விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே பெண்கள் எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பின் நீராடி வந்து பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை, அதன் நுனி வடக்குப் புறமாக இருக்கும்படி வைத்து அதில் அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும்.
மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும்.நம் வீட்டுப் பிள்ளைகள் மூலமாக, களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி வரச் செய்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு அரையில் துண்டு கட்டி, பூமாலை,அறுகம்புல் மாலை அணிவித்து, மணைப் பலகையில் இருத்த வேண்டும். குன்றிமணியால் கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் பிள்ளையார் குடை வைத்து, விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும். கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள், அர்ச்சனை மலர்கள், பழங்கள் 21 எனும் எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. இல்லாவிட்டாலும் நம்மால் முடிந்ததைக்கொண்டு பூஜை செய்யலாம். தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்யவேண்டும்.
பூஜையின் பொழுது சாதம், கல்கண்டு, பழம், வெற்றிலை, பாக்கு படைத்து வழி படும்போது நாம் தண்ணிர் வைத்து வழிபாடுகிறோம் என்றால் உங்கள் இஷ்ட தெய்வம் அந்த புனிதநீரில் வந்து எழுந்தருள வேண்டும் என்றும் தான் பொருள். காலை-மாலை இருவேளையும் பூஜை செய்வது சிறப்பு. விநாயகர் சதுர்த்திக்குப் பின் விநாயகர் சிலையை விவர்ஜனம் செய்யவேண்டும். விநாயகர் சதுர்த்தியையும் சேர்த்து, அன்றைய தினமோ அல்லது ஒன்றைப் படையில் அமையும் படியாக முன்று, ஐந்து, ஏழு ஆவது நாட்களிலோ ஆண்கள் மட்டுமே பிள்ளையாரை நீரில் கரைக்க வேண்டும். விநாயகர் வீட்டில் இருக்கும்வரை அவருக்கு இருவேளை பூஜை நைவேத்தியம் செய்ய வேண்டும். பிள்ளையார் சிலை சேதமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
நீர்:- காவிரி, கங்கை, தாமிரபரணி, வைகை என்று கொண்டுவந்து வாழிபட நாம் அனைவராலும் முடியாது. ஆதானல் தனது விட்டில் இருக்கும் நீரை புண்ணிய நீரை கொண்டு வழிபடுவர்கள். இதில் அனைத்து தெய்வங்கள் இருக்கும் என்று நம்பிக்கை. புண்ணிய தீர்த்தங்களாகக் கருதி பக்தியுடன் நிரப்ப வேண்டும். உங்கள் இஷ்ட தெய்வம் அந்த புனிதநீரில் வந்து எழுந்தருள வேண்டும் என உருக்கமாக வேண்டிக் கொள்ளும் போழுது தீய சக்திகள் அணுகாது. மனோபலம் பெருகும். பூஜை முடிந்ததும் அதை பக்தியுடன் பருகினால் உடல் நலன் பெறும் என்பது நம்பிக்கை. அணுகாது
தொப்பையில் பதித்த காசை எடுத்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும்; லட்சுமி கடாட்சம் கிட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக