கோவில் வழிபாட்டிற்கு பின்னால் ஒளிந்திருக்கும் அளப்பரிய நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
கோவில்களில் வழிபாட்டுக்கு முன்பு சம்பிரதாயபடி கால் கையினை கழுவிவிட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும், இதனால் நோய் பரவும் முதல் வழி தடுக்கப் படுகின்றது. கோவில்களில் ஸ்வாமிக்கு காட்டும் தீபத்தில் கையினை வைக்கும் பொழுதும், அக்கையினை கண்ணில் வைக்கும் பொழுதும் கிருமிகள் இருந்தால் அழிந்து விடும், கற்பூரம் ஏற்றி கண்ணில் ஒத்துவதன் உண்மைத் தத்துவம் இதுதான்.
(கையினால் முகத்தை தொடாதீர்கள், கண்ணை மூக்கை தொடாதீர்கள். அடிக்கடி கழுவுங்கள் என இப்போது உலகம் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில்....)
தீபச் சுடரில் கைகளை காட்டி சூடேற்று. அதை முகத்துக்கும் கொடு நோய் பரவாது என என்றோ சொல்லி விட்டார்கள் நம் முன்னோர்கள்.
கர்ப்பக் கிரகத்தின் முன் வழிபாடு முடிந்ததும், கொடுக்கும் விபூதியினை நெற்றியில் பூசினால் நோய்க் கிருமிகள் முகத்தில் அண்டாது. அது கிருமி நாசினி , பசு சாண சாம்பல் இருக்குமிடம் கிருமிகள் வராது.
சாம்பிராணி புகையில் காற்றில் பரவும் கிருமிகள் அழிந்து விடுகின்றன. கோவில்களில் சாம்பிராணி புகை பரப்பும் அதற்காகத்தான்.
கோவில்கள் முழுவதும் தீபம் ஏற்றப்படும் தத்துவமும் இதுவே, அதுவும் நெய்யிலும் இன்னும் சில எண்ணெயிலும் எரியும் நெருப்பு கொடுக்கும் சக்தி விஷேஷமானது.
இவை அனைத்தும் வீட்டில் விளக்கேற்றி, சாம்பிராணி போட்டு, கற்பூர தீபம் காட்டி சுவாமியை வழிபடும் போது, வீடும் நோய்க் கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கப் படுகிறது.
கோவில்களில் தரப்படும் சில பொருட்கள் கலந்த தீர்த்தம் மருத்துவ குணம் வாய்ந்தது, சர்வ கிருமி நாசினி, குடித்தால் தொற்று நோய் எளிதில் அண்டாது, அதை கைகளில் தேய்த்து கொண்டால் நோய் தடுக்கப்படும்.
கோயில்களில் பிரச்சாதம் என தரும் தேங்காய் முதல் மிளகு கலந்த பொங்கல் வரை எல்லாமும் மருந்தே.
பெருமாள் கோவில் ஆக இருந்தால் துளசியும், அம்மன் கோவிலாக இருந்தால் கொடுக்கபடும் வேப்பிலையும் சிறந்த நோய் தடுப்பு மருந்துகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக