செவ்வாய், 31 அக்டோபர், 2017

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 2018 - ஆம் ஆண்டுக்கான மாதாந்திர நடை திறப்பு



சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 2018 - ஆம் ஆண்டுக்கான மாதாந்திர நடை திறப்பு

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 2018 - ஆம் ஆண்டுக்கான மாதாந்திர நடை திறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அட்டவணையை, திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு வெளியிட்டுள்ளது.
நிகழாண்டு மண்டல பூஜை மஹோத்சவத்திற்காக வரும் நவம்பர் 15 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்; டிசம்பர் 26 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். மண்டல பூஜை ---டிசம்பர் 26.
மகரவிளக்கு பூஜைக்காக வரும் டிசம்பர் 31 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்; அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 20 - ஆம் தேதி காலை 7 மணி வரை நடை திறந்திருக்கும். ஜனவரி 14 -ம் தேதி மகரவிளக்கு (ஜோதி) இடம்பெறும். ஜனவரி 18-ஆம் தேதி காலை வரை மட்டும்தான் நெய் அபிஷேகம் நடைபெறும்.

பிப்ரவரி: பிப்ரவரி 12 மாலை 5 மணியில் இருந்து பிப்ரவரி 17- ஆம் தேதி இரவு வரை நடை திறந்திருக்கும்.
மார்ச்: மார்ச் 14 மாலை 5 மணியில் இருந்து மார்ச் 19 - ஆம் தேதி இரவு வரை நடைதிறந்திருக்கும். உற்சவத்திற்காக மீண்டும் மார்ச் 20 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி, 30- ஆம் தேதி பங்குனி உத்திரம் ஆராட்டு பூஜை முடிந்து இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
ஏப்ரல்: ஏப்ரல் 10 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 18 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். இதில் 15 -ஆம் தேதி விஷூ கணி தரிசனம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மே மாதம்: மே 14 மாலை 5 மணியில் இருந்து 19 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். பிரதிஷ்டா தின மஹோத்சவத்துக்காக மே 24 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 25 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
ஜூன் : ஜூன் 14 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 19 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
ஜூலை: ஜூலை 16 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 21 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
ஆகஸ்ட்: ஆகஸ்ட் 16 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 21-ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். ஓணம் பண்டிகைக்காக 23 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 27 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
செப்டம்பர்: செப்டம்பர் 16 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 21 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
அக்டோபர்: அக்டோபர் 16 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 21-ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
நவம்பர்: ஸ்ரீ சித்ர ஆட்ட திருநாளுக்காக நவம்பர் 5 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 6 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். 2018 -ஆம் ஆண்டின் மண்டல பூஜைக்காக, நவம்பர் 16 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து டிசம்பர் 27 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது.

துளசி தேவிக்கு திருமணம்





துளசி தேவிக்கு திருமணம் 01-11-2017

ஸ்ரீ  துளசி தேவிக்கும்  ஸ்ரீமான்  நாராய   ணனுக்கும் (கிருஷ்ணனுக்கும்)  கல்யாணம் நடந்ததே, அதற்கு பத்திரிகை  கிடைக்காததால் வராதவர்களுக்கும்,   ‘கல்யாணமா, எப்போ, தெரியாதே’  என்பவர்களுக்கும்,’ கல்யாணம் நடந்தது தெரியுமே,  ஆனால்  மறந்து போனதே’  என்பவர்களுக்கும், அந்த திருமணத்தைப் பற்றியும்  மணமகள்  துளசி தேவியைப் பற்றியும்  ஞாபகப் படுத்தவே   இந்த கட்டுரை.
 கார்த்திகை மாதம்  சுக்ல த்வாதசி  அன்று
எத்தனையோ காலத்திற்கு  முன்பு நடந்தது அந்த தெய்வீக திருமணம்.

தீபாவளிக்கு  பிறகு   ஒரு 15 நாள்  துளசி பூஜை (துளசி ஹப்பா )என்று  வடக்கே  கொண்டாடுகிறார்கள். அன்று  துளசிக்கட்டை  தான் மணமகள். நெல்லி மரத்தை  துளசிச் செடிக்கருகே  நடுவார்கள்.

கல்யாணத்திற்கு முன்பே  முதல் நாள் சாயங்காலம்  இப்போதெல்லாம்  அநேகர்  மணமக்களை வாழ்த்தி  வரவேற்பு அளிக்கிறார்களே.  அது போல  கல்யாணத்திற்கு முதல் நாள்  விஷ்ணுவும், துளசி என்கிற லக்ஷ்மியும் பிரபஞ்சத்தில்  எங்கும் நிறைந்திருப்பார்கள். லக்ஷ்மியை துளசியாகவும், கிருஷ்ணனை விஷ்ணுவாகவும் திரு மண மக்களாக  பாவிப்பது ஐதிகம். அன்று  விஷ்ணு  கிருஷ்ணன் ஆகியோரின் சக்தி  ஜலத்திலும்  அக்னியிலும்  இருப்பதாக நம்பிக்கை.

துளசி விவாகத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா?

1. துளசி மாடத்தை அலங்கரிப்பது.
2. நாலு பக்கம்  கொம்பு  நட்டு, துணியில் விதானம் அமைத்து  மண்டபமாக செய்வது. விளக்கேற்றுவது,
3. துளசி செடிக்கு  பட்டுத்துணியில் புடவை.துளசி மணி வளையல். குங்கும தாரணம்.
4. சின்ன  பிள்ளையார் விக்ரஹம், சாளிக்ராமங்கள், அருகே வைத்து பூஜை.
7. துளசி மந்த்ரம்  ஜபித்தல்  ” ஓம்  துளஸ்யை நம: 108  தடவை. குங்குமார்ச்சனை.’
8 தூப  தீப  ஆராதனை.  தேங்காய் உடைத்தல்..
9 துளசி செடியை,  மாடத்தை,  7 முறை  வலம் வருதல்- பரிக்ரமம்.
10 துளசிக்கும், சாளக்ராமங்களுக்கும்  ஆர்த்தி. மங்கள கீதம் பாடுவது.
 விவாகம் முடிந்துவிட்டதே.
விஷ்ணு பூஜை  துளசி இல்லாவிட்டால்  வீண்.  எந்த நைவேத்யமும்  துளசி தளம், ஜலம்  ப்ரோக்ஷணம்  இன்றி பூர்த்தியாகாது.துளசி சர்வ பாபங்கள், ஏன்  வியாதிகளையும்  போக்கக்கூடிய  அரு மருந்து. துளசியின்  வேரிலிருந்து கிளை, இலை,அனைத்திலும்  எல்லா  தேவதைகளும் இருக்கிறார்கள்.

தேவாசுரர்கள்  பாற் கடலைக் கடைந்தபோது துளசி  லக்ஷ்மியின் தங்கையாக தோன்றுகிறாள்.  விஷ்ணுவையே  அவளும்  மணக்க  விரும்புகிறாள். லக்ஷ்மி  அவளை  துளசி செடியாக மாற்றுகிறாள். விஷ்ணு அவள்  விருப்பத்தை  நிறைவேற்ற நான் சாலக்ராமமாக  இருக்கும்போதெல்லாம்  துளசி என்னோடு  இருப்பாள் என்கிறார்.

விஷ்ணு ஆலயங்களில்,  மாத்வர்கள்  வீட்டில்  எல்லாம்  துளசி பிரதானமானவள். துளசி மாடம் இல்லாத  ஹிந்து வீடுகள் இல்லை. அவளை வணங்காமல்  பூஜை இல்லை,  விஷ்ணுவுக்கு  நைவேத்யம் இல்லை. காலையிலும் மாலையிலும் துளசிக்கும்  தான்  தீபம் நமஸ்காரம்.  ப்ரார்த்தனை .
லக்ஷ்மி  விஷ்ணு மார்பில்,  துளசி  அவர் கழுத்தில், உடலில், காலடியில் எங்குமே.

பத்ம புராணத்தில், பாதாள காண்டத்தில் ஒரு விஷயம் தெரியுமோ ?

சிவபெருமான்:  ”நாரதா, துளசியின் பெருமையைப் பற்றி சொல்கிறேன் கேள்’
எவன் ஒருவன்  துளசி தேவியைப் பற்றி  அறிகிறானோ, அவனது  சகல ஜன்ம பாபங்களும் விடுபட்டு, ஸ்ரீ ராதா கிருஷ்ணனை அடைகிறான்.  எவனது  உடல்  துளசி கட்டையோடு  தகனம் செய்யப்படுகிறதோ அவனுக்கு உடலோடு  அவன் பாபங்களும் எரிந்துவிடும் எவன்  அந்திம காலத்தில் விஷ்ணுவின் நாமத்தை சொல்கிறானோ, துளசி கட்டையை  தொடுகிறானோ , அவன் மோக்ஷம் எய்துவான்.
கிருஷ்ணனே  அவனை  எதிர் கொண்டு அவன் கையைப் பிடித்து  தன்னோடு  அழைத்து செல்வார் .
எவன்  துளசி கட்டையை, சமித்துகளோடு  சேர்த்து வைத்துக்கொள்கிறானோ, அவன் ஹோமத்தில் இடும் ஒவ்வொரு  தானியத்திற்கும் ஓர் அக்னிஹோத்ர பலன் அடைவான்.
துளசி கட்டையை உபயோகித்து கிருஷ்ணனுக்கு செய்யும்  தூப  ஆராதனை,  100 அக்னி ஹோத்ர பலனையும், 100 கோ தான பலனும் கொடுக்கும்.
கிருஷ்ணனுக்கு  நைவேத்யம் பண்ணும் உணவு, துளசி கட்டை  கலந்த அக்னியில் தயாரிக்கப் பட்டிருந்தால்  மேருமலை அளவு தானியங்களை தானம் செய்த பலன் தரும்.

ஒரு சிறு துளசி குச்சியால் ஏற்றிய  தீபம்,   பல லக்ஷம் தீபங்களை  கிருஷ்ணனுக்கு ஏற்றிய  பலன்  தரும். இப்படி விளக்கேற்றியவனைப் போல  கிருஷ்ணனுக்கு  பிடித்தவன் வேறு யாருமில்லை.
துளசிக்கட்டையை அரைத்து சந்தனம் போல்  கிருஷ்ணனுக்கு  சாற்றியவன் ஈடில்லாத கிருஷ்ண பக்தன்.
துளசிச்செடி அடியில் உள்ள  மண்ணை கொஞ்சம் குழைத்து தனது உடலில் சாற்றிக்கொண்டவன்  100 கிருஷ்ண பூஜைகளை   அன்று செய்த பலன் பெறுவான்.
துளசியை ஆராதித்து கிருஷ்ணனுக்கு அர்ச்சிப்பவன், எல்லா புஷ்பங்களை அர்ச்சிப்பதன் பலன் பெறுவான்.   இறந்தபிறகு கிருஷ்ணனையே அடைகிறான்.

இன்னொன்று  சொல்லட்டுமா.  எவன்  வழியிலே  எங்காவது  ஒரு துளசி தோட்டம், நந்தவனத்தை  கடந்து வணங்கி போகிறானோ, அவன் சர்வ பாப, தோஷங்கள் நீங்கப் பெறுவான்.

துளசி செடி  எந்த வீட்டில்  இருக்கிறதோ, அந்த வீட்டில் வசிப்பவர்களில்  கிருஷ்ணனும் ஒருவன்.

காற்றில்  எங்கிருந்தாவது துளசி வாசனை  வந்து அதை நுகர்வதாலும் கூட ஒருவன் பரிசுத்தமாகிறான் என்றால்  பார்த்துக்கொள்ளுங்கள்.

(துளசி கட்டை  வேண்டும் என்பதற்காக  துளசி செடியின் கிளையை  ஓடிக்கவோ, வெட்டவோ வேண்டாம்.  காய்ந்த துளசி செடியிலிருந்து  அதை சேகரிக்கலாம்)

பத்மபுராணத்தில் இன்னொரு காட்சி.

முருகன்; ”அப்பா, எந்த தாவரத்திலிருந்து தெய்வ பக்தி பெருகுகிறது?

சிவன்    :  ”என் அன்புச் செல்வா ,ஆறுமுகா, துளசி ஒன்று தானடா அந்த தெய்வீகம் கொண்டது. கிருஷ்ணனுடன் நெருங்கியதல்லவா அது.

உலகில் வெகு காலம் முன்பு, கிருஷ்ணன்  பிருந்தா தேவியை பூலோகத்தில்  பித்ருக்களுக்கான  திருப்திகர சேவைக்காக  துளசியாக  அறிமுகப் படுத்தினார். எதை  அளித்தாலும் சிறிது துளசி இல்லாவிட்டால், கிருஷ்ணன்  அதை ஏற்பதில்லை.

தினமும் துளசி தளத்தால் கிருஷ்ணனை  அர்ச்சிப்பவன் வேறு எந்த புண்யமும் தேடாமலே  கிடைத்தவன்.

கங்கை எப்படி  அந்த நதியில் ஸ்நானம் செய்தவர்களை  பரிசுத்தப் படுத்துகிறாளோ  அதுபோல், துளசி மூன்று உலகங்களையும் பரிசுத்தமாக்குபவள். துளசி செடி அருகே அமர்ந்து தியானிப்பவன் கிருஷ்ணனை எளிதில் அடைகிறான்.

துளசி செடி வளரும் வீட்டிலோ அருகிலோ கூட  தீய சக்திகள் நெருங்குவதில்லை.

தினமும் கிருஷ்ணனை அர்ச்சித்த  ஒரு  துண்டு  துளசி தளத்தை புசிப்பவன் நோயற்றவன், தீர்க்காயுள் கொண்டவன். பாபம் விலகியவன்.

துளசி ஒரு தளத்தையாவது கிருஷ்ணனுக்கு  அர்ச்சித்தவன்  வைஷ்ணவன் ஆகிறான்.  துளசியை நமஸ்கரித்து  கிருஷ்ணனை  ஆராதிப்பவன் மீண்டும் தாய்ப்பால்  குடிக்க நேரிடாதவன்.

துளசியால் கிருஷ்ணனுக்கு பூஜை செய்தவனின்  முன்னோர்களும்  கூட  பாபத்திலிருந்து விடுதலை பெறுவார்கள்.  மீண்டும்

ஜனன மரணம் இல்லாதவர்கள்.

சிவன்:  ‘மகனே  ஷண்முகா,  இன்னும் துளசி மகிமை  சொல்லிக்கொண்டே போகலாம். முடிவே இல்லை.  புரிகிறதா? ‘

பத்ம புராணத்தில்  துளசி ஸ்தவ  காண்டத்தில் ஒரு சம்பாஷணை:

ஒரு பிராமணன்;   ”ஆச்சர்ய வியாச தேவா, இதுவரை  எங்களுக்கு  துளசி தேவி மகிமை சொன்னீர்கள்.  துளசியை  போற்றும் துளசி ஸ்தவம் (பிரார்த்தனை)  போதிக்க வேண்டுமென  கேட்டுக்கொள்கிறேன்’

வியாசர்; ”இதே கேள்வியை  ரிஷி சதானந்த முனிவரிடம் அவரது சிஷ்யன் ஒருவன் கரம் கூப்பி பவ்யமாக கேட்டான். அப்போது அந்த

சிறந்த கிருஷ்ண பக்தர் சதானந்த  முனிவர் என்ன சொன்னார் தெரியுமா?

”துளசி நாமம் சொன்னாலே போதும். கிருஷ்ணன் உன் பாங்களை  தொலைத்து விடுவான். துளசி செடியை கண்ணால் பார்த்தாலே போதும். கோ தான பலன்.  துளசியை பூஜித்து  ஸ்தோத்ரம் பண்ணுபவன், அவனே  ஒரு  விக்ரஹம். அவனையே மற்றவர்கள் கலியுகத்தில் வணங்க யோக்யமானவன்.

துளசி செடியை வீட்டில்  வளர்த்தவனை  யம தூதர்கள்  வாசல் அருகே கூட  வர முடியாதவர்களாக ஆக்கிவிடுவாள்.

‘ tulasi amrita janmasi sada twam keshava priya  keshavartham chinomi twam varada bhava sobhane  twadang sambhavai aniyam pujayami yatha hatim  kalou mata vinashini’

எவனொருவன்  துளசிஸ்தவ ஸ்தோத்ரம் சொல்லி  துளசியை பறிக்கிறானோ, கிருஷ்ணனை துளசியால் அர்ச்சிக்கிறானோ அவன் புண்ய பலன்  பல லக்ஷம் மடங்கு அதிகமாகும்.

துளசி ஸ்தவம் ஸ்தோத்ரம்

1 munayah sidha-gandharvah Patale nagarat svayam
Prabhavam tava deveshi  Gayanti sura-sattama

முனிவர்களே, சித்தர்களே, காந்தர்வர்களே, பாதாள லோக நாக வாசிகளே, கணீரென்று கிருஷ்ணனை, துளசியை  பாடுங்கள்.
2 na te prabhavam jananti devatah keshavadrite
gunanam patimananutu kalpakotisha-tairapi

உபதெய்வங்கள்  பிரபாவத்தை, சக்தியை  எத்தனை கோடியாக புகழ்ந்தாலும், கேசவனின் சக்திக்கும் மகிமைக்கும்  அவை ஈடாகுமா.
 3 krsna-anandat samudbhnutu kshiroda – mathanodyame

uttamange pura yena tulasi-vishnu na dhrita
கிருஷ்ணன் அனுக்ரஹத்தால் பாற்கடல் கடையப்பட்டபோது துளசியை  தனது  சிரத்தில் விஷ்ணு தாங்கினார்.

4 prapyaitani tvaya devi vishno-rangani sarvashah
pavitrata tvaya prapta tulasim tvam namamyaham

துளசி  மாதா,நமஸ்காரங்கள்.  விஷ்ணுவின்  சரீரத்தில் நீ சாற்றப்படும் போது,  எல்லோரையும் நீ   பரிசுத்தமாக்குபவள்.    
5 tvadanga-sambhavaih patrai puja-yami yatha harim

tatha kurushva me vighna yato yami para gatim
துளசி தேவி, உனது தளத்தால்  நான் ஸ்ரீ ஹரி யை அர்ச்சிக்கும்போது எனக்கு ஒரு குறையும் தடையும்  இல்லை. நான் தான் உன் பாதுகாப்பில்  இருக்கிறேனே.
6 ropita gomati-tire svayam-krsnena palita
jagaddhitaya tulasi gopinam hita-hetave
 துளசியம்மா, உன்னை செடியாக கோமதி நதிக்கரையில் வளர்த்து  அந்த கிருஷ்ணன் உலகை ஸ்ரேஷ்டமாக்கி, கோபியரை ரக்ஷித்தான்.


7 vrindavane vicharata sevita vishnuna svayam

gokulasya vivriddhyath kamsasya nidhanaya cha

துளசி தேவி, பிருந்தாவனத்தை செழிப்பாக்கவும், கம்சன் மற்ற ராக்ஷசர்களை அழிக்கவும், விஷ்ணுவுக்கு  பக்க துணையாக இருந்தவளே  நீ தானே.
 8 vashishtha vachanat purvam ramen sarayu-tate

rakshasanam vadharthaya ropit-tvam jagat-priye
ropita-tapaso vridhyai tulasi-tvam namamyaham

துளசி  மாதா,நீ  சாமான்யமானவளா.  சரயு நதிக்கரையில்   வசிஷ்டர்  அறிவுரையில் ராமன் உன்னை வளர்த்து தானே  ராக்ஷசர்களை  அழித்தார்.உனக்கு  நமஸ்காரம்.

9 viyoge raghavendra-sya dhyatva tvam janak atmaja
ashokavana-madhye tu priyena saha-sangata
அசோக வனத்தில் சீதா தேவி ராமனைப் பிரிந்து வாடும்போது, உன்னை அல்லவா த்யாநித்தாள். நீ அல்லவோ  அவளுக்கு  தெம்பை தந்தவள்.
10 shankarartha pura devi parvatya tvam himalaye
ropita sevita siddhyai tulasi-tvam namamyaham

அம்மா துளசி, சிவ பிரானை  அடைய, ஹிமகிரியில் உன்னைத்தானே  வளர்த்து  பார்வதி தேவி  வணங்கினாள் . எங்கள் நமஸ் காரத்தையும்  சமர்பிக்கிறோம். ஏற்றுக்கொள்

11 dharmaranye gayayam cha sevita pitribhih svayam
sevita tulasi punya atmano hita-michhata

அம்மா துளசி, கயாவிலே , தர்மாரண்யத்தில் பித்ருக்களை  திருப்தி படுத்துபவளே. பரிசுத்த காரணி.  உனக்கு நமஸ்காரங்கள்.
  12 ropita ramachandren sevita lakshmanena cha
sitaya palita bhaktya tulasi-dandake vane

துளசி தேவி,  ஸ்ரீ  ராமபிரான் உன்னை  வளர்த்தார்,லக்ஷ்மணன் உன்னை  வணங்கினான், தண்டகாரண்யத்தில் சீதை உன்னை  வளர்த்து பூஜித்தாள் . உனக்கு  நமஸ்காரங்கள்.
13 trailokya-vyapini ganga yatha-shastre-shu giyate
tathaiva tulasi devi drisyate sacharachare

துளசி தேவி,  உன் பெருமை அறிவோம். எப்படி கங்கை மூன்று லோகங்களிலும் புனிதமாக போற்றப்படுகிறதோ, அதே போல்   சகல ஸ்தாவர ஜங்கம  ஜீவர்களும் வணங்குபவள் நீ.
14.
 rishyamuke cha vasata kapirajen sevita
tulasi balinashaya tarasangam-hetave

அம்மா  உன்னை  வணங்கி தானே, ரிஷ்யமுக பர்வதத்தில் வானர ராஜன்  சுக்ரீவன்,  வாலியை கொல்லவும், தாரையை அடையவும் முடிந்தது. உனக்கு நமஸ்காரங்கள்

15 pranamya tulasi-devi sagarot tkramanam kritam
krit-karayah prahusthascha hanuman punaragataha

ஹனுமான், உன்னை  வணங்கியபிறகு தானே,  சமுத்ரத்தை தாண்டினான், ராம கர்யத்தை  வெற்றி கரமாக முடித்து   திரும்பினான்.உனக்கு நமஸ்காரங்கள்.

  16 tulasi grahanam kritva vimukto yati patakaih
athava munishardula brahma-hatyam-vyapohati

துளசியை தொடுவதாலே, சகல  பாபங்களும் விலகுகிறதே, பிரம்மஹத்தி தோஷமும் கூட தீருமே. ரிஷி திலகங்களும்  நாடும் துளசி  மாதா உனக்கு நமஸ்காரங்கள்.

17 tulasi patra-galitam yastoyam-sirasa vahet
ganga-snanam avapnoti dasha-dhenu phala-pradam

 ஒரே ஒரு துளசி  தளத்தை ஜலத்தில் இட்டு, ஸ்நானம்  செய்தவன்,கங்கா ஸ்நான பலனையும்,   பாத்து பசுக்களை  தானம் செய்த  புண்யமும் பெறுவானே.  உனக்கு நமஸ்காரங்கள்  தாயே.

18 prasid devi deveshi prasid hari vallabhe
kshirod-mathanod bhute tulasi tvam namamyaham

தேவ தேவிகளுக்குள் சிறந்தவளே, ஹரியின்  பிராண வல்லபி, பாற்கடலில் பிறந்தவளே,  எங்கள் நமஸ்காரங்களை சமர்பிக்கிறோம்.

19 dvadasyam jagare ratrou yah pathet tulasi stavam
dvatrim-shadaperadhans cha kshamate tasya keshavah


துவாதசி அன்று துளசியை பிரார்த்திப்பவனை  கிருஷ்ணன் அவன் செய்த பாபங்களை  மன்னித்து அருகிறார்.  துளசிஸ்தவம் பிரார்த்தனை புஸ்தகம் இருக்கும் வீட்டில் துரதிர்ஷ்டம்  இல்லை. ஏன்   என்றால் அங்கே  அதிர்ஷ்ட தேவதை குடி  கொண்டவள்.துளசி ஸ்தவம் பாராயணம் செய்பவன் மனதில் கிருஷ்ணனைத் தவிர வேறெதுவும் கிடையாதே.

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

இராமநாதபுரம் மாவட்டதில் அமைந்துள்ள உத்தரகோச மங்கை புனித தலம் பற்றிய 60 சிறப்பு தகவல்கள் :-





இராமநாதபுரம் மாவட்டதில் அமைந்துள்ள உத்தரகோச மங்கை புனித தலம் பற்றிய 60 சிறப்பு தகவல்கள் :-

1. உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.

2. உத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

3. உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று அழைக்கப்படுகிறது.

4. இத்தலத்துக்கு உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.

5. திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இத்தலத்தில்தான் நடந்தது.

6. உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில்

சிறந்து இருந்த போது, அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது.

7. ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம்,‘தெட்சிண கைலாயம்‘, சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா ஷேத்திரம்,

பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.

8. மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன்கிடைக்கும்.

9. இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும்.

10. மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் நிறைய

திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.

11. மூலவருக்கு மங்களநாதர் என்ற பெயர் தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு.

12. இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன.

13. இறைவி மங்களேசுவரி பெயரில் வ.த. சுப்பிரமணியப் பிள்ளை என்பவர் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். 1901-ம் ஆண்டு வெளியான

அந்த நூல் 1956-ம் ஆண்டு மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டது.

14. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இத்தலம் ராமாயண

காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது.

15. இத்தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர்

வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.

16. இத்தலத்து பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார்.

17. கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர்.

18. இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான்

என்று, இத்தலமான்மியமான ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது.

19. ராமேஸ்வரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கிறது.

20. சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் “இலவந்திகைப் பள்ளி” என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்கிறார்கள். மேற்குறித்த

கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.

21. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.

22. இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.

23. இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.

24. சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே

அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

25. ஆதிசைவர்கள் வசமிருந்த இத்தலம் பின்னரே ராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை ராமநாதபுர

சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வருகிறது இத்தலம்.

26. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன

பந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக்கூட பந்தை நகர்த்த முடியும்.

27. இத்தலத்து கோவில் குளத்தில் வாழும் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லை. கடல்நீரில் வாழும் மீன்களாகும்.

28. பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.இந்த கோவிலில்சிவனுக்கு அம்பாளுக்கு தாழம்பூ மாலை

கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும்.

29. இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய்.ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பூஜை

தொடர்ந்து செய்தால் தீராத பிரச்னைகள்,திருமண்த்தடை போன்றவை விலகுகின்றன.

30.ராமேஸ்வரம் வருபவர்கள் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

31. டெல்லியை தலைநகராகக் கொண்டு 1300-ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்ஜி, உத்தரகோச மங்கையில் மரகதகல்

நடராஜர் சிலை இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றிகிடைக்கவில்லை.

32. இத்தலத்தில் தினமும் முதல் - அமைச்சரின் அன்னத்தானத்திட்டம் நடைபெறுகிறது. ரூ. 700 நன்கொடை வழங்கினால் 50 பேருக்குஅன்னதானம் கொடுக்கலாம்.

33. காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது.

34. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இத்தலத்தில் தான் ஞான உபதேசம் பெற்றனர்.

35. இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னதி, மங்களேசுவரி சன்னதி, மரகதகல் நடராஜர் சன்னதி சகஸ்ரலிங்க சன்னதி நான்கும்

தனிதனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

36. நடராஜர் மரகத கல்லில் இருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். ஆனால் உலகின் முதல் கோவில் என்பதால்

இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள்.

37. காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார்.

38. உத்தரகோசமங்கை கோவிலின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.

39. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

40. சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பதுநாள் சிவ உற்சவம், ஐப்பதி மாதம்

அன்னாபிஷேகம், மார்கழி மாதம் திருவாதிரை விழா மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள்ஆகும்.

41. தினமும் இத்தலத்தில் காலை 5.30 மணிக்கு உஷத் காலம், 8 மணிக்கு கால சாந்தி, 10 மணிக்கு உச்சிக் காலம், மாலை 5 மணிக்கு

சாயரட்சை, இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது.

42. மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணிக்கு, மதியம் 12.30 மணிக்கு, மாலை 5.30 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

43. இத்தலத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம்செய்யலாம்.

44. மரகத கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.

45. இத்தலத்தில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர்.

46. மங்களநாதர் சன்னதியை சுற்றி வரும் போது இடது பக்க மூலையில் மகாலட்சுமியை வழிபடலாம்.

47. இத்தலத்தில் உள்ள ராஜகோபுரத்தில் சர்பேஸ்வரர் சிலை உள்ளது.

48. உலகத்தில் முதலில் தோன்றிய கோவில் என்ற சிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்கு உண்டு. இந்த ஆலயம் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது.

49. நடராஜர் இங்கு அறையில் ஆடிய பின்னர்தான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்.

50. இது அம்பிகைக்கு பிரணவப்பொருள் உபதேசித்த இடம்.

51. இங்குள்ள மங்களநாதர் லிங்க வடிவில் உள்ளார்.

52. தலவிருட்சமான இலந்தமரம் மிகமிகத் தொன்மையானதும் இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும்

முனிவர்கள் தரிசித்த தல விருட்சம் ஆகும். இந்த இலந்த மரம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது.

53. வேதவியாசரும், பாராசரும் காகபுஜண்டரிஜி மிருகண்டு முனிவர்கள் பூஜித்த தலம்.

54. உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ரலிங்கம் இங்குள்ளது.

55. ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா

56. இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது.

57. சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.

58. ஈசன் ஈஸ்வரி பிறந்த ஊரான உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் சொர்க்கம் செல்லுவது நிச்சயாமாகும்.

59. உத்தர கோசமங்கை திருத்தலமானது ஸ்ரீராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும்.

60. இத்தலத்தில் மாணிக்கவாசகர் பாடிய பொன்னூஞ்சல் பாடலை குழந்தைகளை தாலாட்டும்போது பாடினால், குழந்தைகள்
உயரமாகவும், உன்னத மாகவும் வாழ்வார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

ஐந்தே நிமிடத்தில் சுந்தரகாண்டம் படியுங்க:



ஐந்தே நிமிடத்தில் சுந்தரகாண்டம் படியுங்க:

சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும். எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். வாழ்வில் நம்பிக்கை ஏற்படும். நோய்கள் விலகும். ராமச்சந்திர மூர்த்தியையும், ராமபக்தனான அனுமனையும் மனதில் தியானித்து, இந்த எளிய சுந்தரகாண்டத்தைப் படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்துசேரும்.

சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார்

இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்

கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன

கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது.

அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே

ஆயத்தமாகி நின்றான், அனைத்து வானரங்களும்

அங்கதனும், ஜாம்பவானும் அன்புடன்

விடை கொடுத்து வழியனுப்பினரே!

வானவர்கள் தானவர்கள் வருணாத் தேவர்கள்

வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!

மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க

மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து

சுரசையை வெற்றி கண்டு ஹிம்சை வதம் செய்து

சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான்.

இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை

இடக்கையால் தண்டித்து இலங்கையைக் கலக்கினான்.

அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும்

இங்கும் தேடியே அசோக வனத்தை அடைந்தான்.

கிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும்

சீதா பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்.

ராவணன் வெகுண்டிட, ராட்சசியர் அரண்டிட

வைதேகி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க

கணையாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி

சூடாமணியைப் பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்

அன்னையின் கண்ணீர் கொண்டு, அரக்கர் மேல் கோபம்

கொண்டு, அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.

பிரம்மாஸ்திரத்தால் பிணைத்திட்ட ஆஞ்சநேயர்

பட்டாபிராமன் பெயர் சொல்ல

வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ

வாலுக்கென்றான். வைத்த நெருப்பினால் வெந்ததே

இலங்கை நகரம். அரக்கனின் அகந்தையை அழித்திட்ட

அனுமானும் அன்னை ஜானகியிடம்

அனுமதி பெற்றுக் கொண்டு

ஆகாய மார்க்கத்தில் தாவி வந்தான்.

அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.

ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீராமனிடம் ஆஞ்சநேயர்

"கண்டேன் சீதையை என்றான்.

வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி

சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணியைக்

கொடுத்தான், மனம் கனிந்து மாருதியை

மார்போடணைத்து ஸ்ரீராமர் மைதிலியை சீறை மீட்க சித்தமானார்.

ஆழ்கடலில் அற்புதமாய் அணை கட்டி படைகள் சூழ

அனுமானும், இலக்குவனும் உடன் புறப்பட்டனர்.

அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான்

அதர்மத்தை அயோத்தி சென்று ஸ்ரீராமர்

அகிலம் புகழ ஆட்சி செய்தான். அவனை சரண்

அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு.

எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே

சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து

ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா!

உன்னைப் பணிகின்றோம், பன்முறை உன்னை

பணிகின்றோம், பன்முறை உன்னைப் பணிகின்றோம். 

வியாழன், 26 அக்டோபர், 2017

திருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள்


திருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள்..

திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை.

1. திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.

2. திருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.

3. திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.

4. மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.

5. மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங்கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்பறை என்றும் ஒரு பெயர் உண்டு.

6. திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.

7. திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.

8. திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.

9. திருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 83-திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

10. திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.

11. மூலவருக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.

12. திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.

13. திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம் மணியடி எனப்படுகிறது. இங்கு நின்று பாலசுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

14. நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் உள்ளது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.

15. திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர். அவர்களது சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.

16. தமிழகத்தில் முதன் முதலில் நாகரீகம் தோன்றிய நகரங்களுள் திருச்செந்தூரும் ஒன்று.

17. முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் அய்யனார்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

18. திருச்செந்தூர் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைபெற்று இருப்பதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.

19. இத்திருத்தலம் மன்னார் வளைகுடாக் கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திருப்பதால், அலைவாய் என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்றும் அடைமொழி சேர்க்கப்பட்டு, ‘திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப்படுகின்றது.

20. இக்கோயிலுக்குச் செல்லும் வழியில், தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இவ்விநாயகரை வணங்கிய பின்னர்தான் முருகப் பெருமானை வணங்கச் செல்ல வேண்டும்.

21. இத்திருக்கோயிலில் பன்னிரு சித்தர்களில் எட்டுச் சித்தர்கள் சமாதியாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது.

22. முருகப்பெருமானின் வெற்றி வேல் மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில், கடற்கரை ஓரமாக உள்ள மாப்பாடு என்ற இடம் ஆகும். இப்பகுதி தற்போது, மணப்பாடு என்று அழைக்கப்படுகின்றது.

23. அலைவாய், திரச்சீரலைவாய், வெற்றி நகர், வியாழ சேத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், திரிபுவளமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகு பட்டி னம், என்றெல்லாம் திருச்செந்தூர் முன்பு அழைக்கப்பட்டது.

24. முருகனின் அறுபடை வீடுகளில் இது 2-வது படை வீடு எனப்படுகிறது. ஆனால் இதுதான் முதல் படை வீடு என்ற குறிப்புகளும் உள்ள.ன

25. முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே முருகனின் தலங்களில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.

26. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகப்பெரிய கோவில் கொண்ட தலம் என்ற சிறப்பும் திருச்செந்தூர் கோவிலுக்கு உண்டு.

27. முருகன் சிவந்த நிறம் உடையவன். அவன் உறைந்துள்ள தலம் என்பதால்தான் இத்தலத்துக்கு செந்தில் என்ற பெயர் ஏற்பட்டது.

28. திருச்செந்தூர் ஊர் மத்தியில்

சிவப்கொழுந்தீசுவரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுருகன் கோவில் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

29. கிறிஸ்தவ மீனவர்கள் திருச்செந்தூர் முருகனை உறவுமுறை சொல்லி அழைக்கிறார்கள். திருச்செந்தூர் கோவில் திருப்பணிகளுக்கு காயல்பட்டினத்தில் வசித்த சீதக்காதி எனும் வள்ளல் நன்கொடை அளித்துள்ளார். எனவே திருச்செந்தூர் முருகன் ஆலயம் சமய ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.

30. அருணகிரி நாதர் தன் பாடல்களில் பல இடங்களில் திருச்செந்தூரை குறிப்பிட்டுள்ளார். அவர் திருச்செந்தூரை மகா புனிதம் தங்கும் செந்தில் என்று போற்றியுள்ளார்.

31. திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.

32. திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.

33. குமரகுருபரர், பகழிக் கூத்தர், ஆதி சங்கரர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட ஏராளமானவர்கள் திருச்செந்தூர் முருகனின் நேரடி அருள் பெற்றனர்.

34. முருகன், மால், ரங்கநாதப் பெருமாள் ஆகிய சைவ, வைணவ மூர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன.

35. செந்திலாண்டவருக்கு ஆறுமுக நயினார் என்றும் பெயர் உள்ளது. திருச்செந்தூர் தாலுகா பகுதியில் வாழும் பலருக்கு நயினார் எனும் பெயர் சூட்டப்பட்டிருப்பதை காணலாம். இசுலாமியரும் நயினார் எனும் பெயர் சூட்டிக் கொண்டுள்ளனர்.

36. வீரபாண்டிய கட்ட பொம்மனும் அவர் மனைவி சக்கம்மாவும் செந்திலாண்டவருக்கு ஏராளமான தங்க நகைகள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

37. மூலவர் தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.

38. முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, «பரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியன இடம் பெறுகின்றன.

39. உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்குவார்கள்.

40. இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர்.

41. சண்முகருக்கு ஆண்டுக்கு 36 திருமுழுக்கு மட்டுமே நடைபெறுகிறது.

சித்திரை, ஐப்பசி, தை    - 3
ஆடி, தை அமாவாசை    - 2
ஆவணி, மாசித் திருவிழா    - 10
ஐப்பசி, பங்குனி திருக்கல்யாணம்    - 2
மாத விசாகம்    - 12
ஆனி தை வருடாபிஷேகம்    - 3
தீபாவளி, மகாசிவராத்திரி    - 4
மொத்தம்         36

42. திருச்செந்தூர் முருகன் கோவிலின் ஆண்டு வருமானம் தற்போது சுமார் ரூ.30 கோடியாக அதிகரித்துள்ளது.

43. திருச்செந்தூர் கோவிலில் தர்ம தரிசனம் எனப்படும் பொது தரிசனம், சிறப்பு தரிசனம் எனப்படும் ரூ.10, ரூ.20 கட்டண தரிசனம், வி.ஐ.பி.க்களுக்கான விரைவு தரிசனம் எனப்படும் ரூ.100, ரூ.250, ரூ.500 கட்டண தரிசனம் ஆகிய 3 வகை தரிசனங்கள் நடைமுறையில் உள்ளன.

44. திருச்செந்தூர் கோவிலுக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

45. இத்தலத்தில் கோவில் வெளிப் பிரகாரங்களில் தூண்களில் கந்த சஷ்டி கவசம் எழுதப்பட்டுள்ளது. அதுபோல உள்பிரகாரங்களில் தல வரலாற்றை கூறும் வரை படங்களை அமைத்துள்ளனர்.

46. திருச்செந்தூரில் உச்சிக்கால பூஜை முடிந்ததும் மணி ஒலிக்கப்பட்ட பிறகே வீரபாண்டிய கட்டபொம்மன் சாப்பிடுவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 250 ஆண்டு பழமையான, அந்த 100 கிலோ எடை கொண்ட அந்த பிரமாண்ட மணி தற்போது ராஜகோபுரம் 9-ம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.

47. சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகன் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார். அதை உணர்த்தும் வகையில் இன்றும் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது. முதல் 6 நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம் நடைபெறும். 7-ம் நாள் முருகன்-தெய்வானை திருமணம் நடைபெறும். அதன் பிறகு 5 நாட்கள் கல்யாண ஊஞ்சல் சேவை நடைபெறும்.

48. திருச்செந்தூரில் கருவறைக்கு எதிரில் இரண்டு மயில்கள் மற்றும் ஒரு நந்தி இருக்கின்றன. அது ஏன் தெரியுமா? முருகனுக்கு ஏற்கனவே ஒரு மயில் வாகனமாக இருந்து வருகிறது. பின்னர் சூரனைப்பிளந்தும், ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவல் கொடியாகவும் ஆனதல்லவா? சூரசம்ஹாரம் முடிந்ததும், ஏற்கனவே இருந்த மயிலோடு, இந்த மயிலும் (சூரன்) சேர்ந்து வந்து செந்தூரில் இரண்டு மயில்களாக நின்றுவிட்டன. சூரசம்ஹாரத்திற்கு முன்புவரை இந்திரனே முருகனுக்கு மயில் வாகனமாக இருந்தான். முருகன் சூரனை வென்றபின் இந்திரனுக்கு தேவலோக தலைமை பதவியை கொடுத்து அனுப்பிவிட்டு, மயிலாக மாறிய சூரனையே தன் வாகனமாகக் கொண்டார்.பஞ்சலிங்ககளை வைத்து முருகன் பூஜை செய்யும் கோலத்தில் சிவனுடன் இருக்கிறார். எனவே, சிவனுக்குரிய நந்தி, மயில்களுடன் சேர்ந்து கருவறைக்கு எ

திரே இருக்கிறது.

49. ஆவணி திருவிழாவின்போது முருகப்பெருமான், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.

50. திருச்செந்தூரில் தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்கள். இதற்கு கங்கை பூஜை என்று பெயர்.

51. மூலவருக்கு போற்றிமார், சண்முகருக்கு திரிசுதந்திரர், திருமாலுக்குத் வைணவர்கள், தனித்தனியே 3 இடங்களில் நைவேத்தியம் தயாரிக்கின்றனர்.

52. கோவில் திருப்பணி செய்த துறவிகளில் காசி சுவாமி கி.பி. 1882-ல் வசந்த மண்டபம் கட்டினார். மவுன சாமி 1895-ல் மண்டபத்தை கட்டி முடித்தார். வள்ளிநாயக சுவாமி - கிரிப்பிரகாரத்துக்கு தகரக் கொட்டகை அமைத்தார். ஆறுமுக சுவாமி - கோவிலுக்குள் கருங்கல் தூண்கள் அமைத்தார். தேசியமூர்த்தி சுவாமி - ராஜகோபுரத்தை கட்டினார்.

53. திருச்செந்தூர் கோவில் தங்க தேரில் அறுங்கோண வடிவில் அறுபடை வீட்டு முருகன் சிலைகள் உள்ளன.

54. சஷ்டித் தகடுகளில் எழுதப்பட்ட மந்திரம் ஓம் சரவணபவ என்பதாகும்.

55. திருச்செந்தூர் தலத்தில் பழங்காலத்தில் பல மணற் குன்றுகள் முருகனது சிறிய சந்நிதியைச் சூழ்ந்திருக்க வேண்டும். அவற்றுள் பெரிய மணற்குன்று ஒன்றைக் கந்த மாதன பர்வதம் என்ற பெயரால் குறித்திருக்க வேண்டும். நாளடைவில் மணற் குன்றுகள் தேய்ந்து தேய்ந்து பிராகாரங்கள் ஆகியிருக்க வேண்டும். வடக்குப் பக்கத்தில் மணற்குன்றே ஒரு மதிலாக அமைந்திருப்பதை இப்போதும் காணலாம். இம்மணற்குன்றின் தாழ்வரையில்தான் ரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார்.

56. கந்த சஷ்டி என்றால், கந்தவேளுக்குரிய ஆறாவது நாள் என்று பொருள்.

57. மாறாத உடல் அழகும் மாறாத உள்ளத்தழகும் என்றும் இளமை நிலையும் கொண்டருள்பவன் திருமுருகன்.

58. சிவப்பு, கருப்பு, மஞ்சள், நீலம், பச்சை ஐந்து நிறங்கள் கொண்ட வண்ண மயில் ஏறி வருபவன் திருமுருகன்.

59. யோகம், போகம், வேகம் என மூவகை வடிவங்களைக் கொண்டருள்பவன் திருமுருகன்.

60. திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை. இச்சரிதத்தை எழுதுவோரும் படிப்போரும் கேட்போரும் நீங்காத செல்வங்களைப் பெற்று வாழ்ந்திருப்பர் என்று சூதம முனிவர் உரைத்தருளி உள்ளார்.

முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்



முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்

முருகக் கடவுளுக்கு கந்தன், குமாரன், வேலன், சரவணபவன், ஆறுமுகம், குகன், விசாகன், குருநாதன் என்று இன்னும் எத்தனை எத்தனையோ பெயர்கள் இருக்கிறது.

எப்படி முருகனுக்கு இத்தனைபெயர்கள் என்று நமக்குள் கேள்விகள் எழலாம்.

ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சில காரணங்கள் இருக்கிறது.

அதில் சில பெயர்களுக்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.

1.   #முருகன் :

முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு #இளமை, #அழகு, #மணம், #கடவுள்_தன்மை, #தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது.

ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும், நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன், என்று பொருள் கொள்ளப்படுகிறது

மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன்`உ`எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு என்றாயிற்று.

இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்லப்படுகிறது

முருகு என்ற சொல் முருக்குதல் (உடலை முருக்குதல், போர் செய்தல்) முருகுதல் (மணத்தல் - மணம்புரிதல்) ஆகிய இருவகைக்கருத்தோட்டங்களுடன் தொடர்புடையதாகும்.

2.   #குமாரன் :

கு - எனும் ஒற்றை எழுத்து அறியாமையாகிய இருளை ,மனப்பிணியை மாறன் அழிப்பதால்,குமாரன் ஆனான் என்பார்கள்.

3.    #சரவண_பவன் :

சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன். சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் . என்றும் பொருள்படும்.

ச - என்றால் மங்களம்,
ர - என்றால் ஒளி கொடை,
வ - என்றால் சாத்துவீகம்,
ந - என்றால் போர்,
பவன் - என்றால் உதித்தவன் என்கிற பொருளில் மங்களம்,ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர்.

சகரம் என்றால் - உண்மை, ரகரம் - என்றால் விஷய நீக்கம், அகரம் - என்றால் நித்யதிருப்தி, ணகரம் - என்றால் நிர்விடயமம், பகரம் - பாவ நீக்கம் வகரம் - என்றால் ஆன்ம இயற்கை குணம் என்றும் கூறுவார்கள்.

4.     #வேலன் :

வேலன் என்பது வெற்றியத் தருகிற வேலைக் கையில் ஏந்தியதால் வந்த பெயர். முருகனுக்கு அடையாளமும் இந்த வேல்தான்.

5.     #ஆறுமுகம் :

சிவ பெருமானுக்குள்ள ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர்ந்து ஆறுமுகங்களானதால் ஆறுமுகம் எனும் பெயர் வந்தது.

சிவத்திற்குரிய
#தற்புருடம், #அகோரம், #வாமதேவம், #சக்தியோஜதம், #ஈசானம்,என்ற ஐந்து முகங்கள்.

இத்துடன் சக்தியின் #அதோமுகமும் சேர்ந்தது.

முருகன் சிவ ஸ்வரூபமாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் சேர்ந்துவிளங்குகிறான் என்பதையே இது உணர்த்துகிறது
திரு, புகழ், ஞானம், வைராக்கியம், வீரியம், ஐஸ்வர்யம் என்பவைதான் ஆறுமுகங்கள் என்று சொல்பவர்களும் உண்டு.

6.     #குகன்:

மனமாகிய குகையில் இருப்பவன். தகராகாசத்தில் வசிப்பவன். அடியார் மனக் கோவிலில் தங்கிடுபவன்

7.      #கந்தன்:

கந்து என்றால் நடுவில் இருப்பது. சிவனுக்கும் உமையாளுக்கும் நடுவில் இருப்பதால் கந்தன் என்கிற பெயர் ஏற்பட்டது.

ஸ்கந்தம் என்றால் தோள் என்ற அர்த்தமும் உண்டு. இதற்கு வலிமையுடையவன் என்றும் சொல்கிறார்கள்

8.    #விசாகன்:

விசாகன் என்றால் பட்சியின் மேல் சஞ்சரிப்பவன் என்று பொருள்

வி - பட்சி,
சாகன் - சஞ்சரிப்பவன்மயில் பட்சியை வாகனமாகக் கொண்டவன்.
முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும்.

இவை இறைவனிடம் காட்டும் ஒப்பற்ற கருணையைக் குறிக்கிறது.

விசாக நட்சத்திரத்தில்
பிறந்தவன்.  ஆறு விண்மீன் களைக் கொண்டது விசாகம். முன் மூன்றும் பின் மூன்றும் கொண்டு விளங்குவது.

முன் மூன்றின் நடுவில் உள்ளது ஒளி மிக்கது. ஆறுமுகனின் முகங்கள் முன் மூன்றும் பின் மூன்றுமாக இருப்பது விசாகத்தின் வடிவே என்றும் சொல்வார்கள்.

9.      #குருநாதன்: பிரம்மவித்யா மரபுகளை விளக்கும் ஆசிரியன். சிவனுக்கும், அகஸ்தியருக்கும், நந்திதேவருக்கும், உபதேசித்தவன் என்பதால் குருநாதன் ஆனார்.

10.     #சுப்பிரமணியம்:

சு - என்றால் ஆனந்தம்.
பிரஹ்ம்-பரவஸ்துந்ய- அதனின்றும் பிரகாசிப்பது முருகன்.

இன்பமும் ஒளியும் வடிவாக உடையவன் என்பது இதன் அர்த்தம். புருவ மத்திய (ஆக்ஞை) ஸ்தானத்தில் ஆறு பட்டையாக உருட்சி மணியாக, பிரகாசம் பொருந்திய ஜோதிமணியாக விளங்குவதால், சுப்பிரமணியன்.

மேலும் விசுத்தி என்கிற ஸ்தானத்தில் ஆறுதலையுடைய நாடியாக அசையப் பெற்றிருப்பதற்கும், சுப்பிரமணியம் என்று பெயர்.

ஆறு ஆதாரங்களை சண்முகம் என்றும்,ஆறுதலாகிய உள்ளமே சுப்பிரமணியம் என்றும் சொல்லப்படுகிறது

11.      #கார்த்திகேயன்:
கார்த்திகை விரதம், முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களை நினைத்து, நன்றி செலுத்தும் விதமாக ஏற்படுத்தப் பட்ட ஒன்று என கூறுவர்.

அதனால்தான் கந்தன் அப்பெண்களின் பெயரால், கார்த்திகேயன் என அழைக்கப்படுகிறான்.

