திங்கள், 24 செப்டம்பர், 2018

தாமிரபரணி புஷ்கர் நீராடும் சில முக்கியமான இடங்கள்


தாமிரபரணி புஷ்கர் நீராடும் சில முக்கியமான
இடங்கள்

பாபநாசம்
அம்பாசமுத்திரம்
ஊர்க்காடு 1 (கீழ் படித்துறை)
ஊர்க்காடு 2 (மேல் படித்துறை)
கல்லிடைக்குறிச்சி
அத்தாள நல்லூர்
திருப்புடை மருதூர்
முக்கூடல்
தென் திருப்பவனம்
சேரன்மகாதேவி
காருகுறிச்சி
மேலச்செவல் & தேச மாணிக்கம்
கோபால சமுத்திரம்
சுத்தமல்லி
கோடகநல்லூர்
திருநெல்வேலி கொக்கிரகுளம்
திருநெல்வேலி சிந்துபூந்துறை
திருநெல்வேலி சி.என். கிராமம்
திருநெல்வேலி - அருள்மிகு ஸ்ரீ வரத ராஜ பெருமாள் கோவில் படித்துறை
திருநெல்வேலி - வண்ணார்பேட்டை குட்டந்துறை (குஷ்டம் தீர்த்த) படித்துறை
திருநெல்வேலி - வண்ணார்பேட்டை மணிமூர்த்தீஸ்வரம்
திருநெல்வேலி - எட்டெழுத்து பெருமாள் கோவில் படித்துறை
சீவலப்பேரி அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில்
முறப்ப நாடு
நவ கைலாயம்
ஸ்ரீ வைகுண்டம்
ஆழ்வார் திருநகரி
தென்திருப்பேரை
ஏரல்
ஆத்தூர்
புன்னைக்காயல்

இத்தனை ஊர்களில் தாமிரபரணி செல்கிறது. எங்கு வேண்டுமானாலும் குளிக்கலாம்.

கொசுறு தகவல்: சில இடங்களுக்கு நீங்கள் சென்றால் நன்றாக இருக்கும். எத்தனையோ தொலைவில் இருந்து வரும் நீங்கள் இந்த ஊர்களில் இருக்கும் பகவானை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கட்டும். அதில் முக்கியமாக

1. தென்திருபுவனம் இங்கு தான் கால் மாற்றி போட்டு அமர்ந்த நிலையில் இருக்கிறார் தட்சிணாமூர்த்தி.

2. திருப்புடைமருதூர்: நாறும்பூநாதர் திருக்கோவில்

3. மணிமூர்த்தீஸ்வரம் - உச்சிஷ்ட கணபதி ஆலயம்

4. முறப்பநாடு - இங்கிருந்து 3 கிமீதூரத்தில் தான் தென்திருநள்ளாறு என அழைக்கப்படும் நாணல்காடு.

5. சுத்தமல்லி - அழகிய ராஜராஜேஸ்வரி ஆலயமும் வேதபாடசாலையும்

கடைசி ஐஞ்சு ஊருக்கு பேருந்து வசதி
தென் திருபுவனத்திற்கு நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து முக்கூடல் சென்று அங்கிருந்து ஆட்டோ தான் ஒரே வழி.
திருப்புடைமருதூருக்கு நெல்லையில் இருந்து கல்லிடைக்குறிச்சி செல்லும் பேருந்துகள் செல்லும். மணிமூர்த்தீஸ்வரத்திற்கு நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் உண்டு. (ஆனா டைம் தெரியலை. ஆட்டோ வசதிகள் உண்டு) முறப்பநாடு நெல்லை புது பஸ்ஸ்டாண்டில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் இருக்கிறது. தூத்துக்குடி செல்லும் அனைத்து பேருந்துகளும் முறப்பநாடு வழியாகத்தான் செல்லும். சாதாரண பேருந்துகள் மட்டுமே இங்கு நிற்கும்.
 சுத்தமல்லிக்கு டவுண்பஸ்கள் நிறைய இருக்கு.

சனி, 22 செப்டம்பர், 2018

திருப்பதி 7 மலைகளும்! அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்ரீனிவாசன்களும்!


திருப்பதி 7 மலைகளும்! அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்ரீனிவாசன்களும்!

1. வேங்கட மலை:

‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு
‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

2. சேஷ மலை:

பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.

3. வேதமலை:

வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.

4. கருட மலை:

இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.

5. விருஷப மலை:

விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.

6. அஞ்சன மலை:

ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிற து.

7. ஆனந்த மலை:

ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.

திருப்பதி மலைகளில் வீற்றிருக்கும் ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர்

திருப்பதி திருமலையில்,

1.த்ருவ ஸ்ரீநிவாசர்,
2. போக ஸ்ரீநிவாசர்,
3. கொலுவு ஸ்ரீநிவாசர்,
4. உக்ர ஸ்ரீ நிவாசர்,
5. மலையப்பர்

என ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். இவர்களை பஞ்சபேரர்கள் என்று அழைக்கின்றனர்.

1. த்ருவ ஸ்ரீநிவாச மூர்த்தி :

இவர்தான் மூலவர். ஆனந்த நிலையத்தில் சுயம்புவாக எழுந்தவர். சாளக்ராமத்தால் ஆனவர். இவரை ஸ்தானக மூர்த்தி, த்ருவமூர்த்தி, த்ருவபேரம், கோவிந்தன், ஸ்ரீவாரி, பாலாஜி என்றெல்லாம் அழைப்பர். சுமார் பத்தடி உயரம் கொண்ட பரந்தாமன். இந்த மூல மூர்த்தியை ஏகாந்த சேவைக்குப் பிறகு பிரம்மா முதலான எல்லா தேவர்களும் வந்து வணங்குவதாக ஐதீகம்.

2. போக ஸ்ரீநிவாச மூர்த்தி :

இவர், கருவறையில் மூல மூர்த்தியுடன் இருப்பவர். கௌதுக பேரர், மணவாளப் பெருமாள் என்றும் இவருக்குப் பெயர். கோயிலில் இருந்து எப்போதும் வெளியே வராத இவருக்கு தினமும் ஆகாச கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. புதன்கிழமை தோறும் காலை இவருக்கு தங்கவாசல் முன்பு ஸஹஸ்ரக லசாபிஷேகம் நடைபெறுகிறது. அச்சமயம் மட்டும் இவரை தரிசிக்கலாம். எட்டு அங்குல உயரத்தில் வெள்ளியினாலான பெருமாள் இவர்.

3. கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி :

கொலுவு என்றால் ஆஸ்தானம் என்றுபொருள். தினமும் கருவறையில் தோமாலை சேவை ஆனதும் ஸ்நபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளும் இவரிடம் அன்றைய பஞ்சாங்க விஷயங்கள், கோயில் வரவு&செலவு, நித்திய அன்னதான நன்கொடையாளர் விவரங்கள், உற்சவ விஷயங்கள் ஆகியவற்றை ஆலய பட்டர் அறிவிப்பார். இந்நிகழ்வில் ஆலய பட்டர்கள், ஆலய ஊழியர்கள் தவிர வேறுயாரும் கலந்து கொள்ள முடியாது.

4. உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி :

இவருக்கு வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என்றும் பெயர்கள் உண்டு. இவரே பதினான்காம் நூற்றாண்டு வரை உற்சவமூர்த்தியாக இருந்தவர். இவர் மீது சூரிய ஒளி பட்டால் உக்ரமாகி விடுவார். ஒரு முறை அவ்வாறு ஏற்பட, பல கெடுதல்கள் நிகழ்ந்து விட்டன. எனவேதான் புதிதாக மலையப்பசுவாமியை எழுந்தரு ளச் செய்தனர். உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கைசிக துவாதசி அன்று மட்டும் விடியற்காலை மூன்று மணி அளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு கருணை புரிகிறார்.

5. உற்சவ ஸ்ரீநிவாசர் எனும் மலையப்ப சுவாமி :

இவருக்கு மலை குனிய நின்ற பெருமாள், உத்ஸவ பேரர், மலையப்பர் எனும் பெயர்களும் உண்டு. நெற்றி யில் பதிக்கப்பட்ட திருச்சுட்டியில் கஸ்தூரி திலகம் திகழக் காட்சியளிப்பவர் மலையப்பர்.

சமீப வருடங்களாக திருமலைக்கு வந்து கல்யாண உற்சவத்தை சேவிக்க இயலாத பக்தர்களின் குறை போக்கவும் பக்தி மார்க்கம் செழிக்கவும் கல்யாண ஸ்ரீ நிவாசர் எனும் மூர்த்தியை எல்லா ஊர்களுக்கும் எழுந்தருளச் செய்து, கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. இவர் வேறு. திருமலையில் உள்ள மலையப்ப சுவாமி வேறு

வியாழன், 20 செப்டம்பர், 2018

கொல்லூர் மூகாம்பிகை பற்றிய 60 தகவல்கள்


கொல்லூர் மூகாம்பிகை பற்றிய 60 தகவல்கள்

1. மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள். கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், திரைத்துறையினர், நடிகர்கள், நாட்டியமணிகள், சிற்பிகள், ஓவியர்கள் போன்ற பல்வேறு துறையைச் சார்ந்த கலைஞர்கள் தங்கள் கலைத்திறன் சிறப்படைய வேண்டும் என்று கொல்லூர் மூகாம்பிகையை தொழுது செல்கின்றனர்.

2. கொல்லூர் ஆலயத்தில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் கவிஞர்களும் இசைக்கலைஞர்களும், நாட்டியக்கலைஞர்களும் தங்கள் படைப்புகளை படைத்து அம்மனுக்கு கலாஞ்ஜலி செய்கிறார்கள்.

3. அம்மனை சீவேலி என்று ஆலயத்தைத் திருவலம் செய்விக்கும் போது காலையில் உலா வருகின்ற தேவி காளியின் அம்சமாகவும், உச்சியில் உலா வருகின்ற தேவி திருமகளின் அம்சமாகவும் இரவில் உலா வருகின்ற தேவி கலைமகள் அம்சமாகவும் பாவிக்கப்படுகிறாள்.

4. கலைஞர்களாக பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் கலைப்பயணத்தில் முழுமையான வெற்றி அடைய தங்கள் கலைப்பணியை அன்னை மூகாம்பிகைக்கு அர்ப்பணித்து தொடங்க வேண்டும் என்பது ஐதீகமாகும்.

5. அனைத்து ஆலயங்களிலும் மூல விக்கிரகம் கல்லால் அமைந்திருக்கும் அல்லவா? ஆனால், மூகாம்பிகை அம்மனின் ஆலயத்தில் மட்டும் மூல விக்கிரகம் பஞ்சலோகத்தால் ஆனது.

6. அம்பாள் பத்மாசனத்தில் அமர்ந்த கோலம் ஆதி சங்கரர் தன் மனக்கண்ணில் இருந்த அம்மன் திருவுருவத்தை விஷ்வகர்மாக்களிடம் விளக்கி அவ்வாறே பஞ்சலோகத்தில் செய்யச் சொன்னார். அந்த ஐம்பொன் விக்கிரகமே இன்றும் ஆலயத்தில் அலங்கார தேவதையாக உள்ளது.

7. மூகாம்பிகை அம்மனின் விக்கிரகத்திற்கு பக்தர்கள் புடவை சார்த்துதல் உண்டு. ஆனால், இந்த புடவை சாத்தும் போது தூய பட்டினாலான புடவையை மட்டுமே அம்பாளுக்கு கட்டுவார்கள். ஏனைய புடவையை அம்பாளின் மீது போர்த்தி விடுவார்கள்.

8. அம்பாளுக்கு துளசி மற்றும் பிச்சிப்பூவால் ஆன மாலையையும் அணிவிக்கிறார்கள். தமிழகத்தில் தேன்பூ என்று வழங்கப்படும் சிகப்பு நிறத்தில் கொத்து கொத்தாக உள்ள இந்த காட்டு மலர்களினால் ஆன ஆரத்தை விசேஷமானது என்று அணிவிக்கிறார்கள்.

9. அபிஷேக ஆராதனைகள் அனைத்தும் சுயம்பு லிங்கத்திற்கே பிரதானமாக செய்யப்படுகிறது. மேலும் தங்க ரேகையை அனைவரும் எல்லா நேரங்களிலும் பார்க்காதபடி தங்க கவசம் கொண்டும் மூடப்பட்டுள்ளது.

10. மகாபூஜை செய்பவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தங்க ரேகைக்குரிய பூஜைகள் செய்பவர்களுக்கு உச்சி நேரத்தில் லிங்கத்தின் தங்கக்கோட்டை சூரிய ஒளியை கண்ணாடி மூலம் கர்ப்பக்கிரகத்தில் பிரதிபலித்து தங்க ரேகையை காட்டுவது வழக்கமாகும்.

11. கொல்லூர் கோவில் பூசாரிகளை புரோகிதர்கள் என்றே அழைக்கின்றனர். கோவிலின் அனைத்து தேவைகளும், சேவைகளும் இவர்களாலேயே நடைபெறுகிறது.

12. இந்த ஆலயத்தின் பூஜை முறைகள் சிருங்கேரி மடத்தை அனுசரித்துள்ளது.

13. சுயம்புலிங்கத்தின் ரேகையின் விசேஷம் என்னவென்றால் இது நெற்றிக்கு இடுகின்ற கீற்று சந்தனம் போன்று இருப்பதும் லிங்கத்தின் உச்சியை வலப்புறம் பெரிதாகவும் இடப்புறம் சிறிதாகவும் பிரிக்கின்ற அழகே ஆகும்.

14. சிறிய உட்பிரகாரத்தைக் கொண்ட ஆலயமான தேவியின் திருச்சன்னத்தியில் அடுத்து வருகின்ற பக்தர்களும் தரிசிக்க ‘வேகமாக போங்கள்’என்று சொல்லும் போது சில பக்தர்களுக்கு தாங்கள் தொலைத்தூரத்தில் இருந்து வந்து மிக சொற்பமான நேரம் அம்மனை தரிசிக்கின்றோமே என்ற மனவருத்தம் அடைகின்றனர்.

15. அம்மனைத்தரிசிக்க வரு பவர்கள் இயன்ற வரை ஒரு நாளாவது முழுதாக தங்கி ஆலயத்திலேயே அதிக நேரம் இருந்து வரிசையில் பலமுறை நின்று நித்திய பூஜைகள் அனைத்தையும் கண்குளிரக் கண்டு மூகாம்பிகையின் அருளைப் பெறுதல் வேண்டும்.

16. பக்தர்கள் தங்கள் கோத்திரம், குடும்பத்தில் உள்ள அனைவருடைய நட்சத்திரம், பெயர்கள் ஆகியவற்றை கூறி சங்கல்பம் செய்து கொள்வது மற்ற ஆலயங்களில் இல்லாத ஒன்றாகும்.

17. அலங்காரம், புஷ்பாஞ்சலி, ஆராதனை போன்றவை மட்டுமே இந்த மூகாம்பிகைக்கு செய்யப்படுகின்றன.

18. கிரகண நேரத்திலும் கருவறை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும் திருத்தலம் இது.

19. மூகாம்பிகையை பூஜிக்க பிரம்மச்சாரிகள் அனுமதிக் கப்படுவதில்லை

20. அக்னி தீர்த்தம், காசி தீர்த்தம், சுக்ல தீர்த்தம், மது தீர்த்தம், கோவிந்த தீர்த்தம், அகஸ்திய தீர்த்தம் ஆகியவை இத்தல தீர்த்தங்கள்.

21. இத்தலத்தில் தேவிக்கு எடுக்கும் விழாவில் மூகனும் கொண்டாடப்படுகிறான்.

22. சரஸ்வதி பூஜையன்று மூகாம்பிகையின் சன்னதியில் உள்ள சரஸ்வதி தேவி கருவறையிலிருந்து வெளிவந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறாள்.

23. மூகாம்பிகை தேவி கலைமகள் அம்சமாகத் திகழ்வதால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க அம்பிகையை பிரார்த்தனை செய்து கலாரோகணம் எனும் துதியை பாடுகிறார்கள்.

24. மூகாம்பிகை ஏவல், பில்லி, சூன்யம், துஷ்ட தேவதைகளால் வரும் துன்பங்கள், சாபத்தால் தோன்றும் கோளாறு, தடை அனைத்தையும் தவிடு பொடியாக்கும் சர்வ வல்லமை படைத்தவள்.

25. அனைத்து மதத்தினரும் வழிபடும் அற்புததேவி இந்த மூகாம்பிகை. திப்பு சுல்தான் இங்கு வந்தபோது இஸ்லாமிய முறைப்படி சலாம் செய்தார். இன்றும் சலாம் மங்களாரத்தி இத்தலத்தில் பிரசித்தம்.

26. மூகாம்பிகை தேவிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அலங்காரம் செய்யப்படுகிறது.

27. வெள்ளிக்கிழமை ஆலயத்தில் உள்ள 1008 தீபங்கள் கொண்ட மரவிளக்கு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. மேலும் கருவறை முழுவதும் தீபங்கள் ஏற்றப்படும்.

28. மூகாம்பிகை தேவியின் மந்திரத்தில் வாக்பவ பீஜமான ‘ஜம்’. நான்கு முறை இடம் பெற்றுள்ளது. இது அறம், பொருள், இன்பம், வீடுபேறு எனும் சதுர்வித புருஷார்த்தங்களையும் பக்தர்களுக்கு தரும் என்பதை குறிக்கிறது.

29. மூகாம்பிகையின் பாதங்களில் அர்ச்சனை செய்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொள்வதால், நான்முகன் நம் தலையில் எழுதிய கெட்ட எழுத்தும் குங்கும மகிமையால் அழிந்து விடுமாம்.

30. பூர்வ புண்ணியம் மேலோங் கப் பெற்றவர்கள் மற்றும் தம் வல்வினை நீங்கும் காலம் நெருங்கிய வர்களே கொல்லூர் சென்று அங்கே கோலோச்சும் மூகாம்பிகையை தரிசிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.



31. மூகாம்பிகை கருவறைக்குள் நுழையும் ஆண்கள் மேல் சட்டை அணிந்திருக்கக்கூடாது என்ற கேரள வழக்கம் இங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.

32. அன்னையின் சன்னதிக்கு நேர் பின்புறம், அன்று ஆதி சங்கரர் தியானம் செய்ய அமர்ந்த இடம் இன்றும் கூட சங்கரர் பீடம் என்று போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.

33. அன்னைக்குப் போரில் உதவிபுரியப் படைக்கப்பட்ட வீரபத்திரர், இந்த சேத்திரத்திற்கு ரட்சாதிகாரியாக வழிபடப்படுகிறார்.

34. மூகாம்பிகா ஆலயத்தில் தினசரி மதியம் மற்றும் இரவு ஆகிய இரு வேளைகளிலும் அன்னதானம் உண்டு.

35. சத்ருவை அழித்த அன்னையின் சக்தி இங்கு மிகுந்திருப்பதால், சத்ருக்களால் எந்த ஆபத்தும் வராமல் இருக்க இங்கு ஏராளமானவர்கள் சண்டிஹோமம் செய்கிறார்கள்.

36. மூகாம்பிகை ஆலயத்தில் 2 விதமான பூஜைகள் மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒன்று பலிபீட பூஜை. மற்றொன்று விஜய் யக்ஞ சாஸ்திர பூஜையாகும்.

37. திருப்பதி, திருவண்ணாமலை தலங்களில் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ள விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் கொல்லூர் மூகாம்பிகைக்கும் நிறைய சேவை செய்துள்ளார். மூகாம்பிகைக்கு தங்கத்தால் முகக்கவசம் செய்து கொடுத்தது அவர்தான்.

38. கொல்லூரில் புனித தீர்த்தமாக உள்ள சவுபர்ணிகா நதியில் 62 வகை மூலிகைகள் கலந்து வருவதாக சொல்கிறார்கள். எனவே அந்த நதியில் நீராடினால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சிப்பெறும்.

39. கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் பக்தர்கள் 64 விதமான, வித்தியாசமான பூஜைகள், சேவைகளில் பங்கேற்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

40. தினமும் இத்தலத்தில் சண்டிஹோமம் நடத்தப் படுகிறது. கட்டணம் ரூ.8 ஆயிரம்.

41. கர்நாடகா மாநிலத்தில் உள்ள 7 முக்தி தலங்களில் கொல்லூர் மூகாம் பிகை ஆலயமும் ஒன்றாக கருதப்படுகிறது.

42) மூகாம்பிகை ஆலயத்துக்கு, “அறிவுக்கோவில்” என்ற பெயரும் உண்டு.

43. ஆண்கள் கால்சட்டை, பெர்முடாஸ், தொப்பி, லுங்கி போன்றவை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொல்லூர் ஆலயத்துக்கு வரும் ஆண்களில் 90 சதவீதம் பேர் வேட்டி அணிந்தே வருகிறார்கள்.

44. கர்ப்பமான பெண்கள் 7 மாதம் கடந்த பிறகு ஆலயத்துக்குள் செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

45. குழந்தை பெற்ற பெண்கள் 11 நாட்கள் கழித்தே ஆலயத்துக்கு வரவேண்டும் என்று விதி வகுக்கப்பட்டுள்ளது.

46. சிவராத்திரி தினத்தன்று இரவு முழுவதும் மூகாம்பிகை ஆலயம் திறந்து இருக்கும். லிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

47. கர்நாடகா முன்னாள் முதல்&மந்திரி குண்டுராவ் கொடுத்த வெள்ளி வாளும் இங்கு உள்ளது.

48. ஆடி, அஷ்டமி திதியில் வரும் ரோகிணி நட்சத்திரத்தன்று உற்சவத்திருமேனியை சுக்கில தீர்த்தத்திற்கு எடுத்துச் சென்று நீராடுவார்கள்.

49. முதன் முறையாக திருக் கோவிலுக்கு வருபவர்கள் தாம் தங்கிய இல்லத்தின் அர்ச்சகருடன் சவுபர்னிகா ஆற்றுக்குச் சென்று அவர் கூறும் மந்திரங்களை கூறி ஆற்றில் நீராட வேண்டும். இதற்கு “சங்கல்பஸ்நானம்” என்று பெயர்.

50. கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் உள்பிரகாரத்தில் சுற்றி வரும்போது ஒரு இடத்தில் வெள்ளியால் செய்யப்பட்ட பெரிய பாம்பு உருவம் சுவரில் பதிக்கப்பட்டு இருப்பதை காணலாம். அதை பக்தர்கள் தொட்டு வணங்கி செல்கிறார்கள். இந்த வழிபாடு ராகு-கேது தோஷத்தை நிவர்த்தி செய்யும் என்று நம்பப்படுகிறது.

51. கொல்லூரில் கடைகள் மிகமிக குறைவாகவே உள்ளன. இதனால் எல்லாக் கடைகளிலும் கூட்டம் காணப்படுகிறது. மதிய நேரங்களில் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் பரிசு பொருட்களை அந்த நேரத்தில் சென்று வாங்கலாம்.

52. கொல்லூர் ஆலயத்துக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் அதிகாலை நேரத்தில் வருவதால் காலை நேர வழிபாட்டுக்கு சுமார் 3 மணி நேரம் ஆகும். ஆனால் மதியம் 3 மணிக்கு நடை திறந்த பிறகு பக்தர்கள் வருகை மிகமிக குறைவாகவே இருக்கும். அப்போது 10 நிமிடங்களில் சாமி தரிசனம் செய்துவிடலாம்.

53. கொல்லூரில் தினமும் பக்தர்கள் எடைக்கு எடை பல்வேறு பொருட்களை தூலாபாரம் கொடுக்கிறார்கள். பெரும்பாலும் வாழைத்தார்கள் தான் தூலாபாரம் கொடுக்கப்படுகிறது.

54. கொல்லூரில் பக்தர்கள் அம்மனை வழிபட 3 வித வரிசைகள் உள்ளன. 1. இலவச தரிசன வரிசை, 2. ரூ. 100 கட்டண வரிசை, 3. ரூ. 500 கட்டண வரிசை. ரூ. 500 கட்டண வரிசையில் ஒரு டிக்கெட்டுக்கு 2 பேர் செல்லலாம். இரண்டே நிமிடத்தில் அம்மனை பார்த்துவிடலாம்.

55. பிரதான நுழைவு வாயிலில் இரண்டு பெரிய மணிகள் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன. மூகாம்பிகைக்கு பூஜைகள் நடக்கும் போது அந்த மணியை ஒலிக்கச் செய்கிறார்கள். அந்த சத்தம் பிரமாண்டமாக இருக்கிறது.

56. கொல்லூர் தலத்தில் பக்தர்களுக்கு மதியமும், இரவும் இலவச உணவு வழங்கப்படுகிறது.

57. கொல்லூர் மூகாம்பிகை ஆலயம் சார்பில் 9 கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. அங்கு ஏழைகளுக்கு இலவசமாக கல்வி கற்பிக்கப்படுகிறது.

58. உறவினர்கள் யாராவது மரணம் அடைந்து இருந்தால் பக்தர்கள் 11 நாட்களுக்கு இந்த ஆலயத்துக்குள் நுழையக்கூடாது.

59. போட்டோ எடுக்க ஆலயத்துக்குள் தடை விதித்துள்ளனர். ஆனால் செல்போனில் பலரும் படம் மற்றும் செல்பி எடுத்தபடி தான் உள்ளனர்.

60. கொல்லூர் ஆலயம் சார்பில் மிகப்பெரிய கோசாலை உள்ளது. அங்கு சுமார் 150 பசுக்கள் வளர்க்கப்படுகின்றன.

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

நவகிரகங்களின் பயோடேட்டா


நவகிரகங்களின் பயோடேட்டா ...

*1.#சூரியன்.*
காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.
சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.
திக்கு - கிழக்கு
அதிதேவதை - அக்னி
ப்ரத்யதி தேவதை - ருத்திரன்
தலம் - சூரியனார் கோவில்
நிறம் - சிவப்பு
வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
தானியம் - கோதுமை
மலர் - செந்தாமரை , எருக்கு
வஸ்திரம் - சிவப்பு
ரத்தினம் - மாணிக்கம்
அன்னம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்

*2.#சந்திரன்.*
பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.
கடக ராசிக்கு அதிபதி.
திக்கு -தென்கிழக்கு
அதிதேவதை - ஜலம்
ப்ரத்யதி தேவதை - கௌரி
தலம் - திருப்பதி
நிறம் - வெள்ளை
வாகனம் - வெள்ளைக் குதிரை
தானியம் - நெல்
மலர் - வெள்ளை அரளி
வஸ்திரம் - வெள்ளாடை
ரத்தினம் - முத்து
அன்னம் - தயிர் சாதம்

*3 . #அங்காரகன் (செவ்வாய்)*
இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர்.
மேஷம் , விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.
திக்கு -தெற்கு
அதிதேவதை - நிலமகள்
ப்ரத்யதி தேவதை - க்ஷேத்திரபாலகர்
தலம் - வைத்தீசுவரன் கோவில்
நிறம் - சிவப்பு
வாகனம் - ஆட்டுக்கிடா
தானியம் - துவரை
மலர் - செண்பகப்பூ, சிவப்பு அரளி
வஸ்திரம் - சிவப்பு ஆடை
ரத்தினம் - பவளம்
அன்னம் - துவரம் பருப்பு பொடி சாதம்

*4.#புதன்.*
இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.
மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி
திக்கு - வட கிழக்கு
அதிதேவதை - விஷ்ணு
ப்ரத்யதி தேவதை - நாராயணன்
தலம் - மதுரை
நிறம் - வெளிர் பச்சை
வாகனம் - குதிரை
தானியம் - பச்சைப் பயறு
மலர் - வெண்காந்தள்
வஸ்திரம் - வெண்ணிற ஆடை
ரத்தினம் - மரகதம்
அன்னம் - பாசிப்பருப்பு பொடி சாதம்

*5.#குரு.*
இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர்.
தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - வடக்கு
அதிதேவதை - பிரம்மா
ப்ரத்யதி தேவதை - இந்திரன்
தலம் - திருச்செந்தூர்
நிறம் - மஞ்சள்
வாகனம் - மீனம்
தானியம் - கடலை
வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை
ரத்தினம் - புஷ்பராகம்
அன்னம் - கடலைப் பொடி சாதம் , சுண்டல்.

*6.#சுக்கிரன்.*
இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர். சுபர். ரிஷபம்,
துலாம் ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - கிழக்கு
அதிதேவதை - இந்திராணி
ப்ரத்யதி தேவதை - இந்திர மருத்துவன்
தலம் - ஸ்ரீரங்கம்
வாகனம் - முதலை
தானியம் - மொச்சை
மலர் - வெண் தாமரை
வஸ்திரம் - வெள்ளாடை
ரத்தினம் - வைரம்
அன்னம் - மொச்சைப் பொடி சாதம் .

*7.#சனி*
இவர் சூரியனுடைய குமாரர். பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.
மகரம் , கும்பம் ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - மேற்கு
அதிதேவதை - யமன்
ப்ரத்யதி தேவதை - பிரஜாபதி
தலம் - திருநள்ளாறு
நிறம் - கருமை
வாகனம் - காகம்
தானியம் - எள்
மலர் - கருங்குவளை, வன்னி
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
ரத்தினம் - நீலம்
அன்னம் - எள்ளுப்பொடி சாதம்

*8.#ராகு*
இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப் படுபவர்.
திக்கு - தென் மேற்கு
அதிதேவதை - பசு
ப்ரத்யதி தேவதை - பாம்பு
தலம் - காளத்தி
நிறம் - கருமை
வாகனம் - நீல சிம்மம்
தானியம் - உளுந்து
மலர் - மந்தாரை
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
ரத்தினம் - கோமேதகம்
அன்னம் - உளுத்தம்பருப்புப்பொடி சாதம்

*9.#கேது*
இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும் , செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.
திக்கு - வட மேற்கு
அதிதேவதை - சித்திரகுப்தன்
ப்ரத்யதி தேவதை - பிரமன்
தலம் - காளத்தி
நிறம் - செம்மை
வாகனம் - கழுகு
தானியம் - கொள்ளு
மலர் - செவ்வல்லி
வஸ்திரம் - பல நிற ஆடை
ரத்தினம் - வைடூரியம்
அன்னம் - கொள்ளுப்பொடி சாதம்

*நவகிரக தோசம் போக்கும் சில பொதுவான வழிமுறைகளும் உள்ளன.*
இவ்வழிமுறைகள் எளிதானதும் எல்லாராலும் கடைப்பிடிக்கக் கூடியதுமாகும். அவற்றை இங்கு காண்போம்.

*காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு 15 நாட்கள் கொடுத்தல்: வெள்ளி டம்ளர்களை நீர் அருந்தப் பயன்படுத்துதல் சுக்கிரனை பலப்படுத்தும்.

*நீலம் மற்றும் பச்சை ஆடைகளை தவிர்த்தல் சனி, புதன் பாதிப்பிலிருந்து விலக்கும்.

*தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிதல் குருவருள் கிடைக்க வழி செய்யும்.

*கண் தெரியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்குதல் சனியை ப்ரீத்தி அடையச் செய்யும்.

*கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போடவும். இது சந்திரனின் பலத்தை கூட்டும்.

*தோலில் செய்த மணிபர்சில் பணம் வைக்க வேண்டாம். சனி கெட்டிருப்பவர்களின் கெடு பலனைக் குறைக்கும்;.

* வாகனத்தை எப்போதும் நல்ல நிலையில் சீராக வைத்திருக்க வேண்டும். சனி பலம் நன்றாக அமையும். (ஜாதகத்தில் சனி கெட்டு, அவரது தசை நடந்தால் வாகனத்தில் அதிக பராமரிப்பு செலவு ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.)

*வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள் செய்வதும் தினமும் சூரியனுக்கு நீர் படைப்பதும் சூரிய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.

*தினமும் சரஸ்வதி மந்திரம் ஜெபிப்பது புதன் பலத்தைக் கூட்டும்: பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும்.

*வியாழக்கிழமைகளில் கோவில்களில் லட்டு வழங்குவது குரு பலத்தை அதிகரிக்கும். அதுபோல் வியாழக்கிழமைகளில் பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது.

*பசுவின் கோமியத்தை வீட்டில் அவ்வப்போது தெளித்தால் வீட்டிலுள்ள பீடைகள் அகலும்.

*16 நாட்கள் கோவிலில் கொள்ளு தானம் செய்வது கேது ப்ரீத்திக்கு உகந்தது.

*பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பதும்; கையில் வெள்ளி வளையம் அணிவதும் சுக்கிரனுக்கு நல்லது.

*அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியினால் ஏற்படும் சங்கடங்கள் அகலும்.

*சர்க்கரை, கடலைப் பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை மாதப்பிறப்பன்று தானமளித்தால், வீட்டில் அன்னபூரணியின் கடாட்சம் கிட்டும்.

*இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப் பயிறை நீரிலிட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு உணவாக அளித்தால் புதனால் ஏற்படும் தோசம் நீங்கும்.

*வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் அளித்தால் சுக்கிரனின் அனுக்கிரகம் கிடைக்கும்

*நவக்கிரங்களின் காயத்ரீ மந்திரங்கள்.*

1.) ஸ்ரீ சூரியன் காயத்ரீ:-ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: பாச ஹஸ்தாய தீமஹிதன்னோ சூர்ய ப்ரயோதயாத்.

2.) ஸ்ரீ சந்திரன் காயத்ரீ:- ஓம் பத்ம த்வஜாய வித்மஹே: ஹேம ரூபாய தீமஹி தன்னோ ஸோம ப்ரயோதயாத்.

3.) ஸ்ரீ செவ்வாய் காயத்ரீ:- ஓம் வீர த்வஜாய வித்மஹே: விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம ப்ரயோதயாத்.

4.) ஸ்ரீ புதன் காயத்ரீ:- ஓம் கஜ த்வஜாய வித்மஹே: சுக ஹஸ்தாய தீமஹி தன்னோ புத ப்ரயோதயாத்.

5.) ஸ்ரீ குரு காயத்ரீ:- ஓம் விருஷப த்வஜாய வித்மஹே: க்ருணி ஹஸ்தாய தீமஹி தன்னோ குரு ப்ரயோதயாத்.

6). ஸ்ரீ சுக்கிரன் காயத்ரீ:- ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: தநுர் ஹஸ்தாய தீமஹி தன்னோ சுக்கிர ப்ரயோதயாத்.

7.) ஸ்ரீ சனீஸ்வரர் காயத்ரீ:- ஓம் காக த்வஜாய வித்மஹே: கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ மந்த ப்ரயோதயாத்.

8.) ஸ்ரீ ராகு காயத்ரீ:- ஓம் நாக த்வஜாய வித்மஹே: பத்ம ஹஸ்தாய தீமஹி தன்னோ ராகு ப்ரயோதயாத்.

9.) ஸ்ரீ கேது காயத்ரீ:- ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ கேது ப்ரயோதயாத்  .

திங்கள், 17 செப்டம்பர், 2018

நவராத்திரி கொலு வைக்கும் முறை..


நவராத்திரி கொலு வைக்கும் முறை..

நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு
என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். ஐம் பூதங்களி ல் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர் களிற் கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றா. இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்க வேண்டு ம் என்று பார்ப்போம். கொலு மேடை 9 படிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
1
. முதலாம் படி : –
ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள்.
2. இரண்டாம் படி:-
ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
3. மூன்றாம் படி :-
மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்ற வற்றின் பொம்மை கள்.
4. நாலாம்படி :-
நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு ,வண்டு போன்றவற்றின் பொம் மைகள்.
5. ஐந்தாம்படி :-
ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகி யவற்றின் பொம்மைகள
6. ஆறாம்படி :-
ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.
7. ஏழாம்படி :-
மனித நிலையிலிருந்து உயர்நி லையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொ ம்மைகள்.
8. எட்டாம்படி :-
தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.
9. ஒன்பதாம்படி :-
பிரம்மா, விட்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வை க்கவேண்டும்.
மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலை யை அடைய வேண்டும் என்பதற் காகவே இப் படி கொலு அமைப்பது வழக் கம்.
நவராத்திரி வழிபாட்டு முறை.
1. முதலாம் நாள் :-
சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள்
மிகவும் கோபக்காரி. நீதியைக் காக்கவே இவள் கோபமாக உள்ளாள். மற்றும் இவளது கோபம் தவறு செ ய்தவர்களை திருத்தி நல் வழிபடுத் தவே ஆகும்.
மதுரை மீனாட்சி அம்மனை முதல் நாளில் அண்ட சராசரங்களைக் காக்கும ராஜராஜேஸ்வரி அம்மனாக அலங்கரிப்பர்.
முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.
2. இரண்டாம் நாள் :–
இரண்டாம் நாளில் அன்னையை வரா ஹி தேவியாக கருதி வழிபடவேண்டும். வராஹ(பன்றி)முகமும் தெத்து பற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுத ங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போ ன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன் னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில் லி சூனியம், எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.
மதுரை மீனாட்சி அம்மன் இன்று விறகு விற்ற லீலையில் காட்சி அளிப்பாள். அதாவது சுந்தரர் விற்றவிறகை மீனாட்சி அம்மன் தலையில் ஏற்றும் படலம் நடக்கும். குடும்ப பாரத்தை கணவனுடன் சேர்ந்து மனைவியும் சுமக்க வேண்டும் என்ற தத்து வத்தினை வலியுறுத்துவ தாக நாம் கருதலாம்.
இரண்டாம் நாள் நைவேத்தியம் :- தயிர்ச்சாதம்.
3. மூன்றாம் நாள் :-
மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திரா ணியாக வழிபட வேண் டும். இவளை மாஹேந்தரி, சாம் ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை
அழித்தவள். தேவலோக த்தை பரிபா லனம் செயபவளும் இவளே யாகும். பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புப வர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும். மற்றும் வேலையில்லாதவரிற்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவரிற்கு பதவியுயர்வு, சம்பள
உயர்வு கிடைக்க அருள் புரிபவளும் இவளே யாகும்.
இன்று மீனாட்சி அம்மன் கல்யானைக்கு கரும்பு கொடுத்த அலங்காரத்தில் காணப்படுவார்.
மூன்றாம் நாள் நைவேத்தியம் :- வெண் பொ ங்கல்.
4. நான்காம் நாள் :-
சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவியாக வழிபட வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருமண கோலத்தில் காட்சி
யளிப்பார்கள்.
நான்காம் நாள் நைவேத்தியம் :- எலுமிச்சை சாதம்.
5. ஐந்தாம் நாள் :-
ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவி யாக வழிபடவேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியா வாள். திரிசூலம், பிறைச் சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்த ருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளி கள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் நாரைக்கு மோட்சம் கொடுத்த அலங்காரத்தில் காட்சி யளிப்பார் கள்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- புளியோதரை.
6. ஆறாம் நாள் :-
இன்று அன்னையை கவுமாரி தேவி யாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவ சேனா திபதியான முருக னின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கி டுபவள். வீரத் தை தருபவள்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் பாணணிற்கு அங்கம் வெட்டிய அலங் காரத்தில் அருள்புரிவார்கள்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- தேங்காய்ச்சாதம்.
7. ஏழாம் நாள் :-
ஏழாம்நாள் அன்னையை மகா லட் சுமியாக வழிபட வேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம்,
தண்டா யுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐசவரியங்களையும் தருபவள் அன்னை யாகும்.

ன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவ சக்தி கோலத்தில் மக்களிற்கு அருள் பாலிப்பார்கள்.
ஏழாம் நாள் நைவேத்தியம் :- கல்க் கண்டுச் சாதம்.
8. எட்டாம் நாள் :-
இன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு,
சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ரு க்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் மகிஷா சுர மர்த்தினி அலங்காரத்தில் காட்சியளிப்பார்கள்.
எட்டாம் நாள் நைவேத்தியம் :- சர்க் கரைப் பொங்கல்.
9. ஒன்பதாம் நாள் :-
இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழி பட வேண்டும். அன்ன வாகனத்தில் இரு ப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச் செல்வம் பெற அன் னையின் அருள் அவசியமாகும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவபூசை செய்யும் கோலத்தில் அருளாட்சி புரிவார்கள்.
ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :- அக்கர வடசல்.

புரட்டாசியில் பெருமாளுக்கு உகந்த வழிபாடு பற்றிய சிறப்பு மிக்க 40 குறிப்புகளை கீழே பார்க்கலாம்.


புரட்டாசியில் பெருமாளுக்கு உகந்த வழிபாடு பற்றிய சிறப்பு மிக்க 40 குறிப்புகளை கீழே பார்க்கலாம்.

1. புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும்.

2. ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும்.

3. புரட்டாசி மாதத்தில் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும். திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன.

4. திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் புரட்டாசி மாதம் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.

5. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

6 . புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

7.விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.

8. புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்க வேண்டும்.

9. புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம்.

10. காகத்திற்கு அன்று ஆலை இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.

11. புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும்.

12.புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன் அதிகம் தரும் என்பது ஐதீகம். ஜேஷ்டா விரதம், மகாலெட்சுமி விரதம், தசாவதார விரதம், கதளி கவுரிவிரதம், அநந்த விரதம், பிரதமை, நவராத்திரி பிரதமை, ஷஷ்டி, லலிதா விரதம் போன்றவை விசேஷமானவை.

13. புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு நாளில் சிலர் திருப்பதிக்குச் சென்று தமது காணிக்கையைச் செலுத்தி வர வேண்டும்.

14. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

15. சூரியபகவானின் இச்சா சக்தியாகிய உஷாதேவியிடம் சூரியனுக்கு புத்திரனாக இச்சையின் வடிவமான சனீஸ்வரன் தோன்றினான் என்பது புராணம். இதனால் புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு விசேஷமானது.

16. புரட்டாசிக்கு இருக்கும் முக்கியத்துவம், அது பித்ரு தேவதை வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் அடக்கியிருக்கிறது என்பதே. பித்ருக்களை வழிபடும் மஹாளயம், பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நவராத்திரி இவையும் சேர்ந்து புரட்டாசிக்குப் பெருமை சேர்க்கிறது.

17.பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

18. புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார். அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.

19. புரட்டாசி மாதத்தில் ஒருநாள்கூட மனிதன் உபயோகப்படுத்த முடியாமல் அல்லது உபயோகப்படுத்தக்கூடாத நாளாக இருந்து விரதத்திற்காக மட்டும் அமைந்திருக்கிறது.

20. புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு “தளியல்” போடுவது வழக்கம்.முடியாதவர்கள் 1வது,5வது சனிக்கிழமையில் போடுவார்கள்.பெருமாள் பாயாசப் பிரியர் என்பதால் பாயாசம் செய்வது முக்கியமானதாகும்.

21. ஒவ்வொரு மாதமும் அஷ்டமி தினத்தன்று உண்ணா நோன்பு இருந்து சிவபெருமானை வழிபட்டால் எல்லா வளமும் பெற முடியும். புரட்டாசி மாதம் வரும் அஷ்டமிக்கு சம்புகாஷ்டமி என்று பெயர். அன்று தயிர் மட்டும் அருந்தி சிவபூஜை செய்தால் சகல சவுபாக்கியங்களையும் பெற முடியும்.

22. புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் சித்தி விநாயக விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை இல்லாமல் போய் விடும்.

23. புரட்டாசி மாதம் எந்த விரதம் இருந்தாலும் செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய மூன்றும் குறைவின்றி கிடைக்கும்.

24. புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தினம் முதல் ஓராண்டுக்கு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சித்து வழிபட்டால் உடல் வலிமை உண்டாகும்.

25. புரட்டாசி சனிக்கிழமையன்று நாம் பெருமாளை வழிபடும் போது, ‘‘திருவேங்கடமலையில் வாசம் செய்யும் சீனிவாசப் பெருமாளே நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களை எல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகா லட்சுமி வசிக்கும் அழகான மார்பை உடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம் போல நன்மைகளை பொழிபவரே, சீனிவாசா நமக்கு நமஸ்காரம்….’’ என்று மனம் உருக சொல்லி வழிபட வேண்டும். இந்த துதியை சொல்ல, சொல்ல சகல செல்வங்களும் உங்களுக்கு வந்து சேரும்.

26. புரட்டாசி மாதம் பிறந்த ஆன்மிகப் பெரியவர்களில் வள்ளலார் குறிப்பிடத்தக்கவர். அவர் கடலூர் மாவட்டம் மருதூரில் ராமைய்யா-சின்னம்மை தம்பதிக்கு 1823-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 21-ந்தேதி மகனாகப் பிறந்தார்.

27. சென்னையில் இருந்து திருப்பதி-திருமலைக்கு புனித பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தப்படி உள்ளது. இந்த ஆண்டு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை பல ஆயிரம் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

28. புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று அம்பாளுக்கு 4 வண்ணங்களில் ஆடையும் ரத்தினக்கல் ஆபரணமும் அணிவித்து வழிபட வேண்டும். அன்று அம்பாளுக்கு நைவேத்தியமாக இளநீர் படைக்க வேண்டும். இந்த பூஜையால் குடும்பத்துக்கு தேவையான செல்வங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.

29. புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குலதெய்வ அருள் கிடைக்கும்.

30. புரட்டாசி மாதம் சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகரை நினைத்து விரதம் கடைபிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.

31. கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.

32. ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியார் தாயார் சன்னதியில் நவராத்திரி விழா நடைபெறும்.

33. தென்மேற்கு திசை கன்னி மூலை என்று கூறப்படுவதால் கோயிலில் இந்தக் கன்னி மூலையில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் மிகவும் போற்றப்படுகிறார். புரட்டாசி மாதம் ராசிச் சக்கரத்தின் கன்னி மூலையில் அமைந்திருப்பதால் இம்மாதத்தில் செய்யப்படும் விநாயகர் வழிபாடு கூடுதல் பலன்களைத் தரும்.

34. புரட்டாசி மாதத்தில் சுக்கிலபட்ச சதுர்த்திசியில் சிவாலயங்களில் ஸ்ரீநடராஜர் பெருமானுக்கு அபிஷேகங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுவதைக் தரிசிக்கலாம். மேலும் புரட்டாசி மாத சுக்லபட்ச திரிதியை பலராமர் அவதார தினமாகவும், சுக்லபட்ச துவாதசி அன்று வாமன ஜெயந்தி தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

35. புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தன்று லட்சுமியை இந்திரன் வணங்குவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று வலம்புரி சங்கில் பசும்பால் ஊற்றி மலர்களால், அலங்கரித்து வழிபட்டால் சகல செல்வங்களும் வந்து சேரும்.

36. புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் கையில் இருந்து வேல் எடுத்து கங்கைக்கு எடுத்து செல்லும் விழா நடந்து வருகிறது.

37. புரட்டாசி மாதம் அதிக வழிபாடுகள் நடத்த வேண்டிய மாதமாகும். புரட்டாசியில் வீடு கட்டும் பணியை தொடங்கினால் உடல் நலம் பாதிக்கும் என்று வாஸ்து குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

38. புரட்டாசி மாத அமாவாசை தினத்தன்று பிறந்தவர்கள் ஆராய்ச்சிகள் செய்வதில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள்.

39. புரட்டாசி மாதம் சனிக்கிழமை மட்டுமின்றி திங்கள், புதன்கிழமையும் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாட்களாகும். அன்றைய வழிபாடுகள் மகாலட்சுமியை மகிழ்ச்சி அடையச் செய்யும்.

40. கல்வித் தடை, திருமணத் தடை, நோய், பணப் பிரச்சினை உள்ளவர்கள் புரட்டாசி திருவோணம் தினத்தன்று பெருமாளை வழிபட்டால் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும்

ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

ஸ்ரீராதாஷ்டமி


ஸ்ரீராதாஷ்டமி

ஸ்ரீமதி ராதாராணியின் அவதாத் திருநாள்
வருகின்ற 2018 செப்டம்பர் 17, திங்கள்   ஸ்ரீமதி ராதாராணியின் அவதாத் திருநாள் ஸ்ரீராதாஷ்டமி
--
ஸ்ரீராதாஷ்டமி  என்றால் ஸ்ரீமதி ராதாராணி அவதரித்த அஷ்டமி திருநாளாகும். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாள்  கோகுலாஷ்டமி  என்றழைக்கப்படுவதை போல, ஸ்ரீமதி ராதாராணி அவதரித்த திருநாள்  ஸ்ரீராதாஷ்டமி  என்று அழைக்கப்படுகிறது.

ஸ்ரீமதி ராதாராணி, பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நித்யமான துணைவியும், கிருஷ்ணரின் ஆனந்தமயமான அந்தரங்க சக்தியும், மிக மிகச் சிறந்த தூய பக்தையும் ஆவார். ஸ்ரீமதி ராதாராணி அதிர்ஷ்ட தேவதைகள் அனைவருக்கும் தலைமையானவரும், லெஷ்மி தேவியின் மூலம் ஆவார்.

#ராதாராணி_அவதார_மகிமை:-

ராதாராணி அவதரித்த விதம் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இம் மண்ணுலகில் அவதரித்த பின் ஸ்ரீமதி ராதாராணியும் இம்மண்ணுலகில் அவதரிக்க விரும்பினார். அதன்படி ஒரு தெய்வீக லீலை அரங்கேறியது. அதாவது ஒருசமயம் இமயமலையின் மகளாக  பார்வதி தேவி  பிறந்தார். பிறகு பார்வதிதேவிக்கும், சிவபெருமானுக்கும் திருமணம் நடந்தது. இத்திருமணத்திற்கு தேவாதி தேவர்களும், முனிவர்களும் பங்கேற்றனர். இவர்களுடன் விந்தியமலையும் வந்திருந்தது. கோலாகலமாக நடந்த விழாவை கண்ணுற்ற விந்தியமலை மிகவும் ஆச்சர்யப்பட்டது. அத்துடன் மிகவும் போற்றுதற்குரிய சிவபெருமானே, இமயமலையின் மருமகனாக வந்திருக்கிறார் என்றும் வியந்தது. உடனே தனக்கும் அது போல் சிறந்த ஒரு மகாபுருஷர், மருமகனாக வர வேண்டும் என்று விந்தியமலைஆசைப்பட்டது.
இந்த ஆசை நிறைவேற பிரம்மதேவரை வேண்டி, 1000 வருடங்கள் கடுமையான தவம் புரிந்தது விந்தியமலை. இந்த தவத்தினால் திருப்தி அடைந்த பிரம்ம தேவர்,    முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணரே, உனது மருமகனாக வருவார்   என்று வரமளித்தார். அதன் பிறகு விந்தியமலைக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. இதை கொண்டாட பெரியவிழா ஒன்று நடந்தது. இதில் இமயமலைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதே தருணத்தில், கிருஷ்ணரும் மதுராவில் அவதரித்து, கோகுலத்தில் வளர்ந்து கொண்டிருந்தார். அப்போது கம்சனின் அணையின் பேரில், பிள்ளைக் கொல்லி அரக்கி பூதனா  பிறந்த குழந்தைகளை எல்லாம், கொன்று இன்று கொண்டிருந்தாள்.

எனவே விந்திய மலைக்கும் குழந்தை பிறந்திருக்கிறது என்று தெரிந்ததும், அங்கும் இந்த பூதனா விரைந்தாள். விந்திய மலையின் இரண்டு அழகான பெண் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு வானத்தில் பறந்தாள்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த முனிவர்கள் பலர், சக்தி வாய்ந்த மந்திரங்களை ஓதி, பூதனாம் தடுத்தனர். மந்திரத்தின் சக்தியால், பூனாவில் உடல் நெருப்பு போன்று எரிந்தது. நேரம் செல்ல, செல்ல எரிச்சல் தாங்க முடியாமல் கையில் வைத்திருந்த இரண்டு பெண் குழந்தைகளையும் பூதனா கீழே போட்டு விட்டாள்.

அதில் ஒரு குழந்தை விருஷபானு மன்னரின் தோட்டத்தின் அருகே யமுனை நதியில் ஒரு தங்கத் தாமரையில் விழுந்தது. அவர்தான் ஸ்ரீமதி ராதாராணி. பொன்னிறத்தில் அவதரித்தவர், மற்றொரு குழந்தை விருஷபானுவின் சகோதரர் சந்திர  பானுவின் தோட்டத்தில் விழுந்தது. இவர்  சந்திராவளி  ஆவார்.

யமுனை நதியில், தாமரை மலரில் அவதரித்தார்:-
யமுனை நதியில், தாமரை மலரில் தங்க ஒளி வீசுவது போன்று பிரகாசமான குழந்தை மிதந்து வருவதை கண்டார் மன்னர்  விருஷபானு . அப்போது வானத்தில் தோன்றிய பிரம்ம தேவர்,   மன்னர் விருஷபானவே! நீ தரிசிக்கும் இந்த குழந்தை. சாதாரண குழந்தை அல்ல. லெஷ்மி தேவியின் மூலம் ஆவார். மிகக் கவனமாக இக்குழந்தையை வளர்த்து வா. நீயும் உனது  மனைவி கீர்த்திதாவும் முந்தைய பிறவியில் பகவானே உங்களது மருமகனாக வர வேண்டும் என்று தவம் செய்தீர்கள். அதன் பலனாக இந்த தெய்வீக குழந்தையை பெற்றுள்ளீர்கள்” என்று கூறினார்.

பிறகு அக்குழந்தையை, மன்னர் விருஷபானு தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். பெளர்ணமி நிலவு போன்று பொன்னிறத்தில் பிரகாசித்த குழந்தையின் பேரழகை பார்த்தவுடன் ராணி  கீர்த்திதா  மிகவும் மகிழ்வுற்றாள். இப்படியாக ஸ்ரீமதி ராதாராணி, மன்னர் விருஷபானுவுக்கும், தாய் கீர்த்திதாவிற்கும்  தெய்வப் புதல்வியாக அவதரித்தார். ராதாராணி பிறந்த பிறகு, யாரையும் பார்க்கவில்லை. அவரது தெய்வீக கண்கள் திறக்கவே இல்லை. திருவாய் மலர்ந்து பேசவும் இல்லை. இதனால் விருஷபானுவும், கீர்த்திதாவும் மிகவும் வருத்தப்பட்டனர். இந்நிலையில் மன்னரின் இல்லத்திற்கு மகாரிஷி நாரதர் வந்தார்.அவரை வணங்கி வரவேற்ற மன்னர், தனது கவலையை தெரிவித்தார். அதற்கு நாரதர், "கவலைப்பட வேண்டாம். இந்த தெய்வீக குழந்தையின் பிறப்பிற்கு ஒரு விழா நடத்துங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று ஆசீர்வதித்தார்.

பிறகு மன்னர் ராதாராணி பிறந்த விழாவை மிகவும் விமரிசையுடன் கொண்டாட தனது நண்பர்கள், உறவினர்கள் உட்பட அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பில் அவரது நெருங்கிய நண்பரும், கிருஷ்ணரின் தந்தையுமான நந்தமகாராஜாவும் அழைக்கப்பட்டிருந்தார். அழைப்பை ஏற்ற நந்த மகாராஜா, குழந்தைகள் கிருஷ்ண பலராமருடனும் விழாவிற்கு சென்றார். உடன் கிருஷ்ணரின் தாய் யசோதை, பலராமரின்  தாய் ரோஹிணி உட்பட விரஜவாசிகள் பலரும் சென்றனர்.

#கிருஷ்ணரே_முதல்_தரிசனம்:-
 
   விழாவில் ஒருவரையொருவர் பரஸ்பரம்  விசாரித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.  பசும் பால், சர்க்கரை கலந்து தயாரிக்கப்பட்ட  நூற்றுக்கணக்கான இனிப்பு வகை பிரசாதங்கள்  அனைவருக்கும் வழங்கப்பட்டன. அப்போது தான் அது நடந்தது. சின்னஞ்சிறு குழந்தை கிருஷ்ணர் தவழ்ந்து  தவழ்ந்து, ராதாராணியின் தொட்டில்  அருகே சென்றார். கிருஷ்ணர் தன் முன்  வந்ததும், ராதாராணி உடனே தன் கண்களை  திறந்தார். முதன்முதலாக கிருஷ்ணரை தரிசித்து, மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார். அவரது  பார்வையும், மகிழ்ச்சி சிரிப்பும் குழுமியிருந்த  அனைவரையும் ஆரவாரப்படுத்தின.

  கிருஷ்ணர் மீது ஸ்ரீமதி ராதாராணி  கொண்டிருந்த அளப்பெரும் அன்பினாலும்,  தூய பக்தியினாலும் கிருஷ்ணரைத் தவிர,  வேறு யாரையும் முதலில் தரிசிக்கக் கூடாது  என்று ராதாராணி உறுதி எடுத்திருந்தார். எனவே இந்த தெய்வீக திருவிளையாடல் நடந்தேறியது.

அத்துடன் கிருஷ்ணர் தன் பிஞ்சுகரங்களில் வைத்திருந்த புல்லாங்குழல், ராதாராணியின் புன்சிரிப்பில் வசீகரிக்கப்பட்டு ராதாராணியின் மேல் நழுவி விழுந்தது. இப்படியாக கிருஷ்ணரும், தன் அன்பை ராதாராணிக்கு தெரிவித்தார். இந்த தெய்வீக வைபவத்தை கண்ணுற்ற அனைவரும் மகிழ்ச்சி அடைந்து கிருஷ்ணரையும், ராதாராணியையும் போற்றி துதித்தனர்.
குறிப்பாக ராதாராணியின் தந்தையான மன்னர் விருஷபானுவும், தாய் கீர்த்திதாவும் பெரு மகிழ்ச்சி அடைந்து மேலும் விழாவை சிறப்புற நடத்தினர்.


 கிருஷ்ணரின் சேவையில்  ராதாராணியே முதலிடம்:-
 கிருஷ்ணருக்கு சேவை செய்வதில், ஸ்ரீமதி ராதாராணிக்கு இணையாக வேறு யாரையும் கூற இயலாது.
 ஸ்ரீமதி ராதா ராணி கிருஷ்ணர் மீது செலுத்திய  பக்தி எத்தகையது என்பதை அறிவதற்காக தான், கிருஷ்ணரே, சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தார் என்று சைதன்ய சரிதாம்ருதம் குறிப்பிடுகிறது. அந்த அளவிற்கு ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணர் மீது அன்பும் பக்தியும் செலுத்தியுள்ளார். ஆயிரக்கணக்கான வருடங்கள் தவங்கள்  செய்தாலும் கிருஷ்ணர் ராதாராணியின் தெய்வீக அன்பை புரிந்து கொள்ள இயலாது. தூய பக்தர் ஒருவரின் கருணையால் மட்டுமே ஸ்ரீஸ்ரீராதா கிருஷ்ணரின் புகழை உணர இயலும்.

ராதராணியின் திருவருள் அவசியம்:-
ஒருவர் கிருஷ்ணரின் கருணையை பெறுவதற்கு, ஸ்ரீமதி ராதாராணியின் கருணையை நிச்சயம் பெற்றிருக்க வேண்டும்.

  யார் ஒருவர் கிருஷ்ணருக்கும், கிருஷ்ண  பக்தர்களுக்கும் சேவை செய்கிறாரோ அவர் ஸ்ரீமதி ராதாராணியின் கருணையை பெறுவார் என்பது
குறிப்பிடத்தக்கது.

 #ஸ்ரீராதாஷ்டமி_திருநாளின் விசேஷம்  என்னவென்றால்,
 "ஸ்ரீமதி ராதாரணியின் திருப்பாத திருப்பாத தரிசனம் விசேஷம்
 தரிசனம்  ஆகும்.

பொதுவாக ஸ்ரீஸ்ரீராதா கிருஷ்ணர்  கோயில்களில் வருடத்தின் எல்லா நாட்களிலும்  பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருப்பாதங்கள்  மட்டுமே தரிசிக்கும் வகையில் இருக்கும். ஆனால்  ஸ்ரீராதாஷ்டமி அன்று ஒருநாள் மட்டும் ஸ்ரீமதி  ராதாரணியின் திருப்பாதங்களை தரிசிக்க முடியும்.  எனவே ஏராளமான பக்தர்கள் இத்திருநாளில்  விரதம் இருந்து திருப்பாத தரிசனம் பெறுவர். 

#ஸ்ரீராதாஷ்டமி_அன்று_செய்ய_வேண்டியது:.
அன்று மதியம் வரை விரதம் இருக்க வேண்டும்

ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தைஅதிகபட்சம் உச்சரிக்க வேண்டும்.
  *ஸ்ரீமதி ராதாராணியின் திருப்பாத தரிசனம் செய்ய வேண்டும்.

ஸ்ரீமதி ராதாராணியின் மகத்துவம்

ஸ்ரீமதி ராதாராணியின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் இக்கட்டுரையை அனைத்து பக்தர்களும் படித்து அவரது அருளைப் பெறுவோமாக.

#வழங்கியவர்: #மதனகோபால_தாஸ்

பக்தர்களில் சிறந்தவள் ஸ்ரீமதி ராதாராணி பலன்நோக்கிச் செயல்படும் கர்மிகளைக் காட்டிலும் வாழ்வின் உயர் மதிப்பை அறிந்த ஞானிகள் சிறந்தவர் களாகக் கருதப்படுகின்றனர். அத்தகு ஞானிகளில் யாரெல்லாம் முக்தி பெற்ற நிலைக்கு உயர்வு பெறுகின்றனரோ, அவர்கள் பக்தித் தொண்டை ஏற்றுக் கொள்கின்றனர். அத்தகு பக்தர்கள் ஞானிகளைக்காட்டிலும் உயர்ந்தவர்கள். இருப்பினும், கிருஷ்ணரின் மீதான தூய அன்பினை (பிரேமையை) வளர்த்துக் கொண்டவர்கள் இதர பக்தர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள். முன்னேறிய பக்தர்கள் அனைவரைக் காட்டிலும் விருந்தாவனத்தின் கோபியர்கள் உயர்ந்தவர்கள். ஏனெனில், அவர்கள் இடையர் குலச் சிறுவனான கிருஷ்ணரை முற்றிலும் சார்ந்துள்ளனர். அந்த கோபியர்களில், ஸ்ரீமதி ராதாராணியே உயர்ந்தவள். கிருஷ்ணருக்கு அவளை விடப் பிரியமானவள் வேறு எவரும் கிடையாது.

ராதாராணியின் வசீகரம்
மன்மதனின் அழகு அளவிட முடியாததாகக் கூறப்படுகிறது. அனைவரை யும் வசீகரிக்கும் தன்மை மன்மதனுக்கு உண்டு. அவனை வென்றவர்கள் மிகவும் அரிது. இப்படிப்பட்ட கோடி மன்மதர்களை வசீகரிக்கும் தன்மை பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு உண்டு. ஆகையால் தான் பகவான் கிருஷ்ணர், ’மதனமோஹனர் (மன்மதனையும் மயக்கக் கூடியவர்) என்று அழைக்கப்படுகிறார். ஆனால் அந்த மதனமோஹனரையே வசீகரிப்பவள்தான் ராதாராணி. ஆகவே, ராதாராணி ‘மதன மோஹன மோஹினி’ என்று அழைக்கப்படுகிறாள்.

ஸ்ரீமதி ராதாராணியின் கருணை
ஸ்ரீமதி ராதாராணி கருணையே வடிவானவள். உலக உயிர்வாழிகளிடம் மிகவும் கருணையும், பேரன்பும் உடையவள். கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவளாக இருப்பினும், துளியும் கர்வம் இல்லாதவள். விருந்தாவனத்தில் கோபியர்கள் கிருஷ்ணருடன் லீலைகளைப் புரிவதற்கான சந்தர்பத்தை ராதாராணியே ஏற்படுத்திக் கொடுப்பாள். இதர கோபியர்கள், கிருஷ்ணருடன் மாதுர்ய பாவத்தைப் (தெய்வீக காதல் உணர்வுகளைப்) பகிர்ந்துகொள்ளும்போது, தான் கிருஷ்ணருடன் இருக்கும் போது அடையும் மகிழ்ச்சியைவிட பல்லாயிரம் மடங்கு மகிழ்ச்சியடைவாள் ஸ்ரீமதி ராதாராணி. அவ்வளவு கருணை உடையவள் ராதாராணி, நாம் ராதாராணியின் அருளைப் பெற்றோமானால், கிருஷ்ணரின் அருள் தானாகவே கிடைக்கும். இதனால் கிருஷ்ணரை விட்டுவிடலாம் என்று நாம் நினைத்துவிடக் கூடாது. கிருஷ்ணரை விட்டுவிட்டால் ராதை தனது கருணையை நமக்கு வழங்க மாட்டாள்.

ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் ராதாராணி
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம

ராம ராம ஹரே ஹரே

என்னும் மஹா மந்திரத்தில் ‘ஹரே’ என்னும் சொல் 8 முறை வருகிறது. ‘ஹரா’ என்றால் ‘ராதா’ என்று பொருள். ‘ராதா’ என்னும் சொல், விளிச்சொல்லாக வரும்போது ‘ராதே’ என்று மாறுவதைப் போலவே, ‘ஹரா’ என்னும் சொல் ‘ஹரே’ என்று மாறி வருவதாக ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.

நாம் இந்த மஹா மந்திரத்தை பகவத் சிந்தனையுடன் வாயினால் உச்சரித்து காதால் நன்கு கேட்க வேண்டும். ‘ஹரே’ என்று சொல்லும்போது அச்சொல்லின் அலைகள் பரவ, ஸ்ரீமதி ராதாராணியின் பெயர் உச்சரிக்கப்படுவதை எண்ணி பகவான் கிருஷ்ணர் மகிழ்கிறார். அதே சமயம் ‘கிருஷ்ண’ என்று சொல்லும்போது, பகவான் கிருஷ்ணரின் பெயர் உச்சரிக்கப்படுவதைக் கேட்டு ராதாராணி மகிழ்ச்சியடைகிறாள். இந்த உணர்வை மனத்தில் நிறுத்தி நாம் ஜெபம் செய்ய வேண்டும். ராதாராணியானவள் நம்மீது கருணை வைத்து கோலோக விருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்வாளேயானால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அதனைக் நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு
ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரின் மீது வைத்துள்ள உயர்ந்த அன்பினை கிருஷ்ணரால்கூட உணர முடியவில்லை. அந்த அன்பினை உணர விரும்பிய அவர், ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபுவாக, சுமார் 500 வருடங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்திலுள்ள மாயாப்பூரில் தோன்றினார். ஸ்ரீமதி ராதாராணியின் மனோபாவத்தையும் திருமேனி நிறத்தையும் தாங்கி, ஜடவுலகின் கட்டுண்ட ஆத்மாக்களாகிய நம்மையெல்லாம் விடுவிப்பதற்காக பரம கருணா மூர்த்தியாக சைதன்ய மஹாபிரபு தோன்றினார். ஸ்ரீமதி ராதாராணி கருணையே உருவானவள் என்பதால், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் கருணையின் பெருங்கடலாக காட்சியளித்தார். பகவானின் எல்லா அவதாரங்களிலும் அவரே மிகவும் கருணை வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்.

#விருந்தாவனமும், #ராதாராணியும்

தப்த காஞ்சன கௌராங்கி   ராதே வ்ருந்தாவனேஸ்வரி
வ்ருஷபானு ஸுதேதேவி   ப்ரணமாமி ஹரி-ப்ரியே

“பொன்னிற மேனியுடையவரும், விருஷபானு மஹாராஜாவின் புதல்வி யுமான ராதாராணியே, விருந்தா வனத்தின் ஈஸ்வரியே, உம்மை நான் வணங்கு கின்றேன்.” ராதாராணி, விருந்தாவனத்தின் ஈஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். விருந்தாவனத்தில் ராதாராணிக்கு சிறப்பான மதிப்பு உண்டு. நாட்டையே கட்டுப்படுத்தும் பிரதமரின் இல்லத்தை அவரது துணைவி கட்டுப்படுத்துவதுபோல, எல்லா உலகையும் கட்டுப்படுத்தும் கிருஷ்ணரின் இல்லத்தை (விருந்தாவனத்தை) ஸ்ரீமதி ராதாராணி கட்டுப்படுத்துகிறாள். விருந்தாவனத்தில் கிருஷ்ணரைக்காட்டிலும் ராதைக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. விருந்தாவனத்தின் சுவர்களிலெல்லாம் ‘ராதே’ என்ற பெயர் எழுதப்பட்டிருக்கும். விருந்தாவனத்தில் ரிக்ஷா ஓட்டுபவர்கள் ‘நகருங்கள்’ என்று சொல்வதற்கு பதில் ‘ராதே, ராதே’ என்றுதான் சொல்வார்கள்.

விருந்தாவனத்திலுள்ள ராதாகுண்டத்திற்கும் தனிமதிப்பு உண்டு. ராதாகுண்டத்தின் மீதுள்ள பெரும் மதிப்பினால், பொதுவாக இஸ்கான் பக்தர்கள் அதில் நீராடுவதில்லை. ராதாகுண்டத்தின் தீர்த்தத்தை தெளித்துக் கொண்டாலே ராதாதேவியின் கருணை நமக்குக் கிடைக்கும்.

ஸ்ரீமத் பாகவதமும் ஸ்ரீமதி ராதாராணியும்
இவ்வளவு சிறப்புமிக்க ஸ்ரீமதி ராதாராணியின் பெயர் ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்படவில்லையே என்று சிலர் வினவுவது வழக்கம். ஸ்ரீமத் பாகவதம் சுகதேவ கோஸ்வாமியால் மன்னர் பரீக்ஷித்திற்கு உபதேசிக்கப்பட்டதாகும், இது பகவான் கிருஷ்ணரைப் பற்றிய மிகவுயர்ந்த புராணம். கிருஷ்ணரைப் பற்றிப் பேசும்போது அங்கு ராதையும் இடம் பெறுதல் மிகவும் அவசியம். ஆனால், பாகவதத்தில் ஓர் இடத்தில்கூட ராதாராணி பிரத்யேகமாகக் கூறப்படவில்லை. ஒரே ஓர் இடத்தில் மட்டும் அவளது பெயர் மறைமுகமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்னவெனில், ‘ஸ்ரீராதே’ என்று ஒருமுறை சுகதேவர் கூறினாலும், அவர் தன்னை மறந்த பக்திப் பரவசத்தில் ஆழ்ந்து விடுவார். பின்னர், ஏழு நாட்களுக்குள் ஸ்ரீமத் பாகவதத்தை பரீக்ஷித்து மஹாராஜாவுக்கு உபதேசம் செய்ய முடியாது. ஆகவேதான், சுகதேவர் ஒருமுறைகூட ராதிகா தேவியைப் பற்றி நேரடியாக பேசவில்லை,

ஸ்ரீல பிரபுபாதரும் ராதாகுண்டமும்
இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி ராதா குண்டத்தின் கரையில் நிகழ்ந்தது. ஸ்ரீல பிரபுபாதரின் குருவாகிய ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர், “உனக்குப் பணம் கிடைத்தால் புத்தகங்கள் அச்சடித்து விநியோகம் செய்வாயாக,” என்று ஸ்ரீல பிரபுபாதரிடம் கூறினார். ராதா குண்டத்தின் கரையில் அமைந்திருந்த கௌடீய மடத்தில் வழங்கப்பட்ட இந்த முக்கிய உபதேசம், இஸ்கான் அமைவதற்கும் வளர்ச்சி பெறுவதற்கும் மிக முக்கிய பங்காற்றி யுள்ளதை எவராலும் மறுக்க முடியாது.

ராதாஷ்டமி
ஸ்ரீமதி ராதாராணி தோன்றிய நன்னாள், ராதாஷ்டமி என்று அழைக்கப் படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி முடிந்தபின்னர், அதற்கு அடுத்த அஷ்டமியன்று (இவ்வருடம் செப்டம்பர் 15அன்று) இந்நன்னாள் வருகிறது, இவ்விழாவானது கிருஷ்ண பக்தர்களால் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

 நம் கடமை
விருந்தாவனம் மனிதகுலத்திற்கு மிகவும் முக்கியமான இடமாகும். ஒவ்வொருவரும், வாழ்க்கையில் ஒருமுறையாவது விருந்தாவனத்திற்குச் சென்று வர வேண்டும். அதுவே மனிதப் பிறப்பின் பயனாகும். விருந்தாவனத்திற்குச் செல்பவர்கள் விருந்தாவனத்தின் ஈஸ்வரியான ராதிகாதேவியின் அருளைப் பெறுவது உறுதி, “விருந்தாவனத்தின் ஈஸ்வரியே, ஸ்ரீமதி ராதாராணியே, உங்களை வணங்குகின்றேன்; ஆன்மீக குருவிற்கும், உங்களுக்கும், பகவான் கிருஷ்ணருக்கும் சேவை செய்யும் பாக்கியத்தை எப்பொழுதும் எங்களுக்கு அருள்வீர்களாக,” என்னும் பிரார்த்தனையுடன் நம் மனோநிலையை அமைத்து, பகவத் சேவையிலும் குருவின் சேவையிலும் நாம் ஈடுபட்டால், ஜடவுலகின் தீராத துயரங்களான பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிய துன்பங்களிலிருந்து விடுபட்டு, ஆன்மீக உலகமான கோலோக விருந்தாவனத்திற்கு பகவான் நம்மை அழைத்துச் செல்வார் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.

புரட்டாசி மாதம் சிறப்புகள்...


புரட்டாசி மாதம் சிறப்புகள்...

புரட்டாசி,மாதம்,சனிக் கிழமை,தெய்வீகம்விரதம், பெருமாள்,பூஜை,தோஷம்,நீக்கும்,வழிபாடுகள்,
பராசக்திக்குரிய பூஜைகள் சிறப்புகள் நிறைந்த மாதம் தான் புரட்டாசி மாதம் சிறப்புகள்  . . . . . . .

புரட்டாசி. இது தமிழ் மாதங்களில் ஒன்று. 6மாதமாக இது வரும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது.மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அதாவது நாளை மறுநாளில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இதையே, "மகாளய பட்சம்` என்பர்; "பட்சம்` என்றால், "15 நாட்கள்' எனப் பொருள். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இந்த பட்சத்தில் வரும் பரணி, "மகாபரணி' என்றும், அஷ்டமியை, "மத்யாஷ்டமி' என்றும், திரயோ தசியை "கஜச்சாயை' என்றும் சொல்வர். இந்த மூன்று நாட்களுமே, பிதுர் வழிபாட்டுக்கு உகந்தவை. புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில் செய்யப்படும் பிதுர் பூஜை (இவ்வாண்டில் மற்ற அமாவாசைகளைக் காட்டிலும் அதிக பலன் தரும். மஹாலய விதிப்படி அந்தப் பதினாறு நாள்களும் பித்ருக் களுக்காக அன்ன சிராத்தம் செய்ய வேண்டும், இயன்றவர்கள் பொன் முதலிய பொருள்களைத் தகுந்தவர்களுக்குத் தானமாக வழங்கலாம். புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு. பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். எனவே இம்மாதத்தில், தவறாமல் வழிபாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம். புரட்டாசி மாத ராசி பலனை அறிந்து கொள்வோம்

பெருமாள்,புரட்டாசி,சனி,விரதம்
புரட்டாசி மாதம்

புரட்டாசி மாதம்:- இந்த மாதம் புனித மாதமாக இருப்பதால் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால்  வைணவ கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்., மக்கள் பலரும் விரதம் பூஜை என இருப்பார்கள். இந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் இறைச்சி உண்பதை தவிர்த்து விடுவர்.புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட்டால் உடல் பினி அதிகமாக வரும்.ஆகையால் புரட்டாசி மாதம் சீக்கிரம் ஜீரனம் ஆககூடிய உனவு வகையில் மட்டுமே உனவு உன்ன வேண்டும்.

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள்
புதன் என் றால் தெரிந்தவன் என்று பொருள். இதனால்தான் புதனைக் கல்விக் காரகன் அல்லது, வித்யாகாரகன் என்று சோதிடப் புலவர்கள் அழைத்தனர் போலும்! சூரியனுக்கு வெகு அருகாமையில் ஒளிர்வதோடு மிகத்துரிதமாய் மூன்றே மாதங்களுக்குள் சூரிய னைச் சுற்றிவரும் ஆற்றலுடைய கிரகமாகையால் சூரியனைப் பற்றி நன்கு தெரிந்தவன் புதன். புரட் டாசி மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் கற்றறியும் பாண்டித்தியம் உடையவர்களே. அதுவும் துரித மாய்க் கற்றுணரக்கூடியவர்கள். சிறுவயதிலேயே அரிய பெரிய நூல்களைப் புரட்டிப் பார்த்து விடு வார்கள். புரட்டாசியில் தோன்றிய இவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளே!பல நூல்களை நன்றாகப் புரட்டியவர்களா கையால் தர்க்கம் பேசுவதிலும் சமர்த்தர். குதர்க்கம் செய்வதிலும் வித்தகர். அரிய நூல்களைச் சேகரிப்பர். சீக்கிரத்தில் அரச யோகத்தை அடைந்திடுவர். கற்றதை மாற்றிப் பேசிப் போற்றுதலைப் பெறுவர். மற்றவர்களைப்போல நடிப்பதில் வெகு சமர்த்தர். படிக்காத மேதைகளும், படித்த பட்டதா ரிகளும் விஞ்ஞானிகளும் மெய் ஞானிகளும் இம் மாதத்தில் பிறந்தவர்களே.

ஆழ்ந்து சிந்திக்காமல் எந்த விவகாரங்களிலும் தலையிடார். எதையும் திறம்படச் செய்யவேண்டு மென்ற கொள்கை உடையவர். மற்றவர்கள் செய் யும் குற்றங்குறைகள் முதன்முதலில் இவர்களின் கண்களுக்குத்தான் தோன்றும், ஒளிவு மறைவின்றி சாமர்த்தியமாக ஆனால், அழுத்தந் திருத்தமாக எடுத்துக் கூறிடுவர். மற்றவர்கள் சாதாரணமாகப் புரியக்கூடிய தவறுகள் ஏற்படாவண்ணம் தாம் நடந்துகொள்வர். மற்றவர்களுடைய முன்னேற்றத் திற்குத் தன்னலமற்றுப் பாடுபடுவர். தம்முடைய திறமையினாலும் உழைப்பினாலும் உயர்ந்த அந் தஸ்தைத் தேடியடைந்திடுவர். பிறரைப் புகழ்ந்தோ அல்லது குறுக்கு வழிகளைக் கடைப்பிடித்தோ காரி யத்தைச் சாதிப்பது இவர்களுக்குப் பிடிக்காது.

இயற்கையை ரசிப்பவர். சுவையான பண்டங் களைப் புசிப்பவர். நல்ல பேச்சாளர். கலாரசிகர், நடிப்பாற்றல் உடையவர். கற்பனா சக்தியும் கருத்து நிறைந்த தத்துவங்களடங்கிய கவிபாடு வதிலும் தொடர் கதைகளையும்,

சிறு கதைக ளையும் எழுதுவ திலும் நிகரற்று விளங்குவர். இவருக் கெனத் தனி நடையை அமைத்துக்கொள்வர். மற்றவருக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் விளங்குவர். சந்தர்ப்பத்திற்கேற்றவாறு தம் கொள் கைகளை மாற்றிக்கொள்வர். காரியத்தை எளிதில் சாதித்து முடிக்கும் சக்தி வாய்ந்தவர். நயமாகப் பேசி மற்றவர்களைத் தம்வசமாக்கிக் கொள்வர்.

சுறுசுறுப்பானவர்கள். ஆனால், சுகஜீவிகள், நேரத்தை வீணாக்காமல் இயந்திரம் சுழல்வது போல் ஒரே இடத்தில் நிலைத்துக் காலவரம்பிற் குள் செய்வனவற்றைத் திருந்தச் செய்வர். சிறிய முயற்சியில் பல காரியங்களைச் சாதித்திடுவர்.
புரட்டாசி,சனி,விரதம்,பெருமாள்,சிலை,பூஜை
பெருமாள்

புரட்டாசி மாதம் குழந்தை பிறந்தால்
புரட்டாசி மாத்தில் பிறந்த குழந்தைகள் ஞான யோகியாக இருப்பார்கள்.

புரட்டாசி சனி

"புரட்டாசி சனி" என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் புரட்டாசி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும்.

புரட்டாசியில்
புரட்டாசி மாதத்தில் பிரண்டையும் காயும் என்பார்கள் (தண்ணீர் இல்லாமல் அது வளரும்). அது கூட காயும் என்பார்கள். ஏனென்றால், அந்த அளவிற்கு புராட்டாசியில் வெயில் இருக்கும். சாதாரணமாக சைவ உணவு நமது உடலிற்கு எல்லா வகையிலும் உகந்தது. இந்த மாதிரியான வெயில் காலங்களில் அசைவ உணவுகளைத் தவிர்த்தால் நமக்கு நல்லது.

தடைகளை தகர்க்கும் புரட்டாசி சனி
பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் தொடராமல் இருக்கவும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்கியம் கிடைக்கவும் விரத முறைகள் காலம் காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனர். உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். இம்மாதத்து சனிக்கிழமை பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தது. செப்டம்பர் 23,30, அக்டோபர் 5,6,7, 14, 15, ஆகிய நாட்களில் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்டு, பிரார்த்தனைகளை செலுத்தலாம். ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும்.

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு!
 புரட்டாசி மாதத்தில்  இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் . திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது. இது தவிர திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம். சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி  சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

புரட்டாசி மாத சிறப்புகள்
அறிவுக்காரனாகிய புதனின் ராசியில் சூரியன் இருப்பது இந்த மாதத்தில்தான்
இந்த மாத்தில்தான் சனிக்கிழமைகிளல் பெருமாளுக்கு விரதம்  இருக்கிறார்கள். நவராத்திரி பூஜை நடப்பதும் இந்த மாதத்தில்தான். புரட்டாசி மாதம், மஹாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம்.


புரட்டாசி சனி
திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

புண்ணியம் தரும் புரட்டாசி மாதம்
‘பொன்னுருகக் காய்ந்து மண்ணுருகப் பெய்யும் புரட்டாசியில்’ என்பார்கள். அதாவது, புரட்டாசி மாதத்தில் பகல் பொழுதினில் தங்கம் உருகும் அளவிற்கு கடுமையான வெயில் காய்ந்து, இரவினில் மண் உருகி வழிந்தோடும் அளவில் நல்ல மழை பெய்யும் என்பது இதன் பொருள். இந்த மாதம் முழுவதும் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் இதனை கன்னியா மாதம் என்றும் அழைப்பர். புரட்டாசி என்ற வார்த்தையைக் கேட்கும்போதே நம் கண் முன் தோன்றுவது பெருமாளின் திருவுருவமே. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருப்போரும் உண்டு.  நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புத பகவான். புதன் கிரகம் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில். எனவேதான் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி, பெருமாளுக்கு உரிய மாதம் என பெரியவர்கள் வகுத்திருக்கிறார்கள். அதோடு பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரியனோடு புதனும் இணைந்திருப்பார். சூரியனுக்கு உரிய பிரத்யதி தேவதை பசுபதி என்றழைக்கப்படும் சிவபெருமான். புதனுக்கு உரிய பிரத்யதி தேவதை நாராயணன். இவர்கள் இருவரும் தெய்வீக மூலையாக கருதப்படும் கன்னி மூலையில் இணைவது சங்கர-நாராயணர் இணைவாகக் கருதப்படுகிறது. சூரியநாராயண ஸ்வாமி என்று சூரியன் பெயர் பெற்ற காரணமும் இதுவே.

புரட்டாசி மாத விரத வழிபாடு
ஜாதக ரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும். திருப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு.

பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை நடக்கிறது. அம்பாளை, முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும், அதையடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறோம்.

தைரியம், செல்வம், கல்வி ஆகியவற்றை அம்பாளிடம் வேண்டிப் பெற இந்த பூஜை நடத்தப்படுகிறது.

புரட்டாசி மாத விரதங்கள்!



புரட்டாசி மாத விரதங்கள்!

