வெள்ளி, 24 ஏப்ரல், 2020

அகத்தியரின் நேரடி தரிசனத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற!!!


அகத்தியரின் நேரடி தரிசனத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற!!!

1.5.2020 வெள்ளிக்கிழமை அன்று அகத்தியரின் ஜென்ம நட்சத்திரமான ஆயில்யம் அன்று முழுவதும் இருக்கிறது.

சித்தர் பெருமக்களின் அகத்தியரின் தரிசனத்தையும் ,கடவுள்களில் சிவபெருமான் மற்றும் முருகக்கடவுள் தரிசனத்தையும் பெறுவது மிகவும் கடினம்.

பல பிறவிகள் போராடி ஒவ்வொரு பிறவியிலும் பிறந்தது முதல் மரண நாள் வரை ஒரே சிந்தனையோடு ஆன்மிக முயற்சிகளில் ஈடுபட்டால் மட்டுமே இந்த லட்சியங்கள் நிறைவேறும்.

கலியுகத்தில் வாழ்ந்து வரும் நாம் மூன்றுவிதமான கடன்களை செய்யாமல் விட்டு விடுகிறோம். அவை தேவ கடன் ரிஷி கடன் பிதுர்க்கடன் ஆகும்.

 தேவ கடன் தீர அமாவாசை தோறும் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.

ரிஷி கடன் என்பது நம்முடைய ஊரில் உள்ள பழமையான ஆலயத்தில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் கலந்து கொள்ள வேண்டும்.நம்முடைய இஷ்ட தெய்வம் யாரோ அந்த தெய்வத்திற்கு முறைப்படி வாழ்நாள் முழுவதும் பூஜை யாகம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

பித்ருகடன் என்ற பிதுர்க்கடன் என்றால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தல் செயற்கையான விபத்தில் இறந்தவர்களுக்கு திலா ஹோமம் என்ற தில தர்ப்பணம் செய்தல் போன்றவை ஆகும்.

இந்த மூன்று கடன்களையும் தீர்ப்பதற்கு நம்முடைய முன்னோர்களாகிய சித்தர்களில் ஒருவரான இடியாப்ப சித்தர் நமக்கு ஒரு சுலபமான வழியை போதித்துள்ளார்.

 மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு வருடத்தில் வரும் 96 ஷண்ணவதி நாட்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த நாட்கள் ஒரு வருடத்தில் எப்போதெல்லாம் வரும் என்ற பட்டியலை இங்கே கொடுத்திருக்கிறோம்.

12 தமிழ் மாத பிறப்பு நாட்கள்

12 அமாவாசை நாட்கள்

12 வியாதிபாத நாட்கள்

12 வைதிருதி நாட்கள்

புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய பட்ச நாட்கள் 16

யுகாதி நாட்கள் 4

மார்கழி மாத அட்டகா & அன்வட்டகா நாட்கள் 3

தை மாத அட்டகா & அன்வட்டகா நாட்கள் 3

மாசி மாத அட்டகா & அன்வட்டகா நாட்கள் 3

பங்குனி மாத அட்டகா & அன்வட்டகா நாட்கள் 3

($ பஞ்சாங்கத்தில் அட்டகா  என்று குறிப்பிடப்பட்டிருக்கும்)

 ஆக மொத்தம் 96 நாட்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்;

இந்த நாட்கள் மிகவும் அதிக சக்தி வாய்ந்த நாட்கள் ஆகும்;தர்ப்பண சக்தி வாய்ந்த நாட்கள் ஆகும்;

இதுவரை எத்தனை பிறவி எடுத்துள்ளோ மோ அத்தனை பிறவி கர்மாக் கள்ளும் தீர்ந்து நம்முடைய முன்னோர்களாகிய பித்ருக்களின் ஆசீர்வாதமும், அகத்திய மகரிஷியின் நேரடி தரிசன மும் ஆசீர்வாதமும் இப்பிறவியிலேயே வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த 96 ஷண்ணவதி  நாட்களில் உங்கள் ஊருக்கு அருகிலுள்ள அகத்தீஸ்வரர் திருக்கோயி லில் தொடர்ந்து பித்ரு தர்ப்பணம் செய்து வர வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு நாட்களில் இந்த 96  ஷண்ணவதி நாட்கள் வரும்.

அகத்தியரின் பிறந்த நட்சத்திரமான ஆயில்யம் அன்று கீழ்காணும் பாடலை வீட்டிலோ அல்லது அகத்தீஸ்வரர்  திருக்கோயிலில் அல்லது அகத்தியர் போட்டோ முன்பாக எட்டுமுறை ஜெபிப்பது நன்று.

ஓம் ஸ்ரீஅகஸ்தியர் திருநக்ஷத்திரப் பொற்பாதத்திரட்டு

1.வண்டமர் பூஞ்சோலைக் கற்பகமே!
வந்தெனக்கருள் அஸ்வினி பொற்பாதமே! போற்றி!

2.கண்டமர் கருணைத் திருஒளியே!
காத்தெனைக் கை தூக்கு பரணி பொற்பாதமே! போற்றி!

3.எங்கும் ஒளிரும் தீபச் சுடர் ஒளியே!
ஏங்கும் எனக்கருள்வாய் கிருத்திகை பொற்பாதமே! போற்றி!

4.தாயாய் வந்த அருள் ஒளியே !
தயை பூண்டருள்வாய் ரோகிணி பொற்பாதமே! போற்றி!

5.வேதம் ஆனாய் பேரொளியே
வெற்றி அருள்வாய் மிருகசீரிஷ பொற்பாதமே! போற்றி!

6.நாதம் ஈந்த நாரிமணியே தினம்
நலம் பல தருவாய் திருவாதிரை பொற்பாதமே! போற்றி!

7.பாதம் தந்து காத்திடுவாய்
பரிந்தருளும் புனர்பூச பொற்பாதமே! போற்றி!

8.வளம் தந்து பெருக்கிடுவாய் அன்புடன்
வணங்கிட என் பூச பொற்பாதமே! போற்றி!

9.உள்ளம் கனிய உன்புகழ் பாடும் கள்ளமற்ற
உந்தன் பிள்ளைக்கருளும் ஆயில்ய பொற்பாதமே! போற்றி!

10.கவலை போக்கி ஆதரிப்பாய் அன்னையே
கசிந்துருகும் உன் பிள்ளைக்கருள் மகப் பொற்பாதமே! போற்றி!

11.உள்ளம் மேவும் உத்தமியே உனைநினைந்து
உருகி அழுமெனைத் தேத்து உத்தம பூரம் பொற்பாதமே! போற்றி!

12.தீரா நோயைத் தீர்த்தருளும் அமுத
தீச்சுடரே தினமருள் உத்திர பொற்பாதமே! போற்றி!

13.ஆரா அமுதாய் ஆனவளே அடியேனுக்கு
ஆபத்தில் உதவிடு ஹஸ்த பொற்பாதமே! போற்றி!

14.கருவில் மீண்டும் வாராமல் கருணையோடு
காத்தருளும் கர்த்தா சித்திரை பொற்பாதமே! போற்றி!

15.கொஞ்சும் புன்னகை பூத்தவளே என்றும்
கோலாகலமாய் வாழ்ந்திட அருள் சுவாதி பொற்பாதமே! போற்றி!

16.எண்ணும் மனத்தை நீ மேவி என்னுள்
என்றும் கோயில் கொண்ட விசாக பொற்பாதமே! போற்றி!

17.பங்கம் இல்லா நிறைவாழ்வு எனக்கு
பரிவுடன் தந்து காக்கும் அனுஷம்  பொற்பாதமே!போற்றி!

18.உன்னை வணங்கும் என் கைகள் என்றும்
உதவிடும் உனதருள் பெறவே கேட்டை பொற்பாதமே! போற்றி!

19.உன் புகழ் பேசும் என் நாவே தினமும்
உன் கருணை பெறவே மூலம் பொற்பாதமே!போற்றி!

20.உன்னை நினைக்கும் என் மணமே நலமுடன்
உகந்தருள் தரும் உன் பூராட பொற்பாதமே! போற்றி!

 21.நின்னை நோக்கி என் கால்கள் என்றும்
நின்றே தவம் புரியும் உத்திராட பொற்பாதமே! போற்றி!

 22.நித்தம் நித்தம் நினைவில் நின்று நலம் தரும்
நீலத்திருமால் அருள் பெற்ற திருவோண பொற்பாதமே! போற்றி!

 23.மணமகள் மகிழச் செய்யும் மங்கையே
மன்றாடும் நின் பிள்ளை மலரச் செய்ய அவிட்ட பொற்பாதமே! போற்றி!

24.தீரா நோயைத் தீர்த்தருளும் திவ்விய
தெய்வமே சதய பொற்பாதமே! போற்றி!

 25.சோதி அருள் ஈந்திடும் சுந்தர
ஆதி தெய்வமே பூரட்டாதி பொற்பாதமே! போற்றி!
 26.வேதியர்க்கெல்லாம் வித்தாகிடும்
வேத தெய்வமே உத்திரட்டாதி பொற்பாதமே! போற்றி!

 27.தந்தையாய் வந்து தனிப் பெருங் கருணை காட்டும்
எந்தை அருணாசலத்து வாழ் ரேவதி பொற்பாதமே! போற்றி!

பின்வரும் சிவாலயம் ஒவ்வொன்றையும் அகத்தியர் உருவாக்கி 12 தேவ வருடங்கள் பூஜை செய்திருக்கிறார்.

 ஒவ்வொரு அகத்தீஸ்வரர் ஆலயத்திலும் 12 தேவ வருடங்கள் பூஜை செய்திருக்கிறார்.

 ஒவ்வொரு அகத்தீஸ்வரர் ஆலயத்திற்கும் மிகவும் பிரம்மாண்டமான புராண வரலாறு உண்டு.

அகத்தியரின் கருணை இருந்தால் இந்த ஆலயங்களில் ஏதாவது ஒன்றுக்கு மட்டுமாவது நம்முடைய வாழ்நாளில் ஒரே ஒருமுறை செல்லும் பாக்கியம் நமக்கு கிட்டும்.

அகத்தீஸ்வரர் கருணை இருந்தால் இந்த ஆலயங்களில் ஒரு ஆலயத்தை பற்றிய புராண வரலாறு நமக்கு கிடைக்கும்.

1.அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,ஆடையூர் கிராமம் ,அண்ணாமலை கிரிவலப்பாதை திருவண்ணாமலை.(வாயு லிங்கத்திற்கும் சந்திர லிங்கத்திற்கும் இடையே ஆடையூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது.கிரிவலப்பாதையில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும்)

2. அருள்மிகு ஸ்வர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்,சென்னை -49.   (ஐஸ்வர்ய வீரபத்திரர் சன்னதியும்,அம்பிகையின் நேரடிப்பார்வையில் குரு பகவான் சன்னதியும் இருக்கும் ஆலயம்)

3. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,         பொழிச்சலூர்,பல்லாவரம் அருகில்,சென்னை(விமான நிலையம் பின்புறம் 2 கி மீ  தொலைவில்,பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ தொலைவில்)

4. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,தண்டையார்பேட்டை, சென்னை.

5. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,நல்லூர் கிராமம், சென்னை.

6. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,சோழிபாளையம் சென்னை.

7. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,கொளத்தூர் ,சென்னை.

8. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,வேலப்பன்சாவடி, சென்னை.

9. அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில், சித்தாலபாக்கம், சென்னை.

10. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வேங்கடமங்கலம், சென்னை.

11. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மிட்டனமல்லி, ஆவடி, சென்னை.

12. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பூந்தண்டலம், சென்னை.

13. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கொளப்பாக்கம், சென்னை.

14. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பவுஞ்சூர், சென்னை.

15. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அணைக்கட்டு சேரி, சென்னை.

16. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பழைய பெருங்களத்தூர், சென்னை.

17. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நெடுங்குன்றம், சென்னை.

18. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் சோனலூர்,மாம்பாக்கம், சென்னை.

19. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை.

20.தாராபுரம்,கோவை நெடுஞ்சாலை

21.அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நாபளூர்,திருத்தணி(திருத்தணியில் இருந்து 10 கி மீ தொலைவில் லஷ்மாபுரம் பேருந்து நிலையத்திற்கு தெற்கே 1 கி மீ தொலைவில்)

22.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகிலாண்டபுரம்,காங்கேயம்

23.அருள்மிகு அசலம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில்,நுங்கம்பாக்கம்,சென்னை;.

24.அருள்மிகு பாகம்பிரியாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகத்தியான்பள்ளி,வேதாரண்யம்.நாகை மாவட்டம்.(வேதாரண்யம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ)

25.ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில்,துஞ்சனூர்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்.

26.ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் கோவில்,ஏம்பல்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்.

27.ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையூர்,பெருகமணி; (வழி=திருச்சி டூ கரூர் சாலை)

28.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில்,மேல்தானம் கிராமம்;திருக்கோளக்குடி அருகில்,புதுக்கோட்டை மாவட்டம்.

29.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில், எட்டயத்தளி,பேராவூரணி அருகில்(புதுக்கோட்டை)=கேட்டை நட்சத்திர ஸ்தலம்

30.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,கருவளர்ச்சேரி என்ற பீஜபுரம்.(வழி=கும்பகோணம் டூ மருதாநல்லூர் டூ ஆலங்குடி பேருந்து வழித்தடத்தில் மருதாநல்லூரில் இருந்து 1 கி மீ தொலைவில்)

31.அருள்மிகு திரிபுவன நாயகி சமேத அகத்தீஸ்வரர் மூலவர்கள்,அருள்மிகு மாகறலீஸ்வரர் திருக்கோவில்,மாகறல்(வழி),காஞ்சிபுரம்(உத்திர மேரூர் காஞ்சிபுரம் சாலையில் அமைந்திருக்கின்றது)

32.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,பஞ்செட்டி,பொன்னேரி,திருவள்ளூர் மாவட்டம்,(வழி:சென்னை டூ கொல்கொத்தா நெடுஞ்சாலையில் 30 கி மீ தொலைவில்) ரெட் ஹில்ஸ்ஸில் இருந்து 21 கி மீ தூரத்தில்,சென்னையில் இருந்து புழல் வழியாக 45 கி மீ தொலைவில்;பொன்னேரி பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கின்றது;(பஞ்சேஷ்டி என்றும் கூறுவது உண்டு) (செங்குன்றம் டூ காரனோடை அருகில்)

33.ஸ்ரீலோபமுத்ரா சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம்,அம்பாசமுத்திரம்,திருநெல்வேலி மாவட்டம்;

34.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில்,திருவொற்றியூர்,சென்னை;

35.அருள்மிகு முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,வில்லிப்பாக்கம்(வில்லிவாக்கம் அல்ல),சென்னை(வழி:சென்னை டூ பாண்டிச்சேரி சாலையில் கடப்பாக்கம் சென்றடைய வேண்டும்;அங்கிருந்து  வெண்ணாங்குப்பட்டு செல்ல வேண்டும்;அங்கிருந்து மேற்காகச் செல்லும் குணாம்பேடு சாலையில் 5 கி மீ பயணித்தால் வில்லிப்பாக்கம் வரும்;

36.அருள்மிகு  முத்தாம்பிகை சமேத    அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புத்திரன் கோட்டை,செய்யூர் வட்டம்,காஞ்சிபுரம் மாவட்டம்.(வழி:மதுராந்தகத்தில் இருந்து 25 கி மீ தொலைவில் இருக்கின்றது;மதுராந்தகம் மற்றும் சூணாம்பேட்டையில் இருந்து புத்திரன் கோட்டைக்கு பேருந்து வசதி இருக்கின்றது;புத்திரன் கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது)

37.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாலவேடு,வந்தவாசி வட்டம்,திரு அண்ணாமலை மாவட்டம்.

38.அருள்மிகு அஞ்சனாட்சி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சோமூர்,கரூர் மாவட்டம்(மிகவும் பாழடைந்திருக்கின்றது;வாருங்கள் புனர் நிர்மாணம் செய்வோம்=2018)

39.அருள்மிகு பாடகவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,திருச்சுனை.(வழி:மதுரை டூ திருச்சி சாலையில் 45 கி மீ பயணித்து கருங்காலக்குடி செல்ல வேண்டும்;அங்கிருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் 2 கி மீ பயணித்தால் கோவிலை அடையலாம்)

40.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நெமிலிச்சேரி,சென்னை(வழி:குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 2 கி மீ)

41.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மேலக்காட்டூர்,தஞ்சாவூர் மாவட்டம்;(திருப்பனந்தாளில் இருந்து 5 கி மீ)

42.அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர்,பூந்தோட்டம்.(மயிலாடுதுறை டூ பேரளம்)

43.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பொதட்டூர் பேட்டை,திருத்தணி அருகில்,சென்னை;

44.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாம்பவர் வடகரை;திருநெல்வேலி மாவட்டம்;

45.அருள்மிகு ஆவுடைநாயகி சமேத 1008 அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நஞ்சுண்டாபுரம்,தாராபுரம் தாலுகா;

46.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புரிசை.(செய்யாறு டூ வந்தவாசி சாலையில் அமைந்திருக்கின்றது)

47.அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழைய பாளையம்,துவரங்குறிச்சி அருகில்;(வேறு அருகு ஊர்கள்:செவல்பட்டி,மேலூர்)திருப்பணிக்கு காத்துக் கொண்டிருக்கின்றது;1.9.2018

48.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பரதூர்(முற்காலத்தில் பரத்வாஜ மகரிஷியின் ஆஸ்ரமம் இங்கே இருந்திருக்கின்றது)சேத்தியாத்தோப்பு;கடலூர் மாவட்டம்.(திருப்பணிக்கு காத்துக்கொண்டிருக்கின்றது 1.9.2018

49.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பென்னலூர்,ஸ்ரீபெரும்புதூர் தாலுகா.(2017 முதல் புனரமைப்பு ஆரம்பம்)

50.அருள்மிகு புவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,வன்னிவேடு,வாலாஜாபேட்டை;

51.அருள்மிகு  சிவகாமிசுந்தரி சமேத      அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பெருங்குடி.திருச்சி அருகில்

52.அருள்மிகு ப்ரத்யங்கரதேவி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பாதூர்,உளுந்தூர்ப்பேட்டை.

53.அருள்மிகு வடிவுடைநாயகி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மணப்பாறை(ஆண்டார்கோவில் பேருந்து நிறுத்தம் அருகில்),திருச்சி மாவட்டம்.

54.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சிறுமலை,திண்டுக்கல் மாவட்டம்.(வழி:திண்டுக்கல் டூ நத்தம் சாலை)

55.அருள்மிகு அங்கயற்கண்ணி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புதுப்பாளையம் கிராமம்,வெம்பாக்கம்,திரு அண்ணாமலை மாவட்டம்.

56.அருள்மிகு லோபமுத்ரா சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,திருப்பதி நகர்,வடசேரி,நாகர்கோவில்.

57.அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில்,பெருங்குடி டூ வயலூர் சாலை,மல்லையம்பட்டு,ஸ்ரீரங்கம் தாலுகா,திருச்சி மாவட்டம்.(கண் பார்வைக்கு உரிய பரிகார ஸ்தலம்)

58.அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்,அயத்தூர்,வேப்பம்பட்டு,திருவள்ளூர் மாவட்டம்.

59.அருள்மிகு அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோவில்,ஆற்காடு சாலை,வளசரவாக்கம்,சென்னை-87.

60.அருள்மிகு அகத்தியர் கோவில்,ஓரத்தூர்,மாடம்பாக்கம்,நீலாமங்கலம்,கூடுவாஞ்சேரி,காஞ்சிபுரம் மாவட்டம்-603202

61.அருள்மிகு பெரிய நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,நெய்வாசல் கிராமம்,கீழச்செவல்பட்டி அருகே,திருமயம் புதுக்கோட்டை மாவட்டம்;

62.அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆலயம்,கும்பமுனி மங்கலம்,பொன்னேரி.(சென்னைக்கு அருகில்)

63.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,மேலையூர்,பூம்புகார் அருகில்(மயிலாடுதுறை டூ பூம்புகார் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 19 வது கி மீ) மேலையூரில் சீனிவாசா மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறம் காவிரிக் கரையோரம் அமைந்திருக்கின்றது;

64.அருள்மிகு வண்டார்க்குழலி (ஸ்ரீபிரம்மராம்பிகை) சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையங்குடி,ஆலத்தம்பாடி அருகில்,திருவாரூர்.

65.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் ஆலயம்,செம்மங்குடி(கும்பகோணம்  குடவாசல் அருகில்)

66.அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்,கீழ்த்தானம்(பொன்னமராவதி - காரையூர் அருகில்)

67.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், அனகாபுத்தூர் ,சென்னை.

68.அருள்மிகு யோகாம்பாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,குளவாய்ப்பட்டி(புதுக்கோட்டை டூ அறந்தாங்கி)=புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலைவிடவும் மிகவும் பழமையான ஆலயம்;யோகா ஆசான்கள் அடிக்கடி வந்து செல்ல வேண்டிய ஆலயம் இது;

69.அருள்மிகு அங்கம்மாள் உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சித்தாலப்பாக்கம்,தாம்பரம் வட்டம்,காஞ்சிபுரம் மாவட்டம்.( புனர் நிர்மாணப்பணிகளுக்கு அன்பளிப்பு வழங்கிட செல் எண்:9884995203) இன்று 11.4.2019 தேதிப்படி இவர்களுக்கு ரூ.21 லட்சம் தேவை; சிவத்தொண்டில் விருப்பம் உள்ளவர்கள்,அகத்தியர் தனது குருவாக எண்ணுபவர்கள் தொடர்பு கொண்டு புனர் நிர்மாணப் பணிகளில் இணைத்துக் கொள்ளலாம்

70.அருள்மிகு மனோன்மணி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மணமை(மகாபலிபுரத்தில் இருந்து புதுச்சேரி சாலையில்  8 கி மீ சென்றால் மணமை கிராமம் வரும்;அதன் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது)

71.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,ஷேசம்பாடி அருகில்,(கும்பகோணம் டூ  ஆலங்ககுடி)

108.அருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,வடுகன்பற்று,  அகத்தீஸ்வரம்,குமரி மாவட்டம்.

இந்தப்பட்டியலில் இல்லாமல் உங்கள் பகுதியில் அகத்தீஸ்வரர் கோயில் இருந்தால் மறக்காமல் தெரிவிக்கவும். இன்னும் 36 அகத்தீஸ்வரர் ஆலயங்களை தேடிக்கொண்டிருக்கிறோம்.

தமிழனாகப் பிறந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தன் வாழ்நாள் முழுவதும், தினமும் பின்வரும் மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் ஒருமுறையும் மதியம் 12 மணி அளவில் ஒருமுறையும் இரவில் தூங்க ஆரம்பிக்கும் போது ஒருமுறையும் பின்வரும் மந்திரத்தை கண்டிப்பாக ஜெபிக்க வேண்டும். அப்படி  ஜெபித்து வந்தால் மட்டுமே நமக்கு முக்தி கிடைக்கும்.

 ஓம் அகத்தீசாய நமஹ

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

வீரபத்திரா் பற்றிய நூறுகோயில்கள் தகவல்கள்


வீரபத்திரா் பற்றிய நூறுகோயில்கள் தகவல்கள்

 1. வீரபத்திரர் என்றால் வீரத்தை பத்திரமாக தருபவர் என்று பொருள்.

2. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்ட மக்களின் கலாச்சாரம், மக்களின் வாழ்க்கை முறைகளை அடிப்படையாகக் கொண்டு வீரபத்திரரின்

வழிபாட்டு முறைகளும் பலவிதமாக உள்ளன.

3. ஆதித் தமிழர்கள், தங்கள் கிராமங்களில் அறம் நிலவ வேண்டும் என்ற ஒரே தத்துவத்தின் அடிப்படையில் வீபத்திரர் கோவில்களை

ஊர் மத்தியில் கட்டினார்கள்.

4. தமிழ்நாட்டில் சில கோவில்களில் மட்டுமே வீரபத்திரர் மூலவராக உள்ளார். பல கோவில்களில் திருச்சுற்றுத் தெய்வமாகவும்,

எல்லைத் தெய்வமாகவும் இருக்கிறார். பெரும்பாலான கிராமங்களில் காவல் தெய்வம் வீரபத் திரர்தான்.

5. வீரபத்திரருக்கு எல்லாரும் பூஜை செய்துவிட முடியாது. அதற்கு ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதிக்கு நிர்தேதோ தாரா யந்திர பூஜை

என்று பெயர்.

6. வீரபத்திரருக்கு நடத்தப்படும் பூஜைகளில் வாய்க்கட்டுப்பூஜை தனித்துவம் கொண்டது. மம்சாபுரம் ஆகாச கருப்பண்ணசாமி கோவிலில்

ஸ்ரீ வீரபத்திரருக்கு வாய்க்காட்டுப் பூஜையே செய்யப்படுகிறது.

7. திருப்பெருந்துறை வீரபத்திரர் ஆலயத்திலும் சேலம் குகை நரசிங்கபுரம் கோவிலிலும் தினமும் 6 கால பூஜைகள் நடத்தப்படுகிறது.

8. மதுரை வீரபத்திரசாமி கோவிலில் உள்ள வீரபத்திரருக்கு கற்பூரம் ஏற்றி வழிபடுவதில்லை. நெய்விளக்கு தீபம் மட்டுமே ஏற்றி

வழிபடுகின்றனர்.

9. வீரபத்திரருக்கு மூன்று கிளை உள்ள விளக்கை ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது.

10. வீரபத்திரரை வழிபடும் போது பஞ்ச வாத்தியங்கள் இசைக்கப்பட்டால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைவார். குறிப்பாக பஞ்ச

வாத்தியங்களில் ஒன்றான உடுக்கை ஒலி ஒசை ஸ்ரீவீரபத்திரருக்கு மிகவும் பிடிக்கும்.

11. நைவேத்தியங்களில் ஸ்ரீவிரபத்திரருக்கு நெய் கலந்து நன்கு பிசைந்த சோறு தான் மிகவும் பிடிக்கும். இந்த நைவேத்தியத்தை

வெள்ளிக் கின்னத்தில் மட்டுமே வைத்து படைக்க வேண்டும்.

12. மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் உள்ள ஸ்ரீவீரபத்திரருக்கு பானகம் நைவேத்தியம் படைத்து வழிபட்டால்,

நினைத்தது நடக்கும்.

13. சிவகங்கை காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீஅக்னி வீரபத்திரர் கோவிலில் தினமும் நவதானியங்களை சமைத்து

நைவேத்தியம் செய்கின்றனர்.

14. பெரும்பாலான வீரபத்திரர் கோவில்களில் உயிர் பலி கொடுக்கப்படும் போது வீரபத்திரருடைய முகத்தை துணியிட்டு மூடி

விடுவார்கள்.

15. பூவந்திக்கிராமம் மந்தை கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள ஸ்ரீவீரபத்திரருக்கு மாதம் ஒருதடவை உயிர் பலி கொடுத்து

அசைவப்படைப்புப் போட்டு பூஜை செய்கிறார்கள்.

16. மம்சாவரம் ஆகாச கருப்பண்ண சுவாமி கோவிலில் வீரபத்திரரை நினைத்து தேங்காய் உடைப்பது இல்லை.

17. திருக்கழுக்குன்றம் ஸ்ரீவேதபுரீசுவரர் கோவிலில் உள்ள வீரபத்திரருக்கு நொச்சி, விளா, வில்வம் ஆகிய மூன்று இலைகளைக்

கொண்டு அர்ச் சனை செய்வது வழக்கத்தில் உள்ளது.

18. சிவபெருமானின் கருணையை வியந்து போற்றும் துதிகளுக்கு சமகம் என்று பெயர். மதுரை - இம்மையில் நன்மை தருவார்

கோவிலில் உள்ள ஸ்ரீவீரபத்திரர் முன்பு சமகம் படிக்கும் வழக்கம் உள்ளது.

19. திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோவிலில் உள்ள வீரபத்திரர் முன்பு சிவனுக்குரிய 108 போற்றிகளை கூறி வழிபாடு

செய்கின்றனர்.

20. நாகையில் உள்ள வீரபத்திரர் கோவிலில் ஞாயிறு தோறும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.

21. மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் உள்ள வீரப த்திரரை செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டால், பங்காளிச்

சண்டைகள் தீரும் என்பது ஐதீகம்.

22. மதுரை அவனியாபுரத்தில் உள்ள குருநாதசுவாமி கோவிலில் இருக்கும் ஸ்ரீவீரபத்திரருக்கு வெள்ளிக்கிழமை மட்டுமே சூடம் ஏற்றி

வழிபடுகிறார்கள்.

23. வீரபத்திரரை ராகு கால நேரத்தில் வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

24. ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரை நேரத்திலும், செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரை நேரத்திலும் வீரபத்திரரை வழிபடுவது

சிறப்பானதாக கருதப்படுகிறது.

25. திருபுவனம் ஸ்ரீவீரபத்திரசாமி கோவிலில் பவுர்ணமி வழிபாடு மிகவும் சிறப்பாக நடத்தப்படுகிறது.

 வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்க விரும்புபவர்கள் அமாவாசை நாட்களில் வீரபத்திரரை வழிபட்டு வந்தால் உரிய பலன்கள்

கிடைக்கும்.

27. சென்னை திருவொற்றியூரில் உள்ள அகத்தீசுவரர் கோவிலில் உள்ள வீரபத்திரருக்கு  ஒவ்வொரு அமாவாசைக்கும் வெற்றிலை

பட்டை மாலை சார்த்தி வழிபாடுகள் செய்கிறார்கள்.

28. பூரம், கிருத்திகை நட்சத்திர நாட்களில் வீரபத்திரரை வணங்கினால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

29. தக்கோலம் வீரபத்திரசுவாமி கோவிலில் கிருத்திகை நட்சத்திர நாளில் மிக, மிக சிறப்பாக பூஜைகள் நடத்தப்படுகிறது.

30. அக்னி நட்சத்திர நாட்களில் வீரபத்திரரை மஞ்சள்காப்பு செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.

31. சித்திரை மாதம் வரும் செவ்வாய்க்கிழமை 13 கிழமைகளில் வீரபத்திரருக்கு விரதம் இருந்து வழிபடலாம்.

32. வீரபத்திரருக்கு செய்யப்படும் பூஜைகளில் சூலாட்டுப் பூஜையான ஆட்டை வெட்டும் பூஜை மிகவும் உணர்வுப்பூர்வமாக நடைபெறும்.

33. வீரபத்திரர் வேட்டைக்கு செல்லும் போது கட்டுச்சோறு கட்டி எடுத்துச் செல்வார். அவர் திரும்பி வந்ததும் மிதமுள்ள கட்டுச்சோறை

சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

34. மாடக்குளம் வீரபத்திரர் கோவிலில் புரட்டாசி மாதம் ஊர் மக்கள் திரண்டு வந்து பொங்கல் வைத்து வழிபடுவார்கள். இதை ஊர்

பொங்கல் என்று அழைக்கிறார்கள்.

35. நவராத்திரி நாட்களில் அம்பிகையை வழிபடும் போதும் வீரபத்திரருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது பல ஆலயங்களில்

நடைமுறையில் உள்ளது.

36. சிவகங்கை காமாட்சியம்மன் கோவில் தெருவில் உள்ள வீரபத்திரரை குலதெய்வமாக கொண்டவர்கள், எந்த ஒரு செயல் செய்வதாக

இருந்தாலும் வீரபத்திரரிடம் உத்தரவு கேட்டு விட்டே செய்வார்கள்.

37. கள்ளிக்குடி வீரபத்திரருக்கு மார்கழி மாதம் வரும் ஆருத்ரா தரிசனம் தினத்தன்று களி செய்து வழிபாடு நடத்துவது வழக்கமாக

உள்ளது.

38. சேலம் தாரமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் தினத்தன்று பக்தர்களில் ஒருவர் வீரபத்திரர் போல வேடம்

அணிந்து வருவார். தீபாராதனைக்கு பிறகு கடவுளுக்கு அணிவிக்கப்பட்ட ஆடை, வீரபத்திரர் வேடம் போட்டவருக்கு அணிவிக்கப்படும்.

இது தமிழ்நாட்டில் தாரமங்கலம் கோவிலில் மட்டுமே நடைபெறுகிறது.

39. வீரபத்திரர் மாசி மாதம் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு கிருஷ்ணபட்சம், பிரதமை திதி, பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தார்.

இதை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அந்த நேரத்தில் அகோர பூஜை நடத்துவதை மதுரை வீரபத்திரர்

கோவிலில் வழக்கமாக வைத்துள்ளனர்.

40. பேரையூர் ஸ்ரீவீரபத்திரர் கோவில் மாசி மாதம் அமாவாசை தினத்தன்று இரவு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும். இந்த பூஜைக்கு

'மாசிப்பச்சிடி என்று பெயர்.

41. முருகனுக்குத்தான காவடி எடுப்பார்கள் என்று நினைக்காதீர்கள். திருக்குளம்பூர்  கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வீரபத்திரருக்கு

மகா சிவராத்திரி தினத்தன்று பக்தர்கள் காவடி சுமந்து வந்து வழிபாடு செய்கிறார்கள்.

42. வெங்கம்பட்டியில் உள்ள வீரபத்திரர் கோவிலில் பங்குனி உத்திரம் தினத்தன்று தீ மிதி விழா நடத்தப்படுகிறது.

43. திருச்சி சின்ன கம்மாளத் தெருவில் உள்ள வீரபத்திரசுவாமி கோவிலில் தெலுங்கு புத்தாண்டு தினத்தன்று சிறப்பு பூஜைகள்

செய்யப்படுகிறது.

44. ஒரு சிவராத்திரி தினத்தன்று தான் தட்சன் யாகத்தை வீரபத்திரர் அழித்தார். எனவே சிவராத்திரியன்று வீரபத்திரரை வணங்கினால்

நல்லது என்று கருதப்படுகிறது.

45. தென் மாவட்டங்களில் மகா சிவராத்திரி தினத்தன்று வீரபத்திரருக்கு பயறு அவித்து வைத்து வழிபாடு செய்வது வழக்கத்தில்

உள்ளது.

46. வில்வம், தாமரைப்பூ, சாதிப்பூ மற்றும் நந்தியா வட்டம் இந்த 4 வகை மலர்களும் வீரபத்திரருக்கு மிகவும் பிடித்தமானவை.

47. மதுரை வடகரையில் உள்ள வீரபத்திரருக்கு சிவராத்திரி தினத்தன்று இரவு 21 இலைகள் போட்டு பொங்கல் வைத்து வழிபாடு

செய்வார்கள்.

48. சேவலை அறுத்து, சேவலின் ஈரல், நெஞ்சு, குடல் போன்ற பகுதிகளை தீயில் வாட்டி சுட்டு, அவற்றை வீரபத்திரருக்கு சில ஊர்களில்

படையலாக வைப்பார்கள். இந்த வழிபாட்டுக்கு சூட்டையாங் கொடுத்தல் என்று பெயர்.

49. பொங்கல் சமைத்து அதனுள் கோழியை அறுத்து ரத்தம் ஊற்றி பிசைந்து, அதை 3 உருண்டைகளாகப் பிடித்து நள்ளிரவு 1 மணிக்கு

ஆகாயத்தை நோக்கி வீசுவார்கள். அதை வீரபத்திரர் பெற்று கொள்வதால் ரத்த பொங்கல் கீழே விழாது என்கிறார்கள். இந்த பூஜையை

ஆகாய பூஜை என்று அழைக்கிறார்கள்.

50. மசோபுரம் ஆகாச கருப்பண்ணசாமி கோவிலில் சிவராத்திரி தினத்தன்று நடக்கும் பூஜையில் 40 ஊர்களைச் சேர்ந்தவர்கள் கலந்து

கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
[ மகா சிவராத்திரி தினத்தன்று தென் மாவட்டங்களில் அம்மன் கோவில்களில் நடைபெறும் உற்சவ ஊர்வலத்தில் மூங்கில் பிரம்பால் 8

கை செய்து, வீரபத்திராக வேடம் அணிந்து ஒருவர் முன்செல்வார். இதனை வீரபத்திரப் படலம் என்பார்கள்.

52. காஞ்சி பெரியவர் ஸ்ரீசந்திர சேகரேந்திர சுவாமிகள் தம்தந்தை வழி குலதெய்வமான திருவிடைமருதூர் வீரபத்திரரை தினமும்

வழிபாடு செய்து வந்தார்.

53. வீரபத்திரரை குலதெய்வ மாக கொண்டவர்கள் தங்கள் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'வீ'' என்ற எழுத்தில் தொடங்கும்

பெயர்களையே சூட்டுகிறார்கள்.

54. கள்ளிக்குடியில் உள்ள ஸ்ரீவீர பத்திரர், திருமண இடையூறுகளை நீக்கி அருள்பவராக கருதப் படுகிறார்.

55. வீரபத்திரரை குலதெய்வ மாக கொண்டவர்கள், திருமணம், நெல் அறுவடை, நெல் விதைப்பு என்று எதை செய்தாலும் வீரபத்திரரை

வழிபட்டே பிறகு தொடங்குவார்கள்.

56. வீரபத்திரரை நினைத்து கும்பிட்டு வழங்கப்படும் திருநீறுக்கு பேய், பிசாசு, பில்லி சூனியம் போன்ற வற்றை விரட்டும் ஆற்றல்

இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

57. வீரபத்திரர் வழிபாட்டின் போது பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைக்கும் ஒரு வகை வழிபாடு உள் ளது. இதற்கு தமரன் என்று

பெயர்.

58. திருவாரூர் நேதாஜி சாலையில் உள்ள வீரபத்திரரை வழிபடும் வீர சைவ லிங்காயத்து சமுதாயத்தினர் தங்கள் உறவு முறையில்

யார் இறந்தாலும், இந்த ஆலயத்துக்கு வந்து 16-ம் நாள் காரியத்தை செய்கிறார்கள்.

59. ஈரோடு கூனம்பட்டி கிராம மக்கள் வீரபத்திரரை தங்கள் வீட்டில் வைத்து வழிபட விரும்பினால் சிலையை வீட்டுக்கு எடுத்து

செல்வார்கள். சாமி கும்பிட்டு முடித்ததும் மீண்டும் வீரபத்திரர் சிலையை கோவிலில் ஒப்படைத்து விடுவார்கள்.

60. வீரபத்திரரை வழிபடும் போது மிக, மிக தூய்மை அவசியம். எனவே தான் பெரும்பாலானவர்கள் வீரபத்திரர் படத்தை கூட வீட்டில்

வைத்து வழிபடுவது இல்லை. அந்த அளவுக்கு வீரபத்திரர் வழிபாட்டில் தூய்மை முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

61. வீரபத்திரருக்கு வீரப்பர், வீரன்னர், வீர், முட்டு வீரன்னர், உத்தான வீரபத்திரர், அக்னி விரபத்திரர், அகோர வீரபத்திரர், தட்சாரி,

வீரேசுவரர், வீரசூடாமணி, வீரகர், கிரதத்வம்சி, தட்சயஞ்ஞன், மல்லனார், இயக்கடிவீரர், வீரேசுவரன், உறங்காவல்லன், உறங்காபுளி

கருப்பன் என்று பல பெயர்கள் உள்ளன.

62. திருவானைக்காவலில் உள்ள வீரபத்திரர், சுமார் 2500 வருட புராதன சிறப்பு கொண்டது.

63. காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ளவர் கள் வீரபத்திரரை பிரதான தெய்வமாக வழிபடுகிறார்கள்.

64. மகாபரதம், ரமாயாணம் ஆகியவை இரு காவியங்களிலும் வீரபத்திரர் பற்றிய குறிப்புகள் உள்ளன. யஜூர் வேதத்திலும் வீரபத்திரர்

குறிப்பிடப்பட்டுள்ளார்.

65. வீரபத்திரர் பற்றி தெரிந்து கொள்ள சென்னையில் கடந்த 2002-ம் ஆண்டு ஒரு கருத்தரங்கு நடத்தப்பட்டது. அதில் வீரபத்திரர் பற்றி

26 தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது.

66. வீரபத்திரர் மேரு மலையில் வீற்றிருப்பவர் என்றும், பூதங்களையும், இறந்தோரின் ஆவிகளையும் அடக்கியவராகவும் ஒரு

புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

67. தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெரும்பாலான ஆலயங்களில் சப்தமாதர்களுடன் சேர்ந்து வீரபத்திரர் காணப்படுகிறார்.

68. தஞ்சை பெரிய கோவிலில் புடைப்புச் சிற்பமாக வீரபத்திரர் வரலாறு உள்ளது.

69. தமிழ்நாட்டில் 14ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு வரையிலான காலக் கட்டத்தில் தான் வீரபத்திரருக்கு அதிகப்படியான

கோவில்கள் கட்டப்பட்டன.

70. தமிழ்நாட்டில் நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தான் வீரபத்திரர் வழிபாடு மிகவும் போற்றுதலுக்கு உரியதாக இருந்தது.

71. மதுரை, கொடுங்குன்றம், குடுமியான் மலை, தஞ்சை, திருக்கோவிலும், சிதம்பரம், காஞ்சீபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணாபுரம்,

தென்காசி, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, தேவிகாபுரம், வேலூர், கோவை முடிகொண்டம், தாரமங்கலம், பேரூர், தர்மபுரி, தாடிக்கொம்பு,

பனையபுரம், தீப்பற்றியலூர், திருவள்ளூர் அருகில் உள்ள திருப்பாச்சூர் ஆகிய இடங்களில் மிகப் பிரமாண்டமான வீரபத்திரர் சிலைகள்

உள்ளன.

72. சிவன் தன் உடலில் இருந்து வீரபத்திரரை தோற்றுவித்தார் என்று காஞ்சிபுராணம் கூறுகிறது. ஆனால் சிவனின் நெற்றிக்கண்ணில்

இருந்து வீரபத்திரர் தோன்றினார் என்று கந்தபுராணம் கூறுகிறது.

73. வீரபத்திரர், தட்சனை அழிக்க போர்க்கோலம் கொண்டபோது, தும்பைப் பூவை அணிந்து சென்றார். எனவே தான் வீரபத்திரரை

வழிபடுவர்கள் தும்பைப்பூ மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.

74. திருவெண்காட்டில் உறைந்துள்ள அகோர வீரபத்திரரை வழிபட்டால் பொறாமை குணம் மறையும்.

75. வீரபத்திரர் முருகனுக்கு மூத்தவர் ஆவார். பல திருவிளையாடல்களில் முருகனுக்கு முன்னோடியாக வீரபத்திரரே திகழ்கிறார்.
76. வீரபத்திரருக்கு விரதம் இருப்பவர்கள், அறுகீரை, மொச்சைப்பயறு, தட்டைப்பயறு, அகத்திக்கீரை, மீன், கருவாடு, முட்டை மற்றும்

இறைச்சி வகைகளை தவிர்த்து கடுமையான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும்.

77. வீரபத்திரர், தட்சயாகத்தை நடத்திய போது, அங்காள பரமேஸ்வரி அவருக்கு உதவியாக நின்றார். இதனால் அவளுக்கு வீரமாகாளி

என்ற பெயர் ஏற்பட்டது. வீரமாகாளிக்கு பர்மா, மலேசியா, சிங்கப்பூரிலும் ஏராளமான கோவில்கள் உள்ளன.

78. கும்பகோணத்தில் உள்ள புகழ் பெற்ற மகாமகம் குளத்துக்கு வீரபத்திரர்தான் காவல் தெய்வகமாக உள்ளார்.

79. பொதுவாக வீரபத்திரர் கோவில் அருகில் ஏதாவது ஒரு பெயரில் காளி கோவில் இருக்கும்.
80. மராட்டியம் மாநிலத்தில் உள்ள ஆதி இன மக்கள் வீர் எனப்படும் வீரபத்திரரை வழிபட்டதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

81. வீரபத்திரம் என்ற சொல்லுக்கு அசுவமேத குதிரை, பாதுகாப்பு தருதல், யானைகளின் வரிசை, குதிரைகளின் வரிசை என்றும்

அர்த்தங்கள் உள்ளது.

82. வீரபத்திரர் மிகவும் உத்திரமானவர் என்பதை காட்டவே, அவர் தலையில் அக்கினி மகுடம் அமைத்திருக்கின்றனர்.

83. தட்ச யாகத்தை அழித்த வீரபத்திரர் கொடூரத் தெய்வமாக கருதப்படுவதால் ஆகமக் கோவில்களில் பெரும்பாலும் அவருக்கு தனி

சன்னதி ஏற்படுத்தப்படவில்லை.

84. சிவனின் அம்சமாக கருதப்பட்டாலும் பெரிய கோவில்களில் வீரபத்திரருக்கு என்று தனி விழாக்கள், கொண்டாட்டங்கள் எதுவும்

ஏற்படுத்தப்படவில்லை.

85. தமிழ்நாட்டில் வீரபத்திரர் சுமார் 100 கோவில்களில் மூலவராகவும், தனி சன்னதியுடனும் இருப்பதாக லலிதா சுந்தரம் என்பவர் தனது

வீரபத்திரர் அருள் தலங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

86. ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமுடன் போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், வீரபத்திரரை உபாசனைத் தெய்வமாக

கொண்டிருந்தார். அவரது தலை குனியாத வீரத்துக்கு வீரபத்திரர் வழிபாடே காரணமாக கூறப்படுகிறது.

87. திருப்பறியலூர் தலத்தில் வீரபத்திரரை மனம் உருகி வழிபட்டால் புதிய தொழில் வாய்ப்புகள், தொழில் விருத்தி, பதவி உயர்வு

ஆகியவை கிடைக்கும்.

88. வடநாட்டில் இருந்து வீரசைவர்கள் தென் இந்தியாவுக்கு அதிகமாக வந்த பிறகே தமிழ்நாட்டில் வீரபத்திரருக்கு கோவில்கள்

கட்டப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

89. தட்சனை சம்காரம் செய்த போது உயிரிழந்த மகரிஷிகள் பேய்களாக மாறி அலைந்ததாகவும், அனுமந்தபுரத்தில் சாந்தமாக

எழந்தருளிய வீரபத்திரர் சிவபூஜை செய்து அவர்களுக்கு விபூதி கொடுத்ததாகவும் அதன் பிறகே மகரிஷிகள் பேய் உருவில் இருந்து

மீண்டதாக வரலாறு உள்ளது.

90. அனுமந்தபுரம் வீரபத்திரர் காலையில் குழந்தையாக வும், மதியம் வாலிபனாகவும், மாலையில் முதியவராகவும் காட்சி அளிப்பதாக

சொல்கிறார்கள்.

91.ஊழிக்காலத்தில் உலகத்தை இயக்கும் பொறுப்பும், கடமையும் வீரபத்திரடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

92. பெரும்பாலான கோவில்களில் வீரபத்திரர் வடதிசை நோக்கியே உள்ளார். வடதிசை என்பது வெற்றியையும், செல்வத்தையும்

தருவதாகும். எனவே வீரபத்திரரை வழிபட்டால் வெற்றியும் செல்வமும் கிடைக்கும்.

93. அனுமந்தபுரம் வீரபத்திரர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும், அவர் 8 திசைகளும் அதிர உலாவுவதாக அந்த ஊர் மக்கள் சொல்கிறார்கள்.

94. வீரபத்திரருக்கு 'அனைவருக்கும் தலைவன்' என்றும் ஒரு பெயர் உண்டு.

95. வீரபத்திரர் தன் பக்தர்கள் கனவில் வந்து உத்தரவுகளை சொல்லி தனக்கு வேண்டியதை பெற்றுக் கொள்ளும் சக்தி படைத்தவர். பல

ஊர்களில் இந்த அற்புதம் நடந்துள்ளது.

96. நிலம் வாங்குவதற்கும், வீடு கட்டுவதற்கும் தொடர்ந்து ஏதேனும் தடை ஏற்பட்டால் வீரபத்திரரை உரிய முறையில் வழிபட்டால்

போதும் தடைகள் விலகி ஓடிவிடும்.

97. வீரபத்திரரைப் பற்றிய ஆதி முதல் அந்தம் வரை யான முழுமையான தகவல்களைக் கொண்டு ஒரு கலைக் களஞ்சியத்தைத்

தயாரித்து வெளியிட்டுள்ளது திருவாவடுதுறை ஆதீனம்.

98. சப்தமாதர்களைச் சிவாலயங்களில் பிரதிஷ்டை செய்யும்போது இவர்களின் காவலனாக வீரபத்திரர் பெருமானை முதலில்

வைப்பார்கள்.

99. வீரபத்திரரால் அழிக்கப்பட்டது தட்சன் என்பது பலருக்கும் தெரியும். மேலும், வீரமார்த்தாண்டன், சத்ததந்து, வச்சிராங்கதன்

முதலியோர் அவரால் அழிக்கப்பட்டவர்கள் என்பது களஞ்சியத்தில் கிடைக்கும் கூடுதல் செய்தியாகும்.

100. வீரபத்திரரை முழுமையாக அறிமுகப்படுத்தும் நூல் மகா வீரபத்திரர் கலைக்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.

அட்சயதிரிதியை அன்று என்னவெல்லாம் செய்யலாம்!?


அட்சயதிரிதியை அன்று என்னவெல்லாம் செய்யலாம்!?

அட்சய திருதியை 2020

அட்சய திருதியை   என்பது இந்துகள்  மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும்.  சித்திரை   மாதத்தின் முதல் அம்மாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை.
"அட்சயா" எனும் சொல் சமசுகிருதத்தில் , என்றும் குறையாது என்று பொருள்.   அட்சய திருதியை அன்று நற்பயன்களை தரக்கூடிய நாளாக நம்பப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதி உத்தமமான பலன்களை தருவதாக கூறப்படுகிறது. அதிலும், சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை தினம் மிகவும் உத்தமமான நாளாகவும் வாழ்வில் வளங்கள் குவிக்கும் நாளாகவும் சிறப்பித்து கூறப்படுகிறது. இதுதான் ‘அட்சய திருதியை’.

அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு காரியங்களும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை. மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.

அட்சய திருதியை 2020

அட்சய திருதியை 2020 தேதி:
ஏப்ரல் 26, 2020
அட்சய திருதியை பூஜை நேரம்:
காலை 5:45 - பகல் 12:19

அட்சய திருதியை செய்ய வேண்டியது:

அட்சய திருதியை அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிட வேண்டும். அதன்மேல் வாழையிலை ஒன்றினை வைத்து இலையின் நடுவே கொஞ்சம் பச்சரியைப் பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். கலசத்தின் அருகே ஒரு படியில் நெல் நிறைத்து வைக்க வேண்டும். அதன் பின் கலசத்திற்குப் பொட்டு, பூ வைத்து லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதற்கும் பொட்டு, பூ வைத்து குத்துவிளக்கை ஏற்றி வைக்க வேண்டும். அத்துடன் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வைக்க வேண்டும். அந்தப் பொருள் விலை உயர்ந்த பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இப்படி செய்வதால் அஷ்டலட்சுமி உங்கள் இல்லம் தேடி வருவாள் என்பது நம்பிக்கை.


அட்சயதிரிதியை அன்று என்னவெல்லாம் செய்யலாம்!?

'அட்சய’ என்றால் அழியாது பெருகக் கூடியது எனப் பொருள்.ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திரிதியை நாளை , 'அட்சயதிரிதியை’ திருநாளாகக் கொண்டாடுகின்றோம்.

இன்று தங்கம், வெள்ளி போன்ற பொன் பொருள் ஆபரணங்கள் வாங்கினால், செல்வம் பெருகும் என்று மக்கள் கருதுகின்றனர். ஆனால், அட்சய திரிதியை அன்று  தர்ம சாஸ்திரங்கள் கூறும் வழியைப் பின்பற்றினால் நாம் கனவிலும் நினைத்துப் பார்க்காத பல நல்ல பலன்களை  அடையலாம். 'அட்சய திரிதியை’  அன்று நாம் என்ன செய்யவேண்டும் எவ்வாறு இறைவனை வழிபட வேண்டும் என்று கூறுகிறார் 'சொல்லின் செல்வன்' பி.என்.பரசுராமன்.

அட்சய திரிதியை அன்று நாம் செய்யும் நன்மைகள் பன்மடங்காக பெருகி, அழியாத பலன்களைப் பெற்றுத் தரும். அட்சய திரிதியை அன்று நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியங்கள். கோயிலுக்குச் செல்லுதல், புனித நீராடுதல், பித்ரு காரியம், இறைவனை

வழிபடுதல், நாம ஸ்மரணை மற்றும் எளியவர்களுக்கு இயன்ற அளவுக்கு தானம் செய்தல்.

அட்சயதிரிதியை சிறப்புகள் :

பிரம்மன் தனது சிருஷ்டித் தொழிலைத் தொடங்கியது இந்த நாளில்தான்.

பிரளயம் முடிந்து, வெள்ளத்தில் மிதந்து வந்த கும்பத்தை உடைத்து, சிருஷ்டி மீண்டும் துவங்க சிவ பெருமான் அருளிய தினம்.

திருமகள் திருமாலின் இதயத்தில் குடிகொண்ட தினம். அதனால்தான், இன்றைய தினத்தில் லட்சுமி தேவியை மட்டும் வணங்காமல் பெருமாளையும் சேர்த்து வணங்க வேண்டும் என்பர்.

வனவாசம் சென்ற பஞ்ச பாண்டவர்கள் தவம் இருந்து சூரிய பகவானிடம் அட்சய பாத்திரம் பெற்ற தினம்.

பெருமாளுக்கே கடன் கொடுத்த குபேரன், லட்சுமி தேவியை வணங்கி, செல்வத்தைப் பெற்ற தினம். இன்றைய தினத்தில் லட்சுமி பூஜை, குபேர பூஜையை செய்ய ஐஸ்வர்யம் பெருகும். இயலாதவர்கள், "ஓம் ஐஸ்வரேஸ்வராய நம:" என்று கூறினாலே போதும் என்கிறார் திருமூலர்.

பாற்கடலைக் கடைந்தபோது ரத்தினங்கள்,  ஐராவதம், கல்பதரு, காமதேனு, சந்திரன், மகாலட்சுமி ஆகியோர் தோன்றினர். இப்படி அலைமகள் அவதரித்த தினம் அட்சயதிரிதியை.

பிட்சாடனரான ஈஸ்வரன், ஸ்ரீஅன்னபூரணியிடம் பிட்சை பெற்றது இந்த நாளில்தான்.

கௌரவ சபையில் திரௌபதியின் மானம் காக்க ஸ்ரீகிருஷ்ணர் துகில் தந்து அருளியது போன்ற புராணச் சம்பவங்கள் நிகழ்ந்ததும் இந்தத் தினத்தில்தான்.

பரசுராமர் அவதரித்ததும் அட்சய திரிதியையில்தான். இந்த நாளில் பரசுராமர் வழிபாடு நன்மை தரும்.

அட்சய திரிதியை அன்று நாம் என்ன வாங்கலாம் ?

அன்றைய தினத்தில் லட்சுமி தேவி வசிக்கும் பொருட்களை வாங்கலாம். அது தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல. பச்சரிசி, வெல்லம், உப்பு ஆகியவற்றையும் நாம் வாங்கலாம். ஏனென்றால் இயற்கை தோன்றும்போது, முதலில் வந்தவை இவைதான்.

என்னென்ன பொருட்களைத் தானம் தரலாம்?

ஒரே இடத்தில் செல்வம் குவிந்திருப்பதை இறைவன் விரும்புவதில்லை. இருக்கப்பட்டவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுத்து இல்லாமை நீங்கப் படைக்கப்பட்ட நாள். ஒரு கையளவு நெல் பல மூட்டை அரிசியை உருவாக்க முடியும் . அதே போல நாம் கொடுக்கும் சிறு தானமும் பல மடங்காகத் திரும்ப வரும்.

வெப்பத்தைத் தணிக்கும் வகையில் உடுக்க உடை,  குடை, பானகம், நீர் மோர், விசிறி போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம்.

குறிப்பாகத் தண்ணீர் நிறைந்த குடம் கொடுத்தால் அழியாத செல்வம் பெறலாம்.

நோயால் அவதிப்படுபவர்களுக்கு மருத்துவ உதவியும், கிழிந்த ஆடை அணிந்தவர்களுக்கு நல்ல ஆடையையும் அளிக்கலாம்.

தயிர்சாதம் தானம் செய்தால், ஆயுள் பெருகும்.

இனிப்புப் பொருட்கள் தானம் தந்தால், திருமணத் தடை அகலும்.

அரிசி, கோதுமை முதலான உணவு தானியங்களை தானம் செய்தால், விபத்துகள்- அகால மரணம் போன்றவை சம்பவிக்காது.

அட்சய திரிதியை அன்று அன்னதானம் செய்வதால், இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிட்டும்; குடும்பத்தில் வறுமை நீங்கும்.
கால்நடைகளுக்குத் தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.

அட்சய திரிதியையும் பித்ருக்கள் காரியமும்...

இன்றைய நாளில் பித்ருக்கள் காரியம் மிகுந்த சிறப்பான ஒன்றாகும். தவிர, அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்த பின், பசுக்களுக்கு வாழைப் பழம் கொடுப்பது சிறப்பு. அட்சய திரிதியை நாளில் இறைவனுக்குப் படைத்து உண்ணும் பிரசாதம் மிகச் சிறந்ததாகும்.

கிராமத்தில் இருந்த வியாபாரி ஒருவன், அட்சய திரிதியை அன்று கங்கையில் நீராடி, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து, ஏழை மக்களுக்குத் தானியங்களை தானம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் அடுத்தப் பிறவியில் ராஜ யோகம் பெற்றார். அரசனான பிறகும் அட்சய திரிதியையில் முற்பிறவியில் செய்த புண்ணிய காரியங்களைச் செய்ததால், வைகுண்டம் அடைந்தார். எனவே அமாவாசை அன்று திதி கொடுக்காதவர்கள் கூட அன்றைய தினத்தில் தர்ப்பணம் செய்யலாம்.

அட்சய திருதியை நாளில்  செய்யக்கூடிய காரியங்கள்.

குழந்தைக்கு அன்னப் பிராசனம்

சங்கீதம், கல்வி, கலைகள் பயில்வது.

சீமந்தம், மாங்கல்யம் செய்ய, விவாகம்,  தொட்டிலில் குழந்தையை விட, கிரகப்பிரவேசம் செய்ய, காது குத்த உகந்த தினம்.

நிலங்களில் எரு இட, விதை விதைக்க, கதிர் அறுக்க, தானியத்தைக் களஞ்சியத்தில் சேர்க்க, தானியம் உபயோகிக்க, கால்நடைகள் வாங்க போன்ற விவசாயப் பணிகளில் ஈடுபடலாம்.

வாகனம் வாங்க, புதிய ஆடை அணிய, மருந்து உட்கொள்ள, பயணம் மேற்கொள்ளலாம்.

இந்தப் புண்ணிய நாளில் அழியாத செல்வமான பல புண்ணியங்களைச் சேகரியுங்கள். அதே நேரத்தில் அறிஞர்களையும் முன்னோர்களையும் மறந்துவிட வேண்டாம்.

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

அட்சய திருதியை 2020


அட்சய திருதியை 2020

அட்சய திருதியை   என்பது இந்துகள்  மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும்.  சித்திரை   மாதத்தின் முதல் அம்மாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை.
"அட்சயா" எனும் சொல் சமசுகிருதத்தில் , என்றும் குறையாது என்று பொருள்.   அட்சய திருதியை அன்று நற்பயன்களை தரக்கூடிய நாளாக நம்பப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதி உத்தமமான பலன்களை தருவதாக கூறப்படுகிறது. அதிலும், சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை தினம் மிகவும் உத்தமமான நாளாகவும் வாழ்வில் வளங்கள் குவிக்கும் நாளாகவும் சிறப்பித்து கூறப்படுகிறது. இதுதான் ‘அட்சய திருதியை’.

அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு காரியங்களும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை. மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.

அட்சய திருதியை 2020

அட்சய திருதியை 2020 தேதி:
ஏப்ரல் 26, 2020
அட்சய திருதியை பூஜை நேரம்:
காலை 5:45 - பகல் 12:19

அட்சய திருதியை செய்ய வேண்டியது:
அட்சய திருதியை அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிட வேண்டும். அதன்மேல் வாழையிலை ஒன்றினை வைத்து இலையின் நடுவே கொஞ்சம் பச்சரியைப் பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். கலசத்தின் அருகே ஒரு படியில் நெல் நிறைத்து வைக்க வேண்டும். அதன் பின் கலசத்திற்குப் பொட்டு, பூ வைத்து லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதற்கும் பொட்டு, பூ வைத்து குத்துவிளக்கை ஏற்றி வைக்க வேண்டும். அத்துடன் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வைக்க வேண்டும். அந்தப் பொருள் விலை உயர்ந்த பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இப்படி செய்வதால் அஷ்டலட்சுமி உங்கள் இல்லம் தேடி வருவாள் என்பது நம்பிக்கை.

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

அட்சய திருதியை பற்றி 60 தகவல்கள் | Akshaya Tritiya


அட்சய திருதியை பற்றி 60 தகவல்கள் | Akshaya Tritiya

#AKSHAYA_TRITIYA

அட்சய திருதியை பற்றி 60 தகவல்கள் மற்றும் சிறந்த நிகழ்வுகள் (Akshaya tritiya)

அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.

அட்சய திருதியை பற்றி 60 தகவல்கள்
1. அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது.

2. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.

3. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.

4. அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.

5. அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.

6. அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.

7. அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.

8. சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.

9. பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.

10. அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.

11. ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும்.

12. அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார்.

13. வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள்.

14. அரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.

15. ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும்.

16. வடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள்.

17. ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது.

18. பீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.

19. அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள்.

20. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.

21. அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

22. அட்சய திருதியை நாளில் தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

23. அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு `பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.

24. ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.

25. அரிதான வேலையை சந்திப்பதை `அலப்ய யோகம்‘ என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.

26. அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு `அட்சதை’ என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்ஞறும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு `அட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.

27. அட்சய திருதியை தினத்தை சமணர்கள் “அட்சய தீஜ்’’ என்றழைக்கிறார்கள்.

28. ரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.

29. அட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடைபிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார்.

30. மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.

31. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.

32. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை’ நாளில் செய்யப்படுகிறது.

33. மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.

34. கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

35. தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

36. அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

37. வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும்.

38. மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.

39. ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.

40. அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.

41. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது.

42. அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், “கனகதாரை’’ நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள்.

43. அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.

44. அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.

45. அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.

46. அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.

47. அட்சய திருதியை தினத்தன்று சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால் நமசிவாய மந்திரம் அன்று முதல் சொல்லத்தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதி-பரமேஸ்வரரின் அருள் கிடைக்கும்.

48. அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.

49. கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள்.

50. அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

51. அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.

52. அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை `தர்மகடம்‘ எனப்போற்றுவர்.

53. அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.

54. அட்சய திருதியை நாளில் `வசந்த் மாதவாய நம’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். முக்கியமான ஒன்று… தானம் செய்ய உகந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி சேமிப்பில் இறங்குவது சாஸ் திரத்துக்கு உடன் பாடில்லை.

55. அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.

56. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.

57. புதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும்.

58. ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.

59. ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.

60. மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

பல ஜென்மத்து பாவங்கள் தீர சித்தர்கள் சொன்ன ஒரு அபூர்வ சிறந்த பரிகாரம்!!!


பல ஜென்மத்து பாவங்கள் தீர சித்தர்கள் சொன்ன ஒரு அபூர்வ சிறந்த பரிகாரம்!!!

*மனிதன் அவஸ்தைக்கு முக்கிய காரணமே பித்ரு வழி பாவங்கள்தான்!*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த பாவம் மனிதனின் ஆத்மாவை வேதனைபடுத்தி பாவத்தை கழித்துக் கொள்ளும். துன்பம் எந்த வழியில் வேண்டுமானாலும் அரங்கேறும். அந்த துன்பத்தை உங்களால் பொறுக்க முடியவில்லை என்றால் பாவத்தின் வீரியத்தை குறைத்துக் கொள்ளவும், பித்ரு சாபத்தை நீக்கவும், மீன்களுக்கு உணவாக பொறி கொடுக்கவும், நாம் அளிக்கும் பொறியை மீன்கள் எத்தனை சாப்பிடுகிறதோ அத்தனை சாபங்கள் விலகும், என அறிந்து கொள்ளலாம். நாம் செய்த ஒரு பாவத்தை  ஆரம்பத்திலேயே போக்காத போது அந்த ஒரே பாவம் மட்டும் நம்மிடம் இருக்காது. ஒரு பாவம் விலக்காத போது அந்த பாவம் நம்முள் இருந்து தினம் தினம் ஒரு புது பாவத்தை செய்ய வைக்கும். இது நமக்கேதெரியாது  அதனால்தான் பாவிகள் கடைசி வரையுமே பாவிகளாக பலரும் இருக்கிறார்கள். இடைபட்ட வாழ்வில் ஒன்றோ, நூறோ தர்மத்தை செய்து விட்டு நான் எவ்வளவோ தர்மம் செய்கிறேன், என் கஷ்டம் மட்டும் போகமாட்டேங்குது என புலம்புவார்கள். இவர்கள் கஷ்டம் தீராததிற்கு மேற்கண்ட தினசரி பாவ கணக்கே காரணமாகும். எனவே நாம் செய்யும் தர்மம் அளவு அதிகரித்தால் தான் இந்த பித்ரு ஜென்ம பாவம் கழியும் எனவே இதை அறிந்த நம் முன்னோர்கள் ஆலயத்தில் குளம் வெட்டி குளத்தில் மீன்களையும் வளர்த்து பின் பொறிகளை உணவாக போடும் பழக்கத்தையும் உண்டாக்கினார்கள், நாம் ஆலயம் சென்றதும் முகம் கால் கழுவி (அ) குளித்து பொறி வாங்கி மீன்களுக்கு நிறைய தூவி விடுவோம் எவ்வளவு மீனுக்கு நம் உணவு செல்கிறதோ அவ்வளவு பாவமும் விலகும், மிகச்சிறந்த பரிகாரத்தில் இதுவும் ஒன்று, எனவே இந்த பரிகாரத்தை மற்றவருக்கும் கூறி செய்யச் சொல்லுங்கள் .உணவே இல்லாமல் தவிக்கும் கிணறு, குட்டை, ஏரி ஆறு போன்ற இடத்தில் உள்ள மீன்களுக்கும் பொறி உணவு கொடுத்தால் அவ்வளவும் தர்மம்!
உடனே வேலை செய்யும். யார் செய்கிறார்களோ இல்லையோ மாந்திரீக அருள் வாக்கு செயலில் ஈடுபடக்கூடியவர்கள் அவசியம் செய்ய வேண்டும் . காரணம் இறைக்கடமையில் குறுக்கிடக் கூடியவர்கள் ஆன்மீகவாதிகள்! ஊர் பாவத்தை சுமக்கும் துர்யோகம் உள்ளவரும் ஆன்மீகவாதிகள்தான்! பிறக்கும் போதே அதிக பித்ரு பரம்பரை பாவத்தில் பிறக்க கூடியவரும் ஆன்மீகவாதிகள்தான்! எனவே அவசியம் நீங்கள் தான்அதிகம் தர்மம் செய்ய வேண்டும். தர்மத்தின் அளவை பொறுத்து எந்த பாவமும் உங்களை அண்டாமல் காக்கும். தர்மம் செய்ய நாள் நட்சத்திரம் தேவையில்லை எனினும் ஏகாதசி தவிர்த்து மற்ற எல்லா நாட்களும் தர்மம் செய்ய உகந்த நாளாகும்.  அன்றாடம் தர்மம் செய்ய முடியாதவர்கள் அமாவாசை, பௌர்ணமி, ஜென்ம பிறந்த நட்சத்திரம் வரும் நாள், ஞாயிற்றுக்கிழமை, தமிழ் மாத பிறப்பு இந்த நாட்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து தர்மம் செய்யுங்கள் நலம் உண்டாகும் .
 உங்களுக்கு ஒரு சந்தேகம் உண்டாகும்!

நாம் மீனுக்கு உணவு கொடுத்து உதவுகிறோம் சரி, அது வளர்ந்த பின் அதை கொன்று சாப்பிடுகிறார்களே அது பாவம் இல்லையா என்று கேட்க தோன்றும், இந்த கேள்வி நியாயமானது தான், உயிரை வளர்ப்பது தர்மம் இந்த வாய்ப்பு பாவமற்றவருக்கும் துன்ப விடுதலை உள்ளவருக்கும்  உண்டாகும் . உயிர்களை கொல்வது பாவம், பாவகணக்கு யாருக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறதோ அவர்களே அந்த செயலை செய்து கொண்டிருப்பார்கள், எனவே நம் செயல் தர்மம் செய்து உயிரை வளர்ப்பதாக இருக்கட்டும், அத்தனை உயிர்களுக்கும் இது பொருந்தும் .மரங்களுக்கும் பொருந்தும்,
எனவே தான் சித்தர்கள் ஒரு உயிரை கொன்றாலும் பல நன்மைக்கு பயன்படுத்தினார்கள், மூலிகை என்னும் உயிரை கொல்லும் முன் சாப விமோசனம்செய்தார்கள்.பாவவிமோசன மந்திரம் கூறி காப்பு கட்டி இறைவனை வேண்டி அதன் உயிர் அதன் உடலிலேயே இருக்க வேண்டும் என வேண்டி எடுத்து பின்பு பல நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தினார்கள், ஒன்றை கொன்றாலும், பல உயிர் பிழைக்க மருந்தாகவும் பயன்படுத்தினார்கள்! எந்த உயிரை கொன்றாலும் தவறு என்பதை உணர்ந்து பாவ புண்ணிய கணக்கை உணர்த்தியவர்கள் நம் முன்னோர்கள் எனவே நாம் செய்யும் தர்மம் மூலமே அவர்களை சாந்தப்படுத்த முடியும்!!!

ஓம் குமாரகுருபதாச குருப்யோ நம :


★முருகனுக்கு அரோகரா★
                               உ
ஓம் குமாரகுருபதாச குருப்யோ நம :

1. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
2. கந்தனுக்கு அரோகரா
3. குமாரகுருதாசருக்கு அரோகரா
4. பாம்பன் சுவாமிகளுக்கு அரோகரா
5. மயூரநாதருக்கு அரோகரா
6. கார்த்திகை மைந்தனுக்கு அரோகரா
7. சஷ்டிப் பிரியருக்கு
8. சுப்ரமணியருக்கு அரோகரா
9. வள்ளிக்கு அரோகரா

10. தெய்வானைக்கு அரோகரா
11. அறுபடை வீட்டுக்கு அரோகரா
12. ஷன்முகருக்கு அரோகரா
13. பழனிமலை முருகனுக்கு அரோகரா
14. திருத்தணிகை முருகனுக்கு அரோகரா
15. சுவாமிமலை முருகனுக்கு அரோகரா
16. திருப்பரங்குன்றத்துக்கு அரோகரா
17. ஆவினன்குடி முருகனுக்கு அரோகரா
18. திருசெந்தூர் முருகனுக்கு அரோகரா
19. பழமுதிர்சோலைக்கு அரோகரா

20. மருதமலை முருகனுக்கு அரோகரா
21. இடும்பனுக்கு அரோகரா
22. வீரவாகு தேவருக்கு அரோகரா
23. வீரகேசரி தேவருக்கு அரோகரா
24. வீர மகேந்திரதேவருக்கு அரோகரா
25. வீர மகேச தேவருக்கு அரோகரா
26. வீர புரந்திரதேவருக்கு அரோகரா
27. வீர ராக்கதேவருக்கு அரோகரா
28. வீர மார்த்தாண்ட தேவருக்கு அரோகரா
29. வீராந்தக தேவருக்கு அரோகரா
30. வீர தீர தேவருக்கு அரோகரா

31. சரவனத்தானுக்கு அரோகரா
32. கார்த்திகேயனுக்கு அரோகரா
33. சிவசுப்ரமணியனுக்கு அரோகரா
34. திருமகள் மருகனுக்கு
35. எழிற்குரிஞ்சிக்கோனுக்கு அரோகரா
36. அறுமுகனுக்கு அரோகரா
37. ஏரகத்தேவனுக்கு அரோகரா
38. கௌரி நந்தனனுக்கு அரோகரா
39. திருச்சோலை மலையனுக்கு அரோகரா
40. அயில்வேலுக்கு அரோகரா

41. திருக்கைவேலுக்கு அரோகரா
42. சஷ்டி நாதனுக்கு அரோகரா
43. சானவிமுளை வேலுக்கு அரோகரா
44. ஐ வேலுக்கு அரோகரா
45. பாவகி கூர்வேலுக்கு அரோகரா
46. சயவேலுக்கு அரோகரா
47. பெருஞ்சக்தி வடிவேலுக்கு அரோகரா
48. எம்பிரான் திணிவேலுக்கு அரோகரா
49. இகலுடை கரவேலுக்கு அரோகரா
50. ஓம் ஐம் ரீம் வேலுக்கு அரோகரா

51. மஹா கந்த சஷ்டிக்கு அரோகரா
52. குருசாமிக்கு அரோகரா
53. முருக அடியாருக்கு அரோகரா
54. சஷ்டி யாத்திரைக்கு அரோகரா
55. அழகப்பனுக்கு அரோகரா
56. பாலமுருகனுக்கு அரோகரா
57. பாலசுப்ரமணியனுக்கு அரோகரா
58. கந்தசாமிக்கு அரோகரா
59. குமரனுக்கு அரோகரா
60. குமரேசனுக்கு அரோகரா

61. மயூர கந்தனுக்கு அரோகரா
62. மயூரவாகனனுக்கு அரோகரா
63. முருகவேலுக்கு அரோகரா
64. பழனிவேலுக்கு அரோகரா
65. ராஜசுப்ரமணியத்துக்கு அரோகரா
66. சக்திபாலனுக்கு அரோகரா
67. சரவணபவனுக்கு அரோகரா
68. சக்திபாலனுக்கு அரோகரா
69. சேனாபதிக்கு அரோகரா
70. செந்தில்வேலனுக்கு அரோகரா

71. சிவகுமரனுக்கு அரோகரா
72. சுப்பையாவுக்கு அரோகரா
73. சுவாமிநாதருக்கு அரோகரா
74. தண்டபாணிக்கு அரோகரா
75. தணிகைவேலனுக்கு அரோகரா
76. தண்ணீர்மலையானுக்கு அரோகரா
77. வைரவேலுக்கு அரோகரா
78. விசாகனுக்கு அரோகரா
79. அழகனுக்கு அரோகரா
80. அமுதனுக்கு அரோகரா

81. ஆறுமுகவேலனுக்கு அரோகரா
82. ஞானவேலுக்கு அரோகரா
83. குகனுக்கு அரோகரா
84. குகானந்தனுக்கு அரோகரா
85. குருபரனுக்கு அரோகரா
86. குருநாதனுக்கு அரோகரா
87. இந்திரமுருகனுக்கு அரோகரா
88. மாலவன் முருகனுக்கு அரோகரா
89. ஸ்கந்தகுருவுக்கு அரோகரா
90. கதிர்காமனுக்கு அரோகரா

91. கதிர்வேலுக்கு அரோகரா
92. கந்தவேலுக்கு அரோகரா
93. குமரகுருவுக்கு அரோகரா
94. முத்துக்குமரனுக்கு அரோகரா
95. பழநிநாதனுக்கு அரோகரா
96. பரமகுருவுக்கு அரோகரா
97. பழனிச்சாமிக்கு அரோகரா
98. முத்துவேலுக்கு அரோகரா
99. பரமபரனுக்கு அரோகரா
100. பேரழகனுக்கு அரோகரா

101. ராஜவேலுக்கு அரோகரா
102. செல்வவேலுக்கு அரோகரா
103. செங்கதிர்வேலனுக்கு அரோகரா
104. செவ்வேலுக்கு அரோகரா
105. சிவகார்த்திகேயனுக்கு அரோகரா
106. சித்தனுக்கு அரோகரா
107. சூரவேலுக்கு அரோகரா
108. தமிழ்செல்வனுக்கு அரோகரா

109. தேவசேனாதிபதிக்கு அரோகரா

110. தமிழ்வேலுக்கு அரோகரா
111. தங்கவேலுக்கு அரோகரா
112. திருஆறுமுகதுக்கு அரோகரா
113. திருமுகத்துக்கு அரோகரா
114. திரிபுரபவனுக்கு அரோகரா
115. திருச்செந்திலுக்கு அரோகரா
116. உமைபாலனுக்கு அரோகரா
117. வேலைய்யாவுக்கு அரோகரா
118. வெற்றிவேலுக்கு அரோகரா

★ ஓம் சரவணபவ◆

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

ஓடவும் முடியல..ஒளியவும் முடியல..! திணறும் மோடி!

ஓடவும் முடியல..ஒளியவும் முடியல..! திணறும் மோடி!

ஊரடங்கு மே 3-ந்தேதி வரை நீடித்தாலும்,

ஏப்ரல் 20 முதல் சில துறைகள் சார்ந்த பணிகளுக்கு விலக்கும் தளர்வும் கொடுக்கப்பட்டு அவைகளுக்குரிய வழிகாட்டுதல்களை அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது பிரதமர் அலுவலகம்.

 மோடியை துரத்தும் சிக்கல்களே இதற்கு காரணங்களாக இருக் கின்றன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பொருளாதார ஆலோசகர்களிடம் இரண்டு முறையும், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸிடம் இரு முறையும், இந்திய தொழில் நிறுவன ஜாம்பவான்களிடம் ஒரு முறையும் என தீவிர ஆலோசனை நடத்தியிருக்கிறார் பிரதமர் மோடி.

இதைத்தவிர, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் உள்ளிட்ட பிரதமர் அலுவலக உயரதிகாரிகளுடன் ஒரு நாளைக்கு 3 முறை விவாதிக்கிறார்.

அந்தளவுக்கு மோடியிடம் கவலை சூழ்ந்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தோடு தொடர்புடைய தமிழக அதிகாரிகளிடம் டெல்லியில் நடக்கும் நிலைமைகள் குறித்து நாம் விசாரித்தபோது, கொரோனாவை சமாளிப்பதை மாநில அரசுகள் பார்த்துக் கொள்ளட்டும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் மோடி.

தற்போது அவரை அதிகம் பயமுறுத்துவது சமூக, பொருளாதார பாதுகாப்புதான்.

இந்து ராஜ்ஜியம் உருவாக்கும் தனது கனவு கலைந்து போகுமோ என்கிற அச்சமும் அவ ருக்கு வந்திருக்கிறது.

சமீபத்தில் மத்திய உளவுத்துறை கொடுத்த அறிக் கையில், ஊரடங்கு முடிந்ததும் அடுத்து வரும் 3 மாதங்கள் மத்திய அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

இதனால், இந்தியாவில் ஏற்படப்போகும் வேலை யில்லா திண்டாட்டமும் அதன்மூலம் உருவாகும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை களும் பிரதமருக்கு சிக்கல் களை அதிகரிக்கச்செய்யும் என சொல்கிறது அந்த அறிக்கை.

 இதையடுத்துதான் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டார் மோடி.

பொருளாதாரத்தில் நாம் 7 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளோம் என சொல்லிக்கொண்டாலும் 5.5 சதவீத வளர்ச்சியை தாண்டவில்லைங்கிறதுதான் உண்மை.

கொரோனா தாக்கத்தால் தற்போது நமது பொருளாதாரம் 2.8 சதவீதமாக சரிந்துள்ளது.

அடித்தட்டு மக்களிடம் பணப்புழக்கம் இல்லை.

 நடுத்தரவர்க்கத்தினரின் வங்கியிலுள்ள வீட்டு கடன், நகைக்கடன், விவசாயக்கடன் உள்ளிட்டவைகளில் ஏற்படப்போகும் தாக்குதல்களால் அவர்களும் வீதிக்கு வரக்கூடிய சூழல்கள் வரவிருக்கிறது.

இந்தியாவின் அசைக்க முடியாத சக்தி என உலக நாடுகளுக்கு நீங்கள் ஏற்படுத்தி வைத்துள்ள உங்கள் இமேஜ் பாதிப்புக்குள்ளாகும் என எவ்வித தயக்கமுமின்றி சொல்லியிருக்கிறார்கள்.

மோடியால் ஜீரணிக்க முடியவில்லை.

இதுகுறித்து ஆலோசனைகள் தெரிவித்த வல்லுநர்கள், அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான கணிசமான தொகையை வங்கியில் போடாமல் ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினரின் கைகளில் கொடுத்து விட வேண்டும்.

குடும்பத்துக்குத் தேவையான அனைத்து சமையல் பொருட்களும் கொடுக்கப்பட வேண்டும்.

இது மட்டுமே தற்காலிக தீர்வு. அந்த 3 மாதத்தில் பொருளாதாரத்தை வலிமையாக்கும் நடவடிக் கையில் இறங்கலாம்.

இதைத் தான் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் செய்து கொண்டிருக்கின்றன.

பெரும்பாலான வணிக நிறுவனங்கள் லாக் டவுன் பீரியடில் பெரிதும் பாதித் துள்ளது.

ஊரடங்கு முடிந்து அவைகள் தொழில் தொடங்க முற்படும்போது.

ஏற்கனவே வாங்கியுள்ள கடன்கள் சிக்கல்களை உருவாக்கும்.

அதனால் வணிக நிறு வனங்களையும் கடன் தருகிற வங்கிகளையும் ஒரே சேர பாதுகாக்க வேண்டிய நெருக்கடியும் ஏற்படும்.

 இதனை சமாளிக்க, தொழில்நிறுவனங்களுக்கு தேவையான கடன் தொகையை ரிசர்வ் வங்கி யே அச்சிட்டு தரலாம்.

இப்படி அச்சிடுவதற்கு விதிகளில் இடமிருக்கும் சில திருத்தங்களையும் மத்திய அரசு இடைக்கால ஏற்பாடாக செய்யலாம் என நிதி ஆலோசகர்கள் தெரிவித்தனர் என்கின்றனர்.

இந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாசிடம் இரு முறை ஆலோசித்துள்ள பிரதமர் மோடி, நிதி ஆலோசகர்கள் தெரி வித்த யோசனைகளை விவரித்திருக்கிறார்.

 உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, கொரோனாவுக்கு முன்பே இந்தியாவின் பொருளாதாரம் திருப்திகரமாக கிடையாது.

கொரோனா தாக்கத்தால் மேலும் மோசமாகி யிருக்கிறது.

வேலையில்லா திண்டாட்டமும், சட்டம் ஒழுங்கும் சரி செய்யப்பட வேண்டும்.

இதை சரி செய்யலைன்னா...

 ஒட்டுமொத்த பழியும் நம் ஆட்சி மீதுதான் விழும்;

கொந்தளிப்பும் உருவாகும் என பாஜகவின் முதல்நிலை அமைச்சர்களான ராஜ்நாத்சிங், அமீத்ஷா, நிதின் கட்கரி, சதானந்த கவுடா, நரேந்திரசிங் தோமர், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பலரும் மோடியிடம் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இதனையடுத்து, இந்தியாவின் டாப் டென் லெவலில் உள்ள அனைத்து தொழிலதிபர் களிடமும் தனிப்பட்ட முறையில் விவாதித்த மோடி,

இந்த ஆட்சியின் வளர்ச்சிக்கு எத்தனையோ வழிகளில் உதவியிருக் கிறீர்கள்.

இப்போதைய நெருக்கடியான சூழலிலும் உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.

குறிப் பாக, உங்கள் நிறுவனத்தில் ஆட்குறைப்பும் சம்பள குறைப்பையும் செய்து விடாதீர்கள்.

அவர்களை பாதுகாக்க வேண்டும்.

குறைப்பதன் மூலம் உருவாகும் பிரச்சனைகளை உணர்ந்து அதனை கைவிடுவது இந்த ஆட்சிக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவி என கோரிக்கை வைத்தார்.

அதற்கு ஒத்துழைப்பு தருவதாக தொழிலதிபர்கள் சொல்லியிருந்தாலும் இனி வரும் நாட்களில்தான் இதன் உண்மை முகம் வெளிப்படும்

இதனையடுத்து அனைத்து அமைச்சர்களுக்கும் அவசரமாக இரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன.

முதல் உத்தரவு நிதி திரட்ட வேண்டும்.

இரண்டாவது உத்தரவு, அவரவர் துறைகளின் கட்டுப்பாட்டுக்குள் வரும் தனியார் நிறுவனங்களில் ஆட்குறைப்பும் சம்பள குறைப்பும் செய்யாமலிருக்க வலியுறுத்த வேண்டும்.

 இவைகளில் மத்திய அமைச்சர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

 ஆனால், இந்த இரண்டு உத்தரவுகளையும் நிறைவேற்றுவதில் மூத்த அமைச்சர்கள் சிலரை தவிர மற்றவர்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 7 ஆண்டுகளாக தொடர்கிறது மோடி அரசு.

குஜராத் மாடல் என்கிற அரசியலை முன்னிறுத்தி, அனைத்து துறைகளின் முடிவுகளையும் பிரதமர் அலுவலகம் எடுப்பதால் அமைச்சர்கள் பெரும்பாலும் பொம்மைகள்தான்.

ஓரிருவரை தவிர அனைத்து அமைச்சர்களும் தங்கள் அலுவலகத்துக்கு தினமும் வந்து போவார்கள்.

பிரதமர் அலுவலகத்திலிருந்து வருகிற கோப்புகளில் கையெழுத்திடுவார்கள். அனைத்து முடிவுகளும் பிரதமர் அலுவலகமே எடுத்துவிடுவதால் இவர்களும் அதற்கு பழகி விட்டனர்.

இப்படிப்பட்ட சூழலில், தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அவர்களிடம் பொறுப்பை கொடுப்பதால் திணறுகிறார்கள். மிரண்டு போகிறார்கள்.

ஒவ்வொரு அமைச்சரும் தனது கட்டுப்பாட்டுக்குள் வரும் தனியார் தொழில் நிறுவன அதிபர்களை தொடர்புகொண்டு வேலையிழப்பை செய்து விடாதீர்கள் என வலியுறுத்துவதே அவர்களுக்கு பெரிய சாதனையாக இருக்கிறது.

இந்த நிலையில், நிதி திரட்டுவதுங்கிறது பெரிய சுமையாக கருதுகிறார்கள் மத்திய அமைச்சர்கள்.

தொழிலதிபர்களை அவர்கள் தொடர்புகொள்ளும்போது, பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஏற்கனவே பேசிவிட்டனரே.

புதிதாக நீங்கள் பேசுகிறீர்கள் என வேறு ஒரு தொனியில் கேட்கின்றனர்.

இதனால் நொந்து போன அமைச்சர்கள் பலரும், பெரும் முதலாளிகளுக்கு கடனாக கொடுத்துள்ள சுமார் 8 லட்சம் கோடியை வசூலிக்க திட்டமிடாமல் அதனை வாராக் கடனாக அறிவிக்கச் செய்ததிலிருந்தே சீரழிந்து போனது பொருளா தாரம் என புலம்பி வருகின்றனர்.

அதனால், நிர்வாக தந்திரம் தெரி யாதவர்களாக அமைச்சர்கள் இருப்பதும் நிதி திரட்டுவதில் பின்னடைவை சந்தித்துள்ளது மோடி அரசு.

இது வரையில், இந்தியாவின் நிதி கட்டமைப்பு வலிமையாக இருக்கிறது என சொல்லி வந்தவர்கள்,

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சரி செய்ய கஜானாவை திறக்க மறுக்கிறார்கள்.

காரணம், கஜானாவில் இல்லை என்பதுதான். இந்தியா முழுவதும் அனைத்து மாநில அரசுகளுக்கும் மட்டுமே 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயை வரிபாக்கியாக வைத்திருக்கிறது மோடி அரசு.

இந்த சூழலில், விரைவில் உருவாகப் போகும் வேலையில்லா திண்டாட் டத்தை எப்படி மோடி சமாளிக்கப் போகிறார் என தெரியவில்லை.

பொருளாதாரத்தை விட மக்களின் உயிர்தான் முக்கியம் என சொல்லி, பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைத்து வருகிறார் மோடி. கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படுவதை விட வேலையிழப்பால் பறிபோகும் உயிர்கள்தான் மோடியை அதிர வைக்கப்போகிறது.

மோடி ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது’என்கிறார்கள் உளவுத் துறையினர்.

சிறப்பு மிக்க சித்திரை மாதம் !! சித்ரா பவுர்ணமி திதி தேவர்களுக்கு உகந்தது !

சிறப்பு மிக்க சித்திரை மாதம் !! சித்ரா பவுர்ணமி திதி தேவர்களுக்கு உகந்தது !

✔️1. சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் ஆகும் !!

✔️2. சித்திரை மாத்தின் முதல் நாள்தான் பூமியை பிரம்மா படைத்ததாக புராணம் சொல்கிறது !!

✔️3. சித்திரை மாதத்து சுக்ல பட்சத்து வெள்ளிக்கிழமைகளில் பார்வதியை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் !!

✔️4. சித்ரா பவுர்ணமி தினத்தன்று நெய்தீபம் ஏற்றி குபேரன் மனைவி சித்ராதேவியை வழிபட்டால் செல்வம் பெருகும் !!

✔️5. சித்ராபவுர்ணமி தினத்தன்று உப்பு இல்லாத உணவை ஒரு நேரம் சாப்பிட்டு விரதம் இருந்தால் ஆயுள் பலன் கூடும் !!

✔️6. சித்திரை மாத பரணி நட்சத்திர நாளில் பைரவரை நினைத்து விரதம் இருந்தால் காரிய தடைகள் விலகும். அன்று பைரவருக்கு தயிர் சாதம் நிவேதனம் படைத்தால் எதிரி பயம் நீங்கும் !!

✔️7. சித்திரை மாத மூல நட்சத்திர தினத்தன்று லட்சுமி நாராயணரை வணங்கினால் நினைத்தது நடக்கும் !!

✔️8. சித்திரை மாத சுக்லபட்ச திரிதியை அன்று சிவபார்வதியை வணங்கி, தானங்கள் செய்தால் சிறப்பாக வாழ்ந்து நிறைவில் சிவலோகம் அடையலாம் !!

✔️9. சித்திரை முதல் நாளன்று கேரளாவில் கோவில்களில் பக்தர்களுக்கு ஒரு ரூபாய் நாணம் வழங்குவார்கள். இதற்கு கை நீட்டம் என்று பெயர் !!

✔️10. மீனாட்சி திருக்கல்யாணத்தை நேரில் பார்த்து தரிசித்தால் களத்திர தோஷ பாவமும், நாகதோஷங்களும் விலகும் !!

✔️11. மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒருவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் கண்டால், அவரது தலைமுறைக்கே தோஷ நிவர்த்தி கிடைத்து விடும் !!

✔️12. சித்திரை மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தால் வழக்குகளில் வெற்றி உண்டாகும் !!

✔️13. சிலப்பதிகாரத்தில் பூம்புகாரில் இந்திர விழா, சித்ராபவுர்ணமி அன்று நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது !!

✔️14. சித்திரை மாதத்தில் தாகத்தில் இருப்பவர்களுக்கு மோர் குடிக்கக் கொடுத்தால் ஜென்மாந்திர பாவங்கள் விலகும். சர்க்கரை கலந்து பானகம் குடிக்கக் கொடுத்தால் வைகுண்ட வாசம் கிடைக்கும் என்று புராணம் சொல்கிறது !!

✔️15. சித்ரா பவுர்ணமி திதி தேவர்களுக்கு உகந்தது. எனவே அன்று ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருந்து இஷ்ட தெய்வங்களை வணங்குவது நல்லது !!

✔️16. சித்திரைத் திருவிழா மதுரை தவிர திருவல்லிக்கேணி, ஸ்ரீபெரும்புதூர், குருவாயூர், திருப்பதி, ஸ்ரீரங்கம், திருப்புகனூர், வேதாரண்யம், திருவையாறு, காஞ்சீபுரம் ஆகிய ஊர்களிலும் சிறப்பாக நடத்தப்படுகிறது !!

✔️17. சித்திரை மாதத்தில் பிறப்பவர்கள் கல்வி அறிவு உடையவர்களாகவும், நல்ல செயல் செய்பவர்களாகவும், சுவையான உணவு மீது நாட்டம் கொண்டவராகவும், இருப்பார்கள் என்றும், மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் தகுதி பெற்றவர்கள் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன !!

✔️18. சித்திரை முதல்நாள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறும். இரவில் உற்சவர் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் !!

✔️19. சித்திர குப்தரை வழிபட்டால், கேது, தோஷம் நீங்கும். பூர்வ ஜென்ம தோஷம், களத்திர தோஷம், புத்ர தோஷம், கல்வி தோஷம் ஆகிய தோஷங்கள் நிவர்த்தியாகும் !!

✔️20. சித்திரை மாத அமாவாசையை அடுத்த சுக்ல பட்ச திருதியை , அட்சய திருதியை எனப் போற்றப்படுகிறது. அன்று தானங்கள் செய்வது பெரும் புண்ணியத்தைத் தரும் !!

✔️21. சித்திரை மாதம் திருதியை அன்று பகவான் விஷ்ணு ,  மீனாக (மச்சம்) அவதாரம் எடுத்தார். ஆகவே, அன்று மத்ஸ்ப ஜெயந்தி கொண்டாடப்படுகிறது !!

✔️22. சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்ட லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாகப் புராணம் சொல்கிறது. அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும் !!

✔️23. சித்திரை மாத சுக்ல அஷ்டமியில் அம்பிகை பிறந்ததாகக் கூறப்படுகிறது. அன்று புனித நதிகளில் நீராடுவது சிறப்பாக சொல்லப்படுகிறது !!

✔️24. எமதர்மனின் கணக்கரான சித்ர குப்தன் தோன்றியது சித்திரை மாத பெளர்ணமி நாளில்தான். அதே மாதத்தில், சித்திரை நட்சத்திர தினத்தன்று தான் நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பா ஆகியோரை சித்ரகுப்தன் மணந்ததாகப் புராணம் சொல்கிறது !!

✔️25. ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்ச விழா சித்திரை மாதத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது !!

அழகரின் பதினெட்டாம்படியில் காவலனாக இருக்கும் கருப்பனின் கதை தெரியுமா?

அழகரின் பதினெட்டாம்படியில் காவலனாக இருக்கும் கருப்பனின் கதை தெரியுமா?

சித்திரைத் திருவிழா என்றதும் நம் நினைவுக்கு வருவபர் கள்ளழகர்தான். அழகர் கோயில் வைணவ சம்பிரதாயத்தில் மிகவும் முக்கியமான தலம். 'ஆக்னேய புராணம்', 'ஹாலாஸ்ய (மதுரை) மஹாத்மியம் போன்ற பல்வேறு புராணங்களிலும், இந்தத் தலத்தின் கதையை அறிந்துகொள்ள முடியும். அதில் மகிமை சொல்லப்பட்டிருக்கிறது. ஆழ்வார்கள், 123 பாசுரங்களில் இந்தத் தலத்தின் மகிமையைப் பாடியிருக்கிறார்கள்.

கதை
சிலப்பதிகாரத்தில், முக்திதரும் இந்தத் தல மகிமைகள் குறித்து கவுந்தியடிகள், கோவலன் கண்ணகிக்கு எடுத்துக் கூறுகிறார். பிற்கால இலக்கியங்களான, 'அழகர் கலம்பகம்', 'அழகர் அந்தாதி', 'அழகர் கிள்ளை விடுதூது', 'சோலைமலைக் குறவஞ்சி' ஆகிய நூல்கள் அழகர் கோயிலின் சிறப்பைப் போற்றுகின்றன. இத்தனை சிறப்புகளை உடைய அழகர் கோயில், ஒரு வைணவத் தலம் மட்டுமன்று. அது, பதினெட்டாம்படிக் கருப்பன், விநாயகர் வழிபாடு, பைரவர் வழிபாடு என்று பல்வகையான வழிபாடுகளையும் தன்னுள் அடக்கி, அனைத்துத் தரப்பு மக்களும் வந்து தொழும், பண்பாட்டுப் பொக்கிஷமாகத் திகழ்கிறது.   

அழகர் கோயில் மூலவருக்கு 'பரமஸ்வாமி' என்று பெயர். நின்றகோலத்தில் எழிலுற ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் எழுந்தருளியிருக்கும் இந்த இறைவனின் உற்சவருக்கே 'அழகர்' என்று பெயர். வடமொழியில் 'சுந்தரராஜன்.' பெயரில் மட்டுமல்ல, அவரின் தோற்றமும் கொள்ளை அழகு. உலகில் இவர் அழகுக்கு நிகரான உற்சவ மூர்த்திகள் இல்லை என்பது அனைவரின் கருத்து. அதனால்தான் அதைக் கவர்ந்துபோக நினைத்தான் மலையாள தேசத்தைச் சேர்ந்த மன்னன் ஒருவன்.

ஆனால், பாதுகாப்பான கோட்டையிலிருந்து அழகரைக் கவர்ந்து வருவதென்பது இயலாத ஒன்றாக இருந்தது. எனவே, அந்தப் பணியை 18 மந்திரவாதிகளிடம் ஒப்படைத்தான். அவர்கள் அழகரைக் கவர்வதற்குமுன் அவரின் சக்தியை வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சியில் இறங்கினர். ஆலயத்துக்குள் மறைந்திருந்து மந்திரம் ஜபிக்க, ஒரு மந்திர மையைப் பயன்படுத்தினர். அந்த மையைக் கண்களின் இமைகளில் பூசிக்கொள்ள அவர்கள் உருவம் மறைந்துவிடும். அப்படித் தந்திரமாக மறைந்திருந்து அழகரின் மூர்த்தத்தில் இருந்த சக்தியை களவாட முயன்றனர்.

கதை
கயவர்களின் திட்டத்தை முறியடிக்கத் திருவுள்ளம் கொண்ட பெருமாள், கோயில் பட்டர் ஒருவரின் கனவில் தோன்றி மந்திரவாதிகள் குறித்து எச்சரித்து மறைந்தார். கண்விழித்த பட்டரோ, மந்திரவாதிகளைப் பிடிக்க ஓர் உபாயம் செய்தார். மறுநாள் காலை நிவேதனத்துக்கு வழக்கமாகச் செய்யும் பொங்கலில் அளவுக்கு அதிகமாக மிளகு சேர்த்து ஆலயம் முழுவதும் உருட்டி வைத்தார். பொங்கலின் வாசனையால் ஈர்க்கப்பட்ட மந்திரவாதிகள், அதை எடுத்துத் தின்றனர்.

அடுத்த கணம், அதிகமாகச் சேர்க்கப்பட்டிருந்த மிளகினால் உண்டான காரம் தாங்காமல் கண்ணீர் விட்டனர். கண்ணீரில், கண் இமைகளில் இட்டிருந்த மை அழிந்தது. மை அழிந்ததும், அவர்களின் மாய சக்தி மறைந்து அவர்களின் உருவமும் வெளிப்பட்டது. உடனே, அங்கிருந்த காவலர்கள், அவர்களைப் பிடித்துக் கொன்றனர். அவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு படிக்கட்டில் புதைத்தனர். மந்திரவாதிகளுக்குத் துணையாக வந்த காவல் தெய்வத்தையும் மந்திர சக்தியால் பிடித்துக் கட்டினர்.

அந்தத் தெய்வமோ, அழகரின் அழகில் மயங்கி, தான் இனி இங்கிருந்து அழகருக்குக் காவல் செய்வதாகச் சொல்லியது. அதற்குக் கூலியாகத்  தினமும், அழகருக்குச் செய்யப்படும் அர்த்தஜாம நிர்மால்ய நிவேதனங்களைத் தனக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. அதற்கு எல்லோரும் சம்மதிக்க இன்றளவும் பதினெட்டாம்படிக் கருப்பாக இருந்து அழகரைப் பாதுகாக்கிறது.

ஆலயத்தின் சொத்துகள் முழுமைக்கும் அவர்தான் காவல். 'அரங்கன் சொத்து, அழகர் அங்கவடிவுக்கும் காணாது' என்ற ஒரு சொலவடை உண்டு. அந்த அளவுக்கு அழகருக்கு ஆபரணங்கள் உண்டாம். திருவிழாவுக்காக அழகர் வெளியே செல்லும்போது பதினெட்டாம்படிக் கருப்பனிடம், அவர் என்னென்ன நகைகள் அணிந்து செல்கிறார் என்று பட்டியல் வாசித்துக் காண்பித்துச் செல்ல வேண்டும். அதேபோல திரும்பும்போதும், அதே நகைகள் வந்திருக்கின்றனவா என்பதையும் உறுதிசெய்தே உள்ளே செல்ல வேண்டும். இன்றும், ஆலயம் மூடியதும் சாவியைப் பதினெட்டாம்படிக் கருப்பின் சந்நிதியில் கொண்டு வந்து வைக்கும் வழக்கம் உள்ளது.

பதினெட்டாம்படியின் வாசலாக இருக்கும் கருப்பனுக்கென்று உருவம் இங்கு இல்லை. பெரும் கதவே கருப்பனின் வடிவாக வணங்கப்படுகிறது. எப்போதும் மூடியே இருக்கும் இந்தக் கதவு, பிரம்மோற்சவத்தில் சக்கரத்தாழ்வார் எழுந்தருளலுக்காக மட்டுமே திறக்கப்படும். மூடியிருக்கும் கதவுக்கே இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன.

பதினெட்டாம்படிக் கருப்பின் காவலைத் தாண்டி எதுவும் உள்ளே செல்ல இயலாது. தினமும் நூபுர கங்கையில் இருந்து அழகருக்குக் கொண்டுவரப்படும் தீர்த்தத்தைக் கருப்பனின் சந்நிதியில் வைத்து, அது தூய்மையாகக் கொண்டுவரப்பட்டது என்று பிரமாணம் செய்தபின்னே உள்ளே கொண்டு செல்ல இயலும். கருப்பனிடம் செய்யும் பிரமாணம் நீதி தேவன் சந்நிதியில் செய்யும் பிரமாணத்துக்கு இணையானது.

சுற்றுப்பட்டு ஊர்களில் இருப்பவர்கள், தங்களுக்குள் எழும் பிரச்னைகள் பலவற்றுக்கும் கருப்பன் சந்நிதியில் பிரமாணம் சொல்லித் தீர்க்கிறார்கள். கருப்பன் சந்நிதியில் பொய் சொன்னால் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்பது நம்பிக்கை.
அழகர் கோயிலின் மற்றொரு சிறப்பு, அங்கு இருக்கும் சைவம் சார்ந்த இறைவழிபாடு. 'திருப்பதிகளுக்கெல்லாம் முதன்மை திருமாலிருஞ்சோலை' என்று பெயர்பெற்ற அழகர் கோயிலில் விநாயகர் சந்நிதியும் பைரவர் சந்நிதியும் காணப்படுகின்றன.

இரு சந்நிதிகளிலும் விபூதிப் பிரசாதம் வழங்கப்படுகிறது. வீர சைவரான, லிங்காயத்து ஒருவரின் பெரிய சிலை ஒன்றும் ஆலயத்துள் காணப்படுகிறது. அந்த அளவுக்குச் சைவ - வைணவ வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களாலும் ஆதரிக்கப்பட்டத் தலமாக அழகர்மலை இருந்துவந்துள்ளது.

கருப்பன்
இந்த ஆலயத்தில் பஞ்சபூதங்களை மையமிட்ட பண்டிகைகள் விசேஷமாகக் கொண்டாடப்படும். பிருதிவி (மண்) நாளாகிய விநாயகர் சதுர்த்தியும், அப்பு (நீர்) நாளாகிய பதினெட்டாம் பெருக்கும், தேஜஸ் (அக்னி) நாளாகிய கார்த்திகை தீபமும், வாயு (காற்று) நாளாகிய சரஸ்வதி பூஜையும், ஆகாச நாளான மகரசங்கராந்தியும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படும்.

இந்தத் தலத் தீர்த்தங்களின் அதிதேவதையான ராக்காயி அம்மனுக்கு அமாவாசையன்றும், பதினெட்டாம்படிக் கருப்புக்கு பௌர்ணமியன்றும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

சித்திரைத் திருவிழாவில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் புகழ்பெற்றது. அழகர் மலையிலிருந்து மதுரை செல்லும் வழியில் 400-க்கும் அதிகமான மண்டகப்படிகள் நடைபெறும்.

சுந்தரகாண்டம் சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் கற்பனைக்கும் எட்டாத நன்மைகள்!


சுந்தரகாண்டம் சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் கற்பனைக்கும் எட்டாத நன்மைகள்!÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார். உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.

3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.

4. சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.

5. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.

6. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.

7. சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.

8. சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமான திருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய் விடும்.

9. சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.

10. சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து விடும்.

11. ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

12. ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.

13. ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள்.

14. ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

15. சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு “ஜெய பஞ்சகம்” என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

16. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோக வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.

17. சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம் செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும்.

18. சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள்.

19. சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெற முடியும்.

20. ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.

21. சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக படிக்கிறாரோ, அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும்.

22. சுந்தரகாண்ட பாராயணம் நமது ஊழ்வினையால் ஏற்படும் நிம்மதி சீர்குலைவை சரி செய்து விடும்.

23. சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தால் மனம் லேசாகி விடும்.

24. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும்.

25. ராமநவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய சுந்தரகாண்ட சுலோகம் கூறினால் மன தைரியம் உண்டாகும்.

26. ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சுகப் பிரசவம் உண்டாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.

27. கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.

28. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன் முழு பலனும் கிடைக்கும்.

29. சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது. அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.

30. #சந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு தயாரிக்கக் கூடாது.

31. சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.

32. சுந்தரகாண்டம் படிக்க தொடங்கும் மன்பு முதலில் ராமாயணத்தை ஒரே நாளில் படித்து விட வேண்டும். அதன் பிறகு சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

33. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அந்த அறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது.

34. சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும் படிக்கலாம்.

35. சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் படிக்க வேண்டும்.

36. பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.
37. சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சர்க்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிக எளிதாக பலன் பெறலாம்.

38. சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.

39. வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் படிக்கும் நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து பயன்பெறலாம்.

40. சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்

ஸ்ரீ ராம ஜெயம்

சனி, 18 ஏப்ரல், 2020

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் வரலாறு


இருக்கன்குடி மாரியம்மன் கோவில் வரலாறு

இருக்கன்குடி மாரியம்மன்
இருக்கன்குடியில் அர்ஜுனா ஆறு, வைப்பாறு என்று இரண்டு ஆறுகளுக்கு இடையில் மாரியம்மன் அருள் பாவிப்பதால் இந்த இடத்திற்கு இருக்கன்குடி மாரியம்மன் என்ற பெயர் வந்தது. அர்ஜுனா ஆறு என்ற பெயரில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நதியானது, வத்திராயிருப்பு என்னும் இடத்தில் உள்ள மகாலிங்கம் மலையிலிருந்து உற்பத்தியாகிறது. மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்ற சமயத்தில் கரடுமுரடான பாதைகளில் நடந்து மகாலிங்க மலையடிவாரத்தை வந்து அடைந்தனர். அவர்களது உடல் களைப்பை போக்குவதற்கு நீராட வேண்டும் என்று விரும்பினார்கள். அருகில் எங்கேயும் நீராடுவதற்கு நதிகள் இல்லை என்பதால் அர்ஜுனன் பூமி மாதாவையும், கங்கை தேவியையும் வணங்கி தனது அம்பினை பூமியில் செலுத்தியதன் மூலம் உருவாக்கப்பட்டது தான் இந்த அர்ஜுன் ஆறு. இந்தக் கோவிலின் வடக்குப் பக்கத்தில் அர்ஜுனன் ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது.


                              #irukkankudi_amman

இந்தக் கோவிலுக்கு தெற்குப் பக்கமாக ஓடும் வைப்பாறு இராமபிரானினால் உருவாக்கப்பட்டது. இராவணனை வீழ்த்துவதற்காக தனது படைகளுடன் சென்ற இராமன் மேற்கு தொடர்ச்சி மலைக்கு வந்தடைந்தார். இவர்கள் கடந்து வந்த பாதையில், ஏற்பட்ட களைப்பினை நீக்கிக்கொள்ள நீராட வேண்டும் என்று நினைத்தபோது, உருவாக்கப்பட்டதுதான் இந்த வைப்பாறு. ராமனும் ராமனுடைய சேனைகளும் நீராடுவதற்காக அங்கு ஏதேனும் நதி உள்ளதா என்று தேடிப் பார்த்தார்கள். அந்த சமயம் வழிப்போக்கன் ஒருவர், அகத்திய முனிவரானவர் உலகில் உள்ள புண்ணிய தீர்த்தங்கள் எல்லாம் ஒரு குடத்தில் சேமித்து, இந்த இடத்தில் புதையலாக புதைத்து வைத்திருப்பதாக கூறினார். இதைக் கேட்ட இராமன், தன் ஞானதிருஷ்டியினால் குடம் புதைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டுபிடித்து, தனது பானத்தின் அம்பினை எய்து புண்ணிய தீர்த்தங்களை வெளிவரச் செய்தார். ‘பைப்பு’ என்றால் புதையல் என்ற அர்த்தத்தை குறிக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்த ஆறுக்கு வைப்பாறு என்ற பெயர் வந்ததாகக் கூறுகிறது வரலாறு.

அர்ஜுனனாலும், ராமராலும் உருவாக்கப்பட்டதால், இந்த இரண்டு நதிகளும் கங்கைக்கு நிகரான புண்ணியத்தை பெற்றுள்ளது. இதனால் இந்த ஊருக்கு ‘இருகங்கை குடி’ என்ற பெயர் உருவானது. அந்தப் பெயரே காலப்போக்கில் மருவி தற்போது இருக்கன்குடி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.


தல வரலாறு
அம்பாளின் தரிசனம் வேண்டும் என்பதற்காக ஒரு முனிவர் நீண்ட நாட்களாக தவம் இருந்து வந்தார். அவரது தவத்தின் பலனால் அந்த சித்தருக்கு ஒரு அசரீதி குரல் கேட்டது. அந்தக் குரலானது ‘சித்தரை அர்ஜுன ஆறுக்கும், மற்றும் வைப்பாறுக்கும் இடையே உள்ள மேட்டுப் பகுதிக்கு வருமாறு கூறியது.

இதன் மூலம் அந்த மேட்டுப் பகுதியை அடைந்த சித்தருக்கு அம்பாள் காட்சி அளித்தாள். தன் கண்களால் கண்ட அம்பாளின் உருவத்தை சிலையாக வடிவமைத்து, பிரதிஷ்டை செய்தார் சித்தர். ஆனால் இந்த சிலை இயற்கை சீற்றத்தினால் ஆற்று மண்ணில் புதைந்து போனது. சில காலங்கள் கடந்த பிறகு, இந்த இடத்திற்கு ஒரு சிறுமி சாணம் சேகரிக்க தினம்தோறும் வருவாள். ஒரு நாள் அவள் தரையில் வைத்த சாணக் கூடையை தூக்க முடியவில்லை. அந்தக் கூடையை தூங்குவதற்காக ஊர் மக்களின் உதவியை நாடினாள் அந்த சிறுமி. ஊர் மக்கள் அனைவராலும் தூக்கப்பட்ட கூடையின் அடியில் காட்சி தந்தாள் அம்பாள். இவ்வாறு இருக்கன்குடி மாரியம்மனின் சிலையானது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்றளவும் மக்களுக்கு அருள் பாவித்து வருகின்றாள் அம்பாள்.


பலன்கள்
கண் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் இந்த அம்பாளை தரிசனம் செய்தால் நோய் தீரும் என்பது நம்பிக்கை. தீராத வயிற்று வலி, அம்மை உள்ளவர்கள் அம்பாளை மனதார தரிசனம் செய்தால் தாக்கங்கள் குறையும்.

செல்லும் வழி
மதுரையிலிருந்து 73 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது சாத்தூர் என்ற பகுதி. இங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தூரம் சென்றால் இருக்கன்குடியை அடைந்துவிடலாம்.

தரிசன நேரம்:
காலை 05.30AM – 01.00PM
மாலை 04.30PM – 08.00PM

முகவரி:
சாத்தூர்,
இருக்கன்குடி,
தமிழ்நாடு 626202.

தொலைபேசி எண்
+91-4562 259 614.

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

இருக்கன்குடி மாரியம்மன்



இருக்கன்குடி மாரியம்மன்

இரு கங்கைக்கும் நடுவில் அமைந்த கோயில் என்பதை உணர்த்தும்விதமாக "இருகங்கைக்குடி' எனப்பட்ட ஊர் "இருக்கன்குடி' என மருவியது. பக்தர்கள் இரண்டு தீர்த்தங்களிலும் நீராடி அம்பிகையை வழிபட்டு வரலாம்.பிரார்த்தனை தலம்: பக்தர்களின் குறை தீர்க்கும் பிரதான பிரார்த்தனை தலம் இது. கண் நோய் உள்ளவர்கள், "வயனம் இருத்தல்' என்ற விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். ஒரு சிலர் நோய் தீரும் வரை இங்கேயே இருந்து விடுகின்றனர். சிலர் ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து தங்கிவிட்டு மறுநாள் செல்கின்றனர். இவர்கள் தங்குவதற்கு கோயிலில் மண்டபம் உள்ளது. இவர்கள் அம்பாளின் அபிஷேக தீர்த்தத்தை கண்ணில் விட்டுக்கொள்ள, நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. விவசாயிகள் இந்த தீர்த்தத்தை நிலத்தில் தெளிக்கின்றனர். அறுவடையானதும் அம்பிகைக்கு நவதானியம், நெல், காய்கறி காணிக்கை கொடுக்கின்றனர். கால்நடைகள் நோயின்றி இருக்கவும் இத்தீர்த்தம் கொடுப்பதுண்டு. அம்மை நோய் உள்ளவர்கள், அம்பிகைக்கு ஆமணக்கு விதையைக் காணிக்கையாக்கி வழிபடுகின்றனர். அம்பாளுக்கு உருவ காணிக்கை, கண்மலர் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

ஒரு கங்கையில் நீராடினாலே மிகவும் புண்ணியம். ஆனால் இங்குள்ள மாரி அர்ச்சுனா, வைப்பாறு என இரு கங்கைகளுக்கு நடுவே குடி கொண்டுள்ளாள். எனவே தான் இங்குள்ள மாரி இருக்கங்(ன்) குடி மாரி ஆனாள். ஆக, அம்மனை தரிசிப்பதுடன் இருகங்கைகளிலும் நீராடி, ஒரே நேரத்தில் முப்பெரும் பலனை அடையலாம். மாரியின் கோயிலுக்கு வடக்கே ஒடும் அர்ச்சுனா நதியானது, வத்திராயிருப்பிலுள்ள மகாலிங்க மலையில் இருந்து உற்பத்தியாகிறது. இந்த அர்ச்சுனா நதிக்கு ஒரு புராணக் கதை உண்டு. முன்னொரு காலத்தில் பஞ்சபாண்டவர்கள் காடுகளில் சுற்றித் திரிந்து பின் இந்த மலையடிவாரத்திற்கு வந்து குளிக்க நினைத்தார்கள். ஆனால், அவர்கள் குளிப்பதற்குரிய இடம் இல்லாததால் அர்ச்சுணன் கங்கா தேவியை வணங்கி, தன் அம்பால் பூமியை பிளந்தான். அந்த பிளவிலிருந்து தோன்றிய ஆறே அர்ச்சுணன் ஆறு எனப்பட்டது. இந்த ஆற்றுநீரில் பஞ்சபாண்டவர்கள் திரவுபதியுடன் நீராடி மகிழ்ந்தனர்.

அம்மன் கோயிலுக்கு தெற்கே ஓடுவது வைப்பாறு எனப்படும். இந்த வைப்பாற்றுக்கும் ஒரு தனி புராணக்கதை உண்டு. ஒரு சமயம் பொதிகை மலையின் அடிவாரத்தில் சிவசைலத்துக்கு வடக்கே சம்புகன் என்ற வேடன் தீயின் நடுவிலிருந்து கடும் தவம் புரிந்தான். இவனது இந்த செயலால் அயோத்தியில் ஒருவன் இறந்தான். அப்போது அயோத்தியை ஆண்ட ராமன் இந்த இறப்பை கேள்விப்பட்டு, தன் சேனைகளுடன் கிளம்பி சம்புகனை கொன்றார். அத்துடன் தன் நாட்டில் இறந்தவனையும் உயிர்ப்பித்தார். (இது ராமாயண உத்திரகாண்டத்தில் விளக்கப்பட்டுள்ளது).

தவம் செய்த சம்புகனை கொன்ற பாவத்தால் பீடிக்கப் பெற்ற ராமன் பாவ விமோசனத்திற்காக சிவமலையில் சிவபெருமானை நிலை நிறுத்தி, வணங்கி தவம் செய்து பாவ விமோசனம் பெற்றார். அதன் பின் ராமன் தன் பரிவாரத்துடன் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு வந்து சேர்ந்தார். இங்கு வந்து ராமன், தன் மாலைக்கடனை முடிக்க தண்ணீர் தேடி கிடைக்காததால் வருந்தினார். அப்போது ராமனுடன் வந்த சாம்பவன் என்பவன், உலகிலுள்ள புண்ணிய தீர்த்தங்கள் எல்லாவற்றையும் சேர்த்து ஒரே குடத்தில் நிரப்பி, அந்தக் குடத்தை அகத்தியர் இங்கு புதைத்து வைத்திருப்பதாக கூறினான். இதைக்கேட்டு மகிழ்ந்த ராமன் தன் அம்பால் புதைத்து வைத்திருந்த குடத்தை உடைத்தார். இப்படி வைப்பி (புதையலில்)லிருந்து தோன்றிய ஆறுதான் வைப்பாறு எனப்பட்டது. இந்த வைப்பாறு கரிவலம் வந்த நல்லூர், சாத்தூர், கொல்லாம்பட்டி வழியாக பாய்ந்து இருக்கன்குடி அடைந்து, அங்கு ஏற்கெனவே ஒடிக்கொண்டிருக்கும் அர்ச்சுணா நதியுடன் கலந்து முத்துலாபுரம், விளாத்திகுளம் வழியாக சென்று கடலில் கலக்கிறது.

இரட்டை தீர்த்தம்: வனவாசம் சென்ற அர்ஜுனன் தன் தாகம் தீர, மேற்கு மலைத்தொடர்ச்சி மீது பாணம் எய்தான். அதிலிருந்து பொங்கிய நீர், நதியாக பெருக்கெடுத்தது. இந்நதி அவனது பெயராலேயே அழைக்கப்பெற்றது. இதேபோல், இலங்கை சென்ற ராமபிரான், பூஜைக்காக அந்த மலை மீது அம்பெய்தார். அப்போது பிறந்த நதி வைப்பாறு எனப்பட்டது. இவ்விரு நதிகளும் கங்கைக்கு ஒப்பானது என்பதால், இரு கங்கைக்கும் நடுவில் அமைந்த கோயில் என்பதை உணர்த்தும்விதமாக "இருகங்கைக்குடி' எனப்பட்ட ஊர் "இருக்கன்குடி' என மருவியது. பக்தர்கள் இரண்டு தீர்த்தங்களிலும் நீராடி அம்பிகையை வழிபட்டு வரலாம்.

ஆதி அம்பிகை: அம்பாள், இங்கு சிவ அம்சமாக இருப்பதால், சன்னதி எதிரே நந்தி இருக்கிறது. தினமும் அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கும் போது திரை போடப்பட்டு விடும். ஆனால், பவுர்ணமியன்று நடக்கும் அபிஷேகத்தை பக்தர்கள் காணலாம். கோயிலில் இருந்து சற்று தூரத்தில், அம்பாள் கிடைத்த இடத்தில், ஆதி அம்பாள் சன்னதி உள்ளது. இங்கு அம்பாள் உருவம் பொறித்த சூலம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. ஊருக்குள் உற்சவ அம்பிகைக்கு கோயில் உள்ளது. ஆடி வெள்ளியன்று, இவள் பிரதான கோயிலுக்குள் வருவாள்.

கரும்புத் தொட்டில்: குழந்தை இல்லாதவர்கள் அம்பாளுக்கு கரும்புத்தொட்டில் நேர்ச்சை (நேர்த்திக்கடன்) செய்வதாக வேண்டுகின்றனர். கரும்பில் தொட்டில் கட்டி, அதில் குழந்தையைப் படுக்க வைத்து சன்னதியை வலம் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அக்னிச்சட்டி, அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வயிற்று வலி தீர மாவிளக்கு தீபமேற்றுகின்றனர். இதற்காக தனி மண்டபம் உள்ளது. பிரகாரத்தில் வடக்குவாசல் செல்வி, வெயிலுகந்தம்மன், வீரபத்திரர், பைரவர், காத்தவராயர், பேச்சியம்மன், முப்பிடாதி உள்ளனர்.

பிரார்த்தனை தலம்: பக்தர்களின் குறை தீர்க்கும் பிரதான பிரார்த்தனை தலம் இது. கண் நோய் உள்ளவர்கள், "வயனம் இருத்தல்' என்ற விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். ஒரு சிலர் நோய் தீரும் வரை இங்கேயே இருந்து விடுகின்றனர். சிலர் ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து தங்கிவிட்டு மறுநாள் செல்கின்றனர். இவர்கள் தங்குவதற்கு கோயிலில் மண்டபம் உள்ளது. இவர்கள் அம்பாளின் அபிஷேக தீர்த்தத்தை கண்ணில் விட்டுக்கொள்ள, நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. விவசாயிகள் இந்த தீர்த்தத்தை நிலத்தில் தெளிக்கின்றனர். அறுவடையானதும் அம்பிகைக்கு நவதானியம், நெல், காய்கறி காணிக்கை கொடுக்கின்றனர். கால்நடைகள் நோயின்றி இருக்கவும் இத்தீர்த்தம் கொடுப்பதுண்டு. அம்மை நோய் உள்ளவர்கள், அம்பிகைக்கு ஆமணக்கு விதையைக் காணிக்கையாக்கி வழிபடுகின்றனர். அம்பாளுக்கு உருவ காணிக்கை, கண்மலர் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.