வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

கிருஷ்ணர் பற்றிய அரிய தகவல்கள்


கிருஷ்ணர் பற்றிய அரிய தகவல்கள்

கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற ஞாயிற்றுக்கிழமை ( 2ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இன்று கிருஷ்ணர் பற்றி மிகவும் அரிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

கிருஷ்ணர் வாழ்ந்த ஆதாரம் :

குஜராத்திலுள்ள துவாரகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆராய்ச்சியில் மூழ்கிய நகரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது மகாபாரத்திலும் பாகவதத்திலும் கூறப்பட்டுள்ள துவாரகை நகரை ஒத்துள்ளது. மேலும் அங்கே கண்டெடுக்கப்பட்ட சங்குகள், நாணயங்கள் போன்றவை மகாபாரத்தில் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒத்துள்ளன. இதனால் உண்மையிலேயே கிருஷ்ணன் என்ற மன்னன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

பணமில்லாமல் பசுதானம் :

‘கோவிந்தா’ என்று சொன்னால் ‘போனது வராது’ என்று பொருள்படும் இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், ‘பணம்’ கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது. கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை ‘கோ இந்தா’ என்றும் பிரிக்கலாம். அப்போது ‘கோ’ என்றால் ‘பசு’ ‘இந்தா’ என்றால் ‘வாங்கிக்கொள்’ என்று பொருள் வரும். கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம். எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.

துளசி மாலை அணிவது ஏன்? :

கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு. கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியன். எனவே தான், கண்ணன் துளசிமாலை அணிந்து கொள்வான். வீடுகளின் பின்பக்கத்தில் துளசிமாடம் அமைப்பதும் இதனால்தான். பூச்சிகள் நுழையாமல் தடுக்க, வீட்டின் பின்புறத்தில் துளசிமாடம் வைத்து, அதனை வழிபட்டார்கள்.

கோவிந்தா :

வைணவத் தலங்களுக்கு சென்றால் கோவிந்தா என்ற குரல் ஆங்காங்கே எதிரொலிப்பதை கேட்கலாம். கோவிந்தா என்ற சொல்லுக்கு ‘பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்’, ‘பூமியை தாங்குபவன்’ என்று பொருளாகும்.
எனவே தான் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்கிறார்கள். வழிபாடு செய்யும் போது, கோவிந்தா என்று அழைத்து வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

விஷ்ணுகிராந்தி :

வயல்வெளிகள், ஆற்றங்கரைகளில் குப்பையோடு குப்பையாக வளரும் ஒரு வகைச்செடி ‘விஷ்ணுகிராந்தி’ இதன் பூக்கள் பெருமாளின் கையிலுள்ள சக்கரம் போல இருக்கும். இதில் பெருமாள் இருப்பதாக நம்பிக்கை, இந்த பூவை தாயத்தில் சேர்த்து கட்டிக்கொண்டால் உடல்பலம் மற்றும் தைரியம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

பஜகோவிந்தம் :

கிருஷ்ணரை வழிபடும் போது மறக்காமல் பஜகோவிந்தம் பாட வேண்டும். ஆதி சங்கரர் சென்ற இடங்களில் எல்லாம் ‘பஜகோவிந்தம்’ பாடுங்கள் என்பதை வலியுறுத்தி கூறினார். பஜகோவிந்தம் பாடினால் மரண பயம் நீங்கும் என்பது ஐதீகமாகும்.

கண்ணனின் ஆபரணங்கள் :

பெருமாள் சிலையை ‘திவ்ய மங்கள விக்ரகம்’ என்பர். அவரது திருமுடியில் அணியும் ஆபரணத்தின் பெயர் ‘திருவபிடேகம்’ எனப்படும். திருப்பாதத்தில் அணியும் ஆபரணத்திற்கு, ‘நூபுரம்’ என்று பெயர்.பெருமாளை முதலில் திருவடியை தரிசித்தபின்«ப, திருமுகத்தை தரிசனம் செய்ய வேண்டும்.

திரிபங்கி தோற்றம் :

கண்ணனின் நிற்கும் தோற்றத்தில் மூன்று வளைவுகளைத் தரிசிக்கலாம். இதற்கு ‘திரிபங்கி’ என்று பெயர். ஒரு திருவடியை நேரே வைத்து, மறு திருவடியை மாற்றி வைத்திருப்பது ஓர் வளைவு! இடுப்பை வளைத்து நிற்பது மற்றொன்று! கழுத்தைச் சாய்த்து கோவிந்தன் குழல் கொண்டு ஊதுவது மூன்றாவது வளைவு! இப்படி நிற்பதனால் கிருஷ்ணனை ‘திரிபங்கி லலிதாகாரன்’ என்று வடமொழித் தோத்திரங்கள் போற்றுகின்றன.
இந்த மூன்று வளைவுகளும் அறம், பொருள், இன்பத்தைக் குறிக்கின்றன.

16 ஆயிரம் மனைவிகள் :

ருக்மணிதான் கிருஷ்ணனின் பட்டத்து ராணி. மற்ற ஏழு முக்கிய ராணிகள் சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ராவிந்தா, சத்டயா, பத்ரா மற்றும் லட்சுமணா. இந்த 8 ராணிகளும் 8 பகுதிகளை கொண்ட ப்ரக்ருதியை குறிக்கின்றனர். பஞ்சபூதங்கள், மனம், புத்தி, அகம் ஆகியவையே ப்ரக்ருதியின் 8 பகுதிகள். இதன் உள்ளர்த்தம், 8 பகுதிகளும் கிருஷ்ணனுக்கு அடங்கியவை என்பது. கிருஷ்ணன், நரகாசூரனை வென்று 16,000 இளவரசிகளை மீட்டு அவர்களுக்கு சமுதாய அந்தஸ்து கொடுக்க அவர்களை திருமணம் செய்து கொண்டான். அந்த 16,000 இளவரசிகள் நம் உடலில் உள்ள 16,000 நாடி நரம்புகளைக் குறிக்கின்றனர்.

கோபியர் சேலைகளைக் கவர்தல் :

ஆயர்பாடியில் உள்ள கோபியர் கண்ணபிரானிடம் கொண்ட வேட்கை மிகுதியால் அவன் தம்மைக் காதலிக்க வேண்டி நோன்பு நோற்றனர். முடிவில் யமுனையில் நீராடச் சென்றனர். அங்கே அவர்கள் வழக்கப்படி சேலைகளைக் கரையில் வைத்து விட்டு நீராடினர். கண்ணன் அந்த ஆடைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறிக் கொண்டான். சிறிது நேரம் அவர்களை அலைக்கழித்தான். பின்பு அவர்கள் கைகூப்பி வணங்கிக் கேட்க, அவ்வாடைகளைத் திருப்பித் தந்தான்.

மயில் இறகு :

கிருஷ்ணனின் படங்களில் அவர் தலையில் மயில் இறகு சூடப்பட்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள். இதில் ஒரு தத்துவம் உள்ளது.
“கண்ணனின் தலையில் உள்ள மயில் இறகு, சக்தி தத்துவத்தைக் குறிக்கின்றது’ என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர். கண்ணனின் சக்தியே ‘ராதை’ ஆவாள். அவளைத் தலை மீது வைத்துத் தான் கொண்டாடுவதையே மயில் இறகு மூலமாக அறிவிக்கின்றான் மாதவன்.

முகுந்தா... முகுந்தா :

“மு” என்றால் முக்தியை அருள்வது என்று பொருள். “கு” என்றால் இவ்வுலக இன்பங்களை அருள்வது. இவ்வூலகில் வாழ்வதற்கும், முக்தியை பெறுவதற்கும் கிருஷ்ணரே மூலவர் என்ற பொருளின் அடிப்படையில்தான் “முகுந்தா” என்று அழைக்கிறோம்.

சிறுவர்களுக்கு கிடைக்கும் நன்மை :

கிருஷ்ண ஜெயந்தி பூஜை மற்றும் வழிபாடுகளில் சிறுவர், சிறுமிகளை மறக்காமல் ஈடுபடுத்த வேண்டும். அவர்கள் கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்தசாலித்தனம் கூடும். அதோடு பாடங்களை எளிமையாகவும், சுருக்கமாகவும் புரிந்து கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.

முதல் உறியடி திருவிழா :

கிருஷ்ண பக்தரான நாராயண தீர்த்தர் ஒரு முறை கடுமையான வயிற்று வலியோடு தல யாத்திரை மேற்கொண்டிருந்தார். அவர், வரகூரை அடைந்து, அங்கிருந்த வெங்கடேச பெருமாளை வழிபட்டதுமே அவருடைய வயிற்று வலி மாயமானதாம். இறைவனின் கருணையைப் போற்றி அவர் இயற்றிய இசைக் காவியம்தான் கிருஷ்ண லீலா தரங்கிணி. இந்தக் காவியத்துக்கு கோவிலில் இருந்த ஆஞ்சநேயர் தாளம்போட்டதாகவும், திரைக்குப் பின்னால் பெருமாள் நடனம் ஆடியதாகவும் சொல்லப்படுகிறது. இங்குதான் முதன் முதலாக உறியடி உற்சவத்தை நாராயண தீர்த்தர் தொடங்கி வைத்ததாகவும் சொல்வார்கள்.

சீடை, முறுக்கு ஏன்? :

பல்கூட முளைக்காத பாலகிருஷ்ணனுக்கு கடிக்கக் கடினமாக உள்ள சீடை, முறுக்குகளை நிவேதனம் செய்வதில் ஆழ்ந்த உட்பொருள் உண்டு. குழந்தையாக இருந்தபோதே பூதனை, சகடாசுரன், தேனுகாசுரன் போன்ற பல அசுரர்களைக் கொன்று உய்வித்தவன் கிருஷ்ணன். அப்படிப்பட்ட விசேஷ ஆற்றல் உடைய குழந்தை என்பதாலேயே, அவன் பிறந்த நாளில் சீடை, முறுக்கு போன்றவற்றை நிவேதனம் செய்கின்றோம்.

வசீகரிப்பவர் :

கிருஷ்ணா என்ற பெயரில் ‘கிருஷ்’ என்ப தற்கு அனை வரையும் வசீகரிப்பவன் என்று பொருள். (‘ணா’ என்பதற்கு பக்தி பரவசத்தை அளிப்பவன் என்று பொருள் அனை வரையும் வசீகரித்து பக்தி பரவசத்தை ஏற்படுத்துபவரே கிருஷ்ணர்.

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

கிருஷ்ண ஜெயந்தி


கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி ( சமஸ்கிருதத்தில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி (कृष्ण जन्माष्टमी) ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழாவாகும். ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் இவ்விழா நிகழ்கிறது. கிரெகொரியின் நாட்காட்டியின் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். கோகுலாஷ்டமி என்று தென்னிந்தியாவில் இவ்விழா குறிக்கப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி விழா சமயத்தில் விற்கப்படும் கிருஷ்ணர் சிலைகள்
மும்பையில் கோவிந்தாக்கள் தயிர்க்கலசத்தை எட்ட மனித நாற்கூம்பு அமைத்தல்
இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் இவ்விழா கொண்டாடப் படுகிறது.
வட இந்தியாவில்
ராச லீலா மற்றும் தகி அண்டி (தயிர்க் கலசம்) என வட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ராசலீலா என்பது கிருட்டிணனின் இளமைக்கால வாழ்வை, கோகுலத்தில் கோபியர்கள் எனப்படும் இளம்பெண்களுடன் விளையாடிய காதல் விளையாட்டுக்களை நடிப்பதாகும்.
மகாராட்டிரத்தில் பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணைத்தாழியை சிறுவர்கள் (கோவிந்தாக்கள்) நாற்கூம்பு (பிரமிடு)அமைத்து மேலேறி அதனை உடைப்பதாகும். அரசியல்கட்சிகளும் வணிக நிறுவனங்களும் புரவல் நல்கும் இவ்விழாக்களில் வெண்ணைத்தாழியை அடைந்தவர்களுக்கு பெரும் நிதிப் பரிசுக்கள் அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும்போது தண்ணீர் அடித்து அவர்களை ஏறவிடாது தடுப்பதும் விளையாட்டை ஆர்வமிக்கதாக ஆக்குகிறது .

தென்னிந்தியாவில்

தென்னிந்திய வீடு ஒன்றில் ஸ்ரீஜெயந்தி கொண்டாடப் படுகிறது.
தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி,ஜென்மாஷ்டமி,கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.தமிழ்நாட்டில், குறிப்பாக, யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார் மற்றும் பிராமிணர்கள் இவ்விழாவினைக் கொண்டாடுகின்றனர்.தற்காலத்தில் தேரோட்டம் மற்றும் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
கேரளாவில் குருவாயூர் கோவிலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ண ஜெயந்தி அன்று குருவாயூர் கோவிலுக்கு ஒரு லட்சம் அளவிலான பக்தர்கள் உலகெங்கும் இருந்து வருகின்றனர்.
கிருட்டிணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு குழந்தைகளுக்குரிய சீடை,முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன.


கிருஷ்ண ஜெயந்தி: கண்ணன் பிறந்தான்... எங்கள் கண்ணன் பிறந்தான்....

ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திர நன்னாளில் பகவான் கிருஷ்ணரின் அவதாரம் நிகழ்ந்தது. எட்டு என்பது ராசியில்லாத எண் என்றும் அஷ்டமி திதி ஆகாத திதி என்றும் ஒரு இருக்கிறது. ஆனால் அஷ்டமியில் எட்டாவது குழந்தையாக பகவான் அவதாரம் நிகழ்ந்துள்ளது. அதனால்தான் ஆவணி மாதம் அஷ்டமியை ஜென்மாஷ்டமியாக கொண்டாடுகின்றோம்.
நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் வீடுகளை அலங்கரித்து கண்ணனின் பாதங்களை வரைந்து அலங்கரித்துள்ளனர். ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன.
பகவான் கண்ணன் அவதாரம் எவ்வாறு நிகழ்ந்தது? என் நிகழ்ந்தது என்பதை கதைகள் மூலமாகவும் திரைப்படங்கள் மூலமாக அறிந்திருப்போம்.
அரக்க குணம் கொண்ட கம்சனை அளிக்கவும், குருச்சேத்திர போர் மூலம் 100 கவுரவர்களையும் அவர்களுக்கு உதவியவர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும் கண்ணன் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. பகவானின் அவதாரத்தையும், அவரது வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களையும் அறிந்து கொள்வோம்.
தன் தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் திரு மணம் முடிந்ததும், அவர்களை தேரில் வைத்து ஊர்வலமாக சென்று கொண்டிருந்தான் கம்சன். அப்போது, 'உன் தங்கைக்கு பிறக்கப்போகும் எட்டாவது ஆண் குழந்தையால் உன் உயிர் போகும்' என்று ஒரு அசரீரி ஒலித்தது.
தன் உயிர் போகும் என்ற வார்த்தையைக் கேட்டதும், பாசம் வைத்திருந்த தங்கையின் மீது வாளை வீசும் முடிவுக்கு வந்திருந்தான்.
'கம்சா! தேவகிக்கு பிறக்கப்போகும் எட்டாவது மகனால்தானே உனக்கு அழிவு. அவளுக்கு பிறக்கும் அத்தனை குழந்தைகளையும் உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன். தேவகியை விட்டு விடு!' என்று வாசுதேவர் கூறவே, தேவகியை கொல்லும் எண்ணத்தை கைவிட்டான் கம்சன்.
உடனே வசுதேவரையும் தேவகியையும் சிறையில் அடைத்து, தன் கண் காணிப்பிலேயே வைத்துக் கொண்டான். தேவகிக்கு பிறந்த குழந்தைகளை தொடர்ச்சியாக கொன்றுவிட்டான் கம்சன். 8வது குழந்தையின் கருவை தன் வயிற்றில் சுமந்திருந்தாள் தேவகி. இந்த குழந்தையும் தன் அண்ணனின் கையால் இறக்கப்போவதை எண்ணி, கர்ப்பவதியான தேவகி கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள்.
ஒரு நள்ளிரவு நேரத்தில் தேவகிக்கு எட்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையைப் பார்த்ததும் வசு தேவருக்கும், தேவகிக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி, மறுகணமே மறைந்து போனது. பொழுது விடிந்ததும் கம்சன் வந்து குழந்தையை கொண்டுபோய்விடுவான் என்பதால் அவர்கள் கலக்கம் கொண்டிருந்தனர்.
அப்போது குழந்தை, மகாவிஷ்ணுவாக சுய உருகொண்டு பேசத் தொடங்கியது. 'உங்களது முற்பலனால் நான் உங்கள் மகனாக பிறந்துள்ளேன். என்னை கோகுலத்திற்கு கொண்டு செல்லுங்கள். அங்கு வசுதேவரின் நண்பரான நந்தகோபருக்கு பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து விடுங்கள். யாசோதை என்னை வளர்க்கட்டும். உரிய நேரத்தில் எல்லாம் நல்ல விதமாக நடக்கும்' என்று கூறிய விஷ்ணு பகவான், மறுகணமே சாதாரண குழந்தையாக மாறினார்.
குழந்தையை மாற்றுவதற்கு தோதாக, சிறையின் வாயில்கள் தானாக திறந்தன. காவலர்கள் மயக்கமுற்றனர். வசுதேவர் சற்றும் தாமதிக்காமல், குழந்தையை ஒரு கூடையில் எடுத்து வைத்தபடி கோகுலம் சென்றார். குழந்தையை மாற்றிக் கொண்டு, பெண் குழந்தையை கொண்டு வந்தார்.
காலையில் தேவகிக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டு வந்த கம்சன், பெண் குழந்தையைப் பார்த்ததும் வியப்படைந்தான். ஆண் குழந்தைதானே பிறந்திருக்க வேண்டும் என்று எண்ணியவன் இறுதியில் எந்தக் குழந்தையாக இருந்தாலும் அதை அழித்து விடுவது என்ற முடிவில், பெண் குழந்தையை வாளால் வெட்ட ஓங்கினான்.
ஆனால் அந்தக் குழந்தை மேல் நோக்கி பறந்தது. துர்க்கையாக வடிவெடுத்தது. 'ஏ! கம்சா! உன்னைக் கொல்லப்போகிறவன், வேறொரு இடத்தில் பத்திரமாக இருக்கிறான். உரிய நேரத்தில் அவன் உன்னை அழிப்பான்' என்று கூறி மறைந்தது.
பிருந்தாவனத்தில் கண்ணன்
பிருந்தாவனத்தில் குழந்தை கண்ணன் வெண்ணெய் திருடி, தயிர் பானையை உடைத்து கோபியர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான். கண்ணனின் குறும்புகள் தாங்காத தாய் யசோதை உரலில் கட்டினாள். மர உரலில் கட்டப்பட்டிருந்த கிருஷ்ணர், தன் முன் இரண்டு அர்ஜுன மரங்கள் நிற்பதைக் கவனித்தார். இந்த இரண்டு அர்ஜுன மரங்களும் பிரபலமான தேவர்களான நளகூவரனும் மணிக்கிரீவனும், தேவர்களின் பொக்கிஷதாரனும் சிவபெருமானின் பெரும் பக்தனுமான குவேரனின் இரு மகன்கள் ஆவார்கள்.
நாரதர் அளித்த சாபத்தினால் அந்த இரு தேவர்களும் இரட்டை அர்ஜுன மரங்கள் என்று பெயர் பெற்ற மரங்களாக மாறி, நந்த மகாராஜாவின் அரண்மனை முற்றத்தில் தோன்றி வளாந்து, ஸ்ரீ கிருஷ்ணரை நேரில் காணும் நல் வாய்ப்பைப் பெற்றார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணர் அவ்விரு மரங்களின் இடை வெளியில் புகுந்து சென்றபோது, மரங்களினிடையே உரல் சிக்கிக் கொண்டதும் அதை பலமாக இழுத்தார். அப்போது மரங்கள் வேரோடு சாய்ந்ததும் அவைகளில் இருந்து நளகூவரன், மணிக்கிரீவன் என்னும் அழகான தேவர்கள் தோன்றினார்கள். அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரை பலமுறை வலம் வந்து, சிரம் தாழ்த்தி வணங்கி துதித்து மறைந்தனர்.
கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன்
கிருஷ்ணருடைய பால்ய நண்பர்களில் சுதாமர் எனப்படும் குசேலரும் ஒருவர். இருவரும் ஒன்றாக குருகுல வாசம் செய்தவர்கள். குருகுல வாசம் முடிந்தவுடன் அவரவர் தத்தம் இல்லம் திரும்பினர். சுதாமரும் திருமணம் செய்துகொண்டு நிறையக் குழந்தைகளையும் பெற்றார்.
இவர்களுடைய வறுமையைக் கண்டே சுதாமரை எல்லோரும் குசேலர் என அழைக்க ஆரம்பித்தனர். ஒரு நாள் அவள் குசேலரைப்பார்த்து, கிருஷ்ணரைக் கண்டு கஷ்டம் நீங்க ஏதாவது உதவி பெற்று வருமாறு கூறி, கிருஷ்ணருக்குக் கொடுக்க ஒரு கந்தல் மூட்டையில் வேறொன்றும் இல்லாததால் சிறிது அவலை கட்டிக் கொடுத்தாள்.
குசேலரும் துவாரகையும் சென்று சேர்ந்தார். கந்தல் மூட்டையுடன் நின்ற அவரைக் கிருஷ்ணரும் வந்து வரவேற்றார், அவரை உள்ளே அழைத்துச் சென்று மஞ்சத்தில் உட்கார வைத்தார். ருக்மிணியை அழைத்து அறிமுகமும் செய்து வைத்தார். உணவு உபசாரங்கள் எல்லாம் முடிந்த பின் பழைய கதைகளைப் பேசினர்.
அப்போதும் தாம் வந்த காரணத்தை குசேலரால் சொல்லமுடியவில்லை, அந்த பரந்தாமனுக்காக அவல் கொண்டுவந்திருப்பதையும் தெரிவிக்க முடியவில்லை. தம்மை இவ்வளவு உயர்வாக உபசரித்த கிருஷ்ணருக்கு கேவலம் இந்த அவலையா கொடுப்பது. சர்வாந்தர்யாமியான கிருஷ்ணனோ ஒன்றும் தெரியாதவர்போல, குசேலரைப் பார்த்து நீங்கள் வரும்போது அண்ணியார் எனக்கு ஒன்றும் கொடுத்தனுப்பவில்லையா? அவர் சௌக்கியம் தானே? என்றெல்லாம் கேட்டார். குசேலர் தமது துணியில் முடிந்து வைத்திருந்த மூட்டையப் பார்த்து, இது என்ன என்று வினவியவாறே அதை வெடுக்கென்று பிடுங்கிப் பார்த்தார்.
அவலைக் கண்டதும், சுதாமரே, எனக்குப் பிடித்தமான அவலைக் கொண்டு வந்துள்ளீரே என அதில் ஒரு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டார். அடுத்து ஒரு பிடி அவலை எடுக்கும் போது ருக்மிணி அதைப் பிடுங்கி தமது வாயில் போட்டுக் கொண்டார். கேவலம் இந்த அவலையா இவர்களுக்குக் கொடுத்தோம் என நினைத்துக் கொண்டே குசேலர் தமது ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானார்.
தாம் கேட்க வந்ததை விட பெரும் பாக்கியமான அந்த பரந்தாமனின் அருகாமையில் சிறிது நேரம் கழிக்க முடிந்ததே போதும் என தம்மைச் சமாதானப்படுத்திக் கொண்டார். வீடு திரும்பிய குசேலர் தாம் கேட்காமலேயே வறுமை என்பதே அதன் பிறகு தமது வாழ்க்கையில் இல்லாது மறைந்து பகவானின் அனுக்கிரகத்தால் தமது மனைவியோடும் குழந்தைகளோடும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார். பகவான் கிருஷ்ணர் கேட்டவர்களுக்கு மட்டுமல்ல கேட்காதவர்களுக்கும் வரமளிப்பவன் என்பதை இந்த கதைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.


கிருஷ்ண ஜெயந்தி விரத முறையும் பலனும்!

கிருஷ்ண ஜெயந்தி விரத முறையும் பலனும்: கண்ணன் பிறந்த ஆவணி மாத ரோகிணி நட்சத்திரம், மற்றும் பிறந்த திதியான அஷ்டமியைக் கணக்கிட்டு கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இவ் விழாவை வட நாட்டினர் சிறப்பாக கொண்டாடுகின்றனர் அன்று கண்ணன் லீலைகளை சித்தரிக்கும் பொம்மைகளை வைத்து வீடுகளில் கொலு பிரதானமாக இடம்பெறும்.
விரதமுறை: கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், வெண்ணெய், அவல், பழங்கள் மற்றும் வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம் என்னும் கலவையை நிவேதனமாகப் படைக்க வேண்டும் வெல்லச்சீடை, உப்பு சீடை, முறுக்கு, லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பி போன்றவற்றையும் படைக்கலாம் இந்நாளில் தன்னை அழைக்கும் பக்தர்களின் வீட்டிற்கு கண்ணன் வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை எனவே, அன்று வீட்டைச் சுத்தப்படுத்தி, அலங்கரித்து, வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரையில், சின்னக்கண்ணன் நடந்து வருவது போல், அவனது பாதச்சுவடுகளை மாக்கோலமிட்டு வரவேற்கலாம் கண்ணனை பற்றிய துதிப்பாடல் பாடுவது, தோத்திர பாடல்கள் பாட வேண்டும்.
பலன்: கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை இன்றும் உள்ளது.


கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கண்ணன் பிறந்த நாள்

மஹாவிஷ்ணு, கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணர் இந்திய மனங்களில் பல்வேறு விதங்களில் குடிகொண்டிருப்பவர். மீராவுக்கோ காதலர், ராதாவுக்கும் அவ்வாறே. அர்ஜுனனுக்கோ நண்பர், தத்துவ ஞானி, வழிகாட்டி.
நாம் என்னவாக இருக்கிறோமோ அதன் படியே நமக்கு காட்சி தருபவர்தான் கிருஷ்ணர். பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடந்த போது அவருக்கும் ஒரு தரிசனம் கொடுக்கிறார். ஆனால் முழு ஆயுதபாணியாகக் காட்சி தருகிறார். ஏனெனில் பீஷ்மர் ஒரு போர் வீரர். அவருக்குப் போர் வீரராகவே காட்சியளிக்கிறார்.
விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும் வனமாலி கதீ சாங்கி சங்கீ சக்ரீச்ச நந்தகீ என்ற ஸ்லோகம் பீஷ்மருக்கு கிருஷ்ணர் கொடுத்த போர்வீரர் தரிசனத்தைக் குறிப்பதாகும்.
இந்துக் கடவுளர்களில் பக்தர்கள் மனத்தில் தனது தீராத விளையாட்டுத் தனத்தினால் அதிகம் குடிகொண்டிருப்பவர் கிருஷ்ண பகவான்தான்.
இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கிருஷ்ணர் பிறந்த தினம் அஷ்டமி. ராமர் பிறந்த தினம் நவமி.
கிருஷ்ண அவதாரம் இந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுக்கும் உபதேசங்களே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையானது. பகவத் கீதையில் அர்ச்சுனனுக்கு அருளிய உபதேசங்களுடன் இந்திய தத்துவ சாரங்களின் அடிப்படைகளை ஒன்று கலந்து கொடுக்கப்பட்டுள்ள நூல், பகவத் கீதையாகும்.
இந்த நாளில் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களைச் செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரைத் தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தி தொடர்பான மேலும் சில பக்கங்கள் இங்கே:
முகுந்தா.. முகுந்தா..!
எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.
மேலும் வாசிக்க இங்கே சொடுக்குங்கள்
கண்ணனின் கதை
கிருஷ்ணர்  பிறந்த அந்த சிறியச் சிறைச்சாலையின் மீது கத்ரகேஷப் தேவ் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. அதன் கீழ்தளத்தில் பழைய சிறைச்சாலை அப்படியே உள்ளது. கண்ணன் பிறந்த இடமாக அது வழிபடப்படுகிறது.
மேலும் வாசிக்க இங்கே சொடுக்குங்கள்
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் - பொட்டுக்கடலை முறுக்கு கிருஷ்ண ஜெயந்தி அன்று, பல விதமான பலகாரங்களை நமது வீட்டில் செய்து வழிபடுவது வழக்கம். அவ்வகையில் கிருஷ்ண ஜெயந்திக்குப் பிரத்யேகமான இந்தச் சுவையான பொட்டுக்கடலை முறுக்கைச் செய்து சுவைத்து மகிழுங்கள்.



வித்தியாசமான சில கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ரெசிபிக்கள்!!

மாயக்கண்ணன் கிருஷ்ணன் பிறந்த நாளைத் தான் கிருஷ்ண ஜெயந்தியாக நாம் கொண்டாடுகிறோம். கிருஷ்ண ஜெயந்தி வந்தாலே நமக்கு குஷியாக இருக்கும். ஏனெனில் அனைவரது வீட்டிலும் கிருஷ்ணனுக்கு படைப்பதற்காக பலகாரங்களை செய்வார்கள். இதனால் நம் வயிற்றுக்கு நல்ல இனிப்பு விருந்து கொடுக்கலாம்.
குறிப்பாக இந்நாளில் கிருஷ்ணனுக்கு பிடித்த பலகாரங்களான பால் பொருட்கள் கொண்டு செய்யப்படும் பலகாரங்களை அதிகம் செய்வார்கள். அத்துடன் சீடை, முறுக்கு போன்றவற்றையும் செய்வார்கள். நீங்கள் இந்த வருட கிருஷ்ண ஜெயந்திக்கு வித்தியாசமான ரெசிபிக்களை செய்ய நினைத்தால் தொடர்ந்து படியுங்கள். ஏனென்றால் இங்கு சில வித்தியாசமான இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் செய்முறையுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

மிஸ்டி தோய்
பெங்காலியில் கிருஷ்ண ஜெயந்திக்கு செய்யப்படும் ஒரு இனிப்பான ரெசிபி தான் மிஸ்டி தோய். நீங்கள் இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலாக செய்யலாம்.
செய்முறை
பாதாம் அல்வா
பாதாம் உடலுக்கு ஆரோக்கியமானது. அத்தகைய பாதாமைக் கொண்டு இந்த வருடம் அல்வா செய்து கிருஷ்ணனுக்கு படையுங்கள்.
செய்முறை
ரோஜாப்பூ கீர்
இந்த வருடம் கிருஷ்ணனை கவரும் வண்ணம் ஒரு அருமையான படையல் செய்ய நினைத்தால், ரோஜாப்பூ கீர் செய்து படையுங்கள். இது மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, வீட்டில் உள்ள குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.
செய்முறை
மைதா சீடை
சீடை கூட கிருஷ்ணனுக்கு பிடித்த ஓர் தின்பண்டம். அதிலும் மைதா சீடையை செய்தால், உங்கள் வீட்டு செல்ல கிருஷ்ணனும் விரும்பி சாப்பிடுவார்கள்.
செய்முறை
பால்கோவா
பால்கோவா என்றதும் பலருக்கும் எச்சில் ஊறும். அத்தகைய பால்கோவா கிருஷ்ணனுக்கும் பிடித்த ஓர் இனிப்பு. அந்த பால்கோவாவை எப்படி சுவையாக செய்வதென்று தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ளதை கிளிக் செய்யுங்கள்.
செய்முறை
அதிரசம்
அதிரசம் பலரது மிகவும் விருப்பமான ஓர் இனிப்பு பலகாரம். அந்த அதிரசத்தை பலருக்கும் செய்யத் தெரியாது. எனவே அவர்களுக்காக இதை எப்படி எளிமையாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
செய்முறை
பாதாம் லட்டு
பாதாம் கொண்டு அல்வா மட்டுமின்றி, லட்டு கூட செய்யலாம். கிருஷ்ணனுக்கு லட்டு என்றால் பிரியம். எனவே பலரும் லட்டு செய்வார்கள். ஆனால் இந்த வருடம் சற்று வித்தியாசமாக பாதாம் லட்டு செய்து படைக்கலாமே!
செய்முறை
ரவா சீடை
சீடையில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று ரவா சீடை. இந்த சீடையைக் கூட கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணனுக்கு செய்து படைக்கலாம்.
செய்முறை

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் 30 அறிய தகவல்...

மேல்மலையனூர் அங்காளம்மன்
திருக்கோயில் 30 அறிய தகவல்...

1. அங்காள பரமேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன என்றாலும், அன்னைக்கு மேல்மலையனூர் ஆலயமே தலைமை ஆலயமாகும்.

2. மூலவர் சுயம்பு புற்று மண்ணால் உருவானவள். அங்காளம்மன் நான்கு திருக்கரங்களுடன் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறாள்.

3. நான்கு காரங்களில் உடுக்கை, சூலம், கிண்ணம், கத்தி உள்ளது. தலைக்கு பின்னால் தீப்பிளம்பு உள்ளது.

4. இடது காலை மடித்து, வலது காலை தொங்கவிட்டு, காலுக்கு அடியில் கபாலம் உள்ளது. ஐந்து தலை நாகத்தின் கீழ் அன்னை அருளாட்சி புரிகிறாள்.

5. கோயிலுக்கு நான்கு நுழைவு வாயில்கள் உள்ளன. பக்தர்கள் வடக்கு நுழை வாயிலை பிரதான நுழைவு வாயிலாக பயன்படுத்தி வருகின்றனர்.

6. கோபால விநாயகர் தென்பகுதியில் அமைந்துள்ள பெரியாயி சன்னதி கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சுடுகாடு மற்றும் ஏரிக்ரையில் அமர்ந்துள்ள துர்கையம்மன் ஆலயம் போன்றவைகளாகும்.

7. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அங்காளம்மன் புற்றாக அமர்ந்ததாக நம்பப்படுகிறது. இப்புற்றானது அளவில் பெரியதாக உள்ளது.

8. இக்கோவிலில் இருக்கால பூஜை நடைபெறுகிறது. அப்படி நடைபெறும் போது அவ்வபோது இப்புற்றில் அம்மன் வடிவமாக நாகத்தை  பலர் பார்த்ததாக சொல்லப்படுகிறது.

9. பூஜையின் போது சக்தி வாய்ந்த புற்று மண்னை பூஜை தண்ணீரில் கலந்து பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள்.

10. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பூஜையில் கலந்துக் கொண்டு புற்றுமண் கலந்த நீரை அருந்தினால் புத்ரபாக்கியம் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

11. திருக்கோயிலின் தெற்கு பகுதியில் மலாந்து படுத்து பெரிய உருவமாக பெரியாயி அருள் புரிகிறாள்.

12. பெரியாயி அம்மனை வழிபடும் பக்தர்களுக்கு தீய சக்திகள் விலகுவதுடன் வேண்டியது கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

13. சிவபெருமானுக்கே பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கிய இடமாக கருதப்படும் சுடுகாட்டானது மயானக் கொள்ளை நடைபெறும் பகுதியாகும்.

14. இந்த இடத்தில் வழிபடும்  பக்தர்களுக்கு பிடித்திருக்கும் அனைத்து பினிகளும் நீங்கி அம்மன் அருளால் நலம் பெறுவார்கள் என்பது ஐதிகம்.

15. அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும். பௌர்ணமி தினங்களில் ஆலயம் இருபத்தி நான்கு மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டுகிறது.

16. சிறந்த பரிகார ஸ்தலமாக  விளங்குகிறது. அம்மனை குலதெய்வமாக வழிபடுவோர், பொங்கல் வைத்து படையலிட்டு வேண்டுகின்றனர்.

17. வேண்டிதல் நிறையவேறிய பக்தர்கள் கோவில் உட்பிரகாரத்தில் ஆடு மாடு மற்றும் கோழிகளை வடக்கு வாசலில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் சுற்றி விடப்படுகிறது.

18. ஆண்டுதோறும் திருவிழாவில் புதிய தேரில் அன்னையை அமர வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள்.

19. எங்கெல்லாம் அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளதோ அங்கெல்லாம் மயானக் கொள்ளை விழா வெகு சிறப்பாக நடைபெறும்.

20. மாசி மாதம் மயானக் கொள்ளை திருவிழா பெரிய அளவில் நடக்கும். பக்தர்கள் தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அம்மனுக்கு அர்ப்பணிக்கின்றார்கள்.

21. மயானத்தில் அன்னையே ஆராதிக்கின்றார்கள், பலர் சாமி ஆடிக்கொண்டே செல்வார்கள். காண்போர் வியக்கும் வண்ணம் பூஜை செய்கிறார்கள்.

22. இதனால் ஏவல் பில்லி சூனியம் போன்ற தீய சக்திகள் விலகும் என்பது பதில் பக்தர்களின் அசைக்க முடியாது நம்பிக்கையாக உள்ளது.

23. பிரம்மனின் ஐந்தாம் தலையை கொய்ததால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்தத் தலை சிவனின் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டது.

24. என்ன முயற்சி செய்தும் கையை விட்டு அகலாததுடன், சிவனுக்கு இடப்படும் உணவு வகைகளையும் அத்தலையே உண்டு வந்தது.

25. மஹா விஷ்ணு அறிவுரைப்படி பார்வதி தேவி, மூன்று கவளம் அன்னத்தை எடுத்து, இரண்டு கவளத்தை சிவன் கையில் இட, பிரம்ம கபாலமே வழக்கம் போல் உண்டு விடுகிறது.

26. மூன்றாம் கவளத்தை தவறுதலாக போடுவது போல் மண்ணில் போட்டுவிடுகிறாள் பார்வதி தேவி.

27. உணவின் ருசியில் மயங்கிய கபாலம், மண்ணை நோக்கிப் பாய, விஸ்வரூபம் எடுத்த அங்காளம்மன் அந்த கபாலத்தைக் காலில் போட்டு மிதித்து அடக்கிவிடுகிறாள்.

28. பின்னர் கோபம் தணிந்த தனது சுய உருவம் எடுத்து அங்காள பரமேஸ்வரியாக மேல் மலையனூர் கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

29. இதுவே ஸ்தல வரலாறு ஆகும். அங்காளம்மனை மகா மண்டபத்தில் புற்றாகவும், மூலஸ்தானத்தில் திருவுருவத்துடனும் காட்சி அளிக்கிறாள்.

30. அமாவாசையன்று அங்காள பரமேஸ்வரிக்கு ஊஞ்சல் விழா நடத்தப்படுகிறது. இதனைக் காண லட்சோப லட்சம் பக்தர்கள் குவிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

கலியுகத்தில் நாட்டு நடப்பு


கலியுகத்தில் நாட்டு நடப்பு எவ்வாறு இருக்கும் என்று கோரக்கர் மட்டுமல்லாது, நந்திதேவர், சினேந்திரமாமுனிவர் முதலான பல சித்தர்கள் பாடியிருப்பதாக நாம் அறிவோம் . இப்பொருள் பற்றி சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.பி. 1604-1693) தெலுங்கு தேசத்தில் வாழ்ந்த ஸ்ரீவிராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவாமிகள் என்பார், "சாந்திர சிந்து" என்னும் வேதமாகிய "காலக்ஞானம்" என்னும் தீர்க்கதரிசனத்தை 14,000 ஒலைச் சுவடிகளில் தெலுங்கு மொழியில் இயற்றி, அதை அவர் தங்கியிருந்த பனகானபள்ளி என்ற ஊரில் ஒரு புளிய மரத்தின் அடியில் புதைத்து வைத்துவிட்டு, அதில் கண்ட விஷயங்களை மக்களுக்குப் போதித்து வந்தார்.

அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெலுங்கு மொழியில் தோன்றிய நூல்களில், அவர் கலியுகத்தின் தன்மை பற்றிக் கூறிய தீர்க்கதரிசனங்கள் இடம்பெற்றுள்ளன. தெலுங்கு மொழியிலிருந்து திரு. டி.எஸ்.தத்தாத்ரேய சர்மா என்பவர் தமிழாக்கம் செய்து "ஜெகத்குரு வீரபிரம்மேந்திர சுவாமிகள் வாழ்க்கைச் சரித்திர தத்துவம்" என்ற தலைப்பிலும், ஜே.ராவுஜி என்பவர் "காலக்ஞான தத்துவம்" என்ற தலைப்பிலும் வெளியிட்டுள்ளனர். திரு. தத்தாத்ரேய சர்மா என்பவரின் நூலில் பக்கம் 33,41, 67, 68, 100-3 கண்ட தீர்க்கதரிசனங்களைக் காண்போம்.

1. ஆணுக்குப் பெண் வித்தியாசமற்று தோற்றத்திலும் செயலிலும் ஒன்றுபட்டுப் போகிறது.

2. தாய்தந்தையர்கள் ஆண் மக்களை நம்பாது பெண் பிள்ளைகளை நம்புவர்.

3. பெண்களின், தூய்மை,  பெண் தன்மை மாயவசத்தால்  அழிந்து போகும்.

4. ஒருவனுக்கு ஒரு மனைவி என்ற நிலை கெடும்.

5. அரசே பெண்களின் கருச்சிதைவுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கும்.

6. விதவை மறுமணம் செய்து கொள்வாள்.

7. மகன் தந்தையையும், தந்தை மகனையும் மோசம் செய்வர்; பந்த பாசங்கள் அற்றுப் போகும்.

8. தன் மகளின் கற்பை தந்தையே சூரையாடுவன்.

9. கணவனை நிந்தித்து துன்புறுத்தும் மனைவியும், பெற்ற தாய் தந்தையரைப் பேணாத மக்களும் பெருகிவிடுவர்.

10. பெற்ற மக்களையே விற்றுப் பிழைக்கும் நிலை பெற்றோருக்கு ஏற்படும்.

11. அழகுடைய மங்கையர் விலைபொருளாகி விற்பனைக்கு உள்ளாகுவர்.

12. திருமணங்கள்,குலம் கோத்திரமின்றி நடைபெறும். அதற்கு அரசே ஆதரவு அளிக்கும்.

13. உயர்குலப் பெண்கள் நாட்டியம், பாட்டு, கச்சேரி,   புகைப்படம் என்ற மோகத்தில் கெட்டழிவர்.

14. தெய்வ நம்பிக்கை தளர்வடையும்.

15. தெய்வ வழிபாடு செய்வோருக்கு தரித்திரம் மிகுதியாகும்.

16. குலத்தொழில்கள் மாறுபடும்.

17. ஆலயங்களில் கள்ளத்தனம் நிறையும்.

18. ஆலயங்களில் பிராமணர்களுக்குப் பதிலாக தாழ்த்தப்பட்ட குலத்தோர் அர்ச்சகர்களாக மாறுவர்.

19. சைவர்கள் வேத சாரத்தை விட்டு விலகுவர்; மாமிசம் போன்ற அசைவ உணவுகளை உட்கொள்ளுவர்.

20. சாத்திரங்கள் பொய் என வாதிடப்படும்.

21. வேதங்களின் பொருள் மாற்றமடையும்; (வேதங்களில் எத்தனையோ இடைச் செருகல்கள் ஏற்பட்டு விட்டன என்பது சரித்திரம் கண்ட உண்மை.)

22. வேதம் ஓதுவேர் வேதங்களைத் தம் சுயநலம் கருதி வியாபாரமாக்குவர்.

23. திருப்பதி ஆலயச் செல்வங்கள் திருடிச் செல்லப்படும்.

24. காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி , காசி விசாலாட்சி சாமி சிலைகளில் கண்ணில் கண்ணீர் வரும்.

25. காசியிலுள்ள கங்காநதி கானாமல் போகும்.

26. எல்லா சிவலிங்ககளிலும். வியர்வை உண்டாகும்.

27. திருப்பதி கோவிலில் முதலை புகுந்து அதனால் பூஜைகள் மூன்று நாட்கள் தடைப்படும்.

28. காளஹஸ்தி  சுவர்ணமகி ஆற்றில்  அதிசியம் தோன்றும்

29. காளஹஸ்தி  கோபுரங்கள்  சேதமடையும்.

30. புண்ணிய சேத்திரம் நதி தீர்த்தம் போன்ற இடங்களில் மக்கள் வியாபாரிகளாலும் புரோகிதர்களாலும் ஏமாற்றப்படுவர்.

31. அரசர்களின் ஆளுகைக்கு மாறாக மக்களாட்சி உலகெங்கும் ஏற்படும். ஆனால் நடைமுறையில் அவை அராஜக வழியை பின்பற்றும்.

32. முஸ்லீம்களின் ஆதிக்கமும் அரசும் பாதிப்படையும்; வஞ்சனைகள் தலைதூக்கும்.

33. புதுவித அரசியல் அமைப்புகள் ஏற்படும்; தவறான முறையில் மக்கள் நடத்தப்பட்டு அதன் காரணமாக மக்களின் நிலை சீர்கெட்டுப் போகும்.

34. மனிதன் பறவைகள் போல ஆகாயத்தில் பறப்பான். ஆனால், அவன் பார்வை கழுகுகள் போலே கீழ்நோக்கி மாய மலங்களிலேயே மோகம் கொள்ளும்.

35. நிழற்படங்கள் அசைந்தாடும்; அது தர்மவழிகளை அழிக்கும்.

36. குதிரை, மாடுகள் வழி நடத்தும் வாகனங்களுக்கு மாறாக இயந்திர வாகனங்களும் அதிதுரிதப் போக்குவரத்தும் நடைபெறும்.

37. இயந்திரங்கள் நன்மைக்காக அறிவின் பலத்தால் பெருகிடினும், மனிதன் மனிதனாக இல்லாது இயந்திரமாக மாறி நல்லுணர்வுகளை இழப்பான்.

38. இவ்வுலகில் நியாங்கள் செயலற்றுப் போகும் அநியாயங்களே தலையோங்கி நிற்கும்.

39. உண்மைகள் பொய்யாகும்; பொய்மைகள் உண்மையாகத் தோன்றும்.

40. நல்லவைகளுக்குப் பெருமை அற்றுப் போகும்; இவ்வுலகின் கண் தீமைகளுக்கே முதலிடம் அளிக்கப்படும்.

41. பொருளாசை மக்களை மிருகமாக்கி, கொலை வெறியைத் தூண்டிவிடும்.

42. மனிதருள் போட்டி பொறாமை பெருகி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு தாழ்வடைவர்.

43. ஒருவர் பொருளை மற்றவர் அபகரித்துச் செல்வர்.

44. சாந்தம் குறையும்; கோபம் அதிகரிக்கும்.

45. கபட வேடதாரிகளால் மக்கள் ஏமாற்றப்படுவர்.

46. போதைப் பொருள்கள் பெருகி, மக்கள் அதன் வாய்ப்பட்டு பெருவாரியாக அழிந்து போவார்கள்.

47. உணவுப் பொருள்களின் தரம் குறைந்து, அற்ப லாபம் கருதி கலப்படம் செய்து விற்பனைக்கு வருவது பெருகும். அதனால் புதிய புதிய நோய்கள் பரவும்.

48. கண்பார்வை மிகையாக கெடும்.

49. எண்ணற்ற நோய்கள் புதிது புதிதாகத் தோன்றி மக்களை அழிக்கும்.

50. மக்களின் சராசரி வயது குறையும்.

51. செம்பு, பித்தளை போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்ட நகைகள் போன்ற பொருட்களுக்குத் தங்க  முலாம் பூசப்பட்டு அவை தங்கம் என்று மக்களிடம் ஏமாற்றப்பட்டு விற்கப்படுகின்ற நிலை ஏற்படும்.

52. முன்னேற்றம் உள்ளது போல் தோன்றினாலும் மனிதனின் குணங்கள் விகாரப்பட்டு அழிவை தனக்குத்தானே தேடிக் கொள்வான்.

53. மூன்று தலைகொண்ட பசுங்கன்று ஜனிக்கும். அதற்கு இரண்டு யோனிகள் இருக்கும். அவைகளில் ஒன்று மனிதத் தன்மை கொண்டதாக இருக்கும்.

54. நமது பாரத தேசம் இரண்டாகப் பிளக்கப்படும்; பிறகு அது மூன்று பாகங்களாகும்.(இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம்)

55. வங்காள தேசம் என்னும் பிரிவு, பல உயிரிழப்பிற்கும், புயலுக்கும், பெருவெள்ளத்திற்கும் ஆளாகும். மக்களின் சேதம் மிகையாகும்.

56. பாரத தேசத்தில் மக்களின் ஜனத்தொகை அளவுக்கு அதிகமாகப் பெருகிவிடும். அப்போது ஜனத்தொகையைக் குறைக்க அரசு செயல்படும்.

57. இவ்வுலகில் பல பாகங்களில் பூகம்பங்களும் விஷ சக்திகளும் ஏற்பட்டு பெரும் அழிவும் உயிர்ச் சேதங்களும் ஏற்படும்.

58. இயற்கையின் பருவகாலங்கள் நிலைகெட்டுப் போகும்; பருவங்கள் கடந்து மழை பொழியும்.

59. இயற்கை வளங்கள் எல்லாம் விஷக்காற்றால் அழிவு பெறும்.

60. நிலமகளிடம் ஆழ்ந்திருக்கும் செல்வங்கள் மக்களின் சுக போகத்திற்கு வெளிக்கொணரப்படுவதால் நிலமகள் பலமிழந்து நிலநடுக்கங்களும், பெருத்த பூகம்பங்களும் ஏற்படும். எரிமலை வெடித்து உலகை அழிக்கும்.

61. கலியின் முடிவு பிரளயமாகி உலகே அழியும். அதன் காரணமாகப்  பெருவெள்ளங்கள் தோன்றி ஊரையும் மக்களையும் அழிக்கும்.

62. பகலில் நட்சேத்திரம் தோன்றும். இதனால் மக்களுக்கு சேதாரம் உண்டாகும்.

63. பசுவின் கருவில் மனிதன் பிறப்பான் அவன் மக்களிடையே ஆண்டவனைப் பற்றி விவாதம் செய்வான்.

64. ஒரு முட்டையிலிருந்து இரண்டு குஞ்சுள் வெளிவரும்.

65. யானை வயிற்றில் பன்றி முகத்தோடும், பன்றி வயிற்றில் குரங்கு முகத்தோடும், குட்டி பிறக்கும் .

66. வேப்பமரத்தின் இலைகள் இனிப்பாக மாறும்.

67. எண்ணையில்லாமல் விளக்குகள் எரியும் (மின்சாரம்) 

68. ஆண், பெண் உறவு இல்லாமல் குழந்தை பிறக்கும்  (Test Tube Baby) 

69. பாலை விட தண்ணீர் அதிக விலைக்கு விற்கும்.

70. குழந்தையில்லாத குறைகள் அதிகமாகும்.

இவ்வாறு கலியுகத்தில் நடக்கப் போவதை கூறிப்பிட்டார்.

ஆனால் தற்போது இவை அனைத்தும் நடைபெற்ற வண்ணம் இருப்பது அறியக்கூடியதாக இருக்கின்றது.

மீராவின் வரலாறு..


மீராவின் வரலாறு:

மீரா அல்லது மீராபாய் (கி.பி 1498 – கி.பி 1547) வட இந்திய வைணவ பக்தி உலகில் மறுக்கமுடியாத கிருஷ்ண பக்தை ஆவார். 1300 பாடல்களுக்கு மேல் கிருஷ்ணரின் மீது இயற்றி பாடிய மீரா தற்போதைய ராஜஸ்தானில் பிறந்தவர்.

ராஜபுத்ர சிற்றரசனின் மகளாய் அவதரித்தாள் மீரா. அவளுடைய மூன்றவது வயதில் அரண்மனைக்கு வந்த துறவி அளித்த கிரிதரகோபாலனின் சிலையைத் தான் அவள் தாய் காண்பித்து அவளுடைய மணவாளன் என வேடிக்கையாய் சொன்னாள். ஆனால் மீராவுக்கு அது வேடிக்கையாய் விளங்காமல் உயிரில் கலந்த உறவாய் வியாபிக்க ஆரம்பித்தது. விக்கிரஹத்துக்கு நீராட்டி
அலங்கரித்து அதனுடன் ஆடிப்பாடி என பக்தியோடு வளர ஆரம்பித்தாள்.


அவளுடைய எட்டாவது வயதில்(சில குறிப்பு 13வயது என்கிறது) சித்தூர் இளவரசன் போஜராஜனுடம் மீராவுக்குத் திருமணம் நடந்தது. மீரா கிரிதர கோபாலனின் விக்ரகத்துடன் சித்தூர் சென்றாள்.

போஜராஜன் குடும்பத்தின் குலதெய்வமான துளஜ பவானி எனும் துர்க்கை வழிப்பாட்டை மேற்கொள்ளாத மீராபாயின் கிருஷ்ண வழிபாட்டிற்கு எதிர்ப்பு கிளம்பியது.

ஆயினும் மீரா பணிவோடு தன் கொள்கையைக் கணவனிடம் கூறி அவனுக்கு வேண்டிய பணிவிடை களைக் குறைவின்றி செய்தாள்; குடும்பகாரியங்களை சரியாக கவனித்து முடித்தபின்னரே தனது தெய்வ மணாளனுக்கு வழிபாடுசெய்வாள்; ஆடல்பாடல் சேவைகளில் மனதைப் பறி கொடுப்பாள்.

போஜராசன் ராஜபுத்ரவீரன், அழகன். மீராவிடம் காதல்கொண்ட அன்புக் கணவன். அவளை உயிரினும் மேலாய் நேசித்தான். அவளோ ஆண்டவனிடமே மனதைச் செலுத்தினாள்.

ஒரு நாள் போஜன் மிராவின் பூஜை அறைக்குள் நுழைந்தான். அங்கே மீரா கிரிதர கோபால விக்கிரஹத்திடம் மனமுருக பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் அவன் மனைவிக்கு புத்தி பேதலித்து விட்டதென வருத்தமாயும் வந்தது .


மீரா மீதுள்ள அன்பில் அவளுடைய கண்ணனுக்காக ஆலயம் கட்டி கொடுத்தான்.

1521 இல் தில்லி சுல்தானின் இசுலாமிய சாம்ராச்சியத்திற்கு எதிராக ராஜபுத்திரர்கள் ஒன்றுசேர்ந்து போர்புரிந்த போது இறந்த பலர் அரசர்களில் மீராவின் கணவர் போஜராஜனும் ஒருவர். மாமனார் அரவணைப்பில் அரண்மனையில் வாழ்ந்தார் மீரா.

கோயில் மூலமாய் மீராவின் வெளி உலக உறவு வளர்ந்தது. சத்சங்கம் சாதுக்கள் என மீரா பக்தியுடன் பாடிஆடி பக்தியின் உச்சத்திற்கே போய்விட்டாள்.

போஜராஜன் தம்பியான விக்ரமாதித்யா தன் தங்கையான உதாபாயோடு சேர்ந்து பலமுறை மீராவை கொலைசெய்ய முயற்சித்தான்

கண்ணனுக்கு நிவேதனம் (படைத்த) செய்த பிரசாதத்தில் நஞ்சைக் கலந்து, அதனை மீராவை அருந்துமாறு செய்தான். பின்னர் கண்ணன் அருளால் நஞ்சு நீக்கப்பட்டது.

மீராவின் படுக்கையில் இரும்பு முட்களை நிறைக்க, கண்ணன் அருளால் அவைகள் ரோசாமலர் இதழ்கள் ஆனது.

கொடிய பாம்பு அடைத்த பூக்கூடையை கொடுத்து கண்ணனுக்கு அர்ப்பணிக்குமாறு கொடுக்க, அலங்கரிப்பதற்கு மீரா அப்பூக்கூடையை திறந்த போது அது அழகிய பூமாலை ஆனது.

மீராவின் புகழ் நாடெங்கும் பரவியது.
மொகலாய மன்னர் அக்பர் காதுக்கு அது எட்டியது.
மன்னர் சர்வ சமய சமரசத்தை ஆதரித்தவர். அவர் மீராவின்ன் பக்தியால் கவரப்பட்டு அவளைக் காண விரும்பினார்.

காலங்காலமாய் இரு பிரிவினருக்குள் கடும்பகை வேறு. அதனால் அக்பர் தன்னை ஹிந்து சாது போல மாறுவேடம் போட்டுக்கொண்டு சித்துர் வந்து மீராவின் பாதங்களை பயபக்தியுடன் தொட்டார். அவளுடைய கிருஷ்ணனுக்கு விலை உயர்ந்த முத்து மாலைகளை அளித்துச் சென்றார்.

அரச குடும்பத்தினர் மீராவை ஆற்ரில் குதித்து உயிரைவிட கட்டளை இட்டனர். மீராவும் ஆற்றில் குதித்தாள் ஆனால் கண்ணனின் அன்புக்கரங்கள் அவளை மேலேற்றி, காதோரம் 'இன்றோடு உலகபந்தம் உனக்கு அற்றது, ஸ்ரீ பிருந்தவனம் சென்று அங்கே நீ என்னைச் சந்திப்பாய் 'எனக் கூறி மறைகிறார்

குரு ரவிதாசரக்கு சீடரான இவர், அரசக் குடும்பத்தின் தொல்லைகள் தாளாது கண்ணன் வாழ்ந்த பிருந்தாவனத்தை வந்தடைந்தார்.

பிருந்தாவனத்தில் மீரா கண்ணனுக்காக பாடிய பாடல்கள் அனைத்தும் அற்புதமானவை.

சூர்தாஸ் துளசிதாஸ் மீரா என ஹிந்தி கவிகளில் மூவரே முதல் சிறப்பு வாய்ந்தவர்கள்.

குஜராத்தியிலும் கவிதை எழுதினாள். குஜராத்தி இலக்கியத்தில் நர்சீ மேத்தாவுக்கு அடுத்த இடம் மிராவுக்கு உண்டு.

இறுதிக் காலத்தில் குஜராத்தின் துவாரகைக்கு வந்தடைந்தார். அங்கு கோயில்கொண்ட துவாரகதீசன் முன்பு பாடிக்கொண்டே அனைவரும் கண்ணெதிரிலேயே இறைவனோடு கலந்தார்.

தமிழ்நாட்டு ஆண்டாளுக்கும் ராஜபுதனத்து மீராவிற்கும் வாழ்வின் நோக்கம் ஒன்றாகவே இருந்தது. கண்ணனையே மணாளனாய் மனத்தில் வரித்துக்கொண்ட மாமங்கையர்கள் இருவரும்.

திருஅரங்கத்தில் இறைவனுடன் இரண்ரடறக் கலந்தாள் ஆண்டாள்.
துவாரகையில் ஆடிப்பாடியபடியே கண்ணன் சந்நிதியில் மீராவும் இறைவனோடு ஒன்றாகக் கலந்தாள் என்கிறது மீராவின் வரலாறு.

பல்லாண்டுகள் மறைந்தாலும் மீராவின் பாடல்கள்
காற்றினிலே வரும் கீதமாய்
இன்னமும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

அஷ்டலட்சுமி சம்பூர்ண ஸ்தோத்திரம்...


அஷ்டலட்சுமி சம்பூர்ண ஸ்தோத்திரம்...

 *1. ஆதிலட்சுமி*

ஸூமநஸ வந்தித ஸூந்தரி மாதவி
சந்த்ர சகோதரி ஹேமமயே
முநிகண மண்டித மோக்ஷ ப்ரதாயினி
மஞ்சுள பாக்ஷிணி வேதநுதே
பங்கஜ வாஸினி தேவஸூ பூஜித
ஸத்குண வர்ஷினி சாந்தியுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
ஆதிலெக்ஷ்மி ஸதா பாலயமாம்

*2. தான்ய லட்சுமி*

அயிகலி கல்மஷ நாசினி காமினி
வைதிக ரூபிணி வேதமயே
க்ஷீர சமுத்பவ மங்கள ரூபிணி
மந்த்ர நிவாஸினி மந்த்ரநுதே
மங்கள தாயிணி அம்புஜ வாஷினி
தேவ கணார்ச்சித பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தான்யலக்ஷ்மி  ஸதா பாலயமாம்

*3. தைர்ய லட்சுமி*

ஜயவர வர்ணனி வைஷ்ணவி பார்கவி
மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே ஸூரகண பூஜித சிக்ர பலப்ரத
ஞான விகாஸினி சாஸ்த்ர நுதே பவபய ஹாரிணி பாப விமோசனி
சாது ஜநாச்ரித பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தைர்யலக்ஷ்மி  ஸதா பாலயமாம்

*4. கஜலட்சுமி*

ஜய ஜய துர்கதி நாசினி காமினி
சர்வ பலப்ரத சாஸ்த்ரமயே
ரதகஜ துரசு பதாதி சமாவ்ருத
பரிஜன மண்டித லோகநுதே
ஹரிஹர ப்ரம்ம ஸூ பூஜித சேவித
தாப நிவாரிணி பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
கஜலக்ஷ்மி ஸதா பாலயமாம்

 *5. சந்தான லட்சுமி*

அயிகக வாஹினி மோஹினி சக்ரிணி
ராக விவர்த்தினி ஞானமயே
குணகண வாரிதி லோக ஹிதைஷினி
ஸ்வர ஸப்த பூஷித கானறுதே
சகல ஸூராஸூர தேவ முநீஸ்வர
மாநவ வந்தித பாத யுதே
ஜெய ஜெய ஹே மது ஸூதன காமினி
சந்தான லக்ஷ்மி ஸதா பாலயமாம்

 *6. விஜய லட்சுமி*

ஜய கமலாஷநி சத்கதி தாயினி
ஞான விகாஸினி கானமயே
அனுதின மர்ச்சித குங்கும தூசர
பூஷித வாஸித வாத்ய நுதே
கனகதாரா ஸ்துதி வைபவ வந்தித
சங்கர தேசித மான்யபதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
விஜயலக்ஷ்மி  ஸதா பாலயமாம்


  *7. வித்யா லட்சுமி*

ப்ரணத ஸூரேஸ்வரி பாரதி பார்கவி
சோக விநாசினி ரத்னமயே
மணிமய பூக்ஷித கர்ண விபூஷண
சாந்தி ஸமாவ்ருத ஹாஸ்யமுகே
நவநிதி தாயினி கலிமல ஹாரிணி
காமித பலப்ரத ஹஸ்தயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
வித்யாலக்ஷ்மி  ஸதா பாலயமாம்


 *8. தனலட்சுமி*

திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி
துந்துபி நாத ஸூ பூர்ண மயே
கும கும குங்கும குங்கும குங்கும
சங்க நிநாத ஸூவாத் ய நுதே
வேத புராணே திஹாச ஸூ பூஜித
வைதிக மார்க ப்ரதச்ச யுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தனலக்ஷ்மி ஸதா பாலயமாம்

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

இன்று (24.08.18) - வரலட்சுமி விரதம்



இன்று (24.08.18) - வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம் என்பது 16 வகை செல்வங்களுக்கும் அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும் முக்கியமான விரதம் ஆகும்.

மகாலட்சுமியின் அவதார நாள் துவாதசி வெள்ளிக்கிழமை என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத நாளாகும்.

சுமங்கலிப் பெண்கள் தங்கள் மாங்கல்யம் நிலைக்கவும், தங்களின் குடும்பங்கள் செல்வ, செழிப்போடு இருக்கவும், கன்னிப்பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தினை மேற்கொள்வது வழக்கம்.

திருமணம் ஆகாதவர்கள் இதனைக் கடைபிடிக்க விரைவில் திருமணம் கைகூடி வரும்.

இந்த விரதத்தினைக் கடைப்பிடிப்பதால் அன்னை வரலட்சுமியின் அருள் பெற்று மகிழ்ச்சியும், நலமும் ஏற்படும் என்பது ஐதீகம்.

*வரலட்சுமி விரதத்தின் புராண வரலாறு*

1. சிவபெருமானின் உபதேசப்படி, மகாலட்சுமியை வழிபட்டு விரதம் பூண்டாள் உமாதேவி. இதனாலேயே முருகன் அவதாரம் நிகழ்ந்தது என புராணங்கள் கூறுகின்றன.

மலைமகளாம் பார்வதி தேவி, அலைமகளாம் திருமகளைப் போற்றி, விரதம் பூண்ட நன்னாளே வரலட்சுமி விரத நன்னாள் ஆகும்.

2. கயிலாயத்தில் ஒருநாள் சிவபெருமானும், உமாதேவியும் "சொக்கட்டான்' என்ற பகடை விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

"விளையாட்டில் நான்தான் வெற்றி பெற்றேன்' என்றார் சிவன்.

ஆனால் உமாதேவியோ, ""இல்லையில்லை. சொக்கட்டான் விளையாட்டில் வென்றவள் நானே'' என்றாள்.

அந்த விளையாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சித்ரநேமி என்ற கந்தர்வனிடம், "நீதான் யார் வெற்றி பெற்றது என்று கூற வேண்டும்' என்று சிவபெருமான் சொல்ல, அவனோ, "சிவபெருமான்தான் வெற்றி பெற்றது' என்றான்.

சித்ரநேமி பொய்யான தீர்ப்பு கூறியதாக எண்ணிக் கோபமடைந்த உமாதேவி, "நீ பெருநோய்க்கு ஆளாவாய்' என்று சாபமிட்டாள்.

தன்னை மன்னிக்குமாறு சித்ரநேமி வேண்ட, "கற்புக்கரசிகள் வரலட்சுமி விரத பூஜை செய்வதை நீ பார்க்கும்போது, உன் பெருநோய் நீங்கும்' என்றாள்.

அதன்படி சித்ரநேமியும் அந்த விரதத்தைக் கண்டு நோய் நீங்கப் பெற்றான். எனவே வரலட்சுமி விரதம் மேற்கொள்ள நோய்நொடி நீங்கும் என்பது நம்பிக்கை.

3. மகத தேசத்தில் குண்டினபுரம் என்னும் நகரில் பிறந்து வாழ்ந்து வந்தாள் சாருமதி. கற்பில் சிறந்தவள். தன் கணவன், மாமனார், மாமியாருக்கு வேண்டிய நற்பணிகளைச் செய்வதையே வாழ்நாள் பாக்கியமாகக் கொண்டவள்.

தன் கணவன் உஞ்ச விருத்தி மேற்கொண்டு பெற்ற அரிசியை அடிசிலாக்கி வறுமையிலும் பெருமையான வாழ்க்கையை நடத்தி வந்தாள்.

எத்தகைய வறுமையிலும் இறைவனை வணங்கிடத் தவறியதில்லை. அவளுக்கு அருள்புரிய நினைத்த மகாலட்சுமி, சாருமதியின் கனவில் தோன்றினாள்.

""உனது சிறப்பான பக்தி எனது நெஞ்சை நெகிழ வைத்தது. நீ என்னை பூஜித்து வழிபாடு செய்வாய். அதனால் உனக்கு சகல செல்வங்களும் கிடைக்கும்'' என்றாள்.

அதன்படி சாருமதி மேற்கொண்ட விரதமே வரலட்சுமி விரதம். அதன் பயனாக பதினாறு செல்வங்களையும் பெற்றாள் சாருமதி.

4. பத்ரச்ரவஸ் என்ற மன்னன் விஷ்ணு பக்தன். அவனுடைய மனைவி சுரசந்திரிகா, மகள் சியாமபாலா. மகளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு  மணமுடித்துக் கொடுத்தார்கள்.

காலங்கள் கடந்தன. ஒருநாள் வயது முதிர்ந்த ஒரு சுமங்கலி மூதாட்டி பத்ரச்ரவசின் அரண்மனைக்கு வந்தாள். மூதாட்டியின்  வடிவெடுத்து வந்தது சாட்சாத் மகாலட்சுமி தேவி.

வரலட்சுமி விரதத்தின் அருமை பெருமைகளை சொன்ன மூதாட்டி, அந்த விரதத்தை கடைபிடிக்குமாறு  சுரசந்திரிகாவிடம் சொன்னாள்.

வந்திருப்பது லட்சுமி தேவி என்பது அவளுக்கு தெரியவில்லை. பிச்சை கேட்க வந்த கிழவி உளறுவதாக கருதி, அவமானப்படுத்தி விரட்டினாள் சுரசந்திரிகா.

லட்சுமிதேவி ஒரு இடத்துக்கு வருவது சாமானிய காரியம் அல்ல. அரண்மனையை தேடிவந்தவளை விரட்டினால் அங்கு இருப்பாளா? அந்த இடத்தை விட்டு  அகன்றாள் லட்சுமி தேவி. விளைவு..

மணிமகுடத்தையும் செல்வச் செழிப்பையும் இழந்தாள் சுரசந்திரிகா.

அந்த இடத்தை காலிசெய்த மகாலட்சுமி நேராக அரசியின் மகள் சியாமபாலாவிடம் சென்றாள். வரலட்சுமி விரதத்தின் பலன்கள் பற்றி அவளிடமும் சொன்னாள்.

சியாமபாலா பக்தி சிரத்தையுடன் அதை
கேட்டாள். பயபக்தியுடன் வரலட்சுமி நோன்பு மேற்கொண்டு பூஜை செய்து வழிபட்டாள். விரத மகிமையால் அவளிடம் மலை போல் செல்வம் குவிய  தொடங்கியது.

பெற்றோர் வறுமை நிலையில் இருப்பதை சியாமபாலா அறிந்தாள். ஒரு செப்பு பானை நிறைய தங்கத்தை நிரப்பி அவர்களுக்கு அனுப்பி வைத்தாள்.

அவள் அனுப்பி வைத்தாலும், அதை அனுபவிப்பதற்கு யோகம் இருக்க வேண்டுமே. அவர்களை சூழ்ந்திருந்த தரித்திரம், அவயோகம் அந்த வாய்ப்பை தடுத்துவிட்டது.

அவர்களிடம் வந்ததுமே, ஒரு பானைத் தங்கமும் கரியாக மாறிவிட்டது. இதை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தாள் சியாமபாலா.

வீடு தேடி வந்த லட்சுமி தேவியை அவமானப்படுத்தி அனுப்பியதாலேயே அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டாள். வரலட்சுமி விரதத்தின் மகிமைகளை தாய்க்கு எடுத்து சொன்னாள்.

தாங்கள் செய்த தவறுகளை மன்னித்து அகம்பாவத்தை போக்குமாறு மகாலட்சுமியை மனமுருக வேண்டினாள் சுரசந்திரிகா.

வரலட்சுமி விரதம் மேற்கொண்டு, பூஜை, வழிபாடு செய்து பிரார்த்தனை செய்தாள். இழந்த செல்வங்களை மட்டுமின்றி, ஆட்சி, அதிகாரமும் அவர்களை வந்தடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

*வரலட்சுமி விரத பூஜை முறை*

இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்கள், முதல் நாளன்றே வீட்டை நன்கு கழுவி தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின்னர் வீட்டு மனையை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் இட்டு மாவிலைத் தோரணம் கட்ட வேண்டும்.

விரத நாளன்று, வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்து வாசனைப்புகையால் நிரப்பி, ஐந்துமுக விளக்கேற்றி அன்னை மகாலட்சுமியை வணங்கத் தொடங்குவர்.

அதன் பிறகு, வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும்.

மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும்.

அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.

(சில இடங்களில் வீட்டின் பூஜை அறை ஒட்டிய சுவரில் வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை எழுதி ஆவாஹணம் செய்கிறார்கள். பூஜைக்காக வைக்கப்படும் கலசத்தில் காதோலை, கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவையும் போடப்படுகிறது.)

மேற்கொள்ளப்படும் விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களைக் களையும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும்.

பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை(சரடு) கையில் கட்டிக் கொள்கிறார்கள்.

மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது.

எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.

பூஜையின் முடிவில் மூத்த சுமங்கலிகள் மற்ற பெண்களின் வலது கையில் மஞ்சள் கயிறை கட்டி விட வேண்டும். கட்டும் போது,

நவ தந்து ஸமாயுக்தம் நவக்ரந்தி சமந்விதம்
பத்றீயாம் தட்சிணே ஹஸ்தே தோரகம் ஹரிவல்லபே

என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

இதை சொல்ல முடியாதவர்கள், "ஒ நாராயணனின் மனைவியான மகாலக்ஷ்மியே !! 9 இழைகளும், 9 முடிச்சும், கொண்ட இந்த மஞ்சள் கயிற்றினை பிரசாதமாக ஏற்று வலது கையில் கட்டிக் கொள்கிறேன். எனக்கு நீ அருள்புரிய வேண்டும்" என்று கூற வேண்டும்.

விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் (ராகு காலத்துக்கு முன், சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து

மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும்.

அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும்.

அவரவர் வசதிக்கேற்ப வடை, பாயசம், பொங்கல் என நிவேதனம் செய்யலாம். பழங்கள் எனில், ஆரஞ்சு, விளாம்பழம், மாம்பழம், வாழைப்பழம், திராட்சைப்பழம் போன்றவற்றை நிவேதனம் செய்யலாம்.

மாலையில் அக்கம்பக்கம் இருக்கும் சுமங்கலி பெண்கள், குழந்தைகளை பூஜைக்கு அழைக்கலாம். அனைவரும் சேர்ந்து மகாலக்ஷ்மி அஷ்டகம், லட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், சகலகலாவல்லி மாலை, லலிதா சகஸ்ரநாமம் போன்றவற்றை சொல்லி விரதம் முடிக்கலாம்.

தீபாராதனை முடிந்ததும், வந்திருக்கும் பெண்கள் அனைவருக்கும் நோன்பு கயிறு, முழுத் தேங்காய், பூ, பழம், குங்குமம் கொடுத்து உபசரித்து நைவேத்ய பிரசாதங்களை வழங்க வேண்டும்.

அதன் பிறகு, காலை முதல் உண்ணா நோன்பிருந்ததை சுமங்கலிகளிடம் ஆசிப் பெற்று, அன்னையை வணங்கி, உணவருந்தி விரதத்தினை நிறைவு செய்யலாம்.

*வரலட்சுமி விரதம் – சில துளிகள்*

விரத நாளன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ வரலட்சுமி அம்மனுக்கு எளிமையான ஒரு பூஜை செய்துவிட்டு அலங்காரத்தை அகற்றிக் கொள்ளலாம்.

பூஜைக்கு பயன்படுத்திய பச்சரிசி, தேங்காய் போன்றவற்றை கொண்டு அடுத்த வெள்ளிக்கிழமை பாயாசம் செய்து நிவேதனம் செய்யலாம்.

எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.

வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம்.

இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம்.

மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.

குழந்தை பாக்கிய தடைகள் நீங்கி சற்புத்திர யோகம் உண்டாகும். ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும்.

கணவன் - மனைவி இடையே மன கசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.

இந்த நன்னாளில் வீடுகளுக்கு அருகில் இருக்கும் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயில்களுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி, பக்தர்களுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல் பிரசாதம் தரலாம்.

பக்தி, ஸ்லோக புத்தகங்கள் வாங்கி தரலாம். இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வைகள் தானம் செய்ய, புண்ணிய பலன்கள் அதிகரிக்கும்.

வரலட்சுமி விரதமிருந்து மகாலட்சுமியை வழிபட்டு அவள் அருளால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம்.

*ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரி*

ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்மியை ச வித்மஹே
விஷ்ணு பத்னியை  ச தீமஹி |
தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத் ||

செல்வ வளம் தரும் வரலட்சுமி விரதம்


செல்வ வளம் தரும் வரலட்சுமி விரதம்!

செல்வத்தை அளிக்கும் வரலட்சுமியை வரவேற்கும் விதமாக இல்லம்தோறும் செய்யப்படும் பூஜை தான் வரலட்சுமி விரதமாகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி நாளைய தினம் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் வருகிறது. வரலட்சுமி விரதம் கொண்டாடப்படும் நாளன்றுதான் பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.
இந்த மகாலட்சுமியை தனலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தான லட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என்ற அஷ்ட லட்சுமிகளாக வழிபடுகிறோம். வரலட்சுமி விரதம் அன்று இந்த எட்டு லட்சுமிகளையும் மனதார வேண்டி பூஜித்தால் இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும்.
சிரவண மாதம் எனப்படும் ஆடி அல்லது ஆவணி மாதத்தில், பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சுமங்கலிகள் அனுஷ் டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. இதைச் செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப் பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர்.

விரதம் அனுஷ்டிக்கும் முறை

பூஜைக்கு முதல்நாள் வீட்டைப் பெருக்கி மெழுகி, மாக்கோலமிட்டு செம்மண் பூச வேண்டும். வாசற்படிக்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். வீட்டின் தென் கிழக்கு மூலையில் மாக்கோலமிட்டு செம்மண் இட்ட ஒரு பலகையின் மேல் தலைவாழை இலை வைத்து, அதில் சிறிது அரிசியைப் பரப்பி, அதன் மேல் அம்மன் கலசத்தை வைப்பார்கள். சிலர் சிறு மண்டபம் அமைத்து அதில் கலசம் வைத்துப் பூஜை செய்வார்கள்.
கலசத்தில் அரிசி அல்லது தண்ணீரை நிரப்பி, மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து, சந்தனம், மலர் ஆகியவற்றால் அலங்கரித்து, கலசத்தின்மேல் தேவியின் பிரதிமையை வைத்துப் பூஜை செய்வர். பூஜை தினத்தன்று ஒன்பது முடிச்சுடைய மங்களகரமான மஞ்சள் கயிற்றைப் பூஜையில் வைத்து வழிபட்ட பின்னர், அதை வலது மணிக்கட்டில் கட்டிக் கொள்ள வேண்டும்.

விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் வீட்டில் எழுந்தருளியிருக்கும் வரலட்சுமியே எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வரியங்களும் அருள்வாயே... என்று போற்றி மனம் உருக பாட வேண்டும்.
சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பூஜை முடிந்ததும் மங்கலப் பொருட்களுடன் தட்சணையும் வைத்துக் கொடுத்து அனுப்ப வேண்டும்.
அன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ வரலட்சுமி அம்மனுக்கு எளிமையான ஒரு பூஜை செய்துவிட்டு அலங்காரத்தை அகற்றிக் கொள்ளலாம்.
பூஜைக்குப் பயன்படுத்திய பச்சரிசி, தேங்காய் போன்றவற்றை கொண்டு, அடுத்த வெள்ளிக்கிழமை பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம்.
கன்னிப் பெண்கள் இந்த விரதம் இருந்தால் விரைவில் திருமணமாகும். வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும். இந்த விரதம் மேற்கொள்வோர் விரும்பிய நலன்கள் எல்லாம் கிட்டும். இந்த விரதம் மேற்கொள்ளும் வீட்டில் எப்போதும் செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.


புராணக் கதை

பத்ரசிவன் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் மனைவி கரசந்திரிகா. இவர் களது ஒரே மகள் சியாமபாலா. அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தாய் துயருற்றாள். அவளது கவலையைத் தீர்த்து அவளுக்கு ஒரு ஆண் மகவு பிறக்க அருள் செய்ய எண்ணினாள் மகாலட்சுமி. அதனால் வரலட்சுமி விரதம் பற்றி எடுத்துக்கூற வயதான சுமங்கலி வடிவில் அவளிடம் சென்றாள். ஆனால் வந்திருப்பது லட்சுமிதேவி என்று அறியாத கரசந்திரிகா அவளை அவமானப் படுத்தி அனுப்பி விட்டாள்.
அங்கிருந்து சியாமபாலாவிடம் சென்ற மகாலட்சுமி நடந்தவற்றைக் கூறி, தான் போனால் எல்லா யோகங்களும் அரண்மனையை விட்டுப் போய்விடும் என்று கூறினாள். தன் தாயின் தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கோரிய சியாமபாலா, வரலட்சுமி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்து சிரத்தையுடன் அதைக் கடைப் பிடித்து வரத் தொடங்கினாள். அதன் பிறகு அவளுக்குச் சுபிட்சம் பொங்கிய அதே நேரத்தில் அவளது பெற்றோர் அனைத்து செல்வங் களையும் இழந்தனர்.

தன் பெற்றோரது வறுமையை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அக்குடத் தில் கரசந்திரிகா கை வைத்ததும் பொற்காசுகள் கரியாகி விட்டன. இதையறிந்த மகள் அந்த ஆண்டு தன் தாயுடன் வரலட்சுமி விரதம் மேற் கொண்டாள். விரதத்தின் மகிமையால் கர சந்திரிகா தன் முந்தையை சுபிட்ச நிலையை எய்தியதோடு ஆண் வாரிசும் பெற்றாள். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள் என்பதை இவ்வரலாறு எடுத்துரைக்கிறது.
அனைத்து வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுவோம்.


பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்?

