ஞாயிறு, 29 டிசம்பர், 2019

சிவபுராணம் 2 : அழகிய தோற்றம்...



சிவபுராணம் 2 : அழகிய தோற்றம்...

எம்பெருமானின் அருள்... பேய் உருவம்...!
ழூ சிவபுராணத்தின் முந்தைய கதைகள் நமது நித்ரா நாட்காட்டியின் முதல் பக்கத்தில் உள்ள கதைகள்ஃகட்டுரைகள் பகுதியில் நாள்தோறும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும், நீங்கள் தவறவிட்ட சிவபுராணப் பகுதிகளை இப்பகுதியில் படித்து மகிழுங்கள்.சிவபுராணம் - பகுதி 2

(திருவிளையாடலும், திருவினையும்)

காரைக்கால் அம்மையார்...!
பாண்டிய நாட்டில் உள்ள ஒரு சோலையில் வந்திருந்த அனைவரும் தங்கியிருந்து புனிதவதி வந்திருக்கும் செய்தியை பரமதத்தனுக்கு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர். சற்றும் எதிர்பாராத இந்த செய்தியினால் மனதில் ஒருவிதமான பயம் கொண்டார் பரமதத்தன். மனதை திடப்படுத்தி கொண்டு அவர்கள் இவ்விடம் வரும் முன்பு நாமே அவ்விடத்திற்கு செல்வோம் என்று எண்ணம் கொண்டார். பின்பு மறுமணம் செய்து கொண்ட மனைவியுடனும், குழந்தையான புனிதவதியுடனும் தனது முன்னாள் மனைவி புனிதவதி தங்கியுள்ள இடத்திற்குப் புறப்பட்டார் பரமதத்தன்.

மனைவியோடும், தளர்நடை நடந்த குழந்தையோடும் சென்ற பரமதத்தன் புனிதவதியார் இருக்கும் இடத்தை அடைந்ததும் விரைந்து வந்து மனைவி மற்றும் மகளுடன் புனிதவதியார் பாதங்களில், வீழ்ந்து வணங்கி எழுந்தார். அடி‌யேன் உமது திருவருளால் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். என் குழந்தைக்கு உன்னுடைய திருநாமத்தையே சூட்டியிருக்கிறேன் என்றும், தாங்கள் அருள்புரிய வேண்டும் என்றும் கூறினார். சற்றும் எதிர்பாராத இந்த செய்கையினால் தம் கணவரான பரமதத்தனை கண்டு புனிதவதி அஞ்சி ஒதுங்கி நின்றாள்.

பரமதத்தனின் செயல்களைக் கண்டு திகைத்துப்போன உறவினர்கள் மனைவியின் காலடியில் விழ காரணம் ‌என்னவென்று பரமதத்தனிடம் கேட்டனர். உறவினர்களே... இவர் எனக்கு மனைவியாக இருக்கலாம். ஆனால் இவர் மானிடப்பிறவியே இல்லை. அம்மையார் தொழுவதற்குரிய தெய்வம் ஆவார். அதனால்தான் நான் இவர்களை விட்டு விலகி நின்றேன். நீங்களும் இவரை போற்றி வணங்குங்கள் என்று கூறினார். பரமதத்தன் உரைத்ததை கேட்டதும் அனைவரும் திகைத்து நின்றனர்.

கணவரின் இந்த முடிவுகளை அறிந்ததும் புனிதவதியாருக்கு மனதில் பெரும் வேதனை உண்டானது. அக்கணத்தில் இருந்து இளமையுடனும், எழிலுடனும் இருக்கும் இந்த உருவத்தை வெறுத்து ஒதுக்கினார். கணவருக்காக மட்டும் இந்த அழகிய உடலை கொண்டு என்றும் இளமையோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். ஆனால் தன் கணவர் விரும்பாத இந்த இளமை உடல் எனக்கு எதற்கு என்று எண்ணி புனிதவதி அக்கணமே இறைவனிடம் இந்த எழில் உடம்பு எனக்கு தேவையில்லை. இவ்வுடலுக்கு பேய் வடிவம் தந்து அருள வேண்டும் என்று வேண்டினார்;.

எம்பெருமானும் அம்மையாரின் விருப்பத்திற்கு ஏற்ப பேய் வடிவத்தை கொடுத்து அருளினார். புனிதவதியின் வனப்பு மிகுந்த தசைகள் யாவும் மாயமாக மறைய துவங்கின. உடலில் உள்ள தோலானது எலும்பை மூடிய போர்வையாக அமைந்த வண்ணம் காட்சியளித்தார். தேவர்களும், மானிடர்களும் வியக்கும் பேய் வடிவத்தை புனிதவதி விரும்பி பெற்றார். பெண்ணாக நின்றவர் அவ்விடத்தில் பேயாக மாறினார்.

அனைவரும் போற்றுதலுக்கு உரிய புனிதவதியாரிடம் சுற்றத்தினர்கள் நிற்பதற்கே அஞ்சினர். அம்மையார் பேய் உருவத்தை கொண்டதோடு மட்டுமல்லாமல் நல்ல தமிழ் புலமையும் பெற்றார். மேலும், கைலாய மலையில் வீற்றிருக்கும் சிவபெருமானை தரிசிக்க வேண்டும் என எண்ணினார்.

பேய் உருவம் கொண்ட புனிதவதியார்...

எம்பெருமானை வழிபட்டாரா? இல்லையா?

இந்த வார ஸ்பெஷல்... பிறக்கும் புத்தாண்டு 2020... என்ன செய்யலாம்?



இந்த வார ஸ்பெஷல்... பிறக்கும் புத்தாண்டு 2020... என்ன செய்யலாம்?
வார சிறப்புகள்...!!
என்னென்ன செய்யலாம்?
30.12.2019
சிறப்புகள் :

வாகனப் பயிற்சி மேற்கொள்ள நல்ல நாள்.

உயர்பதவி ஏற்க சிறந்த நாள்.

உபநயனம் செய்வதற்கு ஏற்ற நாள்.

கல்வி பயில்வதற்கு உகந்த நாள்.

விரதாதி விசேஷங்கள் :

சதுர்த்தி விரதம்

வழிபாடு :

விநாயகரை வழிபட வினைகள் தீரும்.
31.12.2019
சிறப்புகள் :

அபிஷேகம் செய்ய நல்ல நாள்.

வியாபாரம் தொடங்குவதற்கு ஏற்ற நாள்.

கடன்களை அடைப்பதற்கு உகந்த நாள்.

நந்தவனம் அமைக்க சிறந்த நாள்.

வழிபாடு :

நாகதேவதைகளை வழிபட மேன்மை உண்டாகும்.
01.01.2020
சிறப்புகள் :

மந்திரங்கள் ஜெபிக்க ஏற்ற நாள்.

கால்நடைகள் வாங்குவதற்கு நல்ல நாள்.

ஏற்றம் அமைக்க சிறந்த நாள்.

மருந்து சாப்பிடுவதற்கு உகந்த நாள்.

விரதாதி விசேஷங்கள் :

சஷ்டி விரதம்

வழிபாடு :

முருகரை வழிபட துன்பங்கள் நீங்கும்.
02.01.2020
சிறப்புகள் :

பெயர் சூட்டுவதற்கு நல்ல நாள்.

விதைகள் விதைக்க ஏற்ற நாள்.

நோயாளிகள் மருந்து சாப்பிடுவதற்கு உகந்த நாள்.

புதிய ஆடைகளை அணிவதற்கு சிறந்த நாள்.

வழிபாடு :

குருமார்களை வழிபட மேன்மை உண்டாகும.
03.01.2020
சிறப்புகள் :

கடன்களை அடைப்பதற்கு உகந்த நாள்.

தானியங்களை வாங்குவற்கு ஏற்ற நாள்.

கிணறு வெட்டுவதற்கு நல்ல நாள்.

பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு சிறந்த நாள்.

வழிபாடு :

கால பைரவரை வழிபட புண்ணியமும், பலனும் கிடைக்கும்.
04.01.2020
சிறப்புகள் :

ஆபரணங்கள் வாங்குவதற்கு உகந்த நாள்.

வாகனப் பயிற்சி மேற்கொள்ள நல்ல நாள்.

கால்நடைகள் வாங்குவதற்கு சிறந்த நாள்.

புதிய ஆடைகளை அணிவதற்கு சிறப்பான நாள்.

வழிபாடு :

சனீஸ்வரரை வழிபட காரியத்தடைகள் விலகும்.
05.01.2020
சிறப்புகள் :

கதிர்களை அறுவடை செய்வதற்கு நல்ல நாள்.

உபகரணங்களை பயன்படுத்துவதற்கு ஏற்ற நாள்.

மூலிகை பறிப்பதற்கு உகந்த நாள்.

எரிகலன்கள் அமைக்க சிறந்த நாள்.

வழிபாடு :

சூரியனை வழிபட சுபம் உண்டாகும்.


சனி, 28 டிசம்பர், 2019

நவக்கிரகங்களின் வரலாறு

#நவக்கிரகங்களின் #வரலாறு

#ராகு #கேது:

திருப்பாற்கடலை கடையும்போது வெளிவந்த பொருட்கள்!!
🌺 அப்போது மலையை கடைவதால் ஏற்பட்ட வலியால் வாசுகி பெருமூச்சு விட அது விஷமாக மாறி கடலில் கலந்து கடையப்பட்டதால் உருண்டு திரண்டு ஆலகால விஷமாக வெளிப்பட்டது. அனைத்து பிரபஞ்சங்களையும் அழிக்கும் வல்லமை கொண்ட அந்த விஷத்தை அழிப்பது எவ்வண்ணம் என தெரியாமல் அனைவரும் அஞ்சி ஓடினர்.

🌺 உலகத்தை காக்கும் சர்வேஸ்வரரான சிவபெருமான் அந்த விஷத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். அவரையே அழிக்கும் சக்தியைக் கொண்ட ஆலகால விஷத்தை அவரது தொண்டை பகுதியிலே உமையவளான பரமேஸ்வரி தடுத்து நிறுத்தினார்.

🌺 (விஷ தாக்குதலின் விளைவாக சிவபெருமான் மயங்கி சாய்ந்தார். பார்வதிதேவி அவரை தன் மடியில் வைத்து படுக்க வைத்ததால் சிவபெருமான் சரியாகிவிட்டார்) விஷமானது கண்டப் பகுதியிலே நின்றதால் கண்டப்பகுதி நீல நிறமாக மாறியது. அது முதல் பரமேஸ்வரன் நீலகண்டன் என்று அழைக்கப்பட்டார்.

🌺 முதலாவதாக வெளிவந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் எடுத்து அருந்திய பின் பயம் தெளிந்த தேவர்களும், அசுரர்களும் மீண்டும் மலையை கடைய முற்பட்டனர். மலையை கடைய கடைய அபூர்வ சக்திகள் கொண்ட பல பொருள்கள் வெளிவந்தன. அவைகளை தேவர்களும், அசுரர்களும் ஆளுக்கு ஒன்றாக பகிர்ந்து கொண்டனர்.

திருப்பாற்கடலை கடையும்போது வெளிவந்தவைகள் :

1. ஆலகால விஷம்

2. காமதேனு

3. உச்சை சிரவஸ் என்னும் வெள்ளைக்குதிரை

4. ஐராவதம் என்னும் வெள்ளை யானை

5. கற்பக விருட்சம்

6. அப்சரஸ்திரிகள்

7. அகலிகை என்ற அழகான பதுமை

8. திருமகள் என்னும் லட்சுமி

9. அமுத கலசத்துடன் வெளிவந்த தன்வந்திரி

ராகு, கேது உருவானக் கதை :

🌺 காமதேனு, உச்சை சிரவஸ், ஐராவதம் மற்றும் கற்பக விருட்சத்தை தேவேந்திரன் எடுத்துக்கொண்டார். அப்சரஸ்திரிகளை அசுரர்கள் ஏற்றுக் கொண்டனர். அகலிகை என்ற அழகான பதுமையை பிரம்மன் தனது வளர்ப்பு மகளாக எடுத்துக்கொண்டார்.

🌺 திருமகள் என்னும் லட்சுமியை மகாவிஷ்ணு தனது தேவியாக ஏற்றுக்கொண்டார். அமுத கலசத்துடன் வெளிவந்த தன்வந்திரியிடமிருந்து அசுரர்கள் திட்டமிட்டப்படி அமுத கலசத்தை அபகரித்து சென்றனர்.

🌺 அமுதத்தை யார் அடைவது என்ற சண்டையில் அமுதம் வீணாகிவிடும் என்ற நிலைக்கே சென்றது. இதைக் கண்ட தேவர்கள் என்ன செய்வது என்று அறியாமல் மகாவிஷ்ணுவை வேண்டினார்கள்.

🌺 மகாவிஷ்ணுவும் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை காணச் சென்றார். மோகினியின் அழகில் மயங்கி அசுரர்களும் அமுத கலசத்தை மோகினியிடம் ஒப்படைத்தனர்.

🌺 மோகினி அமுதத்தை இருவருக்கும் சரிபாதியாக பகிர்ந்தளிப்பதாக கூறினாள். பின் அசுரர்களையும், தேவர்களையும் இரு வரிசைகளாக நிற்கச் சொன்னார். முதலில் எந்த வரிசைக்கு கொடுக்கட்டும் அல்லது ஒருவர் மாற்றி ஒருவராக தரட்டுமா என கேட்டார்.

🌺 மோகினியின் அழகில் மயங்கிய அசுரர்கள் அமுத கலசத்தின் அடிப்பாகத்தில் உள்ள அமுதத்தை தங்களுக்கும் தெளிந்த மேல் பகுதியை தேவர்களுக்கும் அளிக்கலாம் எனக் கூறினார்கள்.

🌺 தேவர்களுக்கு அமுதம் அதிகமாகவே மோகினியால் விநியோகம் செய்யப்பட்டது. இதை அறியாத அசுரர்கள் நாக்கை சப்புக் கொட்டிக்கொண்டு வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

🌺 மோகினியின் சூழ்ச்சியை உணர்ந்த சுவர்பானு தேவரை போல் உருவம் மாற்றிக் கொண்டு தேவர்கள் நின்ற வரிசையில் நின்றார். மோகினி ஆளைப் பாராமல் அமுதத்தை சுவர்பானுவிடம் கொடுத்து விட்டார்.

🌺 அமுதம் கிடைத்தவுடன் அதை சட்டென்று சுவர்பானு பருகிவிட்டான். ஆனால், எவரும் அறியவில்லை என்று கருதிய சுவர்பானுவின் செயலை கவனித்த சூரியன் மற்றும் சந்திரன் சுவர்பானுவை அசுரன் என்று காட்டிக் கொடுத்து விட்டார்கள்.

🌺 இதையறிந்த மோகினி சுவர்பானுவின் தலையை துண்டித்து விட சுவர்பானு தலை வேறு, உடல்வேறாகிவிட்டான். இருப்பினும் அமுதம் உண்ட காரணத்தால் மரணம் ஏற்படாமல் தலைக்கு பாம்பின் உடலும், உடலுக்கு 5 பாம்பின் தலையும் முளைத்து உயிரை காத்தன.

🌺 இத்தகைய மாறுபட்ட உருவ அமைப்பை கொண்ட சுவர்பானுவை தேவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. சுவர்பானுவின் செயலால் அசுரர்களுக்கு கிடைக்க வேண்டிய அமுதம் கிடைக்காமல் போனது என்று அவரை வெறுத்தனர் அசுரர்கள். அதனால் சுவர்பானுவை அசுரர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

🌺 மிகவும் வருந்தத்தக்க நிலையை அடைந்த சுவர்பானு பிரம்மதேவரை தஞ்சமடைந்தார். பிரம்மதேவரும் மனமிறங்கி வரத்தை கேள் என்று கூறினார். சுவர்பானு தனது பழைய நிலையை அடைய அருள் பாவிக்குமாறு கூறினார்.

🌺 பிரம்மதேவரோ ஸ்ரீமந் நாராயணன் தண்டிக்கப்பட்ட உனக்கு அம்மாதிரியாக வரம் அளிக்க இயலாது. நீ இன்று போல் என்றும் இரு வேறு உடல் பிரிவுகளை கொண்டவராக இருப்பாய் என அருளினார்.

🌺 மேலும், மனிதத் தலையும் பாம்பு உடலும் கொண்ட உடல் அமைப்பிற்கு 'ராகு" என்றும், மனித உடலும் பாம்பின் தலையும் கொண்ட அமைப்புக்கு 'கேது" என்ற பெயரும் நிலைக்கும் என்றார் பிரம்மதேவர்.

பிரம்மதேவர் சுவர்பானுவிற்கு அளித்த வரம் :

🌺 சூரியன் மற்றும் சந்திரனால் காட்டி கொடுக்கப்பட்டு இந்த நிலை அடைந்ததால் அவர்களை பழி வாங்குவதற்கு அருள் பாவிக்க வேண்டும் என்று வேண்டினார் சுவர்பானு. பிரம்மதேவர் எவ்வளவு எடுத்துரைத்தும் சமாதானம் அடையாத சுவர்பானுவை கண்ட பிரம்மதேவர் நவகிரக பரிபாலனத்தில் இணையும்போது சூரியன் மற்றும் சந்திரன் ஒளிகளை அடக்கி அவர்களுக்கு கிரகண தோஷத்தை ஏற்படுத்துவீர்களாக என அருள் புரிந்தார்.

🌺 இதுவே அவர்களின் செயலுக்கான தண்டனை. இத்துடன் திருப்திக்கொள் என்றார் பிரம்மதேவர். மேலும், நீங்கள் இருவரும் மற்ற கிரகங்களை போல் முன்னோக்கி செல்லாமல் பின்னோக்கி எதிர் எதிராக சஞ்சாரம் செய்வீராக என அருள் பாவித்தார்.

🌺 அப்போது மகாவிஷ்ணு ராகு, கேதுவின் முன் தோன்றினார். நவகிரக பரிபாலனத்தில் இடமளித்தும் ஒளியை அளிக்கும் சூரியன் மற்றும் சந்திரனுக்கு கிரகணமாக பிடிக்கும் வரத்தினை அளித்து விட்டீர்களா? என பிரம்மதேவரிடம் கேட்டார். மேலும், அசுரர்களின் ஆட்சி நடக்கும் காலத்தில் ஒரு அசுரனை எவ்வாறு நவகிரக பரிபாலனத்தில் ஈடுபடுத்த முடியும்.

🌺 இது அசுரர்களின் பலத்தை மேலும் அதிகரிக்கும். எனவே கடைசி அசுரன் இராவணன் அழியும் வரை இவர்கள் இருவரில் கேதுவானவன் கடக ராசியில் அமர்ந்து ரிக், யஜூர், சாம வேதங்களையும், ராகுவானவன் மகர ராசியில் இருந்து அதர்வண வேதத்தையும் உரியவர்கள் மூலம் கற்றுணர்ந்து வேத ஞானம் பெற்ற ராகு ஞானகாரனாகவும், கேது மோட்சகாரனாகவும் செயல்பட்டு பூமியில் தோன்றிய உயிர்களுக்கு ஞானம் மற்றும் மோட்சம் பெற அனுகிரகம் செய்யட்டும் என்றார். அதன்படியே, இறுதியில் அசுரன் இராவணன் மாண்ட பிறகு நவகிரகங்களில் இருவரும் கிரக அந்தஸ்து பெற்று சஞ்சாரம் செய்யத் தொடங்கினார்கள்.

ராகுவால் ஏற்படும் தோஷங்கள் :

🌟 ராகு 2ல் இருந்தால் குடும்ப வாழ்க்கை சரியாக அமையாது.

🌟 ராகு 4ல் இருந்தால் மனை தோஷம் ஏற்படும்.

🌟 ராகு 7ல் இருந்தால் திருமண தோஷம் உண்டாகும்.

கேதுவால் ஏற்படும் தோஷங்கள் :

🌟 திருமணத் தடையை ஏற்படுத்துவார்.

🌟 குழந்தை பாக்கியத்தை தாமதப்படுத்துவார்.

🌟 அவச்சொற்களுக்கு ஆளாக்குவார்.

🌟 கேது 12ல் இருந்தால் மோட்சம் தருவார்.

ராகுவிற்கான பரிகாரங்கள் :

🌟 கும்பகோணத்தில் உள்ள திருநாகேஸ்வரம் கோவிலில் உள்ள ராகுபகவானை வணங்கி வர தோஷம் நிவர்த்தியாகும்.

🌟 அரசமரமும், வேப்பமரமும் உள்ள இடத்தில் சர்ப்ப கிரகத்தை பிரதிஷ்டை செய்துள்ள இடத்திற்கு சென்று வழிபட தோஷ நிவர்த்தியாகும்.

🌟 செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பு.

கேதுவிற்கான பரிகாரங்கள் :

🌟 விநாயகரை அருகம்புல் மாலை போட்டு வணங்கி வர தோஷம் நிவர்த்தியாகும்.

🌟 காஞ்சிபுரத்தில் உள்ள சித்ரகுப்தர் ஆலயம் சென்று வழிபட கேதுவினால் ஏற்பட்ட தோஷம் நிவர்த்தியாகும்.

சுபம்!!

புதன், 25 டிசம்பர், 2019

2020 ஆம் ஆண்டின் பிரதோஷ நாட்கள் அட்டவணை.


2020 ஆம் ஆண்டின் பிரதோஷ நாட்கள் அட்டவணை. 
      
08.01.2020 புதன்கிழமை
22.01.2020 புதன்கிழமை
06.02.2020 வியாழக்கிழமை
21.02.2020 வெள்ளிக்கிழமை
07.03.2020 சனிக்கிழமை மஹா பிரதோஷம்
21.03.2020 சனிக்கிழமை மஹா பிரதோஷம்
05.04.2020 ஞாயிற்றுக்கிழமை
20.04.2020 திங்கட்கிழமை
 (சோமவார பிரதோஷம்)
05.05.2020 செவ்வாய்க்கிழமை
20.05.2020 புதன்கிழமை
03.06.2020 புதன்கிழமை
18.06.2020 வியாழக்கிழமை
02.07.2020 வியாழக்கிழமை
18.07.2020 சனிக்கிழமை மஹா பிரதோஷம்
02.08.2020 சனிக்கிழமை மஹா பிரதோஷம்
16.08.2020 ஞாயிற்றுக்கிழமை
30.08.2020 ஞாயிற்றுக்கிழமை
15.09.2020 செவ்வாய்க்கிழமை
29.09.2020 செவ்வாய்க்கிழமை
14.10.2020 புதன்கிழமை
28.10.2020 புதன்கிழமை
12.11.2020 வியாழக்கிழமை
27.11.2020 வெள்ளிக்கிழமை
12.12.2020 சனிக்கிழமை மஹா பிரதோஷம்
27.12.2020 ஞாயிற்றுக்கிழமை .

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

குசேலர் தினம் மார்கழி மாதம் முதல் புதன் கிழமை டிசம்பர் 18.


குசேலர் தினம்  மார்கழி மாதம் முதல் புதன் கிழமை  டிசம்பர் 18.

குருவாயூர் குருவாயூரப்பன் கோயிலில் மார்கழி மாதம் முதல் புதன் கிழமையை "குசேலர் தின"மாக
கொண்டாடுகிறார்கள்.

கிருஷ்ணன், குசேலருக்கு அனுக்கிரகம் செய்த நாளாதலால் அன்று பக்தர்கள், இலையில் அவல், அச்சு வெல்லக்கட்டி ஆகியவற்றை கொண்டு வந்து குருவாயூரப்பனை வணங்குவது வழக்கம்.

  கண்ணனின் தரிசனத்தால் குசேலருக்குக் கிடைத்த ஐஸ்வர்யம், செல்வச் செழிப்பு தங்களுக்கும் கிடைக்க வேண்டு மென்று வேண்டிக் கொண்டு, படிக்கணக்கில் இறைவனுக்கு அவல் காணிக்கை செலுத்துகின்றனர்.

குசேலர், கிருஷ்ணனை தரிசிக்க ஆவலுடன் , அவல் கொண்டு சென்ற நாள் , மார்கழி மாதம் முதல் புதன் கிழமை. அதனால் , இன்றும் குருவாயூரி்ல் , மார்கழி முதல் புதன் கிழமையை , குசேலர் தினமாக கொண்டாடுகின்றனர் ..

அன்றைய தினம் , ஸ்ரீ குருவயூரப்பனக்கு அவலும் ,
அவல் பாயசமும் நைவேத்யம் செய்யப்படுகிறது .

 பக்தர்களும் , ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு அவல் கொண்டு வந்து காணிக்கையாக தருவர்.இதனால் , தங்களுக்கு , ஸ்ரீ கிருஷ்ணன் அருள் புரிந்து , அவரவர் வீட்டுக்கு சுபிக்ஷம் வந்து சேரும் என்பது நம்பிக்கை !!!!!

கிருஷ்ணரும், குசேலரும் சிறுவயதில் நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள். கிருஷ்ணர் கோகுலத்தைப் பிரிந்து துவாரகாபுரி மன்னன் ஆனார்.

குசேலர் பரம ஏழையாக தன் ஊரிலேயே வாழ்ந்து வந்தார்.
"குசேலம்" என்றால் கிழிந்து நைந்துபோன துணியைக் குறிக்கும். ஏழ்மையின் காரணமாக அத்தகைய ஆடையை அணிந்திருந்த படியால், சுதாமா என்ற அவரது இயற்பெயர் மறைந்து குசேலர் என்ற பெயராலேயே அழைக்கப்படலானார்.

இவரது மனைவி பெயர் "க்ஷுத்க்ஷாமா(சுசீலை) என்பதாகும்.  பசியால் வருந்தி மெலிந்த தேகம் உடையவள் என்பது இப்பெயரின் பொருள்.

 திருமணமாகி அவருக்கு 27 குழந்தை கள் பிறந்ததால் சாப்பாட் டுக்கே அல்லாடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஒருநாள் அவர் கிராமத்தில் எல்லாரும் கிருஷ்ணரின் வள்ளல் தன்மை பற்றி புகழ்ந்து பேசினார்கள். தன்னை நாடி வரும் அனை வருக்கும் பொன்னும், பொருளுமாக வாரி, வாரி கிருஷ்ணர் கொடுப்பதாக கூறினார்கள்.

 உடனே குசேலரிடம், அவரது மனைவி சுசீலா,
"நம் குடும்பத்தில் வறுமை தாண்டவமாடுகிறது.
நீங்கள் துவாரகாபுரி சென்று உங்கள் நண்பர் கிருஷ்ணரை பார்த்து வாருங்கள் என்றாள்.

முதலில் தயங் கிய குசேலர் பிறகு குழந்தைகளுக்காக ஒத்துக் கொண்டார்.

வெறுங்கையுடன் போகக் கூடாது என்று, பல வீடுகளில் அவல் யாசகம் எடுத்து, அதை, ஒரு கந்தல் துணியில் முடிந்து, துவாரகைக்குப் புறப்பட்டார்.
குசேலர் வந்துள்ள தகவல் அறிந்ததும் கிருஷ்ணர் வாசலுக்கே ஓடி வந்து வரவேற்றார்.

குசேலரை அழைத்துச் சென்று தன் சிம்மாசனத்தில் அமர வைத்தார். பிறகு குசேலர் கால்களை மஞ்சள் நீரால் கழுவி உபசரித்து பல்சுவை உணவு கொடுத்தார். குசேலருக்கு இது கூச்சமாக இருந்தது. செல்வ செழிப்பில் மிதந்த கிருஷ்ணருக்கு அவலை எப்படி கொடுப்பது என்று வெட்கப்பட்டார்.

இதை கவனித்து விட்ட கிருஷ்ணர் குசேலர் மறைத்த அவல் பொட்டலத்தைப் பிடுங்கி, ஆகா எனக்குப்பிடித்த அவல் கொண்டு வந்து இருக்கிறாயா என்று ஆனந்தத்துடன் சாப்பிட ஆரம்பித்தார். கிருஷ்ணர் தன் வாயில் ஒரு பிடி அவல் போட்டுக் கொண்டதும் "அட்சயம்'' என்று உச்சரித்தார்.

மறு வினாடி கிராமத்தில் குசேலர் வீட்டில் வசதிகள் பெருகின.குசேலரின் குழந்தைகளுக்கு நல்ல உணவு, உடை, ஆபரணங்கள் கிடைத்தன. கிருஷ்ணரின் ஆசியால் குசேலரின் குடிசை வீடு, மாளிகையாக மாறியது.

 இந்த குசேலரின் கதையை ஸ்ரீமத் பாகவதம் 10-ஆவது ஸ்காந்தம் விரிவாகக் கூறுகிறது.

#குசேலர் தினமான #மார்கழி மாத முதல் புதன்கிழமையன்று நம்வீடுகளிலும் குருவாயூரப்பன் படம் அல்லது கிருஷ்ணர் படம்வைத்துப் பூஜித்து, வெல்லம் கலந்த அவல் நிவேதிக்கலாம்.

ஓம் நமோ நாராயணாய !

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !

சூரிய கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவைகளின் முழு விபரம்


சூரிய கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவைகளின் முழு விபரம்

  பொதுவாக கிரகணம் என்பதற்கு எடுத்தல், மறைத்தல் என்று பொருள். ஆண்டு தோறும் கிரகண நிகழ்வு நடக்கின்றது. இதில் யார் மறைக்கிறார், எடுக்கிறார் என்பதில் தான் இருக்கின்றது.நம் கண்களுக்கு தெரியக்கூட கிரகங்கள் இரண்டு சூரியன் மற்றும் சந்திரன். கிரகணங்களில் சில நம் பகுதிக்கு தெரியும், சில நமக்கு தெரியாது. அப்படி நமக்கு தெரியாத கிரகணங்கள் பற்றி நாம் பயப்படத் தேவையில்லை.


ராகு - கேது ஆகிய இருவர் தான் சூரியனை மறைத்தல், விழுங்குவதாக ஐதீகம். ராகு - கேது இருவரும் சர்ப்ப கிரகம், நிழல் கிரகம் என கூறப்படுகிறது.சூரியன் கிரகணம் நடக்கும் போது சூரியன் மறைக்கப்பட்டு கருமையாகக் காட்சி தருவார். அப்படி கிரகண காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்பவற்றை தெரிந்து கொள்வது அவசியம்.


செய்ய வேண்டியவை

இறை வழிபாடு, இறைவனை நினைத்து ஜெபம் செய்வதால் பலன்கள் பல மடங்காக கிடைக்கும். இறைவனை நோக்கி ஒரு மந்திரம் சொன்னால், ஆயிரம் மடங்கு பலன் அதிகரிக்கும்.கிரகண நேரத்தில் தீட்சை வாங்குவது, உபதேசம் வாங்குவது நல்லது. சிலர் சொன்னால் நடக்கும் என கூறுவார்கள் அல்லவா. அவர்கள் கிரகண காலத்தில் ஜெபம் செய்து தன் சக்தியை அதிகரித்து வைத்திருப்பார்கள். குருமார்களிடன் உபதேசம் வாங்குவது, வாக்கு வாங்குவது மிக நல்லது.நீர் நிலைகளுக்கு சென்று அது குளம், ஆறு என எதுவாக இருக்கலாம், அதில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு நமக்கு என்ன மந்திரம் தெரியுமோ, அதை முடிந்த அளவு பல முறை சொல்லுங்கள். அதனால் கிடைக்கக் கூடிய பலன் பல கோடி மடங்கு உயரும். இரவு நேரங்களில் கிரகணமோ அல்லது நீர் நிலை அருகில் இல்லாதவர்கள் உங்கள் வீட்டிலேயே பூஜை அறையில் அமர்ந்து இறைவனை ஜெபித்தல் நல்லது.மூன்று ஜென்மங்களில் ஆயுள் முழுவதும் செய்தால் கிடைத்த பலன், கிரகண நேரத்தில் செய்வதால் கிடைக்கும்.

சூரிய கிரகணம் நேரம்

விகாரி ஆண்டு மார்கழி மாதம் 10ஆம் நாள், (டிசம்பர் 26) வியாழக்கிழமை, அமாவாசை திதியில், மூல நட்சத்திரத்தில் ஏற்படுகிறது.
இந்திய நேரப்படி காலை 07:05 மணி முதல் மதியம் 01.35 மணி வரை சூரிய கிரகணம் நீடிக்கிறது.

பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரம் :

கேட்டை, மூலம், பூராடம், அசுவதி, மகம் ஆகிய நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் பரிகாரம் செய்துகொள்வது நல்லது.
சொல்ல வேண்டிய மந்திரம் :
யோசெள வஜ்ரதரோ தேவ ஆதித்யானாம் ப்ரபுர்மதா:|
ஸஹஸ்ர சந்த்ர நயன க்ரஹ பீடாம் வ்யபோஹத்||

எளிய மந்திரங்கள் :

ஓம் சிவாய நமஹ
ஓம் கணபதியே நமஹா
ஓம் சரவண பவ
என நமக்கு தெரிந்த மந்திரங்கள் தெரியுமோ, உங்களுக்கு எந்த சுவாமி பிடிக்குமோ அவருக்குரிய மந்திரங்களை சொல்லலாம். அதை தொடர்ந்து சொல்லி வருவது நல்லது. இவற்றை ஜெபித்து வர பல கோடி மடங்கு பலன் கிடைக்கும். அதோடு இதனால் உங்களுக்கு இருக்கக் கூடிய தோஷங்கள் நீங்கும்.
யோகம், தியானம் செய்தால் நன்மை உண்டாகும்.


செய்யக் கூடாதவை:
*கிரகண நேரங்களில் உணவு அருந்தக் கூடாது. நீர், காபி, டீ எடுத்துக் கொள்ளுதல் கூடாது. ஏன் என்றால் சர்ப்ப கிரகங்களான ராகு - கேதுவின் விஷங்கள் ஒளிக்கதிர் மூலமாக வருவதாக ஐதீகம்.அறிவியல் ரீதியாக ஒளிக்கற்றையில் கதிர் வீச்சுக்கள் இருக்கும் என்பதால் அது நல்ல பொருட்கள் மீது பட அசுத்தம் ஏற்பட்டுவிடும் என்பார்கள் அதனால் தான் கோயில்களை கூட அந்த நேரத்தில் பூட்டி விடுவார்கள். கிரகணம் முடிந்த பின்னர் சுத்தம் செய்து பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுவார்கள். கிரகணங்கள் மூலமாக சில நட்சத்திரங்களுக்குத் தோஷம் உண்டாகலாம்.
*தர்ப்பை புல்லுக்கு எதையும் உட்கிரகித்துக் கொள்ளும் தன்மை உண்டு. அதனால் கிரகண நேரத்தில் நீங்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்கள், உணவு பொருட்களின் மீது தர்ப்பை போட்டு வைப்பது நல்லது.
*தர்ப்பை இருக்கும் காட்டிற்கு பாம்பு செல்லாது. தர்ப்பைக்கு விஷயத்தை முறியடிக்கக் கூடிய தன்மை உண்டு. இதனால் தண்ணீர் தொட்டிக்குள் தர்ப்பை புல் போட்டு வைக்க வேண்டும்.
*கிரகண நேரத்தில் கண்டிப்பாக தூங்கக் கூடாது. அப்படி செய்தால் தூங்குவது தான் வாழ்க்கையில் அதிகம் நீடிக்கும்.
*கிரகணம் முடிந்த பின்னர் தலைக்கு குளிக்க வேண்டும். அதன் பின்னர் சுவாமி வழிபாடு செய்ய வேண்டும்.
*கர்ப்பிணிகளுக்கு கிரகண தோஷம் அதிகம்கிரகண தோஷங்கள் கர்ப்பிணி பெண்களை அதிகம் பாதிக்கும். பக்‌ஷி தோஷம், சர்ப்ப தோஷம் எளிதில் உட்கிரகிக்கும். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் இந்த கிரகண காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக் கூடாது. படியில் அமரக் கூடாது. இதனால் குழந்தைக்கு பாதிப்புகள் ஏற்படலாம்.அவர்களும் கிரகண நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.
நன்றி தினகரன்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கடிகாரத்தை எந்த திசையில் மாட்ட வேண்டும்?



கடிகாரத்தை எந்த திசையில் மாட்ட வேண்டும்? - ஜோதிடரின் பதில்...!

ஜோதிடர் பதில்கள் !!
1. கடிகாரத்தை எந்த திசையில் மாட்ட வேண்டும்?

🌟 கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவரில் மாட்டுவது சிறந்தது.

2. தொலைந்துப்போனவர் மீண்டும் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடைமைகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3. பௌர்ணமியன்று வைத்தியம் பார்க்கலாமா?

🌟 பௌர்ணமியன்று வைத்தியம் பார்க்கலாம்.

4. பௌர்ணமி நாளில் நகை வாங்கலாமா?

🌟 பௌர்ணமி நாளில் நகை வாங்கலாம்.

5. ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. மயிலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மயிலை கனவில் கண்டால் புதிய வாய்ப்புகளால் சாதகமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

7. பாம்பு பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதுவிதமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

8. வாழைப்பழம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வாழைப்பழம் கொடுப்பது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

9. குப்பை அள்ளுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குப்பை அள்ளுவது போல் கனவு கண்டால் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் என்பதைக் குறிக்கிறது.

10. இறந்தவர்கள் தன் பேத்தியை பள்ளிக்கு அழைத்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதிகள்.


திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதிகள்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதிகளைத் தரிசிக்கும் ஆவல் கிட்டத்தட்ட எல்லாருக்கும் இருக்கும்.

 *ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து நவதிருப்பதிக்குமான சரியான போக்குவரத்து வசதி இல்லாததும், தனியே கார் வேன் போன்ற வாகனங்களில் செல்பவர்களுக்குக் கூட எந்த நேரத்தில் எந்த கோவில் வழி சென்றால் தடையில்லாமல் தரிசனம் முடித்து வரலாம் என்று தெரியாததும் தான்.*

பொது வாகனமின்றி, தனி வாகனத்தில் செல்பவர்களுக்கான வழிமுறைகளை இங்கே பகிர்கிறோம். படித்து விட்டு எளிமையாக நவதிருப்பதிகளையும் தரிசித்து வருவீர்கள் என்பதற்கு உத்திரவாதம் கொடுக்கிறோம்.

 முதலில், ஒன்பது கோவில்களின் நடை திறந்திருக்கும் நேரத்தினைப் பார்த்து விடலாம்.

*🔯ஸ்ரீவைகுண்டம் –* காலை 7-12      மாலை 5 - 8
*🔯ஸ்ரீ வரகுணமங்கை –* காலை 8 - 1     மாலை 1.30 - 6
*🔯திருப்புளியங்குடி –* காலை 8 - 1     மாலை 1.30 - 6
*🔯இரட்டைத் திருப்பதி –* காலை 8 - 1     மாலை 2. - 6
*🔯பெருங்குளம் *–* காலை 7.30 - 12     மாலை 5 – 8.30
*🔯தெந்திருப்பேரை –* காலை 7.30 - 12     மாலை 5 – 8.30
*🔯திருக்கோளூர் –* காலை 7.30 - 12     மாலை 5 - 8
*🔯ஆழ்வார்திருநகரி –* காலை 6 - 12  மாலை 5 - 8.45

முதலில், அதிகாலையில் யாத்திரை தொடங்குபவர்களுக்கான வழியைப் பார்ப்போம்.

🔯காலை ஆறு மணிக்கு ⚜ஆழ்வார்திருநகரியை அடைந்தால், 6.45 மணிக்குள் தரிசனம் முடித்து விட்டு, மதியம் வரை பசி தாங்குபவர்கள் டீ, காஃபி சாப்பிட்டுக் கொண்டும், பசி தாங்காதவர்கள் 7- 7.30க்குள் காலை சிற்றுண்டியை முடித்துக் கொள்ளவும். 7.30க்கு ⚜திருக்கோளூர், 8.15க்கு ⚜தென்திருப்பேரை, 9 மணிக்கு ⚜பெருங்குளம், 9.45க்கு ⚜இரட்டைத் திருப்பதி தரிசனம் என காலை 10.45 மணிக்கு முடிக்கலாம்.
...
அடுத்ததாக நேராக ⚜ஸ்ரீவைகுண்டம் சென்று விட வேண்டும். 11.45 – 12 மணிக்குள் தரிசனம் முடித்து விடலாம். அதன் பிறகு, ⚜திருவரகுணமங்கையும், ⚜திருப்புளியங்குடியையும் ஒரு மணிக்குள் நிறைவு செய்யலாம்.

குறிப்பு : இந்த வரிசையில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் கூட, மதியம்  1.30க்கு நடை திறப்பதால் ⚜திருவரகுணமங்கையும், ⚜திருப்புளியங்குடியும் அடுத்ததாக தரிசித்துக் கொள்ளலாம்.

ஒரு வேளை காலை 8-9 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்திலிருந்து யாத்திரை தொடங்குபவர்கள், 2, ஆழ்வார்திருநகரி, 3, திருக்கோளூர், 4, தெந்திருப்பேரை, 5, பெருங்குளம், ஆகியவற்றை 12 மணிக்குள் முடித்துக் கொண்டு, பின் உங்கள் நேரத்திற்குத் தகுந்தாற் போல, இரட்டைத்திருப்பதி, திருப்புளியங்குடி, வரகுணமங்கை என்று நிறைவு செய்யலாம்.

மதியம் உணவுக்குப் பிறகு கிளம்புபவர்கள்:
இரட்டைத்திருப்பதியில் தொடங்கி திருப்புளியங்குடி, வரகுணமங்கை, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருக்கோளூர், தெந்திருப்பேரை, பெருங்குளம் என்று நிறைவு செய்யலாம்.

மாலை 4 மணிக்குத் தொடங்குபவர்கள்:

மதிய உணவிற்குப் பின் கிளம்புபவர்கள் போலவே பயணிக்கலாம்.

குறிப்பு : முடிந்தளவு, இருட்டிய பிறகு தாமிரபரணியின் வலப்புற திருப்பதிகள் அதாவது, இரட்டைத் திருப்பதி, திருப்புளியங்குடி, பெருங்குளம், தென்திருப்பேரை ஸ்தலங்களுக்குப் பயணிப்பதைத் தவிருங்கள். காரணம், குறுகிய பாதை, பொதுவிளக்குகள் அதிகமில்லா சாலைகள். வாகனங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், உடனடி உதவி கிடைக்க வாய்ப்பு குறைவு.

இது பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். அனைவருக்கும் பகிருங்கள். எல்லாருக்கும் நாராயணன் அருள் கிடைக்கப் பிராத்திக்கிறோம்.

மார்கழி அமாவாசை... முன்னோர்களின் ஆசியை பெற்று... நற்பேறு அடையுங்கள்... !!



மார்கழி அமாவாசை... முன்னோர்களின் ஆசியை பெற்று... நற்பேறு  அடையுங்கள்... !!

மார்கழி மாத அமாவாசை!!

12 மாதங்கள் கொண்ட தமிழ் வருடத்தில் சூரியன் தட்சிணாயனம் எனப்படும் தென்திசையில் சஞ்சரிக்கும் இறுதியான மாதம் மார்கழி மாதம் ஆகும். மார்கழி மாதம் என்பது சிவ மற்றும் விஷ்ணு வழிபாட்டிற்குரிய மாதமாகும்.

இந்த மாதத்தில் வரும் அனைத்து தினங்களும், திதிகளும் ஆன்மிக முக்கியத்துவம் கொண்டவையாகும். இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த வகையில் 'மார்கழி மாத அமாவாசை" தினத்தின் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

🌚'மார்கழி" மாதத்தில் வரும் அமாவாசை தினமும், மற்ற மாதங்களில் வரும் அமாவாசை தினங்கள் போன்றே முக்கியமான திதி தினமாகும். இம்மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் முன்னோர்கள் வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் நன்மையானது.

🌚மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு, குறிப்பாக எதிர்பாராத விதத்தில் மரணித்த முன்னோர்கள் அல்லது உறவினர்களுக்கு திதி, தர்ப்பணம் போன்றவற்றை தருவதாலும் அல்லது அவர்களை வழிபடுவதாலும் அவர்களுக்கு பெருமாளின் வைகுண்ட வாச பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

🌚இன்று (புதன்கிழமை) மார்கழி மாத அமாவாசை தினம். இந்த நாளில், வீடு மற்றும் பூஜையறையை சுத்தப்படுத்தி, முன்னோர்களின் படங்கள், இறந்துவிட்ட நம் தாய், தந்தையரின் படங்களை சுத்தம் செய்து, படங்களுக்கு பூக்களை அணிவியுங்கள். முடிந்தால், துளசி மாலை சாற்றலாம்.

🌚மார்கழி அமாவாசை தினமான இன்று காலையில் குளித்து முடித்து, ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி, தர்ப்பணம் தரலாம்.

🌚இந்தநாளில், தர்ப்பணம் அல்லது எள்ளும், தண்ணீரும் விட்டு முன்னோரை வணங்க வேண்டும். ஆச்சார்யர்களுக்கு வெற்றிலை, பாக்கு, அரிசி, வாழைக்காய் கொடுத்து தட்சணையும் வழங்கி நமஸ்கரிக்க வேண்டும்.

🌚இப்படி தர்ப்பணம் தர இயலாதவர்கள் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு தரலாம். காகம் நம் முன்னோர்களின் மறுவடிவம் என்கிறது சாஸ்திரம். நம் முன்னோர்களை மனதில் நினைத்து, நான்கு பேருக்காவது அன்னதானம் செய்யலாம்.

🌚இந்தச் செயல்களால், நம் முன்னோர்கள் குளிர்ந்து போவார்கள். நம்மையும், நம் குடும்பத்தையும் ஆசீர்வதித்து அருளுவார்கள்.

🌚மார்கழி அமாவாசை தினத்தில் மேற்கண்டவற்றை செய்வதால் முன்னோர்களுக்கு சரியான காலத்தில் பித்ரு சிரார்த்த சடங்குகள் செய்ய முடியாததால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

🌚உங்கள் பரம்பரையில் இயற்கைக்கு மாறான முறையில் மறைந்த முன்னோர்கள் அல்லது உங்களின் உறவினர்களின் ஆன்மா சாந்தியடைந்து நற்கதியடையும்.

மார்கழி அமாவாசை தினத்தில் மறக்காமல் முன்னோர்களுக்கு ஆராதனை செய்து நற்பேறு அடைவோம்...!!

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

செவ்வாய், 24 டிசம்பர், 2019

அற்புதங்களை நிகழ்த்தும் அனுமன்



அற்புதங்களை நிகழ்த்தும் அனுமன்

மகாவிஷ்ணு, ராமனாக அவதரித்தபோது, அவருக்கு உதவி செய்தவர்கள் பலர். அப்படி உதவி செய்தவர்களில் முதன்மையானவராக இருந்து, ராமனுடனேயே தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டவர் அனுமன். அவரது பிறப்பும், வாழ்வும், ராமன் மீது கொண்டிருந்த அளவற்ற பக்தியுமே அவரை வழி பாட்டுக்கு உரியவராக மாற்றின.


அனுமன் ஜெயந்தி

‘ஹனுமான்’ என்ற வடமொழிப் பெயரில், ‘ஹனு’ என்பது ‘தாடை’ என்றும், ‘மன்’ என்பது ‘பெரியது’ என்றும் பொருள்படும். தாடை பெரிதான தோற்றம் கொண்டவர் என்பதால் ‘ஹனுமான்’ என்று அழைக்கப்பட்டார். அந்தப் பெயரில் தமிழ் வடிவமே ‘அனுமன்.’ வானர வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதால் ‘மாருதி’ என்றும், அஞ்சனை-கேசரி மகன் என்பதால் ‘ஆஞ்சநேயர்’ என்றும் பெயர் பெற்றார்.

ராமாவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கு, அனைத்து ஜீவராசிகளும் தங்களால் இயன்ற உதவிகளை செய்வதைப் பார்த்த சிவபெருமான், தன் பங்குக்கும் ஏதாவது செய்ய நினைத்தார். அதன்படி தன்னுடைய சக்தியை எடுத்துச் சென்று ஒரு பெண்ணிடம் தருமாறு வாயுதேவனை பணித்தார். அந்த நேரத்தில் தான் அஞ்சனை தனக்கு பார் போற்றும் மைந்தன் வேண்டும் என்று இறைவனை நினைத்து தவம் செய்தாள். அவளிடம் அந்த சக்தியைச் சேர்த்தார் வாயுதேவன். அதன்படி சிவபெருமானின் சக்தியாக அவ தரித்தவரே ஆஞ்சநேயர் என்ற கூற்று ஒன்று உள்ளது.

மகாபாரதத்தில் வரும் அர்ச்சுனன்- கிருஷ்ணனின் நட்பைப் போன்றது, ராமாயணத்தில் வரும் அனுமன்- ராமரின் நட்பு. ராமரின் மூலமாக வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இருந்த பகையை முடிவுக்குக் கொண்டு வந்தார். இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை கண்டு வந்து ராமருக்கு ஆறுதல் அளித்தார். அசோக வனத்தில் இருந்த சீதையால் சிரஞ்சீவியாக இருப்பாய் என்று ஆசீர்வதிக்கப்பட்டவர் அனுமன். ராவணனுடனான யுத்தத்தில் இந்திரஜித் செலுத்தி அம்பு பட்டு மூர்ச்சையான லட்சுமணனை காப்பாற்றுவதற்காக சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்தார். 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ராமர் வர தாமதமானதால், தீக்குளிக்கச் சென்ற பரதனை காற்றை விட வேகமாக சென்று தடுத்து நிறுத்தி காப்பாற்றினார். ராமாயணம் முடிந்து மகாபாரத காலம் வந்தது. அப்போது நடந்த குருசேத்திர யுத்தத்தில் கிருஷ்ணர் ஓட்டிய தேரின் மேல் கொடியாக இருந்து அனைத்து பாரங்களையும் தாங்கிக்கொண்டிருந்தவர் அனுமன்.

இப்படி பல பெருமைகளை கொண்ட அனுமனை, மகாவிஷ்ணு தனது வாகனமான கருடனுக்கு அடுத்த நிலையில் வைத்திருந்தார். அதனால் இவரை மகாவிஷ்ணுவின் சிறிய திருவடியாக கூறுவர். அதே சமயம் கருடாழ்வாருக்கு கிடைக்காத ஒரு பெருமையும் அனுமனுக்கு கிடைத்தது. அதாவது பெரிய திருவடியான கருடனுக்கு இல்லாத அளவில் தனிக் கோவில்கள் அனுமனுக்கு பல அமைந்திருக்கின்றன.

அனுமன் வழிபாடும், அவருக்கு தனி கோவில்கள் எழுப்புவதும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இருந்து தொடங்கியதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அனுமனுக்கான ஆலயங்களில் வீரக் கோலம், நின்றகோலம், யோகக் கோலம் என மூன்று நிலைகளில் அனுமன் அருள்பாலிப்பார். அனுமன் ‘சிரஞ்சீவி’ என்ற பட்டத்தைக் கொண்ட எழுவரில் ஒருவர்.

அனுமனை வழிபாடு செய்தால், திருமால், சிவன், ருத்ரன், பிரம்மா, இந்திரன், கருடாழ்வார் ஆகியோரை வழிபட்ட பலன் கிடைக்கும். அவரது வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதால், அவரை வழிபடுவோருக்கு நவக்கிரகங்களால் பாதிப்பு ஏற்படாது. அனுமன் வழிபாட்டினால் அறிவு கூர்மையாகும், உடல் வலிமை பெருகும். மனஉறுதி ஏற்படும். அச்சம் அகலும். நோய் நொடிகள் விலகும். தெளிவு உண்டாகும். வாக்கு வன்மை அதிகரிக்கும். உடல் மனநலம் குன்றியவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தொழில் நஷ்டம் அடைந்தவர்கள், பில்லி சூனியம் ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள், ஊழ்வினையால் துன்புறுகிறவர்கள் அனுமனுக்கு வெற்றிலை மாலை, வடை மாலை, எலுமிச்சைப்பழ மாலை, துளசி மாலை சாத்தி வழிபட்டால் மேன்மை பெறுவார்கள். வெண்ணெய் சாத்தி வழிபட்டால், நம் துன்பங்கள் அனைத்தும் வெப்பம் பட்ட வெண்ணெய் போல கரைந்து போகும் என்பது நம்பிக்கை.

பீமனும்.. அனுமனும்..

வனவாசத்தை முடித்துக் கொண்டு பாண்டவர்கள் நாடு திரும்பினர். அப்போது சவுகந்திகா என்னும் பெயர் கொண்ட மலர் ஒன்று திரவுபதியின் மீது வந்து விழுந்தது. அந்த மலரின் வாசனை திரவுபதிக்கு மிகவும் பிடித்துப் போனது. அதேபோன்ற மலர்கள் நிறைய வேண்டும் என்று ஆசை கொண்டாள். அவளது ஆசையை நிறைவேற்றும் பொருட்டு பீமன் புறப்பட்டான். அவனுக்கு உதவி செய்ய அனுமன் எண்ணினார். இமயமலைச் சாரலை அடைந்து, அங்கு பீமன் வரும் வழியில் பாதையை அடைத்தவாறு படுத்துக் கிடந்தார். வேகமாக வந்து கொண்டிருந்த பீமன், வழியில் வாலை நீட்டியவாறு படுத்திருந்த மாருதியை தள்ளிப் படுக்குமாறு கூறினான். அனுமன் முடியாது என்று கூற இருவருக்கும் வாக்குவாதம் வளர்ந்தது.

முடிவில் மாருதி பீமனைப் பார்த்து “நீயே என் வாலை இழுத்து அப்பாற் தள்ளிவிட்டுச் செல்” என்றார். பீமன் அவரது வாலை அலட்சியமாக தள்ளினான். ஆனால் ஆஞ்சநேயருடைய வால் கல்போல் கனத்தது. பீமனால் அதை அசைக்கக்கூட முடியவில்லை. பீமன் பிரமித்தான். “பீமா! நான் உன் அண்ணன் ஆஞ்சநேயன்” என்று மாருதி கூறியதும், பீமன் மகிழ்ந்து அவரை அணைத்தான். பின்னர் ஆஞ்சநேயர் இமயமலை தடாகத்தில் மலர்ந்து இருக்கும் சவுகந்திகா மலரைக் காட்டினார். பீமன் அவரை பணிந்து, சவுகந்தியா மலர்களை பறித்துக் கொண்டு சென்றான்.


செந்தூரம் அணிவது ஏன்?

ஒரு முறை சீதாதேவி தனது நெற்றி யில் செந்தூரம் இட்டுக் கொள்வதை பார்த்தார் அனுமன். இதனை பார்த்ததும் சீதாதேவியிடம் சென்று, “அன்னையே! தாங்கள் நெற்றில் செந்தூரம் இடுவதற்கான காரணம் என்ன?” என்று வினவினார். அதற்கு சீதாதேவி, “எனது கணவன் ராமன் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகவே நான், நெற்றியில் செந்தூரம் இடு கிறேன்” என்று பதிலளித்தார். அதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த அனுமன், கருணைக் கடலான ராமர் என்றும் நீடூழி வாழ வேண்டும் என் பதற்காக தன் உடல் முழுவதும் செந்தூரத்தைப் பூசிக் கொண்டார்.

இதனால் தான் ஆஞ்சநேயர் கோவில்களில் அவருக்கு அபிஷேகம் செய்து முடித்ததும் எண்ணெயுடன் செந்தூரம் கலந்து உடல் முழு வதும் பூசுகின்றனர். அதை பக்தர்கள் இட்டுக் கொள்ள தருகின்றனர்.

அனுமனுக்கு அணிவிக்கப்படும் மாலைகள்

ராமரை பிரிந்த ஏக்கத்தில் இறக்கும் முடிவுக்கு சென்ற சீதாதேவி, ராம நாமம் கேட்டு நின்றார். அப்போது மரத்தில் இருந்து குதித்த அனுமன், தான் ராமனின் தூதுவன் என்று கூறி ராமர் கொடுத்த கணையாழியை கொடுத்தார். அதைப் பார்த்ததும் ராமரையே பார்த்தது போல் மகிழ்ந்த சீதாதேவி, அங்கிருந்து வெற்றிலை ஒன்றை பறித்து அனுமனின் தலைமீது போட்டு ஆசி வழங்கினார். இதனால் அவருக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகிறது.

வானரங்களுக்கு வாழைப்பழம் என்றால் மிகவும் பிரியம். அதன் காரணமாக அனுமனுக்கும் வாழைப்பழ மாலை அணிவிக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.

ராமருக்கு (திருமால்) துளசி என்றால் மிகவும் பிடிக்கும். எனவே அனுமனுக்கும் துளசி மாலை சாத்துகின்றனர். தனது பக்தனுக்கு செலுத்தும் மரியாதை தனக்கு செலுத்துவதைப் போன்றது என்ற எண்ணம் கொண்டவர் ராமர்.

போர்க்களத்தில் அனுமன் தன் வீரதீரத்தால், கொழுத்த அசுரர்களை அடித்து உதைத்து வடை போல் கையில் வைத்து தட்டி துவம்சம் செய்தார். அதனால் கொழுப்பு அதிகம் உள்ள உளுந்தினால் வடை செய்து மாலையாக்கி அதை அனுமனுக்கு சாத்துகிறார்கள். அசுரர்களை போல் தீயவற்றில் இருந்து தங்களையும் காத்தருள வேண்டும் என்றும் வடைமாலை சாற்றப்படுகிறது.


16 வகை அபிஷேகம்

சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் பெரிய ஆஞ்சநேயர் திருவுருவம் உள்ளது. ஆண்டுதோறும் பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து அனுமன் ஜெயந்தி அன்று சுசீந்திரம் வந்து இவரை வழிபடுகிறார்கள். அனுமன் ஜெயந்தி அன்று காலை ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பாலால் அபிஷேகம் நடைபெறும். மேலும் நல்லெண்ணெய், தயிர், நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், கரும்புச் சாறு, மாதுளை சாறு, எலுமிச்சை பழச்சாறு, களபம், கஸ்தூரி, மஞ்சள்தூள், சந்தனம், குங்குமம், விபூதி, பன்னீர் என 16 வகையான ஷோடஷ அபிஷேகமும் நடத்தப்படும். பின்னர் கழுத்தளவு நிறையும் அளவுக்கு வாசனை மலர்களால் புஷ்பாபிஷேகமும் நடைபெறும்.


Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

அனுமன் ஜெயந்தி வரலாறும் சிறப்புகளும்



அனுமன் ஜெயந்தி வரலாறும் சிறப்புகளும்.

மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல   புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது   தான்.எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும், கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே   உண்டு. ஹயக்கிரீவர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.   எல்லோரையும் கலங்கச்செய்யும் சனிபகவனையே ஒரு முறை இவர் கலங்கச் செய்தார். இதனால் சனி தோஷத்தினால்   பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. இவர் அவதரிக்க போவதான செய்தியை வாயுபகவானுக்கு, பரம்பொருள் அறிவித்த ஊர்,   மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூர் ஆகும். இந்த ஊரில் தான் திருவாசகம் தந்த மாணிக்க வாசகர் அவதரித்தார். தமிழ்நாட்டில்   திரும்பிய இடமெல்லாம் விநாயகர் கோயில் இருப்பதை போல், மேற்கு தொடர்ச்சி மலை தொடங்கும் கேரளா முதல் மகாராஷ்டிரம்   வரை ஆஞ்சநேயருக்கு தனி கோயில்கள் அதிகம். பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோயில்களில் தனி சன்னதியிலும், சிவன்   கோயில்களில் தூணிலும் அருள்பாலிப்பது வழக்கம்.சொல் ஒன்று இருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் இருப்பது போல், ‘ராமா என   சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப்பூச்சும்,  வெற்றிலை  மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம். பாரதப்புண்ணிய பூமியில்  தொண்டரையே  தெய்வமாக போற்றப்படும், மேன்மையை ஆஞ்சநேயர் வரலாற்றில் காணலாம். ஆஞ்சநேயர் பெரியவனாக வளர்ந்த  பிறகு பெரிய கடலை  தாண்டினார் என்றாலும், சிறியவனாக இருந்த போது பூமியிலிருந்து ஒரே தாவலில் சூரியனை எட்டிப்பிடித்தவர்,.  எனவே இவர் தனது  பக்தர்களுக்கு அனைத்தையும் சாதிக்க இயலும் என்ற எண்ணத்தை அருளுகிறார்.  சிவனும் விஷ்ணுவும்  விஸ்வரூபம் எடுத்திருந்தாலும்,  பொதுவாக ஆஞ்சநேயருக்கு மிகப்பெரிய உருவம் உடைய கோயில்கள் அதிகம் உள்ளது.தூத்துக்குடி  அருகில் உள்ள தெய்வச் செயல்புரம்  என்ற ஊரில் 75 அடி உயர ஆஞ்சநேயர் அருள்பாலிப்பது சிறப்பு. அனுமன் அவதார நாளில்  அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலத்திற்கு  சென்று

‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தன்னோ அனுமன் பிரசோதயாத்

என்ற அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறுவோம்.  அத்துடன் அனுமன் ஜெயந்தியன்று அவரது புகழ்பரப்பும் ‘அனுமன் சாலீஸா   பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும்என்பது நம்பிக்கை.அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின்   அம்சமாக தோன்றியவர்.

ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன்   லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன்   மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து   ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது முக்கியமான செய்தியாகும். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும்  பெருமாளையும்  சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை  நாம்  கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம்   பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு,  வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி,   ஆராதிக்க வேண்டும்.

வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். ராமருக்கு அத்யந்த பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத சேவை   புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய மகாப்பிரபு! ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக விளங்குபவர்   ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பி அமுது   செய்து மகிழ்வார். இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை மாருதிக்கு சாத்தி   வழிபடுகிறார்கள். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள்   அடியாராய்-பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும்   சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை   ப்ரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு  பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும்.

ராமாயண கதாநாயகன், ராமனின் வலது கையான அனுமான் மார்கழி மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார். அனுமனுக்கு நாடெங்கும் பல   கோயில்கள் உள்ளன. அனுமனைச் சிவபெருமானின் அவதாரம் என்றும் கூறுவதுண்டு. வாயுதேவனுக்கும் அஞ்சனாதேவிக்கும்  பிறந்தவர்  இவர். இவருக்கு பவனசுதன், மருத்சுதன், பவனகுமார், பஜ்ரங்கபலி, மகாவீரர் என்று பெயர்கள் உண்டு. ராமநாமத்தை தவிர  வேறு எதுவும்  அறியாத அவர் தன்னலமில்லாமல் வீரனாகத் திகழ்ந்தார். அவர் மிகச் சிறந்த ராமபக்தராகத் திகழ்ந்தார். சீதையை மீட்டுக்   கொடுத்ததற்காக ராமபிரானிடம் எவ்வித பிரதி பலனையும் எதிர்பார்க்கவில்லை. ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே அவர்   வாழ்ந்தார். அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் திகழ்ந்தார். எல்லா தெய்வீககுணங்களும் அவரிடம் இருந்தன. பிறரால் செய்ய   முடியாத, ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டு கடலைக்கடத்தல், இலங்கையை எரித்தல், சஞ்சீவினி மூலிகையை கொண்டுவந்து   லட்சுமணனை எழுப்புதல் ஆகிய அரியசெயல்களைச் செய்தார்.அவர் தன் அறிவைப் பற்றியோ, தனது தொண்டைப் பற்றியோ பிறரிடம்   தற்பெருமையாகச் சொன்னதேஇல்லை. நான் ராமனின் தூதன். அவர் இட்ட பணியை என் தலையால் செய்யக் காத்திருக்கிறேன். எனக்கு   ராமனின் அருளால் அச்சமோ, மரணபயமோ கிடையாது. ராமனுக்கு தொண்டு செய்யும்போது, நான் மரணமடைய நேரிட்டாலும் அதை   வரவேற்கிறேன்  என்று சொன்னவர். ராமனுக்குத் தொண்டு செய்த சுக்ரீவனுக்கு அவனது ராஜ்யம் அனுமனால் கிடைத்தது. கண்டேன்   சீதையை என்று சொல்லி ராமனுக்கு மகிழ்ச்சியளித்தவர். நல்ல செய்தியை ராமனுக்குச் சொன்னதால் சொல்லின் செல்வன் ஆனவர்.   இவராலேயே வாலியின் மகன் அங்கதனுக்கு முடிசூட்டப்பட்டது. ராவணனின் அழிவுக்குப்பின், அனுமனால் விபீஷணன் இலங்கையின்   அரசனானான். ஆனால், மிகப்பெரிய சாதனைகளைச் செய்த அனுமனோ, ராமனிடம் எதுவும் கேட்கவே இல்லை. சீதை அவனுக்குக்   கொடுத்த முத்துமாலையைக்கூட அவன் பரிசாக ஏற்றுக் கொள்ள மறுத்தான். இதைக் கண்டு நெகிழ்ந்த ராமன், உனது கடனை எப்படி   நான் திரும்பச் செலுத்துவேன். எப்போதும் உனக்கு நான் கடன்பட்டவனாகவே இருப்பேன். என்னைப் போன்றே உன்னையும் மக்கள்   போற்றி வழிபடுவர். எனது கோயில் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் உனக்கு சந்நிதி இருக்கும். முதலில் உன்னை   வணங்கியபின்னரே, என்னை வழிபாடு செய்யவேண்டும் என்றெல்லாம் வரம் தந்து மகிழ்ந்தார். அனுமன் கடலைத் தாண்டியது பற்றி   ராமன் ஓரிடத்தில் கேட்கிறான். நீ எப்படி கடலைத் தாண்டினாய்? என்று,  அதற்கு அனுமன் மிகவும் அடக்கமாக, எம் பெருமானே! எல்லாம்   உமது நாம மகிமையால் என்று பதில் சொன்னார். இதுதான் அனுமனின் பணிவான குணத்திற்கு எடுத்துக்காட்டு. சாதாரணச் செயலை   செய்துவிட்டே தங்களைத் தாங்களே புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அனுமன் பணத்தையோ, பதவியையோ எதிர்பார்க்காதது   மட்டுமின்றி தற்புகழ்ச்சியாகக்கூட ஒரு வார்த்தை கூடச் சொன்னதில்லை. இப்படி பலவித பெருமைகள் கொண்ட அனுமனின் பிறந்த   நாளில், துளசிதாசரின் அனுமன் சாலிஸா, ராமாயண சுந்தரகாண்டம் பாராயணம் செய்வதும், ஸ்ரீராம ஜெயம் என்று நாள் முழுவதும்   ஜெபிப்பதும் நன்மை தரும். வெண்ணெய், உளுந்துவடை பிரசாதமாகப் படைத்து வழிபடவேண்டும். ராமநாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ   அந்த இடங்களில் எல்லாம் அனுமன் எழுந்தருளி அருள்புரிவார். அவரை ராமநாமம் சொல்லி வரவேற்போம். அவரது நல்லருள்   பெறுவோம்.

குங்குமப் பொட்டு: வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதின் தாத்பர்யம் என்னவென்றால், அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம்.   பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி   குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க   வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பிலியப்பனுக்கு   நிவேதிப்பது போல் உப்பில்லா திருவமுது நிவேதிக்க வேண்டும்.காரியம் சித்தியாகும் வரை இவ்வண்ணம் பொட்டு வைத்துக் கொண்டே   வர வேண்டும்.

அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம்   ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த   ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற   எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது   முக்கியமான செய்தியாகும். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.   ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும்   உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம் பெருகும்.

ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு,  வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க   வேண்டும். வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். ராமருக்கு அத்யந்த பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத   சேவை புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய மகாப்பிரபு! ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக  விளங்குபவர்  ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர்  விரும்பி அமுது  செய்து மகிழ்வார். இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை  மாருதிக்கு சாத்தி  வழிபடுகிறார்கள். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து  அடியார்களுள்  அடியாராய்-பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக  சந்தோஷங்களையும்  சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம்  தொடங்கும் முன்னர் பக்தர்களை  ப்ரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு  பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது  அவருக்கு தெரியும்.

வால் அறுபட்ட ஆஞ்சநேயர்: ராமேஸ்வரத்தில் எழுந்தருளியிருக்கின்றார் இவர். காசியிலிருந்த விசுவநாதலிங்கம் கொண்டு வரச் சென்ற   ஆஞ்சநேயர் வருவதற்கு தாமதமாகவே, ஸ்ரீராமன் சீதையை மணலால் லிங்கம் அமைக்கச் செய்து பூஜையை முடித்து விடுகிறார்.   பின்வந்த அனுமன் ஆத்திரத்தில் மணல் லிங்கத்தை அப்பால் தள்ள முயல, அது முடியாமல் போகவே, வாலினால் சுற்றி பலம்கொண்ட   மட்டும் இழுத்தார். அப்போது, அவரது வால் அறுந்து போனது. தனது தவறுணர்ந்து ராமனிடம் மன்னிப்புக் கேட்டு மீண்டும் வால் வளரப்   பெற்றார். இங்கு, வால் அறுபட்ட நிலையில் உள்ள ஆஞ்சநேயரின் சிலையைக் காணலாம்.

பாலரூப ஆஞ்சநேயர்: உடுப்பிக்கு கிழக்கே மூன்று கல் தொலைவில் ஒரு சிறுகுன்றில் துர்க்கை கோயில் ஒன்றுள்ளது.  அதன் கீழ்   குளக்கரையில் கோவணாண்டியாக பாலரூப ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். உடலெல்லாம் உரோமம் தெரியும்படி அருமையாக   அச்சிலை வடிக்கப்பட்டுள்ளது.

யோக ஆஞ்சநேயர்: வேலூர் சோளிங்கரில் உள்ள ஒரு சிறிய குன்றில் யோக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். நரசிம்மரை நேராக  இருந்து  தரிசிப்பவராய், நரசிம்மரைப் போலவே யோக நிலையில் இவர் இருக்கின்றார்.

யந்த்ரோத்தாரக அனுமன்: ஹம்பியில் எழுந்தருளியிருப்பவர் இவர். ஆஞ்சநேயரை யந்திரத்தில் வடிவாக அமைத்துள்ளனர். பத்ம   தளத்தோடு கூடிய ஒரு வட்டத்தின் நடுவே ஆறுகோணம் கொண்ட யந்திரம் வரையப்பட்டுள்ளது. அதன் மத்தியில் ஆஞ்சநேயர் அமர்ந்த   நிலையில் காணப்படுகின்றார். கோணங்களிலே பீஜாக்ஷரங்கள் உள்ளன. வட்டத்தின் உட்புறம் தியான ஸ்லோகம் கிரந்த எழுத்தில்   உள்ளது.

ஜன்மபூமி ஆஞ்சநேயர்: பன்னூரில் உள்ள ஆஞ்சநேயர், ஆலயத்தில் கையைக் கூப்பிக் கொண்டு பவ்யமாக நிற்கும் பக்த ஆஞ்சநேயர்   ஜன்மபூமி ஆஞ்சநேயர் என்ற திருநாமம் தாங்கியிருக்கிறார்.

பிரபத்யாஞ்சநேயர்: மங்கள கிரி (ஆந்திரா) கல்யாண சரஸ் திருக்குளத்தின் கரையில் இந்த ஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ளார். இவரே   மங்களகிரியின் காவல் தெய்வம். ராமாவதாரம் முடிந்து ஸ்ரீமத் நாராயணன் வைகுண்டம் செல்லும்போது ஆஞ்சநேயரை   மங்களகிரியிலேயே தங்கி நரசிம்மரை வழிபட்டுக் கொண்டிருக்கும்படி பணித்துவிட்டுச் சென்றதாக இத்தல புராணம் கூறுகிறது.

திரிநேத்ர சதுர்புஜ அனுமார்: நாகப்பட்டினம் மாவட்டம் ஆனந்த மங்கலத்தில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலிலே தான் இந்தத்   திரிநேத்ரதசபுஜ அனுமார் வீற்றிருக்கிறார். மூன்று கண்களுடனும் பத்துக் கைகளுடனும் காட்சி தருகின்றார்.

குபேர ஆஞ்சநேயர்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் தான் குபேர ஆஞ்சநேயர் உள்ளார். ஆஞ்சநேயர்,   ராமனை பார்த்தபோது அவர் தென்திசையை பார்த்தபடி அமர்ந்திருந்தார். வடக்கு பக்கமாக திரும்பி அவரை பார்த்ததால் இத்தலத்து   ஆஞ்சநேயர் வடதிசை பார்த்தபடியே இருக்கிறார். இது குபேர திசையாகும். இத்திசையை பார்த்த ஆஞ்சநேயரை காண்பது அபூர்வம்.   இத்தலத்து ஆஞ்சநேயர் பிரகாரமூர்த்தியாக இல்லாமல் மூலவராக அருளுகிறார்.இவர், தனது வாலை சுருட்டி தலைக்கு மேலே கிரீடம்   போல வைத்து, வராக (பன்றி) முகத்துடன் காட்சி தருவது சிறப்பு. கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலையர் திருக்கோயிலில் 18 அடி   உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் அருள்õலிக்கிறார். இவரது வாலின் நுனிப்பகுதி தலைக்கு மேல் வடக்கு நோக்கி அமைந்துள்ளது.   இவரை வணங்கினால் குபேர சம்பத்து பெருகும் என்பது நம்பிக்கை.

பெருமாள் கருவறைக்குள் ஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் திருக்கோயிலில்   உள்ள மூலவர் சுமார் இரண்டரை அடி உயரத்தில் பாலவடிவில் நின்ற கோலத்திலும், அவருக்கு வலப்புறத்தில் ஆஞ்சநேயர் வணங்கிய   கோலத்திலும் உள்ளனர். ராமபக்தரான ஆஞ்சநேயர், பெருமாள் கோயில்களில் தனி சன்னதியில் இருப்பதைப் பார்த்திருக்கலாம். ஆனால்,   இக்கோயிலில் கருவறையில் பெருமாள் அருகிலேயே இருப்பது சிறப்பம்சம்.

அபயவரத ஆஞ்சநேயர்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயரின் மார்பில்   சிவலிங்கம் வடிக்கப் பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை (காலணி) அணிந்து, இடுப்பில் கத்தி செருகி போர்க்கோலத்தில் காட்சி  தருகிறார்.  இத்தகைய அமைப்பில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம்.

ஜெயமங்கள ஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை ஜெயமங்கள ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர்   சிலை எட்டு அடி உயர சுயம்பு பாறையில் ஆறு அடி உயரமும், ஐந்து அடி அகலமும் உடையவராக கம்பீரமாக நேர் கொண்ட   பார்வையுடன் காட்சி அளிக்கிறார். இங்குள்ள பாறையின் பின்புறத்தில் அலங்கார நந்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த நந்தி சிலை   ராமலிங்கேஸ்வரர் பின்நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான அமைப்பு வேறு எங்குமில்லை என்று சான்றோர்கள்  கூறினர்.

வீரஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் சண்முகபுரம் வீரஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் பாலாற்றின் நடுவே படுத்த   நிலையில் உள்ள பாறையில் வீர ஆஞ்சநேயராக சுமார் ஐந்து அடி நீளத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு   அருள்பாலிக்கிறார். பிரகாரத்தெய்வமாக இல்லாமல் இத்தலத்தின் மூலவராக இருந்து அருள்பாலிக்கும் வீரஆஞ்சநேயரின் முகம்   இலங்கையை நோக்கி திரும்பியுள்ளது. கோவிந்தமலை, விஸ்வாமித்திரர் தவம் செய்த தாடகநாச்சி மலை ஆகிய இரு புனிதம் வாய்ந்த   மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோயிலில்   உள்ள ஆஞ்சநேயர் தன் வீரத்திற்கு அறிகுறியாக வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில்   வைத்தபடியும் ஆறரை அடி உயரத்தில் நின்ற திருகோலத்தில் அருள்பாலிக்கிறார். ஆனால் இவரது காலின் கீழ்பகுதி ஆற்றுநீர் படும்   வகையில் பூமிக்குள் அமைந்திருப்பது சிறப்பு.

அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயரது   திருமேனி சாளக்கிராமத்தினால் ஆனது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர்   அருள்பாலிக்கிறார்.

பஞ்சமுக ஆஞ்சநேயர்: விழுப்புரம் மாவட்டம்  பஞ்சவடீ ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 36 அடி   உயரம் கொண்ட பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார்.

பக்த ஆஞ்சநேயர்: நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள பக்த ஆஞ்சநேயர் 18 அடி உயரமும், கையில்   ஜெபமாலையும், இடுப்பில் கத்தியும் வைத்திருக்கிறார்.

யோக நிலையில் ஆஞ்சநேயர்: மதுரை கோ.புதூர் சூர்யாநகர் முத்தப்பா சுவாமி திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 30 அடி உயரத்தில்   அமர்ந்த கோலத்தில் யோக நிலையில் அருள்பாலிக்கிறார்.

பிரமாண்டமாய் ஆஞ்சநேயர் தரிசனம்: தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல் புரம் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 75   அடி உயரத்தில் பிரமாண்டமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

அநுமேசுவரர்: சீதாப்பிராட்டியாரை எங்கு தேடியும் காணாமையால் மனம் நொந்து ஓரிடத்தில் ஈசனை ஸ்தாபித்து வேண்டினார் அனுமன்.   அதனால் அநுமேசுவரர் என்றும் அவ்வூர் அநுமன் பள்ளியாகவும், பூஜை பொருட்டு இறைவன் அனுமன் ஏற்படுத்திய நீர்க்குணி  அநுமநதி  என்றும் வழங்கலாயிற்று.

சத்திய ஆஞ்சநேயர்: செங்கல்பட்டில் கோட்டைச் சுவரில் எழுந்தருளியிருக்கிறார் இவர். மக்கள் தங்களுக்குள் ஏற்படும் தகராறுகளைத்   தீர்த்துக் கொள்ள இவருடைய சன்னதியில் சத்தியம் செய்வதுண்டு. இங்கே பொய் சத்தியம் செய்வோர் அழிவர் என்ற நம்பிக்கையும்   நிலவுகின்றது. நன்றி தினமலர்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

அனுமன் ஜெயந்தி! - ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை சாத்துகிறோம் தெரியுமா


அனுமன் ஜெயந்தி! - ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை சாத்துகிறோம் தெரியுமா?

அனுமன் ஜெயந்தி வட இந்தியாவில் சித்திரை பவுர்ணமி தினத்திலும், சில மாநிலங்களில் வைகாசி பவுர்ணமி தினத்தில் கொண்டாடப்படுகிறது.
அனுமன் ஜெயந்தி தினமான இன்று அனுமனைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் .

அனுமனின் ஜாதகம், அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவர் கூறிய கதை ஆகியவை இடம் பெற்றுள்ளது.

ஸ்ரீ ஹனுமான் ஜாதகத்தில் மேஷ லக்னமாகி லக்னாதிபதி ஆட்சி பெற்றதால் சூரியனையும் பழம் என நினைத்து நெருங்கும் வேகத்தை பெற்றிருக்கிறார். திரிகோணங்களில் சூரியனும் குருவும் பரிவர்தனை பெற்று நின்று குரு சூரிய சந்திரர்களை பார்த்து குரு சந்திர யோகம் பெற்றதால் கல்வியிலும் ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கினார்.

சுக்கிரன் நீசமாகி புதன் உச்சம் பெற்று ராகுவுடன் சேர்ந்து நின்றதால் சிறந்த கல்விமானாகவும் கலா ரசிகராகவும் விளங்கினார். சுக்கிரன் நீச பங்கம் பெற்று சந்திர கேந்திரத்தில் நின்று நீச பங்க ராஜ யோகம் அடைந்ததால் ப்ரம்மசாரியாக விளங்கிய ஹனுமன் பிற்காலத்தில் ஸ்வச்சலா என்ற பெண்ணை மணந்ததாக கூறுவர்

இரண்டாமதிபதி சுக்கிரன் நீசம் பெற்று மூன்றாமதிபதி உச்சம் பெற்று புதன் வீட்டில் சேர்க்கை பெற்று நீசபங்க ராஜ யோகம் பெற்று ராகுவுடன் கூடி நின்றதால் இசையிலும் மாமேதையாக திகழ்ந்து மார்கழிக்கு பெருமை சேர்த்தது பெருமையன்றோ!!!

கர்ம ஸ்தானத்தில் சனி நின்று ஆறாமிடத்தில் ராகு நின்றதால் இவருடைய சேவையை உலகறியும். இவரை ராம தாச மாருதி என்றும் போற்றுவார்கள். ராகு 6/8/12 வீடுகளில் 6ம் வீட்டில் நின்றும் ஆறாம் வீட்டதிபதி ராகுவிற்க்கு கேந்திர திரிகோணத்தில் நின்றதால் அதியோகமும் பெற்று சிறந்து விளங்கினார். இத்தகைய சிறப்புகள் பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியை அவருடைய ஜென்ம நக்ஷத்திர தினமான இன்று வணங்கி வளம் பெறுவோமாக!


வடைமாலை சாற்றுவது ஏன் தெரியுமா?
ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர்மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்தார்.மனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார். இவரது மனதில் ஏதோ கேள்வி இழையோடுகிறது போலும் என்று தீர்மானித்த பெரியவா, "என்ன சந்தேகம். கேளுங்கோ" என்றார்.

அந்த வட நாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஒரு சந்தேகம் நெடு நாட்களாகவே இருந்து வந்தது. இது குறித்துப் பலரிடமும் விளக்கம் கேட்டு விட்டார். ஆனால் எவரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை. அவர், அந்த சந்தேகத்தை மஹா பெரியவாளிடம் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் , ஸ்வாமிகளே உத்தரவு கொடுத்து விட்டார்.

"ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்..."இழுத்தார் அன்பர். "வாயுபுத்திரனைப் பத்தியா... கேளேன்" என்றார் ஸ்வாமிகள்.

"ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். எல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள். ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம் என்றார்.


பெரியவா மெளனமாக இருக்கவே... அன்பரே தொடர்ந்தார்: "அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள், ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது ?" என்று கேட்டு விட்டு பதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார் வட நாட்டில் இருந்து வந்த அன்பர்.

தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது. கேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல. பெரியவா சொல்லப் போகும் பதிலுக்காக அன்று அங்கு கூடி இருந்த அனைவருமே ஆவலுடன் இருந்தனர்.


பெரியவர் சொன்ன பதில்
ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார். "பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து, ‘அதோ பார் நிலா...' என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள்.

அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும் . சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும். உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும். சாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது. அதுவும் எப்படி ? பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.


அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது. மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன்.

வாயுபுத்திரன் அல்லவா ? அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.



ராகு பகவான்
அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார்.

இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.


உளுந்து தானியம்
இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது.

இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன். வடையாகட்டும்... ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான். தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள்.

இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே, உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து, அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு.


இனிப்பு ஜாங்கிரி
வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது. தவிர, வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள். அதுவும், அவர்களுக்குக் காலை நேரத்திலேயே

பிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள் இனிப்பு விரும்பிகள். எனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு சாரதி வழிபடுகிறார்கள்.

எது எப்படியோ... அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன. அது உப்பாக இருந்தால் என்ன... சர்க்கரையாக இருந்தால் என்ன? மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி" என்று சொல்லி விட்டு, இடி இடியெனச் சிரித்தார் மஹா பெரியவா.

பெரியவாளின் விளக்கமான இந்த பதிலைக் கேட்ட வட நாட்டு அன்பர் முகத்தில் பரவசம். சடாரென மகானின் திருப்பாதங்களுக்கு ஒரு நமஸ்காரம் செய்து தன் நன்றியைத் தெரிவித்தார். கூடி இருந்த அநேக பக்தர்களும் பெரியவாளின் விளக்கத்தால் நெகிழ்ந்து போனார்கள்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

திங்கள், 23 டிசம்பர், 2019

அனுமன் ஜெயந்தி..



 அனுமன் ஜெயந்தி... விரதம் இருப்பவர்களின் கவனத்திற்கு...

#அனுமன்_ஜெயந்தி...


🌟 மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி. இதுபோல், திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூல நட்சத்திரம். இத்தகைய மூன்றும் இணைந்திருக்கும் இந்த நல்ல நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவரே ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

🌟 அந்த வகையில் இந்த வருடம் அனுமன் ஜெயந்தி புதன்கிழமையான (25.12.2019) நாளை வரவிருப்பதால், அனைத்து அனுமன் கோவில்களிலும் விமர்சையாக அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவது வழக்கம்.

🌟 இராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் ஆஞ்சநேயர். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுர்யம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர். சீதாதேவியால் சிரஞ்சீவி பட்டம் பெற்றவர். அவரது பிறப்பு மகத்துவம் மிகுந்தது. அவர் பிறந்த தினமே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

இன்று முதல் கோலாகலமாக துவங்குகிறது...

கோயம்புத்தூர் ஷாப்பிங் பெஸ்டிவல்...

பரவசமான ஷாப்பிங் அனுபவத்தை கண்டு மகிழ வாருங்கள்...!!


அனுமன் ஜெயந்தி... விரதம் இருக்கும் முறை :

🌟 அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி, உபவாசம் தொடங்க வேண்டும்.

🌟 அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோவிலுக்குச் சென்று, அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். அல்லது வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு சாற்றியும் வணங்கலாம்.

🌟 அன்று ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும்.

🌟 பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.

🌟 காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி உபவாசம் இருக்க வேண்டும்.

🌟 மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம்.

🌟 மாலையில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு வடை மாலைகளை சாற்றி வழிபடலாம். இந்த முறையில் ஆஞ்சநேயரை வழிபடுவதால் உங்கள் வாழ்வில் ஏற்படும் துக்கங்கள், கஷ்டங்கள் நீங்கும். பீடைகள் ஒழியும். கிரக தோஷங்கள் குறிப்பாக சனிக்கிரக தோஷங்கள் நீங்கும்.

🌟 இரவில் ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம், ராமநாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங்கள், ஸ்லோகங்கள் கூறி வழிபட வேண்டும்.

விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் :

🌟 அனுமன் ஜெயந்தி, ஜெயந்திகளுக்கு எல்லாம் ஜெயந்தி. அன்றைய தினம் நாம் விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும்.

🌟 நினைத்த காரியம் கைக்கூடும்.

🌟 துன்பங்கள் விலகும்.

🌟 இன்பங்கள் பெருகும்.

🌟 குறிப்பாக சனியின் பிடியில் உள்ளவர்கள் அனுமனை வணங்கி வருவது பல சங்கடங்களைப் போக்கும்.

ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்த ராம நாமம் :

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,

வாயுபுத்ராய தீமஹி, தந்தோ

ஹனுமன் ப்ரசோதயாத்
🌟 சகல ஆனந்தங்களையும் அள்ளித்தருபவர் ஆஞ்சநேயர். சிவனையும், திருமாலையும் ஒன்றிணைக்கும் தெய்வமாக விளங்குபவர் ஆஞ்சநேயர். எனவே இவரை வணங்கி அளவில்லாத ஆனந்த நிலையினைப் பெறுவோம்.

ஞாயிறு, 22 டிசம்பர், 2019

யார் இந்த சாண்டா கிளாஸ்...


யார் இந்த சாண்டா கிளாஸ்...

 
கிறிஸ்மஸ் நாளில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் உற்சாகப்படுத்துபவர் சிவப்பு அங்கி அணிந்து பரிசுப் பொருட்கள் மூட்டையுடன் வரும் வெண்தாடி தாத்தாதான். இவரது ஆங்கிலப் பெயர் சாண்டா கிளாஸ். கிறிஸ்து பிறந்த பின்பு 270 வருடத்தில் (15 March 270), அந்த காலத்து ரோம சாம்ராஜ்யத்தில் இருந்த துருக்கியின் பாடாரா பகுதியில் லைசியா (Patara, Lyciay, Turkey) என்ற துறைமுக ஊரில் பிறந்தார் நிகோலாஸ். தனது இளம் வயதில் பெற்றோரை இழந்த நிகோலாஸ் ஏழை மக்களுக்கு உதவுவதே இயேசு அன்பை பிறருக்கு சொல்லும் எளியமுறையாக கருதி அநேக ஏழை மக்களுக்கு உதவி செய்து வாழ்ந்தார். கிறிஸ்துவ இறையியல் பணியை சிறப்பாக செய்த நிகோலாஸ், லைசியா பகுதியின் பிஷப் பதவியை ஏற்றார். பிஷப் பதவியில் இருந்த பொழுது, டிசம்பர் 6ம் தேதி இரவு வந்து கிறிஸ்துமஸ் பரிசுகளை கொடுப்பார். பழங்கள் சாக்லெட்கள், சிறு பொம்மைகள், சிறு பொருட்களை குழந்தைகளுக்கு பரிசாக கொடுப்பார்.

ரோம் நகர பேரரசன் டயோக்ளீஸ் காலத்தில் கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்டபோது, பிஷப் நிக்கோலாஸும் சிறையில் தள்ளப்பட்டார். பின்பு பேரரசர் கான்ஸ்டான்டின் காலத்தில் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் ஏழை மக்களுக்கு உதவும் பணியை தொடர்ந்து பின்னர் தனது 73- ம் வயதில் (6 December 343) இறைவனடி சேர்ந்தார். அவர் இறந்த பின்னர் அவரது சடலம் துருக்கியில் உள்ள மைரா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மக்களிடம் அவர் காட்டிய கருணை, அன்பின் காரணமாகவும் அவரது தயாள குணம் காரணமாகவும் இன்றளவும் குழந்தைகள் மனதில் வாழ்ந்து வருகின்றார். செயின்ட் நிகோலாஸ் என்பது டச்சு மொழியில் சின்டர்க்ளாஸ் என்று மருவியது. பின்னர் ஆங்கிலம் பேசும் மக்கள் அவரை சான்டா கிளாஸ் என அன்புடன் அழைத்தனர். நிகோலாஸ் காலத்தில் பிஷப்புகள் அணிந்திருந்த சிவப்பு - வெள்ளை அங்கியே கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடையாகிவிட்டது. அப்போது முதல் உலகம் முழுவதும் அன்பின் திருவுருவமாக கிறிஸ்துமஸ் தாத்தா உலா வருகிறார்.

அநேகர் பிரிவினர் கிறிஸ்மஸ் தினத்தை விமர்சையாக கொண்டாடுகின்றார்கள. ஒரு சில பிரிவினர் கொண்டாடுவதில்லை. ஒருவர் மற்றவர்களைப் பார்த்து குறை சொல்லக்கூடாது. பதினோரு மாதம் தங்கள் குடும்பத்திற்காக உழைப்பவர்கள், வருடத்தின் இறுதி மாதத்தில் ஏழை மக்களை நினைவிற்க் கொள்ள வேண்டும். “நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக” லூக்கா 14:13. எத்தனை நாள் நாம் விருந்து உணவு சாப்பிட்டிருப்போம். டிசம்பர் மாதத்தில் அனாதை இல்லம் அல்லது முதியோர் இல்லம் சென்று அவர்களோடு ஆறுதலாக பேசி ஒருநேர உணவை அவர்களுக்கு வழங்கலாமே. நம்மில் அநேகர் கிறிஸ்மஸ் நாளில் தான் அதைச் செய்ய விரும்புகின்றோம். ஒரே நாளில் அநேகர் சென்று அவர்களுக்கு உணவு கொடுப்பதால் அவர்களால் அதை சாப்பிட முடியாமல் வெளியே கொட்டுவார்கள். நான் ஒருமுறை அவ்வாறு ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்ற பொழுது அவர்களுக்கு அன்றாடம் தேவைப்படும் சோப்பு, எண்ணெய் போன்ற பொருட்களை வாக்கிக் கொடுத்தேன். நாம் அவர்களது தேவை அறிந்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். வேதம் சொல்கின்றது “தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்” (நீதிமொழிகள் 28:27).

நமது குழந்தைகளுக்கு நல்ல புத்தாடை அணிவித்து மகிழும் நாம், ஏழைக் குழந்தைகளுக்கும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்” (நீதிமொழிகள் 19:17). ஏழைகளையும் தாழ்ந்தவர்களையும் தரித்திரரையும் அன்போடு விசாரித்து நம்மால் இயன்ற அளவு உதவ வேண்டும். வருடத்தில் ஒரு முறையாவது நாம் குருடர்களையும், ஊனர்களையும், ஏழைகளையும் விருந்துக்கு அழைத்து உணவு கொடுப்போமா? அவர்கள் மீண்டும் நமக்கு விருந்து தர மாட்டார்கள். ஆனால் நமக்கு பலன் கர்த்தரிடத்திலிருந்து வரும். நீங்கள் அவ்வாறு ஏழை மக்களுக்கு உதவி செய்தால், இயேசு உங்களைப் பார்த்து சொல்வார், “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு25:40). இதை வாசிக்கின்ற நீங்கள ஒவ்வொருவரும் டிசம்பர் மாதத்தில் சாண்டா கிளாஸ் போல ஏழை மக்களுக்கு உதவ வேண்டும். ஏழைகளை நேசிப்போம், அவர்களுக்கு உதவி செய்வோம் நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உங்களுடைய பலன் மிகுதியாக இருக்கும். இதுவே நீங்கள் கொண்டாடும் உண்மையான கிறிஸ்மஸ்.
-------------------------------

வெள்ளி, 20 டிசம்பர், 2019

கிருஸ்துமஸ் சுவையான தகவல்கள்



கிருஸ்துமஸ் சுவையான  தகவல்கள் 

இயேசு கிறிஸ்து, கிறிஸ்துமஸ் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரிய தகவல்களை கீழே விரிவாக பார்க்கலாம்.

கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றிய சிறப்பு தகவல்கள்
* இயேசு கிறிஸ்து கி.மு.5ஆம் ஆண்டு, பாலஸ்தீன் நாட்டின் பெத்லகேம் நகரில் பிறந்தார். பெத்லகேம் என்றால் ‘அப்பத்தின் வீடு’ என்பது பொருள்.

* இயேசு என்ற பெயரின் எபிரேய மூலச்சொல்லான ‘யெஷ¨வா’ என்பதற்கு ‘கடவுள் விடுவிக்கிறார்’ என்றும், கிறிஸ்து என்ற கிரேக்க வார்த்தைக்கு ‘அருட்பொழிவு பெற்றவர்’ எனவும் பொருள்.


* கி.பி.240களில் மார்ச் 28ந்தேதி கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டம் நிகழ்ந்ததாக, அக்கால கிறிஸ்தவ நாள்காட்டி குறிப்பிடுகிறது.

* டிசம்பர் 25ந்தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடும் வழக்கம் கி.பி.336ஆம் ஆண்டு ரோம் நகரில் தோன்றியது. இந்த தேதிக்கு, போப் முதலாம் ஜூலியஸ் அங்கீகாரம் வழங்கினார்.

* கிறிஸ்துமஸ் கேரல் கீதங்கள் 4ஆம் நூற்றாண்டு முதல் ஆலயங்களிலும், 13ஆம் நூற்றாண்டு முதல் தெருக்களிலும் பாடப்படுகின்றன.

* கிறிஸ்துமஸ் விழாவின்போது, இயேசு பிறந்த காட்சியை குடிலாக அமைக்கும் வழக்கத்தை, அசிசி புனித பிரான்சிஸ் 1223ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.

* கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு கொடுக்கும் வழக்கம் 10ஆம் நூற்றாண்டில் தோன்றினாலும், தொப்பையும், குல்லாவும் கொண்ட சான்டாகிளாஸ் 19ஆம் நூற்றாண்டில்தான் வடிவம் பெற்றார்.

* 16ஆம் நூற்றாண்டு முதலே கிறிஸ்துமஸ் விழாக்களை நட்சத்திரங்கள் அலங்கரித்து வருகின்றன.

* 15ஆம் நூற்றாண்டு முதல் வழக்கத்தில் உள்ள கிறிஸ்துமஸ் மரம், 1882ஆம் ஆண்டு முதன்முதலாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.



கிறிஸ்துமஸ் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்!!


கிறிஸ்துமஸ் பற்றிய புனைவுகள்

யேசு கிறிஸ்து டிசம்பர் 25 ம் தேதி பிறந்தவர் அல்ல. அவர் கி.மு. 6க்கும் கி.பி. 30க்கும் இடையில், ஒரு செப்டம்பர் மாதத்தில் பிறந்தார் என்பது பல இறையியல் நிபுணர்களின் கணிப்பாகும்.




யேசு கிறிஸ்து பிறந்தது மர கொட்டகையில் அல்ல. ஒரு குகையின் உள்ளே என்பது பல பைபிள் பண்டிதர்களின் வாக்காகும்.

‘மூன்று அறிவாளர்கள்’ குழந்தை யேசுவை வழிபட்டனர் என்று கதைகளில் கூறப்பட்டாலும், பைபிளில் எண்ணிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை. மத்தேயூவின் நல்வாக்கில் அறிவாளர்கள் என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

3 அரசர்கள் 12 நாள் அவகாசத்தில் குழந்தை யேசுவை கண்டுபிடித்தமையால், கிறிஸ்துமஸ் என்பது 12 நாட்களாக கொண்டாடப்படுகிறது.




அறிவாளர்களுக்கு யேசுவின் இருப்பிடத்தை காட்டிய “பெத்தலகேம்” நட்சத்திரம் ஒரு வால் நட்சத்திரம் அல்லது யுரேனஸ் கோளாக இருந்திருக்க கூடும் என வானியல் நிபுணர்கள் நம்புகிறார்கள்.

கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ் என்ற சொல் புராதன ஆங்கிலத்தின் “கிறிஸ்டிஸ் மேஸீ” (Cristes Maesse) எனும் சொற்றொடரிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் கிறிஸ்துவின் கூட்டம் (Christ’s Mass) ஆகும்.



கிறிஸ்துமஸின் சுருக்கமான X-மஸ் என்பது மதத்திற்கு முரணானது அல்ல. கிரேக்க மொழியில் X என்பது யேசுவை குறிக்கும் குறிசொல்லாகும்.

அமெரிக்க புராதனவாதிகள் நன்றி நவிலும் நாளை (Thanks Giving Day) கிறிஸ்துமஸை விட முக்கியமான பண்டிகையாய் கொண்டாட முயன்றார்கள்.

கி பி 440 ம் ஆண்டு வரை, டிசம்பர் 25 ஆனது யேசு கிறிஸ்துவின் பிறந்தநாளாக கொண்டாடப்படவில்லை என்பது ஒரு வரலாற்று உண்மை.

கிறிஸ்துமஸ் பாடல்கள்

13ம் நூற்றண்டில், அசிசியின் புனித ‘ஃபாதர் ஃப்ரான்சிஸ்’ என்பவர் அறிமுகப்படுத்தும் வரை, “காரோல்” (Carols) எனப்படும் கிறித்துவ ஞானகீதம் தேவாலையங்களில் பாடப்படவில்லை.

“வஸைலிங்” (Wassailing) எனப்படும் ஆங்கில சம்பிரதாயதிற்கேற்ப, அக்கம்பக்கத்தோர் நல்வாழ்விற்கு பாடப்பட்ட வாழ்த்துப்பா தான் பின்னர் “காரோல்” எனப்படும் கிறித்துவ ஞானகீதம் ஆகியது.

கிறிஸ்துமஸின் போது பாடப்படும் புகழ்பெற்ற “ஜிங்கிள் பெல்ஸ்” (Jingle Bells) பாடல் தான் விண்வெளியில் ஒலிபரப்பப்பட்ட முதல் பாடலாகும். ஜெமினி 6 எனும் விண்கலத்தில் பயணம்செய்த “டாம் ஸ்டாஃபர்ட்” (Tom Stafford) மற்றும் “வாலி சிறா” (Wally Schirra) ஆகிய விண்வெளி வீரர்கள், இந்த பாடலை டிசம்பர் 16, 1695 ல் ஒலிபரப்பினார்கள்.

கிறிஸ்துமஸ் தகவல்கள்

ஒவ்வொரு டிசம்பர் 6 ஆம் திகதி பரிசுகள் வழங்கும் பழக்கமுள்ள “சின்டர்க்ளாஸ்” (Sinterklass) என அழைக்கப்பெற்ற ‘புனித நிகோலாஸ்’ அவர்களை பற்றிய நெதர்லாண்டின் நாட்டுப்புற கதையிலிருந்து தான் கிறிஸ்துமஸ் புகழ் “சான்டா க்ளாஸ்” (Santa Claus) தாத்தா பிறந்தார்.

உலகத்தின் மிக உயரமான 221 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் 1950 ம் ஆண்டு வாஷிங்டன் வணிக வளாகத்தில் நிறுவப்பட்டது.

கிறிஸ்துமஸ் மரத்தின் அநேக பகுதிகள் உண்ணத் தகுந்ததாகும். குறிப்பாக அதன் கூர் முனை இலைகள் விட்டமின் “சி” சத்துக்கள் நிறைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தைக்கு விற்பனைக்கு வரும் முன்னால், கிறிஸ்துமஸ் மரம் சுமார் 15 ஆண்டுகள் வளர்க்கப்படுகிறது.

சுற்றுசூழல்வாதி ஆகிய அமெரிக்க அதிபர் “டெடி ரூஸ்வெல்ட்” (Teddy Roosevelt) 1912 ஆம் ஆண்டு, வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் மரங்கள் நிறுவுவதை தடை செய்தார்.

12 ஆம் நூற்றண்டில் ஃப்ரென்சு கன்னிகாஸ்த்ரீகள் ஏழைகள் வீட்டு வாசலில், காலுறையின் உள்ளே பழங்கள், உலர் பழங்கள் மற்றும் சிறிய ஆரஞ்சு சுளைகள் வைத்து கதவில் மாட்டிவிட்டு வந்த பழக்கம், பின்னர் காலுறையின் உள்ளே ஆரஞ்சு சுளைகள் வைக்கும் ஒரு கிறிஸ்துமஸ் மரபாக மாறிவிட்டது.

பண்டிகையின் சிறப்புகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பிட்டு, தொன்மையில் திராட்சை மற்றும் திராட்சை ரசமான மதுவை கொண்டு செய்யப்படும் “சூப்” ஆக தான் இருந்தது.

1938 இல் ஓர் அமெரிக்க நிறுவனத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது உருவாக்கபட்ட கண்டுபிடிப்பு தான் “ருடால்ஃப்” (Rudolph) எனப்படும் சிவந்த மூக்கு கொண்ட பனி கலைமான்.

நம் பூமியில் கிறிஸ்துமஸ் எனும் பெயர் கொண்ட இரு தீவுகள் உள்ளன. ஒன்று பசிபிக் பெருங்கடலில் உள்ள (முன்னர் “கிறிட்டி மாட்டி” என அழைக்கப்பெற்ற) கிறிஸ்துமஸ் தீவு. மற்றொன்று இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் தீவு.




* கதவைத் திறந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து:
பெர்லின் நாடு இரண்டாகப் பிரிந்திருந்த காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் நடுவே ஒரு சுவர் அமைக்கப்பட்டிருந்தது. சுவரின் நடுவே ஒரு கதவு அமைக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் அன்று மட்டுமே, இந்தக் கதவு திறக்கப்பட்டு இருநாட்டு மக்களும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர். மற்ற நாட்களில் இந்தக் கதவு மூடப்பட்டிருக்கும்.

* மலர் அலங்காரம்:
இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் மரம் அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாகவே ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் “பிர்’ என்ற மரத்தை அலங்கரிக்கும் வழக்கம் இருந்தது.

இருப்பினும், மரங்களில் இலைகள் மற்றும் மலர்களைக் கட்டி அலங்கரிக்கும் வழக்கம் இங்கிலாந்தில் தான் 1841ம் ஆண்டில் ஆரம்பித்தது.

அல்பெர்டினால் என்ற அரசன் முதன்முதலாக கிறிஸ்துமஸ் மரத்தை நட்டார்.

* 20நாள் கொண்டாட்டம்:
ஸ்காட்லாந்து நாட்டில் 20 நாட்கள் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும்.

“யூல்’ எனப்படும் டிசம்பர் 18ம் தேதியே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கி ஜனவரி 6ம் தேதி வரை நடக்கும். கடைசிநாள் விழாவை “எபிபனி’ என்கிறார்கள்.

* போக்குவரத்து நிறுத்தம்:
பின்லாந்து நாட்டில் கிறிஸ்துமஸ் அன்று போக்குவரத்து நிறுத்தப்பட்டு விடும். அந்நாட்டு மக்கள் தேவாலயங்களுக்குச் செல்ல சறுக்கு வண்டியைப் பயன்படுத்துகிறார்கள்.

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று மக்கள் மின்னல் வேகத்தில் தங்கள் வாகனங்களை செலுத்துவது வழக்கம்.

அவ்வாறு விதிகளை மீறும் வாகனங்களின் மீது போலீசார் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை ஒட்டி அனுப்புகிறார்கள்.

* இலை இல்லாத மரம்:
ஸ்வீடன் நாட்டில் மக்கள் கிறிஸ்துமஸ் மரங்களை நடும்போது பச்சை இலைகளைப் பயன்படுத்துவதில்லை.

ஏனெனில், அந்நாட்டில் யாராவது இறந்து போனால் பச்சை மரங்களை சமாதி அருகில் நடுவது உண்டு.

இறப்பின் சின்னமாக பச்சை மரம் இருப்பதால் கிறிஸ்துமஸ் மரங்களுக்கு முழுக்க முழுக்க பூக்களையே பயன்படுத்தி அலங்கரிக்கிறார்கள்.

* கிறிஸ்துமஸ் குடில்:
இயேசுநாதர் பிறந்ததைப் போல சித்தரிக்கும் கிறிஸ்துமஸ் குடில்கள் விதவிதமான அலங்காரங்களுடன் உலகெங்கும் அமைக்கப்படுகின்றன.

இதை முதன்முதலாக புனித பிரான்சிஸ் என்பவர் 1722ம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார்.

செவ்வாய், 17 டிசம்பர், 2019

ஆண்டாள் பெருமை


ஆண்டாள் பெருமை

1 ) பன்னிரண்டு ஆழ்வார்களில் இவள் ஒருத்தி மட்டுமே பெண்ணாவாள்.
2 ) இவள் பூமாதேவியின் அவதாரம்.
3 ) ஜனகருக்கு சீதாதேவியை மகளாக அருளியது போல, பெரியாழ்வாருக்கும் மகளாக இவள் அருளப்பட்டாள்.
4 ) முக்தி தரும் வேதங்களை எளிய தமிழில் வடித்தாள்.
5 ) கண்ணனைத் தவிர வேறு எந்த மானிடரையும் மணம் முடியேன் என்று வைராக்கியத்துடன் இருந்தவள்.
6 ) கண்ணனைத் தன் அன்பால் கட்டியவள்
7 ) மற்ற ஆழ்வார்கள் எழுதிய பாசுரங்களை விட இவளால் பாடப்பட்ட திருப்பாவையை அதிக பக்தர்கள் இன்றும் மனப்பாடமாக ஓதுகின்றனர்.
8 ) மார்கழி என்றாலே அது ஆண்டாளுக்கு உரிய மாதமாகும். மற்ற மாதங்களில் செய்யாவிட்டாலும் மார்கழி மாதம் பலர் திருப்பாவையை ஓதி அவளது அருளை பெறுகின்றனர்.
9 ) இன்றும் ஸ்ரீவல்லிய்ப்புத்தூரில் ஆண்டாளுக்கு சூடிய மாலையைத் தான் பெருமாளுக்கு சூட்டுகிறார்கள்.
10 ) கண்ணன் மீது எவ்வாறு பக்தி செலுத்துவது என்பதை மானிடர்களுக்கு சொல்லிக்காட்டவே அவதரித்தவள்.
11 ) கண்ணன் மீது காதல் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவதரித்தவள்.
12 ) திருப்பாவை என்ற எளிய இலக்கியத்தின் மூலம் நாம் அனைவரும் வீடு பேறு அடைய வேண்டும் என்று அவதரித்தவள்.
13 ) கிட்டத்தட்ட எல்லா முக்கிய விஷ்ணு ஆலயங்களிலும் ஆண்டாளுக்கு தனி சன்னதி உண்டு. ஆராதனைகளும் உண்டு.
14 ) ஸ்ரீ ராமானுஜரை தனது அண்ணனாக எற்றுக்கொண்டாள்.

அவளது பெருமைகளை சொல்லி முடிக்க எனக்கு காலம் போதாது. எனது அறிவும் போதாது.

கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் அவளது காலடி தூசியை என் தலையில் சுமப்பதை விட வேறு எதுவும் தேவை இல்லை.

அவளது காலடி தூசிக்கு கோடானுகோடி மரியாதைகளையும் வணக்கங்களையும் செலுத்தி எனது பாவங்களை நான் கழிக்க விரும்புகிறேன்.

அவளது நாமத்தையும் அவள் அருளிய திருப்பாவையையும் துணையாக கொண்டு அவளது அடிமையாகவே எப்போதும் இருக்கும் நிலை வேண்டும்.

மார்கழி மாத சிறப்பு

மார்கழி மாத சிறப்பு

மார்கழி மாத சிறப்பு பற்றி இக்கட்டுரையில் காணலாம். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவான் கிருஷ்ணர் இம்மாதத்தை சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.
இம்மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது வழக்கமாக மேற்கொள்ளப்படுகிறது.
இந்த மாதம் ஆன்மீகத்தில் தேவர்களுக்கான அதிகாலை நேரமாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே இந்த மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். இம்மாதம் தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஓசோன் படலமானது பூமிக்கு மிகஅருகில் இம்மாதத்தில் உள்ளது. எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாடு இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
இம்மாதத்தில் மேற்கொள்ளப்படும் அதிகாலை இறைவழிபாடு பற்றி மாணிக்க வாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர்.
மார்கழியில் அதிகாலை வழிபாட்டில் கோவில்களில் வேதங்களுக்குப் பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.
இம்மாதத்தில் மிருகசீரிட நட்சத்திரத்தில் என்றும் பதினாறு மார்க்கண்டேயர் பிறந்தார். எனவே மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என்று மார்க்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது. ம்ருத்யுஞ்ச ஹோமம் செய்ய இம்மாதம் சிறந்தாகக் கருதப்படுகிறது.
இம்மாதத்தில் திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, அனும ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், உற்பத்தி ஏகாதசி போன்ற விழாக்கள், பண்டிகைகள், விரதமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

திருவாதிரை

திருவாதிரை
திருவாதிரை
திருவாதிரை திருவிழா மார்கழியில் பௌர்ணமியை ஒட்டிய திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவானது சிவபெருமானின் வடிவமான ஆடலரசன் நடராஜருக்கு கொண்டாடப்படுகிறது.
திருவாதிரைக் கொண்டே சிவபெருமானுக்கு ஆதிரையன் என்ற பெயர் வழக்கத்தில் உள்ளது. இவ்விழாவானது 1500 ஆண்டுகள் பழமையானது.
இவ்விழா பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். திருவாதிரை, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகள், இலங்கையில் உள்ள தமிழ்மக்கள் ஆகியோரால் மிகவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் திருச்சிற்றம்பலம் என்னும் தில்லை சிதம்பரத்திலும், உத்திரகோசமங்கையிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவின்போது திருவாதிரைக்களியும், ஏழுகறிக்கூட்டும் இறைவனுக்கு படைக்கப்படுகின்றன. திருவாதிரைக்கு ஒருவாய் களி என்பது இவ்விழா பற்றிய பழமொழியாகும்.
இன்றைய தினம் விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரதம் சிவனுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. இவ்விரத வழிபாடு மேற்கொண்டால் நடனகலையில் சிறக்கலாம்.

வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி
வைகுண்ட ஏகாதசி
வைகுண்ட ஏகாதசி மார்கழியில் வளர்பிறை ஏகாதசியில் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியில் திருமால் வழிபாடு மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது.
பெரும்பாலும் எல்லா இந்து மக்களாலும் இத்தினத்தில் விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. திருமாலை வழிபடும் விரதமுறைகளில் இது மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது.
காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்பது இவ்விரதம் பற்றிய பழமொழியாகும். இவ்விழாவில் சொர்க்கவாசல் திறப்பு என்பது முக்கிய நிகழ்சியாகும்.
வைகுண்ட ஏகாதசி அன்று துளசி நீரினை மட்டும் உட்கொண்டு பகல் மற்றும் இரவு வழித்திருந்து திருமால் பற்றிய பாடல்கள் பாடி விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரத வழிபாடு வைகுந்த பதவி என்னும் மோட்சத்தை நல்கும் என்று கருதப்படுகிறது.

பாவை நோன்பு

ஆயர்பாடியில் கோபியர்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆற்றிற்குச் சென்று நீராடி மண்ணால் செய்த காத்யாணி தேவியை வழிபட்டு தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வழிபாடு நடத்தினர்.
பெண்கள் கடைப்பிடித்த விரதமாயின் இவ்விரதம் பாவை நோன்பு என்று வழங்கலாயிற்று.ஆண்டாள் பாவை நோன்பினை மேற்கொண்டே அரங்கனை கணவனாக அடைந்தாள்.
ஆண்டாள் பாவை நோன்பின்போது நெய், பால் முதலியவற்றை உண்ணாமலும், கண்ணுக்கு மையிடாமல், தலையில் மலர் சூடாமல் புறஅழகில் நாட்டம் செலுத்தாமல் இறைநாட்டத்தில் மட்டும் மனதினைச் செலுத்தி பாவைநோன்பினை மேற்கொண்டாள்.
எனவே கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி கோவிலுக்குச் சென்று ஆண்டாள் எழுதிய திருப்பாவையைப் பாடி வழிபாடு நடத்துகின்றனர்.
திருமணமான பெண்கள் மகிழ்ச்சியான மணவாழ்வு நீடிக்க வேண்டியும், குடும்ப நலன் வேண்டியும் இவ்விரத்தினை மேற்கொள்கின்றனர். பாவை நோன்பு 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

திருவெம்பாவை நோன்பு

மாணிக்கவாசகர்

திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழியில் வரும் திருவாதிரைக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது திருவாதிரையோடு சேர்த்து விரத நாட்கள் மொத்தம் பத்து நாட்கள் ஆகும்.
இந்நோன்பில் அதிகாலையில் எழுந்து நீராடி சிவகாமியுடன் கூடிய நடராஜரை வழிபடுவர். இவ்விரதத்தின்போது ஒரு வேளை அவித்த உணவினை மட்டுமே உண்பர்.
இவ்விரத்தினை பெரும்பாலும் கன்னிப்பெண்கள் கடைப்பிடிப்பர். இவ்விரதத்தின்போது திருவெம்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன. இவ்வழிபாட்டில் பிட்டு படைக்கப்படுகிறது. இதனால் இவ்வழிபாடு பிட்டு வழிபாடு என்று அழைக்கப்படுகிறது.

படி உற்சவம்

முருகன்
முருகன்
 ஆண்டுதோறும் டிசம்பர் 31-ந்தேதி மலைமேல் உள்ள முருகன் கோவில்களில் படி உற்சவம் என்ற விழா சிறப்பாக நடைபெறுகிறது.
அன்றைய தினம் பக்தர்கள் குழுக்களாக மலைபடிக்களின் ஒவ்வொரு படியிலும் நின்று திருப்புகழ் பாடல்களைப் பாடுகின்றனர். இவ்விழா அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் மிகவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சஷ்டி விரதம்

பிள்ளையார்

இவ்விரதம் கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை முதல் தொடங்கி மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இவ்விரத முறையில் ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் 21 இழைகளாலான காப்பினைக் கட்டிக் கொள்கின்றனர்.
முதல் 20 நாட்களும் ஒரு வேளை மட்டும் உணவினை உட்கொள்கின்றனர். கடைசிநாள் முழுஉபவாசம் மேற்கொள்கின்றனர்.
விரதத்தின் நிறைவு நாள்அன்று பலவிதமான உணவுப்பொருட்களை தானமாகக் கொடுப்பர். இவ்விரதத்தின் பலனாக நல்ல வாழ்க்கைத்துணை, நற்புத்திரப்பேறு ஆகியன கிடைக்கும்.

அனும ஜெயந்தி

அனுமன்
மார்கழி மாதத்தின் மூலநட்சத்திரத்தோடு கூடிய அமாவாசை அன்று அனும ஜெயந்தி தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது.
அனும ஜெயந்தி அன்று விரதம் மேற்கொண்டு மன உறுதி, ஆற்றல், தைரியம் ஆகியவற்றை அருளுமாறு பிரார்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.
அனுமனிற்கு சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உற்பத்தி ஏகாதசி

பெருமாள்
பெருமாள்
மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி உற்பத்தி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இத்தினத்தில் விரதமுறை மேற்கொண்டு திருமாலை வழிபட சகல சௌபாக்கியங்கள் கிடைக்கும். பகையை வெல்ல உதவும்.

மார்கழியை சிறப்பு செய்தவர்கள்

தொண்டரடிப் பொடியாழ்வார்
தொண்டரடிப் பொடியாழ்வார்

இம்மாதத்தில் 63 நாயன்மார்களில் வாயில நாயனார், சடைய நாயனார், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாற நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோரின் குருபூஜை நடத்தப்படுகிறது.
பன்னிரு ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வார் ஜெயந்தி இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
ரமண மகிரிஷி, அன்னை சாரதா தேவியார், பாம்பன் சுவாமிகள் ஆகியோர் இம்மாதத்தில் தோன்றியோர் ஆவர்.
மார்கழியில் கோலம் இட்டு சாண பிள்ளையார் பிடித்து கோலத்தில் வைத்து பிள்ளையார் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
படி உற்சம் நடத்தி முருப்பெருமான் இம்மாதத்தில் சிறப்பிக்கப்படுகிறார்.
திருவாதிரை கொண்டாட்டத்தில் சிவபெருமான் வணங்கப்படுகிறார்.
வைகுண்ட ஏகாதசி விரம் கடைப்பிடித்து திருமால் போற்றப்படுகிறார்.
பெண்கள் பாவை நோன்பின் மூலம் ஆதிசக்தி அன்னையை வழிபடுகின்றனர்.
இவ்வாறாக மார்கழியில் பிள்ளையார், முருகப்பெருமான், சிவபெருமான், திருமால், ஆதிசக்தி என எல்லா கடவுளுரும் வழிபடப்படுகின்றனர்.
இதுவே மார்கழி மாத சிறப்பு ஆகும்.
நாம் மார்கழியில் கடவுள்களை வணங்கி நற்பேறு பெறுவோம்.
நன்றி இனிது.