ஈஸ்டர் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது?
இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். கி.பி. 29ஆம் ஆண்டிலிருந்து ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதாக வரலாறு கூறுகிறது.
ரோம இதிகாசங்களில் ஈஸ்டர் என்ற பெண் கடவுள் விடியலுக்கான தேவதையாக சித்தரிக்கப்படுகிறார். இந்த தேவதையின் பெயர்தான் ஈஸ்டர் பண்டிகைக்கு சூட்டப்பட்டதாக மொழியாளர்கள் கூறுகின்றனர்.
உலகையும் அதன் சகல ஜீவராசிகளையும் சிருஷ்டித்த தேவாதி தேவன் தன்னுடைய சாயலாக ஆதாமையும், ஏவாளையும் உருவாகபகினார். ஏதேன் தோட்டதபதில் அவர்களோடு உலாவித் திரிந்தார். ஆனால் ஏமாளி ஏவாள் சாத்தான் சூழபசபசியில் எளிதாக வீழபந்தார். ஏவாழுக்காக ஆதாமும் பாவதபதில் விழுந்தார்.
தன்னுடைய சாயலாக ஆசை, ஆசையாக படைத்த மனிதன், பாவதபதிற்கு ஆட்பட்டதால் அவர்கள் இருவருக்கும் சில தண்டனைகளை விதித்து தன்னுடைய பரிசுத்த சமூகத்திலிருந்து துரதபதி விட்டார் தேவன். அதனபபின் ஆதாமும், ஏவாளும் ஆணும், பெண்ணுமாக ஏராளமான பிள்ளைகளை பெற்றார்கள்.
ஆதாமும், ஏவாளும் தன்னை விட்டு விலகினாலும் மனிதகுலதபதின் மீது இறைவன் கருணையுடனே இருந்தார். நோவா, ஆபிரகாம் என சில நல்ல மனிதர்கள் இறைவனின் சொல்படி நடந்தார்கள். அவர்களை ஆண்டவர் ஆசீர்வதித்தார். ஆனால் பெரும்பான்மை மக்கள் பாவதபதிற்குள் சிறைப்பட்டு செத்து மடிந்தார்கள்.
அவர்களுக்காக பரிதவித்த பரம பிதா தம்முடைய ஒரே பேரான குமாரனை உலகின் மீடபபிற்காக மண்ணுலகிற்கு அனுபபபி வைத்தார். அவர்தான் இயேசு கிறிஸ்து.
உலகை உய்விக்க ரட்சகராய் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஏழை தச்சரான ஜோசப்- மரியாள் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். 30 வயது வரை பெற்றோருக்கு கீழபப்படிந்து வாழபந்தார். அதன் பின் உலக மீடபபிற்கான இறைவனின் திட்டத்தை மக்களுக்கு விளக்கி போதனை செய்தார். 3 ஆண்டுகள் இரவும் பகலும் இடைவிடாது மக்களைச் சநபதித்து அவர்களுக்கு நல்வழிகளை போதித்தார்.
மரித்தோரை உயிரபபித்து தான் தேவகுமாரன் என்பதை நிரூபித்த இயேசுவை அப்போதைய யூத மதத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு பாவமும் செய்யாத அவர் மீது குற்றம் சுமத்தி சிலுவையில் அறைந்து கொடூரமாக கொலை செய்தனர். சிலுவையில் மரித்த இயேசு 3ஆம் நாளில் உயிரபத்தெழுந்தார். மனிதனாகப் பிறந்து உயிரோடு எழுமபபிய ஒரே நபர் அவர் மட்டுமே.
மனித குலதபதிற்கு மீடபபிற்காக மரித்து உயிரபந்தெழுந்த இயேசு இன்றும் உயிரோடு ஜீவிகபகிறார். தம்மை நோகபகி உண்மையோடு வேண்டுபவர்களுக்கு பாவ மனபனிப்பை அருளி, பரலோகதபதில் அவர்களுக்கும் ஓரிடத்தை உறுதி செய்து கொடுகபகிறார்.
அவருக்கு பிரியமாய் பரிசுத்தமாக வாழ வேண்டும் என்று மட்டுமே விரும்புகிறார்.
ஒரே ஒரு முறை இயேசு கிறிஸ்துவின் புனிதமான அன்பை அனுபவித்தவர்கள் அவருடைய அருளின் வல்லமையையும், ஈடிணையற்ற கருணையையும் அறிந்து கொள்ள முடியும்.
இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். இந்த ஈஸ்டர் திருநாளிலாவது மனிதர்கள் இறைவனை நோக்கி தங்கள் மனதைத் திருப்பி பரலோகப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று இயேசுவை நம்புகிறவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Posted by .
-புவனாமகேந்திரன்.
மதி கல்வியகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக