ஞாயிறு, 21 ஜூன், 2020

பிரதோஷம் ஸ்பெஷல்


பிரதோஷம் ஸ்பெஷல் ! 

'#நந்தி_வழிபாடு_நற்கதியளிக்கும்'

காதில்லாத நந்தி, பின்னங்கால் இல்லாத நந்தி - சிவாலயங்களில் பரவசப்படுத்தும் நந்தி வடிவங்கள்! 

'நந்தி வழிபாடு நற்கதியளிக்கும்' என்பார்கள். சிவபெருமானின் சகல அதிகாரங்களையும் பெற்றுள்ள நந்திக்குப் பல்வேறு திருநாமங்கள் உண்டு. அப்படியான நந்திப் பெருமானாரின் வடிவங்களையும் சிறப்புகளையும், திருநாமங்களையும் இங்கு காணலாம். 

*  #அதிகார_நந்தி: சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப்  பெருமானை வழிபட்டு, கொடிமரத்துக்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக்கொண்ட பின் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும். கொடிமரத்திற்கும் நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் நின்று, நந்தியம்பெருமாளின் இரண்டு கொம்புகளுக்கு நடுவில் இறைவனை தரிசிக்க வேண்டும். இந்த நந்தியை அதிகார நந்தி என்பர். இவர் பூவுலகில் கடுமையாக தவம் செய்து பதினாறு வரங்களைப் பெற்றவர்; சிவகணங்களின் தலைவர்.

* #மால்விடை_நந்தி: சிவாலயங்களில் கொடி மரத்திற்குப் பக்கத்தில் இருக்கும் அதிகார நந்திக்கு அடுத்து ஒரு நந்தி காட்சிதரும். அது மால்விடை எனப்படும் விஷ்ணுநந்தி. திரிபுர சம்ஹார காலத்தில் திருமால், நந்தி வடிவம் எடுத்து சிவனைத் தாங்கினார் என்கிறது புராணம். 

* #பிராகார_நந்தி: கொடிமரம் இல்லாத கோவில்களில் சிவனை நோக்கி ஒரு நந்தி காட்சி தருவார். இவரை பிரகார நந்தி என்பர்.

* #தர்ம_நந்தி: சிவபெருமானுக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் நந்தி தர்ம நந்தி எனப்படுவார். இந்த நந்தியின் மூச்சுக்காற்று சுவாமியின் மீது பட்டுக்கொண்டேயிருக்கும். அதனால் நந்திக்கும் சுவாமிக்கும் இடையே செல்லக் கூடாது என்று சாஸ்திரம் சொல்லும். 

#ஒன்பது_நந்திகள்: பழைமையான சிவாலயங்களில் அதிகபட்சம் ஒன்பது நந்திகள் இருக்கும். அவை: 
பத்ம நந்தி, 
நாக நந்தி, 
விநாயக நந்தி, 
மகா நந்தி, 
சோம நந்தி, 
சூரிய நந்தி, 
கருட நந்தி, 
விஷ்ணு நந்தி, 
சிவ நந்தி ஆகியன. இந்த ஒன்பது நந்திகளையும் நந்தியால், ஸ்ரீசைலம் ஆகிய திருத்தலங்களில் தரிசிக்கலாம்.

இதுவரையிலும் ஆலயங்களில் அருளும் நந்திதேவர்களின் வகையை அறிந்தோம். இனி, வித்தியாசமான கோலத்தில் நந்திதேவர் அருளும் தலங்களைப் பார்ப்போம்.

#அண்ணாமலை_நந்திகள்!

* சிவபெருமானை நோக்கியபடி அருள்பாலிக்கும் நந்திதேவர், சில தலங்களில், கோயில் வாயிலைப் பார்த்தபடி இருப்பதைக் காணலாம். திருவண்ணாமலையை வலம் வரும்போது அஷ்ட லிங்கங்களைத் தரிசிக்கலாம். அங்குள்ள நந்திகள் அனைத்தும் கருவறையில் அருள் புரியும் சிவலிங்கத்தைப் பார்க்காமல், திருவண்ணாமலையைப் பார்த்த வண்ணம் இருப்பதைக் காணலாம். திருவண்ணாமலையே சிவரூபமாக இருப்பதால் இந்தக் கோலம் என்பர்.
நந்தனாருக்காக விலகிய நந்தி

* நந்தனாரை அந்தக் காலத்தில் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. அவர் கோவிலுக்கு வெளியே இருந்து சிவபெருமானைத் தரிசிக்க விரும்பினார். அதற்கு நந்தி இடையூறாக இருந்தது. #நந்தனார் சிவபெருமானை வேண்டிட, இறைவனின் திருவருளால் நந்தனார் ஈசனைத் தரிசிப்பதற்கு ஏதுவாக, ஏற்கெனவே தாம் இருந்த இடத்திலிருந்து சற்று விலகி அமர்ந்தாராம் நந்திதேவர்! #திருப்புள்ளார் என்னும் இந்தத் தலத்தில் ஏழு அடி உயரமுள்ள நந்தி, சிவபெருமான் சந்நிதிக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருப்பதைக் காணலாம்.

#ஞானசம்பந்தருக்காக_விலகியிருக்கும்_நந்திகள்

* #பட்டீஸ்வரம் சிவாலயத்துக்கு ஞானசம்பந்தர் வெயிலில் வருவதைக் காணப்பெறாத இறைவன் தன் முத்துக் குடையைக் கொடுத்து அனுப்பிய திருக்கதை புராணங்களில் உண்டு. இங்கிருக்கும் நந்திகளும், ஞானசம்பந்தர் சிவபெருமானை நன்கு தரிசிக்கும் வண்ணம் சற்று நகர்ந்தே இருக்கும். இதேபோல், நந்தி விலகியிருக்கும் தலங்கள் #திருப்புன்கூர், #திருப்பூந்துருத்தி ஆகியவையாகும்.

#கோயிலின்_வாயிலை_நோக்கிய_நிலையில்..

* வேலூர் அருகேயுள்ள #திருவல்லம் திருத்தலத்தில் இறைவன் வில்வநாதேஸ்வரர், இறைவி தனுமத்யாம்பாள் அருள் புரிகிறார்கள். இங்குள்ள நந்தி, சுவாமியை நோக்காமல் நின்ற நிலையில் #புறமுதுகு_காட்டி_காட்சிதருகிறார். 
இதற்குக் காரணம் என்ன தெரியுமா?
ஒருமுறை கோவில் குருக்கள் சுவாமிக்கு அபிஷேகத் தீர்த்தம் எடுத்து வரும்போது கஞ்சன் என்ற அரக்கன் இடையூறு செய்தான். குருக்கள், சுவாமியிடம் முறையிட, சுவாமி நந்தியைப் பார்த்து கஞ்சனைக் கவனிக்கும்படி சொன்னார். நந்தியிடம் அடிப்பட்ட கஞ்சன், ‘’இனிமேல் குருக்களுக்குத் தொந்தரவு கொடுக்க மாட்டேன்” என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டு உயிர் தப்பினான். இருந்தாலும் அவன் மீண்டும் தொந்தரவு கொடுக்காமலிருக்க கோவிலின் வாயிலை நோக்கிய வண்ணம் இறைவனுக்குப் புறமுதுகுகாட்டிய நிலையில் உள்ளார்.

* கும்பகோணம் அருகில் #திருவைகாவூர் திருத்தலம் உள்ளது. இத்தல இறைவன் வில்வனேஸ்வரர்; அம்பாள் சர்வஜனரட்சகி. சிவபக்தனான வேடன் ஒருவன் கோயிலுக்குள் ஈசனை வணங்கிக்கொண்டிருக்கும் போது, அவன் உயிரைப் பறிக்க யமன் வந்தான். சிவாலயத்திற்குள் யமன் நுழைவதைக் கண்ட நந்தியும் துவார பாலகர்களும் தடுக்க, யமன் திரும்பிச் சென்று விட்டான். மீண்டும் யமன் கோவிலுக்குள் வராமல் தடுக்க நந்தியெம்பெருமாள் இங்கு வாயிலை நோக்கி உள்ளார்.

* விருத்தாசலத்திற்கு மேற்கே பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது #பெண்ணாடகம். இத்தலத்தில் அருள்பாலிக்கும் சுவாமி சுடர் கொழுந்தீசர்; 
அம்பாள் கடந்தை நாயகி. ஒரு சமயம் பெண்ணாடகத்தில் கடும் மழை  பெய்து ஊரைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. அந்த ஊர்மக்கள் இறைவனை வேண்ட, இறைவன் நந்தியிடம் வெள்ளத்தை உறிஞ்சி மக்களைக் காப்பாற்றும்படி ஆணையிட்டார். உடனே நந்தியெம்பெருமான் கிழக்குப் பக்கமாகத் திரும்பி மழையால் ஏற்பட்ட வெள்ள நீரைக் குடித்து மக்களைக் காப்பாற்றினார். அன்றிலிருந்து நந்தி சிவபெருமானுக்குப் புறமுதுகு காட்டிக் கொண்டு வாசலை நோக்கி உள்ளார்.

* சென்னைக்கு அருகில் உள்ள #வடதிருமுல்லை_வாயில்_திருத்தலத்தின் இறைவன் மாசிலா மணீஸ்வரர்; 
இறைவி கொடியிடை நாயகி. இத்தலத்தினை ஆட்சி புரிந்து வந்த தொண்டைமான் சிவபக்தன். இந்த மன்னனை அழிக்க அரக்கர்கள் படையெடுத்து வரவே, மன்னன் இறைவனிடம் வேண்டினான். உடனே இறைவன் நந்தியெம்பெருமானை அனுப்பினார். நந்தி, அரக்கர்களை ஓட ஓட விரட்டியடித்தார். அரக்கர்கள் மீண்டும் திரும்பி வராமலிருக்க போருக்கு ஆயத்தமான நிலையில் வாயிலை நோக்கிய வண்ணம் நந்தி காட்சி தருகிறார்.

* காஞ்சியிலிருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் #செய்யாறு_அருகில்_திருவோத்தூர் திருத்தலம் உள்ளது. இத்தலத்து இறைவன், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசிக்கும் வேளையில், இவர்கள் கவனம் சிதறாமல் இருப்பதற்கும் மற்றவர்கள் உள்ளே நுழையாமலிருக்கவும் வாயிலை நோக்கித் திரும்பிய நிலையில் உள்ளார் நந்தி.

* ஆந்திர மாநிலத்தில் உள்ள #சுருட்டப்பள்ளியில், சிவபெருமான் ஆலகால விஷம் உண்டதால் மயங்கிய நிலையில் அம்பாளின் மடியில் பள்ளி கொண்டுள்ளார். இங்கு நந்தியெம்பெருமாள் எதிரில் இல்லாமல் #தலைப்பக்கம் உள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் உள்ள #நஞ்சன்கூடு என்ற தலத்தில் உள்ள #நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நந்தியானவர் வாயிலை நோக்கி உள்ளார். இறைவனை வழிபட வருபவர்களை மனசுத்தி உள்ளவர்களாக மாற்றி, முகர்ந்து அனுப்புவதாக ஐதீகம்.

#காது_இல்லாத_நந்திதேவர்!

* குடந்தை நாகேஸ்வரம் தலத்திலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தேப்பெருமாநல்லூர் விஸ்வநாதசுவாமி கோவிலில் உள்ள நந்திக்கு வலது காது இருக்காது. காரணம், பிரளய காலத்தில் சிவபெருமான் எழுந்தருளிய தலத்தைத் தேடி ஓடி வந்ததில், ஒரு பக்கமாக வழுக்கி விழுந்து வலது காது பழுதடைந்து போனதாம். எனவே இவர் வலது காது இல்லாமல் காட்சி தருகிறார் என்பது நம்பிக்கை.

#அறப்பளீஸ்வரர்_கோயிலில்..

* கொல்லிமலை அறப்பளீஸ்வரர் ஆலய நந்திக்கு வலது பின்னங்கால் கிடையாது. இவர் இக்கோவிலுக்கு அருகில் உள்ள புளியஞ்சோலையில் பயிரிடப்பட்டிருந்த கடலைச்செடியின் பூக்களின் மணம் கவரவே. கடலைக் காய்களைத் தின்பதற்கு இரவில் அங்கு சென்றார். இதனை அறிந்த காவலர்கள் நந்தியை பயங்கர ஆயுதத்தால் தாக்க, நந்தியின் ஒரு கால் வெட்டுப்பட்டது. அந்த நிலையில் அப்படியே கோவிலுக்கு வந்து அமர்ந்தார். அந்தத் தோற்றத்துடன் இன்றும் காட்சி தருகிறார் நந்தியம்பெருமான்.

இதுபோல் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தரும் நந்தீஸ்வரர் அருள்புரியும் சிவன் கோயில்கள் மிகவும் போற்றப்படுகின்றன. சிவ ராத்திரியின் போதும் பிரதோஷ காலத்தின் போதும் இறைவனுடன் அங்கு அருள்பாலிக்கும் நந்தீஸ்வரரையும் வழிபட்டால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பர்.

செவ்வாய், 16 ஜூன், 2020

நாராயண் ஷீலா


நாராயண் ஷீலா

பூரி ஜகனாதர் ஆலயத்தில் வைத்து பூஜிக்கப்படும்  "நாராயண் ஷீலா " என்பது இது தான். இதை 100 ஆண்டுகளுக்கு ஒருமுறையே பெட்டகத்தில் இருந்து வெளிகொணர்ந்து
பக்தர்கள் தரிசனத்துக்கு வைப்பார்கள். இவ்வருடம் அவ்வாறு எடுத்து வைத்து பூஜிக்கப்படும் போது கிடைத்த படம் ஆகும். இதை கண்ணார தரிசிப்பவர்கள் அதி பாக்கியசாலிகள். இது சிலருக்கு மட்டுமே வாழ்வில் தரிசிக்க கிடைக்கப்பெறும். அவ்வகையில் நாம் அனைவரும் புண்ணியவான்களே.

பூரி கோவிலுக்கு சொந்தமான இந்த சாலிகிராம் கடைசியாக 1920 ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் காய்ச்சலின் போது தொற்றுநோய்களின் மோசமான விளைவுகளைத் தடுக்க எடுக்கப்பட்டது. COVID இன் பார்வையில் இது இப்போது மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து தரிசனத்தை எடுத்து குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.

This Saligram belonging to Puri temple was last taken out in 1920 during the Spanish flu  to ward off the ill effects of the Pandemic. It has been taken out again now in view of COVID. Please take Darshan and pass it on to family and friends.

திங்கள், 15 ஜூன், 2020

உலக புகழ் பெற்ற பிள்ளையார் கோவில்கள்


உலக புகழ் பெற்ற பிள்ளையார் கோவில்கள் 

விநாயகர் தகவல் மெகா கணபதிகள் 1 பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் 2 திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் 3 திருவலஞ்சுழி வெள்ளைப்
விநாயகர் தகவல்

மெகா கணபதிகள்

1. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்.

2. திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார்.

3. திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையார்.

4. திருச்செட்டாங்குடி வாதாபி கணபதி.

5. செதலபதி ஆதி விநாயகர்.

1 . பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்

பிள்ளையார் என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிள்ளையார்பட்டிதான். மருதங்குடி, திருவீங்கைக்குடி, ஈக்காட்டூர் என்றெல்லாம் அழைக்கப் பட்ட ஊர், பிள்ளையார் என்று 'ஜீங்'கென்று அமர்ந்தாரோ அன்று முதல் 'பிள்ளையார்- பட்டி' ஆகிவிட்டது. 'வாதாபி கணபதி'நம் ஊருக்கு வந்த கதை ஞாபகம் இருக்கிறதா? அதன் பிறகு நரசிம்ம வர்ம பல்லவன், தென்னாட்டை ஒரு சுற்றுலா அடித்தபோது, காரைக்குடி பக்கத்தில் இருந்த அழகானமலை கண்ணில் பட்டது. அவனால் அந்த மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டவர்தான் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர். இவரிடம் எதுவும் வேண்டிக் கொள்ளக்கூட வேண்டாம். அவரைச் சும்மா பார்த்தாலே போதும், உடம்பெல்லாம் சிலிர்த்துப் போகும். எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார் என்ற மனத் தெளிவு தானாய் வந்துவிடும்.இவர் வலம்புரி விநாயகர் எல்லா இடத்திலும் நான்கு கரங்களால் நான்கு திக்கையும் ஆட்சி செய்பவர், இங்கே இரண்டே திருக்கரங்களால் விண்ணையும், மண்ணையும் தன் ஆட்சிக்குள் கொண்டு வந்துவிடுகிறார். ஆயுதங்கள் எதுவும் இல்லாமல், அர்த்தபத்ம ஆசனத்தில் வலக்கரத்தில் கொழுக்கட்டையோடு, இடக்கையை இடையில் தாங்கி, பெருமிதமாய் பக்தர்களுக்கு அபயமளிக்கிறார். காரைக்குடி-திருப்பத்தூர் சாலையில் உள்ளது. பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோவில்.

2. திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார்

பிள்ளையார் அன்பே உருவானவர், கருணைக் கடல், கேட்டதைத் தருபவர் என்பதெல்லாம் நமக்குத் தெரியும். ஆனால், இது என்ன பொல்லாப் பிள்ளையார்? நம் வீட்டுக் குழந்தை அதிசயமாக எதையாவது செய்துவிட்டால், "பொல்லாத பிள்ளையப்பா"என்று கொஞ்சுவதில்லையா?அதுபோல் குழந்தை ஒருவனுடன் இந்தப் பிள்ளையார் சரிசமமாய் நின்று, குழந்தை சொன்னதையெல்லாம் கேட்டதால் 'பொல்லாத பிள்ளையார்'என்று அழைக்கப்படுகிறார். தவிர, பொல்லாத - பொள்ளாத - என்றால் உளியால் செதுக்கப்படாத என்று அர்த்தம் இந்தப் பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே தோன்றியவர், ஆதலாலும் பொல்லாத பிள்ளையார் என்று அழைக்கலாம். எல்லா ஊரிலும் பெரும் தொப்பையுடன் இருக்கும் பிள்ளையார், இங்கே ஒட்டிய வயிறுடன் காட்சியளிப்பது அதிசயமான ஒன்று. தமிழுக்காகவும், பக்தர்களுக்காகவும் ஒடியாடி உழைத்ததால் இப்படி ஆகிவிட்டாரோ என்னவோ?

அது என்ன ஊரின் பெயர் திருநாரையூர்?

மிருகண்டு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தபோது காந்தவர்மன் என்பவன் அதற்கு இடையூறு செய்தான். கோபம் கொண்ட முனிவர், அவனை 'நாரை'யாக மாறுமாறு சாபமிட்டுவிட்டார். அவன் சாப விமோசனம் கேட்டு கதறியழுதபோது, சௌந்தரேஸ்வரரை தினமும் காசி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யுமாறு முனிவர் கூறினார். அதுபோலவே செய்தது நாரை, ஒரு நாள், இறைவனின் சோதனையால் காசியிலிருந்து நீர் கொண்டு வரும்போது பெரும் மழை ஏற்பட்டது. அதனால், பறக்க முடியாமல் நாரை தவித்தது. அதன் சிறகுகள் ஒவ்வொன்றாக விழுந்தன. (அந்த இடம் சிறகிழந்த நல்லூர்) . சிறகுகள் இல்லாத நிலையில் நாரை தவழ்ந்து வந்து, சிவனை வழிபட்டு மோட்சம் பெற்றது. அதனால் அந்த ஊர் 'திருநாரையூர்'என்று அழைக்கப்படுகிறது. சிதம்பரத்திற்குத் தென்மேற்கே 20 A.e. தொலைவில், காட்டுமன்னார்குடி பாதையில் உள்ளது. பொல்லாப் பிள்ளையார் கோயில்.

3.திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையார்

தேவேந்திரனால் பாற்கடல் நுரையால் செய்யப்பட்ட வெள்ளைப் பிள்ளையாரை நீங்கள் பார்க்க வேண்டுமா?

அந்த வெள்ளைப் பிள்ளையாரைத் தரிசிக்க திருவலஞ்சுழி சுவேத விநாயகர் ஆலயத்திற்கு போவோமா?

பிள்ளையார் வெள்ளையாக இருப்பதால், நானும் அப்படியிருக்கிறேன் என்று சொல்லுவது போல் வெள்ளைக் கோபுரம் நம்மை வரவேற்கிறது. உள்ளே சென்றால், சுவேத விக்னேஸ்வரர் எனப்படும் வெள்ளைப் பிள்ளையாரைச் சந்திக்கலாம். சிறிய வடிவம்தான் என்றாலும், தேவேந்திரனால் பூஜிக்கப்பட்டவராயிற்றே!தேவர்களுக்கு அமுதம் கிடைக்க வழிதந்தவர் ஆயிற்றே!வெள்ளைப் பிள்ளையாரைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல் தோன்றும். அத்தனை தெய்வீகம்!கடல் நுரையால் செய்யப்பட்டதால், பிள்ளையார் தீண்டாத திருமேனி யாரும் தொடுவதில்லை, பச்சை கற்பூரம் மட்டும் சாத்துவார்கள். அதைத் தாண்டிச் சென்றால், பெரிய நாயகி அம்மன் சன்னதியையும், அஷ்டபுஜ மகாகாளியையும் தரிசிக்கலாம். பெரிய கோவில், அமைதியுடனும், அழகாகவும் காட்சியளிப்பதைக் காண கண்கோடி வேண்டும். பிள்ளையார் சதுர்த்தி அன்று, அல்லது எப்போது முடிகிறதோ அப்போது திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையாரைத் தரிசித்து விட்டு வாருங்கள்!அமிர்தமாக இருக்கும்.
தஞ்சை மாவட்டம் சுவாமி மலையிலிருந்து 2 A.e. தொலைவில் அமைந்துள்ளது. திருவலஞ்சுழி திருத்தலம்.


4.திருச்செங்காட்டங்குடி வாதாபி பிள்ளையார்.

முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான், கஜமுகாசுரனை அழித்த ஊர் இது. அந்த அசுரனின் ரத்தம் படிந்து, இந்த ஊரே செங்காடாக மாறியதால் செங்காட்டாங்குடி என்ற பெயர் உருவானது. A.H. ஆறாம் நூற்றாண்டுக்க முன்பிருந்தே இந்தக் கோயில் வழிபடப் பட்டிருக்கிறது. முதலாம் ராஜராஜன் காலத்துக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. சிறுத் தொண்டரான பரஞ்ஜோதி, பல்லவ மன்னனின் சேனாதிபதியாக வாதாபி சென்று சாளுக்கியரோடு போர் புரிந்து, வெற்றி வாகை சூடியபோது கொண்டு வந்த வாதாபி கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது இங்கேதான். பல்லவர் கால தெய்வீகக் கலைச் செல்வங்களான நவதாண்டவ மூர்த்திகளையும், துவார பாலகர்களையும் நீங்கள் காணவேண்டுமென்றால் இந்த ஊருக்குத்தான் வரவேண்டும். இறைவன் உத்திராபதீஸ்வரர், சிறுத் தொண்டருக்கு அருள் புரிந்த பைரவ வேடத்திலேயே காட்சி தருகிறார். அந்த சிலையைப் பார்க்கவே வித்தியாசமாயிருக்கும்.
வாதாபி கணபதியும் அவரது தந்தையும் அருள்புரியும் திருச் செங்காட்டங்குடிக்கு நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்?

நாகை மாவட்டம் நன்னிலத்திருந்து 9 A.e. தொலைவில் உள்ளது. சிருச்செங்காட்டாங்குடி திருத்தலம்.


5.செதலபதி ஆதி விநாயகர்

இத்தலத்து நாயகனின் பெயர் முக்தீஸ்வரர். இவரை வழிபட்டால் முக்தி நிச்சயம் என்கிறார்கள். செதலபதி ஆலயத்தின் மற்றொரு சிறப்பு. கோயில் வாசலில் வீற்றிருக்கும் ஆதி விநாயகர் என்பதால் மனித உருவத்தில் காட்சியளிக்கிறார். முருகப் பெருமானுக்கு அவரைப் போன்றே ஒரு அண்ணா இருந்தால் எத்தனை அழகாக இருப்பாரோ, அத்தனை அழகாக இருப்பாரோ. அத்தனை அழகாகக் காட்சியளிக்கிறார் ஆதி விநாயகர். குரு பகவான் தட்சணாமூர்த்தியும் இங்கே வித்தியாசமாக இருக்கிறார். காலால் அசுரனை மிதித்தபடி, தன் இரண்டு பக்கம் அணில்கள் இருக்க, சனகாதி முனிவர்கள் நால்வரும் அருகில் தவம் செய்யக் காட்சியளிக்கிறார் குரு. இன்றும் திலரைப்படி பாவங்களை நீக்கிச் சித்திகளை அளிக்கும் தலமாக விளங்கி வருகிறது. மயிலாடுதுறை - திருவாரூர் பாதையில், பூந்தோட்டத்தில் இருந்து 2 A.e. தொலைவில் உள்ளது.


கணபதி ஹோமம்

முழு முதற்கடவுளான கணபதி தெய்வங்களிலேயே சிறந்தவர். எதிலும் முதலில் பூஜிக்க வேண்டியவர். வழிபாட்டு முறையில், கணபதி ஹோமம் மிகச் சிறந்தது. இது, கணபதி ஹோமம் மிகச்சிறந்தது. இது, கணபதி உபநிஷத்தில் விரிவாய் சொல்லப்பட்டிருக்கிறது. யோ மோதக ஸஹஸ்ரேண யஜதே, ஸவாஞ்சித பலவமாப் நோதி ஆயிரம் கொழுக்கட்டைகள் ஹோமம் செய்தால் நினைத்ததை எல்லாம் அடையலாம். நெல் பொரியால் ஹோமம் செய்தால் புகழ் பெறுவான். எளிதில் கிடைக்கும் அருகம்புல்லால் ஹோமம் செய்தால் துயரங்களிலிருந்து விடுபடுவான். கணபதி ஹோமத்திற்குரிய திரவியங்கள் எட்டு அவை : மோதகம் என்னும் கொழுக்கட்டை, அவல், நெல்பொரி, சத்துமா, கரும்பு, கொப்பரைத்தேங்காய், சுத்தமான எள், வாழைப்பழம், இவை தவிர அருகம்புல், நெய், விளாம்பழம், நாவல்பழம், மாதுளம்பழம், இவைகளையும் ஹோம நிவேதனமாகச் செய்யலாம். எட்டுப் பேரைக் கொண்டு ஹோமம் செய்தால் சூரியனுக்கு ஒப்பான ஒளியைப் பெறுவான். சந்திரனில் நான்காம் பிறையை பார்க்கக் கூடாது, பழிகள் ஏற்படும். கிருஷ்ணன் ஒருமுறை நான்காம் பிறையைப் பார்த்துவிட்டதாலேயே ஸ்யமந்தக மணியை அபகரித்துக் கொண்ட பழி ஏற்பட்டது. அதை போக்கிக் கொள்ள கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் பகலில் ஒன்றும் சாப்பிடாமலிருந்து மாலையில் விநாயகரை பூஜித்து பழிநீங்கப் பெற்றார் என்று பாகவதம் கூறுகிறது. பிரும்மாண்ட புராணம். லலிதோபாக்யானம் என்னும் நாலில், தடை செய்யும் யந்திரத்தை சக்தி ஸைன்யங்கள் நடுவில் அரக்கர்கள் போட்டுவிட்டனர். அம்பிகையின் படையினர் செயலற்றுவிட்டனர். உடன் அம்பிகை, முக்கண்ணனைப் பார்த்த மாத்திரத்தில், யானைமுகத்தோன் தோன்றி தடையந்திரத்தை முறித்தெறிந்து அம்மாள் படைகளுக்கு வெற்றி வாங்கிக் கொடுத்தார் என்றிருக்கிறது. கணபதி ஹோமம், மிகச் சிறிய முறையிலும் பெரிய அளவிலும் செய்யலாம். அவரவர் சக்திக்கேற்றபடி செய்வதை கணபதி அன்புடன் ஏற்றுக்கொண்டு அருள் புரிகிறார். அவருக்கு "த்வைமாதுரர்"என்ற பெயர் உண்டு. உமாதேவியும், முக்கண்ணனின் முடியிலுள்ள கங்கையும் ஆக இரண்டு பேருமே அவர் தாயார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. கணபதி ஹோம முறை, கணபதி உபநிஷத்திலும் மற்றும் "வாஞ்சாகல்பதா"என்ற ஒரு பெரிய ஹோம முறையிலும் விரிவாய் சொல்லப்பட்டிருக்கிறது. கணபதி ஹோமம் செய்வதால், தடைகள் நீங்கி மேன்மை பெறலாம்.


மகாராஷ்ட்ராவில் மகா கணபதி

இந்தியாவில் விநாயகர் வழிபாட்டில் முதலிடம் வகிப்பது மகாராஷ்ட்ரம். பிற மாநிலங்களை விட விநாயகர் அங்கு வெகுசிறப்பாக வழிபடப் பெறுகிறார். 'கணபதியப்பா'என்னும் பெயரில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அம்மாநிலத்தில் முன்பு அரசு செலுத்திய பேஷ்வாக்கள் விநாயகரைத் தம் குலதெய்வமாகும், போரில் வெற்றியைத் தரும் கடவுளாகவும் கருதி வழிபட்டு வந்தனர். 'தானே'மாவட்டத்தில் 'தித்துவானா'என்னும் நகரிலும், 'கொலபா'மாவட்டத்தில் உள்ள 'மாத்துபாலி' என்னும் நகரிலும் விநாயகருக்கு பெரிய கோவில்கள் உள்ளன. மகாராஷ்ட்ர மக்கள் கல்விக்குரிய தெய்வமாய் விநாயகரை வழிபடுகின்றனர். அவர்கள் செவ்வாய்கிழமையை கணபதிக்கு உகந்த நாளாக எண்ணி அந்நாளில்கோவில்களுக்குத் திரளாகச் சென்று வழிபடுகின்றனர். விநாயகர் சதுர்த்தி அன்று, அவரது திருவுருவச் சிலையை மண்ணால் செய்து, ஒவ்வொரு வீதியிலும் ¢ 11 நாட்கள் வரை விநாயகர் வைக்கப்பட்டிருப்பார். விதவிதமான பிள்ளையார்களைத் தெருவில் வைத்து ஆடல், பாடலுடன் 'கணபதியப்பா மோரியா'என்று பக்தர்கள் கூவுவர். அவர்கள் சிவப்பு வர்ண உடையை உடுத்திக் கொள்வர். பிள்ளையாரை மேளதாளங்களுடன் iF வழியே எடுத்துச் சென்று கடல், ஆறு, குளம் போன்றவற்றில் கரைத்து விடுவர். இவ்விழா மிக விமரிசையாக இப்போதும் நடைபெற்று வருகிறது. சிற்பிக் கலையில் உலகப் புகழ் பெற்ற எல்லோரா குன்று, மஹாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ளது. அக்குன்றில், பற்பல அரசர்கள் பல்வேறு காலங்களில் உருவாக்கிய குடைவரைக் கோவில்கள் மிகுதியாய்க் காணப்படுகின்றன. அவற்றுள், ராஷ்சிரகூட அரசனான முதலாம் கிருஷ்ணன் என்பவர் கயிலாச நாதருக்கு எடுத்த கோவில், பிரசித்தமானது. அக்கோவிலின் சுற்று மண்டபத்தில் உமை, முருகன் போன்ற தெய்வங்களோடு பிள்ளையாருக்கும் சந்நதி உள்ளது. இப்பிள்ளையார் திருஉருவம் யானை முகத்துடன் குள்ளமான உருவில் அமைந்துள்ளது. வெளிநாட்டினர் இவரை மிகவும் வியப்போடும் பக்தியோடும் நோக்குகின்றனர்.

விநாயகரை வழிபட பதினாறு மந்திரங்கள்

ஒம் என்ற சிறப்பான பிரணவத்திற்கு கணபதியே தலைவர். விநாயகரை குறிப்பாக பதினாறு மந்திரங்களைச் சொல்லி வழிபடுதல் சிறப்பு. அவை:

ஒம் சுமுகாய நம:

ஒம் ஏக தந்தாய நம:

ஒம் கபிலாய நம:

ஒம் கஜகர்ணிகாய நம:

ஒம் விகடாய நம:

ஒம் விக்னராஜாய நம:

ஒம் கணாதிபாய நம:

ஒம் தூமகேதுவே நம:

ஒம் கணாத்யக்ஷ£ய நம:

ஒம் பாலசந்த்ராய நம:

ஒம் கஜாநநாய நம:

ஒம் வக்ரதுண்டாய நம:

ஒம் சூர்ப்பகர்ணாய நம:

ஒம் ஹேரம்பாய நம:

ஒம் ஸ்கந்த பூர்வஜாய நம:

விநாயகப் பெருமானை இந்தப் பதினாறு மந்திரங்களால் வழிபட்டால் பெருமானது அருள் பூர்ணமாகக் கிடைக்கும்.

அபீஷ்ட வரத கணபதி

ஸ்ரீ அபீஷ்ட வரத மஹாகணபதி திருவையாறு மேட்டுத் தெருவில் கோவில் கொண்டுள்ளார். திருவையாறு வழியாக வந்த காவேரி அவ்வூரின் அழகு கண்டு அங்கேயே தங்கிவிட, அபீஷ்ட வரத மஹாகணபதியை பூஜித்தே சமுத்திரராஜன் திருமணத்தை நடத்தி வைத்தவர் என்பதால், இக் கணபதியை தரிசித்தால் திருமணத் தடை நீங்கி விடும் என்பது நம்பிக்கை. இத்திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ள திருக்குளத்தில் மூழ்கி எழுந்த பின்தான் அப்பர் சுவாமிகளுக்கு சிவபெருமான் திருகைலாயக் காட்சி கொடுத்தார் என்று தலபுராணம் கூறுகிறது.

கச்சேரி விநாயகர்

காஞ்சிபுரம் மாவட்டம்,மதுராந்தகத்திலிருந்து 26 A.e. தொலைவில் உள்ளது சேயூர். இங்கே, பேருந்து நிலையத்தின் அருகே அமைந்துள்ள விநாயகர், கச்சேரி விநாயகர் எனும் வித்தியாசமான பெயர் கொண்டவர். அருகே காவல் நிலையம் இருப்பதும் (காவல் நிலையத்தை கச்சேரி என்பது பழைய வழக்கம்) ஒரு புறமாக சற்றே சாய்ந்து தாளம் போடுவது போன்ற பாவனையுடன் இவர் காணப்படுவதும், இவரது பெயருக்குக் காரணமாய்க் கூறப்படுகிறது. கோடை அபிஷேகம் என்ற பெயரில் சித்திரை மாதம் முழுவதும், தினசரி இளநீர் அபிஷேகமும் தயிர்க்காப்பும் சாத்தப் பெற்று குளுகுளுவென்று காட்சியளிப்பார் இவ்விநாயகர்.

சிலம்பணி விநாயகர்

தேவகோட்டையில் உள்ள ஆலயம் ஒன்றில் விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவரைச் சிலம்பணி விநாயகர் என்றழைக்கின்றனர்.

சர்ப்ப விநாயகர்

சர்ப்ப விநாயகர், பாப நாசம் திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இவரது உடல் முழுவதும் சர்ப்பங்கள் அணி செய்கின்றன. இராகு, கேது தோஷங்களிலிருந்து விடுபட இவரை வணங்கி அருள் பெறலாம் என்று கூறப்படுகிறது.

அவரவர் நட்சத்திரத்திற்கேற்ப ஆனைமுகனை அலங்கரிக்க

அஸ்வினி - வெள்ளிக்கலசம், தங்கக் கிரீடம் அறுகம்புல் மாலை.

பரணி - சந்தன அலங்காரம், தங்கக் கிரீடம்.

கிருத்திகை - வெள்ளிக் கவசம், தங்கக் கிரீடம்.

ரோகினி - சந்தன அலங்காரம், தங்கக் கிரீடம்.

மிருகசீரிஷம் - கஸ்தூரி மஞ்சள் அலங்காரம், அறுகம்புல் மாலை.

திருவாதிரை - தங்கக் கிரீடம், அறுகம்புல் மாலை.

புனர்பூசம் - சந்தன அலங்காரம், அறுகம்புல் மாலை.

பூசம் - கஸ்தூரி மஞ்சள், தங்கக் கிரீடம், அன்னம்.

உத்திரம் - திருநீறு அலங்காரம், அருகம்புல் மாலை.

ஹஸ்தம் - சந்தன அலங்காரம், அருகம்புல் மாலை.

சித்திரை - வெள்ளி கவசம், அறுகம்புல் மாலை.

சுவாதி - தங்கக் கிரீடம், அருகம்புல் மாலை.

விசாகம்- திருநீறு அலங்காரம்.

அனுஷம்- கஸ்தூரி மஞ்சள் அலங்காரம், தங்கக் கிரீடம், அறுகம்புல் மாலை, ரோஜா மாலை.

கேட்டை - தங்கக் கிரீடம், திருநீறு அலங்காரம், அறுகம்புல் மாலை.

மூலம் - சந்தன அலங்காரம், அறுகம்புல் மாலை.

பூராடம்- தங்கக் கிரீடம், திருநீறு அலங்காரம், அறுகம்புல் மாலை.

உத்திராடம்- அறுகம்புல் மாலை.

திருவோணம்- சுவர்ணம், அறுகம்புல் மாலை.

அவிட்டம் - மலர் அலங்காரம், வெள்ளிக் கவசம்.

சதயம் - குங்கும அலங்காரம், வெள்ளிக் கவசம்.

பூரட்டாதி- தங்கக் கிரீடம், அன்னம், அருகம்புல் மாலை.

உத்திரட்டாதி- ரோஜா மாலை அலங்காரம்.

ரேவதி- வெள்ளிக் கவசம், மலர் அலங்காரம், அருகம்புல் மாலை.

உலக விநாயகர்

மதுரை கே. புதூர் உலகநாதன் சேர்வை தெருவில் அமைந்துள்ளார். இந்த விநாயகரின் திருநாமம் உலகம் என்ற சொல்லை ஏற்றிருப்பதால் மக்கள் அனைவருக்கும் மகத்தான சக்தியை அளித்து வருகிறார். தேர்வுக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள், வேலை தேடிச்சேல்லும் இளைய சமூகத்தினர் வயதானோர், திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் ஆகியோர், இவரை வணங்கிச் சென்றால், அவர்கள் எண்ணம் நிறைவேற பரிபூரண ஆசி வழங்கி, சிறப்பான வாழ்கை அமைய அருள் புரிகிறார். ' உலக வினாயகர்'.

சித்தி அரசு விநாயகர்

சித்தத்தில் எண்ணியதை நிறைவேற்றி வைத்திடும் 'சித்தி அரசு விநாயகர்' அமைந்திருப்பது, வேதாரண்யம் தலத்திற்கு மேற்கே 8 A.e. தொலைவில் உள்ள, குரவப்புலம் எனும் கிராமத்தில்.

அம்மையாரின் அருட்கோலக் காட்சியாய் விளங்கும் லிங்கவடிவ ஆலயத்துள் அமைந்திருக்கிறார் இந்த விநாயகர். சங்கடங்கள் தீர்த்திட இவரது சன்னதிக்கு செல்வோர், தாங்களே இவருக்கு பூஜை செய்யலாம். இக்கோயில் வலம் வந்திட, உமாபதியோடு, கணபதியையும், வலம வந்த பலன்கிட்டும் என்கின்றணர்.

குழந்தை விநாயகர்

தவழும் கண்ணனைப் போல தவழும் விநாயகர் அமைந்திருப்பது, வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில், இங்கு துதிக்கையில் கொழுக்கட்டையுடன், தவழ்ந்தபடியே பின்புறம் திரும்பிப் பார்க்கும் கோலத்தில் அமைந்துள்ளார் விநாயகர்.

வியாக்ர சக்தி விநாயகர்

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் துவஜஸ்தம்பத்தைச் சுற்றியுள்ள தூண்களுல் ஒன்றில், விநாயகரின் விசித்திரமான உருவம் அமைக்கப்பட்டுள்ளது. முகம் யானை முகமாகவும் கழுத்திலிருந்து இடுப்பு வரை அழகிய பெண் உருவாகவும், இடுப்பிற்குக் கீழே உள்ள பகுதி புலியின் தோற்றமாகவும் காணப்படும் இவ்விநாயகரை, வியாக்ர சக்தி விநாயகர் என அழைக்கின்றனர்.

சுயம்பு விநாயகர்கள்

வேலூர் அருகேயுள்ள சேண்பாக்கத்தில் செல்வ விநாயகர் ஆலயத்தில் பதினொரு சுயம்பு கணபதிகள் அமைந்துள்ளனர். ஒம்கார வடிவில் அமைந்துள்ள இவ்விநாயகர்கள், விநாயகருக்கு உரிய முழு வடிவில் இல்லாது, உருண்டையான கல் உருவிலேயே அமைந்துள்ளனர். இவ்வாலயத்தில் தீட்டப்பட்டுள்ள ஒவிய வடிவில் இவ்விநாயகர்களின் பெயர்கள் 1. பாலகணபதி, 2. நடன கணபதி, 3. கற்பக கணபதி,
4. ஒங்கார கணபதி, 5. சிந்தாமணி கணபதி, 6. செல்வகணபதி, 7. மயூரகணபதி, 8. மூஷிக கணபதி, 9. வல்லப கணபதி, 10. சித்திபுத்தி கணபதி, 11. ஐம்முக கணபதி.


கேது தோஷம் நீக்கும் விநாயகர்

ஜோதிட ரீதியாக கேது ஒரு ஞான கிரகம். தத்துவ ஞானிகளையும், மஹான்களையும் உருவாக்குபவர் கேது. பாம்பு உருவம் பெற்ற கேது. ஒரு சமயம், பிள்ளையாரைப் பிடிக்கப் போனார். சூரியனையே பிடித்துவிட்ட எனக்கு இந்த பிள்ளையார் எம்மாத்திரம்?என்று இறுமாப்புடன் சென்ற அவரைப் பூணூலாக அணிந்து கொண்டார் பிள்ளையார். ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், திங்கட்கிழமைதோறும் பிள்ளையாரை வழிபடுவது நல்லது. இதன் மூலம் கேதுவினால், வரக்கூடிய மாங்கல்ய தோஷம், புத்திரதோஷத்தையும் பிள்ளையார் அகற்றுவார் என்கிறது ஜோதிட சாஸ்திரம். கேதுவை மோட்சகாரகன் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஞானத்தின் வடிவமான பிள்ளையாரை வழிபடுவதன் மூலம் அவரது அருளால் கேது தோஷம் நீங்கி மோட்சம் கிடைக்கும்.

இடுக்குப் பிள்ளையார்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், குபேரலிங்கத்தை அடுத்து இடுக்குப் பிள்ளையார் சன்னதி உள்ளது. அந்த மண்டபத்தில் மூன்று யந்திரங்களை பிரதிஷ்டை செய்துள்ளார் இடைக்காட்டுச் சித்தர். அந்த சந்நதி நாம் படுத்தநிலையில் ஊர்ந்து செல்லும்படியாக உள்ளது. அப்படிச் செல்லும்போது சித்தர் அமைத்த யந்திரங்கள் நம ¢உடலில் படுகின்றன. அவற்றிலிருந்து ஆகர்ஷண சக்தி உடலில் பரவி நரம்பு வியாதிகள் குணமாகிவிடும் என்கின்றனர். பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுகள் இருப்பின் நிவர்த்தி ஆகும் என்று நம்பிக்கை கொண்டு வழிபடுகிறார்கள். இடுக்குப் பிள்ளையாரை எத்தனை முறை நுழைந்து தரிசித்து வெளி வருகிறோமோ அத்தனை பிறவிகள் குறையும் என்றும் கூறப்படுகிறது.

விநாயகரின் வினோதப் பெயர்கள்

திருக்கச்சூர் - கருக்கடி விநாயகர்

திருமுருகன்பூண்டி - கூப்பிடுபிள்ளையார்

கொட்டையூர் - கோடி விநாயகர்

திருப்பனையூர் - துணையிருந்த பிள்ளையார்

திருவிழிமலை - படிக்காசு விநாயகர்

நாகப்பட்டினம் - மாவடிப் பிள்ளையார்

திருநெல்வேலி - சந்திப்பிள்ளையார்

ஸ்ரீவைகுண்டம் - தூண்டில் விநாயகர்

குன்றக்குடி - தோகையடி விநாயகர்

ஸ்ரீ பெரும்புதூர் - வழித்துணை விநாயகர்

பழநி - கோசல விநாயகர்

சிவகங்கை - கௌரி விநாயகர்

மயிலாடுதுறை - அகத்திய விநாயகர்

தென்காசி - அணுக்கை பிள்ளையார்

செங்கோட்டை - ஆதிசூர விநாயகர்

திருவிதாங்கோடு - உமை அர்தபாக விநாயகர்

திருவாதவூர் - கபில விநாயகர்

வயலூர் - கீழைப் பிள்ளையார்

சுசீந்திரம் - உதயமார்த்தாண்ட விநாயகர்

வடசேரி - ஆகசாலை விநாயகர்

பயபத்திடேட்டா

திருநாமம் : பிள்ளையார் (நிரந்தர முதல்வர்)

பிறந்தநாள் : ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தி,

பெற்றோர் : பரமசிவன், பார்வதி

(மூலப் பொருளின் மூலமானவர்கள்)

சகோதரர்கள் : முருகன், ஐயப்பன்

( இருவரும் அப்பா பிள்ளைகள், விநாயகர் அம்மா பையன்)

மனைவியர் : கிரியாசக்தியான சித்தி, இச்சா சக்தியான புத்தி, ஞான சக்தியான வல்லபை (இவர்கள் தவிர மஹாவிஷ்ணுவின் புதல்வியரான, மோதை, பிரமோதை, சுமநசை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினி, காந்தை, சாருஹாசை, சுமத்யமை, நந்தினி, சாமதை எனும் பன்னிருவரும் கூட கணபதியின் மனைவியரே ! )

மகன்கள் : க்ஷேமம், லாபம் (சித்ராங்கதன், புத்திராங்கதன் என்ற பெயர்களும் உண்டு)

மாமன் : மஹாவிஷ்ணு !

இருப்பிடம் : கரும்புச்சாறால் சூழப்பட்டதும், கயிலாயத்தின் ஒரு பகுதியுமான ஆனந்த புவனம் (குளக்கரை, மரத்தடி, முச்சந்தியும் கூட உறைவிடங்களே ! )

வாகனம் : கிருதயுகத்தில் சிங்கம், திரேதாயுகத்தில் மயில், துவாபர யுகத்தில் மூஞ்சூறு, கலியுகத்தில் குதிரை)

பிடித்த கனி : மாம்பழம் (அன்னையும் தந்தையும் உலகத்திற்கு சமமானவர்கள் என உணர்த்திப் பெற்றது.

பிடித்த பலகாரம் : கொழுக்கட்டை (பிடித்து வைக்கப்படுபவர்க்குப் பிடித்த பலகாரமும் பிடித்து வைக்கப்படுவது)

ஒடித்தது : தந்தம் (பாரதம் எழுதவும், கஜமுகனை அழிக்கவும் )

கொடுத்தது : காவேரி (தமிழகத்திற்காக அன்றே திறந்துவிடப்பட்ட ஆறு)

அருளியது : ஒளவைக்கு, அகத்தியருக்கு, அடியார்களுக்கு.

அழித்தது : ஆணவம், கன்மம், மாயை நிறைந்த அசுரர்களை.

அவதார நோக்கம் : தன்னை நினைத்து தொடங்கும் செயல்களில் குறுக்கிடும் தடைகளைத் தகர்த்து எண்ணிய எண்ணம் ஈடேற அருளுதல்.

* சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் கணேசரின் முன் காளை வாகனம் காணப்படுகிறது.

* திருமாலின் உறைவிடம் பாற்கடல் ! கணபதியின் உறைவிடத்தைச் சுற்றியிருப்பது கருப்பஞ்சாறு கடல்.

* ஆதிசங்கரர் கணேச பஞ்சரத்நத்தை எழுதியது திருவானைக்காவில் உள்ள விநாயகர் சன்னதியில்.

* கோவையிலுள்ள ஒரு விநாயகரின் பெயர் டிரான்ஸ்பர் விநாயகர்.

* சிவசக்தியருக்கு இடையே அமைந்த சோமகணபதி மூர்த்தம் தேனம்பாக்கத்தில் உள்ளது.

* மீனாட்சியம்மன் ஆலயத்தில் 108 விநாயகர் திருவுருவங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

* மங்கோலியர்கள் விநாயகரை தோத்கார் அவுன்காரகன் என்றழைக்கின்றனர்.

* ஆனைமுகனின் உறைவிடம் கயிலையின் ஒரு பகுதியான ஆனந்தபுவனம்.

* கணபதிக்கு திபத்தியர்கள் வைத்துள்ள பெயர் ட்ஸோக்ப்டாக்.

* திருவண்ணாமலை ஆலய நுழைவாயிலில் உள்ள விநாயகரின் பெயர் அல்லல் தீர்க்கும் பிள்ளையார்.

* சதுர்த்தியன்று மட்டுமே விநாயகரை துளசியால் பூஜிக்கலாம்.

* உத்திராட நட்சத்திரத்தின் அதிதேவதை கணபதி.

* ஜாவா தீவில் விநாயகர் கபால மாலையணிந்து காணப்படுகிறார்.

* பர்மாவில் கணபதி மகாபைனி என்றழைக்கப்படுகிறார்.

* அருணகிரிநாதர் விநாயகரை ஐந்துகரப் பண்டிதன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

* திருச்சி உச்சிப்பிள்ளையார் தலையில் விபீஷணன் குட்டிய வடு இன்னும் காணப்படுகிறதாம்.

* முக்குறுணி விநாயகருக்குரிய மோதகம் செய்யப்படுவது 24 படி அரிசியால்.

* ஆந்திரா ஸ்ரீ சைலத்தில் கணபதி கையில் புல்லாங்குழலுடன் காணப்படுகிறார்.

* திருப்பரங்குன்க்குறத்தில் கரும்பு வில் தாங்கிய கற்பக விநாயகர் காட்சியளிக்கின்றார்.

* ப்ராஹ்கெனேஸ் என்பது, கம்போடியாவில் கணேசருக்கு வழங்கும் பெயர்.

UNESCO – பட்டியலில் அமைந்துள்ள தமிழகத்தின் ஏழு அதிசயங்கள்



UNESCO – பட்டியலில் அமைந்துள்ள தமிழகத்தின் ஏழு அதிசயங்கள்

UNESCO – (United Nations Educational, Scientific and Cultural Organization) யுனெஸ்கோவின் அமைப்பு என்பது உலக பாரம்பரியங்கள் திட்டத்தின் அடிப்படையில் உள்ள ஒரு களம் ஆகும். இந்த அமைப்பின் நோக்கம் காடு, மலை, ஏரி, பாலைவனம், நினைவுச் சின்னம், கட்டிடம்  மற்றும் நகரம் இந்த வகைகளின் தொகுப்புகள் யுனெஸ்கோ பட்டியலில் இடம் பெறுகின்றன. அந்த வகையில் செந்தமிழ் நாட்டில் உள்ள யுனெஸ்கோவால் அங்கிகரிக்கப் பட்ட பாரம்பரிய சின்னங்களைப் பற்றி அறிவோம் இந்த கட்டுரையில். இந்தியாவில் 29 உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலை யுனெஸ்கோ கொண்டுள்ளது, அவற்றில் நான்கு தமிழ்நாட்டில் உள்ளன.

உலக அதிசியம் ஏழு என்றால், அந்த ஏழு அதிசியங்கள் தமிழகத்தில் உள்ளது என்பதற்கு சான்றாக யுனெஸ்கோ பட்டியல் அமைந்துள்ளது. ஆம் இந்த ஏழு அதிசியங்களும் தமிழகத்தில்  தான் அமைந்துள்ளது என்று சொன்னால் நம்பமுடியவில்லையா. உண்மை தான் இந்தியா என்றதும் ஞாபகம் வருவது கோவில்களும், சிற்ப கலைகளும் தான். அந்த அளவுக்கு இந்தியா கோவில் நகரமாக அமைந்துள்ளது. உலகத்தில் அதிக கோவில்கள் சிற்ப கலைகள் கொண்ட நாடு இந்தியா என்று சொன்னால் மிகையாகது என்பது எவ்வளவு உண்மையோ அந்த அளவிற்கு, இந்தியாவில் அதிக அளவு கோவிகள் மற்றும் சிற்ப கலை, கட்டிடகலை போன்ற அதிக வேலைபாடு கொண்ட மாநிலம் தமிழ் நாடு தான்.

தமிழகம் கோவில் நகரம் , பாரம்பரிய தளங்களுக்கு மிகவும் பிரபலமானது. இந்தியாவின் மிகப் பெரிய சுற்றுலாத் தளமாக தமிழகம் திகழ்கின்றது. மேலும் இந்தியாவில் மட்டும் தமிழக மாநிலம்  நாட்டின் அதிக அளவு சுற்றுலா வருவாய் தரும் முதல் மாநிலமாக திகழ்கின்றது. இனி தமிழகத்தில் உள்ள யுனெஸ்கோ பட்டியலில் உள்ள ஏழு அதிசியங்களை பார்க்கலாம்.

யுனெஸ்கோ பட்டியலில் உள்ள தமிழகத்தின் பாரம்பரிய சின்னங்கள்:

உலக பாரம்பரிய தளங்களில் தமிழ் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள், மத தளங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் ஆகிவை அமைந்துள்ளது. இவற்றில் யுனெஸ்கோவில் அங்கீகரிக்கப்பட்ட தமிழகத்தின் முதல் சின்னம் தஞ்சாயூரில் உள்ள பிரகதீசுவரர் கோவில் தான் . இந்த கோவில் முதலாம் ராஜ ராஜ சோழரால் கட்டப்பட்டது இந்த கோவில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய இந்து கோவில்களில் ஒன்றாகும். கங்கைகொண்டா சோழபுரம் மற்றும் ஐராவடேஸ்வரர் கோயிலுடன் பெரிய கோயில் உலக பாரம்பரிய தளமாகும்.

1. பிரகதீசுவரர் கோயில்:


தஞ்சாவூரிலுள்ள காவரி ஆற்றின் தென்கரையில் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலை தஞ்சைப் பெரிய கோயில் (“Big temple”) அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் (“Peruvudayar Temple”) என்றும்  அழைக்கப்படும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கோவிலின் கட்டிகலை தமிழர்களின்  சிறப்பு மிக்க அற்புதமான கலைக்கு சான்றாக விளங்குகிறது. இக்கோவில் இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் மாமன்னர் முதலாம் ராஜ ராஜ சோழன் இக்கோவிலை கட்டினார்.  இந்த கோவில் கிபி 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.  இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்னும் புதுமை மாறமால் காட்சி அளிக்கின்றது.

1000 ஆண்டுகள் பழமையான, இந்த கோவிலை 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
தென்னிந்தியாவின் மூவேந்தர்களின் ஒருவரான சோழரின் படைப்பு கோயிலின் தூய வடிவத்தின் கட்டடக்கலை ஒரு சிறந்த படைப்பு சாதனையை குறிக்கின்றது.
பிருஹதிஸ்வரர் கோயில் தஞ்சாவூர்பேகம் சோழர் கோயில்களின் முதல் சிறந்த எடுத்துக்காட்டு, அதைத் தொடர்ந்து மற்ற இரண்டு சொத்துக்களும் சாட்சியம் அளிக்கின்றன.
மூன்று பெரிய சோழர் கோயில்கள் ஒரு விதிவிலக்கானவை மற்றும் சோழ எம்பயர் மற்றும் தென்னிந்தியாவின் தமிழ் நாகரிகத்தின் கட்டிடக்கலை வளர்ச்சிக்கு மிகச் சிறந்த சான்றாகும்.
தஞ்சாவூரில் உள்ள சோழர் கோயில்களில், கங்கைகொண்டச்சோலபுரமண்ட் தரசுராமரே கட்டடக்கலை மற்றும் சோழர்களின் பிரதிநிதித்துவத்தின் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.
ஐராவடேஸ்வரர் கோயில்:
ஐராவடேஸ்வரர் கோயில் தாராசுரம் நகரில் அமைந்துள்ளது. இந்த திருத்தளம் தஞ்சாவூரிலிருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இரண்டாம் ராஜராஜ சோழரால் கட்டப்பட்டது. இந்து கோவில்  முலவராக சிவபெருமான் சிலை வைக்கப்பட்டுள்ளது. மகாமஹாம் பண்டிகைக்கு இக்கோவில் பெயர் பெற்றது.

கங்கைகொண்ட சோழபுரம் கோயில்:

கங்கைகொண்ட சோழபுரம் என்று அழைக்கப்படும் பிரிஹதீஸ்வரர் கோவில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரில் முதலாம் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது. கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தை கட்டினான்.

இது முதலாம் இராசேந்திரன்  கங்கைகொண்ட சோழபுரம் கோயில் இந்திய தொல்பொருள் ஆய்வின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும்.

UNESCO – பட்டியலில் உள்ள மகாபலிபுரத்தின் நினைவுச்சின்னங்களின் தொகுப்பு:

மகாபலிபுரம் அல்லது மாமல்லபுரம் தமிழ் நாட்டில் காஞ்சிபுர மாவட்டித்தில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் தமிழ் நாட்டில் முதல் கட்டுமான கோவிலாகும். தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதன சின்னங்களுள் ஒன்றாகும். இக்கோயில் 45 அடி உயரம் கொண்டது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாமல்லபுர கடற்கரைக் கோவில் யுனெஸ்கோ நிறுவனத்தால் 1984 ஆம் ஆண்டு உலகப் பாரம்பரிய களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

கடற்கரை கோயில் தென்னிந்தியாவின் பழமையான கல் கோயில்களில் ஒன்றாகும், இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தின் சின்னமாக விளங்கும் கடற்கரைக் கோயில்கள் இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மனால் கட்டப்பட்டவை.

ஏழு கோவில்கள்:
மாமல்லபுரம் ஏழு கோவில்களின் நிலம் என்று செல்லப்பெயர் பெற்றது. 7 கோவில்களில், மற்ற ஆறு கோயில்கள் சோழமண்டல  கடற்கரையில் மூழ்கியுள்ளன.

மாமல்லபுரத்தில் ஏழு கோவில் அமைப்புகள் இருந்தன என்ற புராதனச் செய்தி முற்றிலும் உண்மையே என்று கூறமுடியாவிட்டாலும், மேற்கண்ட கண்டுபிடிப்புகளின் விளைவாக, மாமல்லபுரம் பகுதியில் மாபெரும் கோவில் வளாகம் இருந்தது என்றும் கடல்கோள் காரணமாக அது பெரும்பாலும் மறைந்துவிட, இன்று ஒருசில கட்டடங்களே எஞ்சியுள்ளன என்பதும் தெளிவாகிறது.

குகைக் கோயில்:


காஞ்சிபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் சோழமண்டல கடற்கரை பகுதியில் உள்ள மலை உச்சியில் மாமல்லபுர குகைக் கோயில்கள் அமைந்துள்ளது.  இந்த கோவிலை மண்டபங்கள் அல்லது குடவரை குகை கோவில் என்றும் அழைக்கப்படுகின்றன.

குகைகளில் சுவர்களில் செதுக்கப்பட்ட சுவர்களில் மிகவும் சுவாரஸ்யமான சிற்பம், பாசுரங்கள், ஒன்று, துர்க்கா (கடவுளின் சக்தியின் ஒரு வடிவம்) ஆகும். 1984 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ உலக மரபுரிமை தளமாக மகாபலிபுரத்தில் உள்ள நினைவுச்சின்னங்களின் குழுவில் ஒன்றாகும்.

வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள்: 


பல்லவர்கள் கி.பி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஏறத்தாழ 700 வருடங்கள் ஆட்சி புரிந்தனர்.  இவர்களது ஆட்சி தமிழகத்தின் வரலாற்றில் பல்வேறு அம்சங்களில் திருப்புமுனையாக அமைந்தது என்றும் கூறலாம்.

இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புதுமையாக மாமல்லபுரத்தில் உள்ள வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் விளங்குகின்றன. இந்த தொகுப்புகளில் உள்ளவை

அருச்சுனன் தபசு

கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்குதல் (பிற்காலத்தில் இந்தச் சிற்பத் தொகுதிமீது ஒரு மண்டபம் கட்டப்பட்டது)
முற்றுப்பெறாத அருச்சுனன் தபசு
விலங்குகள் தொகுதி
வராக மண்டபம், ஆதிவராக மண்டபம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம் ஆகியவற்றுள்ள் சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் காணப்படுகின்றன. ராமானுச மண்டபத்தில் உருவாக்கப்பட்ட சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் பிற்காலத்தில் மதக் காழ்ப்புணர்ச்சி கொண்டோரால் செதுக்கி அழிக்கப்பட்டிருக்கிறது.

நீலகிரி மலை ரயில்:

நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து (Nilgiri Mountain Railway) 1908 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இப்பாதையை உருவாக்கினார்கள். இது சுமார் 1,000 மில்லிமீட்டர் (3 அடி) அளவு கொண்ட குறுகியப் பாதை வகை இரயில் போக்குவரத்து இயக்கப்படுகின்றது. இந்தியாவிலுள்ள ஒரே பற்சக்கர இருப்புப்பாதை  கொண்ட தொடர்வண்டி நீலகிரி மலை தொடர்வண்டி மட்டுமே இருகின்றது. இது ஆசியாவில் மிகக் கடுமையான சரிவு பாதையாக நீலகிரி ரயில் பயணம் கருதப்படுகிறது.

இந்த நீலகிரி மலை தொடர்வண்டி ஜூலை 2005 இல் டார்ச்சிலிங் இமாலயன் இரயில்வேயுடன் நீலகிரி மலை இரயில்வேவையும் ஓர் உலக பாரம்பரியக் களமாக யுனெஸ்கோவின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
நன்றி - வணக்கம் அமெரிக்கா 

வியாழன், 11 ஜூன், 2020

திருப்பதி வெங்கடாஜபதி சிலை பற்றிய சில அரிய தகவல்கள்...!!

திருப்பதி வெங்கடாஜபதி சிலை பற்றிய சில அரிய தகவல்கள்...!!


தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான  அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப்பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள்,  நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.


 * திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே  இருக்கும் இது ஒரு அதிசயம் தானே!

* ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது  ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

 

 * இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை,  ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

 

 * ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ள குலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள்  கருதுகின்றனர்.

 

 * பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து  வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

 

 * உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

 

 * பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

அருள்மிகு விண்ணவராய பெருமாள் திருக்கோயில், வள்ளாளர் தெரு, பழைய அம்பத்தூர், கொரட்டூர், சென்னை,


இன்றைய கோபுர தரிசனம்...

அருள்மிகு விண்ணவராய பெருமாள் திருக்கோயில், வள்ளாளர் தெரு, பழைய அம்பத்தூர், கொரட்டூர், சென்னை, திருவள்ளூர் மாவட்டம்.

மூலவர்–விண்ணவராய பெருமாள்

உற்சவர்–ஸ்ரீனிவாசன்

தாயார்–கனகவல்லி

ஆகமம்–வைகானசம்

பழமை–1000 வருடங்களுக்கு முன்

ஊர்–பழைய அம்பத்தூர்

மாவட்டம்–திருவள்ளூர்

மாநிலம்–தமிழ்நாடு

இந்தப் பகுதியை ஆட்சி செய்த அரசன் ஒருவர், தன் நாட்டைச் சுற்றிப் பார்த்தார். கொண்டு வந்த உணவு தீர்ந்து விட்டது. குறிப்பிட்ட ஓரிடத்தில் உணவுப்பொருள் ஏதும் கிடைக்காமல் பசியில் களைத்துப் போனார். அவருடன் வந்த வீரர்களும் பசி தாளாமல், ஓரிடத்தில் அமர்ந்து விட்டனர். அவர்களது கண்ணில் ஒரு கோயில் தென்பட்டது. அங்கே ஏதாவது உணவு கிடைக்குமா என பார்த்து வரும்படி வீரர்களுக்கு ஆணையிட்டார். அவர்கள் பெருமாள் கோயிலைக் கண்டனர். அர்ச்சகரிடம் தங்கள் நிலையைக் கூறினர். சுவாமிக்கு நைவேத்யம் செய்த வரகரிசி பிரசாதத்தை வீரர்களிடம் அர்ச்சகர் வழங்கினார். சுவாமிக்கே இவ்வளவு எளிய உணவா என எண்ணிய நவாப், அர்ச்சகரை அழைத்து விபரம் கேட்டார். பஞ்சம் காரணமாக வரகரிசியை சமைத்து சுவாமிக்கு நைவேத்யம் செய்வதாக அர்ச்கர் தெரிவித்தார். அந்தக் கோயிலுக்கு திருப்பணி செய்து, நைவேத்யம் செய்ய பணஉதவியும் செய்வதாக வாக்களித்தார். அப்போது, வரகரிசி பிரசாதம் உடனடியாக உயர்ரக அரிசி பிரசாதமாக மாறியது. கண் எதிரில் நிகழ்ந்த அந்த அதிசயத்தைக் கண்ட அரசன், பெருமாளின் பேரருளை எண்ணி மெய்சிலிர்த்துப் போனார்.

கரி என்னும் இருளாகிய தீவினையை நீக்கி, வாழ்விற்கு ஒளிதரும் மாணிக்கமாகப் பிரகாசிக்கக் கூடியவர் என்னும் பொருளில், திருமாலுக்கு, கரியமாணிக்க பெருமாள் என்ற திருநாமம் இருந்தது. பிற்காலத்தில் விண்ணவராய பெருமாள் என்று திருநாமம் சூட்டப்பட்டது.

பெருமாள் எதிரிலுள்ள கருடாழ்வாரை சுவாதி நட்சத்திரத்தன்று வலம் வந்து வழிபட்டால் சர்ப்பதோஷம் விலகும். அத்துடன் தடைப்பட்ட திருமணங்கள், தடை நீங்கி கைகொடுக்கும். தாயார் கனகவல்லிக்கு வெள்ளிக்கிழமை வில்வத்தால் அர்ச்சனை செய்வதால் திருமணத்தடை விலகுவதுடன், குழந்தை பாக்கியமும் கிடைக்கிறது. விண்ணவராயப் பெருமாளை 11 வாரம் சென்று பக்திப்பூர்வமாக வணங்கினால், வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படுவதுடன், உணவுக்குப் பஞ்சம் வராது என்ற நம்பிக்கை உள்ளது.

கோயில் மண்டபத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருப்பது போன்று பல்லி வடிவம் மேற்கூரையில் செதுக்கப்பட்டு இருந்தது. தற்போது மண்டபம் இடிந்து போனதால், பல்லி உருவம் பொறித்த விதானக்கல்லை தனியே வைத்துள்ளனர். தலையில் பல்லி விழுதல் போன்றவற்றால் மனக்கஷ்டம் அடைந்துள்ளவர்கள், இதனை 11 வாரம் சென்று பூஜித்து, பெருமாள் தாயாருக்கு திருமஞ்சனம் செய்வதன் மூலம் தோஷம் விலகுவதாக நம்பிக்கையுள்ளது. கருவறையில் கரியமாணிக்கப்பெருமாள் என்ற தன் முந்தைய திருநாமத்திற்கு ஏற்ப, கரிய நிறத்துடன், அருள்ஒளி வீச நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருமகளும், பூமகளும் அவரருகில் உள்ளனர். மூலவருக்கு முன் கருணை விழிகளுடன், அபயவரதகரங்களுடன் அன்பே வடிவாக கனகவல்லிதாயார் அருள்பாலிக்கிறாள். தாயாருக்கான தனிச்சன்னதி புனரமைக்கப்பட்டு வருவதால், பெருமாள் அருகில் தாயார் அருள்பாலிக்கிறார். திருவோணத்தன்று இந்தப் பெருமாளை வணங்கினால் நினைத்தவை கைகூடும்.

இங்கு ஸ்ரீதேவி, பூதேவி, கனகவல்லி தாயார், பெருமாள், கருடாழ்வார், இராமானுஜர் சன்னதிகள் உள்ளன. நம்மாழ்வார் தியானக் கோலத்தில் இருப்பது சிறப்பு.

திருவிழா:

புரட்டாசி சனிக்கிழமை, புரட்டாசி திருவோணம், வைகுண்ட ஏகாதசி விழா தமிழ்ப்புத்தாண்டு, ஆடிப்பூரம், கிருஷ்ணஜெயந்தி, நவராத்திரி, கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, பங்குனி உத்திரம், வைகுண்ட ஏகாதசி.

கோரிக்கைகள்:

திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, சர்ப்ப தோஷம் நீங்க இங்குள்ள கருடாழ்வாரை வழிபடுகின்றனர். வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படவும், உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்கவும் இங்குள்ள பெருமாளை வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

பெருமாள் மற்றும் தாயாருக்கு திருமஞ்சனம் செய்வதன் மூலம் தோஷம் விலகுவதாக நம்பிக்கையுள்ளது. பிரார்த்தனை நிறைவேறியவுடன் துலாபாரம் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

இது ஆன்மீக பூமி,

சித்தர்களும்,மகான்களும், மகரிஷிகளும், முனிவர்களும்,யோகிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.

ௐ நமோ நாராயணாய நம:

கற்பனைக்கு எட்டாத பிரம்மாண்டம்...


கற்பனைக்கு எட்டாத பிரம்மாண்டம்...

திருவானைக்கோவில் திருச்சி மாவட்டம் ஜம்புகேஸ்வரர் ஆலயம்...1800 வருடங்கள் பழமையானது.
கோச்செங்கட்சோழ நாயனார் கட்டியது...

வரைபடம் தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் கற்பனைக்கு எட்டுமா? இந்த எழில் மிகுந்த பிரம்மாண்டமான கட்டிடக்கலை..
பார்க்கும் பொழுது பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் தன்னுள் மறைத்து வைத்திருக்கின்றது..

இவற்றை நாம் அழியாமல் பாதுகாக்க வேண்டும்..

இன்று கற்பனையில் கூட எட்டாத சிற்பம்... சிற்பக் கூட கட்டிடக்கலை.
மின்சாரம் இல்லாத  காலத்திலேயே  
 நம்மிடம் இவ்வளவு தொழில்நுட்பம் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்..

தல வரலாறு

புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.

சிவ பக்தர்களாக யானையும், சிலந்தியும்

சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை தேவையற்றதாக கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார்.

கோச்செங்கட் சோழன்

சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.

திருநீறு தங்கமான எம்பிரானின் திருவிளையாடல்

இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.

நமது கோவில்கள் வழிபாட்டு தலங்கள் திறந்தவுடன் நமது முதல் பயணம் திருவானைக்காவல் கோவிலாக  இருக்கட்டும்...

கோவில்களை பாதுகாப்போம்.

ஆலயம் காப்போம் !
அறநெறி வளர்ப்போம் !!

புதன், 10 ஜூன், 2020

பிரம்மதேவன் தோன்றிய கதை


பிரம்மதேவன் தோன்றிய கதை

தெரிந்த புராணம்... தெரியாத கதை...

இந்து தர்ம புராணங்களின்படி முப்பெரும் கடவுளர்களாக முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் வணங்கப்படுகிறார்கள். இவர்களில் படைக்கும் தொழில் கொண்டவர் பிரம்மா; காக்கும் தொழில் கொண்டவர் விஷ்ணு; அழிக் கும் தொழில் கொண்டவர் சிவன் என, இவர்களைப் போற்றி வணங்குகி றது வேதம். 

பிரம்ம வைவர்த்த புராணம் விஷ்ணு புராணம், சிவ புராணம், ஸ்ரீமத் பாகவதம் ஆகிய புராண நூல்களில் இந்த மூவரின் தோற்றமும், அவர்க ள் தத்தமக்குரிய பணிகளை ஏற்ற விவரமும், அவர்களின் பூரண மஹிமையும் சித்திரிக்கப் படுகின்றன.

பன்னெடுங்காலமாக பிரம்மாவை ஆலயங்க ளில் வழிபடக்கூடாது என்ற சம்பிரதாயம் நடைமுறையில் இருந்து வருகிறது. புண்ணிய பாரதத்தில் ஒன்றிரண்டு கோயில்கள் தவிர, பிரம்மாவுக்கு வேறு ஆலயங்கள் கிடையாது. 

சிவனுக்குத் தனி வழிபாடு செய்பவர்கள் சைவர்கள் எனப்படு கின்றனர். விஷ்ணுவுக்கு தனி வழிபாடு செய்பவர்கள் வைணவர்கள் எனப்படுகின்றனர். பிரம்மனுக்கு  மட்டும் தனியாக வழிபடும் சம்பிரதாயமோ, பிரிவோ இல்லை. பல ஆலயங்களில் விஷ்ணுவும் சிவனும் சேர்ந்து ஹரிஹர ஸ்வரூபமாகப் பூஜிக்கப்படுகின்றனர்.

'ஹரியும் ஹரனும் ஒன்று’ என்ற வாசகம் உண்டு. ஆனால், பிரம்மாவை தனியாகவோ அல்லது மூவருடன் சேர்த்தோ வழிபாடு செய்ய எந்த சம்பிரதாயத்திலும் விளக்கங்கள் இல்லை.

முப்பெரும் கடவுளர்களில் ஒருவராகப் பேசப்ப டும் இந்த பிரம்மா யார்? அவர் எங்கிருந்து தோன்றினார்? அவருக்கு ஏன் தனி வழிபாடு இல்லை?

தேவி மஹாத்மியம் என்ற தேவி புராணத்தில் ஒரு சம்பவம் விளக்கப்படுகிறது.

ஒரு யுகத்தில் பிரளயம் தோன்றி அனைத்து உலகங்களையும் நீரில் ஆழ்த்தியது. அதற்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட எந்த ஜீவராசிகளு ம்,  தாவர, விலங்கினங்களும் காணப்படவி ல்லை. பார்க்குமிடமெல்லாம் தண்ணீர். 

அந்த பிரளய வெள்ளத்தில் ஒரு சிறு ஆலிலை மிதந்து வந்தது. அதன் மேல் பகவான்  மஹா விஷ்ணு ஒரு குழந்தை வடிவில் மிதந்து கொண்டிருந்தார்.

'நான் யார்? என்னைப் படைத்தவர் யார்? எதற்காகப் படைத்தார்?’ என்ற சிந்தனையுடன் மஹாவிஷ்ணு அனந்த நிஷ்டையில் ஆழ்ந்தி ருந்தார். அப்போது, ஆதிபராசக்தி எனும் மூல சக்தி 'மஹாதேவி’ என்ற பெயருடன் தோற்றம ளித்தாள்.

சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகிய சின்னங்கள் அவள் கரங்களில் ஒளிர்ந்தன. ஆதிபராசக்தியைச் சூழ்ந்து ரதி, பூதி, புத்தி, மதி, கிருதி, த்ருதி, ஸ்ரத்தா, மேதா, ஸ்வேதா, ஸிதா, தந்த்ரா ஆகிய 11 தேவியரும் காட்சி தந்தனர். அப்போது மஹாதேவி அசரீரியாக அருள்வாக்கு தந்தாள்.

''மஹாவிஷ்ணுவே! படைத்தல், காத்தல், அழித் தல் ஆகிய மூன்று கர்மாக்களும் ஒவ்வொரு யுகத்திலும் பிரதிபலிக்கும். பிரளயம் தோன்றி அவற்றை அழிக்கும்போது, காக்கும் கடவுளா ன நீ மட்டும் அழியாமல் நிற்பாய். 

ஆதிசக்தியின் அம்ஸமாகத் திகழும் நீ பிரளய த்துக்கும் ஊழித்தீக்கும் அப்பாற்பட்டு நிலைத் திருப்பாய். சத்வ குணங்களின் பரிமாணமாக நீ திகழ்வாய். உனது நாபியிலிருந்து பிரம்மன் தோன்றுவான். 

அவன், ரஜோ குணங்களின் பிரதிநிதியாக இருந்து, பிரளயத்தில் மறைந்த அனைத்தை யும் சிருஷ்டி செய்வான். அவன் அழியாத பிரம் மஞானத்தின் மொத்த உருவமாக இருந்து, மீண்டும் அண்ட சராசரங்களை உருவாக்குவா ன்  அவனது புருவ மத்தியில் ஒரு மாபெரும் சக்தி தோன்றும். அதன் வடிவம்தான் சிவன். 

அவன், தமோ குண வடிவமாக, ருத்ர மூர்த்தி யாக நின்று, ஸம்ஹாரம் எனும் அழிக்கும் தொ ழிலை ஏற்பான். இப்படி படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முப்பெரும் கர்மாக்களையும் பிரம்மா, விஷ்ணு, சிவனாகிய நீங்கள் மூவரு ம் செய்வீர்கள். உங்களின் இயக்க சக்தியாக நானும் என் அம்ஸங்களான தேவிகளும் செயலாற்றுவோம்'' என்று அருளினாள் தேவி.

தேவி புராணத்தின் ஏழாவது காண்டத்தில், பிரம்மன் தோன்றிய வரலாறு மேற் கண்டவா று விளக்கப்படுகிறது.

விஷ்ணுவின் நாபியிலிருந்து ஒரு தாமரைத் தண்டு வளர ஆரம்பித்தது. பிரளய வெள்ளத் தின் பரப்புகளைத் தாண்டி, அது நீண்டு வளர்ந்தது. அதன் நுனியில் ஒரு பிரமாண்டமா ன தாமரை மலர் மலர்ந்தது. 

அதனுள் இருந்து பிரம்மதேவன் தோன்றினார். அப்போது அவரு க்கு ஐந்து முகங்கள் இருந்த ன. அவற்றில் ஒரு முகம், பின்னர் சிவபெருமா னால் அழிக்கப் பட்டது. அதனால் பிரம்மன் 'நான்முகன்’ என்றழைக்கப்பட்டார். அவருக்கு 'சதுரானன்’ என்ற பெயரும் உண்டு.

தாம் தோன்றியதுமே ஸ்ரீ விஷ்ணுவை குறித் தும், அம்பிகையைக் குறித்தும் கடும் தவம் இயற்றத் தொடங்கினார் பிரம்மன். ஜகதம்பா எனப்படும் மஹாதேவி மற்றும் மஹாவிஷ்ணு வின் அனுக்ரஹத்தால் பிரம்மன் ஞானச்சுட ராக மாறினார். 

சிருஷ்டி தொடங்கியது. முதலில், பூரண ஞான த்தின் பிரதிநிதிகளாக அத்ரி, ப்ருகு, குத்ஸர், வஸிஷ்டர், கௌதமர், காஸ்யபர், ஆங்கீரஸர் ஆகிய சப்தரிஷிகள் தோன்றினர். 

அதன்பின், ஜீவராசிகளை உற்பத்தி செய்யும் பிரஜாபதிகள் தோன்றினர். அண்டங்கள் தோன்றின. ஜீவராசிகள் உருவாகின. புல்,புழு, பூச்சி, கடல்வாழ் இனங்கள், நிலவாழ் மிருகங் கள், மனிதன் என சிருஷ்டி தொடர்ந்தது.

இது, தேவி மஹாத்மியத்தில் காணப்படும் பிரம்மனின் தோற்றம் பற்றிய புராணக் கதை.

'மனு ஸ்மிருதி’ எனப்படும் சாஸ்திரத்தில் பிரம்மன் தோன்றிய வரலாறு வேறு விதமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.

''பிரளயத்தின் முடிவில் அண்டங்களை விடப் பெரியதாக ஒரு முட்டை வடிவம் தோன்றியது. அது, தங்கத்தைவிடப் பிரகாசமாக ஜொலித்த து. பல்லாயிரம் வைரங்கள்போல் அது மின்னி யது. அண்ட சராசரங்களை உருவாக்கும் அத்தனை சக்தியும், அதற்குரிய தவமும் ஞானமும் அந்த முட்டையில் அடங்கியிருந்தது. 

பிரளய வெள்ளத்தில் விழுந்த முட்டை வெ டித்தது. அதிலிருந்து ஐந்து முகத்துடன் ஜெக ஜ்ஜோதியாக ஒரு தேவன் தோன்றினார். அவர்தான் பிரம்மதேவன். அவரிடமிருந்து சிருஷ்டி தொடங்கியது. 

பிரமாண்டமான அந்த முட்டை உடையும்போது ஒரு சத்தம் உருவானது. அதுவே 'ஓம்’ எனும் பிரணவம். அந்த ஓம்கார நாதத்திலிருந்து மூன்று சப்த அலைகள் வெளிப்பட்டன. அவை 'பூர்’, 'புவ’, 'ஸுவஹ’ என்பன. இந்த நாதத்திலி ருந்தே பூலோகம், புவர்லோகம், ஸுவலோகம் ஆகிய மூன்று உலகங்களும் தோன்றின. மனு ஸ்மிருதியிலும், வாமன புராணத்திலும் பிரம் மனின் தோற்றம் பற்றி மேற்கண்ட விபரங்கள் தரப்பட்டுள்ளன.

இந்த எல்லா புராணங்களிலிருந்தும் ஓர் உண்மை புலனாகிறது. 'பிரம்மதேவன்’ ஒரு சுயம்பு.  அதாவது, தானாகத் தோன்றிய தெய் வம் என்பதே அந்த உண்மை. அவர் அண்ட சராசரங்களில் உள்ள அத்தனை ஆற்றல், அறிவு, ஞானம் ஆகியவற்றின் மொத்த உருவம். அவர் மூலம் ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, நூறு ஆயிரமாகி, அது லட்சமாகி, கோடியாகும். பிரம்ம சிருஷ்டி ஒவ்வொரு விநாடியும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. 

இந்த ஞானத்தையும், ஆற்றலை யும் ஒரு கருவறைக்குள் அடைத்து வைக்க முடியுமா? அப்போது சிருஷ்டி நிகழ்வது தடைப்படாதா? அதனால்தான், பிரம்மனுக்கு ஆலய வழிபாடு இல்லை என பல்வேறு ஞானிகள் பல்வேறு காலகட்டங்களில் விளக்கியுள்ளனர்.

'ஞானம்’ என்பதற்கு வடிவமோ, வர்ணமோ, வாசனையோ கிடையாது. அதற்குப் பரிமாண ங்களும் இல்லை.அதனால், அதனை ஓர் ஆலய உருவத்தில் அடக்க முடியாது. ஆகவே பிரம்மன், உருவ வழிபாட்டுக்கு அப்பாற்பட்ட வன் என்பது தெரிகிறது. 

ஒவ்வொரு மனிதனும் ஞானத்தைத் தேடும் போது, அவனுள் அடங்கும் சக்தியை பிரம்ம ஞானம் என்கிறோம். பிரம்மனுக்குரிய ஆலயம், ஞானிகளின் உள்ளம்தான். 'அழியாத சத்யமும், பிறழாத தர்மமுமே பிரம்மஞானம்’ என்று கூறியுள்ளனர் சித்தர்கள்.

ஒருமுறை சிவபெருமானின் திருவடி, திருமுடி யைக் கண்டறிய பிரம்மாவும் விஷ்ணுவும் முயன்றனர். வராக வடிவில் பூமியில் ஆழச் சென்ற விஷ்ணு, சிவபெருமானின் திருவடி யைக் கண்டறிய முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டு அவரைச் சரணடைந்தார். ஆனால் பிரம்மனோ, திருமுடியைக் கண்டறி ந்ததாகப் பொய் கூறினார். 

அப்போது சிவபெருமான், பிரம்மனுக்குப் பூவுலகில் ஆலய வழிபாடு இருக்காது என சாபமிட்டார். இப்படியொரு கதை அருணாச லேஸ்வர புராணத்திலும், சிவபுராணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவபெருமான் பிரம்மனைச் சபித்தார் என்பதை அறிவுபூர்வமான கண்ணோட்டத் துடன் பார்த்தால், ஒரு தத்துவம் புரியும். 'பொய் வழியில் யாரும் சிவனைக் காண முடியாது. பொய் வழியால் சிவனை அறிந்ததாகக் கூறுபவர்கள் உலகோரால் பாராட்டப்பட மாட்டார்கள்’ என்பதே இதன் ஆழ்ந்த கருத்து.

யார் பிரம்மன், அவர் எப்படித் தோன்றி னார் என்பதை ஆராய்ந்து அறியும்போது ஒரு தெளி வு ஏற்படுகிறது. யார் பிரம்மன் என்பதைவிட, எது பிரம்மம் என்பதை கண்டறிவதே உயர்ந்த ஞானம். பிரம்மன் எப்படித் தோன்றினார் என்ப தைத் தெரிந்து கொள்ளும்போது, 'ஞானம்’ எப்படித் தோன்றுகிறது, அதனை அடையும் வழி எது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சத்யமே ஆன்மிகம்! தர்மமே தெய்விகம்.

இதனை உணர்ந்தால், அவன் பிரம்மஞானி ஆகிறான். அவனை வழிபடுவதே பிரம்ம தேவன் வழிபாடாகும்.

அன்னை மூகாம்பிகை

அன்னை மூகாம்பிகை

தாய் மூகாம்பிகை சிறப்பு…

கொடிய விலங்குகள் நடமாடும் மஹாரண்யம் எனும் இடத்தில் சௌபர்ணிகை ஆற்றங்கரையில் கோலமா முனிவர், தேவி பராசக்தியைக் குறித்து தவம் புரிந்தார். உலகிலேயே பழமையான மலையாக மேற்குத் தொடர்ச்சி மலை கருதப்படுகிறது. அதன் உட்பிரிவே குடசாத்ரி என்ற புனிதமலை. முனிபுங்கவர்களும் சித்தபுருஷர்களும் இன்றும் தவம் புரிந்து கொண்டிருக்கும் புண்ணிய பவித்ர இடம். அங்கு உற்பத்தியாகும் நதி சௌபர்ணிகா எனப்படும். அதன் கரையில் பெரிய திருவடியான கருடன் தவம் செய்து தன் வம்சத்தில் ஏற்பட்டிருந்த கொடிய சாபங்களையும் தோஷங்களையும் போக்கிக் கொண்டார்.

கருடபகவானின் பெயர்

சுபர்ணன் என்பதால் அந்த ஆறு சௌபர்ணிகா எனப்பட்டது. அவ்வளவு மகிமை வாய்ந்த அந்த இடத்திலிருந்து கோலமாமுனிவரின் பக்தியை மெச்சி, சுயம்பு லிங்கம் தோன்றியது. அதைக் கண்ட முனிவர் பக்தி பரவசத்தோடும் பய பக்தியோடும் அந்த சுயம்பு லிங்க மூர்த்தத்திற்கு பூஜைகள் செய்து வந்தார். அந்த இடம் கோலாபுரம் என அழைக்கப்பட்டது. அந்த லிங்கம் ஜோதிர் லிங்கம் என பக்தர்களால் கொண்டாடப் பட்டது. அச்சமயத்தில் கம்காசுரன் எனும் கொடிய அரக்கன் ஈசனைக் குறித்துக் கடுந்தவம் செய்தான். அவனுக்கு வரமருள ஈசன் புறப்பட்டார். அதைக் கண்டு திகைத்த தேவர்கள் நான்முகனிடம் சரணடைய, நான்முகன் தனது துணைவியான வாக்தேவியின் வடிவமான சரஸ்வதியை அழைத்து அந்த கம்காசுரனை பேச்சற்றவனாக்க ஆணையிட்டார்.

அதனால் வரம் எதுவும் கேட்க முடியாத அந்த கம்காசுரன் பேச்சிழந்ததால் மூகாசுரன் என்றானான். வரம் ஏதும் கேட்க முடியாத ஆத்திரத்தோடு அலைந்த அவன், கோலமாமுனிவர் தவம் செய்து கொண்டிருந்த இடத்திற்கு வந்து அவரைத் துன்புறுத்தினான். அவர் தவத்திற்கு பல இடையூறுகளைச் செய்தான். அதனால் மனம் வருந்திய முனிவர் பரதேவதையிடம் முறையிட்டார். தன் பரிவாரங்களோடு தேவி, அஷ்டமி தினத்தன்று நடுநிசியில் மூகாசுரனுடன் போரிட்டு அவன் தலையைத் துண்டித்தாள். அவன் இறப்பதற்கு முன் தேவியிடம், ‘‘அம்மா தங்கள் கையால் மடிவதால் என் பாவங்கள் தொலைந்து நான் சுத்த ஆத்மாவானேன். இந்த திவ்ய திருத்தலத்தில் உனது பெயர் நிலைத்திருக்கும்வரை எனது பெயரும் நிலைக்க வேண்டும்’’ என வரம் கேட்டான்.

தேவியும் அவனுக்கு அந்த வரத்தை அருளி மூகாம்பிகையாய் கோலமா முனிவர் பூஜித்த ஜோதிர் லிங்கத்தில் ஸ்வர்ண ரேகையாகக் கலந்தாள். இந்த ஸ்வர்ண ரேகையை அபிஷேக காலத்தில் மட்டுமே தரிசிக்க முடியும். இதன் இடது புறம் நான்முகன், ஈசன், திருமால்; வலது புறம் அலைமகள், கலைமகள், மலைமகள் உறைகிறார்கள். இந்த சுயம்பு லிங்கத்தை வழிபட்டால் முப்பத்து முக்கோடி தேவ தேவியர்களையும் வழிபட்ட பலன் கிட்டும். அபிஷேகம் அனைத்தும் இந்த சுயம்பு லிங்கத்திற்கே செய்யப்படுகிறது. 51 சக்தி பீடங்களுள் இது ஒன்று இல்லை எனினும், இது அர்த்தநாரிபீடம் என வழிபடப்படுகிறது.

தேவியின் அருளாணைப்படி ஆதிசங்கரர் ஐம்பொன்னால் ஆன மூகாம்பிகை தேவியின் திருவுருவை கொல்லூரில் பிரதிஷ்டை செய்தருளினார். முக்கண்கள், சங்கு, சக்கரம், அபய, வரதம் ஏந்திய நான்கு திருக்கரங்களுடன் பத்மாசனத்தில் அமர்ந்து முப்பெருந்தேவியரின் அம்சமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். அலங்காரம், புஷ்பாஞ்சலி, ஆராதனை போன்றவை மட்டுமே இந்த மூகாம்பிகைக்கு செய்யப்படுகின்றன. கிரகண நேரத்திலும் கருவறை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும் திருத்தலம் இது. மூகாம்பிகையை பூஜிக்க, பிரம்மச்சாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. மூகாம்பிகையின் பின்புறம் பஞ்சலோகத்தினாலான காளி, சரஸ்வதி தேவியர் அருள்கின்றனர். அக்கினி தீர்த்தம், காசி தீர்த்தம், சுக்ல தீர்த்தம், மது தீர்த்தம், கோவிந்த தீர்த்தம், அகஸ்திய தீர்த்தம் ஆகியவை இத்தல தீர்த்தங்கள்.

இந்த அம்பிகையின் ஆபரணங்கள் விலை மதிப்பற்றவை. முகாபரணம் முழுதும் தங்கத்தால் ஆனது. அதில் மரகதம், கோமேதக ரத்னங்கள், ஒளிர்கின்ற அழகு செய்யும் இந்திர நீலக்கற்கள், அழகு செய்யும் பச்சைக் கல் மூக்குத்தி, வைரத் தோடுகள் என சர்வாலங்காரங் களோடு துலங்குகிறாள். முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் இந்த மூகாம்பிகையிடம் நேர்ந்து கொண்டு தன் பிரார்த்தனை பலித்ததன் நன்றிக் காணிக்கையாக தங்க வாளை தேவிக்கு காணிக்கையாகச் செலுத்தினார். அதை இன்றும் ஆலயத்தில் காணலாம்.

பங்குனி உத்திரத்தில் கொடியேற்றி மூலநட்சத்திரத்தில் தேர்த்திருவிழா காண்கிறாள் அம்பிகை. அவ்விழாவின்போது மூகாசுரன் கேட்ட வரத்தின்படி மூகாசுரனுக்கும் விழா எடுக்கப்படுகிறது. அதுவே தேவியின் கருணை. துர்க்காம்பிகைக்கு செய்யும் அர்ச்சனைகள் அவள் திருவடியில் வீற்றிருக்கும் மகி ஷனுக்கும் செய்யப்படுவதுபோல் இத்தலத்தில் தேவிக்கு எடுக்கும் விழாவில் மூகனும் கொண்டாடப்படுகிறான். சரஸ்வதி பூஜையன்று மூகாம்பிகையின் சந்நதியில் உள்ள சரஸ்வதி தேவி கருவறையிலிருந்து வெளிவந்து பக்தர்களுக்கு தரிசனமளிக்கிறாள்.

ஆதிசங்கரர் மூகாம்பிகை தேவி கலைமகள் அம்சமாகத் திகழ்வதால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க அம்பிகையை பிரார்த்தனை செய்து கலாரோகணம் எனும் துதியைப் பாடி தேவியின் திருவருள் பெற்றார். எனவே கல்வி, கலை வளம் செழிக்க பக்தர்கள் மூகாம்பிகையை பிரார்த்தனை செய்து பயனடைகின்றனர். விஜய தசமி இத்தலத்தில் வித்யா தசமியாகக் கொண்டாடப்படுவது விசேஷம். தன் ஸௌந்தர்யலஹரியை ஆதிசங்கரர் ஆலயத்தில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் அமர்ந்து எழுதியதாக ஒரு வரலாறு உண்டு. ஒரு முறை ஆதிசங்கரர் தேவியைக் குறித்து தவம் செய்தபோது உடல் நலம் பாதிக்கப்பட்டார். அப்போது மூகாம்பிகை தேவி அவருக்கு கஷாயம் செய்து தந்து அவரைக் குணப்படுத்தியிருக்கிறாள்.

அதை நினைவூட்டும் வண்ணம் ஆலயத்தில் இன்றும் இரவு நேர அர்த்தஜாம பூஜை முடிந்த பின் கஷாய பிரசாதம் பக்தர்களுக்குத் தரப்படுகிறது. பலவித மூலிகைகள், குறுமிளகு, இஞ்சிப்பொடி, ஏலம், கிராம்பு, நெய், வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து செய்யப்பட்டு தேவிக்கு நிவேதிக்கப்படும் அந்த கஷாயத்தை பக்தியுடன் அருந்த சகல உடற்பிணிகளும் மனப்பிணிகளும் நீங்குவதாக பக்தர் கள் நம்புகின்றனர். அதேபோன்று முதல்நாள் இரவு சுயம்புலிங்கத்திற்குச் சாத்திய சந்தனக் காப்பில் ஸ்வர்ணரேகை பதிந்திருக்கும். அந்த சந்தனமும் சகல நோய்களையும் தீர்க்கும். அந்தப் பிரசாதம் கிடைக்கப் பெறுபவர்கள் மகாபாக்கியசாலிகளாகக் கருதப்படுகின்றனர்.

இந்த மூகாம்பிகை ஏவல், பில்லி, சூன்யம், துஷ்டதேவதைகளால் வரும் துன்பங்கள், சாபத்தால் தோன்றும் கோளாறு, தடை அனைத்தையும் தவிடு பொடியாக்கும் சர்வ வல்லமை படைத்தவள். ஒரு குடும்பத்தில் தீராத பிரச்னைகள் தொடர்ந்து இருந்து வருமேயானால், அவர்கள் இத்தலத்தில் ஓடும் சௌபர்ணிகை நதியில் நீராடி தூய மனதோடு தேவியை வழிபட அந்த பிரச்னைகள் தவிடுபொடியாகும். அனைத்து மதத்தினரும் வழிபடும் அற்புததேவி இந்த மூகாம்பிகை. . கர்நாடகாவில் உள்ள ஏழு முக்தி தலங்களுள் கொல்லூர் மூகாம்பிகை ஆலயமும் ஒன்றாகப் போற் றப்படுகிறது.

மற்ற ஆறு தலங்கள் உடுப்பி, சுப்ரமண்யா, கும்பகாசி, கோடேச்வரா, க்ரோடசங்கர நாராயணா, கோகர்ணம் ஆகியவையாகும். குடசாத்ரி மலையில் இருந்து இரண்டு கணவாய்கள் வழியாக ஆறு உற்பத்தியாகி கொல்லூர் வரும்போது சம்பாரா என அழைக்கப்படுகிறது. பல்வேறு மூலி கைத் தாவரங்கள் கலந்து வரும் இந்த ஆற்றில் விடியற்காலையில் நீராடினால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மூகாம்பிகை தேவிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அலங்காரம் செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமை ஆலயத்தில் உள்ள ஆயிரத்தெட்டு தீபங்கள் கொண்ட மரவிளக்கு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. மேலும் கருவறை முழுவதும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. வெள்ளியன்று இரவு தங்க ரதத்தில் மூகாம்பிகை திருவுலா வருகிறாள்.

அதைக் காண சகல தேவ தேவியரும் வருவதாக நம்பிக்கை நிலவுகிறது. இது அறம், பொருள், இன்பம், வீடுபேறு எனும் சதுர்வித புருஷார்த்தங்களையும் பக்தர்களுக்குத் தரும் என்பதைக் குறிக்கிறது.
தவி மூகாம்பிகையின் பாதங்களில் அர்ச்சனை செய்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்வதால், நான்முகன் நம் தலையில் எழுதிய கெட்ட எ ழுத்தும் குங்கும மகிமையால் அழிந்து விடுமாம். பூர்வ புண்ணியம் மேலோங்கப் பெற்றவர்கள் தம் வல்வினை நீங்கும் காலம் நெருங்கியவர்களே கொல்லூர் சென்று அங்கே கோலோச்சும் மூகாம்பி கையை தரிசிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

அன்னை காளியிடம் பக்தி செலுத்தி நமக்கு உபாசனையின் மேன்மையை தன் புனித வாழ்வின் மூலம் நிரூபித்தவர் ஸ்ரீராமகிருஷ்ண பரம ஹம்ஸர். அவர் தன் சீடர்களிடம், ‘‘என்னைப் போன்ற முட்டாள் குழந்தையை அன்னை காளியைத் தவிர யாரால் நேசிக்க முடியும்?’’ என்று சொல்வா ராம். மேலும் ‘ஆலோபகோபவிதிதா’ என்றும் ஒரு நாமம் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் உண்டு. அறிவு முதிர்ச்சியில்லாத சிறுவர்களாலும் இடையர்களா லும் கூட அறியப்படக்கூடியவள் என்று அது போற்றுகிறது. அவளுடைய குழந்தைகளாகிய நாம் அவளை எப்படி உபாசித்தாலும் அதை ஏற்றுக் கொண்டு அனுக்ரஹம் செய்வாள். பக்தியும் சிரத்தையுமே முக்கியம்.
 
கர்நாடக மாநிலம் குந்தாப்பூர் தாலூகாவில் கொல்லூர் திருத்தலத்தில் அமைந்துள்ளது அன்னை மூகாம்பிகை ஆலயம். மங்களூரில் இருந்து 140 கி.மீ. தொலைவிலும், உடுப்பியில் இருந்து 80 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது கொல்லூர்.

பசுமை படர்ந்த மலைகள், அடர்ந்த காடுகள் ஆகிய வற்றுக்கு மத்தியில் சௌபர்ணிகா ஆற்றின் கரையில் பத்மாசனத் திருக்கோலத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள் உலகம் அனைத்துக்கும் தாயான மூகாம்பிகை! தேவியின் வலக் கையில் உயர்த்திப் பிடித்திருக்கும் வீர வாள், முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அளித்தது. துஷ்டர்களை சம்ஹாரம் செய்ய அன்னை ஏந்தியிருக்கும் அந்த வாள், ஒரு கிலோ தங்கத்தில் செய்யப்பட்டு, வெள்ளியால் அமைக்கப்பட்ட உறையுடன் கூடியது.

மூகாம்பிகை என அம்பிகை பெயர் பெற்றது எப்படி? முன்னொரு காலத்தில் கம்ஹாசுரன் என்கிற அரக்கன் ஒருவன் இருந் தான். குடிமக்களுக்கும் தேவர்களுக்கும் முனி வர்களுக்கும் பெரும் தொல்லை கொடுத்து வந்த அவன், சிவனை நோக்கிக் கடும் தவமிருந்தான். சாகாவரம் வேண்டி அவன் தவம் இருப்பதை அறிந்த பராசக்தி, அவன் வரம் பெறுவதற்கு முன்பே, அவனை (மூகன்) ஊமையாக்கி விட்டாள். இதனால் அவன் ‘மூகா சுரன்’ என்று அழைக்கப்பட்டான். இந்த அசுரனை வதம் செய்ததால் அம்பிகை, ‘மூகாம்பிகை’ எனப் போற்றப்படுகிறாள்.

குடசாத்ரி மலையிலிருந்து 64 நீர்வீழ்ச்சிகள் தனித்தனி யாக உருவாகி, பின்னர் அவை ஒருங்கிணைந்து சௌபர்ணிகா நதியாக உருவெடுத்துப் பாய்கிறது. அந்தக் காலத்தில் இதன் கரையில் ஏராளமான முனிவர்கள் தவம் இருந்தனர். ஒரு முறை இந்தப் பகுதிக்குப் பாத யாத்திரையாக வந்தார் கோலன் என்கிற மகரிஷி. இதன் அமைதியான சூழல் அவருக்குப் பிடித்துப் போக, அங்கேயே ஆசிரமம் அமைத்துத் தங்கி இறைவனை நோக்கிக் கடுந் தவம் இருந்தார். (கோல மகரிஷி தங்கியதால் இந்தப் பகுதி கொல்லாபுரம் என்று அழைக்கப் பட்டு பின்னர் கொல்லூர் ஆனதாகத் தகவல்!)

கோல மகரிஷியின் தவத்தை மெச்சிய பரமேஸ்வரன் அவர் முன் தோன்றி, ‘‘பக்தா, வேண்டும் வரம் கேள்!’’ என்றார்.

‘‘ஈசனே, உலக மக்கள் யாவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். உலகில் மாதம் மும்மாரி பொழிய வேண்டும். பயிர்களும் உயிர்களும் செழிக்க வேண்டும். எல்லோரும் நிறைந்த ஆயுளுடனும், தேக சுகத்து டனும் வாழ வேண்டும். இவற் றைத் தவிர, எனக்கு வேறு எதுவும் வேண்டாம்!’’ என்று பதிலளித்தார் மகரிஷி.

ஈசன் மனம் மகிழ்ந்து, ‘‘கோல மகரிஷியே... இதோ, இந்தப் பாறையில் உனக்காக ஒரு லிங்கம் அமைக்கிறேன். இதை நீ தினமும் பூஜை செய்து வா!’’ என்று அருளினார்.

ஈசன் அருளால் அங்கு ஓர் அழகிய லிங்கம் தோன்றியது. அதைக் கண்ட கோல மகரிஷி இறைவனிடம், ‘‘ஈசனே! சக்தி தேவி இல்லாத சிவனை நாங்கள் எப்படி வழிபடுவது?’’ என்று வருத்தத்துடன் கேட்டார். அதற்கு இறைவன், ‘‘இந்த லிங்கத்தின் மத்தியில் உள்ள ஸ்வர்ண ரேகையைப் பார். இதன் இடப் பாகத்தில் பார்வதி, அறுபத்துநான்கு கலைகளுக்கும் தாயான சரஸ்வதி, செல்வங்களை அள்ளித் தரும் லட்சுமி ஆகிய மூவரும் அரூபமாக இருப் பார்கள். வலப் புறம் பிரம்மா, விஷ்ணு ஆகியோருடன் நானும் இருப்பேன்!’’ என்று கூறி மறைந்தார்.

ஈசன் அருளியவாறு ஸ்வர்ணரேகை ஜொலிக்கும் அந்த ஜோதி லிங்கத்தை, கோல மகரிஷி உட்பட மற்ற முனிவர் களும் பூஜித்து வந்தார்கள்.

இந்த நிலையில் மூகாசுரன், கோல மகரிஷி வாழும் இந்தத் தலத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, தன் அசுரர் குழாமுடன் அங்கு வந்து சேர்ந்தான். அங்கு வசிக்கும் அனைவரையும் துன்புறுத்தி மகிழ்ந் தான். பாதிக்கப்பட்டவர்கள், கோல மகரிஷியிடம் சென்று கண்ணீருடன் முறையிட்டனர். அனைவரையும் சாந்தப்படுத்திய அவர், மூகாசுரனை சம்ஹரிக்க வேண்டி அம்பாளை நோக்கிக் கடும் தவம் இருந்தார்.

அம்பாள், கோலமகரிஷியின் முன் தோன்றினாள். முனிவரின் முறையீட்டைத் தொடர்ந்து கோபக் கனலைக் கண்களில் தேக்கி, கையிலே திரிசூலம் ஏந்தி, தேவ கணங்களில் திறமை வாய்ந்த வீரபத்ரனைப் படைத் தளபதி யாக்கி மூகாசுரனோடு போர் புரிந் தாள் அம்பிகை. முடிவில் அசுரன் மடிந்தான். மூகாசுரன் மடிந்த பகுதி, கொல்லூரிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள ‘மாரண ஹட்ட’ என்னும் இடமாகும்.

இந்து தர்மம் செழிக்க ஆதிசங்கரர், சக்தி வழிபாட்டைச் சொல்லும் ‘சாக்தம்’ உள்ளிட்ட ஆறு வகை வழிபாடுகளை வழிப்படுத்தினார். பாரத தேசம் முழுதும் புனித யாத்திரை மேற்கொண்ட அவர், கொல்லூருக்கு வந்தபோது மக்கள் அவரிடம், ‘‘ஸ்வாமி, தங்க ரேகை மின்னும் லிங்கத்தில் அம்பாள் அரூப வடிவில் இருக்கிறாள். ஆனால், மூகாம்பிகை அன்னையின் முகம் எப்படி இருக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லையே!’’ என்று முறையிட்டனர்.

ஆதிசங்கரர் தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது அம்பாள் அவருக்குப் பிரத்தியட்சமானாள். பத்மாசனத்தில் வீற்று, இரு கரங்களில் சங்கு, சக்கரம். மற்ற இரு கரங்களில், ஒரு கரம் பாதங்களில் சரண டையத் தூண்ட, மற்றது வரமருளி வாழ்த்தும் கோலத் தில் அன்னை தோற்றமளித்தாள். தன் முன் தோன்றிய அம்பாளின் உருவத்தை, தேர்ந்த ஸ்தபதி யிடம் விவரித்து விக்கிரகம் செய்யப் பணித்தார் ஆதி சங்கரர். அதன்படி, அம்பாளின் அழகிய உருவம் பிரமிப்பூட்டும்படி உருவானது.

ஸ்வர்ண ரேகை லிங்கத்தின் பின்னால், மூகாம்பிகை திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் அடியில் ஆதிசங்கரரால் ஸ்ரீசக்ரம் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்தச் சக்கரத்தில் 64 கோடி தேவதைகள் இருப்பதாக ஐதீகம். மூகாம்பிகை கோயிலின் பூஜை முறைகள் அனைத்தையும் ஆதிசங்கரரே வகுத்து அருளினார். இன்று வரை அவை சற்றும் மாறாமல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீமூகாம்பிகை ஆதிசங்கரருக்குப் பிரத்தியட்சமான பிறகு, அவர் இயற்றியதுதான் ‘சௌந்தர்ய லஹரி’ (சௌந்தர்யம்-அழகு; லஹரி- அலைகள்).

மூகாம்பிகை கோயிலில் ஆதிசங்கரர் அமர்ந்து தியானம் செய்த பீடம், அம்பாள் படைத் தளபதியாக நியமித்த வீரபத்திரர் சந்நிதி ஆகியவற்றையும் காணலாம். அம்பாளுக்கு நடக்கும் எல்லா பூஜையும் வீரபத்திரருக்கும் உண்டு. அன்னை மூகாம்பிகைக்கு இங்கு அபி ஷேகம் கிடையாது. ஆரத்தி, புஷ்பாஞ்சலி மட்டுமே உண்டு.

எம்.ஜி.ஆர். இந்தக் கோயிலைத் தேர்ந் தெடுத்து தங்கத்தில் வாள் செய்து வழங்கி னார். இந்தி நடிகர் அமிதாப்பச்சன் பெங்களூரில் ‘கூலி’ படத்தில் நடித்தபோது உடல் நலமில்லாமல் போயிற்று. அவர் மூகாம்பிகையிடம் வேண்டிக் கொண்ட பிறகு உடல் நலம் சரியாயிற்று. பின் நேரில் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இங்கு வந்து போயிருக்கிறார். இன்னும் பல பிர முகர்கள் மூகாம்பிகை அம்மன் மீது நம்பிக்கை வைத்துத் தொலைதூரத்திலிருந்து வந்து போகிறார்கள். மூகாம்பிகை கோயிலுக்குப் போக, புகழ் பெற்றவர்கள் பலரும் ஆர்வம் காட்டுவது ஏன்?

கோயில் தலைமைக் குருக்கள்களில் ஒருவரான ஸ்ரீநரசிம்ம அடிகாவிடம் கேட்டோம். அவர் சொன் னார்: ‘‘இது ஸித்தி க்ஷேத்திரம். மனதில் பக்தியுடன் வேண்டியதை அம்பாள் பக்தர்களுக்கு வழங்குவாள். இங்கு குத்து விளக்கின் பஞ்சமுகத்திலும் திரி வைத்து நெய் விளக்கு ஏற்றி அம்பாளை வழிபடுவது விசேஷம். நித்திய உற்சவம், வாரத்தில் வெள்ளி உற்சவம், பௌர்ணமி, அமாவாசை, நவராத்திரி, மார்ச் இறுதி-ஏப்ரல் முதல் வாரத்தில் எட்டு நாள் ரதோற்சவம், ஜூன் முதல் வாரம் சுக்ல பட்சம், அஷ்டமி திதியில் அம்பாளின் ஜன்மாஷ்டமி திரு விழா, கட்டணம் செலுத்துவோருக்கு தங்க ரதத்தில் அம்பாள் உலா வரும் நிகழ்ச்சி ஆகியவை மிகச் சிறப் பாக நடந்து வருகின்றன.’’

மூகாம்பிகை ஆலயத்துக்குச் சென்றால், திரும்பி வர மனமில்லாமல்தான் வர வேண்டும். அந்த அளவுக்கு அம்பாளின் தேஜஸ், அருள் பார்வை, சுற்றுப்புறச் சூழல் ஆகியவற்றால் மனதில் கிடைக்கிற பரவசம் நம்மை ஐக்கியப்படுத்தி விடுகிறது. நாம் மனதில் நினைத்து வேண்டியதை அம்பாள், நமக்குக் கொடுத்தே தீருவாள் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் அங்கிருந்து திரும்புகிறார்கள்..

பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள்



உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு தான் பாலி (BALI). இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள். 42 லட்சம் ஹிந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது.

ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்கு பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகு ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர்.

பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள்.

1. இங்கே ஒவொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் ஒரு நாள் மௌன விரதம் கடைபிடிக்கபடுகிறது. Nyepi day என்று சொல்கிறார்கள். மார்ச் மாதத்தில் இந்த மௌன தினம் வருகிறது. ஹிந்துகளின் பண்டிகை போன்ற அந்த நாளில் இந்தோனேசியா முழுவதும் விடுமுறை அளிக்கபடுகிறது. காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை எந்த போக்குவரத்தும் இருக்காது. பன்னாட்டு விமான நிலையமான Denpasar (bali) விமான நிலையம் கூட மூடப்பட்டு இருக்கும். யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள்.

2. பாலியில் உள்ள ஹிந்து கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்தது தான். பாலி பள்ளிகளில் இன்றும் கூட ரிஷிகளை பற்றிய பாடங்கள் இருக்கின்றன. புராணங்களில் வரும் மார்கண்டேய, அகஸ்திய, பரத்வாஜ ரிஷிகளை பற்றி இந்தியாவில் யாருக்கும் தெரியாத நிலையில், இந்த ரிஷிகளை பற்றி பாலி குழந்தைகள் கூட தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

3. பாலியில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தேசிய உடை 'வேஷ்டி' தான். எந்த ஒரு பாலி கோவிலுக்கும் வேஷ்டி அணியாமல் ஆணோ, பெண்ணோ உள்ளே செல்ல முடியாது. இந்தியாவில் கூட சில கோவில்களில்தான் பாரம்பரிய உடை கட்டாயமாக உள்ளது (குருவாயூர் போன்ற). ஆனால் பாலியில் அனைத்து கோவில்களிலும் நமது உடை அணிந்து தான் செல்ல வேண்டும்.

4. பாலியின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு ரிஷிகள் உருவாகிய tri-hita-karana என்ற கோட்பாட்டின் படி தான் அமைந்துள்ளது. அதைதான் அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் சொல்லிக்கொடுக்கிறார்கள். Parahyangan - Pawongan - Palemahan என்று பொருள்படும். tri-hita-karana என்பது சமஸ்கிருதம்.

5. Trikala Sandhya என்பது சூரிய நமஸ்காரம். அணைத்து பாலி பள்ளிகளிலும் கட்டயாமாக மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள். அதே போல மூன்று வேலையும் காயத்ரி மந்திரத்தை அவர்கள் பள்ளியில் சொல்லவேண்டும். பொதுவாக பாலி ரேடியோவில் மூன்று வேலை சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டிய நேரத்தில் அதை ஒலிபரப்புவார்கள். இந்தியாவில் சூரிய நமஸ்காரதிர்க்கு எதிர்ப்பு தான் வருகிறது. 5 வேலை நமாஸ் செய்ய சொல்வார்கள் போல.

6. பாலி கோவில் பூசாரிகளின் சம்பளத்தை இந்தோனேசியா அரசாங்கமே கொடுக்கிறது. முஸ்லிம் மத நாடான இந்தோனேசியாவில் அனைத்து மத கோவில் பூசாரிகளின் சம்பளத்தை அரசே கொடுக்கிறது.

7. இந்தோனேசிய நாட்டின் மூதாதையர்கள் அனைவரும் ஹிந்துக்களே, அதனால் அவர்களின் பண்பாடுகளில் இந்திய கலாசாரமே அதிகம் கலந்துள்ளது.

8. உலகில் அரிசி விளைவிக்கும் நாடுகளில் இந்தோனேசியா முக்கிய இடம் வகிக்கிறது, பாலி தீவு முழுவதும் அரிசி வயல்கள் தான் இருக்கின்றது. பாலி மக்கள் விளைந்த அரிசியை முதலில் ஸ்ரீ தேவி, பூதேவி (Shri Devi and Bhu Devi ) ஆகிய தெய்வங்களுக்கு தான் படைக்கிறார்கள். அனைத்து வயல்களிலும் இந்த இரண்டு தெய்வங்களும் கோவில் இருக்கும், விவசாயிகள் இந்த இரு தெய்வங்களை வணங்கிய பிறகு தான் விவசாய தொழிலுக்கு செல்வார்கள். 9ஆவது நூற்றாண்டிலேயே விவசாய மற்றும் நீர்பாசன விதிமுறைகளை ஹிந்து பெரியோர்கள் கற்றுகொடுத்து இருக்கிறார்கள். அதற்க்கு Subak System என்று பெயர். இங்கே நீர் பாசனம் முழுவதும் கோவில் பூசாரிகளின் கட்டுபாட்டில் தான் இருக்கும். உலக வங்கியே Subak System பின் பற்றுமாறு மற்ற நாட்டினருக்கு அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிட தக்கது. இந்தியர்கள் கொண்டு வந்த இந்த விஞ்ஞானம் இன்று இந்தியாவில் இல்லை.

9. பாலி ஹிந்துக்கள் பூஜை செய்யும் பொழுது பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பது இல்லை. இன்றும் கூட அவர்கள் கையால் எழுதப்பட்ட ஓலை சுவடியையே (Lontar) பயன்படுத்துகிறார்கள். ராமாணயம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.ராமாணய ஓலைசுவடியை நல்ல நாட்களில் எடுத்து வரும் திருவிழா நடைபெறும். 10. அனைத்து திருவிழாகளிலும் பாலி நடனம் ஆடுவார்கள், அதில் பெரும்பாலும் இராமாயண இதிகாசங்களை கதைகளாக சொல்வார்கள். ஹிந்துக்களின் சொர்க்க பூமி பாலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உலகின் அழகிய தீவுகளில் பாலி முக்கிய இடம் வகிக்கிறது. அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கை முறை, பாரம்பரியமிக்க ஹிந்து கலாச்சாரம், நடனம், இசை என்று இந்த தீவு உலக சுற்றுலா பயணிகளை அதிகம் கவருவதில் ஆச்சிரியம் ஏதும் இல்லை.

திங்கள், 8 ஜூன், 2020

பழைய ராமேசுவரம்"என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் பற்றிய தகவல்


"பழைய ராமேசுவரம்"என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் பற்றிய தகவல்

   
திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அருகன்குளம் கிராமத்தில் ‘பழைய ராமேசுவரம்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் இருக்கிறது.

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது அருகன்குளம். 

இங்குள்ள பழைய கிராமத்தில் ‘பழைய ராமேசுவரம்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் இருக்கிறது. 

இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று தல வரலாறு சொல்கிறது.

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஊரில், அருகம்புல் அதிகம் கொண்ட குளம் இருக்கிறது. 

இதனால் இந்தப் பகுதி ‘அருகன் குளம்’ என்று அழைக்கப்படுகிறது. ராமபிரான் வனவாசத்தில் இருந்தபோது, சீதையை ராவணன் கடத்தினான். 

சீதையை ராவணன் கடத்துவதை அருகன்குளம் பகுதியில் வைத்துப் பார்த்த ஜடாயு என்ற கழுகு அரசன், ராவணனை தடுத்து நிறுத்தினான். இதனால் ராவணனுக்கும் ஜடாயுவுக்கும் போர் ஏற்பட்டது.

 
இதில் ஜடாயுவின் இறக்கையை ராவணன் வெட்டினான். இதில் காயமடைந்த ஜடாயு, உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது. 

அந்த வழியாக வந்த ராமரும், லட்சுமணரும் துடித்துக்கொண்டு இருந்த ஜடாயுவை பார்த்தனர். உடனே ராமர், ஜடாயுவை தனது தொடையில் தூக்கிவைத்து தடவிக்கொடுத்தார். 

அப்போது ஜடாயு, சீதையை ராவணன் இலங்கைக்கு கடத்திச் செல்கிறான் என்ற தகவலை சொல்லியது. 

மேலும் தான் இறந்ததும் இறுதிச்சடங்கை ராமர் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்து விட்டு இறந்தது.

அதன்படி ஜடாயுவுக்கு, தாமிரபரணி ஆற்றங் கரையில் இறுதிச்சடங்கு செய்தார், ராமபிரான். 

அப்போது ஜடாயுவுக்கு தீர்த்தம் கொடுப்பதற்காக ஜடாயு தீர்த்தத்தை உருவாக்கி அதில் இருந்து தண்ணீர் எடுத்து கொடுத்தார். 

ஜடாயுவுக்கு ராமரே மகனாக இருந்து தர்ப்பணம் கொடுத்த இடம், தாமிரபரணி நதிக்கரையில் ‘ஜடாயுத்துறை’ யாக இன்றும் அழைக்கப்படுகிறது.

ஜடாயுவுக்கு இறுதிச்சடங்கு செய்த ராமர், அவருக்கு மோட்சம் கிடைக்கவேண்டும் என்பதற்காக தாமிரபரணி நதிக்கரையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். 

அந்த லிங்கம் தான் இத்தலத்தில் அருள்பாலிக்கும் ராமலிங்க சுவாமி ஆகும். இந்த ஆலயத்தில் ராமலிங்க சுவாமி மூலவராக உள்ளார். 

வெளி மணிமண்டபத்தில் பர்வதவர்த்தினி அம்பாள், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி சன்னிதிகளும் உள்ளன. 

மூலவருக்கு வடக்கு பகுதியில் தனிக் கோவிலாக ஜடாயுவுக்கு பிண்டம் போட்ட ‘பிண்ட ராமர்’ உள்ளார்.

இந்தக் கோவில் பிற்காலத்தில் வல்லபாண்டிய மன்னரால் புனரமைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வந்துள்ளன. 

ஆலயத்தின் அருகில் ஜடாயு தீர்த்தம், ராம தீர்த்தம், சிவ தீர்த்தம் ஆகிய 3 தீர்த்தங்களும் உள்ளன. 

இந்த தீர்த்தங்களின் அருகில் லட்சுமி நாராயணர் கோவிலும், காட்டு ராமர் கோவிலும், எட்டெழுத்து பெருமாள் கோவிலும், கோசாலையும் அமைந்திருக் கின்றன. 

இந்த 3 தீர்த்தங்களும் ராமர் ஜடாயுவுக்கு இறுதிச்சடங்கு செய்த ஜடாயுத்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.

இதனால் *எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் புனித நீராடிவிட்டு ராமலிங்க சுவாமியையும், பிண்ட ராமரையும் வழிபட்டால், நமது குடும்பத்தில் உள்ள 27 தலைமுறையினர் செய்த பாவங்களும், தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.*

பித்ரு தோஷம் உள்ளவர்கள் இந்த ஜடாயுத்துறைக்கு வந்து தர்ப்பணம் கொடுத்து சுவாமியை வழிபட்டால், தோஷங்கள் நீங்கி குடும்பம் முன்னேற்றம் அடையும். 

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சுவாமிக்கும், ராமருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

அருகன்குளம் பழைய கிராமத்தில் உள்ள இக்கோவில் ராமேசுவரம் கோவிலுக்கு முந்தைய கோவில் என்பதால் ‘பழைய ராமேசுவரம்’ என்று அழைக்கப்படுகிறது. 

ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் ஏராளமானவர்கள் 

இங்கு வந்து ஜடாயுத்துறையில் தர்ப்பணம் கொடுத்துவிட்டு, இத்தல இறைவனையும் வழிபடுகிறார்கள். 

(((இந்த கோவிலில் உள்ள கல் விளக்கில் இலுப்பை எண்ணெயும், நல்லெண்ணெயும் கலந்து ஊற்றி விளக்கு ஏற்றினால் குடும்ப தோஷம் நிவர்த்தியாகும்.))) இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6.30 மணி வரையும் திறந்திருக்கும்.

*#அமைவிடம்*

திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையம், பஸ் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திலும், தாழையூத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் உள்ளது. நெல்லை சந்திப்பில் இருந்து கோவிலுக்கு சென்று வர மினிபஸ் இயக்கப்படுகிறது. 

ஞாயிறு, 7 ஜூன், 2020

தீபாவளி பண்டிகைக்காக திறக்கப்படும் ஹாசனாம்பா கோவில்



தீபாவளி பண்டிகைக்காக திறக்கப்படும் ஹாசனாம்பா கோவில்

கர்நாடக மாநிலம் ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை, அதாவது 10 நாட்கள் மட்டுமே நடை திறந்து பூஜை நடத்தப்படும் என்பது சிறப்பம்சமாகும்.

கர்நாடக மாநிலம் ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஹாசனாம்பாதேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அம்மன் இங்கு மண்புற்று வடிவில் வீற்றிருக்கிறார். தொடக்கத்தில் ஹாசனுக்கு சிம்ஹாசனபுரி என்று பெயர் இருந்தது. சிம்ஹாசனபுரி என்பது அர்ச்சுனனின் பேரன் ஜனமேஜய மகாராஜனின் இடம் என்றும் கூறுவர். இங்கு ஹாசனாம்பா தேவி நிலைத்த பிறகு ஹாசனா என பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது.

கல்லாய் நிலைத்த திருடர்கள் :

இந்த கோவிலின் கொடி மரத்தைத் தாண்டியவுடன் சித்தேஸ்வரர் என்ற திருநாமத்துடன், சிவபெருமான் அருள்பாலிக்கிறார். இங்கு சிவன் லிங்கவடிவில் காட்சி தருகிறார். அத்துடன் அவருடன் பாசுபதாஸ்திரம் பெற்றுக்கொள்ளும் நிலையில் அர்ச்சுனன் காணப்படுகிறார்.

உற்சவ மூர்த்தியான சிவனின் நெற்றியில் ஒளி வீசும். இதை நாம் ஆண்டுதோறும் கோவில் நடை திறக்கப்படும் வேளைகளில் கண்டு ரசிக்கலாம்.

அதுபோல் கோவிலில் கல்லப்பா குடி என்ற சன்னிதி உள்ளது. இந்த சன்னிதியில் 4 கல் சிலைகள் உள்ளன. இதற்கு ஒரு வரலாறு உண்டு. அதாவது கோவிலுக்குள் புகுந்த 4 திருடர்கள் தேவியின் கழுத்தில் கிடந்த ஆபரணங்களை திருட முயற்சித்துள்ளனர். இதனால் கடும் கோபமடைந்த தேவி, 4 பேரும் கல்லாய் போகட்டும் என்று சாபமிட்டதாகவும், அதனால் அந்த 4 பேரும் கல்லாய் நிலைத்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. 4 பேரும் நிலைகொண்ட இடம் ‘கல்லப்பா குடி’ என அழைக்கப்படுகிறது.

12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம் :

இந்த ஆலயம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் போல அம்மனை முன்னிறுத்தி பூஜைகள் நடத்தப்படும் ஆலயமாகும். இத்தகைய புகழ்பெற்ற ஹாசனாம்பாவுக்கு சுமார் 12-ம் ஆண்டு நூற்றாண்டில் கிருஷ்ணப்பா நாயக்க பாளையக்காரரின் காலத்தில் கோவில் எழுப்பப்பட்டது.

தலபுராணம்:

இந்த கோவிலுக்கு தலப்புராணம் உள்ளது. அதாவது, சப்த கன்னியர்களான பிரம்ஹிதேவி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் வாரணாசியில் இருந்து தெற்கு பகுதிக்கு புத்துணர்வுக்காக வலம் வந்தார்கள் என்றும், அந்த சப்த கன்னியர்களில் வைஷ்ணவி, கவுமாரி, மகேஸ்வரி அம்மன்கள் ஹாசனாம்பா கோவிலில் மண்புற்றின் வடிவத்தில் நிலைத்தார்கள் என்றும், பிரம்ஹிதேவி கெஞ்சம்மனின் புதுக்கோட்டையில் நிலைக்கொண்டிருக்கிறார் என்றும், சாமுண்டி, வராகி, இந்திராணி ஹாசன் நகரில் உள்ள தேவி கெரேயில் நிலைகொண்டு இருப்பதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

அணையா தீபமும்… வாடா மலரும்…

ஹாசனாம்பா கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோவில் பலிபட்யாமி என்ற நாளில் நடை சாத்தப்படுவது வழக்கம். அன்றைய தினத்தில் இந்த கோவிலில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபம் அடுத்த ஆண்டு கோவில் நடை திறக்கப்படும் நாள் வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்குமாம்.

அதுபோல் நடைமூடப்படும் அன்று ஹாசனாம்பா தேவிக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்படும். அவ்வாறு அர்ச்சனைகள் செய்யப்படும் பூக்கள், மாலையிடப்படும் பூக்கள் அடுத்த ஆண்டு வரை வாடாமல் இருக்கும் என்பது பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த இரு அதிசயங் களின் கண்கொள்ளாக் காட்சிகளை பார்ப்பதற்காக ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் கோவில் திறக்கப்படும் நாளில் அம்மனை காண வருகிறார்கள்.

ஆண்டுக்கு ஒரு முறை நடை திறப்பு :

இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை, அதாவது 10 நாட்கள் மட்டுமே நடை திறந்து பூஜை நடத்தப்படும் என்பது சிறப்பம்சமாகும். அதாவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புரட்டாசி மாதம் இறுதி முதல் ஐப்பசி மாதம் முதல் வாரத்திற்குள் வரும் பவுர்ணமிக்கு அடுத்த வியாழக்கிழமை கோவில் நடை திறக்கப்பட்டு, அமாவாசைக்கு அடுத்த 3-வது நாள் கோவில் நடை சாத்தப்படுவது வழக்கமாக உள்ளது. அதாவது 10 நாட்களும் இரவு முழுவதும் நடைசாத்தப்படாமல் திறந்தே இருக்கும்.

கோவில் நடை திறக்கப்படும் முதல் நாளில் ஹாசன் மாவட்டம் மட்டும் இன்றி மாநிலம் முழுவதில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். தலவார் குடும்பத்தினர் கர்ப்பகிரகத்துக்கு எதிரே வாழைத் தண்டுகளை நட்டுவைத்து, ஹாசனாம்பாவை பயபக்தியுடன் பஜனைகள் பாடுவார்கள். பின்னர் அந்த வாழைத்தண்டுகளை வெட்டியதும், கோவில் நடை திறக்கப்படுவது இன்று வரை நடைமுறையில் இருக்கும் ஐதீகமாகும்.

கோவில் நடை திறந்திருக்கும் 10 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள். கோவிலிலுள்ள அம்மனை வழிபாடு செய்தால் வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அதிசயிக்க வைக்கும் ஹாசனாம்பா தேவி கோவில் இந்த ஆண்டில் தீபாவளியை முன்னிட்டு 1-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை திறக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், மாவட்ட அறநிலையத்துறையினர் செய்து வருகிறார்கள். பெங்களூருவில் இருந்து இந்த கோவில் 184 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பெங்களூருவில் இருந்து பஸ், கார்களில் 3.15 மணி நேரம் பயணித்தால் ஹாசனாம்பாதேவியை தரிசிக்கலாம். மேலும் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து ஹாசனுக்கு ரெயில்களும் இயக்கப்படுகிறது. அதிலும் பயணித்து ஹாசனாம்பா தேவி கோவிலை சென்றடையலாம்.