ஓம் சரவணபவா

புதன், 25 அக்டோபர், 2017

முருகப்பெருமானை பற்றிய 25 ருசிகர தகவல்கள் ...



முருகப்பெருமானை பற்றிய 25 ருசிகர தகவல்கள் ...

1. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

2. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.

3. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

4. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

5. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

6. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.

7. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவ மாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

8. முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.

9. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.

10. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.

11. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.

12. பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.

13. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.

14. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.

15. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.

16. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

17. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.

18. முருகப்பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.

19. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.

20. முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.

21.முருகப் பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த் திருக்கோவில் ஆகும். முதலாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டினான். இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகை யில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள்பாலிக்கிறார்.

22. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது.

23. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

24. கந்தனுக்குரிய விரதங்கள்: 1. வார விரதம், 2. நட்சத்திர விரதம், 3. திதி விரதம்.

25. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.

முருகனின் 16 வகை கோலங்கள்...



நகரத்தார்களின் முழுமுகக்கடவுளாம் "முருகனின்" அலங்காரங்களை பற்றிய தொகுப்பு..!

முருகனின் கோலங்கள்..
முருகனின் 16 வகை கோலங்கள் எவை?

1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.

2.கந்தசாமி : இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது.

3. ஆறுமுக தேவசேனாபதி : இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.

4. சுப்பிரமணியர் : இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.

5. கஜவாகனர் : இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.

6.சரவணபவர் : தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.

7. கார்த்திகேயர் : இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.

8. குமாரசாமி : இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.

9. சண்முகர் : இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.

10. தாரகாரி : ஹதாரகாசுரன்’ என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.

11. சேனானி : இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.

12. பிரம்மசாஸ்தா : இவரை வழிபட்டால் எல்லா வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது.

13. வள்ளிகல்யாணசுந்தரர் : இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும், கன்னிப் பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.

14. பாலசுவாமி : இவர், உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர், திருக்கண்டிர், ஆண்டாள் கும்பம் கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.

15. சிரவுபஞ்சபேதனர் : இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில்இவரது திருவுருவம் உண்டு.

16. சிகிவாகனர் : மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர்.

செவ்வாய், 24 அக்டோபர், 2017

திருச்செந்தூர் ஸ்ரீசெந்திலாண்டவர் சிறப்புகள்



திருச்செந்தூர் ஸ்ரீசெந்திலாண்டவர் சிறப்புகள்

வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில், நெடுவேள் நிலை இய காமர் வியன் துறை- என்று புறநானூறும், சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண் குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்- என்று சிலப்பதிகாரமும் திருச்செந்தூரைப் போற்றுகின்றன.
கடல் அலைகள் வருடுவதால் திருச்சீரலைவாய் என்றும், முருகப்பெருமான் சூரபதுமனை வென்ற தலம் ஆதலால், ஜயந்திபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. கபாடபுரம், அலை வாய், கந்தமாதன மலை, திருச்செந்தில் என்ற வேறு பெயர்களும் உண்டு.
‘சிக்கலில் வேல் வாங்கி, செந்தூரில் சூர சம்ஹாரம்’ என்பது பழமொழி. தேவர்களின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட ஆறுமுகன், சூரபத்மன் மீது படையெடுத்தார். வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும், கிரௌஞ்ச மலையையும் அழித்து விட்டு, வீரபாகுத் தேவர் மற்றும் தன் படைகளுடன் திருச்செந்தூரில் வந்து தங்கினார். அவர் அசுரனை வெற்றி கொண்ட பிறகு ஈசனை வழிபடுவதற்கு தேவ தச்சன் மயனை அழைத்து கோயில் ஒன்றை எழுப்பினார். அதுவே இன்று நாம் காணும் திருச்செந்தூர் கோயில். வியாழ பகவானால் பூஜிவால்மீகி ராமாயணத்தில் ‘கபாடபுரம்’ குறிப்பிடப்பட்டிருப்பதால், ராமாயண காலத்துக்கு முன்பே திருச்செந்தூர் புகழ் பெற்றிருக்கிறது என்பதை அறியலாம்.க்கப்பட்ட காரணத்தால் இது வியாழ க்ஷேத்திரமாகவும் போற்றப்படுகிறது.
ஓரெழுத்தந்தாதி, திரிபு அந்தாதி, பதிற்றுப்பத்து அந்தாதி, யமக அந்தாதி, வெண்பா அந்தாதி, நிரோட்டக யமக அந்தாதி, சுப்பிரமணிய அந்தாதி, முருகன் கலித்துறை அந்தாதி, திருச்செந்தில் உலா, திருச்செந்தூர் மாதாந்தக் கலித்துறை, திருச்செந்தூர் வழிநடைச் சிந்து, திருச்செந்தூர்க்கோவை, திருச்செந்தூர் ஷண்முக சதகம், திருச்செந்தூர் நொண்டி நாடகம், தசாங்க வகுப்பு, திருச்செந்தூர் தல புராணம், வழி நடைப்பதம், திருச்செந்தில் பதிகம், திருச்செந்தில் நவரச மஞ்சரி, திருச்செந்தில் சந்த விருத்தம் என்று திருச்செந்தூர் பற்றிய நூல்கள் ஏராளம்.


1.செந்திலாண்டவன் ஆலயம் (ஓம்) பிரணவத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்து லட்சணங்களோடு கட்டமைக்கப்பட்டுள்ளது. கோயில் வடக்கு- தெற்காக 300 அடி நீளமும் கிழக்கு- மேற்காக 214 அடி அகலத்துட னும் அமைந்துள்ளது. இதன் பிரதான வாயில் தெற்கு நோக்கியது.
2.கோபுரம், யாளி மண்டபத்துக்கு மேல் 137 அடி உயரமும், 90 அடி நீளமும், 65 அடி அகலத்துடனும் திகழ்கிறது. இதன் ஒன்பதாவது மாடத்தில் கடிகார மாளிகை இருக்கிறது.
3.மேற்கு ராஜ கோபுரம், தெய்வானை திருமணம் நடைபெறும்போது மட்டும் திறக்கப்படும்.
4.முதல் பிராகாரத்தில் தெற்கில் ஜெயந்திநாதர் எனப்படும் குமாரவிடங்கப் பெருமான் வள்ளி- தெய்வானையுடன் காட்சி தருகிறார். தென்மேற்கில் வள்ளிக்கும், வடமேற்கில் தெய்வயானைக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன.
5.மேற்கில் சங்கரநாராயணர், காசி விசுவநாதர்- விசாலாட்சி, வேதபுரீசுவரர், திருவாதபுரீசுவரர், நாகநாத சோமேசுவரர் ஆகியோரது சந்நிதிகள் உள்ளன. வடக்கில் மாணிக்கவாசகர், காரைக்காலம்மையார், சிவகாமி- நடராஜர், சனீஸ்வரர், பைரவர் சந்நிதிகள் இடம் பெற்றுள்ளன. தவிர இங்கு ஏழுமலையானுக்கும், சந்தான கிருஷ்ணனுக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.
6.இரண்டாம் பிராகாரத்தின் மேற்கில் ஸித்தி விநாயகர், சகஸ்ரலிங்கம், ஆன்மநாதர், மனோன் மணி அம்மை, பானுகேசுவரர், சோமசுந்தரர், மீனாட்சியம்மை, திருமூலநாதர், திருக்காளத்தி நாதர் (வாயு லிங்கம்), உமா மகேஸ்வரி, அருணாசலேசுவரர் (தேயு லிங்கம்), உண்ணாமுலையம்மை, ஜம்புகேசுவரர் (அப்பு லிங்கம்), வன்மீக நாதர் (பிருதிவி லிங்கம்), அருணகிரிநாதர், வல்லப கணபதி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இதன் தென்பகுதியில், முதல் பிராகாரம் செல்லும் வாசலில் வீரகேசரியும், வீர மார்த்தாண்டரும் காவல் புரிகின்றனர். இங்கு, நவக்கிரகங்கள் கிடையாது. ஆனால், சனி பகவானுக்குத் தனிச் சந்நிதி உண்டு
7.இந்தத் தலத்தை வீரபாகு க்ஷேத்ரம் என்றும் அழைப்பார்கள். அர்த்த மண்டபத்தில் வீரபாகு, வீர மகேந்திரர் காவல் தெய்வங்களாக விளங்குகின்றனர். செந்திலாண்டவனுக்கு பூஜை செய்யும் முன்பு, முதலில் வீரபாகுவுக்கு பூஜை செய்து ‘பிட்டு’ படைத்து வழிபடுகின்றனர்.
8.ஸ்ரீசெந்திலாண்டவர் ஒரு முகம், நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். மூலவருக்கு குமார தந்திர முறையிலும், சண்முகருக்கு, சிவாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு மூலவர் தவக் கோலத்தில் இருப்பதாக ஐதீகம். எனவே அவர் கையில் வேலும் அருகில் தேவியரும் இல்லை.
9.கருவறையின் பின்புறத்தில் ஐந்து லிங்கங்களும் கருவறைக்குள் மூன்று லிங்கங்களும் உள்ளன. இவற்றை அஷ்ட லிங்கங்கள் என்பர். அஷ்ட லிங்கங்களும் இங்கு இடம்பெற்றிருக்கக் காரணம், இறைவன் சூரிய- சந்திரராகவும், பஞ்ச பூதங்களாகவும், உயிர்களாகவும் விளங்கு கிறார் என்பதை விளக்குவதற்காகவே!
10.முருகன் சந்நிதியில் முருகனுடன் பஞ்ச லிங்கங்களைக் கண்ணாலும், மற்ற லிங்கங்களை மனதாலும் பூஜிக்க வேண்டும். அப்போதுதான் நமது பிரார்த்தனை முற்றுப் பெறும். அஷ்ட லிங்கங்கங்களில், பஞ்ச லிங்கங்களுக்கு பூஜை நடக்காது. ஏனெனில், முருகப்பெருமானே இந்த லிங்கங்களுக்கு பூஜை செய்வதாக ஐதீகம்.
11.திருச்செந்தூரில் முருகப் பெருமான் ஐம்பெரும் தெய்வமாக வணங்கப்படுகிறார். அவருக்கு மஞ்சள் பட்டாடை- மஞ்சள் மலர் மாலை அணிவித்து நான்முகனாகவும், நீல மலர்கள்- நீல வண்ண ஆடைகளை அணிவித்து திருமாலாகவும், சிவப்பு நிற ஆடைகள்- சிவப்பு மலர்களை அணிவித்து அரனாகவும், வெண்பட்டு- வெண் மலர்களால் அலங்கரித்து மகேசனாகவும், பச்சை சார்த்தி சதாசிவனாகவும் போற்றப் படுகிறார். இங்கு நாள்தோறும் ஒன்பது கால வழிபாடுகள் நடை பெறுகின்றன. மார்கழி மாதம் மட்டும் பத்து கால பூஜை நடைபெறுகிறது.
12.மூலவருக்கான நைவேத் தியத்தில் காரம், புளி ஆகியவற்றைச் சேர்ப்பதில்லை. சண்முகருக்கான நைவேத்தியங்களில் காரம், புளி உண்டு. பருப்புக் கஞ்சி, தோசை, தேன்குழல், அதிர சம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியவை இடம் பெறுகின்றன. உதய மார்த்தாண்ட பூஜையின்போது தோசை, சிறுபருப்புக் கஞ்சி ஆகியவை நைவேத்தியத்தில் இடம் பெறுகின்றன. இரவு நேர பூஜையில் பால், சுக்கு, வெந்நீர் ஆகியன நிவேதிக்கப்படுகிறது.
13.மூலவரின் தலைக்கு மேல் பெரிய வெள்ளிப் பாத்திரம் ஒன்றைக் கட்டித் தொங்க விட்டு, அதில் பால் நிரப்பி, சிறு துவாரத்தின் வழியாக பாலை தாரை தாரையாக மூலவரின் மேல் விழச் செய்து சுமார் மூன்று மணி நேரம் நடைபெறும் தாராபிஷேகம் இந்தக் கோயிலின் சிறப்பு.
14.மூலவரின் உற்சவர்- அலைவாய் உகந்த பெருமான். ஐம்பொன் திருமேனி. நவராத்திரி நாள்களில்- பாரிவேட்டை, சிறுத்தொண்டர் திருநாள், தைப் புனர்பூசம், பூசம் ஆகிய நாட்களில் இவர் எழுந்தருளுகிறார். இவரை தோழன்சாமி என்பர். வள்ளி- தெய்வானை இவருக்கு அருகில் உள்ளனர். திருவிழாக்களின்போது சந்திகளில் உலா வருவதால், இவர் சந்திச்சாமி என்றும் அழைக்கப்படுகிறார்.
15.இரவு சுமார் 9:45 மணிக்கு சுவாமிக்குத் திரையிட்டு தீபாராதனை காட்டுகின்றனர். பிறகு ஆறுமுகனின் முன் பள்ளியறை சொக்கரை வைத்துத் தீபாராதனை செய்வர். இதை ரகசியத் தீபாராதனை என்கிறார்கள்.
16.உலோகத் திருமேனியரான ஆறுமுகப் பெருமானுக்கு ஆண்டுக்கு 36 தடவை மட்டுமே அபிஷேகம் நடை பெறுகிறது. இதில் விபூதி அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.
17.திருவிழாவின்போது ஒரு நாள் ‘தங்க ஆடு’ வாகனத்தில் அஜாரூடராகக் காட்சி தருகிறார் செந்திலாண்டவர்.
18.ஆறுமுகப் பெருமானின் உற்சவர்- குமாரவிடங்க பெருமான். திருமணங்களுக்கு இவரே எழுந்தருளுவதால் மாப்பிள்ளைச் சாமி எனப்படுகிறார்.
19.ஆறுமுகப் பெருமானின் ஆறு முகங்களுக்கும் நடை பெறும் ஆறுமுக அர்ச்சனை சிறப்பானது. ஆறு பண்டிதர்கள் முருகனின் ஆறு முகங்களின் முன் நின்று திருநாமங்களைப் பாட, சிவாச்சார்யர்கள் 6 பேர் மலர் தூவி அர்ச்சனை செய்வதுதான் ஆறுமுகார்ச்சனை எனப்படுகிறது. அப்போது ஆறு திருமுகங்களுக்கும், ஆறு வகையான உணவு படைக்கப்படுகிறது. ஆறு தட்டுகளில் கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டப்படும்.
20. முருகனின் ஆறுமுகங்களும் ஆறு விதமான செயல்களைச் செய்வதாக ஐதீகம். உலகுக்கு ஒளி தருவது ஒரு முகம், வேள்விகளைக் காப்பது இன்னொரு முகம், அடியார் குறை தீர்ப்பது மற்றொரு முகம், வேதாகமப் பொருளை விளக்குவது பிறிதொரு முகம், பகைவனையும், தீயோனையும் அழிப்பது வேறொரு முகம். தேவியருக்கு மகிழ்ச்சி தருவது ஆறாவது முகம். இவரது ஆறுமுகங்களும் முறையே சஷ்டி கோலம் கொண்ட முருகன், பிரம்மன், விஷ்ணு, சிவன், கலைமகள், மகாலட்சுமி ஆகியோரைக் குறிக்கும் என்பர்.
21.அசுரனை வதம் செய்ததால், திருத்தணி மற்றும் பழநி தலங்களில் உள்ளது போல் க்ஷத்திரிய வடிவில் முருகன் இங்கு காட்சி தருகிறார். எனவே, மேற்குறிப்பிட்ட தலங்களில் தோஷ பரிகாரமாக நடைபெறும் ‘சேவல் விடும்’ நேர்த்திக் கடன் இங்கும் நடைபெறுகிறது.
22. தலத்தின் சிறப்பம்சம் இலை விபூதி பிரசாதம். செந்தூரில் தேவர்கள் பன்னீர் மரங் களாக உள்ளனர் என்பது ஐதீகம். பன்னிரு நரம்புகள் உள்ள பன்னீர் மர இலைகளில் வைத்துத் தரப்படுவதே இலை விபூதி பிரசாதம். முருகப்பெருமான் தன் 12 கரங்களால் விசுவாமித்திரரின் காசநோய் நீங்க திருநீறு அளித்ததன் தாத்பர்யம் இது. சூரபதுமன் வதம் முடிந்த பின் முருகப்பெருமான் தன் பரிவாரங்களுக்கு, 12 கைகளினால் விபூதிப் பிரசாதம் வழங்கினார் என்றும் கூறுவர்.
23.மீன் பிடிக்கும் பரதவர் குலத்தில் பிறந்த தெய் வானையை முருகப் பெருமான் மணந்ததாக பரதகுல பாண்டிய வம்ச நூலில் உள்ளதால், பரதவர்கள் முருகனை, ‘மச்சான் சாமி’ என்கின்றனர்!
24.காயத்ரி மந்திரத்தின் எழுத்துகளே இங்கு 24 தீர்த்தங் களாக விளங்குகின்றன என்பது ஐதீகம்.
25.முருகன் கோயிலுக்கு அருகே, கடற்கரையையட்டி இருக்கும் வள்ளிக் குகை தரிசிக்க வேண்டிய ஒன்று.
26.முருகப்பெருமான், படை வீரர்களின் தாகம் தணிக்க வேலாயுதத்தால் நீர் ஊற்று ஒன்றை ஏற்படுத்தியதாக ‘கந்த புராணம்’ கூறுகிறது. அதை ‘ஸ்கந்த புஷ்கரணி’ என்பர். ஒரு சதுர அடி பரப்பளவில் திகழ்கிறது. ஒரு படியைக் கொண்டு முகக்கும் அளவே நீர் இருப்பதால், ஒருபோதும் வற்றாத இதற்கு நாழிக் கிணறு எனப் பெயர். இதில் நீராடிய பிறகே கந்தபெருமானை தரிசிக்க வேண்டும்.
27.போர் நடந்த இடம் ஆதலால், செந்தி லாண்டவன் கோயில் அருகில் உள்ள கடல் நீர் சற்றே சிவந்து ரத்த நிறமாயிருக்கிறது.
28.மார்கழித் திருவாதிரை- திருமுழுக்கின் போது அபிஷேகத்துக்குப் பிறகு திருச்செந்தூர் நடராஜருக்கு முருகப் பெருமானின் அணி கலன்கள் அணிவிக்கப்படுகின்றன.
29.உச்சிக் காலம் முடிந்ததும், மேளதாளத்துடன் கடற்கரைக்குச் சென்று கங்கைக்கு சுத்த அன்னம் படைக்கப்படுகிறது.
30.மாமரமாக மாறிய சூரபதுமனை வேலாயுதத்தால் முருகப் பெருமான் இரண்டாகப் பிளந்தார். அதன் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. அதனால் இங்கு மாமரங்கள் வளர்வதில்லை.
31..இங்குள்ள சண்டிகேஸ்வரருக்கு புதிய மாலைகளை சாத்த மாட்டார்கள். மூலவருக்கு சாத்திக் கழித்த மாலையையே சண்டி கேஸ்வரருக்கு அணிவிக்கிறார்கள்.
32.மூலவர் சந்நிதி இரவில் அடைக்கப்பட்டதும் இங்கு அமைந்துள்ள பைரவர் சந்நிதியில் சாவியை வைக்கிறார்கள். இவரது சந்நிதியில் உள்ள விளக்கில் இருந்து வேறொரு விளக்கில் அக்னியை ஏற்றிச் சென்றுதான் மடைப்பள்ளி அடுப்பைப் பற்ற வைக்கிறார்கள். இரவில் இவருக்கு வடை நைவேத்தியம் செய்யப்படுகிறது.
33.முருகனின் வாகனமான மயிலுக்கு பொரி படைக்கிறார்கள்.
34.ஸ்ரீ செந்தில் ஆண்டவனை தரிசிக்கச் செல்லும் ஆண் பக்தர்கள் அனைவரும் மேலாடை இல்லாமல் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பது மரபு. இங்குள்ள அர்ச்சகர்கள் ‘திரிசுதந்திரர்கள்’ எனப்படுவர். இவர்கள் கேரள தேச ஆசாரப்படி பூஜிக்கிறார்கள்.
35.தவத்திரு ஆறுமுக சுவாமிகள், தவத்திரு மௌன சுவாமிகள், தவத்திரு காசி சுவாமிகள் ஆகியோர் இந்த ஆலயத்துக்குத் திருப்பணி செய்துள் ளனர். கோயிலுக்கு தெற்கில் (சஷ்டி மேட்டுத் திடலுக்கு அருகில்) இவர்களது ஜீவ சமாதிகள் உள்ளன. வள்ளி சந்நிதிக்கு வலப்புறம் உள்ள தூண்களில் இவர்களின் சிலைகளைக் காணலாம். இவை மூலஸ்தானத்தை நோக்கியவாறு உள்ளன.
36.செந்தூரில் முருகப்பெருமான் முதலில் தங்கிய இடம் சிங்க கொழுந்தீசர் என்ற சிவன் கோயில். இந்தக் கோயிலில் உற்சவங்கள் கிடையாது. முருகன் தந்தையைப் பார்ப்பதற்காக இங்கு எழுந்தருள்கிறார்.
37.கி.பி. 1670-ஆம் ஆண்டில் காயாமொழி பகுதியை அரசாண்ட பஞ்சாதித்தன் என்ற அரசன் செந்திலாண்டவனுக்கு தேர் செய்து அர்ப்பணித்துள்ளான்.
38.‘இங்கிருந்து நீவிர் அருள்பாலிக்கும் வரை கடலால் கோயிலுக்குத் தீங்கு நேராது!’ என்பது வருண பகவானின் சத்திய வாக்கு. சுனாமி தமிழ்நாட்டைத் தாக்கியபோது திருச்செந்தூருக்கு எந்த அபாயமும் ஏற்படவில்லை என்பதே இதற்குச் சான்று.
39.பிரிட்டிஷ்- கிழக்கிந்தியக் கம்பெனியின் அதி காரி ஒருவர் 59 காசுகளுள்ள தங்கக் காசு மாலையை முருகனுக்கு அளித்துள்ளார். தவிர, 100 அமெரிக்கன் டாலர்களால் செய்யப்பெற்ற காசு மாலையும் இங்கு உள்ளது. சிறப்பு நாட்களில் மட்டுமே இந்த ஆபரணங்களை முருகனுக்கு அணிவிக்கிறார்கள்.
40.ஸ்ரீசண்முகரின் உயரத்துக்கு ஏற்ற வைர வேல் ஒன்று இங்குள்ளது. இது 100 பவுன் தங்கம், 40 காரட் வைரம் ஆகியவற்றால் செய்யப்பட்டது. நடுவில் பெரிய பச்சைக் கல் கொண்டது. கி.பி.1917-ல் கொத்தமங்கல் சி. ராம்ஜி குடும்பத்தாரால் அர்ப்பணிக்கப்பட்டது.
41.திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தால் ஆன அரிய பொருட்கள் உள்ளன. இறைவனுக்கு அமுது படைக்கும்போது கீழே விழும் பருக்கைகளை எடுக்க தங்க ஊசி ஒன்று பயன்படுத்தப் படுகிறது. கும்பாபிஷேகத்தின் போது குடத்துக்குள் இடப்படும் பொருட்களுள் தங்க மீன்களும், தங்கத் தாமரைப் பூக்களும் இடம்பெறுகின்றன. பூஜை முடிந்ததும் தங்கச் சாமரம் கொண்டு கவரி வீசுவர். மாசித் திருவிழாவின் 8-ஆம் நாளன்று ஸ்ரீசண்முகருக்கு அபிஷேகிக்கும்போது தங்கப் பிடியுடன் கூடிய காண்டாமிருகக் கொம்பின் வழியாக நீர் ஊற்றுகிறார்கள். இவை தவிர தங்க ஆமை ஒன்றும், கும்பாபிஷேகத்தின்போது தலைமைப் பட்டர் அணிந்துகொள்ள நவரத்தின மோதிரங்களும் உள்ளன.
42.தீராத வயிற்றுவலி உடையவர்கள் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் கந்தசஷ்டி கவசம் பாடினால் குணமாகும் என்று பால தேவராய சுவாமிகள் கூறியிருக்கிறார். சஷ்டி விரதம் ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப் படுகிறது. சஷ்டி விரத காலத்தில் திருச்செந்தூர் முருகன் சந்நிதானத்தில் அமர்ந்து விரதம் இருந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும்.
43.கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியின்போது கடல்நீர் உள் வாங்கும் அற்புதம் இன்றும் தொடர்கிறது. சூரசம்ஹாரம் முடிந்ததும் செந்திலாண்டவர் எதிரே கண்ணாடி வைத்து, கண் ணாடிக்கு அபிஷேகம் நடை பெறும். இதை ‘சாயாபிஷேகம்’ (சாயா- நிழல்) என்பர்.
44.திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயிலில் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சித்திரை, வைகாசி, கார்த்திகை மாதங்களில் பால்குடம் எடுப்பது சிறப்பு.இதனால் குழந்தைகள் மற்றும் பெற்றோரது தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
45.ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாளன்று தங்கப் பல்லக்கில் எழுந்தருளும் முருகப் பெருமான் முன் புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சியளிப்பார்.
46.விசாகப் பெருவிழா பத்து நாள் வெகு சிறப்பாக நடைபெறும். அப்போது கோயிலின் எதிரிலுள்ள வசந்த மண்டபத்தைச் சுற்றி நான்கு புறமும் அகழி போல் கட்டி அதில் நீர் நிரப்பி வைத்திருப்பர். விழாவின் முதல் நாள் உச்சிகால பூஜை முடிந்ததும் முருகப் பெருமான் மாலை வரை இந்த வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருப்பார். இங்கு ஆராதனைகள் முடிந்ததும், சப்பரத்தில் ஏறி 11 தடவை வலம் வந்து, முருகன் கோயிலுக்குள் போவார்.
47. 137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜ கோபுரத்தைக் கட்டியவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிக மூர்த்தி சுவாமிகள். இவரை ஒடுக்கத்தம்பிரான் என்றும் கூறுவர். கோபுரம் கட்டும்போது பணியாளர்களுக்கு கூலியாக இலை விபூதி தருவார். தூண்டு கை விநாயகர் கோயிலருகில் சென்று இலையைப் பிரித்துப் பார்த்தால், அதில் வேலைக்குரிய கூலி இருக்குமாம்! ஒரு நாள் இந்த அதிசயம் நடப்பது நின்று போனது. தேசிக சுவாமிகள் முருகனிடம் முறையிட்டார். அவரது கனவில் தோன்றிய முருகன், ‘‘காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதியிடம் சென்று உதவி பெற்று கோபுரத்தைக் கட்டி முடி!’’ என்றார். சுவாமிகள் சீதக்காதியைச் சந்தித்தார். அவர் ஒரு மூட்டை உப்பு கொடுத்தார். அதைக் கோயிலுக்குக் கொண்டு வந்து பிரித்துப் பார்த்தபோது தங்கக் காசுகளாக மாறிவிட்டிருந்தன. கோபுர வேலை இனிதே முடிந்தது. பால்குடம் எடுத்து வரும் பக்தர்கள் அடிக்கடி வழுக்கி விழுந்த சம்பவங்களாலும் கிழக்கு முகமாக சுப்பிர மணியர் சந்நிதிக்கு பின்புறம் அமைந்து விட்டதாலும் ராஜ கோபுர வாயில் மூடப்பட்டு விட்டதாம்.
48. ஆதிசங்கரர் வடநாட்டு திக்விஜயத்தை மேற் கொண்டபோது அவருக்கு எதிராக அபிநவகுப்தன் என்பவன் அபிசார யாகம் செய்து, ஆதிசங்கரருக்குக் காச நோயை உண்டாக்கினான். பிறகு ஈசனின் கட்டளைப்படி ஆகாய மார்க்கமாக திருச்செந்தூர் வந்து சேர்ந்தார் ஆதிசங்கரர். இங்கு ஆதிசேஷனான பாம்பு முருகனை பூஜிப்பது கண்டு வியப்படைந்தார். பாம்பொன்று ஊர்ந்து செல்லும் விதமான நடையில் சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகங்களை இயற்றி முருகன் அருளால் நோய் நீங்கப் பெற்றார். இங்கு மகா மண்டபத்தில் ஆதிசங்கரரது சிலை உள்ளது.
49.இலங்கை மன்னன் கண்டி அரசன் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி, சந்தன மரம் ஒன்றை வெட்டிக் கடலில் மிதக்க விடச் சொன்னார். மன்னன் வெட்டித் தள்ளிய மரம் திருச்செந்தூர்க் கரையை அடைந்தது. இந்த மரமே கொடிமரமாக உள்ளது. இந்தச் செய்தி திருச்செந்தூர் பிள்ளைத் தமிழிலும் இடம் பெற்றுள்ளது.
50.திருச்செந்தூர் கோயில் மடைப் பள்ளியில் வேலை பார்த்தவன் வென்றிமாலை. முருக பக்தன். ஒரு நாள் பிரசாதம் தயாரிக்காமல் தியானத்தில் ஆழ்ந்தான். உச்சிக்கால பூஜைக்கு பிரசாதம் இல்லை என்றதும் வென்றிமாலை வெளியேற்றப்பட்டான்! அவமானம் தாங்காமல் கடலில் விழப் போனான். அப்போது அவனைத் தடுத்து நிறுத்திய ஓர் அசரீரி, ‘செவலூர் சாஸ்திரிகளை போய்ப் பார்!’ என்றது. அப்படியே செய்தான். அவனிடம், ‘‘சம்ஸ்கிருதத்தில் உள்ள தலபுராணத்தை தமிழில் உனக்குச் சொல்லித் தர முருகன் கட்டளையிட்டிருக்கிறார்!’’ என்றார் சாஸ்திரியார்.
பிறகு சாஸ்திரியார் சொல்லச் சொல்ல, செந்தூர் தல புராணத்தை மொத்தம் 899 தமிழ்ப் பாடல்களாக புனைந்தார் வென்றிமாலை. வென்றிமாலைக்கு கவிராயர் பட்டம் தந்தார் சாஸ்திரியார். திருச்செந்தூ ரில் அவற்றை அரங்கேற்ற வந்தபோது மீண்டும் விரட்டியடிக்கப்பட்டார் வென்றிமாலை. எழுதிய ஏடுகளை கடலில் வீசியெறிந்தார் கவிராயர். ஈழக் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஏடு ஒரு முருக பக்தரிடம் சிக்கியது. திருச்செந்தூர் தல புராணத்தின் புகழ் பரவியது. எப்படியோ, மூலப் பிரதி திருச்செந்தூருக்கு வந்து சேர்ந்தது. இன்றும் கோயிலில் அது பாதுகாக்கப்படுகிறது.
நன்றி விகடன்.

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

சிவ அபிஷேக பலன்கள்:


சிவ அபிஷேக பலன்கள்:

1) அருகம்புல் ஜலத்தினால் சிவாபிஷேகம் செய்தால் நஷ்டமான  பொருட்கள்
திரும்ப கிடைக்கும்.

2) நல்லெண்ணெய் அபிஷேகத்தினால் அபம்ருத்யு நசிக்கும்.

3) பசும்பால் அபிஷேகத்தினால் ஸகல ஸௌக்கியம் கிட்டும்.

4) தயிர் அபிஷேகத்தினால் பலம், ஆரோக்கியம், யஸஸ் கிட்டும்
.
5) பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்ய ப்ராப்தி கிட்டும்.

6) கரும்பு ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தன வ்ருத்தி கிட்டும்
.
7) மிருதுவான சர்க்கரையினால் அபிஷேகம் துக்கம் நசிக்கும்.

8) தேன் அபிஷேகத்தினால் தேஜோவ்ருத்தி கிட்டும்.

9) புஷ்ப ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் பூலாபம் கிட்டும்.

10) இளநீரினால் அபிஷேகம் செய்தால் சகல ஸம்பத்தும் கிட்டும்.

11) உத்திராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும்.

12) பஸ்மத்தினால் அபிஷேகம் செய்தால் மஹா பாபங்கள் நசிக்கும்.

13) கந்தத்தினால் (அரைத்தெடுத்த சந்தனம்) அபிஷேகம் செய்தால் புத்திர
ப்ராப்தி கிட்டும்.

14) ஸ்வர்ண (தங்கம்) ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் கோரமான
தாரித்ரியம் நசிக்கும்.

15) ஸுத்த ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் நஷ்டமானவை திரும்ப
கிடைக்கும்.

16) வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போகபாக்யங்கள் கிட்டும்.

17) அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் அதிகாரம், மோக்ஷம் மற்றும்
தீர்க்காயுள் கிட்டும்.

18) திராட்சை ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் எல்லாவற்றிலும் ஜயம்
உண்டாகும்.

19) கர்ஜூரம் (பேரிச்சம்பழம்) ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் ஸத்ருக்கள்
இல்லாமல் போவர்.

20) நாவல்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் வைராக்கிய ஸித்தி
கிட்டும்.

21) கஸ்தூரி ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் சக்ரவர்த்தி ஆகலாம்.

22) நவரத்தின ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் தான்யம், க்ருஹம்,
கோவ்ருத்தி கிட்டும்.

23) மாம்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும்.

24) மஞ்சள் நீரினால் அபிஷேகம் செய்தால் மங்களம் உண்டாகும்.

ஓம் நமசிவாய..

திருச்செந்தூரில் செந்தில் வேலவன் நிகழ்த்திய அற்புத வரலாற்று நிகழ்வு:



திருச்செந்தூரில் செந்தில் வேலவன் நிகழ்த்திய அற்புத வரலாற்று நிகழ்வு:


முருகப் பெருமான் அருள் புரியும் அறுபடை வீடுகளுள் ஒன்று திருச்செந்தூர். 1648 ஆம் ஆண்டு கடல் மார்கமாக வந்த டச்சுப் படையினர் திருச்செந்தூர் திருக்கோயிலைக் கைப்பற்றினர். அப்பகுதியை ஆண்டு வந்த திருமலை நாயக்கர் சிறந்த முருக பக்தர். பெரும் படையுடன் சென்று டச்சுப் படைகளை எதிர்த்தும் அம்முயற்சி வெற்றி பெறவில்லை.
திருக்கோயில் நகைகளை கைப் பற்றியதோடு நில்லாமல், சண்முகர் - நடராஜர் ஆகிய இரு உற்சவ மூர்த்திகளையும் (தங்க விக்கிரகங்கள் எனக் கருதி) எடுத்துக் கொண்ட டச்சுப் படையினர், மீண்டும் கடல் வழியே தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். மேலும், செல்லும் வழியிலேயே உற்சவ மூர்த்திகளை உருக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
அச்சமயம் கடல் நீரில் திடீரென்று பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. காற்றும் பெரும் வேகம் கொண்டு சூறாவளி என மாற, கப்பல் கடுமையாக ஆட்டம் காணத் துவங்கியது. டச்சுப் படையினர் மிகவும் கலங்கி ஏக மனதாக முடிவெடுத்து, தாங்கள் கைப்பற்றிய உற்சவ மூர்த்திகளை கடலில் சேர்த்துவிட்டனர்.
அந்த கணமே கடல் நீரின் கொந்தளிப்பு தணிந்து, காற்றின் வேகமும் சீர் அடைந்தது கண்டு டச்சுப் படையினர் பெரு வியப்புற்றனர். இந்த வரலாற்று நிகழ்வு டச்சு நாட்டின் ராணுவ குறிப்புகளிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது. இச்சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின், உற்சவ மூர்த்திகளை மீண்டும் செய்விக்கும் பணி தொடங்கப் பெற்றது.
அதே சமயம், வடமலையப்பர் எனும் பக்தரின் கனவில் ஆறுமுகக் கடவுள் தோன்றி, உற்சவ மூர்த்திகள் கடலில் இருக்கும் இடத்தை காண்பித்து, அடையாளமாக ஒரு எலுமிச்சை கனியும் கருடப்பறவையும் தோன்றும் என்று அறிவித்து அருளினார். திருவருள் திறத்தை வியந்து போற்றிய வடமலையப்பர் கடலில் மூர்த்திகளை தேடும் பணியைத்துவங்கினார்.குறிப்பிட்ட இடத்தில் எலுமிச்சைக்கனி மிதந்தது அதை  கருடப்பறவையும் வானில் வாட்டமிடுவதையும் கண்டு கடலுக்கு அடியில் நீந்திச்சென்று உற்சவ மூர்த்திகளை வெளியே கொண்டுவந்தார்.திருச்செந்தூர் திருக்கோயிலில் ஒரு சுபயோக தினத்தில் சண்முகப்பெருமானை மீண்டும் பிரதிஷ்டை செய்தனர்.திருச்செந்தூர் வாழ் மக்கள் தங்கள் வாழ்வோடும் ஆன்மாவோடும் கலந்து விட்ட சண்முகக் கடவுளை போற்றித்துதித்தனர்.


கந்தசஷ்டி விரதம்   “எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும்” என்பது ஆன்றோர் வாக்கு. முருகனுக்குரிய விரதங்களில் கந்தசஷ்டி விரதமே தலைமையானது


 ஒப்பற்றது. இதனைச் சுப்பிரமணிய சஷ்டி விரதம் என்றும் அழைப்பர். இது திதி விரதம். சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தான்' என்று வேடிக்கையாகக் கூறுவார்கள். முருகன் சட்டியிலே மாவை வறுத்தானாம்!

உண்மைதான். அவன் சட்டியிலே, சஷ்டி திதியிலே, மா அறுத்தான் = மாமரமாக நின்ற சூரபத்மனைத் அறுத்தான். முருகன் சூரபத்மனுடன் ஆறு நாள்கள் தொடர்ந்து போரிட்டான். ஆறாம் நாள், மாமரமாகி எதிர்த்துப் போரிட்ட அவனைத் தனது வேலாயுதத்தால் பிளந்தான். பிளந்த ஒரு கூறு மயிலாயிற்று. முருகன் அதைத் தன் வாகனமாக ஏற்றான். மறு கூறு சேவலாயிற்று. அதைத் தன் கொடியாக ஏந்தினான்.

குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. இதைத் தான் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்ற பழமொழியாகக் கூறுவார்கள். சட்டியில் = சஷ்டி திதியில், இருந்தால் = விரதமிருந்தால்; அகப்பையில் = கருப்பையில்; வரும் = கரு தோன்றும். அதாவது மகப்பேறில்லாத மகளிர் சஷ்டி விரதமிருந்து முருகனை வழிபட்டால், அவனது அருளால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும் என்பது கருத்து.

முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.

ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள், அதாவது தீபாவளிக்கு மறுநாள், பிரதமையில் விரதத்தைத் தொடங்கித் தொடர்ந்து சஷ்டி வரை ஆறு நாள்கள் முருகனை வழிபட்டுக் கடும் விரதம் காப்பது கந்த சஷ்டி விரதம்'. இதனை மகா சஷ்டி விரதம்' என்றும் கூறுவர்கள்.

#முழுவதும்_படிக்கவும்

கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

🌸கந்தசஷ்டி விரதம், தீபாவளி பண்டிகைக்குப்பின் வரும் ஆறு நாட்கள் நடைபெறுகிறது. திருச்செந்தூரில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழா.

 🌸எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம்.

🌸 முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது? கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள்.

 🌸பொதுவாக விரத தினங்களில் மக்கள் சைவமாக இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு, பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர். ஆனால், விரதத்தை நியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத் தரும்.

🌸கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம்.

🌸 ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு. காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது.

🌸ஆறுமுகமான - சண்முக தத்துவம் என்ன ? ஒரு முகம் - மஹாவிஷ்ணுவுக்கு,
இரு முகம் - அக்னிக்கு,
மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு,
நான்முகம் - பிரம்மனுக்கு,
ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் - கந்தனுக்கு. நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் இவ்வாறு கூறுவார் :

1. உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம்,

2. பக்தர்களுக்கு அருள் ஒரு முகம்,

3. வேள்விகளைக் காக்க ஒரு முகம்,

4. உபதேசம் புரிய ஒரு முகம்,

5. தீயோரை அழிக்க ஒரு முகம்,

6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்.

 ஸரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). இதன் மகிமை என்ன? ஸ - லக்ஷ்மிகடாக்ஷம்

ர - ஸரஸ்வதி கடாக்ஷம்
வ - போகம் - மோக்ஷம்
ண - சத்ருஜயம்
ப - ம்ருத்யுஜயம்
வ - நோயற்ற வாழ்வு ஆக,

 பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம். ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக விளங்குகின்றன.

 ✨திருப்பரங்குன்றம் - மூலாதாரம்


✨திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம்

✨பழனி - மணிபூரகம்

✨ சுவாமிமலை - அனாஹதம்

✨ திருத்தணிகை - விசுத்தி

✨ பழமுதிர்சோலை - ஆக்ஞை.

 🌸 ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் ஸ்கந்த ஷஷ்டியில் துதித்து வழிபட்டு குஹானந்த அனுபூதி வாரிதியில் மூழ்குவோம்.

 🌸முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில் மந்திர மயில்.

 🌸சூரசம்ஹாரத்தின்போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில். பின் சூரனை இருகூறாக்கியதில் வந்த மயில்தான் அசுர மயில். ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின்போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடி விடுவார்கள். வியாசர் எழுதிய 18 புராணங் களில் ஸ்காந்தம் என்னும் கந்தபுராணமே மிகப்பெரியது.

🌸ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்டது. மற்ற எல்லா புராணங்களும் சேர்ந்தே மூன்று லட்சம் சுலோகங்கள்தான். கந்தன் பல பெயர்களால் போற்றப்படுகிறான்.

🌸சஷ்டியில் விரதமிருப்போம்!!!
சகல சௌபாக்கியம் பெறுவோம்!!!

#ஓம்சூரசம்ஹார மூர்த்தியே   போற்றி

#முருகாசரணம்

கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.



கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.

கவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.

இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள் இவர் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். இந்த சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது.

சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர்.

நாம் அந்தத் திரு வடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம். கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள்.

முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், ப்ன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.

அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேச்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.

 அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனைப உடம்பில் தான் எத்தனை பாகங்கள்ப காக்க என்று வேலை அழைக்கிறார், வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல் மார்பிற்கு ரத்தின வடிவேல்,

இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல் பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல் முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ரவேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க. அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன.

அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயல் இழந்து விடும் என்கிறார். பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்.

நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார். இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள்.

சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்.

சூட்சும விஞ்ஞானம்



சூட்சும விஞ்ஞானம் :

1. மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா?  நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.

2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.

3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.

4. ஒவ்வொரு மனிதனுக்கும் ‪சூ‎ட்சும‬ சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.

5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.

6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.

7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.

8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.

9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.

10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.

11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல.

12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.

13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள, தொடர்பு பாதிப்பே ஆகும்.

14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.

15. நோயளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.

16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.

17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.

18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஓருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.

19. ஒரு மனிதனினை புண்பட செய்வது நூதனமான கொலைக்கு சமம்.

20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.

21. நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.

22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.

23. வலி என்பது உடலின் மொழி.
அதை ஓரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.

24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.

25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.

26. உடலின் உறுப்புக்கள் மனதுடன் ஒத்த இயக்கமே ஆரோக்கியம்.

27. விவசாய நிலத்தில் தாயின் கருவரையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.

28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.

29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.

30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.

31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.

32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.

33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய பதிவுகள் நீங்கும்.

34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.

35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரிரத்தின் கவசம் பெறுகிறது.

36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.

37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடங்கள்.

38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.

39. ‪சூ‎ரிய‬ ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.

40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரிரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.

41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.

42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.

43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.

44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.

45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.

46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.

47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.

48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.

49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.

50. தூக்கம் என்பது,
     விழிப்புணர்வு அற்ற தியானம்.
     தியானம் என்பது,
     விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.

படித்ததை பகிர்கிறேன்

...

பிரம்ம முஹூர்த்தம் பற்றிய விபரங்கள் மூல நூல்களில் இருந்ததற்கான ஆதாரங்கள்.


பிரம்ம முஹூர்த்தம் பற்றிய விபரங்கள் மூல நூல்களில் இருந்ததற்கான ஆதாரங்கள்.

1. ருத்ர முஹுர்த்தம்---------------06.00AM – 06.48AM
2. ஆஹி முஹுர்த்தம்--------- 06.48am –07.36am
3. மித்ர முஹுர்த்தம்------------------- 07.36am – 08.24am
4. பித்ரு முஹுர்த்தம்----------------- 08.24am – 09.12am
5. வசு முஹுர்த்தம்-------------------- 09.12am – 10.00am
6. வராஹ முஹுர்த்தம்------------- 10.00am – 10.48am
7.விச்வேதேவாமுஹுர்த்தம்---- 10.48am – 11.36am
8.விதி முஹுர்த்தம்------------------- 11.36am – 12.24pm
9. சுதாமுகீ முஹுர்த்தம்------------ 12.24pm – 01.12pm
10. புருஹூத முஹுர்த்தம்---------- 01.12pm – 02.00pm
11. வாஹிநீ முஹுர்த்தம்------------ 02.00pm – 02.48pm
12.நக்தனகரா முஹுர்த்தம்------ 02.48pm – 03.36pm
13. வருண முஹுர்த்தம்-------------- 03.36pm – 04.24pm
14. அர்யமன் முஹுர்த்தம்---------- 04.24pm – 05.12pm
15.பக முஹுர்த்தம்--------------------- 05.12pm – 06.00pm
16. கிரீச முஹுர்த்தம்----------------- 06.00pm – 06.48pm
17. அஜபாத முஹுர்த்தம்------------ 06.48pm – 07.36pm
18.அஹிர்புத்ன்ய முஹுர்த்தம் 07.36pm – 08.24pm
19.புஷ்ய முஹுர்த்தம்-------------- 08.24pm – 09.12pm
20.அச்விநீ முஹுர்த்தம்------------ 09.12pm – 10.00pm
21.யம முஹுர்த்தம்------------------ 10.00pm – 10.48pm
22.அக்னி முஹுர்த்தம்------------- 10.48pm – 11.36pm
23.விதாத்ரு முஹுர்த்தம்-------- 11.36pm – 12.24am
24.கண்ட முஹுர்த்தம்------------- 12.24am – 01.12am
25.அதிதி முஹுர்த்தம்-------------- 01.12am – 02.00am
26.ஜீவ/அம்ருத முஹுர்த்தம்--- 02.00am – 02.48am
27.விஷ்ணு முஹுர்த்தம்------------ 02.48am – 03.36am
28.த்யுமத்கத்யுதி முஹுர்த்தம்-- 03.36am – 04.24am
29.பிரம்ம முஹுர்த்தம்--------------- 04.24am – 05.12am
30.சமுத்ரம் முஹுர்த்தம்------------ 05.12am – 06.00am

பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில் ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13 வது அத்தியாயங்களில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி சிலாகித்துச் சொல்லப்பட்டுள்ளது.

சனி, 21 அக்டோபர், 2017

முருகனுக்கு உகந்த வழிபாடுகள்



முருகனுக்கு உகந்த வழிபாடுகள்

முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள் மேற்கொள்ளும் முக்கிய விரதங்கள் மூன்று. கார்த்திகை- கிருத்திகை விரதம், சுக்கிர - வெள்ளிக்கிழமை விரதம், சஷ்டி விரதம். கார்த்திகை நட்சத்திரத்தன்று முருக பக்தர் விரதம் இருந்து முருகனை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு செல்வம், கல்வி, ஆயுள், நல்ல மனைவி, நன்மக்கட் பேறு, பசுக்கள், நிலபுலம், நிம்மதியான வாழ்வு ஆகிய எல்லாம் கிடைக்கும்.

கார்த்திகை விரதம்

கார்த்திகையில் வரும் பரணியன்று பகலில் உண்டு இரவில் உண்ணாது இருக்க வேண்டும். கார்த்திகை அன்று காலையில் நீராடி முருகன் கோயில் சென்று வழிபடவேண்டும். தண்ணீர் மட்டும் அருந்தி முருகனின் அருட்பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். முழு தினமும் முருகனை தியானம் செய்ய வேண்டும். மறுநாள் ரோகிணியன்று காலையில் நீராடி நித்திய வழிபாடு செய்து, அன்னதானத்திற்கு பிறகு அமுது செய்ய வேண்டும். (சைவ உணவு, பூண்டு, வெங்காயம் தவிர்க்க வேண்டும்). பிறகு ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகையன்று விரதம் மேற்கொள்ள வேண்டும்.

சுக்கிர விரதம்
சுக்கிரவார (வெள்ளிக்கிழமை) விரதம் விநாயகர், அம்பிகை, முருகப்பெருமான் ஆகிய மூவருக்கும் உரியது. ஐப்பசி மாதம் முதல் சுக்கிர வாரத்தில் தொடங்கி முன்சொன்னபடி வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருக்க வேண்டும்.

சஷ்டி விரதம்

ஐப்பசி மாதம் வளர்பிறை (சுக்கிலபட்சம்)யில் வரும் பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்கள் விரதம் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் விடியற்காலை எழுந்து நீராடி, நித்திய கடன் முடித்த பின் பூரணகும்பம் வைத்து நீர் பரப்பி, மாவிலை வைத்து தருப்பையைப் பரப்பி அதன்மீது சந்தனம் வைத்து குங்குமம் அட்சதை இட்டு, முருகப்பெருமானை அதில் எழுந்தருளச் (ஆவாகனம்) செய்து, மலர் தூவி, தூப தீபம் காட்டி அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். பகலில் உறங்கக் கூடாது. ஆறு நாட்களும் முருகப்பெருமான் அருட்பாடல்களை ஓதவேண்டும். கந்தன் சரிதம் படிக்க/கேட்க வேண்டும். தியானம், ஜபம் செய்ய வேண்டும். அருகிலுள்ள முருகன் கோவிலில் நடை பெரும் சஷ்டி விழாக்களில் தினமும் கலந்து கொள்ள வேண்டும். சூரசம்ஹாரவிழா, திருக்கல்யாண விழாக்களை கண்டு களித்து அதன்பின் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். மாதம் தோறும் வளர்பிறை சஷ்டியில் ஒருநாள் இதுபோல் விரதம் மேற்கொள்ளலாம். விரதம் இருப்பவர் எண்ணிய நலன் பெறுவர், புண்ணிய பலம் பெறுவர். ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வேல் வேல் வெற்றிவேல்!!!