ஆடிப்பூரம் : ஆண்டாளை வழிபட்டால் கேட்டது கிடைக்கும் !!
🌹 ஆடி மாதம் என்பது தட்சிணாயன காலத்தின் தொடக்க காலம். அவர்களது இரவு காலமே தட்சிணாயன காலம் ஆகும்.
🌹 உத்தராயணக் காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால், தட்சிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருள்வாள். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.
ஆடிப்பூரத்தின் சிறப்பு :
🌹 ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது.
🌹 ஆடி மாதம் முழுவதும் அம்மனை அலங்கரித்து வழிபடுவார்கள். குறிப்பாக ஆடிப்பூரத் தினத்தன்று அம்மனுக்கு வளையல் அணிவித்து செய்யப்படும் வழிபாடு மிகவும் சிறப்பானது.
🌹 திருமணத்தடை உள்ள கன்னிப்பெண்களும், குழந்தைச் செல்வம் கேட்டு அம்பாளின் அருள் பெறுவதற்காக பிரார்த்திக்கும் பெண்களும் இந்த வளையல் சாற்று வைபவத்தில் கலந்து கொண்டு பலன் பெறுகிறார்கள்.
🌹 அனைத்து உலகத்தையும் படைத்தும், காத்தருளும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளைகாப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை உள்ளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள்.
கல்வி தெய்வமான சரஸ்வதிக்கே குருவான சிறப்பு ஒருவருக்கு இருக்கும் என்றால் அது ஸ்ரீ ஹயக்ரீவர் தான். ஞானத்தை அள்ளித்தரும் ஹயக்ரீவர் வலிமைக்கும், சுறுசுறுப்புக்கும் ஆதாரமாக விளங்குகிறார். படிப்பில் மந்தமாக இருக்கும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்றால் ஹயக்ரீவரை வழிபட்டால் போதுமானது.
கல்வியில் சிறந்து விளங்கவும், செல்வம் பெருகவும் சரஸ்வதி தேவி வழிபாடு இன்றியமையாதது. கல்வியும், செல்வமும் தரும் ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்ரீ சரஸ்வதி வழிபாட்டு ரகசியங்களை அறிந்துக்கொள்ள...

இப்புத்தகத்தை வாங்கி பயன் பெறுங்கள் !
வழிபாடு :
🌹 இந்த பூரத்திற்கு சில நாட்கள் முன்னதாக பச்சை பயிறை தண்ணீரில் நனைய வைப்பர். ஆடிப்பூரத்தன்று அது நன்கு முளைக்கட்டிவிடும்.
🌹 நூற்றுக்கணக்கான முளைப்பயிற்றை ஒரு துணியில் கட்டி, அதை அம்பிகையின் வயிற்றில் பிணைப்பார்கள். முளைப்பயிறு கட்டுவது, வம்ச அபிவிருத்திக்காகவும், நற்குழந்தைப் பேற்றுக்காகவும் கட்டப்படுவது ஆகும்.
🌹 அதை அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து விட்டு நம்பிக்கையோடு குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் சாப்பிட்டால் வாரிசு உருவாகும்.
🌹 அம்மன் கோயிலில் கண்ணாடி வளையல்கள் வாங்கி, அந்த வளையலை அம்மனுக்கு சாற்றி விட்டு கோயிலுக்கு வரும் பெண்களுக்கு அதை கொடுப்பார்கள்.
🌹 கோயிலில் அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையல்களை வாங்கி அணியும் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும். அதேபோல், திருமணமாகியும் குழந்தைப்பேறு இல்லாத பெண்களுக்கு நல்ல மக்கட்பேறு கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக