு வீட்டிலும்
எண்ணெய் ஊற்றிக் கொண்டே இருப்பார்கள்
கொதிக்கும் எண்ணெய் தலை வழியாக
அவர் தேகமெல்லாம் வழிந்தோடும்
ஆனாலும் அவருக்கு ஒன்றும் செய்யது

அவரை வழிபட வந்த மக்கள்
அவருக்கு காணிக்கையாக
நவதானியங்களை வழங்குவார்கள்
அவற்றை சித்தர் பெரிய "குலுக்கை" களில்
சேமித்து வைத்திருப்பாா்
அதை  ஒரு குடும்பத்தினர்
திருட முயன்ற போது,
சாமியார்
 "நான் சுமக்கிற நெருப்பை நீ சுமப்பாய் "
என்று சாபம் கொடுத்து விட்டார்.
அந்த குடும்பத்தினர் வழி வழியாக இன்றும்
தங்கள் தலையில் தீபம் ஏந்தி
கார்த்திகை தினத்தின் மறுநாள்
வீதி உலா வருகின்றனர்.

பின்னாட்களில் ஜீவசமாதி அடைந்த
பெரியசாமி சித்தரின் சமாதி
கோயிலை ஒட்டியவாறே அமைந்திருக்கும்

மிகுந்த அருளாட்சி நிறைந்த கோயிலாக
இது நம்பப்படுகின்றது.
ஊர் மக்கள் ஒற்றுமையாக
கார்த்திகை திருவிழாவை வெகு சிறப்பாக
கொண்டாடி வருகின்றனர்.
அந்த ஊரில் மலை மீது ஏற்றப்படும் தீபம்
பல கீ.மீ. அப்பால் இருந்து பார்த்தாலும்
சுடர் விட்டு பிரகாசிப்பதை
நாம் காண முடியும்.

அதே போல் தலையில் தீபம் சுமக்கும் வைபவமும்
ஆண்டு தோறும் நடைபெறுகின்றது.
இந்த திருக்கோயிலுக்கென்று
ஒரு சிறிய தேரும் இருக்கின்றது.
இந்த தேர் ஓடுவது கூட திருக்கார்த்திகை அன்று நள்ளிரவில் தான்.

இவ்வளவு பழமையும்
ஆன்மீக செழுமையும் கொண்ட
இவ்வூரின் புகழ் இதுவரை வெளியுலகம் அறியாதது.
இத்தனைக்கும் இந்த ஊரில்
படித்தவர்களும்,
அரசுத் துறையில் பெரிய அதிகாரிகளாகவும்
பலர் இருந்து வருகின்றனர்.
ஆனாலும் இந்த கோயிலின் சிறப்பு
இன்னும் பல பேருக்கு தெரியாது.
இந்த ஊரின் பெருமைகளை,..
வரலாறுகளை சொல்லும்
சிறிய புத்தகம் கூட கிடையாது.

திருக்கார்த்திகை
தினத்தன்று
திருவண்ணாமலை
எப்படி ஜொலிக்கிறதோ,
அது போல்
தென் திருவண்ணாமலையாகிய
அண்ணாமலைப்புதூரும்
வருங்காலங்களில்
ஜொலிக்க வேண்டுமென்றால்
இந்த செய்தி நிறைய ஆன்மீக மெய்யன்பர்களிடம் போய் சேர வேண்டும்.

செவ்வாய், 20 நவம்பர், 2018

கார்த்திகை தீபத் திருநாள் !


கார்த்திகை தீபத் திருநாள் !

🌟 கார்த்திகை மாத பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் இல்லங்களிலும், கோவில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுவது தீபத் திருநாள் ஆகும்.

🌟 கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு நாள் ஆகும். கார்த்திகை தீபத் திருநாளில் மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்.

*கார்த்திகை தீப கொண்டாட்டம் ஏன்?*

🌟 படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல வருடங்கள் போரிட்டனர். இவர்களின் கர்வத்தை அடக்க எண்ணிய சிவபெருமான் இவர்கள் முன் ஜோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும், முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. ஜோதியின் முடியைக் காண அன்னப்பறவை வடிவம் கொண்டு சதுரமுகப் பிரம்மன் விண்ணுலகம் சுற்றினார். அடியைக்காண திருமால், வராக அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அடிமலரடியைத் தேடினார்.

🌟 அடிமுடி காணமுடியாத பரம்பொருளாக விளங்கினார் எம்பெருமான். அதனால் இருவரும் சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட ஜோதியை எல்லோரும் காணும்படி காட்சியருள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். சிவபெருமான், திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜோதிப்பிழம்பாக காட்சியருளினார். முழுமுதற்கடவுள் சிவபெருமானே என்ற நோக்கில் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

*கார்த்திகை கூம்பு :*

கார்த்திகை தீப விழாவின் முதன்மையான நிகழ்வு சொக்கப்பனை ஏற்றுதல். பனை மரத்தை பூலோக கற்பக விருட்சம் என்றும், பொற்பனை என்றும் சிறப்பிப்பார்கள். அதை அக்னியின் வடிவம் என்பார்கள்.

கார்த்திகை தீப நாளில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன்னுள்ள முற்றத்தில் வெட்டவெளியில் நடுவார்கள். அதை சுற்றி 10 அல்லது 15 அடி உயரத்திற்கு பனை ஓலைகளைக் கொண்டு கூம்பு போன்று அமைப்பார்கள். மாலையில் ஆலயங்களின் உச்சியில் தீபம் ஏற்றியதும், பஞ்ச மூர்த்திகளுக்குத் தீபாராதனை செய்து, கோவிலுக்கு முன்புறம் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கூம்புகளுக்கு முன்பாக எழுந்தருளச் செய்வார்கள். பின்னர், சுவாமிக்கு தீபாராதனை செய்து, அந்தச் சுடரால் இந்த சொக்கப்பனைகளைக் கொளுத்துவர். சுடர் வேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரியும். அந்த ஜோதியை சிவனாகவே எண்ணி வழிபடுவார்கள். இது, அக்னி மய லிங்கமாகும்.

*கார்த்திகை மாத சிறப்பு :*

🌟 கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலையில் வீடுகளிலும், ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்னியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் (யாகத்தீயில் தேவர்களுக்காகப் போடப்படும் சாதம்) அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.

வெள்ளி, 16 நவம்பர், 2018

கார்த்திகை மாத சிறப்புகள்


கார்த்திகை மாத சிறப்புகள்!

மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதிப் பிழம்பாய், சிவபெருமான் காட்சி அளித்த நாள் _ கார்த்திகை பௌர்ணமி!
கடும் தவம் மேற்கொண்ட அன்னை பார்வதிதேவி, கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் இறைவனது இடப் பாகத்தைப் பெற்றாள். அப்படி, ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த தலம் திருவண்ணாமலை என்கிறது அருணாசல புராணம்.
கார்த்திகை மாத (பிருந்தாவன) துவாதசி நாளில், துளசிதேவி மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும், துளசி தளங்களால் மகாவிஷ்ணுவை அர்ச்சித்து வழிபட்டு வந்தால், ஒவ்வொரு துளசி தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டு என்பர். துளசி மாலை அணிபவர்களிடம், மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.
கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்பர்.
மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதிதேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம் என்பர்.
விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.
நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் என்பது அடியார்களது நம்பிக்கை.
தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு, சிவபெருமானது அருளைப் பெற்ற திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம். இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில், அதிகாலை 5:00 முதல் 6:00 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிராகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர். கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம், கள் உண்ட பாவம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.
கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதி காலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன.
வைஷ்ணவக் கோயில்களில், 'பாஞ்சராத்ர தீபம்' என்று கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில், கோயிலுக்கு முன்னே, பனையோலை கொண்டு கூடுகள் அமைக்கப்பட்டு சொக்கப்பனை எரிப்பது வழக்கம்.
ஜோதி வடிவாய் தோன்றிய சொக்கநாதப் பெருமானை நினைவு கூர்ந்தே சிவாலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.
கார்த்திகை பௌர்ணமி விழாவில், ஸ்ரீரங்கத்தில், ஐந்தாவது திருவீதியிலிருந்து ஆள நாடான் திருவீதிக்குச் செல்லும் வழியில்... தெற்கு வாசல் கோபுரம் அருகே பெருமாள் எழுந்தருளுவார். அப்போது அவரது முன்னிலையில், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். பிறகு சந்தன மண்டபத்தில் எழுந்தருளும்போது, பாசுரங்கள் பாடி அரையர் சுவாமிகள் வழிபடுவது வழக்கம். மேலும்... அப்போது, மார்கழி மாதத் திருநாள் விவரத்தை, கடிதமாக எழுதி பெருமாளிடம் சமர்ப்பிப்பார்கள். இதை 'ஸ்ரீமுகம்' என்பர்.
கார்த்திகை மாத அமாவாசை அன்றுதான் திருவிசநல்லூரில்... ஸ்ரீதர ஐயாவாள் திருமடத்தில் உள்ள கிணற்றில் கங்கா தேவி பிரவாகித்தாள். இன்றைக்கும் இந்தக் கிணற்றில் கங்கை பிரவகிப்பதாக நம்பிக்கை. இதில் ஏராளமானோர் நீராடுவர்.
ஈசனின்... ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம், அதோமுகம் ஆகிய ஆறு திருமுகங்களிலிருந்து உருவான தீப்பொறியிலிருந்து ஆறுமுகக் கடவுள் அவதரித்ததும் கார்த்திகை நாளில்தான்!
சென்னை- திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலில், புற்று வடிவான லிங்கத் திருமேனியில் புனுகுத் தைலம் சார்த்தி கவசம் போட்டிருப்பர். கார்த்திகை பௌர்ணமி துவங்கி மூன்று நாட்கள் மட்டும் இங்கு கவசம் இல்லாத ஈசனை தரிசிக்கலாம்.
தேவர்கள் ஆண்டுதோறும் இந்த நன்னாளில், இறைவனை பூஜிப்பதற்கு வருவதாக ஐதீகம். இதையட்டி சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.
திருநெல்வேலி- ஸ்ரீநெல்லையப்பர் கோயிலில், கார்த்திகை தீபத்தன்று 27 நட்சத்திரங்களை மையமாக வைத்து பெரியளவில் தீபாராதனைகள் நடை பெறும். இதை மடக்கு தீபாராதனை என்பர். இந்தத் தலத்தில், அனைத்து நாளிலும் பிரசாதமாக நெல்லிக்கனி வழங்குவது விசேஷம்.
குருவாயூரப்பன் கோயிலில், கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியை ஒட்டி நடத்தப்படும் உற்சவம் தனிச் சிறப்பு வாய்ந்தது. அந்த நாளில், காசி, பத்ரி, சபரிகிரி ஆகிய திருத்தலங்களின் புண்ணிய தீர்த்தங்களின் மகிமையும், கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளும் குருவாயூரில் ஒருங்கே கூடுவதாக ஐதீகம்!

வியாழன், 15 நவம்பர், 2018

செவ்வாய், 13 நவம்பர், 2018

சந்தோஷம் அள்ளித் தரும் சங்கரன்கோவில்!


சந்தோஷம் அள்ளித்  தரும் சங்கரன்கோவில்!

'தெய்வம் வெளிப்பட்டு, தன் வல்லமையை உணர்த்தி அதன் மூலம் மக்களைத் திருத்துவது இதிகாச, புராண காலத்தில் நிகழ்ந் திருக்கலாம். ஆனால்,

இப்போது அப்படியெல்லாம் நடக்காது!’ என்று 
#ஒரு #சிலர்_நினைக்கலாம்.

ஆனால், தெய்வம் ஒருபோதும் தனது  திருவிளையாடலை நிறுத்திய தில்லை. அடியாருக்கு அருள் புரிவதன் மூலம் அது எப்போதும் தன்னை வெளிப்படுத்தவே செய்கிறது. அனுபவத்தால் இதை உணர்ந்தவர்கள், அடுத்த வர்களுக்குச் சொல்கிறார்கள். அனுபவம் பெறத் துடிப்பவர்கள் அதை நம்புகிறார்கள். தெய்வத் தின் அருளை தாங்களும் அனுப விக்கிறார்கள்.

நினைப்பவர்களுக்கும், தன் னைத் தேடி வருபவர்களுக்கும் அருள் மாரி பொழியும் அம்பிகை, 'கோமதி அம்மன்’ என்ற திருநாமத் துடன் எழுந்தருளியுள்ள சங்கரன் கோவில் திருத்தலத்தில் 1944-ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி இது.

ஆடி மாதம். ஆடித் தவசுத் திருவிழாவுக்கு உலகில் உள்ள மொத்தப் பேரும் திரண்டு வந்தது போல, சங்கரன்கோவில் முழுக்க மக்கள் வெள்ளம்!

இரவு நேரம். தெற்கு ரத வீதியில் இருக்கும் தவசு மண்டபத்தில், பல்லக்கில் எழுந் தருளியிருந்தாள் உற்சவ மூர்த்தியான அம்பிகை திருக்கல்யாண அலங்காரத்தில் இருந்ததால், அம் பிகையின் திருமேனி முழுவதும் தங்கமும் வைரமுமாக நகைகள் ஜொலித்தன. அம் பிகையின் அருகில் குப்புசாமி பட்டர் களைப்புடன் உட்கார்ந் திருந்தார்.

சங்கரன் கோவிலுக்கு அருகில் உள்ள அரியூரைச் சார்ந்த கணக்குப் பிள்ளை ஒருவர், பட்டரைப் போல வேடம் அணிந்து பல்லக்கை நெருங்கினார். அவர் அந்தக் கிராமத்து முக்கியஸ்தர். கட்டு மஸ்தான உடல் வாகு கொண்டவர். மனோவசியம் உட் படப் பல வித்தைகள் கற்றவர். அவரைப் பார்த்த எவருக்குமே சந்தேகம் ஏற்பட வில்லை. 'யாரோ, பூஜை செய்யும் பட்டர்’ என்று நினைத்தனர்.

பல்லக்கை நெருங் கிய வேடதாரி, அதில் ஏறி அம்மனின் காதுகளை அலங் கரிக்கும்  வைரத் தோடுகளைக் கழற்றிக் கொண்டு, கும்பலோடு கும்பலாகக் கலந்து மறைந்தார். (அந்தத் தோடுகளின் அன்றைய மதிப்பு பதினாறாயிரம் ரூபாய்.)

அப்போது, அசதியுடன் பல்லக்கில் சாய்ந்திருந்த குப்புசாமி பட்டரை, சுமார் எட்டு வயதுச் சிறுமி ஒருத்தியின் மென்மையான கரங்கள் உலுக்கி எழுப்பின.

அரக்கப் பரக்கக் கண் விழித்து எழுந்த குப்புசாமி பட்டரின் எதிரில் ஒளி மயமாக அந்தக் குழந்தை நின்று கொண்டிருந்தாள். 'என்ன? ஏது?’ என்று கேட்ப தற்கு முன், அவளாகவே பர பரப்புடன், ''மாமா... மாமா... எனது  தோடுகளை ஒருவன் திருடிக் கொண்டு போகி றான். வா, வந்து அவனைப் பிடி!'' என்று அவரின் கைகளைப் பிடித்து இழுத்தாள்.

'ஏதோ நடந்திருக் கிறது!’ என்பதைச் சட்டென்று உணர்ந்த குப்புசாமி பட்டர், மந்திரத்தில் கட்டுண்டவர் போல சிறுமியைப் பின்தொடர்ந்தார். சற்றுத் தூரம் சென்றதும், அந்த வேடதாரியைச் சுட்டிக் காட்டிய சிறுமி, ''அதோ போகிறானே... அவன்தான் எனது தோடுகளைத் திருடியவன்!'' என்றாள்.

#பார்த்தார் பட்டர்.
கட்டுமஸ் தான உடம்போடு ஒருவர் போய்க் கொண்டிருந்தார். ஒல்லியான உடல்வாகு கொண்ட பட்டருக்கு எப்படித்தான் தைரியம் வந்ததோ தெரியவில்லை. விறுவிறுவென்று போய், அந்த வேடதாரியின் மூடிய கையைப் பற்றி இழுத்துக் கடித்தார். வேடதாரி, திமிறினாரே தவிர, எதிர்த்துத் தாக்காமல், பிரமை பிடித்தவர் போல் அப்ப டியே நின்றார்.

அவர் கையைப் பிரித்துப் பார்த்தால், அம்மனின் ஆபரணம் ஜொலித்தது. ''திருடன்! திருடன்!'' என்று கத்தியபடி சிறுமியைப் பார்த்தார் குப்புசாமி பட்டர். #அவள்_மாயமாக_மறைந்து #விட்டிருந்தாள்!

அதற்குள் அங்கிருந்த மக்கள் அந்தத் திருடனைப் பிடித்து அடிக்கத் தொடங்கினர். திருவிழாக் கும்பல். கேட்க வேண்டுமா? ஆளாளுக்கு அடித்தார்கள். ஆனால், வேடதாரியோ, ''அடியுங்கள்... நன்றாக அடி யுங்கள். அப்போதுதான் நான் செய்த பாவம் தீரும்!'' என்று சொன்னாரே தவிர, கலங்கவில்லை. அவரைக் காவல் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். திருட்டுப் போன நகை கிடைத்து விட்டதாலும், பெரிய மனிதர் என்பதாலும் மறு நாளே அவரை விடுதலை செய்தனர்.

அன்னை கோமதியம்மன் நடத்தும் அருள் ஆடல்கள் இன்றும் தொடர்கின்றன. இனி, கோமதியம்மை சங்கரன்கோவில் திருத் தலத்தில் குடிகொண்டது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.

'எது பெரிது?’, 'யார் பெரியவர்?’ - இவை போன்ற விவாதங்களும் விதண்டா வாதங்களும் என்றென்றும் உண்டு. இவற்றால் உண்டான அல்லல்கள் பல. இது கூடாது என்பதற்காகவே கயிலாயத்தில் ஒரு நிகழ்ச்சி அரங்கேறியது.

'சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்ற பேத புத்தி இல்லாமல், இந்த சக்திகள் இரண்டும் ஒன்றே என்பதை நிரூபிக்க வேண்டும்!’ என்று எண்ணினாள் அம்பிகை. தனது எண்ணத்தை சிவபெருமானிடம் கூறி, ''ஸ்வாமி... சங்கரரும் நாராயணரும் பேதம் இல்லா மல் பொருந்தி இருக்கும் திருக் காட்சியைக் காட்டியருள வேண் டும்!'' என வேண்டினாள்.

சிவபெருமான் ஒப்புக் கொண் டார். ''தேவி... உனது எண்ணம் போலவே, ஹரியும் ஹரனும் பேதமில்லாத ஒரே சக்தியே என்று உலகுக்கு உணர்த்த, யாம் சங்கர நாராயணராகக் காட்சி கொடுப்போம். பூலோகத்தில் அகத்திய முனிவன் இருக்கும் பொதிகை மலையின் அருகில் உள்ள புன்னைவனத் தலத்தில், உனக்கு அந்த தரிசனம் கிடைக் கும். மகா சக்தியான நீயும் அங்கே இடம் பெற வேண்டும்!'' என் றார்.

அம்பிகை தொடர்ந்தாள். ''தேவதேவா, சங்கரநாராயண திருக் காட்சிக்காக, ஜீவகோடிகளின் சார்பில் நானே அந்தப் புன்னை வனத்தில் தவம் புரிவேன். எனது தவத்துக்காக தாங்கள் அங்கே எழுந்தருள வேண்டும்!'' என்ற அம்பிகை அங்கிருந்து கிளம்பினாள்.

அங்கிருந்த வேத வல்லுநர் களான ரிஷிகள், தேவ மாதர்கள் யாவரும் அன்னையிடம், ''அம்மா... நீங்கள் செய்யும் தவத்தில் நாங்களும் பங்கு பெற வேண்டும்!'' என வேண்டினர். அம்பிகை அதற்கு ஒப்புக் கொண்டாள்.

''அப்படியே ஆகட்டும். சங்கரநாராயணக் காட்சிக்காக ஸ்வாமி நிச்சயித்திருக்கும் புன்னை வனத்தில், முனிவர்கள் -புன்னை மரங்களாகவும் தேவமாதர்கள்- பசுக் குலமாகவும் தோன்றட்டும். முனிவர்களின் நிழலில்,  தேவலோக மாதர்களின் பணிவிடையில் நான் அங்கு தவம் மேற்கொள்வேன்!'' என்று அருளினாள்.

புன்னை வனம். அம்பிகை தவத்தில் ஆழ்ந்தாள். வேத வல்லுநர்களான முனிவர்கள் புன்னை மரங்களாகித் தங்களது நிழலை பூமியில் பரப்பினர். தேவ மாதர்கள் பசுக் கூட்டமாகத் தோன்றி அன்னையின் தவத்துக்கு உதவினர். பசுக் குலத்தின் பணி விடையை எண்ணி மகிழ்ந்த அம் பிகை, அவற்றின் பெருமையை உலகுக்கு உணர்த்த, 'ஆவுடையாள்’ எனும் திருநாமம் கொண்டாள் (ஆ-பசு). 'கோ’(பசு)க்களின் பெயரை இணைத்து 'கோமதி’ எனும் மற்றொரு திருநாமத்தையும் ஏற்றாள். அம்பிகையின் தவத்தால் அங்கே ஆவினங்களும் பெருமை பெற்றன.

அது மட்டுமா? எந்தத் திருக் காட்சியைக் காண அங்கே அன்னை தவம் செய்தாளோ, அந்தக் காட்சியைக் காணும் பாக் கியத்தை இரு பாம்புகளுக்கும் அளித்து அருள் புரிந்தாள் அம்பிகை. பாம்புகளா?

ஆம். சங்கன், பதுமன் என்று இரு சர்ப்பங்கள்! சங்கன் - சிவ பக்தன். பதுமன் - விஷ்ணு பக்தன். இவர்களுக்கிடையே பெரும் போட்டி. ''சிவன் தான் பெரியவர்!'' என்று சங்கன் சொல்ல, ''இல்லை, விஷ்ணுவே பெரியவர்!'' என்று பதுமன் கூற, இரு வருக்கும் இடையே சண்டை மூண்டது.

இருவரும் முனிவர்கள் பலரைச் சந்தித்துத் தங்க ளுக்கு ஆதரவு தேடினார்கள். அப்போது குருபகவான், ''அறியாமைக் கடலில் மூழ்கிக் கிடக்கும் உங்களுக்கு, ஞான விளக்கம் கிடைக்க வேண்டுமெனில், நீங்கள் புன்னை வனம் செல்லுங்கள். அங்கு உங்களது கேள்விக்கு பதில் கிடைக்கும்!'' என் றார்.

அதன்படி இருவரும் அருள் செழிக்கும் புன்னை வனம் வந்து தவமியற்றினர். அவர்களின் தவம் சங்கரரையும் நாராயணரையும் மகிழச் செய்தது. வீண்வாதம் செய்யும் அவர்களுக்காக மட்டுமல்லாமல், உலகிலுள்ள மற்றவர்களுக்கும் உண்மையை உணர்த்த, பாதித் திருமேனி சங்கரர், பாதித் திருமேனி நாரா யணராகக் கோலம் கொண்டு சங்கரநாராயணராகத் திருக்காட்சி கொடுத்தனர்.

சங்க- பதுமர்கள் விவேகத்தோடு சங்கரநாராயணரின் திருவடிகளில் விழுந்து வணங்கினர். ''தெய்வமே! நாகங்களான எங்களது அறியாமை யைப் போக்கி அருள் புரிந்ததை, என்றென்றும் நினைவு கூரும் வகையில் எங்களது பெயரால் ஓர் அடையாளத்தை உருவாக்கி அருள வேண்டும்!'' என வேண்டினர்.

''அப்படியே ஆகட்டும்!'' என்ற சங்கரநாராயணரின் அருளால், அப்போது உருவானதே, இன்று நாம் சங்கரநாராயணர் திருக் கோயிலில் காணும், 'நாகசுனைத் தீர்த்தம்’. இந்த தீர்த்தம் மாமருந்தாக உள்ளது.

அரன் சொற்படி, தவம் இருந்த அன்னை, கோமதியம்மன் எனும் திருநாமத்துடன் இங்கு அருளாட்சி செய்கிறாள். சங்கரன்கோவில் என்றவுடன்

நம் நினைவுக்கு  வருவது- கோமதி அம்மன்தான்! அன்று அன்னை செய்த தவம், 'ஆடித் தவசு’ என்ற பெயரில் இன்றும் சங்கரன்கோவில் திருத் தலத்தில் பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தி அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. பத்து நாட்கள், திருவிழா நடைபெறும். உத்திராட நட்சத்திரத்தன்று ஆடித் தவசு மண்டபத்தில் கோமதியம்மன் எழுந்தருள்வாள். அன்று மாலை ஐந்தரை மணி அளவில் ஸ்ரீ சங்கர நாராயணர் திருக்காட்சி வைபவம் நடைபெறுகிறது.

திங்கள், 12 நவம்பர், 2018

திருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள்


திருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள்
 
திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை.

1. திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.

2. திருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.

3. திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.

4. மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.

5. மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங்கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்பறை என்றும் ஒரு பெயர் உண்டு.

6. திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.

7. திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.

8. திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.

9. திருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 83-திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

10. திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.

11. மூலவருக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.

12. திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.

13. திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம் மணியடி எனப்படுகிறது. இங்கு நின்று பாலசுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

14. நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் உள்ளது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.

15. திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர். அவர்களது சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.

16. தமிழகத்தில் முதன் முதலில் நாகரீகம் தோன்றிய நகரங்களுள் திருச்செந்தூரும் ஒன்று.

17. முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் அய்யனார்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

18. திருச்செந்தூர் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைபெற்று இருப்பதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.

19. இத்திருத்தலம் மன்னார் வளைகுடாக் கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திருப்பதால், அலைவாய் என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்றும் அடைமொழி சேர்க்கப்பட்டு, ‘திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப்படுகின்றது.

20. இக்கோயிலுக்குச் செல்லும் வழியில், தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இவ்விநாயகரை வணங்கிய பின்னர்தான் முருகப் பெருமானை வணங்கச் செல்ல வேண்டும்.



21. இத்திருக்கோயிலில் பன்னிரு சித்தர்களில் எட்டுச் சித்தர்கள் சமாதியாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது.

22. முருகப்பெருமானின் வெற்றி வேல் மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில், கடற்கரை ஓரமாக உள்ள மாப்பாடு என்ற இடம் ஆகும். இப்பகுதி தற்போது, மணப்பாடு என்று அழைக்கப்படுகின்றது.

23. அலைவாய், திரச்சீரலைவாய், வெற்றி நகர், வியாழ சேத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், திரிபுவளமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகு பட்டி னம், என்றெல்லாம் திருச்செந்தூர் முன்பு அழைக்கப்பட்டது.

24. முருகனின் அறுபடை வீடுகளில் இது 2-வது படை வீடு எனப்படுகிறது. ஆனால் இதுதான் முதல் படை வீடு என்ற குறிப்புகளும் உள்ள.ன

25. முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே முருகனின் தலங்களில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.

26. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகப்பெரிய கோவில் கொண்ட தலம் என்ற சிறப்பும் திருச்செந்தூர் கோவிலுக்கு உண்டு.

27. முருகன் சிவந்த நிறம் உடையவன். அவன் உறைந்துள்ள தலம் என்பதால்தான் இத்தலத்துக்கு செந்தில் என்ற பெயர் ஏற்பட்டது.

28. திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவப்கொழுந்தீசுவரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுருகன் கோவில் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

29. கிறிஸ்தவ மீனவர்கள் திருச்செந்தூர் முருகனை உறவுமுறை சொல்லி அழைக்கிறார்கள். திருச்செந்தூர் கோவில் திருப்பணிகளுக்கு காயல்பட்டினத்தில் வசித்த சீதக்காதி எனும் வள்ளல் நன்கொடை அளித்துள்ளார். எனவே திருச்செந்தூர் முருகன் ஆலயம் சமய ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.

30. அருணகிரி நாதர் தன் பாடல்களில் பல இடங்களில் திருச்செந்தூரை குறிப்பிட்டுள்ளார். அவர் திருச்செந்தூரை மகா புனிதம் தங்கும் செந்தில் என்று போற்றியுள்ளார்.

31. திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.

32. திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.

33. குமரகுருபரர், பகழிக் கூத்தர், ஆதி சங்கரர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட ஏராளமானவர்கள் திருச்செந்தூர் முருகனின் நேரடி அருள் பெற்றனர்.

34. முருகன், மால், ரங்கநாதப் பெருமாள் ஆகிய சைவ, வைணவ மூர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன.

35. செந்திலாண்டவருக்கு ஆறுமுக நயினார் என்றும் பெயர் உள்ளது. திருச்செந்தூர் தாலுகா பகுதியில் வாழும் பலருக்கு நயினார் எனும் பெயர் சூட்டப்பட்டிருப்பதை காணலாம். இசுலாமியரும் நயினார் எனும் பெயர் சூட்டிக் கொண்டுள்ளனர்.

36. வீரபாண்டிய கட்ட பொம்மனும் அவர் மனைவி சக்கம்மாவும் செந்திலாண்டவருக்கு ஏராளமான தங்க நகைகள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

37. மூலவர் தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.

38. முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, «பரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியன இடம் பெறுகின்றன.

39. உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்குவார்கள்.

40. இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர்.



41. சண்முகருக்கு ஆண்டுக்கு 36 திருமுழுக்கு மட்டுமே நடைபெறுகிறது.

சித்திரை, ஐப்பசி, தை    - 3
ஆடி, தை அமாவாசை    - 2
ஆவணி, மாசித் திருவிழா    - 10
ஐப்பசி, பங்குனி திருக்கல்யாணம்    - 2
மாத விசாகம்    - 12
ஆனி தை வருடாபிஷேகம்    - 3
தீபாவளி, மகாசிவராத்திரி    - 4
மொத்தம்         36

42. திருச்செந்தூர் முருகன் கோவிலின் ஆண்டு வருமானம் தற்போது சுமார் ரூ.30 கோடியாக அதிகரித்துள்ளது.

43. திருச்செந்தூர் கோவிலில் தர்ம தரிசனம் எனப்படும் பொது தரிசனம், சிறப்பு தரிசனம் எனப்படும் ரூ.10, ரூ.20 கட்டண தரிசனம், வி.ஐ.பி.க்களுக்கான விரைவு தரிசனம் எனப்படும் ரூ.100, ரூ.250, ரூ.500 கட்டண தரிசனம் ஆகிய 3 வகை தரிசனங்கள் நடைமுறையில் உள்ளன.

44. திருச்செந்தூர் கோவிலுக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

45. இத்தலத்தில் கோவில் வெளிப் பிரகாரங்களில் தூண்களில் கந்த சஷ்டி கவசம் எழுதப்பட்டுள்ளது. அதுபோல உள்பிரகாரங்களில் தல வரலாற்றை கூறும் வரை படங்களை அமைத்துள்ளனர்.

46. திருச்செந்தூரில் உச்சிக்கால பூஜை முடிந்ததும் மணி ஒலிக்கப்பட்ட பிறகே வீரபாண்டிய கட்டபொம்மன் சாப்பிடுவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 250 ஆண்டு பழமையான, அந்த 100 கிலோ எடை கொண்ட அந்த பிரமாண்ட மணி தற்போது ராஜகோபுரம் 9-ம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.

47. சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகன் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார். அதை உணர்த்தும் வகையில் இன்றும் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது. முதல் 6 நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம் நடைபெறும். 7-ம் நாள் முருகன்-தெய்வானை திருமணம் நடைபெறும். அதன் பிறகு 5 நாட்கள் கல்யாண ஊஞ்சல் சேவை நடைபெறும்.

48. திருச்செந்தூரில் கருவறைக்கு எதிரில் இரண்டு மயில்கள் மற்றும் ஒரு நந்தி இருக்கின்றன. அது ஏன் தெரியுமா? முருகனுக்கு ஏற்கனவே ஒரு மயில் வாகனமாக இருந்து வருகிறது. பின்னர் சூரனைப்பிளந்தும், ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவல் கொடியாகவும் ஆனதல்லவா? சூரசம்ஹாரம் முடிந்ததும், ஏற்கனவே இருந்த மயிலோடு, இந்த மயிலும் (சூரன்) சேர்ந்து வந்து செந்தூரில் இரண்டு மயில்களாக நின்றுவிட்டன. சூரசம்ஹாரத்திற்கு முன்புவரை இந்திரனே முருகனுக்கு மயில் வாகனமாக இருந்தான். முருகன் சூரனை வென்றபின் இந்திரனுக்கு தேவலோக தலைமை பதவியை கொடுத்து அனுப்பிவிட்டு, மயிலாக மாறிய சூரனையே தன் வாகனமாகக் கொண்டார்.பஞ்சலிங்ககளை வைத்து முருகன் பூஜை செய்யும் கோலத்தில் சிவனுடன் இருக்கிறார். எனவே, சிவனுக்குரிய நந்தி, மயில்களுடன் சேர்ந்து கருவறைக்கு எதிரே இருக்கிறது.

49. ஆவணி திருவிழாவின்போது முருகப்பெருமான், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.

50. திருச்செந்தூரில் தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்கள். இதற்கு கங்கை பூஜை என்று பெயர்.

51. மூலவருக்கு போற்றிமார், சண்முகருக்கு திரிசுதந்திரர், திருமாலுக்குத் வைணவர்கள், தனித்தனியே 3 இடங்களில் நைவேத்தியம் தயாரிக்கின்றனர்.

52. கோவில் திருப்பணி செய்த துறவிகளில் காசி சுவாமி கி.பி. 1882-ல் வசந்த மண்டபம் கட்டினார். மவுன சாமி 1895-ல் மண்டபத்தை கட்டி முடித்தார். வள்ளிநாயக சுவாமி - கிரிப்பிரகாரத்துக்கு தகரக் கொட்டகை அமைத்தார். ஆறுமுக சுவாமி - கோவிலுக்குள் கருங்கல் தூண்கள் அமை¢த்தார். தேசியமூர்த்தி சுவாமி - ராஜகோபுரத்தை கட்டினார்.

53. திருச்செந்தூர் கோவில் தங்க தேரில் அறுங்கோண வடிவில் அறுபடை வீட்டு முருகன் சிலைகள் உள்ளன.

54. சஷ்டித் தகடுகளில் எழுதப்பட்ட மந்திரம் ஓம் சரவணபவ என்பதாகும்.

55. திருச்செந்தூர் தலத்தில் பழங்காலத்தில் பல மணற் குன்றுகள் முருகனது சிறிய சந்நிதியைச் சூழ்ந்திருக்க வேண்டும். அவற்றுள் பெரிய மணற்குன்று ஒன்றைக் கந்த மாதன பர்வதம் என்ற பெயரால் குறித்திருக்க வேண்டும். நாளடைவில் மணற் குன்றுகள் தேய்ந்து தேய்ந்து பிராகாரங்கள் ஆகியிருக்க வேண்டும். வடக்குப் பக்கத்தில் மணற்குன்றே ஒரு மதிலாக அமைந்திருப்பதை இப்போதும் காணலாம். இம்மணற்குன்றின் தாழ்வரையில்தான் ரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார்.

56. கந்த சஷ்டி என்றால், கந்தவேளுக்குரிய ஆறாவது நாள் என்று பொருள்.

57. மாறாத உடல் அழகும் மாறாத உள்ளத்தழகும் என்றும் இளமை நிலையும் கொண்டருள்பவன் திருமுருகன்.

58. சிவப்பு, கருப்பு, மஞ்சள், நீலம், பச்சை ஐந்து நிறங்கள் கொண்ட வண்ண மயில் ஏறி வருபவன் திருமுருகன்.

59. யோகம், போகம், வேகம் என மூவகை வடிவங்களைக் கொண்டருள்பவன் திருமுருகன்.

60. திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை. இச்சரிதத்தை எழுதுவோரும் படிப்போரும் கேட்போரும் நீங்காத செல்வங்களைப் பெற்று வாழ்ந்திருப்பர் என்று சூதம முனிவர் உரைத்தருளி உள்ளார்.

வியாழன், 8 நவம்பர், 2018

கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு

கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு.

*முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது இந்த சஷ்டி கவசம்.*

பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சிப்பூர்வமானது.

ஒருசமயம் அவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை.

வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார்.

அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது.

ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார்.

திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாமே. என்று எண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார்.

முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார்.

அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது.

சஷ்டியை நோக்க சரவண பவனர்சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்... என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார்...!

அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார்.

6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது, அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது.

கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார்.

அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார். திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்கு தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாது. அவ்வளவு சக்திமிக்க வரிகள் கொண்டது சஷ்டி கவசம்.

பாம்பன் சுவாமிகள்...!

பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார்.

அப்படி ஒரு முறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவசநூலை முருகன் மீது பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவ்வாறு அவர் பாடியதுதான் சண்முக கவசம்.

இந்த சண்முக கவசமும் கந்த சஷ்டி கவசம் போன்று 6 கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி. இது 6 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது.

அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில் தொடங்கி, ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

இதேபோல், முருகப்பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படை வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற முருகப்பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து. ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்றவற்றை குறிக்கும்.

இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான்.

அதனால், நாம் வழக்கமாக பாடும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, மற்ற 5 அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய சுவாமிகள் இயற்றிய சஷ்டி கவசங்களையும் பாராயணம் செய்வது நல்லது.

சஷ்டி கவச பாராயண பலன்கள்..!

ஒருவர் சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது, மனம் வாடாது, குறைவின்றிப் பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம்,

நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள், குழந்தை பாக்கியம் கிட்டும்....! இப்படி பல பலன்கள் கிட்டும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப்பட்டுள்ளது....!

இன்று கந்த சஷ்டி விழா துவக்கம்.

ஒம் சரவணபவ.

புதன், 7 நவம்பர், 2018

சிதம்பர ரகசியம்


சிதம்பர ரகசியம்...
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.

எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனைக் கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்ப்பட்ட அறிவுமிக்கவன்..?

 அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்ப்பட்டது..?

இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..?

 திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களைக் கூறிவரும் வேளையில், அந்தக் கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்குப் பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும்.

 அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.

(1) இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).

(2) பஞ்ச பூதக் கோயில்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம்,

 காற்றைக் குறிக்கும் காலஹஸ்தி ஆலயம்,

 நிலத்தைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது,

இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதைப் போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்தத் துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களைக் குறிக்கின்றது.

((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளைக் கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதைக் குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார்,

அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தைக் குறிப்பதாகும்.

இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சரப் படி" என்று அழைக்கப்படுகின்றது,

அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது.

 "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதைப் போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது.

இந்தக் கனக சபையைத் தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களைக் குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன,
இவை 28 ஆகமங்களையும்,
சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன,
இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளைக் கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளைக் குறிக்கின்றது,
இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாலங்களைக் குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள்,
 9 வகையான சக்தியைக் குறிக்கின்றது.
அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள்,
6 சாஸ்திரங்களையும்,
அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள்,
18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே சாட்சியாக்கியுள்ளது...

வெள்ளி, 2 நவம்பர், 2018

தீபாவளி பூஜை முறை


தீபாவளி பூஜை முறை.

அதிகாலை கங்காஸ்நானம், படபடவென வெடித்துச் சிதறும் பட்டாசுகள், நாவில் உமிழ்நீர் ஊறவைக்கும் பலகாரங்கள், பட்சணங்கள் – இவை மட்டுமல்ல; செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர பூஜையும் தீபாவளியின் ஸ்பெஷல் அடையாளம்! இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம்.

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம். பூஜைக்கான ஏற்பாடுகளை தீபாவளிக்கு முந்தைய நாள் இரவே செய்து முடித்துவிடுவது நல்லது. தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கா ஸ்நானம் செய்த பிறகு, பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும் மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும். லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும். பிறகு, சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழையிலையின் வலது பக்கமாக வைக்க வேண்டும். அவருக்குக் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு, முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம். விநாயகரை வழிபட்ட பிறகு, மகாலட்சுமியின் ஸ்தோத்திரப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். ஆனைமுகனே போற்றி.. விநாயகா போற்றி… அஷ்டலட்சுமியே போற்றி… குபேர லட்சுமியே போற்றி.. தனலட்சுமியே போற்றி.. என, அருள் தரும் தெய்வப் போற்றிகளைச் சொல்லியும் வழிபடலாம். தொடர்ந்து, குபேர ஸ்துதியைச் சொல்லி வழிபட வேண்டும். ஸ்துதி தெரியாதவர்கள், குபேராய நமஹ… தனபதியே நமஹ.. என்று துதித்து, உதிரிப் பூக்களை கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயாசம் ஆகியவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும். தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு. தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும்; கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்; நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

நாணய வழிபாடு:

தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷம்! குபேர பகவானுக்கு உகந்த எண் 5 என்பதால், ஒரு தட்டில் நம் கை நிறைய 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு, அதைத் தட்டில் இருந்து நம் இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அப்போது, அளகாபுரி அரசே போற்றி… என்று துவங்கும் குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபட வேண்டும். 108 போற்றிகளையும் சொல்லி முடிக்கும் வரை தட்டில் உள்ள நாணயங்களை இரு கைகளால் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டிலேயே போடுவதுமாக இருக்க வேண்டும்.

தீபாவளி அன்று குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை. நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்யம் செய்து, தீப தூபம் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை அல்லது இரவு 8 மணி முதல் 9 மணி வரை புதன் ஓரையில் இந்த வழிபாட்டைச் செய்வது சிறப்பு. தீபாவளி அன்று செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர வழிபாட்டை மேற்கொள்வதோடு, அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபடுவதும் சிறப்பு. குபேர பகவான் அரிதாகச் சில கோயில்களில் தனிச் சன்னதிகளில் எழுந்தருளியிருப்பார்.

சென்னை வண்டலூரில் இருந்து திருப்போரூர் செல்லும் சாலையில், வண்டலூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள ரத்னமங்கலத்தில் லட்சுமி குபேரருக்குத் தனிக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தீபாவளி வெகு விசேஷம்!
நரக சதுர்த்தசி: மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியை சிவராத்திரி நாளாக எடுத்துக் கொள்கிறோம். கிருஷ்ணர் ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியன்று, இரவு முழுவதும் விழித்திருந்து அதிகாலை வேளையில் நரகாசுரனைக் கொன்றார். நரகாசுரன் கொல்லப்பட்ட சதுர்த்தசி என்பதால் இவ்வேளை நரக சதுர்த்தசி எனப்படுகிறது. சிவராத்திரி சைவத்திற்கு உரிய நாள். நரக சதுர்த்தசி வைணவத்திற்குரிய நாள். இதனால் சதுர்த்தசி திதிகளில் சிவன், பெருமாள் இருவரையும் வழிபட வேண்டும்.

அருளும் பொருளும் அள்ளித் தரும் அன்னபூர்ணா ஸ்தோத்திரம்: அறியாமை இருளகற்றி பேரின்ப ஒளியேற்றும் உன்னதத் திருநாள் தீபாவளி. இந்த நன்னாள் முதற்கொண்டு வறுமையும் பசிப்பிணியும் விலகி, நம் இல்லமும் உள்ளமும் மகிழ்வுற.. அன்று அன்னபூரணியை மனதார வழிபட வேண்டும். இந்த தேவியின் அருளிருந்தால் நம் வீட்டில் அன்னத்துக்கு பஞ்சம் வராது. அன்னையின் அருளைப் பரிபூரணமாகப் பெற உதவும் அற்புதமான ஒரு ஸ்தோத்திரம் உண்டு.
நித்யானந்தகரீ வராபயகரீ ஸெளந்தர்யரத்னாகரீ
நிர்தூதாகிலகோரபாபநிகரீ ப்ரத்யக்ஷமாகேஸ்வரீ
ப்ராலேயாசலவம்ஸபாவகரீ காஸீபுராதீஸ்வரீ
பிக்ஷõம்தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஸ்வரீ
பொருள் : சாச்வதமான ஆனந்தத்தை உண்டுபண்ணுபவளும் வரத ஹஸ்தத்தையும் அபய ஹஸ்தத்தையும் உடையவளும், அழகுக் கடலாக இருப்பவளும் ஸகலமான பயத்தைத் தரும் பாபக் கூட்டங்களை நாசம் செய்பவளும், சாக்ஷõத் மகேஸ்வரியும், ஹிமாவானுடைய வம்சத்தைப் பரிசுத்தம் செய்பவளும், காசி நகரத்து நாயகியும் பக்தர்களுக்கு கிருபையாகிய ஊன்றுகோலைக் கொடுப்பவளுமான தாயே… அன்னபூரணியே… பிச்சையைக் கொடு.

ஜகத்குரு ஆதிசங்கரர் அருளிய அன்னபூரணா ஸ்தோத்திரத்தின் அற்புதமான பாடல் இது. தீபாவளி நாளில் மட்டுமல்ல, தினமும்கூட இந்த ஸ்தோத்திரத்தைப் பாடி அன்னபூரணியை வழிபடுவது, விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும். அனுதினமும்

கிருஷ்ணரை வழிபடுவோம்:

 தீபாவளித் திருநாளில் நரகாசுரனை அழிக்க காரணமான கிருஷ்ணரை கிருஷ்ணா! முகுந்தா! முராரி! என்று சொல்லி வழிபட வேண்டும். பெருமாளுக்கு முராரி என்ற திருநாமமும் ஒரு அசுரனின் பெயரால் ஏற்பட்டது. நரகாசுரனைக் கொல்ல கிருஷ்ணர் சென்ற போது, நரகாசுரனின் தளபதியான முரன் போருக்கு வந்தான். ஐந்து தலை கொண்ட அசுரன் இவன். அவனை அழிக்க கிருஷ்ணர் சக்ராயுதத்தை ஏவினார். சக்கரம் ஐந்து தலைகளையும் அறுத்தெறிந்தது. முரனைக் கொன்றதால் பெருமாளுக்கு முராரி என்ற பெயர் ஏற்பட்டது.

வளம் தரும் குபேரலட்சுமி:

செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி.தீபாவளியன்றோ, அதற்கு முந்தியநாளோ குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். வடமாநிலங்களில் வியாபாரிகள் லட்சுமிபூஜை செய்வர். தீபாவளி திருநாள் நீங்கலாக வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலை சுக்கிரஓரை நேரம் மற்றும் திரிதியை திதிகளில்,குபேரலட்சுமியை பூஜிப்பது மிகுந்தநன்மை தரும். வேதமந்திரமான ஸ்ரீ சூக்தத்தின் ஏழாம்பாடலில், லட்சுமி குபேரனோடு வீற்றிருந்து செல்வவளம் அருள்வது பற்றி கூறுவதைப் படிக்கலாம்.

அம்மையப்பனின் அருள் கிடைக்கும்:

சிவபக்தரான பிருங்கி என்ற முனிவர், சக்தியாகிய தன்னை நீக்கி சிவனாரை மட்டும் வலம் வந்து வழிபட்டுச் சென்றதால், மனம் கலங்கினாள் உமையவள். சிவன் வேறு சக்தி வேறல்ல என்பதை உலகுக்கு உணர்த்த விரும்பியவள், பூலோகத்தில் கவுதம மகரிஷி ஆசிரமத்தை அடைந்தாள். தனது விருப்பத்தை நிறைவேற்ற கவுதமரிடம் வழி கேட்டாள். அவளுக்கு அருமையான ஒரு விரதபூஜையை உபதேசித்தார் கவுதம மகரிஷி. உமையவளும் வெகு சிரத்தையுடன் அந்த விரத பூஜையைக் கடைப்பிடித்து வழிபட்டாள். இதனால் மகிழ்ந்த ஈசன் அவளுக்குக் காட்சி தந்து, தனது திருமேனியில் இடபாகமும் தந்து அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலித்தார். உமாதேவி கடைப்பிடித்த அந்த விரதம்தான் கேதாரீஸ்வர விரதம். கவுரிதேவியாகிய உமையம்மை போற்றிய விரதம் ஆதலால் கேதார கவுரிவிரதம் என்றும் அழைப்பர். இந்த விரதம் குறித்து பவிஷ்யோத்ர புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. இதை 5 வகையாக அனுஷ்டிப்பார்கள்.

இந்த விரதத்தை புரட்டாசி வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அனுஷ்டிப்பது உத்தமம். புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் மத்திமம். தேய்பிறை அஷ்டமி துவங்கி சதுர்த்தசி வரை 7 நாட்கள் அனுஷ்டிப்பது அதம பட்சம். புரட்டாசி தேய்பிறை சதுர்த்தசியன்று ஒருநாள் மட்டும் அனுஷ்டிப்பது சாமான்ய பட்சம் ஆகும். அதேபோன்று ஐப்பசி தேய்பிறைச் சதுர்த்தசியில் தீபாவளி அன்றும் இந்த விரதபூஜையை அனுஷ்டிப்பது உண்டு. இந்த விரதத்தை சுமங்கலிகளே கடைப்பிடிக்க வேண்டும். முற்காலத்தில், நீர்நிலைகளின் கரைகளில் – ஆலமரத்தடியில் மண்ணால் லிங்கம் அமைத்து பூஜிப்பார்கள். விரத தினத்தன்று விநாயகரை வழிபட்டு, ஆதி ரிஷிகளான பிருங்கி, கவுதம முனிவர்களையும் வணங்கி சிவபூஜையை துவங்குவர். 14 அல்லது 7 என்ற எண்ணிக்கையில் மலர்கள், வில்வ இலைகள் சமர்ப்பித்தும், 21 என்ற எண்ணிக்கையில் பட்சணங்கள் படைத்தும் வழிபடுதல் விசேஷம். பூஜையின் முக்கிய அம்சம் நோன்புச்சரடு. லிங்க மூர்த்தத்தின் முன் வைத்து பூஜிக்கப்படும் நோன்புச்சரடை மூத்த சுமங்கலிகள் மற்றவர்களுக்குக் கட்டிவிட வேண்டும். பிரிந்த தம்பதி ஒன்றுசேர, தாம்பத்தியம் சிறக்க, மாங்கல்ய பலம் பெருக, நினைத்தது நினைத்தபடி நிறைவேற வரம் அருளும் வல்லமை இந்த விரத பூஜைக்கு உண்டு.

இறுதி நேரத்தில்தான் நரகாசுரனுக்கு அவனுடைய பிறப்பு ரகசியம் உணர்த்தப்பட்டது. அதாவது, ஒரு காலத்தில் கடலுக்குள் பூமி மறைக்கப்பட்டிருந்தபோது மகா விஷ்ணு வராக அவதாரம் எடுத்து, கடலுக்குள் புகுந்து பூமியை வெளிக்கொண்டு வந்தார். அச்சமயம் அவருக்கும் பூமாதேவிக்குமான சங்கமத்தில்தான் நரகாசுரன் பிறப்பெடுத்தான்! மகாவிஷ்ணுவின் அவதாரமே கிருஷ்ண பகவான், பூமாதேவியின் அம்சம்தான் சத்யபாமா, இந்த உண்மைகளைத் தன்னுடைய உயிர் பிரியும் தருவாயில் தான் நரகாசுரன் தெரிந்துகொண்டான்.

தன்னுடைய ஜனனத்துக்கு காரணமான பெற்றோர்களாலேயே குறிப்பாக தன்னுடைய தாயின் கையாலேயே நரகாசுரனுக்கு மரணம் என்று விதி அமைப்பு இருந்தது! ஆகவேதான், கிருஷ்ண பகவான் ஒரு மயக்க நாடகத்தை நடத்தி, பூமாதேவியின் அம்சமான சத்யபாமாவின் ஆயுத்தாலேயே நரகாசுரனுக்கு உயிரிழப்பு ஏற்பட்டும்படியாகச் செய்தார்.

கிருஷ்ண பகவானினிடமும், சத்யபாமாவிடமும் பாவ மன்னிப்பு வேண்டிய நரகாசுரன், தன்னுடைய மறைவு நாளை உலகத்தில் உள்ள மக்கள் நினைவு நாளாக மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்று வரம் வேண்டினான். கிருஷ்ண பகவான் அவ்வாறு வரம் அருளியபடிதான், ஐப்பசி மாதம் சதுர்த்தி திதியில் பின்னிரவு கடந்து நரக சதுர்த்தசி ஸ்நானம் செய்து, பொழுது புலர்ந்ததும் தீபாவளி கொண்டாடப்படும் வழக்கம் உண்டாகியது!

கிருஷ்ண பிரான் அவதாரம் செய்தது துவாபர யுகத்தில். அதற்கு முன் யுகமான திரேதா யுகத்திலேயே ராம பிரான் இராவணுடன் போரிட்டு ஜெயித்த நாளே தீபாவளி என்றும் கூறப்படுகிற்து. ஆகவே, அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலை நாட்டப்பட்ட வெற்றித் திரு நாளாகவே தீபாவளி விளங்குகிறது!

1. அளகாபுரி அரசே போற்றி
2. ஆனந்தம் தரும் அருளே போற்றி
3. இன்பவளம் அளிப்பாய் போற்றி
4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
6. ஊக்கம் அளிப்பவனே போற்றி
7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி
8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
11. ஓங்கார பக்தனே போற்றி
12. கருத்தில் நிறைந்தவனே போற்றி
13. கனகராஜனே போற்றி
14. கனகரத்தினமே போற்றி
15. காசு மாலை அணிந்தவனே போற்றி
16. கிந்நரர்கள் தலைவனே போற்றி
17. கீர்த்தி அளிப்பவனே போற்றி
18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
19. குருவாரப் பிரியனே போற்றி
20. குணம் தரும் குபேரா போற்றி
21. குறை தீர்க்கும் குபேரா போற்றி
22. கும்பத்தில் உறைபவனே போற்றி
23. குண்டலம் அணிந்தவனே போற்றி
24. குபேர லோக நாயகனே போற்றி
25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி
27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி
28. கோடி நிதி அளிப்பவனே போற்றி
29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
30. சங்கரர் தோழனே போற்றி
31. சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
32. சமயத்தில் அருள்பவனே போற்றி
33. சத்திய சொரூபனே போற்றி
34. சாந்த சொரூபனே போற்றி
35. சித்ரலேகா பிரியனே போற்றி
36. சித்ரலேகா மணாளனே போற்றி
37. சிந்தையில் உறைபவனே போற்றி
38. சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
39. சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
40. சிவபூஜை பிரியனே போற்றி
41. சிவ பக்த நாயகனே போற்றி
42. சிவ மகா பக்தனே போற்றி
43. சுந்தரர் பிரியனே போற்றி
44. சுந்தர நாயகனே போற்றி
45. சூர்பனகா சகோதரனே போற்றி
46. செந்தாமரைப் பிரியனே போற்றி
47. செல்வ வளம் அளிப்பவனே போற்றி
48. செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
49. சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
50. சொக்கநாதர் பிரியனே போற்றி
51. சௌந்தர்ய ராஜனே போற்றி
52. ஞான குபேரனே போற்றி
53. தனம் அளிக்கும் தயாபரா போற்றி
54. தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
55. திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
56. திருவிழி அழகனே போற்றி
57. திருவுரு அழகனே போற்றி
58. திருவிளக்கில் உறைவாய் போற்றி
59. திருநீறு அணிபவனே போற்றி
60. தீயவை அகற்றுவாய் போற்றி
61. துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
62. தூயமனம் படைத்தவனே போற்றி
63. தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
64. தேவராஜனே போற்றி
65. பதுமநிதி பெற்றவனே போற்றி
66. பரவச நாயகனே போற்றி
67. பச்சை நிறப் பிரியனே போற்றி
68. பவுர்ணமி நாயகனே போற்றி
69. புண்ணிய ஆத்மனே போற்றி
70. புண்ணியம் அளிப்பவனே போற்றி
71. புண்ணிய புத்திரனே போற்றி
72. பொன்னிற முடையோனே போற்றி
73. பொன் நகை அணிபவனே போற்றி
74. புன்னகை அரசே போற்றி
75. பொறுமை கொடுப்பவனே போற்றி
76. போகம்பல அளிப்பவனே போற்றி
77. மங்கல முடையோனே போற்றி
78. மங்களம் அளிப்பவனே போற்றி
79. மங்களத்தில் உறைவாய் போற்றி
80. மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
81. முத்து மாலை அணிபவனே போற்றி
82. மோகன நாயகனே போற்றி
83. வறுமை தீர்ப்பவனே போற்றி
84. வரம் பல அருள்பவனே போற்றி
85. விஜயம் தரும் விவேகனே போற்றி
86. வேதம் போற்றும் வித்தகா போற்றி
87. வைர மாலை அணிபவனே போற்றி
88. வைகுண்டவாசப் பிரியனே போற்றி
89. நடராஜர் பிரியனே போற்றி
90. நவதான்யம் அளிப்பவனே போற்றி
91. நவரத்தினப் பிரியனே போற்றி
92. நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
93. நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
94. வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
95. ராவணன் சோதரனே போற்றி
96. வடதிசை அதிபதியே போற்றி
97. ரிஷி புத்திரனே போற்றி
98. ருத்திரப் பிரியனே போற்றி
99. இருள் நீக்கும் இன்பனே போற்றி
100. வெண்குதிரை வாகனனே போற்றி
101. கைலாயப் பிரியனே போற்றி
102. மனம் விரும்பும் மன்னவனே போற்றி
103. மணிமகுடம் தரித்தவனே போற்றி
104. மாட்சிப் பொருளோனே போற்றி
105. யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
106. யௌவன நாயகனே போற்றி
107. வல்லமை பெற்றவனே போற்றி
108. ரத்தின மங்கலத்தில் உறைந்தானே போற்றி

108 குபேரா போற்றி போற்றி.