தீபாவளி ஸ்பெஷல் ! காசியில் ஸ்ரீ விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசிவிஸ்வநாதர் ஆலயம் போன்று ஸ்ரீ அன்னபூரணி ஆலயமும் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது
காசியில் ஸ்ரீ விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசிவிஸ்வநாதர் ஆலயம் போன்று ஸ்ரீ அன்னபூரணி ஆலயமும் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இடது கையில் அமுத கலசமும் வலது கையில் அன்னக் கரண்டியும் ஏந்தி காட்சி தருகிறாள் அன்னை. இரு பக்கங்களிலும் ஸ்ரீதேவி, பூதேவியர்களின் திருவுருவங்களையும் தரிசிக்கலாம்.
அன்னபூரணி திருக்கோயிலின் கருவறையில் அருள்பாலிக்கும் அன்னபூரணிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப் பட்டிருக்கும். கருவறைக்கு எதிரே இரு துவாரங்கள் உள்ளன.
இதனை பிட்ச துவாரம், தர்ம துவாரம் என்பார்கள். சாதாரண நாள்களில் இந்த துவாரங்கள் வழியாகத்தான் ஸ்ரீ அன்னபூரணி அம்பாளைத் தரிசிக்க முடியும்.
தீபாவளித் திருநாளில் அன்னபூரணியை முழுமையாகத் தரிசனம் செய்யலாம். அன்றைய தினம் அம்மனுக்கு தங்கக்கவசம் சார்த்தியிருப்பார்கள். அன்று தங்கக் குத்துவிளக்குகளால் தீபம் ஏற்றுவர். அன்னை அன்றைக்கு திருத்தேரில் பவனி வருவார். தேர் முழுவதும் ஆயிரக்கணக்கான லட்டுகளால் அலங்கரித்திருப்பார்கள்.
பின்னர் பக்தர்களுக்கு அந்த லட்டு பிரசாதமாக விநியோகிக்கப்படும். மேலும் சிவபெருமானுக்கு அன்னை தங்கக் கரண்டியால் அன்னம் வழங்கும் "அன்னகூட்' என்ற சிறப்பு வழிபாடும் நடைபெறும்.
காசியில் கங்கைக் கரையில் ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது அன்னபூரணி திருக்கோயில்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக