நலம் தரும் சரஸ்வதி பூஜை...
இதனை படிக்கும் இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். உங்கள் எல்லோரையும் எல்லாம் வல்ல அண்டசராசரங்களையும் ஆளும் ஒரே இறைவன் ஈசன் காத்தருள வேண்டுகின்றோம். போர்த்துக்கீயர்களாலும் அதன்பின் ஒல்லாந்தர்களாலும் அதன்பின் ஆங்கிலேயர்களாலும் நம் முன்னோர்களான தமிழர்களின் அரசாட்சிக்குட்பட்ட பூர்வீக தேசம் ஆக்கிரமிக்கப்பட்டது. நமது தமிழ் மன்னர்களும், தமிழர் சேனையும் மண்ணையும், தமிழரது மதத்தையும், தமிழர் கலாச்சாரத்தையும் காக்க தமது உயிரை கொடுத்து போராடினார்கள். அதன் பின் தமிழர்களை கொன்று குவித்து வாழ்விடங்களும், இந்து வழிபாட்டுத்தலங்களும் அழிக்கப்பட்டு அதன் மேல் கிறிஸ்தவ கூடாரங்களை கட்டியெழுப்பி, நமது முன்னோர்களை அச்சுறுத்தி, அடிபணிய வைத்து கிறிஸ்தவமயப்படுத்தினார்கள்.
ஆகவே இது ஒரு ஆக்கிரமிப்பு மதம் என்பதனை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவமதத்தை தமிழர்கள் புறக்கணிக்கவேண்டும். எம் மன்னர்களாலும், முன்னோர்களாலும் மண்டியிடாது உயிர்கொடுத்து காக்கப்பட்ட எம் சைவசமயத்தை, ஆக்கிரமிப்பு வெள்ளை இனத்தவர்களால் திணிக்கப்பட்ட கிறிஸ்தவசமய ஆக்கிரமிப்பிலிருந்து காத்தல் ஒவ்வொரு இந்துவின் தலையாய கடமையாகும்.
பல மதங்களை உள்ளடக்கி இந்து மதம் எனப்பெயரிட்டதனால் தான் அதனுள் பொதிந்துள்ள எந்தமதமும் சம்மதம் என்றனர், நம் சமயம் (தமிழனின்) சைவம், அது சொல்லவில்லை எம்மதமும் சம்மதம் என்று. . இந்துகளாய் இருந்து கொண்டு எம்மதமும் சம்மதம் என்று கூறிக்கொண்டு யூதர்களால் நிராகரிக்கப்பட்ட இஸ்ரவேலிய யூத மனிதப் பெண்ணான (கிறிஸ்தவ) மரியாவை தமிழர்களாகிய நமது மக்கள் வழிபடுவது தவறான செயற்பாடாகும். கோவிலில் போய் கும்பிடும் எல்லோரும் இந்துக்களா? இந்து இயக்கங்களுடன் இணைந்து இந்து சமுதாயத்துக்காக போராடுபவனே உண்மையான இந்து. அடுத்து சரஸ்வதி பூஜை பற்றிய விளக்கத்தினை நோக்குவோம்.
உலகத்தில் தனிப்பட்டவர் நலனுக்காவும் அல்லது குடும்ப நலனுக்காவும் வீட்டிலும், கோயில்களிலும் இறைவனைத் தினமும் வணங்குவது வழிபாடு. ஊர்களிலும், நாடுகளிலும் மழை வளம் பெருகவும், வறுமை நீங்கவும், பிணிகள் ஒழியவும், மகிழ்ச்சி பொங்கவும், பகைமை நீங்கிடவும், நாட்டில் அமைதி நிலைக்கவும் பரந்த நோக்கத்துடன் கொண்டாடப்படுவது திருவிழா ஆகும்.
தமிழ் மாதங்களில் 12 மாதமும் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு தனிச்சிறப்புகளும், பண்டிகைகளும் இருக்கிறது. முதல் மூன்று நாட்களும் துர்க்கை அம்பாளை வழிபட வேண்டும். இடை மூன்று நாட்கள் லட்சுமிதேவியை வழிபட வேண்டும். இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.
துர்க்கை :
நெருப்பைப் போன்றவள். ஆவேசமான பார்வையுடன் அழகாய்த் திகழ்கிறாள். வீரத்தின் விளை நிலம், சிவனின் வீரசக்தி. பழைய தமிழ் நூல்கள் துர்க்காவை கொற்றவை என்றும், காளி என்றும் குறிப்பிடுகின்றன.
லட்சுஷ்மி :
மலரைப் போன்றவள். அருள் கனிந்த பார்வையுடன் அமைதியாகப் பொலிவாக இருக்கின்றாள். செல்வத்தின் அதிதேவதை. நாராயணின் சக்தி. திருச்சானூரில் லட்சுமிக்கென தனிக்கோயில் இருக்கிறது. ஆதி லெட்சுமி, மஹா லெட்சுமி, தானிய லெட்சுமி, சந்தான லெட்சுமி, வீரலெட்சுமி, விஜயலெட்சுமி என்று அஷ்டலெஷ்மிகள் உள்ளனர்.
சரஸ்வதி :
வைரத்தைப் போன்றவள். சாந்தம் நிறைந்த பார்வையுடன் எழிலுடன் விளங்குகின்றாள். கல்வி மற்றும் கலைகளின் தெய்வம். பிரம்மனின் சக்தி. சரஸ்வதி பூஜை நவராத்திரியின் 6 மற்றும் 7 வது நாட்களில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும் போது, சரஸ்வதியை எழுந்தருளச் செய்ய வேண்டும். இது தேவியின் அவதார நாள். திருவோண (சிரவண) நட்சத்திரம் உச்சமாகும் நாளில் சரஸ்வதி பூஜை நிறைவு பெறுகிறது.
அன்று தான் விஜயதசமி. மக்களின் தொழில்கள் அனைத்தும் புலமை, தொழில் என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகின்றது. ஒன்று புலமை ஞானம். இரண்டு தொழில் ஞானம். எனவே ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியை வழிபடுவதுதான் சரஸ்வதி பூஜை. நூல்களில் சரஸ்வதியை எழுந்தருளச் செய்து வழிபடுகின்றனர்.
ஆயுத பூஜை :
தொழில் புரிகின்றவர்கள் கொண்டாடுவது ஆயுத பூஜை. இவர்கள் மிகச் சிறிய ஆயுதங்கள் முதல் மிகப் பெரிய இயந்திரங்கள் வரை அனைத்தையும் பூவும், பொட்டும் இட்டு வழிபடுகின்றனர். காரணம் செய்யும் தொழிலே தெய்வம். அத்தொழில் எத்தொழிலாக இருந்தாலும், வணக்கத்துக்கும், வழிபாட்டுக்கும் உரியதாகும். இந்த அடிப்படைகளை உணர்த்தும் வழிபாடுகளே சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகும்.
நவராத்திரியின் போது, முப்பெரும் தேவிகளுக்குள் அடங்கியிருக்கும் ஒன்பது சக்திகளையும் வழிபட வேண்டும். அப்போது ஒரு சக்தியை முதன்மையாகவும், மற்ற எட்டுச் சக்திகளைப் பரிவாரச் சக்திகளாகவும் கருத வேண்டும். குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சண்டிகா, சாம்பவி, துர்கா, சுபத்திரா ஆகிய 9 கன்னி தேவதைகளையும் நவராத்திரி ஒன்பது நாளும் முறையே வழிபடுவது கன்னி வழிபாடு அல்லது குமாரி வழிபாடு எனப்படும்.
இரண்டு வயது முதல் 10 வயது வரை அமைந்த ஒன்பது கன்னிகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு ஆடைகள், அணிகள், உணவுகள், மங்கலப் பொருட்களைப் பரிசுகளாக் கொடுத்து அலங்கரிக்கின்றனர். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக நினைத்து வழிபடுவது வழக்கம். நவராத்திரியின் 8 ம் நாள் மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுகின்றனர். நவராத்திரி 9 நாட்களும் வழிபட முடியாதவர்கள் இந்த இரண்டு நாட்களில் வழிபடலாம். நவராத்திரி வழிபாடு முழுக்க முழுக்கப் பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவங்களுடைய பெண்கள் அனைவரும் வழிபாட்டில் பங்கேற்கின்றனர்.
நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சிப் பலன். கன்னிப் பெண்கள் பெறுவது திருமணப் பலன். இளைய சுமங்கலிப் பெண்கள் பெறுவது மகப்பேற்றுப் பலன். எல்லாச் சுமங்கலிப் பெண்களும் பெறுவது மாங்கல்யப் பலன். மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி, மன அமைதி,
அனைத்திலும் மன நிறைவு.
ஆகவே நவராத்திரியை எல்லாப் பெண்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். புரட்டாசி மாத வளர்பிறையில் வரும் தசமியே விஜயதசமி ஆகும். துர்க்கை, எருமைத் தலையைக் கொண்ட மகிஷாசூரனோடு ஒன்பது இரவுகள் போரிட்டாள். இந்த இரவுகளே நவராத்திரி என்ற பெயரைப் பெற்றன. மகிஷாசூரனை கொன்ற பத்தாம் நாள்தான் விஜய தசமி. விஜய என்றால் வெற்றி, தசமி என்றால் பத்தாம் நாள் என்று அர்த்தம். ஆணவம் அடியோடு அழிக்கப்பட்ட, அழிந்த நாள். அறியாமையை அறிவு வென்ற நாளைக் குறிக்கிறது. விஜயதசமி. பல குழந்தைகளின் பள்ளிக் கல்வி விஜய தசமி அன்று தான் ஆரம்பமாகிறது. இன்று துவங்குகின்ற அனைத்து நற்காரியங்களுக்கும் வெற்றி நிச்சயம் உண்டு. வீட்டுப் பூஜையறை ஒரு கோயில் என்றால், நவராத்திரி வழிபாட்டை அதன் பிரம்மோற்சவம் என்று உறுதியாகக் கூற முடியும். தசரா என்றால் பத்து இரவுகள் என்று அர்த்தம்.
கர்நாடகா மாநிலத்தில் தசரா மிக முக்கியமான பண்டிகையாகும். சாமுண்டி மலையிலுள்ள துர்க்கையான சாமுண்டீஸ்வரிக்குப் பெருவிழா எடுத்துக் கொண்டாடுகிறார்கள். சாமுண்டீஸ்வரி மைசூரின் காவல் தெய்வம். மைசூர் மன்னர், ஆட்சியில் இருந்த போது மன்னரே முன்னின்று தசரா பண்டிகையை கொண்டாடினார். பத்தாம் நாளன்று யானை மேல் வீதியுலா வருவார். பழைய பெருமைகளும், சிறப்புகளும் கொஞ்சங்கூட குறையாமல் தசரா பண்டிகை இப்போதும் உயர்வாகவும், பல சிறப்புகளுடனும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
வங்காளத்தில் துர்க்கையை முதன்மைத் தெய்வமாகப் போற்றி துர்க்கா பூஜை என்ற பெயரோடு நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். தமிழர்களுக்கு பொங்கல் பண்டிகையைப் போல், வங்காளிகளுக்குத் துர்க்கா பூஜை மிக மிக முக்கியமானது. துர்க்கையின் வடிவங்களைப் பல அளவுகளில் செய்து முக்கியமான இடங்களில் வைக்கின்றனர். சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும், இந்துக்களும் இந்துக்கள் இல்லாதவர்களும் துர்க்கா பூஜையில் ஆர்வத்துடனும், பக்தியுடனும் பங்கேற்கின்றனர். பத்து நாட்களும் வழிபடுகின்றனர். வழிபாடுகள் அனைத்தும் நிறைவேறிய பின் துர்க்கையின் வடிவங்களை கடல், ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் கரைக்கின்றனர். வங்காளத்தில் ஒரு கன்னிப் பெண்ணுக்குத் துர்க்கையின் வேஷத்தைப் போட்டு தேவியின் அம்சமாகவே வழிபடுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக