திங்கள், 16 ஏப்ரல், 2018

ராகு தோஷம் போக்கும் பரிகார ஸ்தலங்கள்


ராகு தோஷம் போக்கும் பரிகார ஸ்தலங்கள்
   
தமிழ்நாட்டில் ராகு - கேது தோஷம் போக்கும் பரிகார ஸ்தலங்கள் உள்ளது. இந்த ஸ்தலங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

*1. ஸ்ரீகாளஹஸ்தி* : இங்கு காளத்திநாதரின் உருவில் ராகுவும் ஞான பிரசசூணதேவியின் உடலில் கேதுவும் இருப்பதாக ஐதீகம். அதனால்தான் சூரிய சந்திர கிரகணக் காலங்களில் இக்கோயிலை மூடுவதில்லை.

மற்ற எல்லாக் கோயில்களும் கிரகண காலங்களில் மூடப்பட்டுவிடும். இக்கோயிலின் செல்லும் அமைப்பே ராகு கேது ராசிமண்டலத்தில் அப்பிரதட்சணமாக இயங்கிவருவதுபோல இக்கோயில் வழி சுற்றும் அப்பிரதட்சணமாக அமைந்திருக்கிறது.

மேலும் ராகு கேது தோஷ நிவர்த்திக்காக எல்லாக் கிழமைகளிலும் அதிலும் முக்கியமாக சோமவாரத்தில் (திங்கள் கிழமை) பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.

ராகுவினால் ஏற்படும் தோஷம் விலக தக்க பரிகாரம் செய்தால் அவர் அருள்கிட்டும்.

*2. ராமேஸ்வரம்* : திருக்களர் இராமேஸ்வரம் போன்ற தலங் களிலும் ராகு ஈசனை வழிபட்டுள் ளது இங்கு சென்று முதலில் தேவிப்பட்டனத்தில் உள்ள ஸ்ரீராம பிரான் வழிபட்ட நவக்கிரகங்களை வழிபட்டு பிறகு இராமேஸ்வரம் சென்று வழிபட்டால் ராகுதோஷம் மட்டும் இல்லாமல் அனைத்து வகையான தோஷங்கள் நீங்கும்.

*3. திருப்பாம்புரம்* : அதிகமான ராகுவினால் மனச்சோர்வு கொண்டவர்கள் இத்தலத்திற்கு சென்று வந்தால் உடனடியாக ராகுவினால் ஏற்பட்ட மனச்சோர்வு நீங்குகிறது. மேலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் கிடைக்கிறது.

*4. நாகர்கோவில்* : இங்குள்ள நாகநாதர் கோவில் நாகராஜன் விஷேசமானவர். இவர் ஆயில்ய நட்சத்திரத்தின் அதிதேவதையாக இருப்பதால் ஆயில்ய நட்சத்திரன்று விஷேச பூஜைகள் நடக்கும்.

*5. திருச்செங்கோடு* : ஆண் பாதி பெண்பாதி என்று சிவனும் சக்தியும் நின்ற கோலம் உள்ள கோவில். இங்குள்ள நாகர் உருவச்சிலைகள் மிகவும் அற்புதமாக இருக்கும்.

*6. பேரையூர்* : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகநாதர் கோவிலில் இக்கோவில் வழிபட்டால் திருமணத்தடை உடனடியாக நீங்குகிறது.

கோயில் மதில் சுவர் முதல் கோயில் உட்புறங்களிலும் ஆயிரக்கணக்கான சர்ப்ப கருங்கள் விக்ரங்கள் உள்ளன.

மேலும் ராகுவின் அதிதேவதை துர்க்கை காளி கருமாரி போன்ற தெங்வங்களை வழிபட்டாலும் ராகுவின் அருள் பெறலாம் திருவேற்காடு சென்னையில் திருவேற்காடு கருமாரியம்மன் வழிபாடு செய்தால் ராகுவின் அருள் பெறலாம்.

*7. ஸ்ரீஅஷ்டதஜபுஜ மகாலெட்சுமி துர்காதேவி* : புதுக்கோட்டையில் உள்ள புவனேஸ்வரி அவதூத வித்யா பீடத்தில் எழுந்தருளியுள்ள துர்க்காதேவியை வழிபட்டால் ராகுவின் அருள் பெறலாம்.

ஜாதகத்தில் ராகு சுக்ரன் இணைந்தவர்கள் ஸ்ரீ அஷ்டதஜபுஜ மகாலெட்சுமி துர்க்காதேவியை வழிபட்டால் சிறப்பான பலன்கள் அடையலாம்.

*8. ஸ்ரீஅரியநாச்சியம்மன்* : சிவனும் சக்தியும் நின்றகோலம் திருச்செங்கோடு சிவனும் சக்தியும் அமர்ந்த நிலையில் உள்ள இடம் உலகிலேயே அரியநாச்சி யம்மன் மட்டும்தான் ஜாதகத்தில் ராகு செவ்வாய் இணைந்தவர்கள் இந்த கோவிலில் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை காணலாம்.

*9. காளிவழிபாடு* : மேலும் சிதம்பரம் தில்லைகாளி உறையூர் வெக்காளி சிவகங்கை வெட்டுடையகாளி மடப்புரம் பத்திரகாளி போன்ற காளி அன்னையை வழிபட்டாலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெறலாம்.

*10. பஞ்சமிதிதி* : நாகங் களுக்கு மிகவும் புனிதமான திதி இது இந்த நாளில் தான் நாகலோகத்தை பிரம்மா படைத்தார்.

பஞ்சமிதிதியில் விரதம் இருந்து நாக தேவதை களை வணங்கினால் நாக தோஷம் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெலாம். புற்றுள்ள அம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை போய் வழிபாடு செய்தாலும் ராகு அருள் பெறலாம்.

*11. ஸ்ரீரங்கம்* : ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆதிஷேசன் மேல்படுத்து இருக்கும் அரங்கநாதருக்கு எதிரில் உள்ள உடல் முழுவதும் நாகங்களை அணிகலன் களாக அணிந்திருக்கும் கருடாழ்வாரையூம் சக்கரத் தாழ்வாருக்கு செல்லும் வழியில் ஒரு கையில் அமிர்த கலசத்தையும் ஒரு கையில் நாகத்தையும் பிடித்துக் கொண்டு உடல் முழுவதும் நாகங்களை ஆபரணமாக அணிந்து இருக்கும் அமிர்த கலச கருடாழ்வாரையும் வணங்கி வழிபாடு செய்தால் ராகு தோஷம் நீங்கும்.

*12. ஆதிசேஷன்* : பூஜித்து அருள் பெற்ற ஸ்தலம் சென்னை திருவொற்றியூர்.

-- 1) இங்குள்ள ஸ்ரீவடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீபடம்பக்கநாதர் மற்றும் ஸ்ரீமானிக்கதியாகேஸ்வரை வணங்குங்கள். ராகு கேதுவால் உண்டான தோஷம் விலகும்.

-- 2) கும்ப கோணம் - மயிலாடுதுறை இடையே உள்ளது கதிரா மங்கலம் நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை அம்மனை வழிபடுங்கள் ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.

*13. கும்பகோணம்* : - மயிலாடுதுறை இடையே உள்ளது கதிராமங்கலம் நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை
அம்மனை வழிபடுங்கள் ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.

*14. சிவகங்கை* : அருகில் உள்ள காளையார் கோவிலுக்கு சென்று கொண்டின்ய மகரிஷி மற்றும் நாகங்களின் அரசன் வழிபட்ட ஸ்ரீமகமாயி அம்மன் ஸ்ரீகானக்காளையீஸ்வரரை வழிபடுங்கள் ராகு மற்றும் கேதுவால் உண்டான தீமைகள் விலகும்.

*15 காஞ்சிபுரம்* : - ஸ்ரீசித்ரகுப்தர் ஆலயம் சென்று அவரை வழிபடுவதுடன் கொள்ளு உளுந்து மற்றும் பிரவுன் நிற துணிகளை தானம் செய்யுங்கள். பசுவுக்கு ஏதேனும் உண்ண கொடுக்கவும்.

*16. ஸ்ரீவாஞ்சியம்* : நன்னிலம் - குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நாக தோஷத்தால் நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் நீராடி நாகநாத சுவாமியையும் நாகராஜரையும் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.

*17. விருத்தாசலத்திற்கு தெற்கே* சுமார் 7கி.மீ தொலைவில் நாகேந்திரபட்டினம் எனும் ஊரில் நீலமலர் *கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேஸ்வரை* வணங்குங்கள். ராகு மற்றும் கேதுவால் உண்டான தோஷங்கள் விலகும்.

*18. திருப்பத்தூர்* - திண்டுக்கல் சாலையில் சிங்கம்புனரிக்கு அருகில் உள்ள ஸ்தலம் பிரான்மலை. இங்கு நாகராஜன் வழிபட்ட குயிலமுதநாயகி கொடுங் குன்றீசரை தேன் - தினைமாவு கலந்து படைத்து வழிபடவும்.

*19. சென்னை மைலாப்பூரில்* கோயில் கொண்டுள்ள அருள்மிகு முண்டகக்கன்னி அம்மனை மனம் உருக வணங்கி வழிபட்டுவர ராகு கேதுவினால் ஏற்பட்ட தடைகள் விலகும்.

*20. திருச்சி* சென்று இந்திரனும் நாககன்னியர்களும் வணங்கி வழிபட்ட அருள்மிகு மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானவரை வணங்கி வாருங்கள் உங்கள் வாழ்வில் சுபீட்சம் காணுவீர்.

*21. சர்ப்பதோஷமுள்ளவர்கள்* : பாம்பு புற்றிற்கு மஞ்சள் பூசி குங்கும பொட்டு வைத்து எலுமிச்சையை புற்றின் மீது வைத்து புற்றினுள் பால்விட்டு மூன்று முறை வலம் வர வேண்டும்.

நாகபஞ்சமி அன்று மட்டும் 9 முறை வலம் வர வேண்டும். குடும்பநலம் மகப்பேறு சிரமமில்லாத பிரசவம் உண்டாகும். ராகு கேது தசை நடப்பில் உள்ளவர்கள் நோய் நீங்க இந்த வழிபாடு செய்ய வேண்டும்.

*22. திருவண்ணாமலை* மாவட்டம் செஞ்சி அருகில் அமைந்துள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி வணங்கி வழிபட்டு வர நினைத்ததை சாதிப்பீர்.

*23. திருத்தணிக்கு அருகில் உள்ளது திருவாலங்காடு* இங்கு சென்று முஞ்சிகேசமுனிவரும் கார்கோடகனும் (நாகம்) வழிபட்ட வண்டார் குழலம்மை உடனுறை ஊர்துவதாண்டவரை வணங்கி வர வளம் பெருகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக