ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

மகாலட்சுமி வாசம் செய்யும் 108 இடங்கள்


#மகாலட்சுமி வாசம் செய்யும் 108 இடங்கள்

1-10
வெற்றிலை மேற்புறம்,விபூதி,வில்வம்,மஞ்சள்,அட்சதை,பூரணகும்பம்,தாமரை,தாமரைமணி,ஜெபமாலை,வலம்புரி சங்கு

11-20
மாவிலை,தர்ப்பை,குலை வாழை,துளசி,தாழம்பூ,ருத்ராட்சம்,சந்தனம்,தேவ தாரு,அகில்,பஞ்சபாத்திரம்,

21-30
கொப்பரைக்காய்,பாக்கு,பச்சைக்கற்பூரம்,கலசம்,சிருக்சுருவம்,கமண்டலநீர்,நிறைகுடம்,காய்ச்சிய பால்,காராம்பசு நெய்,குங்கிலியப் புகை,

31-40
கஸ்தூரி,புனுகு,பூணூல்,சாளக்கிராமம்,பாணலிங்கம்,பஞ்ச கவ்யம்,திருமாங்கல்யம்,கிரீடம்,பூலாங்கிழங்கு,ஆலவிழுது,

41-50
தேங்காய்க்கண்,தென்னம் பாளை,சங்கு புஷ்பம்,இலந்தை,நெல்லி,எள்,கடுக்காய்,கொம்பரக்கு,பவளமல்லி,மாதுளை,

51-60
திரு நீற்றுபச்சை,அத்திக் கட்டை,ஆகாசகருடன்,வெட்டிவேர்,அருகம்புல்,விளாமிச்சுவேர்,நன்னாரிவேர்,களாக்காய்,விளாம்பழம்,வரகு,

61-70
நெற் கதிர்,மாவடு,புற்றுத்தேன்,எலுமிச்சை,மணிநாக்கு,சோளக்கதிர்,பாகற்காய்,அகத்திக்கீரை,காசினிக்கீரை,பசலைக்கீரை,

71-80
கூந்தல்பனை,மலைத்தேன்,வெள்ளி,தங்கம்,வைரம்,உப்பு,யானை,மூங்கில்,பசு நீர்த்தாரை,குளவிக்கூட்டு மண்,

81-90
நண்டுவளை மண்,காளை கொம்பு மண்,யானைகொம்பு மண்,ஆலஅடி மண்,வில்வ அடி மண்,வெள்ளரிப்பழம்,மோதகம்,அவல்,காதோலை,கடல்நுரை,

91-100
கண்ணாடி,மோதிரம் (தந்தம்),பட்டு,தையல்இல்லாத புதுத் துணி,பெண்ணின் கழுத்து,ஆணின் நெற்றி,கோவில் நிலை மண்,வெயிலுடன் கூடிய மழைநீர்,கீரிப்பிள்ளை,நுனிமுடிந்த கூந்தல்,

101-108
படிகாரம்,அரச சமித்து,பன்றிக்கொம்பு,சந்திர காந்தக்கல்,பிரம்பு,நாயுருவி,
வாசல் நிலை,
நெற்றி.

திங்கள், 22 ஏப்ரல், 2019

சித்திரை மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் !!


சித்திரை மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் !

👉 சித்திரை மாதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்கள் உங்கள் வாழ்வை வளமாக்கும் என்று கூறுவார்கள். அதில் பரணி விரதம், சித்ரா பௌர்ணமி, சௌபாக்கிய சயனவிரதம், பாபமோசனிகா ஏகாதசி போன்ற விரத முறைகளைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

பரணி விரதம் :

👉 சித்திரை மாதம் வரும் பரணி நட்சத்திரத்தன்று பைரவருக்கு பு ஜை செய்ய வேண்டும். பைரவருக்கு தயிர்சாதம் படைத்து விரதம் இருந்தால் எதிரிகள் தொல்லை நீங்கும். நமக்கு தீங்கு செய்த எதிரிகள் பாதிக்கப்படுவர். வாழ்வில் வளம் சேர்க்க இந்த விரதம் ஏற்றது. இதனை பரணி விரதம் என்பர்.

சௌபாக்கிய சயனவிரதம் :

👉 சித்திரையில் வரும் சுக்லபட்ச திரிதியை திதியில் உமாமகேஸ்வரரை துதித்து பு ஜை செய்வது மிகவும் நல்லது. அன்று தான, தர்மங்கள் செய்வதால் இப்பிறவியில் வளமான வாழ்வும் மறுபிறவியில் கைலாச லோக பிராப்தியும் கிடைக்கும். இதை சௌபாக்கிய சயனவிரதம் என்பர்.

சித்ரா பௌர்ணமி :

👉 சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்ற பெயரில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமான், அம்பிகை வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்விழாவன்று மக்கள் பொங்கலிட்டும், அன்னதானம் செய்தும் வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.

👉 சித்ரா பௌர்ணமி அன்று பெண்கள் விரத முறையை மேற்கொள்கின்றனர். தங்கள் வாழ்வில் செய்த பாவங்களைப் போக்குமாறும், இனி வரும் நாளில் பாவங்கள் செய்யாமல் இருக்க அருள் புரியுமாறும் வேண்டுகின்றனர். நிலையான செல்வம், நீடித்த ஆயுள், மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு கிடைக்க பிரார்த்திக்கின்றனர்.

பாபமோசனிகா ஏகாதசி :

👉 சித்திரை மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசி பாபமோசனிகா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. பாபமோசனிகா ஏகாதசி அன்று விரதம் மேற்கொண்டு திருமாலை வழிபட நம்முடைய பாவங்கள் நீங்கும்.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

அட்சய திருதியை பற்றிய அபூர்வ தகவல்கள்

அட்சய திருதியை பற்றிய அபூர்வ  தகவல்கள்
 
அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.

அட்சய திருதியை  60 தகவல்கள்
1. அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது.

2. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.

3. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.

4. அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.

5. அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.

6. அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.

7. அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.

8. சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.

9. பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.

10. அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.

11. ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும்.

12. அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார்.

13. வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள்.

14. அரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.

15. ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும்.

16. வடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள்.

17. ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது.

18. பீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.

19. அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள்.

20. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.

21. அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

22. அட்சய திருதியை நாளில் தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

23. அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு `பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.

24. ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.

25. அரிதான வேலையை சந்திப்பதை `அலப்ய யோகம்‘ என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.

26. அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு `அட்சதை’ என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்ஞறும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு `அட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.

27. அட்சய திருதியை தினத்தை சமணர்கள் “அட்சய தீஜ்’’ என்றழைக்கிறார்கள்.

28. ரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.

29. அட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடைபிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார்.

30. மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.

31. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.

32. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை’ நாளில் செய்யப்படுகிறது.

33. மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.

34. கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

35. தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

36. அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

37. வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும்.

38. மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.

39. ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.

40. அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.

41. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது.

42. அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், “கனகதாரை’’ நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள்.

43. அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.

44. அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.

45. அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.

46. அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.

47. அட்சய திருதியை தினத்தன்று சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால் நமசிவாய மந்திரம் அன்று முதல் சொல்லத்தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதி-பரமேஸ்வரரின் அருள் கிடைக்கும்.

48. அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.

49. கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள்.

50. அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

51. அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.

52. அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை `தர்மகடம்‘ எனப்போற்றுவர்.

53. அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.

54. அட்சய திருதியை நாளில் `வசந்த் மாதவாய நம’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். முக்கியமான ஒன்று... தானம் செய்ய உகந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி சேமிப்பில் இறங்குவது சாஸ் திரத்துக்கு உடன் பாடில்லை.

55. அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.

56. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.

57. புதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும்.

58. ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.

59. ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.

60. மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.

புதன், 17 ஏப்ரல், 2019

சித்ரா பௌர்ணமி!!


சித்ரா பௌர்ணமி : நினைத்தது நிறைவேற விரதமிருக்க தயாராகிவிட்டீர்களா?

பொதுவாக பௌர்ணமியானது மிகவும் விஷேசமான ஒன்றாகும். மாதம் தோறும் வருகின்ற பௌர்ணமியன்று விரதம் இருந்து தேவியை வழிபட்டு வந்தால் எல்லா செல்வங்களும் குறைவில்லாமல் கிடைக்கும். மற்ற மாதங்களில் வருகின்ற பௌர்ணமியைவிட சித்ரா பௌர்ணமியானது முக்கியமானதாகும். சித்திரை நட்சத்திரமும் சேர்ந்து வந்துவிட்டால் இன்னும் சிறப்பானதாகும்.

சித்ரா பௌர்ணமி விரதம் இருப்பது எப்படி?

🌝 சித்ரா பௌர்ணமியன்று வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அரிசி மாவால் சித்ரகுப்தன் படம் வரைந்து கையில் ஏடும், எழுத்தாணியும் வரைய வேண்டும். சித்ரகுப்தா என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். அன்று உப்பில்லாத உணவுகளையே உண்ண வேண்டும்.

🌝 மாலையில் பௌர்ணமி தினம் உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும். தலைவாழை இலையில் சர்க்கரை பொங்கல் அல்லது வெண்பொங்கலை படைக்க வேண்டும். பயிற்றம் பருப்பு, எருமைப்பாலும் சேர்த்து பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம்.

🌝 மேலும், அன்றைய தினம் வைக்கும் குழம்பில் கூட, தட்டைப்பயிறும், மாங்காயும் சேர்த்து வைப்பது வழக்கம். ஜவ்வரிசிப் பாயசம் வைத்து அப்பளம் வைத்து, பூஜை அறையின் நடுவில் கோலமிட்டு, அதன் மேல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, சங்கு ஊதி வழிபடுவது அவசியமாகும்.

🌝 பௌர்ணமி விரதம் இருப்பவர்கள், விரதத்தைத் தொடங்க வேண்டிய நாள் சித்ரா பௌர்ணமிதான். விரதத்தை முழுமையாகக் கடைபிடிப்பவர்கள் இரவு நிலவு பார்த்த பின் உணவு அருந்த வேண்டும்.

🌝 தொடர்ந்து தீபாராதனை காட்டி ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் கொடுக்க வேண்டும். ஏழை மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டு கொடுக்கலாம். அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது.

🌝 சித்ரா பௌர்ணமியன்று விரதமிருந்து சிவாலயங்களில் கிரிவலம் வர நாம் பாவவினைகளை போக்கி புண்ணியம் தேடிக் கொள்ள முடியும்.

விரத பலன்கள் :

🌝 சித்ரா பௌர்ணமி விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். ஆயுளை அதிகரிக்க செய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு. மேலும் மன அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும், வறுமை அகலும். புண்ணியங்கள் சேரும்.

🌝 திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று அன்னதானம் செய்தால் கல்வி, வேலை, பதவி, அரசியல், ஆரோக்கியம், திருமணம், வழக்கு குடும்பப்பிரச்சனைகள் நீங்கி மேன்மை உண்டாகும்.
ழூ சித்திரை மாத ராசிபலன்களை Pனுகு வடிவில் பெற 👉இங்கே கிளிக் செய்யவும்.👈


சனி, 13 ஏப்ரல், 2019

சித்திரை சிறப்புகள்

சித்திரை சிறப்புகள்

சித்திரை சிறப்புகள் ஏராளமாக உள்ளன. தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, வசந்த நவராத்திரி, ராம நவமி, மத்ஸ்ய ஜெயந்தி, சித்திரைத் திருவிழா, அட்சய திருதியை போன்ற விழாக்களும், காமதா ஏகாதசி, பாபமோசனிகா ஏகாதசி, பைரவர் விரதம் போன்ற விரத முறைகளும் இம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன.
தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை ஆகும். இம்மாதத்தோடு வசந்த காலம் நிறைவடைகிறது.
சூரியன் இம்மாதத்தில்தான் உச்சநிலையினை அடைந்து அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது. சித்திரை மொத்தம் 31 நாட்களைக் கொண்டுள்ளது.
 தமிழ் புத்தாண்டு
சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை நித்திய கடமைகளை முடித்து கோவில்களுக்குச் சென்று அன்றைய ஆண்டில் எல்லா வளங்களும் பெற இறைவனை வழிபடுகின்றனர்.
மதிய வேளையில் உறவினர் மற்றும் நண்பர்களுடன் விருந்து உண்டு மகிழ்கின்றனர். பெரியவர்கள் சிறியவர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர். பகிர்ந்து உண்ணல், பரிசு வழங்குதல், உறவுகளுடன் மகிழ்ந்திருத்தல் ஆகியவை தமிழ் புத்தாண்டின் நிகழ்ச்சிகளாகும்.
கேரள மாநிலத்தில் சித்திரை முதல் நாளானது சித்திரை விசு என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
சித்திரை விசு
சித்திரை விசு
பங்குனி மாதக் கடைசி நாள் இரவில் தங்க வெள்ளி பொருட்கள், நவரத்தினங்கள், பழவகைகள், காய்கனிகள், புத்தாடை, முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் ஆகியவற்றை பூஜையறையில் அழகாக அலங்கரித்து வைப்பர்.
மறுநாள் அதிகாலையில் எழுந்ததும் அந்த மங்கலப் பொருட்களைத்தான் முதலில் பார்ப்பார்கள். இதனால் அந்த ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்ற‌ நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
 வசந்த நவராத்திரி
வசந்த நவராத்திரி
வசந்த நவராத்திரி
நவராத்திரி என்பது உலகைக் காக்கும் அன்னையை விரத முறைகள் மேற்கொண்டு வழிபடக்கூடிய நாட்களைக் குறிக்கும்.
பொதுவாக வருடத்தில் புரட்டாசியில் சாரதா நவராத்திரி, ஆடியில் ஆசாட நவராத்திரி, தையில் சியாமளா நவராத்திரி, சித்திரையில் வசந்த நவராத்திரி நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. இவற்றுள் சாரதா நவராத்திரியும், வசந்த நவராத்திரியும் மிக முக்கியமானவை ஆகும்.
சாராதா நவராத்திரி வழிபாடு போகத்தையும், வசந்த நவராத்திரி வழிபாடு யோகத்தையும் வழங்கிறது.
வசந்த நவராத்திரியானது பங்குனி மாத அமாவாசை முதல் தொடங்கப்பட்டு வளர்பிறை நவமி வரை மொத்தம் ஒன்பது நாட்களாகவும், பங்குனி அமாவாசை முதல் அடுத்த பௌர்ணமி வரை மொத்தம் பதினைந்து நாட்களாகவும், பங்குனி அமாவாசை முதல் சித்ரா பௌர்ணமி வரை மொத்தம் நாற்பத்தைந்து நாட்களாகவும் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
வசந்த நவராத்திரியில் ஒன்பது நாட்கள் வழிபாடு மேற்கொள்ள உலக நன்மையும், பதினைந்து நாட்கள் வழிபாடு மேற்கொள்ள வேண்டும் வரங்களும், நாற்பத்தைந்து நாட்கள் வழிபாடு மேற்கொள்ள சகல காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.
பெரும்பாலும் இப்பண்டிகை வடஇந்தியாவிலும், தென்இந்தியாவில் சில கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது.

சித்ரா பவுர்ணமி

சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி சித்திரா பௌர்ணமி என்ற பெயரில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நாம் செய்யும் பாவ புண்ணிய கணக்குகளை நிர்ணயம் செய்பவரும், எமதர்மனின் உதவியாளரும் ஆகிய சித்திர குப்தன் என்பவருக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
அன்றைய தினம் சிவபெருமான், அம்பிகை வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்விழாவன்று மக்கள் பொங்கலிட்டும் அன்னதானம் செய்தும் வழிபாடு மேற்கொள்கின்றனர்.
ஆறு,குளம், கடல் போன்ற நீர்நிலைகளின் கரைகளில் மக்கள்கூடி நிலவொளியில் அமர்ந்து சித்ரான்னம் என்று சொல்லக் கூடிய பலவகையான கலவை சாத வகைகளை உண்டு மகிழ்கின்றனர். இவ்வாறு உணவு உண்ணும் நிகழ்ச்சி பற்றி இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சித்ரா பௌர்ணமி அன்று சோழர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தன் கோவிலில் அன்னம்தானம் செய்வதை வழக்கில் கொண்டிருந்தனர் என்பதை திருச்சி மலைக்கோவிலில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமநவமி
ராமநவமி
ராமநவமி
ராமநவமி என்பது திருமாலின் பத்துஅவதாரங்களில் ஏழாவது அவதாரமான ராமனின் பிறந்த நாளைக் குறித்து கொண்டாடப்படும் விழாவாகும்.
இராமன் பங்குனி அமாவசையை அடுத்த வளர்பிறை நவமியில் பிறந்தாகக் கருதப்பட்டு இவ்விழா கோலாகலமாக் கொண்டாடப்படுகிறது.
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகளை கடைப்பிடித்து சாதாரண மனிதனாக வாழ்ந்து எல்லோருக்கும் முன்னுதாரமாகத் திகழ்பவர் ஸ்ரீராமபிரான் ஆவார்.
எனவே ராமநவமி அன்று  விரதம் மேற்கொண்டு இராமபிரானை வழிபட, நல்ல நெறியில் வாழ்க்கை முறை அமைந்து வாழ்வின் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.
அன்றைய தினம் முதல் ராம மந்திரம் சொல்லத் தொடங்கினால் மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் குடிகொள்ளும்.

மத்ஸ்ய ஜெயந்தி

திருமாலின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமான மச்ச அவதாரம் சித்திரை மாதம் வளர்பிறை திருதியையில் (அமாவாசை அடுத்த மூன்றாவது நாள்) நிகழ்ந்தது. எனவே ஆண்டுதோறும் சித்திரை வளர்பிறை திருதியையில் மத்ஸ்ய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
அநீதியின் வடிவமான சோமுகாசுரன் என்னும் குதிரை முக அரக்கனிடம் இருந்து வேதங்களை காப்பாற்றி உலக உயிர் இயக்கத்திற்கு காரணமான மச்ச மூர்த்தியை வழிபட வாழ்வின் துன்பங்கள் நீங்கும்.

சித்திரைத் திருவிழா

சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அமாவாசையை அடுத்த இரண்டாம் நாள் முதல் மொத்தம் பன்னிரெண்டு நாட்கள் மதுரை மாநகரில் நடைபெறுகிறது.

இவ்விழாவில் மீனாட்சி கல்யாணம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்குதல் என இரு முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவ்விழாவினைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் மதுரைக்கு வருகை தருகின்றனர்.
பத்தாம் நாள் திருவிழாவில் மீனாட்சி திருகல்யாணம் நடைபெறுகிறது. பதினொன்றாம் நாள் தேர்த்திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர்
மீனாட்சி சுந்தரேஸ்வரர்
சித்திரை பௌர்ணமி அன்று அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறுகிறது. வைகைக்கு வரும் அழகரை வரவேற்கும் எதிர்சேவையும், ராமராயர் மண்டபத்தில் நடைபெறும் தசாவதார நிகழ்ச்சியும், சேதுபதி மண்டகப்படியில் நடைபெறும் பூப்பல்லக்கும் சிறப்பு வாய்ந்தவை.
ஆற்றில் இறங்கும் அழகர்
ஆற்றில் இறங்கும் அழகர்
உலகிலே அதிக நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா என்ற சிறப்பினை சித்திரைத் திருவிழா பெறுவது குறிப்பிடத்தக்கது.

அட்சய திருதியை

அட்சய திருதியை
அட்சய திருதியை
அட்சய திருதியை என்பது சித்திரை மாதத்தின் வளர்பிறையின் மூன்றாவது நாளான திருதியையில் கடைப்பிடிக்கப்படுகிறது. அட்சய என்றால் எப்போதும் அள்ள அள்ள குறையாத எனப் பொருள்படும்.
அதாவது இந்நாளில் செய்யப்படும் நல்ல செயல்களான தான தருமங்கள் அள்ள அள்ள குறையாத அதிக பலன்களைத் தரும்.
பார்வதி தனது பிறந்த வீட்டுக்கு வந்ததும், பரசுராமர் அவதரித்ததும் இந்நாளில் தான்.
அட்சய திருதியை அன்று தயிர்சாதம் தானம் செய்தால் ஆயுள் பெருகும். இனிப்புப் பொருட்கள் தானம் செய்தால் திருமணத்தடை அகலும். உணவுதானியங்கள் தானம் செய்தால் விபத்துக்கள் அகால மரணம் போன்றவை ஏற்படாது. கால்நடைகளுக்கு தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.

காமதா ஏகாதசி

காமதா ஏகாதசி
காமதா ஏகாதசி
சித்திரை மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசி காமதா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் திருமாலை விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்ள வாழ்வின் எல்லா நல்ல விருப்பங்களும் நிறைவேறும்.
இவ்விரத முறையைப் பின்பற்றி லலிதன் என்னும் கந்தர்வன் சாபத்தினால் பெற்ற அரக்க உருவத்தில் இருந்து மீண்டும் கந்தர்வ வடிவம் பெற்றான்.

பாபமோசனிகா ஏகாதசி

சித்திரை மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசி பாபமோசனிகா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. பாபமோசனிகா ஏகாதசி அன்று விரதமுறை மேற்கொண்டு திருமாலை வழிபட நம்முடைய பாவங்கள் நீங்கும்.

பைரவர் விரதம்

சித்திரை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று பைரவ விரதம் பின்பற்றப்படுகிறது. அன்றைய தினத்தில் பகல் உணவு மட்டும் உண்டு விரத முறை மேற்கொள்ளப்படுகிறது.
அன்றைக்கு திருமுறை ஓதுதல் வழக்கத்தில் உள்ளது. இவ்விரத முறையை பின்பற்றினால் சுபிட்சமான வாழ்வுடன் இறுதியில் முக்தி கிடைக்கும்.

லட்சுமி பூஜை

லட்சுமி பூஜை
லட்சுமி பூஜை
சித்திரை மாத வளர்பிறை பஞ்சமியில் திருமகள் பூலோகத்திற்கு வந்ததாகக் கருதப்படுகிறது. எனவே இந்நாளில் லட்சுமி பூஜை செய்து வழிபட செல்வம் பெருகும்.
சித்திரை மாத வளர்பிறை அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாகக் கருதப்படுகிறது. அன்று புனித நதிகளில் நீராடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.

சித்திரை மாதத்தை சிறப்புச் செய்தவர்கள்

ஆதிசங்கரர்
ஆதிசங்கரர்
ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியார், ரமணர், பரசுராமர் ஆகியோரின் அவதாரம் இம்மாதத்தில்தான் நிகழ்ந்தது.
திருக்குறிப்புத் தொண்டர், இசைஞானியார், விரன்மிண்டர், மங்கையர்கரசியார், சிறுதொண்டர், திருநாவுக்கரசர் ஆகியோரின் குருபூஜை இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. நன்றி– வ.முனீஸ்வரன்

வாழ்க்கை வளமாக சித்திரை மாத வழிபாடுகள்..!


வாழ்க்கை வளமாக சித்திரை மாத வழிபாடுகள்..!

தமிழ்ப்புத்தாண்டு என்பது ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. ஏன் சித்திரை மாதத்தை தமிழ்ப் புத்தாண்டின் முதல் மாதமாகக் குறிப்பிடுகிறார்கள் என்பது பற்றியும், சித்திரை மாதத்துக்கான சிறப்புகள் பற்றியும் 'சொல்லின் செல்வன்' பி.என்.பரசுராமனிடம் கேட்டோம். அவர் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே...

