வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறதே ஏன்?

ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறதே ஏன்?

ஆடி போய் ஆவணி வந்தால் நன்மை கூடி வரும் என்பதை போல் ஆவணி மாதம் மிக சிறந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடியில் சில நிகழ்ச்சிகள் செய்ய மாட்டார்கள். ஆவணி தொடங்கியதும், உடனே அந்த நிகழ்ச்சியினை வைத்துவிடுவார்கள். இத்தகைய சிறப்புகள் நிறைந்த ஆவணி மாதத்தில் வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறும் ஏன் தெரியுமா?

🌟 ஆவணி மாதம் ஸ்திர மாதம். வைகாசி, கார்த்திகை, மாசி ஆகியவையும் ஸ்திர மாதங்களே. ஆனால் ஆவணியில் சூரியன் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று வலுவாக அமர்கிறார்.

🌟 சூரியனே ஆத்மகாரகன் என்றும், பிதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அரசியல், பெரும் பதவி பெறுவதற்கான தகுதியை தர வல்லவர். இதன் காரணமாக சூரியன் வலுப்பெறும் போது எந்த காரியத்தை செய்தாலும் சிறப்பான பலனைத் தரும் என முன்னோர்கள் அறிந்திருந்தனர்.

உங்கள் நிறுவனத்திற்கு திறமையான பணியாட்களை நிரப்ப விரும்புகிறீர்களா? எங்கள் நித்ரா வேலைவாய்ப்பு செயலி மூலம் உங்களுக்கு தேவையான பணியாட்களை எளிதில் நிரப்பிக்கொள்ள முடியும்.

உதாரணமாக... ஓட்டுநர், அலுவலக பணியாளர், கணக்காளர் (அக்கவுண்டண்ட்), விற்பனையாளர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், டைப்பிஸ்ட், டைலர், எலக்ட்ரீஷியன், சூப்பர்வைசர் போன்ற அனைத்து வகையான வேலைவாய்ப்புகளையும் எங்களது செயலியின் மூலம் இலவசமாக விளம்பரப்படுத்தி கொள்ளலாம்.

உங்கள் நிறுவனத்தில் காலியாக இருக்கும் வேலைவாய்ப்பு தகவல்களை விளம்பரப்படுத்த மற்றும் தெரிவிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்.

எங்களது வேலைவாய்ப்பு செயலியை தரவிறக்கம் செய்ய,


இங்கே கிளிக் செய்யுங்கள் !
🌟 எனவே தான் ஆவணி மாதத்தில் கிகப்பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் தங்கலாம், திருமணம் செய்தால் வாழ்க்கைத் துணை சிறப்பாக அமையும்.

🌟 விவசாயத்திலும் ஆவணி மாதம் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் விவசாயிகள், ஆவணி மாதத்தில் சற்றே ஓய்வு எடுத்துக் கொள்வதுடன், ஒட்டுமொத்த வேளாண் மக்களும் தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை, விழாக்களை நடத்தி மகிழ்வார்கள்.

🌟 ஜோதிட முறைப்படி பார்க்கும் போது சூரியன் வலுப்பெறுவதால் அந்த காலத்தில் (ஆவணி) செய்யப்படும் அனைத்து செயல்களும் சிறப்பான பலனைத் தருவதால், ஆவணிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்று கூறலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக