சனி, 30 செப்டம்பர், 2017

விஜயதசமியில் வித்யாரம்பம்

விஜயதசமியில் வித்யாரம்பம்


ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தையின் கல்வியில் அதிக அக்கறை செலுத்த விரும்புவது இயற்கையே. தன் குழந்தை பள்ளிக்கு செல்லும் அல்லது கல்வி கற்கத் துவங்கும் நாளை மிகவும் புனிதமாக கருதுவதும் இயல்பே. அந்த விசேஷமான தருணத்தை கொண்டாடும் நாள்தான் விஜயதசமி.

நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு வரும் பத்தாவது நாளான விஜயதசமியன்று தொடங்கப்படும் எந்த ஒரு காரியமும் அது சிறந்த வெற்றியளிக்கும் என்பது இந்தியர்களின் நம்பிக்கை. விஜயதசமியன்று குழந்தைகளுக்கு புதிய கலைகளான பாட்டு, இசைக்கருவி இசைத்தல், நடனம், ஒவியம் போன்ற கலைகளை கற்க பள்ளிகளில் சேர்ப்பார்கள். ஏற்கனவே இக்கலையை கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களும் தங்கள் குருவிற்கு சிறப்பு தட்சணை அளித்து சிறிது நேரமாவது இந்த நல்ல நாளில் அக்கலையை பயிலுவார்கள்.

இந்த மங்கலமான விஜயதசமியன்று தான் சிறு குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யப்படுகிறது. 2 முதல் 3 வயதுள்ள குழந்தைகளுக்கு பள்ளிக்க அது ப்ளே ஸ்கூலாக இருந்தாலும், செல்வதற்கு முன்பாக வரும் விஜயதசமியன்று வித்யாரம்பம் செய்யப்படுகிறது. தென்னிந்தியாவில் இந்நிகழ்ச்சி மிக முக்கியமாக பின்பற்றப்படுகிறது. இந்துக்கள் மட்டுமல்லாமல் கிறித்துவர்களும் தங்கள் குழந்தைகளுக்கு சர்சுகளில் வித்யாரம்பம் செய்வதை காண முடியும்.


அக்‌ஷரபியாசம் என்றும் அழைக்கப்படும் இந்நிகழ்ச்சியை கோயில்களிலோ அல்லது வீட்டிலோ செய்யலாம். கோயில்களில் செய்யும்போது நல்ல நேரம் பற்றி யோசிக்க வேண்டாம். வீட்டில் செய்யும்போது நல்ல நேரம் பார்த்து இதை செய்ய வேண்டும். குருவின் பங்கு இதில் மிகவும் முக்கியம். அறிவை கொடுக்கும் குருவை சிறப்பிப்பதாகவும் இந்நிகழ்வு நடக்கிறது. குழந்தையை வீட்டில் அப்பா, தாத்தா அல்லது தாய் மாமாவின் மடியில் உட்கார வைத்துக் கொள்ள வேண்டும் ஒரு தட்டில் அரிசியை முழுவதுமாக தூவி வைக்க வேண்டும்.

குரு குழந்தையின் சுட்டுவிரலை பிடித்து தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் எழுத்தை, பொதுவாக ஆவன்னாவை எழுத வைப்பார். சிலர் ஓம் ஸ்ரீ கனபதைபே நமஹ என்றும் எழுதுவர். இதன் பிறகு ஒரு தங்க மோதிரத்தை கொண்டு குழந்தையின் நாவில் அதே போல் எழுதுவார்கள். குழந்தை தடையின்றி எழுதவும், பேசவும் இந்த சுபநிகழ்ச்சி ஒரு ஆரம்பமாக இருக்கட்டும் என்ற முறையில் மிகவும் மகிழ்ச்சியாக இது கொண்டாடப்படுகிறது.

கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலிலும், கேரளாவில் குருவாயூரில் உள்ள தஷின மூகாம்பிகை கோவிலிலும் முன்பதிவுகளுடன் வித்யாரம்ப நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கோவிலில் செய்வதை விட வீட்டில் குடும்பத்தாரின் முன்னிலையில் செய்யும்போது குழந்தைகள் பயப்படாமல், அழாமல் இதில் கலந்து கொள்ளும் என்பதும் உண்மை. நன்றி மாலைமலர்.


சரஸ்வதி கோயிலில் வித்யாரம்பம்...
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ளது கூத்தனூர். இங்கு கல்விக்கு தெய்வமாம் சரஸ்வதிக்கு கோயில் உள்ளது. சரஸ்வதி அம்மன் கோயில் என அழைக்கப்படும் இங்கு ஆண்டுதோறும் விஜயதசமி திருநாளன்று சரஸ்வதிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறும். இந்த ஆண்டும் வழக்கம்போல விஜயதசமி விழா இங்கு விமரிசையாக நடந்தது.
இதையொட்டி காலையிலேயே ஏராளமான குழந்தைகளை பெற்றோர்கள் கோயிலுக்கு அழைத்து வந்தனர். அவர்களுக்கு கோயிலில் எழுத்து பயிற்சி(வித்யாரம்பம்) அளிக்கப்பட்டது. சரஸ்வதி சன்னதியில் நெல்லை கொட்டி அதில் தமிழில் முதல் எழுத்தான ‘அ’ எழுதவும், உச்சரிக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டது.

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

மங்கள ஆரத்தி எடுப்பது ஏன் -- தமிழர் பின்பற்றும் கலாச்சாரத்தின் அறிவியல் பூர்வ நன்மைகள்...



மங்கள ஆரத்தி எடுப்பது ஏன் -- தமிழர் பின்பற்றும் கலாச்சாரத்தின் அறிவியல் பூர்வ நன்மைகள்...!

தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.

சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.
தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.

ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.
மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது.
மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்.

அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.
எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்..  ..... ...

கல்வி வரமருளும் கூத்தனூர் சரஸ்வதி



கல்வி வரமருளும் கூத்தனூர் சரஸ்வதி…………


🔯தமிழ்நாட்டில் சரஸ்வதி தேவிக்கென்றே தனிக்கோயில் உள்ள திருத்தலம் கூத்தனூர்.

🔯சரஸ்வதி இத்தலத்தில் கருவறையில் கோயில் கொண்டதோடு மட்டுமன்றி, அரிசொல் ஆறு எனப்படும் அரசலாற்றில் கங்கை, யமுனை நதிகளோடு கலந்து தட்சிண திரிவேணி சங்கமமாக பரிணமிக்கிறாள் என பிரமாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 #தலவரலாறு

🔯ஒரு சமயம் நான்முகனுக்கும் சரஸ்வதிக்கும் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் சபித்துக்கொண்டனர்.

🔯இதன் விளைவாக  பூமியில் பகுக்காந்தன், சிரத்தை எனும் பெயர்களில் சகோதரர்களாக பிறக்க நேரிட்டது.

🔯காலம் கணியும் போது இருவருக்கும் திவ்யஞானம் சித்திக்கவே பெரும் குழப்பநிலை உருவானது.அப்போது சிவபெருமான் தோன்றினார்.

🔯இப்பிறவியில் சகோதரர்களாக பிறந்தமையால் இருவரும் மணம் புரிவது உலக நியதிக்கு எதிரானது.

🔯எனவே சரஸ்வதியை கூத்தனூரில் குடிகொண்டு அடியார்களுக்கு ஞானவளம் நல்குமாறு அருள்பாலித்தார்.

🔯ஆகையால் சிரத்தையாக பிறந்த சரஸ்வதி இத்தலத்தில் கோயில் கொண்டாள் என்கிறது தல வரலாறு.

🔯இன்றுவரை தேவி சரஸ்வதி கன்னி தேவியாகவே அருள்பாலிக்கிறார்.

🔯பகுக்காந்தனாகப் பிறந்த நான்முகன் பித்ரு காரியங்களில் முக்கியமாகப் போற்றப்படுவார் என ஈசன் அருள் வழங்கியதால் கூத்தனூரில் அரசலாற்றில் புரியும் பித்ரு காரியங்கள் விசேஷ பலன்களைத் தருவதாக ஐதீகம்.

#கூத்தனூர் #பெயர்வர #காரணம்

🔯அம்பாள்புரி, ஹரிநாகேஸ்வரம் என புராண காலத்தில் அழைக்கப்பட்ட இத்தலத்தை இரண்டாம் ராஜராஜன், தன் சபையில் அரசவைப்புலவராக விளங்கிய சரஸ்வதியின் அருள் பெற்ற ஒட்டக்கூத்தருக்கு பரிசாக வழங்கினார்.

🔯(ஒட்டக்)கூத்தருக்குப் பரிசாக வழங்கப்பட்டதால் இத்தலம் கூத்தன்+ ஊர் = கூத்தனூர் என்றாயிற்று.

🔯ஒட்டக்கூத்தருக்கும் ஆலயத்தில் தனி சந்நதி உள்ளது.

#ஆலய #சிறப்புக்கள்

🔯விமானக்கலசம் ஞானத்தின் உருவாய் சரஸ்வதி இங்கு உறைவதைக் குறிக்கும் வகையில் ஐந்து எனும் எண்ணிக்கையில் உள்ளது.

🔯கருவறையில் வீணையை கையில் ஏந்தாத சரஸ்வதியை தரிசிக்கலாம்.

🔯அர்த்த மண்டபத்தில் ஆலயத்தில் அருளாட்சி புரியும் மூர்த்தங்களின் உற்சவ விக்ரகங்கள் அருள்கின்றன.

🔯இத்தல நடராஜரின் பாதத்தின் கீழ் காணப்படும் முயலகன், பக்கவாட்டில் இல்லாமல் நேராக உள்ளது சிறப்பு.

🔯மகாமண்டபத்தின் இடது புறம் நான்கு முகங்களுடன் வேதம் ஓதும் நான்முகன் அருள்புரிகிறார்.

🔯கருவறையின் முன் சரஸ்வதியின் வாகனமான ராஜஹம்ஸம் எனப்படும் அன்னம் அன்னையை நோக்கி கம்பீரமாக நிற்கிறது.

#அன்னையின் #அருட்கடாட்சம்

🔯கம்பருக்காக இந்த சரஸ்வதி கிழங்கு விற்கும் மூதாட்டியாகவும், இடையர் குலப் பெண்ணாகவும் நேரில் வந்து சங்கடங்கள் தீர்த்திருக்கிறாள்.

🔯ஒட்டக்கூத்தரை எதிரிகள் சூழ்ந்து கொண்டு, பரணி பாடினால் விட்டுவிடுவதாகக் கூற, கூத்தரின் நாவில் அமர்ந்து பரணி பாடினாள் இந்த அன்னை.

🔯பிறவியிலேயே பேச்சிழந்த புருஷோத்தமன் எனும் பக்தனுக்கு தன் தாம்பூல எச்சிலைத் தந்து பூவுலகம் போற்றும் புருஷோத்தம தீட்சிதர் ஆக்கிய பெருமை பெற்றவள் இந்த தேவி.

 #வழிபாடு

🔯பௌர்ணமி அன்று இந்த அன்னைக்குத் தேன் அபிஷேகம் செய்து, அந்த பிரசாத தேனை மோதிர விரலால் சரஸ்வதியை தியானித்தபடி உட்கொள்ள, கல்வியறிவு பெருகும் என்பது ஐதீகம்.

🔯சரஸ்வதி பூஜையன்று பக்தர்கள் சரஸ்வதி தேவியின் பாதங்களை தாங்களே பூஜிக்கும் வகையில் கருவறையிலிருந்து நீண்ட பாதங்கள் அமையுமாறு அலங்கரிப்பது கண்கொள்ளாக் காட்சி.

🔯விஜயதசமி அன்று புகழ்பெற்ற கலைஞர்கள் இத்தலம் வந்து தங்கள் கலைத்திறமையை தேவிக்கு அர்ப்பணிப்பது வழக்கம்.

🔯மாணவ, மாணவியர் தேர்வு எழுதும் முன் தங்கள் எழுதுகோலை இந்த தேவியின் முன் வைத்து வணங்கிச் செல்கின்றனர்.

 #அமைவிடம்

🔯மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் எனும் ஊரிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது.



தமிழ்நாட்டில் சரஸ்வதி தேவிக்கென்றே தனிக்கோயில் உள்ள திருத்தலம் கூத்தனூர். சரஸ்வதி இத்தலத்தில் கருவறையில் கோயில் கொண்டதோடு மட்டுமன்றி, அரிசொல் ஆறு எனப்படும் அரசலாற்றில் கங்கை, யமுனை நதிகளோடு கலந்து தட்சிண திரிவேணி சங்கமமாக பரிணமிக்கிறாள் என பிரமாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சமயம் நான்முகனுக்கும் சரஸ்வதிக்கும் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக இருவரும் பூமியில் பகுக்காந்தன், சிரத்தை எனும் பெயர்களில் பிறக்க, சிரத்தையாக பிறந்த சரஸ்வதி இத்தலத்தில் கோயில் கொண்டாள் என்கிறது தல வரலாறு. பகுக்காந்தனாகப் பிறந்த நான்முகன் பித்ரு காரியங்களில் முக்கியமாகப் போற்றப்படுவார் என ஈசன் அருள் வழங்கியதால் கூத்தனூரில் அரசலாற்றில் புரியும் பித்ரு காரியங்கள் விசேஷ பலன்களைத் தருவதாக ஐதீகம். 

அம்பாள்புரி, ஹரிநாகேஸ்வரம் என புராண காலத்தில் அழைக்கப்பட்ட இத்தலத்தை இரண்டாம் ராஜராஜன், தன் சபையில் அரசவைப்புலவராக விளங்கிய சரஸ்வதியின் அருள் பெற்ற ஒட்டக்கூத்தருக்கு பரிசாக வழங்கினார். (ஒட்டக்)கூத்தருக்குப் பரிசாக வழங்கப்பட்டதால் இத்தலம் கூத்தன்+ ஊர் = கூத்தனூர் என்றாயிற்று.  ஒட்டக்கூத்தருக்கும் ஆலயத்தில் தனி சந்நதி உள்ளது. விமானக்கலசம் ஞானத்தின் உருவாய் சரஸ்வதி இங்கு உறைவதைக் குறிக்கும் வகையில் ஐந்து எனும் எண்ணிக்கையில் உள்ளது. கருவறையில் வீணையை கையில் ஏந்தாத சரஸ்வதியை தரிசிக்கலாம். அர்த்த மண்டபத்தில் ஆலயத்தில் அருளாட்சி புரியும் மூர்த்தங்களின் உற்சவ விக்ரகங்கள் அருள்கின்றன. இத்தல நடராஜரின் பாதத்தின் கீழ் காணப்படும் முயலகன், பக்கவாட்டில் இல்லாமல் நேராக உள்ளது சிறப்பு. மகாமண்டபத்தின் இடது புறம் நான்கு முகங்களுடன் வேதம் ஓதும் நான்முகன் அருள்புரிகிறார். 

கருவறையின் முன் சரஸ்வதியின் வாகனமான ராஜஹம்ஸம் எனப்படும் அன்னம் அன்னையை நோக்கி கம்பீரமாக நிற்கிறது. கம்பருக்காக இந்த சரஸ்வதி கிழங்கு விற்கும் மூதாட்டியாகவும், இடையர் குலப் பெண்ணாகவும் நேரில் வந்து சங்கடங்கள் தீர்த்திருக்கிறாள். ஒட்டக்கூத்தரை எதிரிகள் சூழ்ந்து கொண்டு, பரணி பாடினால் விட்டுவிடுவதாகக் கூற, கூத்தரின் நாவில் அமர்ந்து பரணி பாடினாள் இந்த அன்னை. பிறவியிலேயே பேச்சிழந்த புருஷோத்தமன் எனும் பக்தனுக்கு தன் தாம்பூல எச்சிலைத் தந்து பூவுலகம் போற்றும் புருஷோத்தம தீட்சிதர் ஆக்கிய பெருமை பெற்றவள் இந்த தேவி. பௌர்ணமி அன்று இந்த அன்னைக்குத் தேன் அபிஷேகம் செய்து, அந்த பிரசாத தேனை மோதிர விரலால் சரஸ்வதியை தியானித்தபடி உட்கொள்ள, கல்வியறிவு பெருகும் என்பது ஐதீகம். 

சரஸ்வதி பூஜையன்று பக்தர்கள் சரஸ்வதி தேவியின் பாதங்களை தாங்களே பூஜிக்கும் வகையில் கருவறையிலிருந்து நீண்ட பாதங்கள் அமையுமாறு அலங்கரிப்பது கண்கொள்ளாக் காட்சி. விஜயதசமி அன்று புகழ்பெற்ற கலைஞர்கள் இத்தலம் வந்து தங்கள் கலைத்திறமையை தேவிக்கு அர்ப்பணிப்பது வழக்கம். மாணவ, மாணவியர் தேர்வு எழுதும் முன் தங்கள் எழுதுகோலை இந்த தேவியின் முன் வைத்து வணங்கிச் செல்கின்றனர். மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் எனும் ஊரிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது.   

'பூஜை' சரஸ்வதிக்கு மட்டுமே!

'

பூஜை' சரஸ்வதிக்கு மட்டுமே!
******************
'பூஜை' என்ற அடைமொழி இருப்பது சரஸ்வதிக்கு மட்டுமே. தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என சொல்வதில்லை. பூஜை என்ற சொல் 'பூஜா' என்பதில் இருந்து வந்ததாகும்.
'பூ' என்றால் 'பூர்த்தி'. 'ஜா' என்றால் 'உண்டாக்குவது'. அதாவது மனிதனை முழுமை பெறச் செய்வது பூஜை. தான் என்னும் ஆணவம், அடுத்தவன் வளர்ச்சி கண்டு உருவாகும் பொறாமை குணம், வாழ்வு நிரந்தரமானது என்ற மாயை ஆகிய மூன்றும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. இவற்றை சைவ சித்தாந்தம் 'ஆணவம், கன்மம், மாயா மலம்' என குறிப்பிடுகிறது. இம்மூன்று அழுக்குகளை போக்கி ஞானத்தை உண்டாக்குவது பூஜை.
சரஸ்வதியை வழிபட்டால் ஞானம் பெற்று மனிதன் முழுமை பெறுகிறான் என்பதால் 'பூஜை' என குறிப்பிடுகிறோம்.

#சரஸ்வதி #பூஜை & #ஆயுத #பூஜை & #விஜய #தசமி #பூஜை எப்படி கும்பிட வேண்டும்?



#சரஸ்வதி #பூஜை & #ஆயுத #பூஜை & #விஜய #தசமி #பூஜை  எப்படி கும்பிட வேண்டும்?

சர‌ஸ்வ‌‌தி பூஜை அன்று ‌வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் பூஜைக‌ள் செ‌ய்து வ‌ழிபடுவது வழ‌க்க‌ம். அ‌வ்வாறு வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபடு‌ம் இட‌த்தை முதலில் தூ‌ய்மை‌ப் படு‌த்த வே‌ண்டு‌ம். ச‌ந்தன‌ம், பன்னீர் தெ‌ளி‌த்து கு‌ங்கும‌ம் இட வே‌ண்டு‌ம். சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தி‌ற்கு‌ம், படை‌க்க‌ப்பட வே‌ண்டிய பொரு‌ட்களு‌க்கு‌ம் ச‌ந்தன‌ம் தெ‌ளி‌த்து கு‌ங்கும‌ம் இ‌டவு‌ம். பட‌த்‌தி‌ற்கு பூக்க‌ள் வை‌த்து அல‌ங்க‌ரி‌க்க வே‌ண்டு‌ம். அன்னையின் பார்வையில் படும்படி புத்தகங்களை வைத்து அதன் முன்பாக வாழையிலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப்பட்டவைகளை வைக்க வேண்டும். சுண்டல், சர்க்கரைப் பொங்கல், போன்றவ‌ற்றை கலைவாணிக்கு நைவேதயங்களாகப் படைக்கலாம்.

வாழை இலையை வைத்து அதில் பொறி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பழங்களை வைக்க வேண்டும். செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும். இவற்றால் மாலைகள் தொடுத்து அன்னைக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும்.

எதற்கும் விநாயகரே முதலானவர். எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும்.

பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம். கலசம் வைத்து அதில் அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன் கிடைக்கும்.

பூஜையின்போது வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவரும் கலைவாணிக்குரிய பாடல்களைப் பாடி வணங்கலாம்.

நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும். அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

#ஆயுத #பூஜை:

ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடுகிறோம்!

வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை.

ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.

ஆயுத பூஜையன்று எல்லா ஆக்கப் பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம். மற்ற அழிவு செய்கைகளுக்கு பயபடுத்தமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோமே.

விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் மேன்மை தரும்.


வியாழன், 28 செப்டம்பர், 2017

நலம் தரும் சரஸ்வதி பூஜை


நலம் தரும் சரஸ்வதி பூஜை...

இதனை படிக்கும் இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். உங்கள் எல்லோரையும் எல்லாம் வல்ல அண்டசராசரங்களையும் ஆளும் ஒரே இறைவன் ஈசன் காத்தருள வேண்டுகின்றோம். போர்த்துக்கீயர்களாலும் அதன்பின் ஒல்லாந்தர்களாலும் அதன்பின் ஆங்கிலேயர்களாலும் நம் முன்னோர்களான தமிழர்களின் அரசாட்சிக்குட்பட்ட பூர்வீக தேசம் ஆக்கிரமிக்கப்பட்டது. நமது தமிழ் மன்னர்களும், தமிழர் சேனையும் மண்ணையும், தமிழரது மதத்தையும், தமிழர் கலாச்சாரத்தையும் காக்க தமது உயிரை கொடுத்து போராடினார்கள். அதன் பின் தமிழர்களை கொன்று குவித்து வாழ்விடங்களும், இந்து வழிபாட்டுத்தலங்களும் அழிக்கப்பட்டு அதன் மேல் கிறிஸ்தவ கூடாரங்களை கட்டியெழுப்பி, நமது முன்னோர்களை அச்சுறுத்தி, அடிபணிய வைத்து கிறிஸ்தவமயப்படுத்தினார்கள்.
ஆகவே இது ஒரு ஆக்கிரமிப்பு மதம் என்பதனை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவமதத்தை தமிழர்கள் புறக்கணிக்கவேண்டும். எம் மன்னர்களாலும், முன்னோர்களாலும் மண்டியிடாது உயிர்கொடுத்து காக்கப்பட்ட எம் சைவசமயத்தை, ஆக்கிரமிப்பு வெள்ளை இனத்தவர்களால் திணிக்கப்பட்ட கிறிஸ்தவசமய ஆக்கிரமிப்பிலிருந்து காத்தல் ஒவ்வொரு இந்துவின் தலையாய கடமையாகும்.
பல மதங்களை உள்ளடக்கி இந்து மதம் எனப்பெயரிட்டதனால் தான் அதனுள் பொதிந்துள்ள எந்தமதமும் சம்மதம் என்றனர், நம் சமயம் (தமிழனின்) சைவம், அது சொல்லவில்லை எம்மதமும் சம்மதம் என்று. . இந்துகளாய் இருந்து கொண்டு எம்மதமும் சம்மதம் என்று கூறிக்கொண்டு யூதர்களால் நிராகரிக்கப்பட்ட இஸ்ரவேலிய யூத மனிதப் பெண்ணான (கிறிஸ்தவ) மரியாவை தமிழர்களாகிய நமது மக்கள் வழிபடுவது தவறான செயற்பாடாகும். கோவிலில் போய் கும்பிடும் எல்லோரும் இந்துக்களா? இந்து இயக்கங்களுடன் இணைந்து இந்து சமுதாயத்துக்காக போராடுபவனே உண்மையான இந்து. அடுத்து சரஸ்வதி பூஜை பற்றிய விளக்கத்தினை நோக்குவோம்.
உலகத்தில் தனிப்பட்டவர் நலனுக்காவும் அல்லது குடும்ப நலனுக்காவும் வீட்டிலும், கோயில்களிலும் இறைவனைத் தினமும் வணங்குவது வழிபாடு. ஊர்களிலும், நாடுகளிலும் மழை வளம் பெருகவும், வறுமை நீங்கவும், பிணிகள் ஒழியவும், மகிழ்ச்சி பொங்கவும், பகைமை நீங்கிடவும், நாட்டில் அமைதி நிலைக்கவும் பரந்த நோக்கத்துடன் கொண்டாடப்படுவது திருவிழா ஆகும்.
தமிழ் மாதங்களில் 12 மாதமும் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு தனிச்சிறப்புகளும், பண்டிகைகளும் இருக்கிறது. முதல் மூன்று நாட்களும் துர்க்கை அம்பாளை வழிபட வேண்டும். இடை மூன்று நாட்கள் லட்சுமிதேவியை வழிபட வேண்டும். இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.



துர்க்கை :
நெருப்பைப் போன்றவள். ஆவேசமான பார்வையுடன் அழகாய்த் திகழ்கிறாள். வீரத்தின் விளை நிலம், சிவனின் வீரசக்தி. பழைய தமிழ் நூல்கள் துர்க்காவை கொற்றவை என்றும், காளி என்றும் குறிப்பிடுகின்றன.
லட்சுஷ்மி :
மலரைப் போன்றவள். அருள் கனிந்த பார்வையுடன் அமைதியாகப் பொலிவாக இருக்கின்றாள். செல்வத்தின் அதிதேவதை. நாராயணின் சக்தி. திருச்சானூரில் லட்சுமிக்கென தனிக்கோயில் இருக்கிறது. ஆதி லெட்சுமி, மஹா லெட்சுமி, தானிய லெட்சுமி, சந்தான லெட்சுமி, வீரலெட்சுமி, விஜயலெட்சுமி என்று அஷ்டலெஷ்மிகள் உள்ளனர்.
சரஸ்வதி :
வைரத்தைப் போன்றவள். சாந்தம் நிறைந்த பார்வையுடன் எழிலுடன் விளங்குகின்றாள். கல்வி மற்றும் கலைகளின் தெய்வம். பிரம்மனின் சக்தி. சரஸ்வதி பூஜை நவராத்திரியின் 6 மற்றும் 7 வது நாட்களில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும் போது, சரஸ்வதியை எழுந்தருளச் செய்ய வேண்டும். இது தேவியின் அவதார நாள். திருவோண (சிரவண) நட்சத்திரம் உச்சமாகும் நாளில் சரஸ்வதி பூஜை நிறைவு பெறுகிறது.
அன்று தான் விஜயதசமி. மக்களின் தொழில்கள் அனைத்தும் புலமை, தொழில் என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகின்றது. ஒன்று புலமை ஞானம். இரண்டு தொழில் ஞானம். எனவே ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியை வழிபடுவதுதான் சரஸ்வதி பூஜை. நூல்களில் சரஸ்வதியை எழுந்தருளச் செய்து வழிபடுகின்றனர்.


ஆயுத பூஜை :
தொழில் புரிகின்றவர்கள் கொண்டாடுவது ஆயுத பூஜை. இவர்கள் மிகச் சிறிய ஆயுதங்கள் முதல் மிகப் பெரிய இயந்திரங்கள் வரை அனைத்தையும் பூவும், பொட்டும் இட்டு வழிபடுகின்றனர். காரணம் செய்யும் தொழிலே தெய்வம். அத்தொழில் எத்தொழிலாக இருந்தாலும், வணக்கத்துக்கும், வழிபாட்டுக்கும் உரியதாகும். இந்த அடிப்படைகளை உணர்த்தும் வழிபாடுகளே சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகும்.
நவராத்திரியின் போது, முப்பெரும் தேவிகளுக்குள் அடங்கியிருக்கும் ஒன்பது சக்திகளையும் வழிபட வேண்டும். அப்போது ஒரு சக்தியை முதன்மையாகவும், மற்ற எட்டுச் சக்திகளைப் பரிவாரச் சக்திகளாகவும் கருத வேண்டும். குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சண்டிகா, சாம்பவி, துர்கா, சுபத்திரா ஆகிய 9 கன்னி தேவதைகளையும் நவராத்திரி ஒன்பது நாளும் முறையே வழிபடுவது கன்னி வழிபாடு அல்லது குமாரி வழிபாடு எனப்படும்.
இரண்டு வயது முதல் 10 வயது வரை அமைந்த ஒன்பது கன்னிகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு ஆடைகள், அணிகள், உணவுகள், மங்கலப் பொருட்களைப் பரிசுகளாக் கொடுத்து அலங்கரிக்கின்றனர். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக நினைத்து வழிபடுவது வழக்கம். நவராத்திரியின் 8 ம் நாள் மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுகின்றனர். நவராத்திரி 9 நாட்களும் வழிபட முடியாதவர்கள் இந்த இரண்டு நாட்களில் வழிபடலாம். நவராத்திரி வழிபாடு முழுக்க முழுக்கப் பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவங்களுடைய பெண்கள் அனைவரும் வழிபாட்டில் பங்கேற்கின்றனர்.
நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சிப் பலன். கன்னிப் பெண்கள் பெறுவது திருமணப் பலன். இளைய சுமங்கலிப் பெண்கள் பெறுவது மகப்பேற்றுப் பலன். எல்லாச் சுமங்கலிப் பெண்களும் பெறுவது மாங்கல்யப் பலன். மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி, மன அமைதி,

அனைத்திலும் மன நிறைவு.
ஆகவே நவராத்திரியை எல்லாப் பெண்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். புரட்டாசி மாத வளர்பிறையில் வரும் தசமியே விஜயதசமி ஆகும். துர்க்கை, எருமைத் தலையைக் கொண்ட மகிஷாசூரனோடு ஒன்பது இரவுகள் போரிட்டாள். இந்த இரவுகளே நவராத்திரி என்ற பெயரைப் பெற்றன. மகிஷாசூரனை கொன்ற பத்தாம் நாள்தான் விஜய தசமி. விஜய என்றால் வெற்றி, தசமி என்றால் பத்தாம் நாள் என்று அர்த்தம். ஆணவம் அடியோடு அழிக்கப்பட்ட, அழிந்த நாள். அறியாமையை அறிவு வென்ற நாளைக் குறிக்கிறது. விஜயதசமி. பல குழந்தைகளின் பள்ளிக் கல்வி விஜய தசமி அன்று தான் ஆரம்பமாகிறது. இன்று துவங்குகின்ற அனைத்து நற்காரியங்களுக்கும் வெற்றி நிச்சயம் உண்டு. வீட்டுப் பூஜையறை ஒரு கோயில் என்றால், நவராத்திரி வழிபாட்டை அதன் பிரம்மோற்சவம் என்று உறுதியாகக் கூற முடியும். தசரா என்றால் பத்து இரவுகள் என்று அர்த்தம்.
கர்நாடகா மாநிலத்தில் தசரா மிக முக்கியமான பண்டிகையாகும். சாமுண்டி மலையிலுள்ள துர்க்கையான சாமுண்டீஸ்வரிக்குப் பெருவிழா எடுத்துக் கொண்டாடுகிறார்கள். சாமுண்டீஸ்வரி மைசூரின் காவல் தெய்வம். மைசூர் மன்னர், ஆட்சியில் இருந்த போது மன்னரே முன்னின்று தசரா பண்டிகையை கொண்டாடினார். பத்தாம் நாளன்று யானை மேல் வீதியுலா வருவார். பழைய பெருமைகளும், சிறப்புகளும் கொஞ்சங்கூட குறையாமல் தசரா பண்டிகை இப்போதும் உயர்வாகவும், பல சிறப்புகளுடனும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
வங்காளத்தில் துர்க்கையை முதன்மைத் தெய்வமாகப் போற்றி துர்க்கா பூஜை என்ற பெயரோடு நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். தமிழர்களுக்கு பொங்கல் பண்டிகையைப் போல், வங்காளிகளுக்குத் துர்க்கா பூஜை மிக மிக முக்கியமானது. துர்க்கையின் வடிவங்களைப் பல அளவுகளில் செய்து முக்கியமான இடங்களில் வைக்கின்றனர். சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும், இந்துக்களும் இந்துக்கள் இல்லாதவர்களும் துர்க்கா பூஜையில் ஆர்வத்துடனும், பக்தியுடனும் பங்கேற்கின்றனர். பத்து நாட்களும் வழிபடுகின்றனர். வழிபாடுகள் அனைத்தும் நிறைவேறிய பின் துர்க்கையின் வடிவங்களை கடல், ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் கரைக்கின்றனர். வங்காளத்தில் ஒரு கன்னிப் பெண்ணுக்குத் துர்க்கையின் வேஷத்தைப் போட்டு தேவியின் அம்சமாகவே வழிபடுகின்றனர்.

நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகள் வருமாறு:-

நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகள் வருமாறு:-

1. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.

2. தமிழ்நாட்டில் நவராத்திரி விழா, நாயக்கர் காலம் முதல் மக்கள் கொண்டாடும் 9 நாள் திருவிழாவாக மாறியது.

3. நவராத்திரி காலத்தில்தான் மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை விஜய நகர மன்னர்கள் ஏற்படுத்தினார்கள்.

4. நவராத்திரி விழாவை பெரிய அசுரர்கள் மட்டுமே கொண்டாட உரிமை இருந்தது. ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு முதன் முதலாக நவராத்திரி கொண்டாடும் உரிமையை திருமலை நாயக்கர் வழங்கினார். இதுவே தமிழகத்தில் நவராத்திரி விழா பரவ வழி வகுத்தது.

5. நவராத்திரி விழா பற்றி தேவி புராணத்தில் மிக விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

6. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.

7. விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

8. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

9. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

10. ஈசனம், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.

11. நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.

12. பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி, போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.

13. பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

14. அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.

15. எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலு வைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும்.



16. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.

17. ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள்.

18. நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.

19. புரட்டாசி மாதத்தை எமனின் கோரை பல் என்று அக்னி புராணம் சொல்கிறது. இந்த மாதம் எமனின் பாதிப்பில் இருந்து தப்பவே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.

20. நவராத்திரி பூஜைகள் அனைத்தையும் செய்து சுகன்யா தேவி என்பவள் எல்லா வித பலன்களையும் பெற்றாள்.

21. விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.

22. நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.

23. நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

24. நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.

25. நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.

26. ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.

27. தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.

28. தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.

29. தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.

30. தென்னகத்தில் இருந்துதான் நவராத்திரிக்குரிய மகிஷாசுரமர்த்தினியின் கதை வங்க நாடு சென்றது.

31. அந்த காலத்தில் நாடு சீரும் சிறப்பும் அடையவும், செங்கோல் நடக்கவும், செல்வம் கொழிக்கவும் நவராத்திரி விழாவை மக்கள் கொண்டாடினார்கள்.

32. நவராத்திரி ஒன்பது நாட்களிலும் நாராயணசுக்தம், புருஷசுக்தம், சகஸ்ரநாமம், சுதர்சனமந்திரம், கருடமந்திரம் முதலியவை ஜபரூபமாக முழங்கும்.

33. கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.

34. நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.

35. சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.

36. நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.

37. ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.



38. நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.

39. அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.

40. குழந்தைகள் பொம்மைகளைப் பார்த்துக் கதை கேட்டால் பொறுமையாக சொல்ல முதலில் நீங்கள் அதை அறிந்து வைத்திருங்கள்! குழந்தைகளின் அறிவையும், பக்தியையும், திறமையையும் கொலு வளர்க்கும்.

41. கொலு வைப்பதால் பெண்களின் மன இறுக்கம் தளர்ந்து லேசாகிறது.

42. டெல்லியிலும், காசிக்கு அருகிலுள்ள ராம் நகர் உத்தரபிரதேசம் போன்ற இடங்களிலும் ‘ராம்லீலாÕ நடத்த பெரிய, தனியான திடல்களே உள்ளன. ஸ்ரீராமனது காவியத்தை பத்து அல்லது முப்பது நாட்கள் நாடகமாக நடிக்கின்றனர்.

43. சிறு துளசிக்கன்றை களிமண்ணோடு கொண்டு வந்து கொலுவில் வைத்து தீபாராதனை காட்டுவது ஆனந்தத்தை அதிகப்படுத்தும்.

44. நவராத்திரி கடைசி நாளன்று துர்க்கை இமயமலைக்கு திரும்பிச் செல்வதாக ஐதீகம் இருப்பதால் வட மாநிலங்களில் துர்க்கை சிலைகளை கங்கையில் போட்டு விடுவார்கள்.

45. நவராத்திரி பூஜையின் போது எருமை மாடுகளை பலி கொடுக்கும் வழக்கம் மேற்கு வங்கத்தில் இருந்தது. தற்போது அந்த பழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.

46. நவராத்திரி விரதம் இருப் பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.

47. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.

48. வடநாட்டில் ஒரு பிரிவினர் நவராத்திரி 9 நாட்களும் உணவு சாப்பிடாமல் விரதம் இருப்பதுண்டு.

49. தமிழ்நாட்டில் நவராத்திரி கொலு வைக்கப்படுவது போல ஜப்பானிலும் பொம்மை கொலு வைக்கிறார்கள். நம்மூர் சரசுவதி போல அங்கு பெண்-டென் என்ற தேவதையை வணங்குகிறார்கள். அந்த தேவதையும் சரசுவதி வைத்திருப்பது போல கையில் புத்தகம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

50. சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் நவராத்திரி விழா ஒரு வீர விழாவாகக் கொண்டாடப்பட்டது.

51. அக்பர் காலத்தில் தசரா திருவிழா கோலாகல நிலைக்கு மாறியது.

52. காளியை மேற்கு வங்க மக்கள் மிகவும் ஆத்மார்த்தமாக வழிபடுவதால் அம்மாநில மக்கள் சக்தி வணக்கக்காரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

53. குஜராத்தில் நவராத்திரி 9 நாட்களும் பெண்கள் கும்மியடித்து நடனமாடுவார்கள். இந்த நடனத்துக்கு கரவோ என்று பெயர்.

54. நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.

55. நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.

56. நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

57. கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

58. நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது.

59. முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.

60. நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.



61. நவராத்திரி 5-ம் நாள் லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.

62. நம்மூரில் முளைப்பாரி வைப்பது போல மராட்டி யத்தில் நவராத்திரி முதல் நாளன்று நவதானி யங்களை மண் கலசங்கில் வளர்ப்பார்கள். விஜயத சமியன்று அவற்றை ஊர் வலமாக எடுத்து சென்று ஆறுகளில் கரைத்து விடுவார்கள்.

63. உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி 9 நாட்களும் சேலை கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

64. நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

65. நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா? கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.

66. நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.

67. தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் முப்பெரும் தேவியர் இணைந்த அர்த்த நாரீஸ்வர துர்க்கை உள்ளது. 3 தலை, 8 கைகளுடன் இந்த துர்க்கை காணப்படு கிறார்.

68. கும்பகோணம் அருகில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் விஷ்ணு துர்க்கை எனப்படும் அஷ்ட புக துர்க்கா தேவி அருள்புரிகிறாள். 8 கரங்களுடன் உள்ள இந்த துர்க்கையின் ஒரு கையில் கிளி இருப்பது தனிச் சிறப்பாகும்.

69. நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.

70. சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

71. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.

72. ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்திலிருந்து நாகங்களை மானசாதேவி காப்பாற்றியதால் அவள் நாகேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். இவள் குருவான ஈஸ்வரரிடமிருந்து சித்தயோகத்தை கற்றதால் சித்தயோகினி என்ற நாமத்தைப் பெற்றாள். இவளது கணவர் ஜரத்காரு. நவராத்திரி காலத்தில் இவள் கதை பகுதியைச் சொல்லி அர்ச்சிப்பதால் ராகு, கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்குகிறது.

73. கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.

74. தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

75. எல்லாவற்றிற்கும் மேலானது சண்டிஹோமம். சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றிய வடிவம். முப்பெரும் தேவியரையும் ஒன்றாக இணைத்து வழிபடுவதே இந்த ஹோமத்தின் சிறப்பு. விஜயதசமி நாளில் இதைச் செய்வதால் மிக நல்ல பலன்கள் பெறலாம்.. நன்றி மாலை மலர்.

விஜயதசமி ஆயுதபூஜை என்ற பெயர் காரணம்



விஜயதசமி ஆயுதபூஜை என்ற பெயர் காரணம்

பாண்டவர்கள் வன்னிமரத்தில் தங்களுடைய ஆயுதத்தை மறைத்து வைத்துவிட்டு விராட நகரத்தில் அஞ்ஞான வாசம் செய்தார்கள்.
 இதை அறிந்த துரியோதனன் எப்படியாவது பாண்டவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் விராட நகரத்தில் இருந்த பசுமாட்டை எல்லாம் சிறைபிடித்தான்.

அவனின் நோக்கம், வீண் சண்டை இழுத்து பாண்டவர்களை வெளிகொண்டு வர வேண்டும் என்பதுதான். அமைதியாக இருந்தாலும் அதை பொருக்காத சிலர் வீண் சண்டைக்கு இழுப்பதுதானே சிலரின் குணம். இதை யாராலும் மாற்ற முடியாது அல்லவா. அதுபோல் துரியோதனனும் பாண்டவர்களை போருக்கு அழைத்தான்.

இதனால் கோபம் கொண்ட விஜயனான அர்ஜுனன், விராடன் மகன் உத்தரனை முன்னிறுத்தி கொண்டு வன்னிமர பொந்தில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து கௌரவப்படையை வென்றார்.

 தசமி அன்று வென்றதால் ஊர்மக்கள், “நம் விஜயன், தசமி அன்று கௌரவப்படையை வீழ்த்தினார். இனி பாண்டவர்களுக்கு வெற்றிதான்” என்று பேச ஆரம்பித்தார்கள்.

 அன்றிலிருந்து“விஜயதசமி” என்ற பெயர் ஏற்பட்டது. மகாநவமி அன்று ஆயுதங்களுக்கு பூஜை செய்ததால் “ஆயுதபூஜை” என்ற பெயரும் ஏற்பட்டது.

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

அனுமனுக்கு வடை மாலை ஏன்….?



அனுமனுக்கு வடை மாலை ஏன்….? பரமாச்சாரியாரின் விளக்கம்:

ஒரு முறை வட நாட்டில் இருந்து அன்பர் ஒருவர் மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்திருந்தார்... பரமாச்சாரியாவை தரிசனம் செய்யும்போது அந்த நபர் சற்றே நெளிந்தவாறு நின்றார்... அவரின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்ட பெரியவா...   “என்ன சந்தேகம். கேளுங்கோ” என்றார்.

அந்த வட நாட்டு அன்பர் தட்டுத்தடுமாறியவாறு பேசலானார்.... “ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்…”

“வாயுபுத்திரனைப் பத்தியா… கேளேன்…” என்றார் ஸ்வாமிகள்.

“ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். எல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள். ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம்….”

மெளனமாக இருந்தார் மஹா பெரியவா. அந்த அன்பரே தொடர்ந்தார்:... “அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள். ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது ?”

பதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார் வட நாட்டில் இருந்து வந்த அன்பர். தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது.
கேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல… பெரியவா சொல்லப் போகும் பதிலுக்காக அன்று அங்கு கூடி இருந்த அனைவருமே ஆவலுடன் இருந்தனர்.


ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார்.  “பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து, ‘அதோ பார் நிலா…’ என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள். அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும் . சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும். உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும்.

சாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது. அதுவும் எப்படி ? பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.

அனுமன் குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் ‘ஜிவுஜிவு’ என்று தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது. மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன். வாயுபுத்திரன் அல்லவா ? அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார்.  ஒரு சிறிய குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.

அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார். இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.

இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது.

இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன்.
வடையாகட்டும்… ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான். தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள். இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே, உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து, அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு.

வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது. தவிர, வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள். அதுவும், அவர்களுக்குக் காலை நேரத்திலேயே — அதாவது பிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள் இனிப்பு விரும்பிகள். எனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு சாரதி வழிபடுகிறார்கள்.

எது எப்படியோ… அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன. அது உப்பாக இருந்தால் என்ன… சர்க்கரையாக இருந்தால் என்ன.. மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” என்று சொல்லி விட்டு, சிரித்தார் மஹா பெரியவா.

பெரியவாளின் விளக்கமான இந்த பதிலைக் கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல. அன்று அவரை தரிசிக்க வந்திருந்த. அநேக பக்தர்களும் அனுமனுக்கு அணிவிக்கப்படும் வடை மாலைப் பற்றிய பெரியவாளின் விளக்கத்தால் நெகிழ்ந்து போனார்கள்….

திங்கள், 25 செப்டம்பர், 2017

அறிவோம் தெளிவோம்



அறிவோம் தெளிவோம்.

1 .ஓடும் தண்ணீரை தீய சக்தியால் தாண்ட முடியாது,

2 .நம் சிறுநீரகத்தால் போட்ட கோட்டை நம்மை தாக்க வரும் தீயசக்தி தாண்ட முடியாது.

3 . கமண்டலத்தில் உறுஏற்றி வைத்துள்ள மந்திர தண்ணீரை சிறிது வலது கை உள்ளங்கையில் ஊற்றி நமக்கு சித்தியான மந்திரத்தை மனதிற்குள் மனம் ஒன்றி கூறி நம் முன் தெளித்தால் தீயசக்தி விலகிவிடும

4 . அக்னி வளர்த்து நம் தேவதையை நினைவுகூர்ந்தாலும் தீயசக்தி விலகி ஓடிவிடும்.

5 .இருபக்கமும் மூச்சு காற்றை நன்கு இழுத்து வேகமாக வெளியேற்றினால் தீயசக்தி ஓடிவிடும்,

6 .வலது காலை அழுத்தமாக பூமியில் உதைத்தாலும் தீயசக்தி விலகிவிடும்.

7 .வலதுகால் இடதுகால் பெருவிரலை பூமியில் அழுத்தி நின்றாலும் தீயசக்தி விலகிவிடும்.

8 . வலதுகை மணிகட்டில் ஒரு கயிரினை இருக்க மந்திரம் ஓதி கட்டினாலும் தீயசக்தி விலகிவிடும்.

9 .பாதிக்கப்பட்டவர் முகத்தில் மந்திரம் ஓதிய நீரை தெளித்தாலும்,

10 .வேப்பிலை இலையை கையில் வைத்திருந்தாலும்,

11 .மயில் இறகை கையில் வைத்திருந்தாலும்,

12 .எதாவது ஒரு உலோகத்தை கையில் வைத்திருந்தாலும்ம தீயசக்தி அணுகாது. தீயது இருந்தாலும் விலகிவிடும்.

13 .எலுமிச்சை கனியை கையில் வைத்திருந்தாலும் அல்லது தலையில் வைத்து சிறிதுநேரம் பொருத்து அதை காலால் நசுக்கி வீசிவிட்டு காலை கழுவிக்கொண்டாலும் தீயசக்தி விலகிவிடும்.

14 .உப்பு தண்ணீரில் நின்றாலும், மஞ்சள் கலந்த தண்ணீரில் நின்றாலும் தீயசக்தி விலகிவிடும், அண்டாது.

15 .துளசி செடி இருக்கும் அருகில் தீயசக்தி அறவே வராது. (அதனால் தான் காட்டில் குடில் அமைத்து வாழ்ந்த தவசிகள் துளசி செடியை வளர்த்து வழிபட்டனர்.)

16 .ஐவகை எண்ணெய் சேர்த்து எரியவிடும் தீபத்தின் அருகில் தீயசக்தி விலகிவிடும்.

17 .நாய் உடன் இருந்தாலும் தீயசக்தி அண்டாது.

18 .பசுவின் சாணம் பட்ட இடத்திலும் தீயசக்தி அண்டாது, பசுவின் ஜலம் பட்ட இடத்திலும் தீயசக்தி விலகிவிடும்.

19 .நமக்கு மிக நம்பிக்கையான தெய்வத்தை நினைத்து செப்பு தகட்டில் ஒரு சூலம் வரைந்து உடலில் எங்காவது தாயத்து இட்டு அணிந்து கொண்டாலும் தீயசக்தி அண்டாது விலகிவிடும்,

20 .பௌர்ணமி இரவு முழுக்க தூங்காமல் இருந்து அரசமரத்தை வலம் வந்தால் விரும்பியதை அடையலாம். தீயசக்தியும் விலகிவிடும்.

21 .அமாவாசை இரவில் அகண்ட தீபம் ஏற்றி அதன் அருகில் தூங்காமல் தீபத்தையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாலும் விருப்பம் நிறைவேற வழிபிறக்கும் தீயசக்தியும் விலகிவிடும்.

22 .மிருதங்கம், உடுக்கை, சங்கு போன்ற இசையை உற்று நோக்கினாலும் தீயசக்தி அண்டாது விலக வழிகிடைக்கும்.

23 .இடதுகால் மணிக்கட்டில் கருப்பு கயிறில் மந்திரம் ஓதி மூன்று முடிச்சிட்டு கட்டிக்கொண்டாலும் தீயசக்தி விலகிவிடும

24 .கல்யாண பூசணியோ அல்லது எலுமிச்சை கனியையோ கத்தியால் சரிபாதியாக வெட்டி குங்குமம் தடவி அமரும் இருபக்கமும் வைத்தாலும் அல்லது வீட்டின் தலைவாயிற்படி இருபக்கமும் வைத்தாலும் தீயசக்தி விலகிவிடும்.

25 .நம் கையால் பெரிய அளவு உள்ள தேங்காயை நன்கு சிதறும்படி உடைத்தாலும் தீய சக்தி விலகிவிடும்.

26 .நெய், வெண்ணெய், பால் உணவு சாப்பிட்டு அது செரிக்கும் வரை தீய சக்தி அண்டாது. நெய்தீபம் எரியும் இடத்திலும் தீயசக்தி விலகி நிற்கும்.

27 .சுத்த சந்தனம் நெற்றியில் வைத்துக்கொண்டாலும் தீயசக்தி அண்டாது விலகிவிடும்.

28 .வாசியை உயர்த்தும் பயிற்சி கொண்டவர்களுக்கும், வெளி இடங்களில் தூங்காதவருக்கும், நெற்றிக்கண்ணை கூர்ந்து கவனிப்பவருக்கும், மந்திரம் செபிப்பவருக்கும், சித்தனை அறிவு உள்ளவருக்கும் தீயசக்தி அண்டாது.

நண்பர்களே இங்கொரு விஷயத்தை கவனத்தில் வைக்கவும். திருஷ்டி மற்றும் திட்டமிட்டு செய்யும் சூன்யம் வைப்பு போன்றவை எவரையும் தாக்கிவிடும். தீய எண்ணத்தாக்கம் கொண்ட உணவை உண்டாலும் உணவு விஷமாகிவிடும். அதனால்தான் விரோதி வீட்டில் கை நனைக்காதே என்பார்கள். எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் தகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். மந்திர உபாசனை செய்பவராகட்டும் சாமான்யராகட்டும் வெளியில் செல்லும்போது காலணி அணிந்து செல்லுங்கள். கால்அடிகளை பதிப்பதனால் அது ஆலயத்தின் உள்ளே மற்றும் விருட்சத்தின் அடியில் இருக்கலாம். கண்ட இடங்களில் கால் அடியை பதித்தால் அதன்மூலம் மண்ணெடுத்து சூன்யம் செய்ய மற்றவருக்கு வாய்ப்புள்ளது.
தலைமுடியை கண்ட இடங்களில் போடவேண்டாம். முடிவெட்டும்போது முடி விழத்தான் செய்யும். ஆனால் அங்கு வேறொருவரின் முடியுடன் நம் முடி கலந்துவிட்டால் சூன்யம் வேளை செய்யாது. உங்கள் அழுக்கு துணியை பத்திரமாக வைத்து துவைத்து விடவும். விரோதி கையில் சிக்கும்படி வைக்காதீர்கள். உங்கள் அழுக்கு துணி மற்றவர் வியர்வையில்பட்டால் கூட நீங்கள் வசியமாகிவிடுவீர்கள் கவனம். வெளியில் சாப்பிடாதீர்கள். வாராவாரம் திருஷ்டி சுற்றிப் போட்டுக்கொள்ளுங்கள், தெய்வ பிராத்தனையை எப்பொழுதும் கைவிடாதீர்கள். இவைகளையெல்லாம் கடைபிடித்தும் மேற்படி உங்களிடம் தீயசக்தி உள்ளதாக உணர்ந்தால் மந்திர சித்தியான மாந்திரீகரிடம் சென்று நிவாரணம் பெறலாம்.

உடற்கட்டு மந்திரம் போட்டுக்கொண்டவரை எந்த தீயசக்தியும், திருஷ்டியும், வைப்பும் அணுகாது. உணவு மூலம் விஷயம் ஏறினால்தான் உண்டு. எனவே உடற்கட்டு காபந்து உள்ளவராயினும், உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள். சூரியசக்தியை உடலில் பெருக்கிக் கொள்கிறவர்களுக்கு திருஷ்டி சூன்யம் அண்டாது. யார் தொடுத்தாரோ அவரையே திருப்பி தாக்கிவிடும். அதனால்தான் சூரியன் அம்சமான சிம்மராசி லக்கணம் மற்றும் சூரிய நட்சத்திரக்காரர்களை எவர் ஒருவர் திருஷ்டி சூன்யம் வைப்பு செய்தாலும் வைத்தவரையே திருப்பி தாக்கிவிடும் என்பர் இது முற்றிலும் உண்மையே.

பிரம்ம ரிஷிகளான துர்வாசர், விசுவாமித்திரர், வசிஸ்டர் போன்ற ரிஷிகளின் ஆசியால் அரிய சக்தி கொண்டவர்களை தாக்குபவர்கள் அவர்களையே பன்மடங்கு தாக்கிக் கொண்டதற்கு சமமான கெடுபலன் விளையும் என ஆசி வழங்கியுள்ளதால் சூரியசக்திக்கு எதிர்சக்தி இல்லாமல் போனது. (சூரிய சக்திகாரர்கள் தன் வினையில் மட்டுமே தன்னை அழித்துக்கொள்ள முடியும்.) எனவே நண்பர்களே சூரிய வழிபாட்டின் மூலம்(சூரிய நமஸ்காரம்) சூரியசக்தியை பெருக்கிக் கொள்ளுங்கள்.
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடியுங்கள். எல்லாம் நலமாய் அமையும். தீயசக்திகளை பிறருக்கு விரட்ட செப்பு தகட்டில் கோரப்பல் தெய்வங்களின் மந்திரத்தை மனதால் தியானித்து ஒரு முக்கோணம் கீறி முக்கோண மூன்று முனைகளிலும் சூலம் கீறி முக்கோண மத்தியில் தெய்வத்தை நினைத்து ஓம் என்று எழுதி அதை தாயத்தில் அடைத்து பாதிக்கப்பட்டவரை கட்டிக்கொள்ள சொன்னாலே போதும் தீயசக்தி விலகிவிடும்.

குலசேகரன்பட்டணம் அருள் தரும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா




குலசேகரன்பட்டணம் அருள் தரும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 

                          ஒவ்வொரு ஆண்டும் குலசேகரன்பட்டணம் அருள் தரும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தொடங்கும் முன் விழா ஆயத்த பணிகளுக்காக ஆலோசனை கூட்டம் கோவில் நிர்வாகம்  ,மாவட்ட நிர்வாகம் சார்பிலும் நடத்தப்படும் . ஆனால் ஆண்டுதோறும் பெயரளவில் மட்டுமே ஆலோசனை கூட்டத்தை நடத்தி விட்டு அதில் எடுக்கப்படும் ,பேசப்படும் முடிவுகளை நடைமுறை படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை என்பது தான் எதார்த்த உண்மை .

                       இந்த ஆண்டும் அதே போல பல்வேறு விசயங்கள் ஆலோசனை கூட்டத்தில் வாய் கிழிய பேசினாலும் கோவில் நிர்வாகம் சார்பில் இன்றைய தேதி வரை குடிநீர் , சாலை வசதி , கழிவறை ,பெண்கள் உடைமாற்றும் அறை , கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்பாடு ,சுகாதார வசதி போன்றவைகளில் ஒரு பணிகள் கூட உருப்படியாக நடக்க வில்லை . பல லட்சகணக்கான பக்தர்கள் வரும் திருவிழாவில் அவர்களுக்கு குடிநீர் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தற்காலிக பைப்புகள் அமைத்து உள்ளனர் ,அதிலும் இப்போதைய நிமிடம் வரை ஒரு சொட்டு குடிநீர் வந்த பாடுஇல்லை .கோவில் நிர்வாகம் சார்பில் நிரந்தர கழிவறைகள் ஏதும் அமைக்காமல் தற்காலிக கழிவறை அமைக்கிறேன் என்னும் பெயரில் ஒவ்வொரு வருடமும் பல லட்சகணக்கான ரூபாய்களை கொள்ளை அடிக்கும் வேலை மட்டும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இந்த தற்காலிக கழிவறையில் பயன்படுத்தப்படும் இரும்பு தகடுகள் ஆகம விதிகளை மீறி கடற்கரை சிவன்கோவிலில் அடுக்கி வைத்து இருப்பதை நம்மால் சகித்து கொள்ள முடிய வில்லை .

அதே போல சாலை வசதி , போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஒரு வழி பாதையாக மாற்ற பட்டுள்ள குலசை –கொட்டன்காடு சாலை , உடன்குடி புதுமனை –குலசை சாலை, குலசை தருவை குளம் அருகில் உள்ள இணைப்பு சாலை போன்றவை மிகவும் மோசமாக உள்ளன .ஆண்டு தோறும் நெடுஞ்சாலை அதிகாரிகள் சரி செய்து விடுவதாக சொன்னாலும் வேலை ஒன்றும் நடக்காது உள்ளது , ஏற்கனவே போக்குவரத்து பிரச்சனை காரணமாக ஏற்பட்ட ஒரு விபத்தில் 3 பேர் இறந்தது குறிப்பிட தக்கது  . இதே நிலை தொடர்வதால்  இந்த ஆண்டு தசரா திருவிழாவில் கண்டிப்பாக போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் அவதிப்பட போவது உறுதி .

                  அடுத்ததாக கடற்கரையில் குளிக்கும் பெண்கள் நிலைமை மிக மோசம் , பெண்கள் ஆடை மாற்றும் அறை உடைந்து கிடப்பதால் நாணி ,குறுகி நம் சகோதரிகள் திறந்த வெளியில் ஆடை மாற்றி கொண்டு உள்ளனர் . இத்தனைக்கும் பக்தர்கள் காணிக்கை பல கோடி ருபாய் கோவில் வருமானம் வங்கியில் உள்ளது , அதை முறையாக செயல்படுத்தி பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்யாமல் கோவில் நிர்வாகம் கள்ள மௌனம் சாதித்து வருகிறது .

10 ம் திருவிழாவான சூரசம்கார விழாவில் பல லட்சம் பக்தர்கள் வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது , பல வாகனங்கள் ,நகைகள் திருடப்படுகின்றன ,இதனை சமாளிக்க காவல்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் கண்காணிப்பு காமெரா எத்தனை பொருத்தி உள்ளனர் என்பதும் , ஒரு வழி பாதை வசதியை செயல்படுத்த எந்த மாதிரி முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது ,குறிப்பாக குலசை பேரூராட்சி அலுவலகம் முன் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்கவும் தசரா குழுக்கள் சங்கிலி போல கைகளை கோர்த்து கொண்டு வருவதால் பொதுமக்கள் –தசரா குழுக்கள் இடையே வரும் சச்சரவுகளை சமாளிக்க தற்காலிக பால நடை மேடை ஒன்று அமைக்க கோரி இருந்த கோரிக்கையும் அப்படியே கிடப்பில் உள்ளது .


                        கோவிலின் அருகில் உள்ள கடற்கரை செல்லும் பாதையில் உள்ள சாக்கடை குளத்தை சுற்றிக்காட்டி நான் பல முறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்ததும் நடவடிக்கை எடுக்காததால் அந்த பகுதியில் செல்வோர் முக்கை பிடித்து கொண்டு பன்றிகளின் வரவேற்பில் செல்லும்  அவல நிலை இன்னும் தொடர்கிறது .குத்தாட்டம் போட்ட குழுக்களை கட்டுபடுத்த ஆபாச நடனம் ஆடக் கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பு சொன்னாலும் ஆபாச ஆட்டத்தை நடத்த முயற்சிக்கும்  ஒரு சிலரை காவல்துறை எப்படி கட்டுப்படுத்துவது என குழம்பி போய் இருப்பதும் நம் கண்களுக்கு நன்கு புலப்படுகிறது .

இவை அனைத்துக்கும் மேலாக சிகரம் வைத்தார் போன்று சுமார் பதினைந்து லட்சம் மக்கள் கலந்து கொள்ளும் திருவிழா குறித்து இந்த நாள் வரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு செய்ய வில்லை .  வழமை போல  எந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் , அரசின் உயர் அதிகாரிகளும் , அமைச்சர் பெருமக்களும் தசரா சூரசம்கார விழாவில் பங்கேற்பது கிடையாது , அப்படி பங்கேற்கும் பட்சத்தில் தான் அம்மன் அருளை நாடி குடும்பம் ,குழந்தைகளுடன் விழாவில் பங்கேற்கும் பக்தனின் உண்மையான அல்லல் நிலை புரிபடும் . அகங் கொண்ட அசுரனை அழித்த முத்தாரம்மன் இனி சினம் கொண்டு இந்த அதிகாரிகளின் மீது பாய்ந்தால்  தான் இவர்கள்  திருந்துவார்கள் .பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பார்கள் .

அம்பிகையில் உருவான சப்த கன்னியர்கள்



அம்பிகையில் உருவான சப்த கன்னியர்கள்

சப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.

கி.பி 510 ஆம் ஆண்டில் சப்தகன்னியர்கள் வழிபாடு சிறப்புற்று இருந்ததாக கல்வெட்டுக்களிலும், இலக்கியங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. சப்தகன்னியர்கள் எழு தாய்மார்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

சப்தகன்னியர்கள் பிறந்த கதை
அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள்.

அவர்கள்
 ப்ராம்மி,
மகேஸ்வரி,
கவுமாரி,
வைஷ்ணவி,
வராஹி,
இந்திராணி,
சாமுண்டி
முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

நம் உடலோடு தொடர்பு கொண்டுள்ளவர்கள்
சப்தமாதர்களுக்கும் நம் உடலுக்கும் தொடர்பு உள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

அவை : பிராம்மி தோலுக்கு தலைவி. மகேஸ்வரி நிணத்திற்கு தலைவி. கவுமாரி ரத்தத்திற்கு தலைவி. நாராயணி சீழிற்குத் தேவதை. வாராஹி எலும்பின் தெய்வம். இந்திராணி சதையின் தேவதை. சாமுண்டி நரம்பின் தலைவி.

ப்ராம்மி

அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள்.

நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள்.
மான் தோல் அணிந்திருப்பவள்.

ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும். (அசைவம் தவிர்க்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.) ஐ.ஏ.எஸ்., வங்கிப்பணி, அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்
  வாராஹி

அம்பிகையின் பிருஷ்டம் பகுதியிலிருந்து உருவானவள் வராஹி. நமது பிருஷ்டம் பகுதி கழிவுகளை வெளியேற்றுவதும்,உடம்பைத் தாங்குவதும்,ஓய்வு தருவதும் ஆகும். இதன் சக்தியாக பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள்.

இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.

அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள்.

 மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள்.
கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.

மகேஸ்வரி

அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள்.

தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள்.
இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும். அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள்.

இந்திராணி:

அம்பிகையின் பிறப்புறுப்பிலிருந்து தோன்றியவள் இந்திராணி. இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள்.

யானை இவளது வாகனம். சொத்து சுகம் தருபவர். உலகத்தின் சகல உயிர்களும் தோன்ற பெண் பிறப்புறுப்புதான் காரணமாக இருக்கிறது.
தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும்,

மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!.
மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.

இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்.

கௌமாரி

கவுமாரி. கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும், உமையாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி.

இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. கடலின் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள். இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்

வைஷ்ணவி

அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாக கொண்டவள்.

வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.

சாமுண்டி

ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள்.

இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.
பதினாறு கைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள்.

 சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே! சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!

இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள். இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது,

 இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.
படைப்பு ரகசியம்
சப்த கன்னிகைகளின் சூட்சும படைப்பு ரகசியம் என்னவெனில்,பெண்ணின் சக்தியிலிருந்து பெண்மையாக உருவெடுத்தவர்கள்.

கன்னிகையாக இருப்பதற்குக் காரணம் மேலோட்டமாக மட்டுமே விளக்க முடியும். சப்த கன்னிகையின் ஸ்தானத்தை உணர விரும்புபவர்கள் தொடர்ச்சியாக ஐந்து வருடங்களுக்கு தினமும் இந்த சப்த கன்னிகைகளின் காயத்ரி மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபித்துவந்தால் உணரலாம்.

மனதால் நினைத்தாலே அபயம் கிட்டும்
கன்னித்தன்மை (விர்ஜின்) என்பது உயிர்களை உருவாக்கி அளிக்கும் நிலைக்கு முந்தைய பவித்ரமான நிலை. கன்னித்தன்மை என்றால் மிகவும் தூய்மையான என்றும் ஒரு அர்த்தம் உண்டு.

கன்னித்தன்மையை தாய்மைக்கு இட்டுச்செல்லலாம். அதற்கு அனுமதி ஒவ்வொரு ஜீவனுக்கும் உண்டு. ஆனால்,கன்னித்தன்மையை களங்கப்படுத்தக் கூடாது.

(அப்படி களங்கப்படுத்தினால் களங்கப்படுத்துபவனுக்கு மேற்கூறிய சப்தகன்னிகைகளின் வரங்களில் ஏதாவது ஒன்று மட்டுமாவதை இழந்தே ஆக வேண்டும் என்பது சாபம்) இவர்களின் அவதார நோக்கமும் தங்களுடைய முழுமையான சக்தியோடு விளங்கிடுதல் மற்றும் ஆண்மைசக்தி எனப்படும் சிவமூலத்தை துணையாகக் கொள்ளாததும் இவர்களின் சிறப்பாகும்.
சப்தகன்னியர்கள் பெண்களுக்கு மட்டுமல்ல;ஆண்களுக்கும் ஒரு பலமே!
சப்த கன்னியரை, அன்புடன் மனதால் நினைத்தாலே போதும். நம் அன்னையாக, உயிர் தரும் தோழியராக, அன்பும், அபயமும், அருளும் அற்புத தேவியர்.

ஆயிரம் யானைகளை அடக்குபவனை விட, தன் மனதை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன்.

நவராத்திரி கொலு பொம்மையின் தத்துவம்!



நவராத்திரி கொலு பொம்மையின் தத்துவம்!

ஒரு காலத்தில் தன் எதிரிகளை அழிப்பதற்காக மகாராஜா சுரதா, தன் குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்டார்.

குரு கூறியபடி தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினான்.

அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, பின் ஒரு புதுயுகத்தையே உண்டு பண்ணினான்.

“ஐம்பூதத்தில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால்,
நான் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்."
என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளபடி, சுரதா மகாராஜா செயல்பட்டதால், அவன் பகைவர்களை எளிதில் வீழ்த்தி, அவர்களின் இன்னல்களிலிருந்து விடுதலை பெற்றான்.

எனவே, அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரியில், குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாட்டின் முக்கிய அங்கம் பெறுகிறது.

மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.

ஒன்பது படிகள் அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.

1வது படி – ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்)

2வது படி – இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்)

3வது படி – மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)

4வது படி – நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்)

5வது படி – ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்)

6வது படி – ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்)

7வது படி – மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.

8வது படி – தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்.

9வது படி – பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுளர்.

இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும் போது கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம் செழித்தோங்கும்.

 *** கொலுபடி தத்துவம் ***

கொலுவில் கீழேயுள்ள மூன்று படிகளில் வைக்கப்படும் அரிசி, பருப்பு, பாத்திரம் போன்றவை, தாமச குணத்தைக் குறிக்கும்;

அடுத்த மூன்று படிகளில் வைக்கப்படும் அரசர், ராணி, மந்திரி போன்றவை, ரஜோ குணத்தைக் காட்டும்;

மற்ற மூன்று படிகளில் வைக்கப்படும் தெய்வ உருவங்கள் சத்வ குணத்தை அடையும் வழியை நமக்குக் காட்டுகின்றன.

 *** சரஸ்வதி வழிபாட்டின் பலன் ***

வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் சரஸ்வதி யாகத்தைக் காப்பவள். அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றை அளிப்பவள். இனிய வாழ்க்கையைக் கொடுப்பவள். யாகத்தின் இறுதியில் கூறப்படும், “சுவாகா’ என்ற பதம் சரஸ்வதியைக் குறிக்கும். வீடுகளில் சரஸ்வதியை வழிபட்டால் இன்பம் பெருகும்.

 *** நங்கையருக்கு நலம் தரும் நவராத்திரி ***

சக்தியை சித்திரை மாதத்தில் வழிபடுவது,
“வசந்த நவராத்திரி"

புரட்டாசி மாதத்தில் வழிபடுவது,
“பாத்ரபத நவராத்திரி"
அல்லது
“சாரதா நவராத்திரி."

சாரதா நவராத்திரியை கொண்டாடுவது எல்லாருக்கும் சிறப்பு தரும்.

நவராத்திரி வழிபாட்டால் கன்னிப் பெண்கள் திருமண பாக்கியம் பெறுவர். சுமங்கலி பெண்கள் பெறுவது மாங்கல்ய அனுகூலம். மூத்த சுமங்கலிப் பெண்கள் மகிழ்ச்சி, மன நிறைவு, திருப்தி பெறுவர்.

புரட்டாசி மாத வளர்பிறை பிரதமையில் தொடங்கி, விஜயதசமியில் முடிகிறது. பத்து நாட்கள் கொண்டாடப்படுவதால், “தசரா’ என்று அழைக்கின்றனர்.

நவதுர்க்கை:

வன துர்க்கை,
சூலினி துர்க்கை,
ஜாதவேதோ துர்க்கை,
ஜூவாலா துர்க்கை,
சாந்தி துர்க்கை,
சபரி துர்க்கை,
தீப துர்க்கை,
ஆகரி துர்க்கை,
லவண துர்க்கை.
இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

அஷ்டலட்சுமி:
ஆதிலட்சுமி,
மகாலட்சுமி,
தனலட்சுமி,
தானிய லட்சுமி,
சந்தானலட்சுமி,
வீரலட்சுமி,
விஜயலட்சுமி,
கஜலட்சுமி.
இவை லட்சுமியின் அம்சங்கம்.

அஷ்ட சரஸ்வதி:
வாகீஸ்வரி,
சித்ரேஸ்வரி,
துளஜா,
கீத்தீஸ்வரி,
அந்தரிட்ச சரஸ்வதி,
கட சரஸ்வதி,
நீல சரஸ்வதி,
கிளி சரஸ்வதி.
இவர்கள் சரஸ்வதியின் அம்சங்கள்.

உலகம் சக்தி மயமானது என்பதை விளக்குவதே நவராத்திரியின் உன்னத தத்துவம்.

அனைத்து உருவங்களிலும், எல்லா இடங்களிலும் தேவி வியாபித்து இருக்கிறாள் என்பதை குறிக்கும் விதமாகவே கொலு வைத்து வணங்குகிறோம்.

விரதம் இருக்கும் பக்தர்கள் (பெண்கள்) அன்னையை பல வேடங்கள் புனைந்து வழிபாடு செய்கின்றனர்.

நாம்விளக்கு ஏற்றும் தீபத்தில் உள்ள வகைகளும், அதன் மகத்துவம் !!!*



நாம்விளக்கு ஏற்றும் தீபத்தில் உள்ள வகைகளும், அதன் மகத்துவம் !!!*

*காமாட்சி விளக்கு*

விளக்குகளில் காமாட்சி விளக்கு புனிதமானது. இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன்  தீபம் ஏற்றி, தினமும் வழிபடத்தக்கது. பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப் பாதுகாத்து  வைத்துள்ளனர். சிலர் தம் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்குச் சுடர் தொடர்ந்து, நிலைத்து, எரியும்படி கவனித்துக் கொள்கின்றனர். புதுமனை புகும்  போதும், மணமக்கள் மணப்பந்தலை வலம் வரும்போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால் பக்தியுடன்  ஏந்திச் செல்லப்படும் விளக்கும் காமாட்சி அம்மன்திருவிளக்கே. புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்போது, 'நிறைநாழி'' எனப்படும் படியில் நெல் வைத்து அதன்  மீது காமாட்சி அம்மன் விளக்கு வைத்து அதில் தீபம் ஏற்றப்படும். பெண்ணுக்கு சீர் வரிசைகளை தரும்போது காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து  விளக்குகளும் அவசியம் வழங்கப்பட வேண்டும். விளக்குகள் தமிழர் வாழ்வில் ஓர் அங்கம். மங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று.



*குத்து விளக்கு*

குத்துவிளக்கும், காமாட்சியம்மன் விளக்கை போலப் புனிதமானது. செங்குத்தாக நிமிர்ந்து நேராக நிற்கும் விளக்கு (குத்து-நேர்) என்பதால் குத்துவிளக்கு என்ற  பெயர் ஏற்பட்டது. இந்த விளக்கு பூஜையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஐந்துமுகக் குத்துவிளக்குகள் இரண்டு பூஜை அறையில் சுடர் விட்டு பிரகாசிக்குமானால்  அங்கே மங்கலம் பொங்கும் என்பது ஐதீகம். ஓர் அங்குலம் முதல், பல அடிகள் உயரமுள்ள குத்து விளக்குகள், மிக அழகிய கலை நுட்பங்களுடன்  கிடைக்கின்றன. உச்சியில் அன்னம் வீற்றிருக்கும் குத்து விளக்குகளில் சில வழிபாட்டுக்குரியவையாகவும், சில அலங்காரத்திற்கு உரியவையாகவும்  விளங்குகின்றன.

*பாவை விளக்கு*

ஒரு பெண் அகல் விளக்கை ஏந்திக் கொண்டிருப்பது போல் இருப்பது பாவை விளக்கு எனப்படுகிறது. இந்த வகை விளக்குகளை கடவுளின் முன் ஒளிதரும் விளக்காக பயன்படுத்தலாம்.

*தீபங்கள் பதினாறு*

தூபம், தீபம், புஷ்பதீபம் (பூ விளக்கு), நாத தீபம், புருஷா மிருகதீபம், கஜதீபம், ருயாஜத (குதிரை) தீபம், வியாக்ர (புலி) தீபம், ஹம்ஸ (அன்னம்) தீபம், கும்ப  (குடம்) தீபம், குக்குட (கோழி) தீபம், விருக்ஷ தீபம், கூர்ம (ஆமை) தீபம், நட்சத்திர தீபம், மேருதீபம், கற்பூர தீபம் என தீபங்கள் 16 வகைப்படும்.

*தூக்கு விளக்குகள் எட்டு*

1. வாடா விளக்கு
2. தூக்கு விளக்கு
3. தூண்டாமணி விளக்கு
4. நந்தா விளக்கு
5. கூண்டு விளக்கு
6. புறா விளக்கு
7. சங்கிலித் தூக்கு விளக்கு
8. கிளித்தூக்கு விளக்கு.


*பூஜை விளக்குகள் ஒன்பது*

சர்வராட்சத தீபம், சபூத தீபம், பிசாஜ தீபம், கின்னர தீபம், கிம்புரு தீபம், கணநாயக தீபம், வித்யாதர தீபம், கந்தர்வ தீபம், பிராக தீபம் ஆகியவை 9 வகை பூஜை  விளக்குகளாக வழக்கத்தில் உள்ளன. சரவிளக்கு, நிலை விளக்கு, கிளித்தட்டு விளக்கு ஆகியன கோவில் விளக்குகளின் மூன்று வகைகளாகும். கைவிளக்குகள் ஐந்து கஜலட்சுமி விளக்கு, திருமால் விளக்கு, தாமரை விளக்கு, சிலுவை விளக்கு, கணபதி விளக்கு ஆகியவை கை விளக்குகளாகும். நால்வகை திக்பாலர் தீபங்கள் ஈசான தீபம், இந்திர தீபம், வருண தீபம், யம தீபம்.

*அஷ்டகஜ தீபங்கள் எட்டு*

ஐராவத தீபம், புண்டரீக தீபம், குமுத தீபம், ஜனதீபம், புஷ்பகந்த தீபம், சார்வ பவும தீபம், சுப்ரதீபம், பித்ர தீபம் .

*தீபங்கள் ஏற்றும் இடங்கள்:*

வீட்டின் பூசையறை,  நடு முற்றம், சமயலறை, துளசி மாடம், பாம்பு புற்று, நீர் நிலைகளின் கரைகள், ஆலயம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம். மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.

சனி, 23 செப்டம்பர், 2017

திருச்செந்தூர் முருகன்



திருச்செந்தூர் முருகன்

1. திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.

2. இரு மூலவர்களில் கருவறையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி தனியாக உள்ளர். சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியுள்ளார்.

3. சூரசம்ஹாரம் முடிந்ததும் சிவபூஜை அபிஷேகத்துக்காக தன் கை வேலினால் முருகன் நாழிக்கிணறு ஏற்படுத்தினார். நாழிக்கிணறு தண்ணீர் நோய்களை தீர்க்கும் குணமுடையது.

4. திருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.

5. திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.

6. மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்

7. மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங்கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்பறை என்றும் ஒரு பெயர் உண்டு.

8. திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.

9. திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.

10. திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அமுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.

11. திருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 85-திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

12. திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.

13. திருச்செந்தூர் கோவில் கருவறை உட்பகுதியில் சூர்யலிங்கம், சந்திர லிங்கம் உள்ளன.

14. மூலவருக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.

15. திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரத்துக்கு மேலைக் கோபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு. மேற்கு திசையில் உள்ளதால் இந்த பெயர் ஏற்பட்டது.

16. திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.

17. திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம் மணியடி எனப்படுகிறது. இங்கு நின்று பாலசுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

18. மகாமண்டபத்தில் உள்ள சண்முகர் சன்னதியில் ஆத்மலிங்கம் உள்ளது. மறக்காமல் அந்த லிங்கத்தையும் வழிபட வேண்டும்.

19. திருச்செந்தூர் கோவிலில் மொத்தம் 24 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் நாழிக்கிணறு, வதனாரம்ப தீர்த்தம் இரண்டும் முக்கியமானவை.

20. நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் உள்ளது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்

 திருச்செந்தூர் முருகன்

21. வதனாரம்ப தீர்த்தம் கடலில் பாறைகள் நிறைந்த பகுதியில் உள்ளது. எனவே அங்கு நீராடுவது பாதுகாப்பற்றது.

22. கலிங்கதேசத்து மன்னன் மகள் கனக சுந்தரி பிறக்கும் போதே குதிரை முகத்துடன் பிறந்தாள். அவள் வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்கபெற்று நல்ல முகத்தை பெற்றாள்.

23. முருகனை நினைத்து தியானம் இருக்க விரும்புபவர்கள் வள்ளிக்குகை அருகில் உள்ள தியான மண்டபத்தை பயன்படுத்தலாம்.

24. திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர். அவர்களது சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.

25. தமிழகத்தில் முதன் முதலில் நாகரீகம் தோன்றிய நகரங்களுள் திருச்செந்தூரும் ஒன்று.

26. முருகனின் அறுபடை வீடுகளுள் கடற்கரையில் அமைந்துள்ள ஒரே வீடு இக்கோவிலாகும்.

27. இங்கு முருகன் சூரபத்மனோடு போரிட்டு, வென்று, வெற்றிக் கொடியான சேவல் கொடியுடனும், பார்வதி தேவி அளித்த வேலுடனும் மயில் வாகனத்தில் அருள் பாலிக்கிறார்.

28. முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் அய்யனார்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

29. திருச்செந்தூர் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைபெற்று இருப்பதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.

30. இத்திருத்தலம் மன்னார் வளைகுடாக் கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திருப்பதால், அலைவாய் என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்றும் அடைமொழி சேர்க்கப்பட்டு, `திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப்படுகின்றது.

31. இக்கோயிலுக்குச் செல்லும் வழியில், தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இவ்விநாயகரை வணங்கியபின்னர் தான் முருகப் பெருமானை வணங்கச் செல்ல வேண்டும்.

32. இத்திருக்கோயிலில் பன்னிரு சித்தர்களில் எட்டுச் சித்தர்கள் சமாதியாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது.

33. இத்திருக்கோயில் மூன்று பிராகரங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றது.

34. இக்கோவிலில் தினமும் ஒன்பது கால பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் தரிசனத்திற்காக, கோவில் பகல் முழுவதும் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

35. கோவில் பிராகாரத்தின் மேற்குப்பகுதியில், மயில்மீது அமர்ந்த திருக்கோலத்தில் முருகப்பெருமான் சூரபத்மனுடன் போர் புரிவதையும், அதன் எதிரே சூரபத்மன் மார்பில் முருகனின் வேல் பாய்ந்திருப்பதையும் சித்தரிக்கும் அழகிய சிற்பங்களைக் காணலாம். இதுபோன்ற கந்த புராணக்காட்சிகளை எழில் மிகு சிற்பங்களாக பல இடங்களில் அமைத்திருக்கின்றார்கள்.

36. முருகப்பெருமானின் வெற்றி வேல் மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில், கடற்கரை ஓரமாக உள்ள மாப்பாடு என்ற இடம் ஆகும். இப்பகுதி தற்போது, மணப்பாடு என்று அழைக்கப்படுகின்றது.

37. திருச்செந்தூர் முருகன் கோவில் சங்க காலத்திலேயே சிறப்புப் பெற்றுத் திகழ்ந்த திருத்தலமாகும்.

38. அலைவாய், திரச்சீரலைவாய், வெற்றி நகர், வியாழ சேத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், திரிபுவளமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகு பட்டினம், என்றெல்லாம் திருச்செந்தூர் முன்பு அழைக்கப்பட்டது.

39. முருகனின் அறுபடை வீடுகளில் இது 2-வது படை வீடு எனப்படுகிறது. ஆனால் இதுதான் முதல் படை வீடு என்ற குறிப்புகளும் உள்ளன.

40. முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே முருகனின் தலங்களில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.

 முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மிகப்பெரிய கோவில் கொண்ட தலம் என்ற சிறப்பும் திருச்செந்தூர் கோவிலுக்கு உண்டு.

42. முருகன் சிவந்த நிறம் உடையவன். அவன் உறைந்துள்ள தலம் என்பதால்தான் இத்தலத்துக்கு செந்தில் என்ற பெயர் ஏற்பட்டது.

43. திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவப்கொழுந்தீசுவரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுருகன் கோவில் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

44. கிறிஸ்தவ மீனவர்கள் திருச்செந்தூர் முருகனை உறவுமுறை சொல்லி அழைக்கிறார்கள். திருச்செந்தூர் கோவில் திருப்பணிகளுக்கு காயல்பட்டினத்தில் வசித்த சீதக்காதி எனும் வள்ளல் நன்கொடை அளித்துள்ளார். எனவே திருச்செந்தூர் முருகன் ஆலயம் சமய ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.

45. அருணகிரி நாதர் தன் பாடல்களில் பல இடங்களில் திருச்செந்தூரை குறிப்பிட்டுள்ளார். அவர் திருச்செந்தூரை “மகா புனிதம் தங்கும் செந்தில்” என்று போற்றியுள்ளார்.

46. திருச்செந்தூர் முருகன் கோவிலை சுற்றி பல இடங்களில் கந்த சஷ்டி விரதம் இருக்க விடுதிகள் உள்ளன. இது தவிர விரதம் இருக்க சிறப்பு தங்கும் பகுதிகளும் ஆலயம் சார்பில் செய்து கொடுக்கப்படுகிறது.

47. கோவிலுக்கு செல்ல நீண்ட தூரத்துக்கு மண்டப வசதி உள்ளது. அந்த வழியில் தூண்டு கை விநாயகர் கோவில் உள்ளது. அவரை வழிபட்ட பிறகே முருகனை வழிபட செல்ல வேண்டும்.

48. திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.

49. திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.

50. குமரகுருபரர், பகழிக் கூத்தர், ஆதி சங்கரர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட ஏராளமானவர்கள் திருச்செந்தூர் முருகனின் நேரடி அருள் பெற்றனர்.

51. முருகன், மால், ரங்கநாதப் பெருமாள் ஆகிய சைவ, வைணவ மூர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன.

52. செந்திலாண்டவருக்கு ஆறுமுக நயினார் என்றும் பெயர் உள்ளது. திருச்செந்தூர் தாலுகா பகுதியில் வாழும் பலருக்கு நயினார் எனும் பெயர் சூட்டப்பட்டிருப்பதை காணலாம். இசுலாமியரும் நயினார் எனும் பெயர் சூட்டிக் கொண்டுள்ளனர்.

53. வீரபாண்டிய கட்ட பொம்மனும் அவர் மனைவி சக்கம்மாவும் செந்திலாண்டவருக்கு ஏராளமான தங்க நகைகள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

54. திருச்செந்தூர் முருகனுக்குத் தங்கத் தேர் உள்ளது.

55. இத்திருத்தலத்தில் நவக்கிரகங்களுக்குச் சிலை கிடையாது.

56. மூலவர் தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.

57. முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, பேரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியன இடம் பெறுகின்றன.

58. உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச்  சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்குவார்கள்.

59. இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர்.

60. இத்திருக்கோவிலுக்கு வருபவர்கள் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் சுத்தான்னம் எனப்படும் வெறும் வெள்ளைச் சோற்றுக் கட்டிகளை தானமாக வழங்குவர். மிக மலிவான விலையில் இக்கட்டிகள் பிரகாரங்களில் கிடைக்கும்.