புரட்டாசி பௌர்ணமி- புரட்டாசியில்
மரகத லிங்கம் வழிபாடு சிறப்பு ஹோமத்திற்கு ஊபயோகித்த மிஞ்சிய சாதத்தை மட்டும் உண்டு சிவபூஜை செய்ய வேண்டும். சூரியன் கன்னி ராசிக்குள் நுழையும் காலம் புரட்டாசி. கன்னி ராசிக்கு அதிபதி புதன். அதனின் அதி தேவதை பெருமாள், புதன் நட்புக் கிரகம் சனி. அதனால்தான் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை பூஜித்து விரதமிருந்து வணங்குதல் மிகச் சிறப்பு.
த்ரிதியை / திருதியை விரதம்- சிவ பார்வதி திருமணம் நடந்த திதியாதலால் ருத்திரருக்குரிய இந்த நாளில் தம்பதியர் இணை பிரியாமல் இருக்க, குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்க விரத பூஜை. எள்ளு சாதம் சாப்பிடவும். வைகாசி, புரட்டாசி, மாசி மாதங்களில் பூஜை செய்வது சிறப்பு. பெண்களுக்கு புரட்டாசி மாசியில் செய்வது உத்தமம். அமாவாசைக்கு அடுத்து வரும் மூன்றாம் நாள் வளர்பிறையே திருதி எனச் சிறப்பிக்கப்படும். இந்த மூன்றாம் நாள் பிறையைத்தான் இறைவன் தன் தலையில் சூட்டிக்கொண்டான். அதனால்தான் நாம் மூன்றாம் பிறை கண்டு மகிழ்கின்றோம்.
சதுர்த்தி விரதம் - பிள்ளையார் பிறந்த இந்ததிதி விநாயகர் பூஜைக்குரிய நாள். சுக்லபட்ச சதுர்த்தியன்று விரதமிருந்து தொடர்ந்து ஒருவருடம் செய்யவும். பால் ஆகாரம் சாப்பிடவும். எள் தானம் செய்து எள்சாதம் சாப்பிடவும். புரட்டாசி சுக்ல சதுர்த்தியன்று செய்யும் பூஜை சிவா-க்ஷேமம் என்றும், மாசி சுக்ல சதுர்த்தியில் செய்யும் பூஜை சாந்தா என்றும், செவ்வாய்கிழமையுடன் இனைந்துவரும் சுக்ல சதுர்த்தியை சுகா என்றும் சதுர்த்தி விரதம் மூன்று வகைப்படும்.
புரட்டாசி மாத சிறப்புகள்- 1.சூரியன் கன்னி ராசியில் நுழையும் காலத்தில் எமதர்மராஜன் பித்ரு லோக உயிர்களை அவர்தம் சொந்தங்களை காண சூட்சும உருவில் பூமிக்கு அனுப்புகின்றார். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். புரட்டாசி வளர்பிறை பிரதமை திதியிலிருந்து அமாவாசை வரை பதினைந்து நாட்கள் மஹாளய பட்சம் எனப்படும். இந்த நாட்களில் உரிய முறையில் நீத்தார் கடன்களை செய்வது நற்பலன்கள் தரும். வறியவர்க்கு அன்னதானம், பசுக்களுக்கு உணவு அளித்தல் சிறப்பு. அன்னதானம் செய்வோர் அன்னதானம் முடிந்தபிறகே உணவருந்த வேண்டும்.
2. மஹாளய அமாவாசை - பித்ருக்கள் காரியம் செய்யாமலிருப்பதே வீட்டில் கவலை நிம்மதியில்லாமை கவனச் சிதறல் போன்றவைகளுக்கு காரணம், மஹாளய அமாவாசையன்று ஒரு நீர் நிலைக்குச் சென்/று நீரில் மூழ்கி எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு விடவும். வீட்டில் தயாரித்த பொருளை வறியவர்களுக்கு தானாமாக வழங்கிய பின்னர் குடும்பத்தினர் உண்ண வேண்டும். முன்னோர் பசி தாகம் தீர்ந்து ஆசீர்வதிப்பர்,
3. கேதார விரதம் - புரட்டாசிமாத சுக்ல பட்ச தசமியில் ஆரம்பித்து ஐப்பசி மாத அமாவாசையில் முடியும் 21 நாட்கள் விரதம் மேற்கொண்டு தூய்மையுடன் மண்ணாலான லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு பிரசாதங்கள் ஒருவேளை மட்டும் உண்டு விரதம் இருக்கவும். முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள் உப்பில்லாத உணவினை எடுத்துக் கொள்ளலாம். நிவேதனங்கள் 21 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். அப்பம், வடை, புளியோதரை, பாயாசம், பொங்கல் போன்ற பிரசாதங்களும் செய்யலாம். ஒவ்வொரு நாளும் மஞ்சள் தடவிய சரடு ஒன்றில் 21 முடிச்சுகள் போட்டு இறுதி நாளன்று புஜங்களுக்கு கீழ் கைகளில் கட்டிக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கும் கட்டலாம். நினைத்த காரியம் கைகூடும். திருமகள், கலைமகள், மலைமகள் அருள் கிட்டும். ஆனந்தம் பிறக்கும்.
கேதார கௌரி விரதம்.- விகட நாட்டியத்தைக் கண்ட தெய்வீக தம்பதி சிவபார்வதியினரை அங்கிருந்த அனைவரும் மூன்று முறை வலம் வந்து வணங்கினர். பிருங்கி முனிவர் மட்டும் வண்டுருவம் எடுத்து சிவனோடு ஒட்டி அமர்ந்திருந்த பார்வதியை தவிர்த்து சிவனை மட்டும் வலம் வந்தார். கோபம் கொண்ட பார்வதியை, பிருங்கி முனி வீடு பேற்றை மட்டும் விரும்புகின்றார். பூவுலகில் அவர் பெற நினைக்கும் இன்பங்கள் யாவும் இல்லை. ஆகையால் இகவாழ்வில் வெற்றி அருளும் உன்னை அவர் வணங்கவில்லை என்று ஈசன் சமாதானம் கூறியும் அதனை ஏற்காமல் தன் சக்தியை பிருங்கியிடமிருந்து எடுத்துவிட்டார். வலுவிழந்து தள்ளாடிய முனிவருக்கு கோல் ஒன்றைக் கொடுத்து அவர் தடுமாறாமல் நிற்க்கச் செய்ய பிருங்கி சிவனை வணங்கி சென்றார்.
தன் கணவர் தன்னை மதிக்க வில்லை என்று கூறி உமை கோபங்கொண்டு சிவனைப் பிரிந்தார். பூவுலகில் கௌதம முனிவரின் ஆசிரமத்தில் இருந்து ஈசனை மீண்டும் அடைய கௌதம முனிவரின் ஆலோசனைப் படி கேதார கௌரி விரதம் மேற்கொண்டார். 21 நாட்கள் கடுமையான விரதமிருந்து ஈசனுடன் சேர்ந்தார். ஈசன் தன்னில் பாதியை பார்வதிக்கு அளித்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி.
4. புரட்டாசி சனிக்கிழமை- பெருமாள் கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர் ஏழ்மை நிலையிலிருந்தாலும் நீதியும் நாணயமும் தவறாமல் இருந்து வந்தார். அவருக்கு ஏழரை சனி பீடிக்கும் காலம் வந்தபோது பெருமாள் அவரை ஏழரை ஆண்டுகளுக்குப் பதிலாக ஏழரை நிமிடங்கள் பீடிக்கச் சொன்னார். கன்னி ராசியின் அதிபதி புதனின் நட்புக் கிரகமான சனிபகவானின் ஆதிக்கத்தை குறைக்க பெருமாளை புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து வழிபடுகின்றோம்.
5. வாமன ஏகாதசி- புரட்டாசி வளர்பிறையில் வரும் ஏகாதசி வாமன ஏகாதசி அல்லது பரிவர்த்தினி ஏகாதசி எனப்படும். மற்ற ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியாதவர்கள் வாமன ஏகாதசியில் விரதமிருந்தால் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்த புண்ணியம் கிடைக்கும். மற்ற ஏகாதசி விரங்களைப் போலவே புரட்டாசி முழுவதும் சைவ உணவு உண்ண வேண்டும். ஏகாதசிக்கு முந்தைய நாள் இரவில் வெறும் பால் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை கஞ்சி உண்டு விரதம் இருக்க வேண்டும். மோர் தயிர் சேர்த்தக் கூடாது. காபி, டீ இவைகளையும் தவிர்க்கவும். ஏகாதசி அன்று பெருமாளின் பெருமைகளைப் பாடி பஜனைகளில் ஈடுபடலாம். அடுத்த நாள காலையில் துவாதசியில் துளசி தீர்த்தம் அருந்தி விரதத்தை முடிக்கவும். இன்றைய உணவில் அகத்திக் கீரையும் நெல்லிக்காயும் கட்டாயம் சேர்க்க வேண்டும். லட்சுமி, மலைமகள், கலைமகள் ஆகியோரின் அருள் கிட்டும் விரதம் இது.
5. அஜா ஏகாதசி - புரட்டாசி தேய்பிறையில் வரும் ஏகாதசி அஜா ஏகாதசி. என்ன காரணம் எனத் தெரியாமல் வரும் துன்பங்கள், மனக்கிலேசம், பிரச்சனைகள் ஆகியவைகளுக்கு முன் ஜென்மத்து வினைப் பயன்களே காரணம். அவைகளை அதன் பாதகங்களைக் குறைக்கக்கூடிய சக்தி கொண்டது இந்த அஜா ஏகாதசி விரதம். அரிசந்திரன் நாட்டை இழந்து, மனைவியை விற்று, சுடுகாட்டில் பிணங்களை எரித்து வாழ்ந்ததின் காரணம் அவன் முற்பிறவியில் செய்த பாவங்களே என்பதை அறிந்த கௌதம முனிவர் அரிச்சந்திரனை இந்த அஜா ஏகாதசி விரதம் கடைபிடிக்கச் சொன்னார். அப்படியே 9 வருடங்கள் இந்த விரதத்தை கடைபிடித்த அரிசந்தந்திரன் தன் கஷ்டங்களை எல்லாம் தீர்ந்து தன் நாட்டையும் மனைவி மக்களையும் மீண்டு பெற்று நிம்மதி அடைந்தான். மற்ற ஏகாதசி விரதங்களைப் போலவே இதனையும் கடைபிடிக்க வேண்டும். பெருமாள் தோத்திரங்களைச் சொல்லும்போது ‘என் முன் வினைப்பயனை அறுப்பாய் ஐயனே’ எனவும் வேண்டிக் கொள்ளவும்.
6. நவராத்திரி விரதம்- அன்னை சக்தி கடும் தவமிருந்து சண்ட முண்டர்களையும் ரக்த பீஜனையும், சும்ப நிசும்பர்களையும் தன் மூன்று அம்சங்களால் அழித்தாள். அன்னைக்குச் சக்தி கொடுத்த அனைத்து தேவர்கள், முனிவர்கள், தெய்வங்கள் எல்லாம் சக்தியை கொடுத்துவிட்டு பொம்மைபோல் நின்ற நிகழ்வைச் சித்தரிக்கும் விதமாகவே கொலு வைக்கும் பழக்கம் வந்தது. புரட்டசி சுக்லபட்ச பிரதமையில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி. அசுரர்களை வதம் செய்வதற்காக பகல் நேரத்தில் அவர்களுடன் போரிடும் அம்பிகை ஒய்வெடுக்கும் இரவு நேரத்தில் அம்பிகையை உற்சாகமூட்டும் விதமாகத் துதித்து போற்றிடும் தினங்களே நவராத்திரி. நவம்–புதுமையான, ராத்ரம்-மங்களம். வாழ்வில் பழைய வினைகளைப் போக்கி தற்போதைய செயல்களுக்கு ஏற்ப மங்களமான நன்மைகளைப் பெறுவதற்காக அம்பிகையை வழிபடும் அந்த இரவுகளே நவராத்திரி. தன்னை வணங்கிடும் பக்தர்களின் மனதில் இருந்து தாமஸ குணத்தினால் ஏற்படும் தீவினைகளை நீக்கும்
துர்க்கை வடிவாக முதல் மூன்று நாட்களும், அடுத்த 3 நாட்கள் பொன்னும் பொருளும் ரஜோ குணத்தினள்
மகாலட்சுமி வடிவாகவும், கடைசி 3 நாட்கள் ஞானத்தின் திருவுருவமாக சாத்வீக சரஸ்வதி தேவியாகவும் வழிபடுகின்றோம்.
வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமிவரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியது. இதன்படி பன்னிரண்டு நவராத்திரிகள் உண்டு. என்றாலும் அவற்றில் முக்கியமானது நான்கு மட்டுமே கொண்டாடப்படுகிறது.
1.ஆனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும்
ஆஷாட நவராத்திரி.
2 புரட்டாசி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரி.
3. தை மாத்த்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும்
சியமளா நவராத்திரி.
4. பங்குனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் வசந்த நவராத்திரி..
ஐம்பூதங்களின் ஒன்றான மண்ணால் ஆன பொம்மைகளை வைத்து என்னை பூஜித்தால் சகல சுகங்களையும் சௌபாக்யங்களையும் அருள்வேன் என்ற அம்பிகையின் வாக்கிற்கிணங்க கொலுவைத்து படையலிட்டு நிவேதனம் செய்த பொருளை கொலுவிற்கு வந்தவர்களுக்கு வழங்குகின்றோம்.
1-ம்படி- ஓரறிவு உயிர்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள்
2-ம்படி- இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு
3-ம்படி- மூவறிவுடைய கரையான், எறும்பு போன்ற பொம்மைகள்
4-ம்படி- நான்கு அறிவு கொண்ட நண்டு, வண்டு பொம்மைகள்
5-ம்படி- ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள்
6-ம்படி- ஆறறிவு கொண்ட உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள்
7-ம்படி- மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள்.
8-ம்படி- நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள்.
9-ம்படி- பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளின் பொம்மைகள்
கலசம் வைத்து வழிபடலாம். காலையில் சர்க்கரைப் பொங்கல், பருப்புப் பாயாசம், பால் பாயாசம் அகியவற்றில் ஒன்றை நிவேதனம் செய்ய வேண்டும். மாலையில் சுண்டல் நிவேதனம் மிகவும் முக்கியம். கொண்டைக் கடலை, தட்டைப் பயிறு / காராமணி, பச்சைப் பயிறு, பட்டாணி. வேர்க்கடலை, கடலைப் பருப்பு போன்றவைகளை நளுக்கொன்றாக நிவேதனம் செய்து கொலுவிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பழம், பாக்கு ஆகியவற்றுடன் நிவேதனப் பொருளையும் கொடுக்கவும். பாட்டு, நடனம் தெரிந்தவர்கள் அன்னை முன் நிகழ்த்தலாம். விரதம் இருப்பவர்கள் ஒன்பது நாளும் பிரசாதத்தை மட்டுமே உண்ண வேண்டும். பூஜை முடிந்தபின்னரே வீட்டில் அனைவரும் உணவு அருந்த வேண்டும். சரஸ்வது பூஜையன்று நிவேதனப் பொருள் மட்டுமின்றி இரவு பால் நிவேதனம் செய்ய வேண்டும். மூன்று சக்திகளையும் மனதார நினைத்து பிரார்த்தனை செய்து பூஜை முடித்தால் எல்லா நன்மைகளும் ஏற்பட்டு வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.
சரஸ்வதி பூஜைக்கு அடுத்த நாள் அம்பிகை மகிசாசூரனை வதம் செய்து வெற்றி பெற்ற நாள் விஜயதசமி . நவராத்திரியில் வரும் தசமியே விஜயதசமி. இந்நாளில் தொடங்கும் எல்லா நல்ல காரியங்களும் வெற்றியுடன் முடியும். குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது வித்யாப்யாசம் எனும் எழுத்தறிவிக்கும் சடங்கினை செய்யலாம்.

சனி, 15 செப்டம்பர், 2018

புரட்டாசி மாதத்தில் கட்டாயம் பயணிக்க வேண்டிய விஷ்ணு தலங்கள்!


புரட்டாசி மாதத்தில் கட்டாயம் பயணிக்க வேண்டிய விஷ்ணு தலங்கள்!

ஒன்பது கோள்களில் ஒன்றாகத் திகழும் புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் ஒன்று புரட்டாசி. புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹா விஷ்ணு பகவான். விஷ்ணுவின் அருளைப் பெற உகந்த காலமாக இருப்பது புரட்டாசி மாதம். பொதுவாகவே பெருமாளை சனிக்கிழமையில் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. அதுவும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் இன்னும் கூடுதல் பயண்கிட்டும் என்பது நம்பிக்கை. தமிழகத்தில் எந்த விஷ்ணு தலத்திற்கு இந்த புரட்டாசி மாதம் பயணிக்க வேண்டும் என பார்க்கலாம் வாங்க.

அரங்கநாத சுவாமி கோவில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகும். காவிரி ஆற்றினால் சூழப்பட்ட, இத்தலம் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோவிலைச் சுற்றிலும் மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான ராஜகோபுரம், 72 மீட்டர் உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகிறது.

சாரங்கபாணி திருக்கோவில் சாரங்கபாணி சுவாமி கோவிலானது கும்பகோணத்தில் அமைந்துள்ள பிரசிதிபெற்ற விஷ்ணு தலமாகும். 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக இக்கோவில் புகழ்பெற்றுள்ளது. இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சார்ங்கபாணி கோவிலாகும்.

கள்ளழகர் திருக்கோவில் 108 வைணவத் தலங்களில் மிகவும் புகழ்பெற்றது மதுரை கள்ளழகர் திருக் கோவில். பெரும்பாலும் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இத்தலம் 94 ஏக்கர் பரப்பளவில் 4 புறமும் கோட்டை சுவர்களால் ஆன பழமை வாய்ந்த கோவிலாகும். மதுரையில் உள்ள இக்கோவிலில் நடைபெறும் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் நட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்ற வழிபடுவர்.

வழிபாடு வைகாசி, புரட்டாசி மாதங்களில் இத்தல மூலவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், திருமணத் தடை உள்ளவர்கள் இந்த வழிபாட்டில் பங்கேற்று மூலவருக்கும் அம்மையாருக்கும் மாலை அணிவித்து வழிபடுவதன் மூலம் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள் என்ற அறிவியல் பூர்வமான உண்மை


விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள் என்ற அறிவியல் பூர்வமான உண்மையை தெரியப்படுத்துங்கள்
நம் முன்னோர்கள் சில செயல்களை நமக்குப் புரியாமலே சொல்லிவிட்டு சென்று விட்டார்கள். ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போய் இருக்கும் அதனால் அங்கே நீா் நிலத்தில் இறங்காமல் ஓடிக் கடல்யை அடையும். ஆனால் களிமண் உள்ள இடத்தில் நீா் கீழே பூமியில் இறங்கும். அதனால் விநாயகர் சதுார்த்தி அன்று சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள். அதை ஏன் 3 அல்லது 5 நாட்கள் கழித்து ஆற்றில் போட வேண்டும் ?
ஈரக்களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்று விடும். சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்து விடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீா் பிரச்சனையைத் தீர்க்கும். ஆற்றில் மட்டும் கரைக்க வேண்டும்.
அனைவருக்கும் தெரியப்படுத்த அதிகம் பகிருங்கள் நண்பர்களே....