மகாவிஷ்ணுவை மணந்தாள். விஷ்ணு பூமியில் அவதாரம் செய்த நாட்களில் சீதாவாகவும், பத்மாவதியாகவும், துளசியாகவும், ஆண்டாளாகவும். இன்னும் பல வடிவங்கள் எடுத்து வந்தவள். பூலோகத்திலும், அவள் அவரைக் கைப்பிடித்தாள். செல்வத்தின் அம்சமாக இருந்து, நம் பாவ, புண்ணியத்திற்கேற்பவும், விதிப்பலனுக்கேற்பவும் செல்வத்தை வழங்கும் அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமே வரலட்சுமி விரதம் ஆகும்.நித்தியசுமங்கலியான மகாலட்சுமி பொறுமையே வடிவானவள். கணவரின் இதயத்தில் குடியிருக்கும் இவள், பெண்களை துன்பங்களில் இருந்து காப்பவளாக திகழ்கிறாள். மஞ்சள் நிற பட்டு அணிந்திருக்கும் இவள் கருணை, அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியாவாள். அதர்வண வேதத்தில் லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று கூறப்பட்டுள்ளது. பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம். இதனால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். திருமணதோஷம் உள்ள கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். செல்வம், தான்யம், தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், கல்வி போன்ற செல்வங்கள் அனைத்தும் கிடைக்கும்.வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள், லட்சுமியை பூஜிக்கும் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிப்பது நல்லது. இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பர்.
வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் வீட்டின் தென்கிழக்கு மூலையில் சிறு மண்டபம் அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்விடத்தில் ஒரு பலகையை வைத்து அதில் சந்தனத்தில் செய்த லட்சுமியின் வடிவத்தை வைக்கவேண்டும். வெள்ளி சிலைகளும் வைக்கலாம். சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவித்து, தாழம்பூவால் அலங்காரம் செய்து, எதிரில் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். புனித நீர் நிரம்பிய கும்பத்தை அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள், தங்கநகை ஆகியவற்றையும் இலையில் படைக்க வேண்டும். கொழுக்கட்டை நைவேத்யம் செய்ய வேண்டும். பின்பு பூஜை செய்ய வேண்டும். அப்போது, அஷ்டலட்சுமிகளுக்கு விருப்பமான அருகம்புல்லை சிலை மீது தூவி பூஜிப்பது நல்லது. ஏழை சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறை வலது கையில் கட்டி, தேங்காய், குங்குமம், புதிய ஆடைகள் கொடுக்க வேண்டும். பூஜைக்கு பிறகு, கும்பத்திலுள்ள புனிதநீரை செடி அல்லது மரங்களுக்கு ஊற்றிவிட்டு, கும்பத்தை ஒரு பெட்டியில் வைத்து பத்திரப் படுத்த வேண்டும். அதை சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும். வேறு பூஜைகளுக்கு இதைப் பயன்படுத்தும் போது மட்டுமே எடுக்க வேண்டும். சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. அது நெளிந்து விட்டாலோ, பிற பழுது ஏற்பட்டாலோ யாருக்காவது தானமாகக் கொடுத்து விட வேண்டும். சந்தனத்தில் செய்த லட்சுமியின் உருவத்தை மறுநாள் நீர்நிலைகளில் கரைத்து விட வேண்டும். தேவலோகத்தில் சித்திரநேமி என்ற பெண் வசித்து வந்தாள். இவள், தேவர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நீதிபதியாக இருந்தவள். ஒருசமயம் அவள் தீர்ப்பு சொல்லும்போது, பாரபட்சமாக நடந்து கொண்டாள். நீதி வழங்குபவர்கள் எந்த சூழ்நிலையி<லும் நடுநிலை தவறக்கூடாது. ஆனால், சித்திரநேமி தன் பணியில் இருந்து தவறி விட்டாள். எனவே, பார்வதிதேவி அவளுக்கு குஷ்டநோய் ஏற்படும்படி சபித்து விட்டாள். சித்திரநேமி சாப விமோசனம் கேட்டாள்.
வரலட்சுமி விரதம் இருந்து தன்னை வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்றாள். அதன்படி சித்தரநேமி, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கி, நோய் நீங்கப்பெற்றாள். பணியிலோ, குடும்ப விவகாரத்திலோ நடுநிலை தவறி, அதனால் மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு வரலட்சுமி விரதம் அனுஷ்டிப்பது மனபாரத்தை குறைக்கும் மருந்தாக இருக்கும். வரலட்சுமி விரதத்தன்று, புண்ணய நதிகளில் நீராடுவது, ஒரு வருடம் தொடர்ந்து வரலட்சுமி விரதம் இருப்பதற்கு ஒப்பான பலன்களைத் தரும். கங்கை, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய நதிகளில் அன்று நீராடினால் செல்வச்செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை. புகுந்த வீட்டு உறவினர்களை மதித்து நடக்கும் பெண்கள், வரலட்சுமி விரதம் இருந்த பலன்களை பெறுவதாக ஐதீகம். மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண்ணை அவளது பெற்றோர் மண முடித்துக் கொடுத்தனர். புகுந்த வீட்டில் கணவன், மாமனார், மாமியார், உறவினர்கள் என அனைவரையும், அவள் சொந்தமாக பார்க்காமல், கடவுளின் வடிவமாகவே பாவித்து, பணிவிடை செய்தாள். இதனால், அவள் வரலட்சுமி விரதம் இருந்த பலனை பெற்றாள். தன் கணவனுடன் நீண்ட காலம் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள்.
வரலக்ஷ்மி அம்மன் பூஜையின் விபரம்
தாமரச் சொம்பிலோ, அல்லது வெள்ளிச் சொம்பிலோ சுண்ணாம்பு பூசி, ஸ்ரீ தேவியின் முகத்தை செங்காவியினால் எழுதி கலசத்திற்குள் சோபனத்திரவ்யம் (அரிசி, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், எலுமிச்சை, ஸ்வர்னம்) போட்டு:
ஓலை, கருகமணி போட்டு; கண்ணாடி, சீப்பு, வைத்து கலசத்தில் மாவிலை தேங்காய் வைத்து, ஆபரணம் பூமாலை இவைகளால் அலங்கரிக்க வேண்டும். ரேழியில் மாவு கோலம் போட்டு அங்கே தீபம் ஏற்றிவைத்து பலகை மீது கலசத்தை வைத்து தீபாராதனை செய்து மங்களம் பாடி ஹாரத்தி எடுத்து இருசுமங்கலிகள் கைபிடித்து லக்ஷ்மி! ராவேமாயிண்டிகு என்று பாடி உள்ளே கொண்டு போய் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தின் நடுவில் வைத்து நுனி இலையில் அரிசியைப் பரப்பி அதன் நடுவில் கலசத்தை வைத்து பூஜை ஆரம்பிக்க வேண்டும்.
சுவற்றில் சுண்ணாம்பு அடித்து மண்டபம் போல் எழுதி நடுவில் தேவி உருவத்தையும் எழுத வேண்டும். மாலை வேளையே லக்ஷ்மி பூஜைக்கேற்ற காலமாகும். காலத்திற்கேற்றபடி சிலர் காலையிலேயே அனுஷ்டிக்கிறார்கள். ஸ்ரீ குருவை நமஸ்கரித்து ஆசி பெற்று சந்தோஷமான மனதுடன் அம்மனைக் கொண்டாடி பூசித்து நிவேதனம் செய்து மங்களங்கள் பாடினால் லக்ஷ்மி நாராயணனுமாக நம் இல்லத்தில் வாஸம் செய்து சர்வமங்களங்களையும் அளிக்க வல்ல ஸ்ரீ ருக்மணி காந்தனுடைய அருள் ஏற்படும் என்பது திண்ணம்.
ஓம் ஸ்ரீ மகாகணபதயே நம:
ஓம் ஸ்ரீ ஸத் குருப்யோ நம:
ஓம் ஸ்ரீ பாலா திருபுர ஸூந்தர்யை நம:
லக்ஷ்மி ராவே மா இண்டிகி
ஸ்ரீ ராஜபுத்ரி வரலக்ஷ்மி ராவேமா இண்டிகி
அனுபல்லவி
லக்ஷ்மி ராவே மா இண்டிகி லாலிதமுகநேலாகொந்த
சுப்ரஸன்ன சுந்தரி பிருந்தாவன
தேவதாரி - லக்ஷ்மி ராவே மா இண்டிகி
சரணம்
குங்கம பச்ச கஸ்தூரி கோர்க்ய தோன
கோர ஜவ்வாஜூ அங்கித முகனே
சுல கந்தம் சந்தமுக சாம்பிராணி தூபம்
மாதாநீகு ப்ரீ திகா பிரக்யா திகா
சமாபிந்து நம்மா
குண்டுமல்ய லமரகானு தண்டிக சாமந்தியா
பூலு மேலைன பாரிஜாதமு மாதாமீகு
ப்ரீதிகா ப்ரக்யாதிகா சமர்ப்பிந்து நம்மா
அந்தனமனா அன்னி பண்டுலு கதலீ
நிம்மாதிபலமுலு ஸததமு கல்ஜூரபலமு
மேலைன தாளிம்பலமு பண்டு வெந்நலா
ஸெள பத்மாக்ஷி நின்னே பூஜந்து - லக்ஷ்மி
பூஜா சேதா முராரே மன கௌரிகி
பூஜா சேதா முராரே த்ரேஜா முகா நேடு
ராஜீவாக்ஷிலு மேமு ஜாஜி பூலா (பூஜா சேஸ்தா முராரே)
பங்காரு தட்டலதோ பொங்குக புஷ்பமுலு
மங்கள வாத்யமுதோ மனகௌரிகு
பூஜா சேஸ்தாமுராரே - கெந்த குங்கும ஆனந்த மூகானு தெச்சி
இந்துவதனலார இந்திரக்ஷிகி (பூஜா சேஸ்தா முராரே)
குண்டு முல்யாபூலு நிண்டு முகிலுபூலு தண்டீக
கட்டி ஜடநிண்டா சுட்டி
பங்கஜபாணிகி பரம கல்யாணிகி சங்கரி
ராணிகி சிவ வேணிகி (பூஜா சேஸ்தா முராரே)
கௌரீ கல்யாணமே - வைபோகமே
ரம்மி முத்துலகம்மா ரம்மி மாயம்மா ராவம்மா
ஜானகி ரமணீய ரத்னம்மா
சில கல குலுகிரோ சிருங்கார கௌரீ
தலகனி நிரு பூலத் ரோய ஜகந்தி
வேகரா மஹாலக்ஷ்மிவேக ராவம்மா
வேண்டி கொடுகு நீட வேகரா ராவம்மா
பக்திதோ கொலிசன பண தூலபால வெளிசி
னாவு நித்ய கல்யாண முகனு
ஜகதீச்வரி நின்ன அடிகின வரமுலு
இச்சே தல்லி வரலக்ஷ்மிக்கு வஜ்ரால
ஹாரதிலு எத்திதரே சாலபூவுலு
சுட்டி சர்வாபரணமுலு தொடிகி சந்தோஷ
முகநீவு ஒச்சே தல்லி
வஜ்ராலபிடமுல வெலகு சுன்ன தல்லி
கலிகே இண்டிகி ஒச்சே லக்ஷ்மி ஜய மங்களம்
பூஷணா நினு கொலுது புஷ்பானுநினு கொலுது
கெந்தானினு கொலுது சந்தானலு எப்புடு
நின்னு கொலுசி ஏகசித்த மமேனனு பாயக நீன
கொலுது பரமேச்வரி
சங்கரீ ஜகதம்ப ஜகந் நித்யகல்யாணி
பங்கஜ தள நேத்ரீ பாவன பாஹிமாம்
கான்தோசிரோன்மணி கமலதள நேத்ரீ
மந்தர புஷ்பம் பெட்டி மங்களலக்ஷ்மிகி


1. வரலெக்ஷ்மி அம்மனுட மகிமையுள்ள கீர்த்தனங்கள்
மங்களமாகவே மகிழ்ந்து பாட
ச்ருங்கார கணபதியெ ஜெயமாக வந்தெனக்கு
தங்காமல் சரஸ்வதி சகாயம் வேணும் (ஜெய)
2. கைலாஸந்தனிலே காட்சியுடனே இருக்கும்
கருணாகடாக்ஷரென்னும் பரமேச்வரர்
அவருடைய பாதத்தில் ஆனந்தமாகவே
அன்புடனே பார்வதியும் அடிபணிந்தாள் (ஜெய)
3. சொல்பொரியே ஈசுவரியே சுபகீர்த்தியுள்ளவளே
கலியிலே கல்பிச்ச விர தங்கள் தன்னில்
எந்த விருதம் அதிசயம் ஏதென நியமிச்சு
எந்தனுக்கு சொல்லுவாய் இஷ்டமாக (ஜெய)
4. உமையாளே கேளு நீ. ஒரு கதை சொல்லுகிறேன்
தரணியிலே அனேக விரதங்களுண்டு
ஆனாலும் வரலக்ஷ்மி அம்மன் விரதம் அதிசயம்
அனைவரும் ஆதரித்துக் கொள்ளவேணும் (ஜெய)
5. குண்டிலம் என்றொரு மண்டிலப் பட்டணத்தில்
சாருமதி என்ற மங்கை இருக்க
சாருமதி மங்கையை சகலரும் கொண்டாடும்
சந்தோஷ விப்ரருடைய பத்னியாளாம் (ஜெய)
6. அவளுடைய மகிமை யார்தான் அறியதொரு
அருந்ததி குணசாலி அம்மன் அவளே
மாமியார் மாமனார் மாதா பிதாக்களை
குரு பூஜை பண்ணுவாள் கோபமில்லாமலே (ஜெய)
7. பர்த்தாவின் பூஜையில் பழுதொன்றும் வாராது
பாக்யவதி சொர்ப்பனத்தில் வந்து சொன்னாள்
சிராவணமாஸத்தில் பௌர்ணமிக்குள்ளாக
சுக்ரவாரந்தனிலே சுகிர்தத்துடனே (ஜெய)
8. என்னை நீபூஜித்து இஷ்டவரம் நான் தந்து
கஷ்டமெல்லாம் போக்கி கனவிலே
சொல்லவே வரலக்ஷ்மி சோகமெல்லாம் குளிர்ந்து
மெல்லியர் கண்முன் மறைந்து கொண்டாள் (ஜெய)
9. நல்வாக்கிய மிதுவென்று நாடெல்லாம் அறியவே
சொன்னாளே சாருமதி சுபகதைகளை சகலரும்
கொண்டாடி சந்தோஷப்பட்டு உகந்து
கண்டாளே கருணா கடாட்சி யம்மனை (ஜெய)
10. உண்டு பண்ணாமலே மேதினியில் உள்ளவர்கள்
கொண்டாடி பூஜிக்கவேணும் எனறு
நதியில் ஸ்னானம் பண்ணி நெற்றி குங்குமமிட்டு
பக்தியுடன் ஸூப்ர வஸ்திரம் தரித்தாள் (ஜயசுப)
11. நித்யமா வரலெக்ஷிமி முக்தி தரும் நாயகி சித்தத்திலே மறைஞ்சு
செல்வமாக்கும் சித்திரம் எழுதியே சிறப்பாக கிரகந்தனில்
முத்திடித்து கோலம்போட்டு முஹூர்த்தம் பார்த்து
12. பத்துவித மாலையும் கட்டுடனே புஷ்பமும் (கட்டின பூப்பந்தல்)
கல்யாணிக்கு ரத்னகோலம் எழுதி பஞ்சவர்ண பொடி போட்டு
13. ரத்ன விளக்கேற்றி இருபு றமும் வைத்தாள் (ஜய)
நித்யமாமங்கையர்கள் பூஜிக்கவேணுமின்னு
பக்தியுடன் தேவியை வாருமின்னு அச்சுதன்
தேவியர்க்கு அலங்கரித்து வீதியெல்லாம்
பைங்கிளிமார் எதிர்கொண்டு பார்த்து நின்றார் (ஜய)
14. புண்டரீ காக்ஷருடைய பூர்ணநாயகிம்மன்
தண்டின் மேலேறி ஸகலரும் சூழவே
மண்டலம் அதிரவே மணிமேளம் முழங்கவே
கொண்டாடி திருவீதி தன்னில் வந்தாள் (ஜய)
15. வரலெக்ஷ்மி வருகிறாள் என்று சொல்லி மங்கையர்கள்
மாணிக்க சிம்மாஸனங்கள் போட்டு கற்பூரஹாரத்தி
காக்ஷியுடனே எடுத்து கைபிடித்து கிரகந்தனிலே
அழைத்து வந்தார் (ஜய)
16. திருமஞ்சனமாடி தேன் மொழியாளுக்கு
பச்சை பசேலென்ற மஞ்சளைப் பார்த்துப்பூசி
பட்டாலே ஸரஸ்வதியை பார்த்து தலைமயிரொதரி
கட்டினாள் ஒரு முடிச்சு கல்யாணிக்கு
17. பீதாம்பரம் உடுத்தி பெருமை யுள்ளலக்ஷ்மிக்கு
ஆதார மாலையிட்டு அம்மன் அவளே
ஸாதூத மங்கையர்கள் சந்நிதியில் ஸ்தோத்தரித்து
போதுடனெ எழுந்திருக்க வேணுமின்னாள் (ஜய)
18. பத்துவித மாலையும் கஸ்தூரி திலகத்தை காக்ஷியுடனே
இட்டு சித்தாக குங்குமம் சிறப்பாக இட்டு
விஸ்தாரமான கண்களுக்கு மை எழுதி
பக்தியுடன் சந்தனங்கள் தரித்தார் (ஜய)
19. சுட்டியோடு பட்டமும் சூரியசந்திர பிரபைகளும்
சட்டமான மூக்குத்தி சரப்பள்ளியுடன்
பொட்டு திருமங்கலியம் புது பவழமாலைகளும்
மட்டில்லா பூ ஷணங்கள் எடுத்து நிறைத்தாள் (ஜய)
20. தண்டையோடு பொற்சிலம்பு கால்சிலம்பு பாடகம்
குண்டு மோகன மாலை கொப்புபோல நத்து மூக்குத்தியும் நல்ல
முத்து புல்லாக்கு அம்மனுக்கு வேணுமென்று கொண்டு நிறைத்தாள்
21.மல்லிகை ஜெண்பகம்மணமுள்ள மல்லிகைமகிழம்பூ
வேர்கொழுந்து கொத்தரளி மாலைகளும் கொட மல்லிகை
சித்தாக செந்தாழை சிறுமடலைமாலை கட்டிவைத்து
மலர் சொரிந்தாள் வரலெக்ஷிமிக்கு (ஜய)
22. கண்ணாடி கொண்டுமே காக்ஷியுள்ள மங்கையர்கள்
முன்னே நின்று காட்ட திருமுகம் தெரியவே
சொன்னபடி அலங்காரம் சுகமாக ஆச்சு
என்று சொல்லி பொன்னான வரலெக்ஷிமி
புகழ்ந்து கொண்டாள் (ஜயமங்களம்)
23. வெளிதனிலே நானிருந்தால் மேதியினியில் உள்ள
வர்கள் கண்பட்டால் திருஷ்டி கடுகிவருமே
கனகமயமாயிருக்கும் காந்தியுள்ள பொற்குடத்தில்
கடுகியிருத்தி வைத்து கருணை செய்யும் (ஜய)
24. பூஜிக்கும் பெண்களெல்லாம் பக்தியுடனே மகிழ்ந்து
பொன்குடத்தில் முத்து எடுத்துபூக்கள் நிறைத்தார்
கொத்து மாஇலை தேங்காய் கொண்டாடியே
எடுத்து பிராணப்ரதிஷ்டை பண்ணினாள் (ஜய)
25. மங்கையர் கங்காஜல மெடுத்து வந்து
சிங்கார வரலெக்ஷிமி திருக்கைகளை
சம்பிரமாக பொடி பூசி சதுராகவே நிறுத்தி
அன்புடன் ராஜ உபசாரம் செய்தாள் (ஜயமங்க)
26. பேரியோடு மத்தாளம் பெரிய தொரு நாதசுரம்
தவுல் ஜால்ரா ஸாரஸங்கள் ஊத
அங்கவங்க தவளரஸம் அம்மனுக்கு வேணுமென்று
இன்பமாகவே பொற்குடத்தில் இருந்து கொண்டாள் (ஜய)
27. தும்புரு நாரதர் சுப வீணை வாசிக்க ரம்பை
திலோத்தமை நாட்டியமாட சந்ததம் பக்தர்கள்
ஸ்ந்நிதியில் ஸதோத்தரித்து இந்த விருதம்போல
உலகத்தில் இல்லை என்றார் (ஜய)
28. வாத்தியாரை வரவைத்து வரிசையாய் மணை
மகிமையுள்ள லக்ஷ்மிகதை மறவாதீர் நீர் போட்டு
எந்தனுக்கு சொல்லுமென்று இஷ்டமான மங்கையர்கள்
சட்டமாக பூஜிக்க வந்திருந்தார் (ஜய)
29. மங்கையர் சொன்னபடி மகிழ்ந்த வாத்தியார்
அன்புடனே அம்மன் சொன்ன சொப்பனத்தை
சம்பிரமமாக கல்பமாய் சகல கதை உண்டாக்கி
லக்ஷ்மிகதை சொல்லவே வந்திருந்தார் (ஜய)
30. பூவினால் பூஜீத்து பூலோக நாயகியை
அக்ஷதையால் அர்ச்சித்து ஆனந்தமாய்
பக்ஷமாய் வரலெக்ஷ்மி பரதேவதை என்று
இஷ்டமான நிவெத்தியங்கள் எடுத்து நிறைந்தார் (ஜய)
31. வடையுடனே அதிரஸம் வகையான பணியாரம்
கதல ஜம்பூபலம் கனத்த தேங்காய், பானகம் வடப் பருப்பு
பஞ்சாமிருதம் தேனும், இளநீரும் செங்கரும்பும்
எடுத்து நிறைந்தார்
32. அப்பமொடு இட்லி ஆனதொரு மோதகம்
சக்கரைப் பொங்கலுடன் சிருபருப்பு பொங்கல்
கருச்சிக்காய் தேங்குழல் கட்டித்தயிர் சால்யன்னம்
பரிபூர்ணமாய் நிவேத்யம் செய்தாள் பாக்கிய லெக்ஷ்மிக்கு
பரிபூர்ணமாய் பூஜித்தாள் பாக்யலெக்ஷிமியை (ஜய)
33. அகில தேவர்களே நீர்வந்தது சுபமாச்சு என
சொல்லி போஜன உபசாரங்கள் செய்தார்
வந்தவர் எல்லோரும் ஆனந்தமாகவே
அந்தக்ஷணம் மேளம் அமர்த்தி கையினால் (ஜய)
34. பந்தானத்தோட பரதேவதை சந்நிதிக்கு
வந்தாளே மங்கள ஹாரத்தி எடுக்க
பொன்னான இருபுறமும் புகழ்ந்து ஜோதிவைத்து
நன்றாக வெளுத்த திரி நனைத்துப் போட்டு (ஜய)
35. அற்புதமான பசுவின்நெய்யை அழகு அழகாய் வார்த்து
திருவிளக்கை சேர்த்து பிடித்தார்
பொன்னான அந்த நல்ல தாம்பளம் கைபிடித்து
நன்றாகவே சிரஸைவணங்கிக்கொண்டு (ஜய)
36. கல்யாண லக்ஷ்மியைக் காண வேண்டுமென்று
சொன்னாளே மங்கள ஸ்தோத்ர கதையை
அன்னலக்ஷிமி அம்மன் ஆதிலெக்ஷி அம்மன்
பொன்னுலக்ஷிமி அம்மன் புகழும் லெக்ஷிமி அம்மன் (ஜய)
37. தான்யலக்ஷ்மி அம்மன் தனலக்ஷ்மி அம்மன்
சந்தான லெக்ஷிமி சகல லக்ஷிமி அஷ்டலெக்ஷிமி
அம்மன் எல்லோரும் வந்திருந்து கஷ்டமெல்லாம்
தீர்த்து கண்டவுடனே (ஜய)
38. பரிமள மணக்கவே பாவையர்கள் பல்லாக்கு
எடுத்து சிம்மாசனத்தில் இளைப்பாரி பின்
வெள்ளெலையும்வெடக்காயும்வெளுத்ததொரு சுண்ணாம்பும்
பல்லையொத்த பச்சக் கற்பூரம் வைத்து (ஜய)
39. அளளி வெண்ணை திருடி ஆனந்தமாய் புஜிக்கும்
கள்ள கிருஷ்ணன் தேவியார்க்கு கட்டி கொடுத்தாள்
மடிப்பு டனே வெற்றிலையும் மணக்க நல்ல களிப்பாக்கு
எடுத்து வெள்ளித்தட்டில் வைத்தாள் இன்பமாக (ஜய)
40. படித்த வேதம் சொல்லும் பக்தியுள்ள ஜனங்களுக்கு
கொடுத்தாளே தாம்பூலம் வகையுடனெ
முதலாக வாத்தியாருக்கு பலகாரம் தக்ஷிணை
வரிசையாய் தாம்பூலம் வைத்துகொடுத்தாள் (ஜய)
41. மட்டில்லா சந்தோஷம் மானிடருக்கு உண்டாக்க
அஷ்டலெக்ஷிமியுடனேகிரகத்திலிருப்பாளென்று
முத்யால ஹாரத்தி வஜ்ராள ஹாரத்தி பவழஹாரத்தி
பரதேவதைக்கு (ஜய)
42. மாணிக்க ஹாரத்தி வரலெக்ஷிமி அம்மனுக்கு வரிசையாய்
பூமிதனில் இரக்கிகொண்டு இருக்கவேவரலெக்ஷ்மி
இஷ்டமாய் கிரகந்தனில் பரிபூர்ணமாகவே
இருந்து கொண்டாள் (ஜய)
43. பட்டணத்தோட பாவையர்கள் வந்திருக்க
குணமான ஜனங்களெல்லாம் கூடித்தெருவில்
எஜமானர் முகம்பார்ப்பார் இஷ்டமாக ஸ்தோத்தரிப்பார்
உம்மைப்போல் குணமுடையவர் உலகத்திலில்லை (ஜய)
44. சாருமதி அம்மனுக்கும் சகல குணசீலர்க்கும்
ஜய ஜய என்று சொல்லி ஜனங்களெல்லாம் சந்தோஷிக்க
வந்தவர்கள் எல்லோரும் மாளிகைக்குபோன பின்
அண்டையில் இருந்து வந்து ஜனங்கள் (ஜய)
45. சட்டமாய் பலகாரம் தாம்பூலம்தான் தரிச்சு
லக்ஷிமியின் சந்நிதியில் இளைப்பாறினர்
குன்றெடுத்து காத்தவருக்கும் கோபாலகிருஷ்ணனுக்கு
கோபிகளை மயங்கவைத்த கோவிந்தருக்கும் (ஜய)
46. ஈரேழு விஷ்ணுவிற்கும் எடுத்தப்பட்டம் தரிச்சவருக்கும்
எங்கள் குருநாதருக்கும் ஸ்ரீ பாலா தேவிக்கும்
கலியாண ராமருக்கும் ஜெயமங்களம் (ஜெயசுப)
சோபானை
1. மதுராலவெலசின மகிமாதலதல்லி நீவே
மாமித்ய உனிசினம்மு ரக்ஷிஞ்சவம்மா
ஒச்சினவாரிகி வரமுலிச்சே தல்லி
இச்சி ரெக்ஷிஞ்சலம்மா ஈசுவரி மீனாக்ஷிகி ப்ரோவவே (சோபானே)
2. அந்தன மனசேதனு அமரின சேகக்ஷ்க்ஷி
பந்துக கம்மலு பளபள நிறையக
முக்குண முந்தக முமெலா வெலுக்க
முந்துலாகுசூசி உளிதோ கொலுவையுண்டே மீனாக்ஷி (சோபானே)
3. சுக்ரவார பூசேர்வ சூடவேடுகலாய
எக்குண நீ சேர்வா என்னாடே தொரகுனு
ஸக்கக மொக்கேடி தண்டாலுக துல்க
ஸல்லாபக்ருபாஜூடிதல்லி ஜகன்மோகினி (சோபானை)
4. ப்ரோவே மாமித சோடு முலெஞ்ச கபாலிம்புட
மம்முவார முகாதேவி ப்ரோவவே (சோபானை)
பூஜை முடித்து மறுதினம் ஹாரத்தி எடுத்து கலசத்துடன், பாலும் பழமும் அரிசிவைக்கும் பெட்டியிலோ அல்லது அவரவர்களுக்கு உண்டான அரிசி நிறைந்திருக்கும் பாத்திரத்திற்குள் கலசத்தை வைக்கவேண்டும்.
அம்மனை அனுப்புகிற பாட்டு
க்ஷீராப்தி நாதருடன் ஸ்ரீ வரலெக்ஷிமியுடன் சேர பள்ளியறைக்குச் சென்றாள், அம்மன் சியாமள வர்ணனைக் கண்டாள். வந்தோர் வரலெக்ஷ்மியை வாஸூ தேவரும் கண்டு வஸூந்தரர் ஸகோதரி வாவென்றார் இரு கையாலும் சேர்த்து அனைத்துக்கொண்டார். சுந்தரவதன முக சுந்தரி உந்தன் மேல் சாந்தமும் காதல் கொண்டேனடி இத்தனை தாமதங்கள் ஏனடி....
பங்கஜ தயணியைக் கொஞ்சி மடியில் வைத்துக்கொண்டார். இன்பமாய் சேதிகளை கேளுங்ககோ என்று அம்மன் சந்தோஷமாக உரைத்தாள். பிராண நாயகரே நான் போகுமுன் அன்பர்கள் நன்றாய் வீதிகளெல்லாம் அலங்கரித்து சேர்வை எப்போது காண்போம் என்று காத்து பிரார்த்தித்தார்கள். (சோபானை)
சந்திரன் கண்ட சாகரம்போல் என்னை கண்டவுடன் பூரித்தார்கள். மங்களவாத்தியங்கள் கோஷித்தார். சந்தன பரிமள வெகுவித புஷ்பங்களால் எந்தனை பூஜை செய்தார்கள். பலவித பழவகைகள் வெகுவித நிவேத்தியங்கள் கனக தட்டில் முன்கொண்டு வைத்தாள். கற்பூர ஹாரத்தி எடுத்து பூஜித்த பெண்களுக்கு அபீஷ்டவரம் கொடுத்து உம்மைக் காணவந்தேன். நாம் இருவரும் அவர்கள் இல்லத்தில் ஆனந்தமாக இருக்க அருள்புரியும் நாதா. (சோபானை)
பார்வதி உள்ளத்தில் பரிபூர்ணமாய் இருந்துமே
மங்காத செல்வமும் அருளும் தந்து அஷ்ட
லெக்ஷ்மியுடன் நாமும் ஆனந்தமாகவே
மங்கள கரமாகவே மகிழடைவோம் (சோபாநை)
ஜயமங்களம் சுபமங்களம் ஸ்ரீ வரலக்ஷிமிக்கு
ஜயமங்களம் சுபமங்களம்
ஸ்ரீ வரலக்ஷ்மி விருத பூஜை
சங்கல்பம்: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்பூஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வவிக்ன உபாசாந்தையே
ஓம் பூ: - ஸூவரோம் மமோபாக்தஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வரா (ஸ்ரீ மந் நாராயண பரீத் யர்த்தம்) கரிஷ்ய மாணஸ்ய கர்மண, அவிக்னேன பரிஸ மாப்த்யர்த்தம் ஆதௌ மஹா கணபதி பூஜாம் கரிஷ்யே என ஸங்கல்பம் செய்து மஞ்சள் பொடியினால் பிம்பம் செய்து விக்னேஸ்வரரை பிரதிஷ்டை செய்து வேதம் அறிந்தவர் கணானாம் த்வா என்று மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்ய வேண்டும்.
அஸ்மின் ஹரித்ராபிம்பே ஸூமுகம் விக்னேஸ்வரம் த்யாயாமி. ஆவாஹயாமி! ஆஸனம் ஸம்ர்ப்பயாமி.
அக்ஷதை போடவும்
பாதையோ பாத்யம் ஸமர்ப்பயாமி
அர்க்கியம் ஸமர்ப்பயாமி
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(தனிப்பாத்திரத்தில் ஒவ்வொரு தடவையும் உத்தரணி தீர்த்தம் விடவும்)
ஸ்நாபயாமி (புஷ்பத்தை தீர்த்ததில் தோய்ந்து ப்ரோக்ஷிக்கவும்)
ஸ்நானாநந்தரம் ஆசமணீயம் ஸமர்ப்பயாமி தீர்த்தம் போடவும்
வஸ்திரார்தம் அக்ஷதான் சமர்ப்பயாமி உபவீதார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
கந்தான் தாரயாமி (சந்தனம் இடவும்)
கந்தஸ்யோபரி அக்ஷதான் ஸமர்ப்பயாமி( அக்ஷதை)
புஷ்பை: பூஜயாமி (புஷ்பார்ச்சனை)
1. ஸூமுகாய நம:
2. ஏகதந்தாய நம:
3. கபிலாய நம:
4. கஜகர்ணிகாய நம:
5. லம்போதராய நம:
6. விகடாய நம:
7. விக்னராஜாய நம:
8. விநாயகாய நம:
9. தூமகேதவே நம:
10. கணாத்யக்ஷõய நம:
11. பாலசந்த்ராய நம:
12. கஜானனானய நம:
13. வக்ரதுண்டாய நம:
14. சூர்ப்பகர்ணாய நம:
15. ஹேரம்பாய நம:
16. ஸ்கந்தபூர்வஜாய நம:
நாநாவித பத்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி
தூபார்த்தம் தீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
கற்கண்டு வாழைப்பழம்
ஓம் பூர்புவஸ்வ: தியோயோநப்
(நிவேதன வஸ்துவைத்து ப்ரோஷித்து)
ப்ராணாயஸ்வாஹா அபாநாய ஸ்வாஹா
வ்யாநாய ஸ்வஹா, உதாநாய ஸ்வாஹா
ஸமாநாய ஸ்வாஹா ப்ரஹ்மணே ஸ்வாஹா
விக்னேஸ்வராய நம; ரஸகண்டம்
கதலீ பலம் நிவேதயாமி, நைவேத்யாநந்தரம்
ஆசமனியம் ஸமர்ப்பயாமி, பூகிபல ஸமாயுக்தம்
நாகவல்லீ தளைர்யுதம் கற்பூர சூர்ண ஸம்யுக்தம்
தாம்பூலம் ப்ரதிகிருஹ்யதாம் கற்பூர தாம்பூலம்
ஸம்ர்ப்பயாமி சூடம் ஏற்றி தீபாராதனை (கற்பூர)
நீராஜனம் ஸமர்ப்பயாமி மந்திர புஷ்பம் சமர்ப்பயாமி
ஸூவர்ண புஷ்பம் ஸமர்ப்பயாமி
ப்ரதக்ஷிண நமஸ்காரம் ஸமர்ப்பயாமி
(பிரார்த்தனை)
வக்ரதுண்ட மஹகாய
ஸூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குருமேதேவ
ஸர்வ கார்யேஷூ ஸர்வதா
ஸ்ரீ வரலட்சுமி பூஜா சங்கல்பம்
(அக்ஷதையை கையில் எடுத்துக்கொண்டு)
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸந்ந வதனம் த்யாயேத் ஸர்வவிக்ன உபசாந்தயே
ஓம்பூ ஸூவரோம் மமோபாக்த ஸமஸ்த துரிதக்ஷயத்
வாராஸ்ரீ பரமேஸ்வர (ஸ்ரீமந்நாராயண ப்ரித்யர்த்தம்
சுபேசோபனே முஹூர்த்தே ஆத்யபரும்மண: த்விதீய
பரார்த்தே ஸ்வேதவராஹகல்பே வைவஸ்வ தமன்வந்
தரே அஷ்டாவிம் சகிதமே கலியுகேபிரதமேபாதே
ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதக் கண்டே மேரோ, தக்ஷிணே
பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவ காரிகே
ப்ரபவா தீ ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே - நாம
ஸம்வத்ஸ்ரே தக்ஷிணாயனே வர்ஷருதௌச்ராவண மாஸே
சுக்லப÷க்ஷ சதுர்தச்யாம் சுபதிதௌப்ருகுவாஸர யுக்தாயாம்
நக்ஷத்ரயுக்தாயாம் ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்
அஸ்யாம் சதுர்தச்யாம் சுபதிதௌ அஸ்மாகம் ஸஹகுடும்பானாம்
÷க்ஷமஸ் தைர்யவீர்ய விஜய ஆயுராரோக்கிஐச்வர்ய
அபிவிருத்யர் த்தம் தர்மார்த்த காமமோக்ஷசதுர்விதபல
புருஷார்த்த சித்யர்த்தம் இஷ்ட காம்யார்த்த ஸித்யர்த்தம்
சந்தான ஸெளபாக்யசுபபல அவாப்த்யர்த்தம் தீர்க்கஸெள
மங்கல்யமவாப்த்யர்த்தம் வரலக்ஷ்மி ப்ரசாத சித்யர்த்தம்
கல்யோக்த ப்ர*ரேண த்யான ஆவாஹனாதி
÷ஷாடசோப சாரை: வரலெக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே
(வடக்கு திக்கில் அக்ஷதையை போட்டு கையலம்பி)
(விநாயகரை யதாஸ்தானம் செய்து)
(மணி) ஆகமார்த்தம்னு தேவானாம்கமனார்த்தம் துரக்ஷ ஸாம்
குருகண்டாரவம் தத்ரதேவதாஹ்வான லாஞ்சனம்
கலசபூஜை: (தீர்த்த பாத்திரத்தின் நாலு புறமும் சந்தனம் இட்டு ஒரு புஷ்பத்தைப் போட்டு கையால் மூடிக்கொண்டு ஜபிக்க வேண்டும்.)
கலசஸ்யமுகே விஷ்ணு: கண்டேருத்ர: ஸமாச்ரித:
முலேதத்ரஸ்திதோப்ருஹ்மாமத்யேமா த்ருகணாஸ்திதா
குöக்ஷளது ஸாகராஸவர்வே ஸப்தத்வீபாவஸூந்தரா
ரிக்வேத: அப்யஸூர்வேத: ஸாமவேதாப்யதர்வண,
அங்கைச்ச ஸஹிதாஸ் ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா:
கங்கேச யமுனேசைவ கோதாவரிஸரஸ்வதி நர்மதே
ஸிந்து காவேரி ஜலேஸ் மின் ஸன்னிதிம் குரு
(என்று தீர்த்தத்தை ப்ரோக்ஷிக்கவும்)
பூஜாத்ரவ்யங்களுக்கும் பூஜை செய்கின்றவரும் ப்ரோக்ஷித்துக் கொள்ளவும்.
வரலக்ஷ்மி மஹாதேவீ ஸர்வாபரண பூஷிதா
கலசேஸ்மித் வஸேதஸ்மிந் கேஹே ஸெளபாக்ய காரணீ (தியானம்)
1. வந்தே பத்மகராம் ப்ரஸந்நவதநாம்
ஸெளபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யாம்
அபயப்ரதாம் மணிகணைர் நாநாவிதைர் பூஷிதாம்
பக்தாபீஷ்ட பலப்ரதாம ஹரிஹர ப்ருஹ்மாதிபிஸ்
ஸேவிதாம் பார்ச்வே பங்கஜ சங்க பத்ம நிதிபிர்
யுக்தாம் ஸதாசக்திபி:
ஸரஸிஜநயநே ஸரோஜ ஹஸ்தே
தவலதமாம்சுகந்த மால்ய சோபே பகவதி
ஹரிவல்லபே மனோக்ஞேத்ரிபுவன பூதிகரிப்ரஸூத மஹ்யம்
2. பத்மாஸனே பத்மசுரே ஸர்வ லோகைக பூஜிதே
நாராயணப்ரியே தேவி ஸூப்ரீதா பவஸர்வதா
க்ஷீரோதார்ணவ ஸம் பூதே கமலே கமலாலயே
ஸஸ்திதாபவகேஹே ஸராஸூர நமஸ்க்ருதே
(அஸ்மின் கலசே பிம்பே - வர லெக்ஷ்மீம் தியாயாமி)
பாலபானுப்ரதீகாசே பூர்ண சந்தர நிபானனே
ஸூத்ரே அஸ்மின் ஸூஸ்திதா பூத்வா ப்ரயச்ச
பஹூலான்வரான் (என்று சொல்லி நோம்பு சரட்டை வைக்கவும்.)
ஸர்வமங்கள மாங்கள்யே விஷ்ணுவக்ஷஸ்தாலாலயே
ஆவாஹ்யாமி தேவித்வாம் அபீஷ்ட பலதாபவ
(அஸ்மின் கும்பேவரலக்ஷ்மீம் ஆவாஹயாமி அக்ஷதை போடவும்
அநேகரத் நகசிதம் முக்தாஹாரைர் விபூஷிதம்
ஸூவர்ண ஸிம்மாஸனம் சாரு ப்ரீத்யர்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம் ஆஸனம் ஸமர்ப்பயாமி
கங்காதிஸரிதுத்பூதம் கந்தபுஷ்ப ஸமந்விதம்
பாத்யம் ததாம்யஹம் தேவீ ப்ரஸீத பரமேஸ்வரி
பாத்யம் ஸமர்ப்பயாமி.... தீர்த்தம் விடவும்
கங்காதி ஸமாநீதம் ஸூவர்ண கலசே ஸ்திதம்
க்ரஹாணார்க்யம்மயாதத்தம் புத்ரபெள்த்ரபலப்ரதே
அர்க்யம் ஸமர்ப்பயாமி - உத்தரணி தீர்த்தம் விடவும்
வைஷ்ணவீ விஷ்ணு ஸம்யுக்தா அஸங்க்யாயுததாரணீ
ஆசமயதாம் தேவபூஜ்யே வரதே அஸூரமர்த்தினி
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி தீர்த்தம் விடவும்
ததிக்ஷீர ஸமாயுக்தம் மத்வாஜ்யேன ஸமன்விதம்
மதுபாக்கம் மாயாதத்தம் ஸ்வீ குருஷ்வ மஹேஸ்வரி
மதுவர்க்கம் ஸமர்ப்பயாமி - தேன் பால்
பயக்ஷீர க்ருதைர்மிச்ரம் சர்கராமது ஸம்யுக்தம்
பஞ்சாமிர்த ஸ்னானமிதம் க்ருஹாண பரமேஸ்வரி
பஞ்சாமிர்த ஸ்னானம் ஸமர்ப்பயாமி
ரத்ன கும்பஸமாதீதம் ஸர்வதீர்த்தாஸ்ருதம் ஜலம்
ஸ்னானார்த்தம் ப்ரயச்சாமி ஸ்ருஹாண ஹரிவல்லபே
சுத்தோதக ஸ்னானம் ஸமர்ப்பயாமி
மாங்கல்ய மணி ஸம்யுக்தம் முக்தாஜால சமன்விதம்
தத்தம் மங்கள ஸூத்ரந்தே கிருஹாண ஹரிவல்லவே
கண்ட ஸூத்ரம் ஸமர்ப்பயாமி
ரத்ன தாடங்க கேயூர ஹாரகங்கண மண்டிதே
பூஷணம்க்ருஹ்யதாம்தேவிநம ஸ்தேவிஷ்ணுவல்லபே
ஆபரணானி ஸமர்ப்பயாமி
சந்தனா கரு கஸ்தூரி கோரோசனாதி ஸூமிச்ரிதம்
லேபனார்த்தம் மஹாதேவி தாஸ்யாமி ஹரிவல்லபே
கந்தம் ஸமர்ப்பயாமி - சந்தனம் இடவும்
ஹரித்ரா குங்குமஞ்சைவ ஸிந்தூரம் கஜ்வலான்விதம்
ஸெளபாக்ய த்ரவ்யஸம்யுக்தம்க்ருஹாண பரமேஸ்வரி
ஸெளபாக்ய திரவியம் ஸமர்ப்பயாமி
சாலீயான் சந்திரவர்ணாம்ச ஸ்னிக்த மௌக்திக ஸன்னிபான்
அக்ஷதான் பிரதிகிருண்ணீஷ்வ பக்தானாம் இஷ்டதாயினி
அக்ஷதான் ஸமர்ப்பயாமி
மந்தார பாரிஜாதாப்ஜ கேதக்யுத்பட பாடலை,
மருமல்லிக ஜாத்யா திபுஷ்பைத்வாம் பூஜயா ம்யஹம்
வரலக்ஷ்மியை நம: புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி
அங்க பூஜை
1. வரலக்ஷ்மியை நம: (பாதௌ) பூஜயாமி
2. மஹாலக்ஷ்மியை நம: (குல்பௌ) பூஜயாமி
3. இந்திராயை நம: ஜங்கே பூஜயாமி
4. சண்டிகாயை நம: ஜானுனீ பூஜயாமி
5. க்ஷீராப்தி தனயாயை நம: (ஊரும்) பூஜயாமி
6. பீதாம்பரதாரிண்யை நம: (கடிதம்) பூஜயாமி
7. ஸோமஸோதர்யை நம: (குஹ்யம்) பூஜயாமி
8. லோகமாத்ரே நம: (ஜகனம்) பூஜயாமி
9. விஷ்ணுப்ரியாயை நம: (நாபிம்ஃ) பூஜயாமி
10. ஜகத்குக்ஷ்யை நம: (உதரம்) பூஜயாமி
11. விஸ்வரூபிண்யை நம: வக்ஷஸ்தலம் பூஜயாமி
12. ஜகத்தாத்ர்யை நம: (ஹ்ருதயம்) பூஜயாமி
13. ஸூஸ்தந்யை நம: (ஸ்தநௌ) பூஜயாமி
14. கஜகாமின்யை நம: (பார்ச்வெள) பூஜயாமி
15. கம்பு கண்ட்யை நம: (கண்டம்) பூஜயாமி
16. லோகஸூந்தர்யை நம: (ஸ்கந்தௌ) பூஜயாமி
17. பத்மஹஸ்தாயை நம: (ஹஸ்தான்) பூஜயாமி
18. பத்மநாப ப்ரியை நம: (பாஹூன்) பூஜயாமி
19. சந்திரவதனாயை நம: (முகம்) பூஜயாமி
20. உத்பலாக்ஷ்யை நம: (நேத்ரே) பூஜயாமி
21. சம்பக நாஸிகாயை நம: (நாஸிகாம்) பூஜயாமி
22. ஹரிப்ரியாயை நம: (ச்ரோத்ரே) பூஜயாமி
23. பிம்போக்ஷ்ட்யை நம: (ஒஷ்டௌ) பூஜயாமி
24. ச்ரியை நம: (அதரம்) பூஜயாமி
25. சஞ்சலாயை நம: (ஜீஹவாம்) பூஜயாமி
26. ஸூகபோலாயை நம: (கண்டஸ்தலம்) பூஜயாமி
27. அக்ஷ்டமீசந்திர பாலையை நம: (பாலம்) பூஜயாமி
28. மந்தஸ்மிதாயை நம: (சுமுகம்) பூஜயாமி
29. நீலகுந்தளாயை நம: (அளகான்) பூஜயாமி
30. கமலவாஸின்யை நம: (பிடரம்) பூஜயாமி
31. பத்மாஸனாயை நம: சிரம் பூஜயாமி
32. ஸர்வைச்வர்யை நம: (சர்வாண்யங்கானி) பூஜயாமி.


எதற்காக வரலட்சுமி நோன்பு?

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரம் முதலான மாநிலங்களில், இந்த பண்டிகை ஆத்மார்த்தமாகவும் நிறைவாகவும் கொண்டாடப்படுகிறது வரலக்ஷ்மி பூஜை.
சுமங்கலிப் பெண்கள் கொண்டாடுகிற பண்டிகை இது. புகுந்த வீட்டில் இந்த பூஜை கொண்டாடுகிற வழக்கம் உள்ளவர்கள், தவறாமல் கடைப்பிடிப்பார்கள். வழக்கம் இல்லையே என்பவர்கள் கூட, இந்தப் பூஜையின் பலன்களாலும் பூஜை செய்வதால் கிடைக்கும் மனநிம்மதியாலும் சகல ஐஸ்வரியங்களும் வீடு வந்து நிறைவதாலும் கொண்டாடுபவர்களும் உண்டு!
சின்னச்சின்னதான மாறுபாடுகள் இருந்தாலும், ஏறக்குறைய எல்லோருமே அம்மனைக் கலசத்தில் இருத்தி அலங்காரங்கள் செய்து, வீட்டுக்குள் அழைத்து, பூஜை செய்வது வழக்கம். தமிழகத்தில், திருமணமான பெண்கள் மட்டும் செய்வார்கள். கர்நாடகாவில் தம்பதியாக அமர்ந்து பூஜை செய்வார்கள்.
வடை, பாயஸம், இட்லி. கொழுக்கட்டை, நைவேத்தியங்கள், பட்சணங்கள், சுண்டல், பழங்கள் என தங்களால் முடிந்ததைக் கொண்டு, இந்த பூஜையை செய்யலாம்!
ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமையில் இந்த வரலக்ஷ்மி பூஜையானது வரும். சில தருணங்களில், ஆடி மாதத்தில் அமையும். இதோ... இந்த வருடம்... ஆடி 28ம் தேதியான ஆகஸ்ட் 12ம் தேதி அன்று... அதாவது இன்று கொண்டாடப்படுகிறது. வருடந்தோறும் தொடர்ந்து செய்துவிட்டு, ஏதேனும் காரணத்தால் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட, அருகில் பூஜை செய்பவர்கள் வீட்டுக்குச் சென்று, பூஜையில் கலந்து கொள்ளலாம்.
புதிதாகக் கல்யாணமாகி வந்து, பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு, முதல் பூஜையை தலை நோன்பு என்பார்கள். பிறந்த வீட்டில் எல்லா சீர் வகைகளும் செய்து அனுப்புவார்கள். அம்மனின் முகம், கலசம், பூஜைக்கு வேண்டிய உபகரணங்கள், பழங்கள் என சிறப்பாக செய்து அனுப்புவார்கள்.
பூஜை செய்யும் இடத்தை, அழகுறைச் சுத்தம் செய்து அம்மனை இருத்த இடத்தை தயார் செய்யவேண்டும். அந்தக் காலத்தில், மண் தரை என்பதால், பசுஞ் சாணத்தைக் கொண்டு தரை மெழுகி சுத்தம் பண்ணுவார்கள். சுவரில் சுண்ணாம்பு அடித்து மண்டபத்தில், கலசத்தில், வரலக்ஷ்மி வீற்றிருப்பதைப் போல் வண்ணக் கலவைகளால் ஓவியம் வரைவார்கள். இப்போது அநேகமாக படமாகவே மாட்டி விடுகின்றனர்.
முன் காலத்தில், வரலக்ஷ்மி முகங்கள் என்று வெள்ளியில் செய்தது எதுவும் கிடையாது. கண், மூக்கு, வாய், காது என்று வெள்ளியில் செய்த அவயவங்கள் மட்டுமே கிடைக்கும்.
வெள்ளி, பித்தளை, வெண்கலம் அல்லது செப்புச் செம்புகளிலோ, சிறிய குடங்களிலோ கலசம் வைப்பார்கள். அதில், சந்தனத்தை இடுவார்கள். அந்த சந்தனத்தில் உருவங்களைப் பொருத்துவார்கள். கலசத்தில், அரிசியை நிரப்பி, வெற்றிலைப்பாக்கு, மஞ்சள், வெள்ளிக்காசுகள், தங்க நகை என அதில் போட்டு, அதன்மேல் ஒரு சுத்தமான மாவிலைக்கொத்தைச் சொருகி, குடுமியுடன் கூடிய நல்ல தேங்காயை, மஞ்சள் பூசி பொருத்துவார்கள்.
எலுமிச்சை பழம், விச்சோலை, கருகமணி அவசியம் வைப்பார்கள். இப்போது வெள்ளியில் செய்த வரலக்ஷ்மி முகம் அழகான நகை,நட்டுகளுடன் கிடைக்கின்றன. அதை வாங்கிக் கலசத்தின் மேல் பொருத்தி விடுவது வழக்கமாகிவிட்டது.
விதவிதமான பாவாடை, புடவைகளையும் அணிவித்து அழகாக அலங்காரங்கள் செய்யலாம். இதுபோல், அலங்கரித்து ,அம்மனை தனியான இடத்தில் அமர்த்துவார்கள். பூஜை செய்யப்போகும் இடத்தில் அழகான மாக்கோலமிட்டு, செம்மண் பூசி அழகாக பந்தல் அமைக்கிறோம். ஒரு மேஜையைக் கொண்டு, பந்தல் அமைத்து, வாழைக் கன்றுகளைக் கட்டி, மாவிலைத் தோரணங்கள் அமைத்து அலங்கரிப்பார்கள்.
தாமரை, மல்லிகை, மருக்கொழுந்து, ரோஜா, ஸம்பங்கி என வாஸனை புஷ்பங்கள், மாலைகள் அணிவிக்கலாம். குத்து விளக்குகளை இரண்டு பக்கமும் வைத்து ஏற்றுவார்கள்.
தன, தான்ய லக்ஷ்மியுடன், வரலக்ஷ்மி சேர்த்து ஒன்பது லக்ஷ்மிகள். நோன்பின் முக்கிய அம்சமாக நோன்புக்கயிறு வைத்து, அதையும் பூஜை செய்து, மஞ்சள்சரடை வலதுகையில் பெரியவர்களைக் கொண்டு அணிந்து கொள்வார்கள்! பூஜை செய்யும் பந்தலின் உள் ஒரு தாம்பாளத்தில் அரிசியைப் பரப்பி, மனைப்பலகை மீது கலசம் வைத்திருப்பார்கள்.
வியாழக்கிழமையே சாயங்காலத்திற்குப் பின் அம்மனுக்கு விளக்கேற்றி குங்கும சந்தன, பூக்களுடன், வழிபட்டு நமஸ்கரிக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமை காலை. விடியற்காலை. பரபரவென்று இயங்குகிறோம். வாசலில் கோலம்போடுவதில் ஆரம்பித்து, குளித்து, மடியாக நிவேதனங்களைத் தயாரித்து, மண்டபத்தில் கோலம்போட்டு செம்மண் கோலமும் இட்டு, பூஜைக்கு தேவையானவற்றைக் கொண்டு, அம்மனை எடுத்து வருவார்கள். இதை அம்மனை அழைத்தல் என்பார்கள்!
கற்பூர ஆரதி எடுத்து, நமஸ்கரித்து, பக்தி சிரத்தையாக உடன் ஒரு சுமங்கலி அல்லது, கன்னிகை உதவியுடன், ஸௌபாக்கியத்தைக் கொடுக்கும் லக்ஷ்மி தேவியே நீங்கள் வர வேண்டுமம்மா என்று சிரத்தையுடன் பாடல்களைப் பாடி அதி கவனமாக கலசத்தை உள்ளே எடுத்துவந்து தயாராக அலங்கரித்து, தீபங்களுடன் கூடிய மண்டபத்தில்,.
கிழக்கு முகமாக வைத்து பூஜிக்கவேண்டும்.
பாக்யத லக்ஷ்மி பாரம்மா. லக்ஷ்மி, ராவேமா இண்டிகி. எனப் பாடுவார்கள்.
அம்மனுக்கு எல்லாவித உபசாரங்களையும் செய்து ஆஸனத்தில் இருத்தி ஆடை, ஆபரணங்கள், ரவிக்கைத் துணி, பஞ்சு வஸ்திர மாலைகள், அணிவித்து, அஷ்டோத்திர சத நாமாவளிகளால் பூக்களினால் அர்ச்சனை செய்யலாம். தூப ,தீபங்களைக் காட்டி, நிவேதனம் செய்யவேண்டும். நோன்புச் சரடுகளில் ஒவ்வொரு புஷ்பங்களைத் தொடுத்து வைத்திருப்பதை அம்மனின் பாதங்களில் வைத்து அதற்கும் தனிப்பட பூஜை செய்யவேண்டும்.
பூஜை முடிந்து ஒவ்வொரு சரடாக எடுத்துப் பெரியவர்களால் சுமங்கலிகளுக்கும், கன்யாப் பெண்களுக்கும், வலது கையில் கட்டப் படும். அப்படிக் கட்டும்போது கையில் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், பூ, தேங்காய், பழங்களைக் கொடுத்துக், குங்குமமிட்டு சரடைக் கட்டுவார்கள். பெரியவர்களை நமஸ்கரித்து ஆசிர்வாதம் பெறுவார்கள்.
மகாலக்ஷ்மி அன்னையே போற்றி!