சித்திரை


ராசி மண்டலத்தில், முதல் ராசியான மேஷத்தில் சூரியன் பிரவேசிப்பது சித்திரை முதல் நாளாகும்.அதனால்தான் நாம் சித்திரை முதல்நாளை தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம். பிரம்மதேவர் உலகைப் படைத்தது சித்திரை முதல் நாளில்  என்கின்றன சில ஞான நூல்கள். இத்தினத்தில் திறந்த வெளியில் சூரிய பகவானுக்குப் பூஜைகள் செய்வார்கள். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் சூரிய வழிபாடுகள் கோலாகலமாக நடக்கும். சரி சித்திரை மாதத்தில் இன்னும் எத்தனை சிறப்புகள் உள்ளது என்பதை பற்றிப் பார்ப்போம்.

* தமிழ்ப்புத்தாண்டில், வீட்டிலுள்ள பெரியவர்கள் பஞ்சாங்கம் வாசிப்பதும், அதை சிறியவர்கள் கேட்பதும், காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் ஒரு வழக்கம். யோகம், திதி, கரணம், வாரம், நட்சத்திரம். இந்த ஐந்து அங்கங்களையும் கொண்டதால் இது பஞ்சாங்கம் எனப்படும். இதில் திதியை அறிவதால் திருமகள் அருள் கிட்டும். நட்சத்திரத்தை அறிவதால் வினைகள் அகலும். வாரம் ஆயுளை அதிகரிக்கும். யோகம் அறிவதால் நோயற்ற வாழ்வு உண்டாகும். அனுதினமும் கரணத்தைப் பற்றி அறிவதால், காரியம் சித்தியாகும். எனவே தினமும் பஞ்சாங்கம் படிப்பது அளவற்ற நன்மைகளைத் தரும். தினமும் படிக்க முடியாதவர்கள், சித்திரை முதல் நாளில் மட்டுமாவது, வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி, இறைவனை வழிபட்டுவிட்டு, அன்றைய தினத்துக்கான பஞ்சாங்கக் குறிப்பை படிக்கவேண்டும். வீட்டில் படிக்க வசதி இல்லாதவர்கள், கோயிலுக்குச் சென்று பஞ்சாங்கம் வாசிப்பதைக் கேட்கலாம்.

* தமிழ் வருடப் பிறப்பு அன்று, வேப்பம் பூக்களைச் சேகரித்து, புளி, வெல்லம் சேர்த்து பச்சடி செய்வது வழக்கம். இனிப்பும், புளிப்பும், கசப்பும் கலந்த இந்தப் பச்சடி, வாழ்வே இனிப்பும், கசப்பும்,புளிப்பும் கலந்ததுதான்  என்னும் தத்துவத்தை உணர்த்துகின்றது.

வேப்பம் பூ

* சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியே "சித்ரா பௌர்ணமி" ஆகும் . அன்று, சில ஊர்களில்  முழு நிலா வெளிச்சத்தில் ஒரு வகையான உப்பு பூமியில் இருந்து வெளி வரும். இதை "பூமி நாதம்" என்று சித்தர்கள் அழைப்பர். அந்த உப்பு, மருந்துகளுக்கு அதிகமான சக்தியை அளிக்கின்றது என்று சித்தர்கள் கண்டுபிடித்தனர். அதனால் இந்நாளை சித்தர்கள் பௌர்ணமி என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது. இன்றும் பூமிநாதம் ரசாயன மருத்துவத் துறையில் உபயோகிக்கப்படுகிறது.

* நாம் செய்யும் தவறு யாருக்கும் தெரியாது என்று எண்ணிவிட வேண்டாம். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டும் கணக்கெடுத்துக் கொண்டும் இருக்கிறான் சித்திர குப்தன் என்பார்கள். அவர் தோன்றியதும் சித்திரா பௌர்ணமியன்றுதான். அன்றைய நாளில் மக்கள் சித்திர குப்தனுக்காக விரதம் இருந்து, "எங்கள் பாவ கணக்கை குறைத்து, மேற்கொண்டு பாவம் செய்யாமல் இருக்க வழித் துணையாக இருப்பா" என்று வேண்டிக்கொள்வார்கள். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில், சித்ரகுப்தருக்கு தனி ஆலயம் உண்டு. சித்திரா பௌர்ணமியன்று இவருக்கும், இவரது மனைவி கர்ணிகாவுக்கும் அபிஷேக, ஆராதனைகளுடன், திருமண விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.

* சித்திரை மாதம் என்றாலே மதுரை மக்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த மாதம் முழுவதும், மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குவது எனப் பல விசேஷங்கள் உண்டு. மீனாட்சி திரு கல்யாணத்தைக் காண, அண்ணன் அழகர் சகலவிதமான ஏற்பாடுகளுடன் புறப்படுவார். தான் செல்வதற்கு முன்பே மீனாட்சி- சொக்கநாதர் திருமணம் நடந்துவிட்டது என்னும் தகவல்  வைகைக் கரையை அடையும்போது,  அவருக்கு வந்து சேரும். கோபத்துடன் ஆற்றில் இறங்கிய அவர், அப்படியே வண்டியூர் போய்விடுவார். அழகர் ஆற்றில் இறங்குவதைக் காண வெளியூரில் இருந்து மக்கள் அலை அலையாக வருவர்.


சித்திரை

* அட்சய திரிதியை வரும் பொன்னான மாதமும் சித்திரை மாதம் தான். பிரம்மதேவர் தனது சிருஷ்டித் தொழிலை துவங்கியதும் இந்நாளில்தான். மிகவும் புண்ணியமான இந்நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள், அரிசி, கோதுமை, தயிர், மோர், குடை, ஆடைகள், தானியம், பழம் போன்றவற்றை வறியவர்களுக்குத்  தானம் செய்வதால் என்றும் அழியாத செல்வம் நம் வாழ்வில் தங்கும் என்பர்.

மகோதயம் என்னும் நாட்டிலுள்ள ஒரு வியாபாரி ஒவ்வொரு வருடமும் அட்சய திரிதியை அன்று பல விதமான தானங்களை செய்து, கங்கையில் நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ததால், மறு பிறவியில் அரசனாகப் பிறந்தார். அப்போதும்  அட்சய திரிதியையில் தொடர்ந்து தானம் , தர்மங்கள் செய்ததால் வைகுண்டம் அடைந்தார்.

சித்திரை

* சித்திரை சுக்லபட்ச அஷ்டமியில்தான் அம்பிகை அவதரித்ததாகக் கூறப்படுகிறது. இந்நாளில் அம்மனைப் போற்றி வழிபடுவதால் சிறந்த பலனையும் தெய்வ அனுகிரஹத்தையும் பெறலாம். ஆடல் அரசனைக் குளிர்விப்பதற்காக வருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. அவற்றுள் சித்திரை திருவோணத்தில் நடராஜ பெருமானுக்கு நடைபெறும்   சிறப்பான அபிஷேகமும் ஒன்று.

* காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் அமாவாசை, பௌர்ணமி, வெள்ளிக்கிழமைகள், மாதப்பிறப்பு, மகா பெரியவா பிறந்த நாள் போன்ற நாள்களில், கோயிலின் வெளிப் பிராகாரத்தில் மட்டுமே தங்கத்தேர் உலா வரும். ஆனால், சித்திரை முதல் நாளன்று மட்டும், தங்கத்தேர், நான்கு ராஜ வீதியிலும் உலாவரும்.


புனிதமான சித்திரை மாதத்தில் முறையான வழிபாடுகளையும், ஆலய தரிசனமும் செய்து உங்கள் வாழ்வை வசந்த காலமாக மாற்றிக்கொள்ளுங்கள்.
நன்றி விகடன்.

சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்.. தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!


சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்..
தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம்
இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்.

சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1

இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று  சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.

என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.

வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....

ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!

பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...

அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...

இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!

சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?

சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)

அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)

மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)

மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)

இந்த வானியல் மாற்றங்களையும்,  அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும்  நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...

#சித்திரை  (vernal equinox) - புத்தாண்டு.
#ஆடி 18 (summer solstice) - ஆடிப்பிறப்பு.
#ஐப்பசிஅமாவாசை(autumn equinox)- தீபாவளி.
#தை 1(winter solstice) - பொங்கல்.

இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...

#நமது #முன்னோர்கள்  "#தன்னிகரற்ற" #மாபெரும் #அறிவாளிகள் . #மிகவும் #மகத்தானவர்கள்.
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்